சனி, 13 ஆகஸ்ட், 2011

மதுரையில் விஜய்யின் விழா! தன் ரசிகர் பலத்தை அப்படியே அரசியல்

வேலாயுதம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வைத்து பிரம்மாண்ட விழா நடத்த விருப்பப்பட்டார் விஜய். ஆனால் முதல்வர் வருவது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதிரையில் ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

படத்தின் துவக்க விழாவையும் தன் ரசிகர்கள் முன்பே நடத்தினார் விஜய். அதே போல் இசை வெளியிட்டு விழாவும் நடத்த இருக்கிறாராம். இதற்காக பணிகள் நடந்து வருகிறது. தயாரிப்பாளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இதை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் நடந்தவுடன் மதுரை நகரமே நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருகிறது. மதுரையில் இருக்கும் தன் ரசிகர் பலத்தை காட்டவும், அப்படியே அரசியல் பலத்தை வளர்க்கவும் தான் இந்த ப்ளான் என்று சொல்கிறது விஜய் வட்டம்.

Sinhala family donates 1500 books to Jaffna library

Jaffna Library received another round of generous donation of 1500 books from new supporters, this time a Sinhala family in Nugegoda, Colombo.  With sheer intention of quenching the thirst for knowledge of Jaffna students and other interested readers, a generous family in the south donated a volume of valuable books to the Jaffna Library recently.
Donating books to a library is a worthwhile cause. Therefore the Sri Lanka Army have committed themselves to filling the shelves of the Jaffna library and requested the help of the general public to make this happen. Commander of the Security Forces- Jaffna, Major General Mahinda Hathurusinghe and staff officers of the Security Forces Headquarters – Jaffna have made requests from various persons and organizations in Sri Lanka and as well as in abroad to contribute to restore the Jaffna public library, once served as the oasis of knowledge to Jaffna intellectuals, in its former glory.
However after Security Forces Headquarters – Jaffna made the announcement of filling the shelves of the Jaffna library and donations for the refurbish of the buildings, the library literally receives hundreds of books every week from thoughtful individuals and organizations around the world.
For more information, the author can be reached at (email): alahapperumaj@yahoo.co.uk By Janaka Alahapperuma

சீனா இலங்கைக்கு முழுமையாக உதவும்,தேவை ஏற்படும் சந்தப்பங்களில்

இலங்கைக்கு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில், சீன அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென சீன பிரதமர் வென் ஜியபாஒ தெரிவித்துள்ளார். உத்திய பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(ஆகஸ்ட்-11) பீஜிங்கில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்தையில் கலந்துக்கொண்டபோதே சீன பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றியமைக்கு இலங்கை அரசை பாராட்டியதுடன், துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மானபணிகளுக்கு சீன அரசாங்கம் நிதியுதவியளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கையில் இடம்பெற்றுவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீன அரசு வழங்கும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்ததுடன், முன்பு இலங்கையில் நிலவியிருந்த குழப்ப சூழ்நிலை குறித்து விளக்கியதுடன், தற்போது அரசாங்கம் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விளக்கமளித்தார்.
மேலும் இரு தரப்பு தலைவர்களும், சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டுவரும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் மற்றும் இரு நாட்டின் தலைநகரங்களுக்கிடையே விமானச்சேவையை அதிகரித்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடினர்.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உரிமையாளர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை

வெளிநாடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியம்’

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமது காணிகளுக்கான உறுதியை கொண்டிராதவர்கள், இரண்டு மாதத்திற்குள் உரிய பத்திரங்களுடன் தத்தமது கிராம சேவையாளர்கள் ஊடாக பிரதேச செயலாளருக்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்களும், உரிய பிரதேச செயலாளருக்கு இணையத்தளம் மூலம் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இச்சேவைக்கான விண்ணப்பப்படிவம், காணிகள் அமைச்சால், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகம் மூலம் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளது.
பிரதேச செயலாளர்களுக்கு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணிகள் அமைச்சின் செயலாளர் அசோகா பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இந் நடவடிக்கைகளுக்கென விசேட குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

25 கார்களில் பங்காரு அடிகளின் பக்தர்கள் சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்

25 கார்களில் வந்த பக்தர்கள் ஆவேசம் பங்காரு அடிகளின் பக்தர்கள் சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்
: சுங்கச்சாவடி சூறையாடல்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 25 கார்களில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை அருகே இருந்த சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு பணம் கேட்டு ரசீது கொடுத்தனர்.
பணம் கொடுக்க பக்தர்கள் மறுத்தனர்.  இலவச அனுமதி அளிக்கும்படி கேட்டனர். எம்.எல்.ஏ., அமைசர்களுக்குத்தான் இலவச அனுமதி. பக்தர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லவும், ஆவேசமடைந்த பக்தர்கள், சுங்கச்சாவடியை சூறையாடினர்.
தடுப்பு கம்பி, பாதுகாப்பு அறை என்று ஒட்டுமொத்தத்தையும் நொறுக்கிவிட்டு காரில் தப்பிவிட்டனர். 4 கார்களூம், சிலர் மட்டும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் சிக்கொண்டனர்.
அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

59, 501 பேர் விதவைகளாகியுள்ளனர்!புலன் பெயர் வாலிபர்கள் ஏன் எம் சகோதரிகளுக்கு வாழ்வு கொடுக்க

 வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் 59, 501 பேர் விதவைகளாகியுள்ளனர்!
யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வடக்கு கிழக்கில் 59 ஆயிரத்து 501 பேர் விதவைகளாக்கப்பட்டிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று சபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. யுமான சஜித் பிரேமதாஸவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கரலியத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்: யுத்தம் மட்டுமல்லாது ஏனைய காரணங்களினாலும் வடக்கில் 16 ஆயித்து 936 பேரும் கிழக்கில் 42 ஆயிரத்து 565 பேரும் விதவைகளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கென அரசாங்கம் பல்வேறு நலன்புரித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
 விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பது என்ற சொல்லுக்கு தற்போது அர்த்தம் மிகவும் அற்பமாக ஆகிவிட்டது. ஒரு விதவைக்கு உண்மையான மறுவாழ்வு என்பது அவளை நேசிக்கவும் கூடி வாழவும் விருப்பம் கொண்ட ஒரு நல்ல வாழ்கை துணையிலேயே பெரிதும் தங்கி இருக்கின்றது. இங்கே தான் நாம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.
குறிப்பாக புலன்பெயர் உறவுகளை, ஏனென்றால் நம் மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் பெரிதும் புலன்பெயர்ந்தவர்களே. சதா உசுப்பேத்தி உசுப்பேத்தி நந்தி கடலில் கவிழ்த்து விட்டவர்கள் புலன் பெயர்ந்தவர்களே.ஏராளமான வாலிபர்கள் திருமணமாகாமலும் மணமாகியும் தனியாகவும் வாழும் வாலிபர்கள் ஏன் எம் சகோதரிகளுக்கு வாழ்வு கொடுக்க முன்வரக்கூடாது?
 இனப்பற்று என்பது தலை நகரங்களில் பியர் அடித்துவிட்டு பிசாவும் சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக கொடி பிடிப்பது என்று காலத்தை ஒட்டி விட்டீர்கள்.
  நீங்கள் செய்த பித்தலாட்டங்களுக்கு ஒரு பிராயசித்தமாகவேனும் இந்த விடயத்தை பற்றி சிந்தியுங்கள்.

லாட்டரி மார்ட்டின்.கைதானார்!25 கோடி நில அபகரிப்பு புகார்

சென்னை: ரூ 25 கோடி நில அபகரிப்பு புகாரில் பிரபல லாட்டரி அதிபரும் சினிமா பட தயாரிப்பாளருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவர் மீது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த எம்.அங்குராஜ் என்பவர் பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
அதில், "கடந்த 2005-ம் ஆண்டு மார்ட்டின் என்னை சந்தித்து நசரத்பேட்டை அருகில் உள்ள எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை விலைக்கு கேட்டார். நான் விற்க மறுத்து விட்டேன்.
அதன் பிறகு அவர் எனது மாமாவை அணுகி அவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடியாகும். இதுபற்றி நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

அதன் பேரில் நசரத் பேட்டை போலீசார் மார்ட்டின் அவரது உறவினர் பெஞ்சமின் உள்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு நில அபகரிப்பு தனிப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ட்டின் உள்பட 7 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

அதன்படி மார்ட்டின், பெஞ்சமின் உள்பட 6 பேர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்து போட்டனர். அப்போது நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். மார்ட்டினிடம் 5 போலீஸ் அதிகாரிகள் தனி விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மேலும் மேலும் நிலமோசடி புகார்கள் வருவதாலும் அவர் கைது செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் சேலம் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் சேலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மு.க.அழகிரி மனைவி காந்திக்கு மதுரையில் கோவில் நிலத்தை குறைந்த விலைக்கு மார்ட்டின் விற்றதாகவும் மார்ட்டின் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கபாலு: அதை எப்படி மன்னிக்க முடியும்? ராஜீவ்காந்தி

ராஜீவ் கொலைக்குற்றவாளிகளின் கருனை மனு
நிராகரிப்பை வரவேற்கிறேன் : தங்கபாலு
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார்.
அவர், ’’முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே.
முன்னால் பிரதமர் தலைவர் ராஜீவ்காந்தியின் படுகொலை மிக கொடுமையானது.  அதை எப்படி மன்னிக்க முடியும். அந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்பக்கூடாது; தப்ப விடக்கூடாது’’ என்று தெரிவித்தார்.

 இணைந்த வட கிழக்கு மாகாண அரசு போலீஸ் காணி அதிகாரம் நேரடி வெளிநாட்டு கடன் பெரும் வசதி எல்லாவற்றிலும் மேலாக ஏற்படபோகும் பெரும் அழிவிலிருந்து தப்பக்கூடிய வாய்ப்பு போன்ற எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்த பிரபாகரனின் முட்டாள்தனம்.
இனி எல்லாம் கனவுதான். இருப்பதை ஆவது காப்போம்.
உதவி செய்த கரத்தை வெட்டிய சண்டாளர்களும் துணை போன அறிவிலிகளும் மன்னிக்க கூடிய குற்றங்களையா புரிந்துள்ளனர்?

மீனா மீண்டும் நடிக்க வருகிறார் மாமியாராக


ஒரு காலத்தில் பல லட்சம் ரசிகர்களின் தூக்கம் கெடுத்த கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இப்போது திருமணமாகி, குழந்தை பெற்றுவிட்ட அவர், மீண்டும் நடிக்க வருகிறார்... மாமியார் வேடத்தில்!

நடிகை மீனா 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2009 வரை படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்தார். அதன் பிறகு பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
கடந்த ஜனவரியில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டனர். திருமணத்துக்கு பின் மீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். மீண்டும் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார்.

ஆனால் திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர் ராம்சரண் படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கயுள்ளது. மீனா நடிப்பதற்கு அவர் கணவரும் சம்மதம் சொல்லி விட்டாராம்.
முன்பு ஒரு திரைப்பட விழாவில், "மீனா என் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஜோடியாக நடித்தார். யார் கண்டது, பின்னாளில் எனக்கு அம்மாவாகக் கூட அவர் நடிக்கலாம்," என்று ரஜினி கூறியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் அவர் சொன்னது நிஜமாகிவிடும் போலிருக்கிறதே!

கலைஞர்: பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன்? சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில்


சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன்? கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும் சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்து விட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம். அந்தப் பக்கங்களில் "வண்ணம் தீட்டுவேன்'' என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படமும், அவ்வை, கவுதாரி, பவுர்ணமி, வவ்வால் ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் பக்கத்தை ஏன் கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறைக்குத் தான் வெளிச்சம்.<
3 வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26 வது பக்கத்தில், கடைசி பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிற தென்றால், "உலகத் தமிழ் மாநாடு 2010 ஜுன் மாதம் 23 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது'' என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.
4 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74 வது பக்கத்தில், "செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.
75 வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது "செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்''  இது சுற்றறிக்கை.

4 வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111 வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை.

5 வது வகுப்பு சமூக அறிவியலில் 80 வது பக்கத்தில் 3 வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 129 ல் "தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் கவிதை தைத்தமிழ்ப் புத்தாண்டே வருக'' என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130 வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.

6 ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53 ல் இரண்டாவது பத்தியில் உள்ள "தப்பாட்டம்'' என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகார காலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 6 ம் வகுப்பு   அறிவியல் பாடப் புத்தகத்தில் 81 ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம்.

6 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்   பக்கம் 35 ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம். காரணம் அந்தப் படத்தில் ஒரு பகுதி கறுப்பு சிகப்பு வண்ணம் போல இருப்பதால் அதை முழுமையாக அழிக்க வேண்டுமாம்.

9 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203 ல் "தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா'' என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 89 வது பக்கத்தில் "அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்'' என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம்.

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 177 வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமாம். அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்றால், தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். 10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் பெரிதாக நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தி.மு.க.வை பற்றியும், என்னைப் பற்றியும் பக்கம் பக்கமாக பாராட்டி சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்து விட்டதாகக் கூறி, அந்தப் புத்தகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்கள். சமச்சீர் பாடப் புத்தகங்களில் அப்படி என்னதான் வார்த்தைகள் கடந்த கால அரசையும், என்னையும் பாராட்டி வந்துவிட்டன என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே தொகுத்துள்ளேன்.

பார்ப்பனீய விகடனும் பார்பனிய மாறன்சகோதர்களும்

    தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுவதுபோல் கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இருவருமே திருமணம் முடித்தது பார்பன குடும்பத்தில் இவர்களின் தாய் மல்லிகா மாறன் ஒரு பார்பனர். அதிலும் தயாநிதியின் சம்பந்தியோ சாட்சாத் ஹிந்து பத்திரிக்கை உரிமையாளர்களான கஸ்துரி ரங்கன் அய்யங்கார் இவ்வளவு காலமும் திராவிட இயக்கத்தில் அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு பலன் அடைந்தவர்கள்   விகடன் எப்படி இந்த மாறன் குடும்பத்தின் இமேஜை பாதுகாக்க பூசி மெழுகுகிறது பாருங்கள் .

'கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?
கடந்த 10.8.2011 தேதியிட்ட ஜூ.வி-யில் 'கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம் பெற்றிருந்த மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர்கள் தரப்பில் இருந்து உறுதியாக மறுக்கப்படுகிறது.
''கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீடு, மகாலிங்கபுரம் 2 கிரவுண்ட் சன் கேபிள் விஷன் சொத்து, 1.84 ஏக்கரில் பண்ணை வீடு என்று கூறப் பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் மிகைப்​படுத்தப்பட்டவை.
'ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை வாங்கிய சமயத்தில் அதன் மதிப்பு 13,384 கோடி என்று கலாநிதி மாறன் தெரிவித்திருந்தார்’ என்று வெளியாகி உள்ள செய்தி அபத்த மானது. உண்மையில் 'செபி’ வரையறைகளின்படி தாக்கல் செய்த ஆவணங்களின்படியே, ஸ்பைஸ் ஜெட்டின் 37 சதவிகித பங்குகளின் மதிப்பு 797 கோடி என்று தெளிவாக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்.டி. கூரியர் கம்பெனிக்கோ மற்றும் சன் மெடிக்கல் காலேஜுக்கோ அதன் மருத்துவமனைக்கோ மாறன் சகோதரர்களின் குடும்பத்தினருக்கும் வேறு உறவினர்​களுக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. மேலும், ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை, மாறன் சகோதரர்கள் கட்டப் போகும் மருத்துவ​மனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள் என்ற தகவலும் விஷமத்தனமானது. உண்மைக்குப் புறம்பானது' என்று கூறி மறுத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை வெளியிட்டதில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. யாரையும் புண்படுத்து​வதோ, அவதூறுக்கு ஆளாக்குவதோ நம் எண்ணமும் அல்ல. இருப்பினும் இதன் மூலம் யார் மனம் காயப்பட்டிருந்தாலும் அதற்கு மிகவும் வருந்துகிறோம்.
_ ஆசிரியர்  vikatan.com

சமநீதிக்கான ஒரு படிக்கல்..சமச்சீர்க் கல்வித் திட்டம்!

சமச்சீர் சாதனையாளர்கள் வெற்றி முழுவதும் கலைஞர் அரசுக்கே சென்றுவிடக்கூடாது என்று நூல் கோஷ்டி படும் பாடு 

தமிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவு, நிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்​கொடியை நாட்டி இருக் கிறது, சமச்சீர்க் கல்வித் திட்டம்!
பலரும் இதற்காக முயன்று இருந்​தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில், பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம், சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர். 

தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்து, பிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்க​வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. 2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாக, என்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில், சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர். 2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது.  தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்ட’த்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்பு,  தி.மு.க. அரசும்  சமச்சீர்க் கல்விக்கான சட்டத்தைக் கொண்டு​வந்தார்கள்.

நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளி​யிட்டு, 2010 பிப்ர​வரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகு, தனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்து, நீதிமன்றம் சென்றனர். விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால், அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, ஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகி, ஒரு வழியாக அதே நீதிமன்றத்தால், பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!'' என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்​தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதி, தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்​தனர்.
''இந்தத் தாக்குதலில், அனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார், எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்​திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர், திருச்சி, மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15 வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார், இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம், விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்!

- இரா.தமிழ்க்கனல்

புலன்பெயர்வுகளே இப்போதாவது இந்த பிளாஷ் பாக்கை பாருங்கள்

கருணா தினகரனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் முக்கிய விடயங்கள் பல

புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கள் பிரிந்து செல்வதற்கு ஐ.தே.க.வே காரணம் எனக் கூறப்படுகிறதே அது உண்மைதானா?
ஒருபோதும் இல்லை. அது தவறான கருத்து. தொடர்ந்தும் அந்த இயக்கத்தில் இருப்பதில் பலனில்லை. உயிரிழப்புக்கள் தான் மிச்சமாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தேன், பிரிந்தேன் அவ்வளவுதான்.

அரசு-புலிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது புலிகள் உண்மையிலேயே தீர்வொன்றை எட்டவேண்டும் என்ற நோக்கில் பேச்சுக்களை நடத்தினரா?
பேச்சுவார்த்தைக்கு சென்றவன் என்ற வகையில் எமது குழு புறப்படும் போதே பிரபாகரன் இந்தப் பேச்சுவார்த்தையை சுமார் 5 வருடங்களாவது இழுத்துச்செல்லவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார். எப்படி 5 வருடங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தையை இழுத்துச் செல்வது என்ற சிந்தனையுடனேயே புறப்பட்டோம்.

நான் ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டேன். முதல் இரண்டு சுற்று பேச்சுக்களில் பெரிதாக ஏதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெறும் அறிமுகம் மட்டுமே நடந்தது. மூன்றாவது சுற்றுப் பேச்சிலிருந்தே நாம் சமஷ்டிமுறை பற்றி பேசினோம்.

பிரான்ஸ், சுவிஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து அவர்களது நாட்டிலுள்ள முறை பற்றி எமக்கு விளக்கமளித்தார்கள். நாம் சமஷ்டிமுறை பற்றி பேசுகிறோம் என்பதால் அவர்கள் தத்தமது நாட்டில் அமுலிலுள்ள முறைபற்றி விளக்கமளித்தார்கள்.

அரசாங்கம் நோர்வேயுடன் கலந்தாலோசித்து திடீரென்று ஒரு ஆவனத்தை மேசையில் போட்டனர்.

நாம் சமஷ்டிமுறை பற்றி பேசுகிறோம். இப்படியே பேசிப்பேசி காலத்தை இழுத்தடிக்காமல் சஷ்டிமுறைபற்றி இருதரப்பினரும் தொடர்ந்தும் ஆராய்வதற்காக முதலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவோம். இதில் கையெழுத்து இடுங்கள் என்றனர். இதில் நீங்கள் கையெழுத்திட்டால்தான் பேச்சுவார்த்தையை தொடரலாமா? இல்லையா? என முடிவெடுக்கலாம் என்றார்கள்.

பிரபாகரன் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க வேண்டும் என்கிறார். அரசோ இழுத்தடிக்கக் கூடாதென்கிறது. இந்த நிலையில் பிரபாகரனிடம் கேட்காமல் இதில் கையெழுத்து இடுவது குறித்து உங்கள் தரப்பில் பெரிதும் யோசித்திருப்பார்களே?
கொஞ்சம் எதிர்பார்க்காமல் ஆவணத்தை எம்முன்போட்டதும் அன்டன் பாலசிங்கம் சற்றுக் குழம்பியவராக நீங்கள் முன்பே அறிவிக்காமல் எப்படி இதில் கையெழுத்திடுவது என்று தெரிவித்தார்.

நான் எப்போதும் அன்ரன் பாலசிங்கத்துக்கு அருகில் அமர்ந்திருப்பதால் இதில் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். பெரிதாக எதனையும் எழுதியிருக்கவில்லை.#
வெறும் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே இருந்தன. சமஷ்டிமுறை பற்றி தொடர்ந்தும் ஆராய்வோம் என்றிருந்தது. வேறு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கம் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤ம் கையெழுத்திட வேண்டும்.

நான் உடனே ‘அண்ண அவதிப்படாதீங்கோ இதைக் கொஞ்சம் பாருங்கோ. நாங்கள் வெளியில்போய் கொஞ்சம் இதைப்பற்றி ஆராஞ்சுபோட்டு வருவோம்’ என்றேன்.

ஓம்டா அதுவும் சரிதான் என்று கூறியதுடன் சற்று வெளியில் சென்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்த பின்னர் கையழுத்து வைக்கிறோம் என்று கூறியவாறு வெளியே வந்தோம்.

என்னுடன் உருத்திரகுமாரன், தமிழ்ச்செல்வன், டாக்டர் மகேஸ்வரன், அன்ரன் பாலசிங்கம் மற்றும் நான் ஆன்டி என அழைக்கும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் கலந்துரையாடினோம்.

ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்ல நானும் எனது கருத்தை கூறினேன்.

இது ஒரு நல்ல விடயம். இதனைச் செய்வோம். “ஐரோப்பியர்களுடன் நாம் ஒரு காட்டுமிராண்டிகள் போல பேச்சுநடத்த முடியாது. அவர்களுடன் நாம் சில விடயங்களுக்கு ஒத்துப்போகவேண்டும்” என்றேன்.

உருத்திரகுமாரன் இதற்கு சம்மதித்தாரா?
இல்லவே இல்லை. அவர்தான் கத்திக்கொண்டே இருந்தார். முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் இப்படித்தான் அதை, இதை காட்டி மடக்கினார்கள். அதேபோன்றுதான் எம்மை ஒரு பொறிக்குள் தள்ள முற்படுகிறார்கள் என கூறிக்கொண்டே இருந்தார்.

உங்களுக்கு என்ன தெரியும். போரைப்பற்றி என்ன தெரியும், நீங்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிaர்கள். களத்தில் நின்று போரிடும் எமக்குத்தான் தெரியும் களநிலவரம். தமிbழம் என்பது உடனே அடித்துப்பெறக் கூடியதல்ல என்று கூறினேன்.

இவற்றையெல்லாம் நன்கு யோசித்து முடிவெடுக்கவேண்டும் என பாலசிங்கத்துக்குக் கூறினேன்.

அதேபோல, தமிழ்ச்செல்வனும், டொக்டர் மகேஸ்வரனும் கருணா சொல்வது சரி என்றார்கள். இந்தப் பிரச்சினையின் போது டாக்டர் மகேஸ்வரனும் எனக்கு சார்பாக பேசியதால் அவரை பின்னர் துரத்திவிட்டார்கள். இவர்தான் முதன்முதலாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்.

இந்த சந்தர்ப்பத்தில் அடேல் பாலசிங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது. சண்டையும் சாவும் தொடர்ந்துகொண்டு இருப்பதை அவர் விரும்பவில்லை. “சரியடா பிரபாகரனுக்கு அறிவிப்போம்” என்றார். பிரபாகரனுக்கு அறிவித்தால் இதனை செய்யவிடமாட்டார். பேச்சுவார்த்தைக் குழுவில் தலைமைதாங்கி வந்தவர் நீங்கள், நீங்கள் முடிவு எடுங்கள் என்றேன். இதனை உருத்திரகுமார் கேட்டுக்கொண்டிருந்தார். பாலா அண்ணனும் கையெழுத்திட்டார்.

ஆனால் நாங்கள் திரும்பி வருவதற்கு முன்னரே அங்கு என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான விளக்கத்துடன் பெக்ஸ், ஈ.மெயில் ஊடாக பிரபாகரனுக்கு உருத்திரகுமாரன் ஆட்கள் அறிவித்துவிட்டார்கள்.

நாடு திரும்பும்போது பாலா அண்ணன், “நான் வன்னிக்கு வரமாட்டன். இந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு வன்னிக்குச் சென்றால் என்ட தலையில வச்சிடு வானுகள். நான் வரேல்ல” என்றார்.

நீங்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கின்aர்கள். வன்னி சீதோஸ்னநிலை உங்களுக்கு ஒத்துவராது எனவே நான் லண்டனுக்குச் செல்கிறேன் என்று நீங்கள் பிரபாரனுக்குச் சொல்லுங்கள். நான் இந்த ஆவணத்தை பிரபாகரனிடம் கொடுக்கின்றேன்.

வன்னிக்கு வந்து பிரபாகரனிடம் ஆவணத்தைக் கொடுத்தேன். பாலா அண்ணன் இதைக் கொடுக்கச் சொன்னவர் என்றேன். தமிழ்செல்வன் பேசவே இல்லை, என்ன நடக்குமோ, ஏதுநடக்குமோ என்று நடுங்கிக் கொண்டு நின்றார்.

பிரபாகரனுடன் எவரும் பேசமாட்டார்கள். அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தலையாட்டிக்கொண்டிருப்பார்கள். எவருடைய ஆலோசனை யையும் அவர் கேட்கமாட்டார். அவரது தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

எனக்குத் தெரியுமடா எங்கட போராட்டத்தை வித்துப்போட்டு வந்து நிற்கிaர்கள் எனக்கூறியவாறுதான் எம்மை வரவேற்றார். முகம் சிவந்து கடும் கோபத்தில் இருந்தார்.

பிரபாகரனை எதிர்த்துப் பேசுவீர்களா?
நான் மட்டும்தான் அவருடன் வாதாடுவேன், கருத்துக்கூறுவேன். மற்றவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருப்பார்கள்.

நான் உடனே ஆவணத்தைக் கையிலெடுத்துப் படித்துப்பாருங்கள், இதில் நாங்கள் பயப்படும் அளவுக்கு எதுவும் கிடையாது என்றேன். ஆவணத்தை வாங்கியவர் கசக்கியெறிந்துவிட்டார். ஏனெனில், ஏற்கனவே உருத்திரகுமாரன் அனுப்பிய ஆவணத்தைப் படித்துவிட்டார்.

ஆவணத்தை எறிந்தவுடன் எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. வெளிக்காட்டவில்லை.

நீங்கள் அவருக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவில்லையா?
அண்ண எனக்கு இது நல்லதாகவே தெரியுது. ஏனெனில் சர்வதேச சமூகம், உலகம் என்பவற்றை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு சாதிக்கமுடியாது. எனவே இது பற்றி கொஞ்சம் சிந்தித்திப் பாருங்கள். இது ஒன்றும் பாரிய விடயமாக தென்படவில்லை என்றேன்.

கிளிநொச்சியில் அன்று மாலை 3.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தது. உடனே சகல தளபதிகளையும் அழைக்குமாறு தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார். இது கிட்டத்தட்ட மத்திய குழுக்கூட்டம் போலானது. இயக்கத்திலுள்ள சகல துறைசார்ந்த தளபதிகளும் அழைத்துவரப்பட்டனர். சூசை, பால்ராஜ், தமிழேந்தி, நடேசன் உட்பட இயக்கத்திலுள்ள அத்தனை தளபதிகளும் வந்தாயிற்று.

மாநாட்டு மண்டபத்தைப்போல நீள்வட்ட மேசையின் நடுவில் பிரபாகரன் அமர்ந்திருக்க அவருக்கு வலப்புறம் நானும், இடப்புறம் தமிழ்ச்செல்வனும் அமர்ந்திருக்க இரு மருங்கிலும் தளபதிகள் அமர்ந்திருந்தனர்.

விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றுவதற்காக பேச்சுவார்த்தைக்கு அனுப்பினேன். இவங்கள், போராட்டத்தை வித்துப்போட்டு வந்திருக்கிறாங்கள் என என்பக்கம் கையைக்காட்டிக் கூறினார். ஆனால் தமிழ்ச்செல்வன் பக்கம் கையைக்காட்டவில்லை. எனக்குத் தொடர்ந்தும் அர்ச்சனைக்கு மேல் அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.

போர்க்களம் என்ன என்றே தெரியாத அந்தப் பக்கமே தலைவைத்துப்படுக்காத பாலகுமாரன், தமிழேந்தி, நடேசன் ஆகியோர் “இப்படிச் செய்துவிட்டுவந்துவிட்டார்களே. விட்டுக்கொடுக்கலாமா? எவ்வளவோ உயிர்கள் பலியாகிவிட்டன, சகலரும் அழிந்தாலும் விட்டுக்கொடுக்ககூடாது” என கோபத்தில் இருக்கும் பிரபாகரனை மேலும் உசுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் போர்க்களத்தில் நின்று போரிடும், போரிட்ட தளபதிகள் பேசாமல் மெளனமாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு கீழே இருந்தவர்கள். நான் எதைச் செய்தாலும் சரியானதாகக் தான் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள்.

தொடர்ந்தும் என்னைப் பேசிக்கொண்டிருந்த பிரபாகரன், கருணா தான் இதற்குக் காரணம் என்றார். எனக்கும் கோபம் வந்தது. எனினும் அதனை பெரிதாக வெளிக்காட்டாமல் பேச்சுவார்த்தைக்கு பொறுப்பானவன் நான் அல்ல. இதில் கையெழுத்திட்டவனும் நானல்ல. அண்டன் பாலசிங்கம்தான் எனவே அவரையும் கேளுங்கள். இதில் ஏதும் நியாயம் இருந்ததால்தானே அவர் கையெழுத்திட்டார் என்றேன்.

இல்லை நீ சொல்லித்தானே அவர் கையெழுத்திட்டார் என பிரபாகரன் கூறினார். உருத்திரகுமாரன் என்னை நன்றாக இறுக்கிவிட்டிருந்தார் என்பது புலனாகியது.

“உண்மை தான், இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தையை ஐந்து வருடத்துக்கு (இழுத்தடிக்க) தொடரவேண்டுமென்றால் வெறுமனே போய் போய் சாப்பிட்டுவிட்டுவருவதா? ஏதாவது அடிப்படை இருக்கவேண்டும். அதனை மையமாக வைத்து பேச்சுவார்த்தையை நகர்த்தவேண்டும். வடக்கு, கிழக்கு சுயாட்சி என்பவற்றுக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும்” என்றேன்.

பிரபாகரனின் கோபம் இன்னும் அதிகமாயிட்டு. “மஹத்தயாவும் இப்படித்தான்டா எனக்குத் துரோகம் செய்தான்” என்றார் இறுதியாக.

மஹத்தையாவுடன் என்னை ஒப்பிட்டுவிட்டார் எனக்கு முழுமையான வெறுப்புத் தட்டிவிட்டது. ஏனெனில், பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு காரணமாக இருந்தவனே நான்தான்.

இந்தியப் படை வந்தபோது அவர்களுடனான யுத்தத்தில் பிரபாகரனை பாதுகாப்பாக காட்டுக்குள் வைத்திருந்தேன். வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு ஆட்களை அனுப்பியது மட்டுமல்லாமல் தலைமைதாங்கி பல வெற்றிக்கு வழியமைத்துக்கொடுத்தவனும் நான்தான்.

எல்லோரும் ஒன்றிணைந்து என்மீது பழியைப்போட முற்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். விசயம் பிழைக்கப்போகிறது என்பதையும் உணர்ந்தேன். நான் இன்னும் கொஞ்சம் பிரபாகரனுடன் வாதிட்டுப் பேசியிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்.

இனி மூளையைப் பயன்படுத்தித் தப்பிவிடவேண்டும் என எண்ணினேன். “சரி உங்களுக்கும் பிடிக்கவில்லை. மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நானே அடுத்த பேச்சுவார்த்தைக்குச் சென்று அவர்களிடம் கூறிவிடுகிறேன்” என்றேன்.

அதைத்தான் நீ செய்யவேண்டும். இதனை நீயேதான் செய்யவும் வேண்டும் என்றார். அத்துடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் எனக்கு மனம்விட்டுப்போனது. ஒரு வெறுப்புத்தோன்றியது. யுத்தம் புரிவதென்றாலும் ஒரு அர்த்தத்துடன் யுத்தம் புரியவேண்டும். அர்த்தமில்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் உயிர்களைப் பலிகொடுப்பதில் என்ன பலன்.

ஆனையிறவு தாக்குதல் வெற்றி. அது உங்களின் தலைமையில்தான் நடந்ததாகக் கூறுகிறார்களே அது உண்மைதானா?
அது மட்டுமல்ல முழுவதும் நான்தான். இராணுவத்துக்குரிய மூளை என்பதை நான்தான் வைத்திருந்தேன். படைகளில் பிரச்சினையில்லை. ஆட்பலம் என்னிடமிருந்தது. மஹத்தயாவுடன் என்னை ஒப்பிட்டது உள்ளிட்ட அவர்களது பேச்சு என்னை சற்றுச் சிந்திக்கவைத்தது. இனி நான் இங்கிருக்கக்கூடாது என்று உணர்ந்தேன்.

அரசு-புலிகளுக்கிடையிலான ஒப்பந்தத்துக்கு அமைய, புலிகளில் ஆறு தளபதிகளுக்கு ஹெலிக்கொப்டரில் சென்றுவரலாம் என்ற அனுமதியிருந்தது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஊடாக இதனைப் பெறலாம்.

“பேச்சுவார்த்தையிலிருந்து வந்திருக்கிறேன். இது தொடர்பாக கிழக்கில் தளபதிகளுக்கு விளக்கமளிக்கவேண்டும் எனக்கு காலையில் மட்டக்களப்புச் செல்ல ஹெலிகொப்டர் வேண்டும்” எனக் கேட்டேன். காலை 7 மணிக்கு ஹெலிகொப்டர் வரும் என கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

நான் விடியவிடியத் தூங்கவில்லை. கிளிநொச்சி மைதானத்துக்கு ஹெலிக்கொப்டர் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். கிளிநொச்சியில் மோசமான காலநிலை காரணமாக ஹெலியைத் தரையிறக்க முடியாது ஓமந்தைக்கு வரமுடியுமா எனக் கேட்டனர்.

எனக்கும் இது சரியாகவே பட்டது. கிளிநொச்சி மைதானத்துக்கு அருகில்தான் பிரபாகரனின் வீடு. ஹெலிகொப்டர் வந்தால் ஏன் வருகிறது, யார் வருகிறார்கள், யார் போகப்போகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரனுக்குத் தெரிந்துவிடும். எனவே நான் ஓமந்தைவந்து அங்கிருந்து மட்டுநகர் சென்றுவிட்டேன்.

உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கையான படைவீர்கள் கிளிநொச்சியில் இருந்தார்களா?
ஆமாம், என்ன பிரச்சினை நடக்கிறது என்பது தெரியாது. ஆனால் வந்தாலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

பகல் ஒருமணியளவில் கருணாவை அழைத்துவருமாறு பிரபாகரன் தமிழ்ச்செல்வனிடம் கூறியிருக்கிறார். தமிழ்ச்செல்வனும் என்வீட்டில் என்னைத் தேடியபோது நான் மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்கள். எப்படிப்போனார் என ஆச்சரியமாகக் கேட்டுள்ளார். ஹெலிக்கொப்டரில் சென்றுவிட்டார் என பதிலளித்திருக்கிறார்கள்.

உடனே தொலைபேசியில் வன்னிக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் அங்கு வரமாட்டான் என்றேன். எனக்கு இவ்வாறு யுத்தம் செய்யமுடியாது. எனினும் நான் குழப்பமாட்டேன். போரிடுவதன்மூலம் எமது இலக்கை அடையமுடியாது என்பதை நம்புகிறேன். யுத்தம் புரியத்தான் வேண்டுமென்பது உங்கள் நிலைப்பாடு.

இனிமேல் யுத்தம் புரியமுடியாது என்பது எனது நிலைப்பாடு. முடிந்தால் நீங்கள் யுத்தம் செய்து உங்கள் இலக்கை அடையுங்கள். நான் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடுகிறேன். எனது போராளிகள் அனைவரையும் அவர்களது வீட்டுக்கே அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் அவர்களையும், என்னையும் சுடக்கூடாது. நான் உங்கள் போராட்டத்தைக் குழப்பமாட்டேன் என்றேன்.

நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தமைக்காக பலர் உரிமைகொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள். அரசு- புலிகள் உடன்படிக்கையின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிதான் நான் புலிகளிலிருந்து பிரிந்துசெல்வதற்கு காரணமானது என பலரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பேச்சுவார்த்தையில் பிரபாகரனுக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடு, நாம் பெற்ற வெற்றிகள் அனைத்தையும் எமக்கு சாதகமாக பயன்படுத்த தவறியமை, தேவையற்ற உயிரிழப்புகள், தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது போன்ற காரணங்கள்தான் நான் பிரிந்துசெல்வதற்கு பிரதான காரணங்களாக இருந்தன. இவற்றைத்தான் இந்த நேர்காணலினூடாக விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.

நேர்காணல்: கே. அசோக்குமார்

நன்றி:தினகரன்

www.ilankainet.com

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!


டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை.
தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.
படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு பொருள் சேர்க்க வேண்டிய நமது இந்தியச் சூழலில் தனது மகனது கனவுப் படிப்புக்காகவும் அந்தத் தாய் ஓய்வறியாமல் வேலை செய்து வந்தார்.
சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜஸ்ப்ரீத் சிங் தனது மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தார். முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டீகரில் தனது மேற்படிப்பான எம்.டி படிப்பை படிக்க வேண்டும் என்பதுதான் ஜஸ்ப்ரீத் இன் திட்டம். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் இளநிலை மருத்துவப்படிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல்தான் கழிந்த்து.
அதன் பிறகுதான் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத் இன் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கியது. இறுதியாண்டு படிக்கும்போதுதான் பேரா. என்.கே. கோயல் என்பவரது மூலம் தொல்லை ஆரம்பமானது. சாதி வெறியனான என்.கே. கோயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங்கை சாதியின் பெயரால் அவமானப்படுத்தினான்.
“தலித் என்பதால்தான் உனக்கு இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எப்படியோ மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட்டாய். ஆனால் உன்னை தேர்ச்சியடைய விட மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள். நான் உன்னை மீண்டும் முதலிலிருந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ளச் செய்யாமல் விட மாட்டேன்” என்றெல்லாம் சவால் விட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடங்களில் ஒன்றான கம்யூனிட்டி மெடிசின் பாடத்தில் வேண்டுமென்றே ஜஸ்ப்ரீத் சிங்கை தோல்வியடையச் செய்தான். இந்த அநீதியைத் தனது சக மாணவர்களிடமும், பிற பேராசிரியர்களிடமும் எடுத்துரைக்க முற்பட்டார் ஜஸ்ப்ரீத். மீண்டும் தேர்வு எழுதியும் ஒரு மதிப்பெண் குறைவாகப் போட்டு அவரை தேர்வில் தோல்விடைய வைத்தான் சாதி வெறி பிடித்த கோயல்.
மனம் கலங்கிய மாணவர் ஜஸ்ப்ரீத் இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். தாயும் மகனைத் தேற்றி வரும் தேர்வில் நன்றாக எழுத ஊக்கம் கொடுத்துள்ளார். ஆனால் சாதிவெறி என்ற எதார்த்தத்தில் தனது கனவு நனவாகப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஜஸ்ப்ரீத் ஜனவரி 27, 2008 அன்று தனது 22 வது வயதில் கல்லூரி நூலகத்தின் ஐந்தாவது மாடியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அநீதி இழைத்த கோயலையும் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜஸ்ப்ரீத் சிங்.
தன்னுடைய ஒரே மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த அந்தத் துருப்புச் சீட்டைக் கொண்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்தப் பெற்றோர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்தது அரசும், ஆளும் வர்க்கமும். இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஏழைத் தந்தையின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பிறகே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு சில உண்மைகள் வெளி வந்தன. முதலாவதாக தற்கொலைக் குறிப்பு ஜஸ்ப்ரீத் எழுதியதுதான் என நிரூபணமானது. அடுத்ததாக, அவர் தேர்ச்சியடையவில்லை என கோயலால் நிராகரிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் இன் கம்யூனிட்டி மெடிசின் தேர்வுத்தாள் அனைத்தும் மூன்று வெவ்வேறு பேராசிரியர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் ஜஸ்ப்ரீத் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்தச் செய்தியைக் கேட்க அதனை எழுதிய ஜஸ்ப்ரீத் உயிரோடு இல்லை.
இவ்வளவு ஆதாரப்பூர்வ தகவல்கள் இருந்தும் என்.கே. கோயல் ஒருநாள் கூட சிறையில் இருக்கவில்லை. பேராசிரியராக, துறைத்தலைவராக இன்றும் தொடருகிறான். என்ன நடக்கும் என இலக்குத் தெரியாமலேயே இந்த வழக்கைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது அந்தக் குடும்பம். மறு ஆண்டு சகோதரத்துவத்துக்காக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது இயலாமை, பிரிவுத்துயருடன் கோபத்தை அடக்க முடியாத ஜஸ்ப்ரீத் சிங் இன் இளைய சகோதரி நீதி வேண்டி தனது உயிரையே மாய்த்துக் கொண்டாள்.
சாதிவெறி ஆட்டத்தால், கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம்வயதினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, நீதி வழங்குவதை தவிர்த்து ஒரு தலித் வாழ்வின் மதிப்பு இவ்வளவுதான் என உறுதிசெய்யும் அரசின் கொட்டத்தை நேரில் அனுபவித்திருந்தாலும்  தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஜஸ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தார்.
இந்த கட்டுரையின் முழு விபரத்தையும் படிக்க வினவு இணையத்திற்கு செல்லவும்/ www.vinavu.com

த இக்கொனமிக் டைம்ஸ்’ இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது


இராணுவபலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏககாலத்தில் பயன்படுத்தி இலங்கை தன்னுடைய இறைமையை பாதுகாத்து பொருளாதார ரீதியில் இன்று வளர்ச்சியடைந்துவருவது பாராட்டுக்குரிய சாதனை என்று ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.21வது நூற்றாண்டில் முதற்தடவையாக இலங்கை இராணுவம் உலகில் மிகவும் படுபயங்கரமான எல்.ரி.ரி.ஈ. போராளிகளை தோற்கடிக்கும் சாதனையைப் புரிந்ததை ஒரு சிறந்த அடித்தளமாக வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் இன்று 8 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அந்த சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவிட்டு இந்த ஆக்கபூர்வமான யுத்தத்தில் வெற்றிகண்டிருப்பதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராளை மேற்கோள்காட்டி இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் இந்த சாதனைக்கு எதிர்மாறாக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க அரசாங்கம் ஏறத்தாழ ஒரு ரில்லியன் டொலர்களை செலவிட்டும் இன்னும் வெற்றிபெற முடியாத நிலையில் இருந்து வருகிறது என்று சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தால் நாடு வலுவிழந்துவிடும் என்ற எண்ணத்தோடு எல்.ரி.ரி.ஈ. யினர் யுத்த தந்திரங்களை கையாண்டு கொழும்பில் மத்திய வங்கிக் கட்டடம், சர்வதேச விமான நிலையம், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மீது பெரும் சேதமிழைக்கும் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை அழித்துவிட்டது என்றும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இத்தகைய அழிவுகள் மூலம் வருடாந்த தேசிய பொருளாதாரம் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் காலப்போக்கில் யுத்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் நடைபெற்ற காரணத்தினால் தேசிய பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சியடைந்தது என்று இந்த சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையில் அதிகாரத்தில் வீற்றிருந்த அரசாங்கங்கள் அதிக பணச்செலவு ஏற்படும், அரசியல் ரீதியில் பிரச்சினைகள் எழும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர்குலைந்துவிடும் போன்ற காரணங்களினால் எல்.ரி.ரி.ஈ.யினை இராணுவ ரீதியில் தோற்கடிக்கத் தயங்கின. என்றாலும் இந்த அரசாங்கம் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ.யினை அடக்குவதில் வெற்றிகண்டது என்றும் சஞ்சிகை பாராட்டியுள்ளது.
இன்று யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் சாதகமான சமிக்ஞைகள் தெட்டத்தெளிவாகத் தென்படுகின்றன. நாட்டைவிட்டு வெளியேறிய கல்விமான்கள் மீண்டும் நாடு திரும்புகிறார்கள். பணவீக்க விகிதம் ஒற்றையிலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மையின் விகிதாசாரம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. போஷாக்கின்மை 35 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாகவும், வறுமை நிலை 15.2 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து ஒரு பாராட்டுக்குரிய சாதனையென்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 56 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது 2014இல் 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளிநாட்டு உல்லாசப் பயணத்துறை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருடத்திற்கு 600 மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொடுக்கிறது. அதனால்தான் இலங்கையை ஆசிய நாடுகளில் ஒரு விந்தைக்குரிய தேசமென்று பாராட்டுகிறார்கள் என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த 30 ஆண்டு காலமாக எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறாதபோதிலும் யுத்தம் முடிவடைந்து இரண்டாண்டு காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் வேகமாகத் துளிர்விட ஆரம்பித்துள்ளன. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்ததாக அறிகின்றோம். வடக்கு கிழக்கின் மீள்நிர்மாண நடவடிக்கைகளு க்கு அடுத்த 3 ஆண்டு காலத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சி 14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது.

கோதுமை மாவில் 80% தவிடு உறுதிப்படுத்த சட்டம் இலங்கையில் அரைக்கப்படும் மாவில் 26 வீதமே தவிடு

இலங்கையில் அரைக்கப்படும் கோதுமையில் 80 சதவீதம் தவிடு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு விசேட சட்ட ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுப் பிரிவு பல மட்டக்கலந்துரையாடல்களை நடாத்திய பின்பே இவ்விடயம் தொடர்பாக சட்ட ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறுகையில் வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுத் தான் இங்கு அரைக்கப்படுகின்றது. இச்சமயம் கோதுமை விதையில் 74 சதவீதம் தவிடு நீக்கப்படுகின்றது. இதனால் எஞ்சுவது மாப் பகுதி மாத்திரமே. இதனைக் கொண்டு தான் பாண் உள்ளிட்ட கோதுமை மாவிலான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் விட்டமின் வகைகளோ நார்ப் பொருட்களோ கிடையாது. நீரிழிவு உள்ளிட்ட பல தொற்று நோய்களுக்கும் இந்த கோதுமை மா துணை புரிகின்றது.
கோதுமையின் தவிட்டில் தான் விட்டமின் வகைகளும் நார்ப் பொருட்களும் பெருமளவு காணப்படுகின்றன. ஆயினும் அந்த தவிடு கோதுமை விதை எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதோ அதே நாட்டுக்கே திரும்பவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் அரைக்கப்படும் கோதுமையில் தற்போது 26 சதவீதமே தவிடு காணப்படுகின்றது. இதனை 80 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கென விசேட சட்ட ஏற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்றார்.
நன்றி மகாவலிwww.mahaveli.com

தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு


தமிழகத்தை வாழ விடுவதில்லை என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறதுசென்னை,ஆக.12: மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.  சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிதிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ. சௌந்திரராஜன் பேசும்போது குறுக்கிட்டு அவர் பேசியது:  ரேஷன் கடைகளில் உரிய அளவு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று சௌந்திரராஜன் கூறுகிறார். மண்ணெண்ணெயை நாம் மத்திய அரசிடம் இருந்துதான் பெற வேண்டும்.  அதனை வாங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. மண்ணெண்ணெய் மட்டுமல்ல டி.ஏ.பி. உரத்தின் அளவையும் மத்திய அரசு குறைத்துள்ளது. மொத்தத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது.  திரும்பத் திரும்பக் கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று சௌந்திரராஜன் கேட்கிறார். எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை நிதி. மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய அனைத்து இனங்களையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுவிட்டது.  வாட் (மதிப்புக் கூடுதல் வரி) வரி மூலம் வரும் வருவாயைக் கொண்டு வந்து அனைத்து செலவுகளையும், நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறோம்.  செய்ய வேண்டிய மனமும், ஆசையும் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ அதைவிட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், நிதிப் பற்றாக்குறை தான் எங்கள் கைகளை கட்டிப்போட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு எப்படியும் நன்மை செய்தே தீருவோம் என்ற வைராக்கியத்துடன் பகீரத முயற்சி செய்து ஒவ்வொரு மக்கள் நலத் திட்டமாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்.  மத்திய அரசு எத்தனை தடைகள் விதித்தாலும் அதனை தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்வோம். இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சூழ்நிலையை சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது. தமிழகத்தை வாழ விடுவதில்லை என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. அதையும் மீறி ஜனநாயக முறைக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை செய்தே தீருவோம் என்றார்.  அதனைத் தொடர்ந்து பேசிய, ஏ. சௌந்திரராஜன், கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லாஹ் (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார், செ.கு. தமிழரசன், உ. தனியரசு ஆகியோர் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டத்துக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதாக தெரிவித்தனர்.
பெங்களுரு நீதிமன்றில் கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் என்று தீர்ப்பு கிடைத்தது சமசீர் வழக்கில் செருப்படி போன்ற விடயங்களால் கர்வ பங்கம் ஏற்பட்டு தலை கால் தெரியாமல் குதிக்கிறார்.போதாக்குறைக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எப்படியும் தன்னோடு கூட்டு சேராது என்பதும் தெரிந்துவிட்டது எனவே வேறு வழியில்லை மதிய அரசோடு மக்சிமம்  சண்டை பிடித்தால்தான் அந்த தேர்தலில் மக்களுக்கு நாமம் போடலாம் என்ற அவரது நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. தமிழர்களின் அறிவு ஆற்றல் எல்லாம்தான் உலகுக்கே தெரியுமே?

யாழ் மாணவர்களுக்கு பாலியல் கல்வி போதிக்க படவேண்டும்

யாழில் 5 மாதங்களில் 75 திருமணமாகாத இளம் பெண்கள் கர்ப்பம் தரிப்பு
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதாரத் திணைகள வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாகவோ, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவோ இவர்கள் போதிப்பதில்லை எனவும் அவர் கூறினார். இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இளவயதுக் கர்ப்பங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டம் கடந்தவாரம் தம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர், முதற்கட்டமாக பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குச் செயலமர்வை ஆரம்பிததுள்ளதாகவும், இதன்போது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியாக இந்தப் பயற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையின்றேல் சர்வதேச நடவடிக்கை: அமெரிக்கா

 மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச தரத்திற்கிணங்க முழுமையான சுயாதீனமான நம்பகமான ஏற்றுக் கொள்ளத்தக்க விசாரணையை இலங்கை நடத்தவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக முழுமையான நம்பகமான சுயாதீனமான ஏற்றுக்கொள்ளத்தக்க விசாரணைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். இலங்கையர்கள் இவ்விசாரணையை சர்வதேச தரத்திற்கமைய அவர்களாகவே செய்வதைக் காண நாம் விரும்புகிறோம். எனவே இலங்கை விமர்சகர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சர்வதேச தரத்திலான விசாரணையை ஆரம்பியுங்கள்'' என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நியுலண்ட் கூறியுள்ளார். செவ்வாய்க்கிமை வோஷிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதை விரைவாக செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இலங்கையர்கள் தாமாகவே இதை செய்வார்கள் என நாம் நம்புகிறோம். (மேலும்)

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்: ராஜிவ் கொலைக்குற்றவாளியின் தாயார் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தனது மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர் உள்பட முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று நிராகரித்தார். எனவே, இவர்கள் தூக்கிலிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் 70 வயது தாயார், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நளினிக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது 18 வது குற்றவாளியான எனது மகனுக்கு ஏன் கருணை காட்டக்கூடாது என்று கேட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18-வது குற்றவாளி பேரறிவாளன். ராஜீவ் கொலையாளி தனு பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பேட்டரிகளை வாங்கிக்கொடுத்து குண்டு தயார் செய்வதற்கு உதவினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை

பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால், பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இன்று எச்சரித்துள்ளார்.
அண்மைய நாட்களில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பாக அப்பாவிகளும் பொலிஸாரும் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பங்களை நாம் கண்டுள்ளோம்.
இத்தகைய நடவடிக்கையை மக்கள் எதிர்காலத்தில் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளார்.
பொலிஸார் செயற்படாமையின் காரணமாகவே ஹப்புத்தளையில் இரு அப்பாவிகள் கிறீஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஆத்திரமடைந்த கிராமவாசிகளால் கொல்லப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

பொலிஸார் யுத்தத்தின்போது பெரும் சேவையாற்றினர். ஆனால் இப்போது யுத்தத்தின் பின்னரான சூழ்நிலைக்கு ஏற்பவும் மக்கள் சார்பானதாகவும் மாறவேண்டும் எனவும் கோத்தபாய கூறினார்.

கோப்பாய் சடலங்கள் அடித்து படுகொலை செய்யப்பட்டவை என யாழ் வைத்திய அதிகாரி தெரிவிப்பு!

கடந்த புதன்கிழமை யாழ். கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண் இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.

கோப்பாயில் இராச வீதியிலுள்ள காணி ஒன்றில் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய அருளன் தனபாலசிங்கம் (வயது 43) மற்றும் இந்துஷா (வயது 24) ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரின் விசாரணைக்காக சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பின்னரே சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த இருசடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை யாழ். நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓடிப்போய் வரிசையில் நின்று ஜெ.வுக்கு மரியாதை செய்துவிட்டு கலையும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள்


நமக்கு வாய்த்த அடிமைகள் நல்ல விசுவாசிகள் என்று ஜெய நம்பினால் அது மிகவும் தப்பு. கூழைக்கும்பிடு போடும் பச்சோந்தி கூட்டம் இவர்களால் நாட்டுக்கு ஒருபோதும் நன்மை விளையப்போவதில்லை. சிலவேளை ஜெயாவுக்கு தற்காலிக நன்மைகள் கிடைக்கலாம் அம்புடுதே.
படங்கள்: ஸ்டாலின்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நான் பதவிப் பிரமாணம் எடுத்தபோது..... :ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
 டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து,

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களைதெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார்.
இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.
தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராசா,  ‘’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்ததாக, சி.பி.ஐ., கூறுகிறது.
ஆனால், 2008 ஜனவரி 6ல், பிரதமர் அலுவலகம், குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, முந்தையக் கட்டணத்திலேயே, துவக்க நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது.
 ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என் கடமை.
மத்திய அரசில், 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்தபோது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என, கூறினேன்’’என்று கூறினார்.

ஜெயலலிதா மனு தள்ளுபடி : நேரில் ஆஜராவது கட்டாயம்

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்தது பெங்களூர் நீதிமன்றம்.
வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு செய்திருந்தார் ஜெயலலிதா.
மனுக்கள் தள்ளுபடியால் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராவது கட்டாயமாகிறது.

வரதட்சணை சித்ரவதை 3 மாத கர்ப்பிணியை எரித்து கொன்ற கணவன் கைது


சென்னை : வரதட்சணையாக 15 சவரன் நகை ரூ.50 ஆயிரம் தர மறுத்த கர்ப்பிணி மனைவியை எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சென்னை வியாசர்பாடி சத்தியா நகரை சேர்ந்தவர் கிருஷணவேணி (50). வடசென்னை அதிமுக மகளிர் அணி இணை செயலாளர். இவரது மகன் நந்தகுமார் (21). கார் டிரைவர்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களது ஒரு வயது குழந்தை இறந்து விட்டது. தற்போது சிவரஞ்சனி 3 மாத கர்ப்பிணி. இந்நிலையில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக பெற்றோரிடம் வாங்கி வரும்படி சிவரஞ்சனிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் கிருஷ்ணவேணி. மறுத்த சிவரஞ்சனியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 6ம் தேதி வரதட்சணை தொடர்பாக கணவன் & மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணவேணியும் நந்தகுமாரும் சேர்ந்து சிவரஞ்சனியை அடித்து உதைத்துள்ளனர். அதன்பிறகு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில், உடல் கருகி உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து எம்.கே,பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிவரஞ்சனி இறந்தார். தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்தனர். சிவரஞ்சனி சாவுக்கு காரணமான கிருஷ்ண வேணியையும் கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உதவி கமிஷனர் மனோகரன் கைது செய்வதாக உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பதற்றம் நிலவியது.

மம்முட்டி மோகன்லால் வருமான ஏய்ப்பு,சிக்கிவிட்டார்கள். மீளுவார்களா?

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30 கோடி சொத்து மதிப்பிலான வருமான ஏய்ப்பு செய்துள்ளதாக இன்று‌ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஜீலை 23ல் கேரள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரது தென் மாநில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ‌வருமான வரி சோதனை செய்தனர். அப்போது ரூ.3 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ‌மீண்டும் சோதனை செய்ததில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளாதால் இருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமசீர் கல்வியால் கிளாகுகளைதான் உருவாக்கலாமாம் விஜயகாந்த் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டார்


கிளார்க்குகளை உருவாக்கலாம் :அப்துல்கலாம்
போன்றவர்களை உருவாக்க முடியாது.( அட அறிவாளியே அப்துல் கலாம் எந்த காண்ட்வேன்டில் படித்தார்?)
சட்டசபையில் விஜயகாந்த் பேச்சு
சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அது உண்மையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி உருவாக வழிவகுக்குமா என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில்,   ’’நகர்ப்புறங்களில் அதிக வசதிகள் கொண்ட பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறும்போது, எங்களுக்கு 4-ம் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுதான் இன்று 8-ம் வகுப்பில் உள்ளது. அதில் என்ன புதிதாக படிக்கப் போகிறோம் என்றனர்.

ஆனால் அதே நேரத்தில் எந்த வசதியும் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது.

பொதுப்பாடத் திட்டத்தின்படி தேர்வு நடத்தினால் நகர்ப்புற பணக்காரப் பிள்ளைகள் எளிதாக அதிக மார்க்குகள் வாங்கி மேல்படிப்புக்குச் செல்ல முடியும். கிராமப்புறத்தினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இது எந்த வகையில் சமூக நீதியாக அமையும்?
தற்போதுள்ள பாடத்திட்டத்தை எல்லோரையும் படிக்கச் செய்தால் அதன் மூலம் கிளார்க்குகளை வேண்டுமானால் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது.
உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர முதலில் அடிப்படை வசதிகளை கல்விக் கூடங்களில் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டமும் முன்னுக்குப் பின் முரணானது என்றே கருதுகிறேன்’’ என்று பேசினார்.

டாக்டர் அப்துல் கலாம் எந்த பாடத்திட்டத்தில் படித்தார் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாமே! பழைய mechalay கல்வி திட்டத்தில் உருவானவர் தான் அப்துல் கலாம்

Name : வா.நேருஅப்துல்கலாம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் அவர் தனது தாய்மொழியான தமிழில் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். முதல் 10 ஆண்டுகள் , அதாவது L.K.G., U.K.G.,முதல் 5-ம் வகுப்பு வரையிலாவது அனைவரும் தமிழில் படிக்க வேண்டும், அது அப்துல்கலாம் போன்றவர்களை உருவாக்கும். திரு. விஜயகாந்த் அவர்கள் -ஜப்பான் மொழியில் ' டோட்டாசான் ' என்ற பெயரில் வந்த 'ஜன்னல் ஓரத்தில் சிறுமி' போன்ற கல்வி குறித்த நூல்களைப் படிக்கவேண்டும் . இன்றைய மெட்ரிகுலேசன் கல்வி பிள்ளைகளை சுயமாக வளரவும் , சுயமாக சிந்திக்கவும் அனுமதிக்கிறதா? இல்லையெனில் மாற்றுவது எப்படி ? என உண்மையான கல்வியாளர்களோடு கலந்து முடிவெடுக்க வேண்டும்.

Name : Ravichandran யார் வேண்டுமானுலும் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் நம் நாட்டில், பணமும் பதவியும் இருந்தால்.

Name : vanavilCountry : Belgium எஜமானி விசுவாசம் ?

Name : jegaveeraphandian திரு. விஜயகாந்த் அவர்களே... நீங்கள் திரும்பத் திரும்ப ஒரு சினிமாக்காரனைப்போலவே பேசிக்கொண்டிருக்கிறீர் கள்; அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கல்விகுறித்து உமக்குப் பேசத் தகுதி இல்லை என்பது உமக்கே நன்கு தெரியும்போது ஏன் வீணாக உளறிக்கொட்டுகிறீர்? தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் ஐயா. தமிழ்நாட்டில் சமநிலையுடன் ஒருதலைசார்பாகச் சிந்திக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து சொல்லவும் பேசவும் அறிக்கைகளைச் சமர்பிக்கவும் நிறைய அறிஞர் பெருமக்கள் உள்ளனர். அம்மாவைக் குளிர்விப்பதற்காக எதை எதையோ வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்!

Name : Country : India ஐயோ ஐயோ...

Name : arun யோவ் காமெடி பீஸ், அப்துல் களம் எந்த convent ல படிசாரு, தரமான கல்வியதான உன்னோட பையன் படிச்சான், அப்பறம் எதுக்கு fail ஆனான், போயி உன்னோட பையன அப்துல் கலாமா உருவாக்கு அப்பறம் மத்த பிள்ளைங்கள பத்தி கவலை படலாம், தண்ணிய போட்டினா என்ன வேணாலும் பேசுவிய. அந்த அம்மா வரியா எத்துணப்ப எங்க போயிருந்த, இத செயல் படுத்தினது உனக்கு பிடிகளான supreme கோர்ட் கண்டனம் தெரிவி பாப்போம்.

Name : karthik Country : India அதனாலதான் நீ அப்துல்கலாம் ஆகலியா

தமிழகத்தில் இன்று முற்பகலில் நில அதிர்ச்சி...திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான

ஆத்தூர்; தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.
சேலம் மாவட்டம் கிழக்குப்பகுதியான ஆத்தூர், தலைவால் பகுதிகளில் சவல்பட்டி, வெத்தூர், முல்லைவாடி, மணிவழுந்தூர், காட்டுக்கோட்டை, சார்வாய், சந்தேரி, வீரகனூர், மும்முடி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் இது உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர்.

உணர்ந்தவர்கள் பேட்டி: இது குறித்து மும்முடியை சேர்ந்த திருமால் என்பவர் கூறுகையில்; நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திடீரென மேஜை சேர்கள் உருண்டன. அதிர்ந்துபோனேன். உடனே பலரும் வெளியே ஓடி வந்து விட்டோம் என்றார் . தலைவாசல் பகுதி வக்கீல் பாஷாகான் கூறுகையில் ; நான் ஆபீசில் உட்கார்ந்திருந்தேன். திடீரென தலைசுற்றுவது போல் இருந்தது. சில நிமிடங்கள் இதனை உணர்ந்தேன் என்றார். பல பகுதியில் உள்ள ஆபீஸ் ஊழியர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வீதியில் நின்றபடி இருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடிபகுதியிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட் எரைஞ்சி, எடைக்கால், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியிலும், பெரம்பலூரில் வேப்பந்தட்டை, பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. கிராம மக்கள் கூறியதை அடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். எந்த அளவிற்கு இருந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த மாதம் இது போன்று நில அதிர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2.9 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த முறை 3 ரிக்டர் அளவாக இருக்கும் என தெரிகிறது.
வீடுகளில் விரிசல்: சேலம் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் சில வீடுகள் விரிசல் அடைந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலி கண்டபுரம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீடு சேதமடைந்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை: கடலூர் மற்றும் பெரம்பலூரில் அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருச்சியிலும் நில அதிர்வு : திருச்சியில் நகர்ப்பகுதியான மன்னார்புரம், கண்டோண்மென்ட் , புறநகர்ப்பகுதியான சிறுகானூர், லால்குடி கொனலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த உணர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அச்சப்பட வேண்டாம்; கலெக்டர் விளக்கம்: நில அதிர்வு குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில அதிர்வு காரணமாக பொது மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கடந்த ஜூன் மாதத்திலும் சேலத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இன்று காலை ஜப்பானில் நில நடுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகம்’அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், வரும் 14 திகதி

சென்னை:  எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவர், சென்னையில் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். அக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளது.
சென்னை,   புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன், 50,  வாரப் பத்திரிகையின் முகவராகவும், விற்பனையாளராகவும் பணிபுரிகிறார். சிறுவயது முதலே, எம்.ஜி.ஆர்., மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.      அது நாளடைவில் பக்தியானது.   பக்தியை வெளிப்படுத்தும்   வகையில், சொந்த செலவில், எம்.ஜி.ஆர்., படம் போட்ட  சாவிக்கொத்து,   பிளாஸ்டிக்   ஸ்டிக்கர் போன்றவற்றை,   பார்ப்பவர்களிடம் கொடுத்து  வருகிறார்.
எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.மனைவியின் நகையை விற்ற பணம், சேமிப்பு என தேறிய மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, திருநின்றவூர்,    நத்தம்மேட்டில், முக்கால் கிரவுண்டு இடம் வாங்கி, அதில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டினார். அக்கோவிலினுள் முன் மண்டபத்தில், ஆறடி உயரத்தில் எம்.ஜி.ஆரின் பளிங்கு சிலை வைத்துள்ளார்.
அதற்கு முன்பாக, அபிஷேகத்திற்காக, இரண்டு அடி உயரத்தில் கிரானைட் கல்லால் ஆன உற்சவர் சிலையையும் அமைத்துள்ளார்.  இக்கோவிலின் கும்பாபிஷேகம்,  வரும் 14 மற்றும்   15ம் தேதிகளில்  நடக்கிறது.
‘அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, செல்லியம்மன் சாலை, திருநின்றவூர்’ என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஹா அரைப்பைத்தியம் ஆவதிலும் பார்க்க முழு  பைத்தியமாகி விடவேண்டும் என்பார்களே அது இதுதானோ? 
நமக்கும் இதில் சில சிந்தனைகள் உதிக்கின்றன. அன்பார்ந்த எமது புலன் பெயர் உறவுகளே நீங்கள் இந்த மாதிரி முட்டாள்தனங்களில் சளைத்தவர்கள் இல்லை என்பதை ப்ரூப் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு. எவ்வளவு காலத்திற்குதான் பழைய பாரம்பரிய கோவில் சாமி என்று காவடி எடுப்பீர்கள்? 
புதிதாக இப்படி ஏதாவது ஒருவர் பெயரில் கோவிலை கட்டி பெயிண்ட் அடித்து ஒலி பெருகிகளை அலற விட்டு உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்வதற்கு அரிய வாய்ப்பு. இது ஒன்றும் உங்களுக்கு புதிதில்லையே?

  நம்பிக்கை துரோகம் கூட இருந்தே குழி பறிப்பது சதா கொலை வெறி கொண்டு தனது நிழலையும் நம்பாத ஒரு இருட்டு ஜென்மத்தை முருகனுக்கு நிகரானவன் என்று பாட்டு பாடி துலாக்காவடி எடுத்த அறிவாளர்கள் அல்லவா நீவீர்?

நம்பூதிரிகளின் சதி ஆறாவது அறையை திறந்தால் நாசமாம்.யாருக்கு?

   பத்மநாபசுவாமி கோவிலின் ஆறாவது பதுக்கல் அறையை திறந்தால் அதை திறப்பவருக்கு பெரும் நாசம் ஏற்படுமாம். இந்த பார்பானுகள் இத்தனை வருடங்களாக மக்களை திருடியும் அவர்களுக்கு ஒரு நாசமும் வரவில்லையே மேலும் ஜனங்களை இருட்டில் வைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் தொழிலைதானே செய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களே மீண்டும் பிறந்து வாருங்கள் அதுவும் ஒரு மலையாளியாக வாருங்கள்.
 இதல்லாம் summa                Name : allex                        
ஆகவே  நான் திரு ராகுல் காந்தி ஆறாம் இலக்க அறையை திறந்து மூட  நம்பிக்கைக்கு எதிரான தனது வலுவான ஆதரவை தர வேண்டும் என கேட்டுகொள்கிறேன்                   
Name : prabhu           Country : India           Date :8/12/2011 12:25:02 PM        
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது. பணத்தை  எடுத்து வருமைய்ல் வடுபர்களுக்கு கொடுக்கலாம். ஊனம் உற்றோருக்கு உதவலாம்.                             
Name : prabhu            Country : India           Date :8/12/2011 12:24:51 PM        
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது. பணத்தை  எடுத்து வருமைய்ல் வடுபர்களுக்கு கொடுக்கலாம். ஊனம் உற்றோருக்கு உதவலாம்.                   
Name : mani           Country : Australia           Date :8/12/2011 12:23:37 PM        

வம்சமே இல்லாதவர்கள் திறக்கட்டும்                            
Name : s.venkatesan            Country : India           Date :8/12/2011 12:13:16 PM        
Please don't open the 6th underground room this is my request                  
Name : ajay           Country : India           Date :8/12/2011 12:02:59 PM        
kadavul irukkar, avan inri anuvum asaiyathu. aanavam vendam.  avanai charanadai.anaiththum tharuvan. By-ajay. anna nagar.ch-40.                           
Name : Ravi            Country : India           Date :8/12/2011 11:53:50 AM        
Let us respect the words of these persons. Let us not speculate  and come to "so called" scientific means of analyzing these statements.  Science of what we do is still not well developed in many areas such as  this.                   
Name : devan           Country : Singapore           Date :8/12/2011 11:46:37 AM        
இது மலையாளிகளின் சூழ்ச்தி. இதை யாரும் நம்ப மாட்டார்கள், உங்களை போல் முட்டாள் பசங்கள் தான் நம்புவார்கள்.                             
Name : Anand            Country : Japan           Date :8/12/2011 10:54:21 AM        
ஏமாற்று வேலை.                  
Name : anand           Country : France           Date :8/12/2011 10:47:32 AM        
நான் திறக்க தயார் .                           

6-வது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்துபோகும்


திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழிந்து போகும் என, தேவ பிரசன்னத்தில் தெரிய வந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் கூறினர்.
பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட்டன. அப்போது அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம் கோடிக்கும் அதிகமான அரிய பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது. பி என்று பெயரிடப்பட்ட 6-து அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த அறைகள் திறப்பு மற்றும் பொற்குவியல் பட்டியலிடும் பணிகள் தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் எனும் ஜோதிட நிகழ்ச்சி நடத்த திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, ஜோதிட பண்டிதர்கள் மதூர் நாராயண ரங்கபட், இரிங்காலக்குடை பத்மநாப சர்மா, அரிதாஸ், தேவிதாஸ் மற்றும் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேவபிரசன்னத்தின் முதல் நாள் காலையில் சோழிகள் உதவியுடன் ராசி பூஜையும், தொடர்ந்து தங்க ஆரூடம் பார்த்தலும், அதன் பிறகு 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 வெற்றிலைகள் உதவியுடன் தாம்பூல ஜோதிடமும் பார்க்கப்பட்டது.
முதல் நாளில் இருந்தே பல அபசகுன அறிகுறிகள் தோன்றியதாகவும், இதனால் நாட்டுக்கும், ராஜ குடும்பத்தினருக்கும் கெடுதல் ஏற்படும் என்பது உள்பட பல விளக்கங்கள் கூறப்பட்டன. இதில், 12 வெற்றிலைகள் பயன்படுத்தி ஜோதிடம் கூறும் தாம்பூல பிரசன்னம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
நேற்று 4-வது நாளாக காலை 8 மணிக்கு தேவபிரசன்னம் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக கணித்து கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பார்க்கப்பட்ட சகுனங்கள் பற்றியும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை தோராயமாக கூறப்பட்ட பல விஷயங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. நேற்று, குத்துவிளக்கு மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. குத்துவிளக்கில் போடப்பட்டுள்ள திரிகள், அவற்றின் திசை, ஒளிரும் ஜோதியின் தன்மை- வடிவம் ஆகியவை மூலம் ஜோதிடர்கள் கணித்து கூறினார்கள். நேற்று தேவபிரசன்ன முடிவில் அதிர்ச்சி தரும் தகவல்களை ஜோதிட பண்டிதர்கள் வெளியிட்டனர்.
தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள்,

பத்மநாப சாமி கோவிலில் பரிகாரமாக செய்யப்பட்டு வந்த சில பூஜைகள்- நிகழ்ச்சிகள் தடைபட்டதால் சாமி கோபத்துக்கு உள்ளானது, நாட்டுக்கும் ராஜ குடும்பத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தி உள்ளதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. இதனால் ராஜ குடும்பத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கோவில் நம்பிகள் புறப்படா சாந்திகளாக கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படவில்லை. கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டு உள்ளதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதற்கு பரிகாரமாக, கோவில் மற்றும் நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக பத்ர தீபம் ஏற்ற வேண்டும். (5 திரிகள் போட்டு தீபம் ஏற்றுவது தான் பத்ர தீபம் அல்லது பஞ்சாக்னி ஆகும்.)
பிராயசித்தமாக நடத்தி வந்த இந்த தீபம் ஏற்றும் வழக்கத்தை கோவில் ஆசாரப்படி, மீண்டும் தொடங்கி, தடைபடாமல் செய்வதாக கோவில் நிர்வாகிகள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. பத்ர தீபம் ஏற்றுவதற்கு இந்த கோவிலில் தனி அறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் கொள்ளை முயற்சி நடக்கலாம் என்றும் பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. நேபாள நாட்டின் கண்டகா நதியில் இருந்துதான், பத்மநாபசாமி மூலவர் சிலை அமைப்பதற்கு தேவையான சாளகிராமங்கள் திருவனந்தபுரத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதில் தொடர்பு உடையவர்களை கவுரவிப்பது சம்பந்தமான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும்.
பத்மநாபசாமி கோவிலில் பணம் செலவிடுவதில் மோசடி நடந்துள்ளது. வரவு-செலவு கணக்குகளிலும், வழிபாடுகள் தொடர்பான கணக்குகளிலும் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது.
கோவில் நீண்ட காலம் சிறப்பாக செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனந்தன்காடு உள்பட கோவிலுடன் தொடர்புடைய இடங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் தேவபிரசன்னத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.தெய்வீக காரியங்களுக்காக, தகுந்த ஆட்களையே நியமிக்க வேண்டும்.திறக்கப்படாத 6-வது பாதாள அறைக்குள்(`பி' அறை) செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதனால் இந்த அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.
இந்த அறையை திறந்தால், திறப்பவருக்கு விரைவில் மரணம் நிச்சயமாக ஏற்படும். அறையை திறப்பவரின் வம்சம் அழிந்து போகும்.
அறையை திறப்பவரின் குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி-அமைதியான நிலை தொடர்ந்து காணப்படும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்று கூறினர்.

தகவல் வழங்கியவகளைச் தேடி அலையும் புலனாய்வுத்துறையினர்

இந்தியா ரு டேக்கு தகவல் வழங்கிய நபர்களைச் தேடி அலையும் புலனாய்வுத்துறையினர்

இந்திய ருடே என்கின்ற தொலைக்காட்சியில் Inside Sri Lanka`s killing Field எனும் தலைப்பில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்டு பல ஊடகங்களிலும் வெளியாகியிருந்த மற்றும் புலிகள் தமது பரப்புரைக்காக பயன்படுத்தியிருந்த வீடியோக்களை Youtube பில் எடுத்து, மாற்றியமைத்து புதிய தொகுப்பொன்று வெளியிடபட்டிருந்தது.

அத்துடன் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் ஊடவியலாளர் பிரியம்வதா வன்னி பிரதேசத்திற்கு சென்று அங்கு மக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன் உருமறைக்கப்பட்ட சிலர் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோமென விவரிக்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஒளிபரப்பில் தோன்றியுள்ள நபர்களின் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு காணப்படுகின்றது.
 

இல்லாத கடலில் குதித்தாராம்
இவ்வீடியோவில் தோண்றிய பெண்ணொருவர் தான் தங்கியிருந்த 
இடைத்தங்கல் முகாமில் தாய் ஒருவர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தையுடன் அருகிலிருந்த கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை தனது கண்களால் பார்த்தாக கூறுகின்றார்.

மேற்படி வெளியீடு முற்றிலும் திட்டமிடப்பட்ட பொய்பிரச்சாரம் என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு நபரது கருத்துக்களே போதுமானதாகும். இலங்கையில் இடைத்தங்கல் முகாம்கள் யாவும் வவுனியாவிலேயே அமைக்கப்பட்டிருந்தது. வவுனியா முகாமிற்கு முன் எங்கு கடல் உள்ளது? இந்தபெண் இலங்கையிலிருந்த இடைத்தங்கல் முகாம்களின் நிலை எவ்வாறிருந்தது? அது எங்கு அமைந்திருந்தது போன்ற விடயங்கள் கூட தெரியாதவராக காணப்படுகின்றார்.
ஆகவே இவர் குறிப்பிட்ட ஊடகத்தினால் திட்டமிடப்பட்ட வகையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படப்பிடிப்புக்காக கொண்டுவரப்பட்ட இலங்கைப்பெண்ணாக இருக்க முடியுமென நம்பப்படுகின்றது.

அதேநேரம் இதே வீடியோவில் தோன்றிய பிறிதொருபெண் அங்கு வந்த இராணுவத்தினர் உள்ளாடைகளையும், மாதவிலக்கு நேரங்களில் பயன்படுத்தும் பொருட்களையும் வழங்கியதாக தெரிவிக்கின்றார்: அவ்வாறாயின் அவசியப் பொருட்களைக்கூட வழங்கியவர்கள் உணவு வழங்கவில்லையா என்பது கேள்வி. அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மிதமிஞ்சிய நிலையில் அவற்றை அவர்கள் வவுனியாவில் தெருவில் வைத்து விற்பனை செய்தமையை அன்றைய காலங்களில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தமையை நினைவு கூரலாம்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் தான் வன்னி பிரதேசத்திற்கு சென்று மக்களை சந்தித்து கருத்துக்களை பெற்றதாக தெரிவிக்கின்றபோதும், இப்படப்பிடிப்பு இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஓன்று இந்தியாவில் ஒன்று வன்னியில். வன்னியில் வீடொன்றில் வைத்து வீட்டின் உட்புறம், வெளிப்புறம், பின்புறம் என ஒருவீட்டின் மாறுபட்ட இடங்களிலேயே படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளமை தெளிவாக தெரிகின்றது. இப்படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட இடம் அடையாளம் காணப்படும்போது, இதன் பின்னணி நிச்சயமாக வெளிவருமென நம்பப்படுகின்றது.
இல்லாத கடலில் குதித்தாராம்
குறிப்பிட்ட படப்பிடிப்புடன் சம்பந்தப்பட்டிருக்க கூடியவர்கள் எனச் சந்தேகப்படுகின்றவர்களை தேடி வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு அவர்கள் அகப்பட்டுவிட்டால் தமது ஊடகத்தின் பிரபல்யத்திற்காகவும் தீய சக்திகளின் தேவைகளுக்காகவும் இம்மக்களை பயன்படுத்தியோரால் அம்மக்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியுமா? ஒரு இராட்சியம் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியமைக்காக வருடக்கணக்கில் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டால் அதன் பக்கவிளைவுகளுக்கு யார் பதில் சொல்வர்?

குறித்த ஊடகத்தினர் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இருவருடங்களின் பின்னர் வன்னயினுள் நுழைந்த முதலாவது ஊடகவியாளர் பிரியம்வதாவே என தெரிவிக்கின்றனர். ஆனால் இக்கருத்து பொய்யானது எனவும் யுத்தம் முடிவடைந்து சில நாட்களிலேயே சர்வதேச ஊடகவியலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக விரிவான ஆய்வொன்ற லண்டன் பிபிசி ஊடகம் மேற்கொண்டிருந்தாகவும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவிக்கின்றார்