சனி, 31 மார்ச், 2018

கமல் திருச்சி வரை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஷோ காட்டி நெரிசல் ஏற்படுத்த முடிவு . .. பின்னணியில் பாஜக ?

கமலுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு!மின்னம்பலம் :திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மக்கள் நீதி மய்யம் மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் பயணம் செய்யும் கமல்ஹாசன், அப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்களையும் கட்சியினரையும் சந்திப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிளாட்பாரத்தை அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறதா என்றும், அதனால் சம்பந்தப்பட்ட ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுமென்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மக்கள் செய்தி மய்யத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில், “வரும் ஏப்ரல் 4ம் தேதி, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்புரையாற்ற 3ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி செல்கிறார் கமல்ஹாசன். அப்போது 6 ரயில் நிலையங்களில் அவரை மக்கள் நேரில் சந்திக்கலாம். திருச்சி பொன்மலை ஜி கார்னர் கிரவுண்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மலேசியா .. இஸ்லாமிய மதமாற்றம் செல்லாது . தனது 3 குழந்தைகளை மீட்டார் இந்திரா.. அமெரிக்க விருது!

புனிதா சுகுமாறன் அமெரிக்காவின் துணிவுமிக்க பெண் விருதை பெற்றது பெருமையாக இருந்தாலும் ஒரு தாயாக பெற்ற மகளை இன்னமும் பிரிந்திருப்பது வேதனையாகவே உள்ளது என திருமதி இந்திரா காந்தி தனது மனவேதனையை வெளிபடுத்தினார்.< தனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டார் திருமதி இந்திரா காந்தி. தனது முன்னாள் கணவரின் செயலை எதிர்த்து துணிச்சலாக சட்டப் போராட்டம் நடத்தி அதில்  வெற்றி கண்டதை அடுத்து அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் அவர்.< இவ்விருதை நேற்று பெற்றுக் கொண்ட அவர், இவ்விருது எனக்கு பெருமையாக உள்ளது; ஆனாலும் என் மகளை பார்க்காமல் மனம் வேதனை அடைகிறது. பெற்ற தாய்க்கு பிள்ளைகள் தானே சொர்க்கம் என்ற நிலையில் பிள்ளையை பிரிந்துள்ள துயரம் வேதனை அடையச் செய்கிறது.

ஸ்தபதி முத்தையா ரூ.200 கோடி சொத்து குவிப்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார்..

IG Pon manickavel, Sthapathy Muthiah,,Ekambareswarar Temple,ஸ்தபதி முத்தையா, சொத்து குவிப்பு வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார், இந்து சமய அறநிலைய துறை, ஏகாம்பரேஸ்வரர் கோவில்,  உற்சவர் சிலை, சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் , ஐ.ஜி பொன் மாணிக்கவேல், பத்மஸ்ரீ ஸ்தபதி முத்தையா, 
 asset accumulation case, statue smuggling prevention police, Hindu religious charity department Somaskandar, Padmasree Sthapathy Muthiah,தினமலர் :இந்து சமய அறநிலைய துறையின், ஸ்தபதி முத்தையா, 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக் கள் வாங்கி குவித்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற, ஏகாம்பரேஸ் வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், உற்சவர் சிலைகளான, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி சிலைகள் சேதமடைந்து விட்ட தாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய பஞ்சலோக சிலை செய்ய, அறநிலைய துறை முடிவு செய்தது.இந்த சிலையை, ஸ்தபதி முத்தையா, தனக்கு வேண்டிய மற்றொரு ஸ்தபதி வாயிலாக செய்தார். அதில், முறை கேடு நடந்து இருப்பதாக, சிவகாஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின், காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, போலீசுக்கு உத்தரவிட்டது.

சிறைக்கு திரும்பினார் சசிகலா.. விடுப்பு காலம் முடியும் முன்பே பரப்பன அக்கிரகாரா ..

பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலாமாலைமலர் :கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று சிறைக்கு திரும்பினார். பெங்களூரு:< சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இறந்தார். அவரது உடல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இரவு 7.20 மணிக்கு கொண்டு வரப்பட்டது. நடராஜன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.br />
இதைத் தொடர்ந்து அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவரது உறவினரும் வக்கீலுமான அசோகன் சொந்த பொறுப்பில் சசிகலாவை அழைத்து வந்தார். பாதுகாப்பிற்கு போலீசார் யாரையும் அனுப்பவில்லை.

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!.. குஜராத்தில் வெறியாட்டம்

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!மின்னம்பலம் :குஜராத்தில் தலித் இளைஞர் ஒருவர் குதிரையில் சவாரி செய்ததற்காக மூன்று பேரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்திலுள்ள டிம்பி கிராமத்தைச் சேர்ந்த கலு ரத்தோட் என்பவரின் மகன் பிரதீப் ரத்தோட். இவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டுத் தன் தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்குச் சொந்தமான வயலைப் பார்த்துவருவதற்குக் குதிரையில் சென்றுவந்துள்ளார். தலித் மக்கள் குதிரையில் செல்வது பிடிக்காத அந்தப் பகுதியின் ஆதிக்கச் சாதி இளைஞர்கள், இனிமேல் நீ குதிரையில் செல்லக் கூடாது; இதுவே கடைசி முறை என்று மிரட்டியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத அந்த இளைஞர் வழக்கம்போல் குதிரையில் சென்றுவந்துள்ளார். வயலுக்குச் சென்ற பிரதீப் நேற்று (மார்ச் 30) பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதீப்பைக் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொலைசெய்துள்ளனர். குதிரையையும் கொன்றுள்ளனர்.

ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு ! வைகோ நடைபயண நிகழ்ச்சியில் - மதுரையில் பதற்றம்

வைகோ நடைபயண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு - மதுரையில் பதற்றம்மாலைமலர் :நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #NeutrinoProject #Vaiko #Madurai மதுரை: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.< இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். < இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.< விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும் வேதனையும் தெரிவித்தார். அவர் விரைவில் நலம்பெற இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வதாக கூறிய வைகோ, தனது நடைபயணத்தை தொடங்கினார்

காவிரி -மெரினாவில் திடீர் போராட்டம் .. இளைஞர்கள்- பெண்கள் கைது


காவிரிக்காக மெரினா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்- பெண்கள் கைதுதினத்தந்தி :காவிரிக்காக மெரினா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை போலீசார் கைது செய்தனர். #MarinaProtest #CauveryIssue #CauveryManagementBoard சென்னை< காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில்  எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம்  திடீர் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலானது. இதனால் அங்கு  இளைஞர்கள் குவிகிறார்கள் காற்றுவாங்க வந்ததுபோல் தனித்தனியாக வந்த இளைஞர்கள்  கடற்கரை ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றாக திரண்டனர். தங்களது பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி பிடித்தவாறு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள் முழக்கம்  எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றது போல், காவிரிக்காகவும் போராடி வெற்றி பெற தமிழர்கள் ஒன்று கூட வேண்டும்.  மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றது போல், காவிரிக்காகவும் போராடி வெற்றி பெற தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என இளைஞர்கள்  கூறினார்கள்..<;இதை தொடர்ந்து  மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றதால் அவர்களை  போலீசார் தேடிவருகின்றனர்.   அவர்கள் எந்த இடத்தில் போராட்டம் நடத்தினார்கள் என விசாரணை நடத்தினார்கள்.

இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த துபாய் இளவரசியை மீண்டும் துபாய் அதிகரிகளிடம் பிடித்து கொடுத்த இந்திய கடலோர காட்டுமிராண்டிகள்


polimernews.com கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் கோவா அருகே சுற்றிவளைத்துப் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது  .இது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் பற்றிய ஜெனிவா ஒப்பந்ததிதிற்கு விரோதமான மோசமான செய்கையாகும்.
துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுடையவர். தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காத இவர், இந்த மாதம் 4ஆம் தேதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் துபாய் இளவரசி தப்பி வந்த படகைக் கோவா அருகே மடக்கியுள்ளனர். இளவரசியையும் அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவிரியை பார்ப்பனர்கள் போல அனுபவித்தவர்கள் யாருமில்லை

​பிரம்ம தேயங்களாக , சதுர்வேத மங்கலங்களாக மன்னர்களிடம் தனமாக
பெற்ற இந்த பொன் விளையும் பூமியில்தான், இன்றைய சோ கால்டு சோழபரம்பரைகளை அன்றைக்கு பண்ணைக்கமர்த்தி நெய்ச்சோறாக தின்னு கொளுத்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்த காவிரி பகுதியில்.
பின்ன ஏன் காவிரிகாக வந்து நிற்க மாட்டேங்கிறாங்க?.. காவிரிக்காக தமிழ்நாட்டில் கூட போராட வர வேண்டாம் காவிரிக்காக கர்நாடகாவிலும் நிற்க மாட்டார்கள், அதுதான் பியூட்டியே.
அவர்கள் ஏன் பிராந்திய உரிமைகளுக்காக என்றைக்குமே நிற்பதில்லை என்ற கேள்விக்கு பின்னால்தான் ​
​அவர்கள் உயர்த்தி பிடிக்கும் இந்திய தேசியம் உள்ளது. பெரியார் இந்த வழியாகத்தான் இந்திய தேசிய எதிர்ப்புக்கு வந்தடைகிறார், தீர்க்கமாக.
இடதுசாரி அறிவாளிகள் கூட மெல்லமாக வந்தடையும் இந்த நுணுக்கமான ரூட்டை கொண்டை பிடியாய் பிடித்து நிறுத்தியதால்தான் இன்றைக்கும் எச் ராஜாக்கள் வழியாக நாயாய் குறைகிறது பார்ப்பனீயம்.
நாம் அனுபவிக்காத இந்த நிலத்திற்காக உயிரை கூட கொடுக்கிறோம், அவனுக்கு ஏன் அந்த உணர்வே வரல?. நமக்கு ஏன் வருகிறது?.
இந்தியாவின் உச்சநீதி மன்றம் முதல் நாடாளுமன்ற எம்பிக்கள் வரை, இந்தியாவின் பியூரோக்ரசியிலும் அரசியல் அதிகாரத்திலும் 38% க்கும் மேல் இருக்க கூடிய பிராமணர்கள், தாங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்த காவிரி தாயை சுடுகாடாக்க துணிக்கிறார்கள், கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலிய கிணறுகளுக்கு தாரைவார்க்க துணிகிறார்கள்?.. ஏன் சொந்த நிலத்தின் மீதான பிணைப்பே வரல?.

அமெரிக்க விசா கோரும், 7.1 லட்சம் பேர், குடியேற்றம் அல்லாத விசா 1.4 கோடி பேர் பாதிக்கப்படுவர்

   அமெரிக்க, 'விசா' விதிகளில், வருகிறது, அதிரடி ,மாற்றம்தினமலர் :புதுடில்லி,:அமெரிக்காவில், 'எச் - 1பி' விசா ரத்து செய்ய, அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
 இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்கள், அமெரிக்கா வருவது பாதிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல், 'வேலை வாய்ப்புகளில், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முந்தைய அதிபர், ஒபாமா ஆட்சியின்போது, எச் - 1பி விசாவில், கணவர் - மனைவி, அமெரிக்காவில் வேலை செய்ய, எச் - 4 விசா அளிக்கப்பட்டது.
;இந்த விசா பெறுவோர், அமெரிக்காவில், எந்த நிறுவனத்திடமும் வேலை செய்யலாம். எச் - 1பி விசா பெறுவோர், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே பணிபுரியலாம் என்ற கட்டுப்பாடு, எச் - 4 விசா வைத்திருப்போருக்கு இல்லை.
இதனால், திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் கவர்ச்சியான நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், எச் - 4 விசா அளிக்கும் திட்டத்தை ரத்து செய்ய, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.ஆனால், இந்த முடிவுக்கு, அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இனியும் ஏன் அமைதி ? போரைத் துவக்குவோம் ! காவிரி மேலாண்மை வாரியம் ..

காவிரி வினவு : மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றோடு (29.03.2018) முடிகிறது. ஆளும் பா.ஜ.க அரசோ கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறும் வெறியில் தமிழகத்தை திட்டமிட்டே வஞ்சிக்கிறது. ஒரு நடுவண் அரசு சட்டத்திற்குட்பட்டோ, நீதிமன்றத்திற்குட்பட்டோ செயல்படாது என்பதை மோடி அரசு தெள்ளத்தெளிவாக நிரூபித்திருக்கிறது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு ஒரு புதிய மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை (ஸ்கீம்) உருவாக்க ஆறு வாரங்கள்” என கெடு விதித்திருந்தது.
அந்த ஸ்கீம் என்ன என்பதற்கு விளக்கம் இல்லையென இந்த காவி வேத பண்டாரங்கள் இப்போது புது மனு தாக்கல் செய்யப் போகிறார்கள். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பே உச்சீநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது என்று சொல்லிவிட்டு, இப்போது ஸ்கீம் என போங்காட்டம் ஆடுவது ஏன்? பிரச்சினைக்கு தீர்வு மேலாண்மை வாரியம் என்று தெள்ளத் தெளிவாக அறிவித்த பிறகு இப்போது அது புரியவில்லை என்று இந்த புரட்டர்கள் கூறுகிறார்கள்.

நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் : நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு !

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
வினவு :“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”
“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.” – இது உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் சென்ற ஜனவரியில் கூறியவை.
இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமை நீதிபதியை எதிர்த்து நான்கு நீதிபதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புதான் இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி என்று நீதித்துறை வல்லுனர்கள் கூறினர்.

காவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் !

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் கெடு நேற்றேடு (29.03.2018) முடிந்தது. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தும் அதிமுக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப் போவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டுமென்றால் அது மோடி அரசு மீது மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மீதேயும் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டுகளில் காவிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்புக்களோ, உத்தரவுகளோ கூட இங்கே அமல்படுத்தப்பட்டதில்லை. அதை தமிழகத்தை ஆண்ட அரசுகளும் கேள்வி கேட்டதில்லை.
இந்திய அரசும், காங்கிரசு – பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகளும், நீதித்துறையும் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருக்கும் போது அதே வளையத்திற்குள் போய் பேசுவதால் தீர்வு கிடைத்து விடுமா? கடந்த காலங்களிலேயே சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசிற்கு எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இனி மேல் வழக்குப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது? தமிழக அரங்கில் நடக்கும் போராட்டம் ஒன்றே அரசையோ, நீதிமன்றத்தையோ பணியவைக்குமே அன்றி மூத்த வழக்கறிஞர்களை வைத்து அவமதிப்பு வழக்குப் போட்டால் சில பல கோடிகள் கட்டணமாக நட்டமாகுமே அன்றி வேறு பலன் இல்லை.

மதிமாறன் :காவிரி மேலாண்மை... நடக்காது CPM . BJP . CONG – ஒண்ணு. அறியாத வாயில மண்ணு.

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் பணியில் பாஜக முழு மூச்சுடன் ... ஏனைய ஜாதிகள் பார்பனருக்கு ஏவல் நாய்களாக்கவே RSS,,

RSS பிஜேபியின் தீவிர உறுப்பினர் ஒருவரது பதிவை படித்தேன். அதையே
பகிர்கிறேன் இங்கு..
எல்லா இந்துக்களையும் காப்பாற்ற தான் RSS பிஜேபியினர் பாடுபடுகிறார்கள் என நினைத்து அந்த கட்சியில் இருந்தேன்.. கட்சிக்காக பாடுபட்டேன்.. ஆனால், அவர்கள் பிராமின மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், பிற சாதி இந்துக்களை, பிராமணர்களுக்கு ஏவல் வேலை செய்யும் ஒரு சமூக அமைப்பை நிறுவத்தான் பாடுபடுகிறார்கள், என்ற உண்மையை பட்டு தெரிந்தப்பின், அதிலிருந்து விலகிவிட்டேன்..
மாநில தலைவர் தமிழிசையை குல புத்தி என சொல்லி பார்பனரான எஸ்.வீ.சேகர் திட்டுகிறார்.. யாரும் கண்டிக்கவில்லை.. சு.சாமி, தமிழர்களை பொறுக்கிகள் என திட்டுகிறார்.. அவரை கண்டிக்காமல், MP பதவியை கொடுகிறது பிஜேபி..
அப்போதுதான் திராவிட இயக்கத்தை சேர்த்த ஒரு நண்பரை சந்தித்தேன், அவர் சொன்னார்..
இலங்கையில் ஆயிரகணக்கான தமிழ் இந்துக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே, இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே...ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ எதுவும்மே செய்யவில்லையே.. குறைந்தபட்சம் அறிக்கையோ கூட இல்லையே.. அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
நான் கேட்டேன் சரி, உங்க ஆட்கள் என்ன செஞ்சாங்க...
ஏங்க, நீங்க தான் இப்போ, ஈவேரா ஆட்கள், திராவிடர்கள் என்று கதைவிடுகிறார்கள்....

வெள்ளி, 30 மார்ச், 2018

வடநாட்டு லேகியம் சாப்பிட்டு இளைஞர் உயிரழப்பு ..... லேகிய வியாபாரிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

சென்னை அயப்பாக்கத்தில் லேகியம் சாப்பிட்டு பிரதீப் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28) ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருக்கு இளம்வயதிலேயே உடல் பருமனாகி, சுமார் 100 கிலோ எடை இருந்ததனால், எடையைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு எடை குறையவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீப்பின் குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கடை அமைத்துப் பல்வேறு வியாதிகளுக்கு லேகியம் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீப் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பிரதீப்பிடம் அந்த லேகிய கடைக்காரர், “உங்களது உடல் எடையைக் குறைக்க என்னிடம் ஸ்பெஷல் லேகியம் இருக்கிறது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

நெடுமாறன் தலைமையில் மறைந்த.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல்

திருமாவளவன் : அண்ணன் நடராஜன் அவர்களும் சசிகலா அவர்களும் இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை என்பதுதான் வரலாறு
வீரமணி :அரசியலில் மிகப்பெரிய விஞ்ஞானத்தைப் படைத்தவர் அவர். நினைத்தால் அரசுகளை மாற்றியமைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது
நடராஜன் படத்திறப்பு: தலைவர்களின் உரை!மின்னம்பலம்: மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நடராஜனின் நெடுநாள் தோழர் பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த எல்.கணேசன் உடல் நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ளவில்லை. ஆயினும் அவர் அனுப்பியிருந்த உரை நிகழ்வில் வாசிக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரும் நடராஜனின் நெருங்கிய நண்பருமான பிரணாப் முகர்ஜி தன் சார்பாக தனது மைத்துனரை இந்த நிகழ்வுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

68 வயதிலும் 20 வயது போல தோற்றமளிக்கும் சீன வாலிபர் ./ வயோதிபர்?

68 வயதிலும் 20 வயது வாலிபர்!!!young-grandfather2  68 வயதிலும் 20 வயது வாலிபர்!!! young grandfather2tamilthehindu :சீனாவில் 68 வயதான முதியவர் ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் 1950ஆம் ஆண்டு பிறந்த ஹு ஹாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் முதியவர்களுக்கான நிகழ்ச்சியில் இந்த இளைஞர் ஏன் கலந்து கொள்கிறார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு காரணம் 20 வயது இளைஞனைப் போன்ற ஹு ஹாயின் தோற்றம், உடல்மொழி, உடை தான்.
அதன் பிறகு தனது வயதுக்குரிய சான்றை அவர் சமர்பித்து போட்டியில் கலந்து கொண்டார்.
‘மிக நவீன தாத்தா (Most Modern Grandpa) என்ற பட்டத்தை வென்ற ஹு ஹாய் வெளியுலகில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொடலிங் துறை என பல துறைகளில் பணியாற்றினார்.

திருப்பூர் எம்பி சத்திய பாமாவை கொல்ல கணவர் முயற்சி

வெப்துனியா :திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவரே கொலை செய்ய
முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் பெண் எம்பி சத்தியபாமா, ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியபாமா எம்பியை அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்பி சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு என்பவர் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து சத்தியபாமாவின் கணவர் வாசு கைது செய்யப்படுள்ளார். அவர் மீது 294(b), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை 11% முதல் 128% வரை அதிகரிக்க முடிவு

வெப்துனியா: இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் தொகையை 11% முதல் 128% வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன் தினம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்த விபரங்களை பார்ப்போம்
1. 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.

2. 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு  இன்சூரன்ஸ் தொகை ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி.. வருகிற 15-ந்தேதி தமிழகமெங்கும் ...

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- மு.க.ஸ்டாலின்மாலைமலர் :வருகிற 15-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை:b தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.< இந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தும்.< இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. உண்ணாவிரதம் பற்றி கேட்டபோது, கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்திவிட்டு இப்போது போராட்டம் என்கிறார்கள். இதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்

ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு

காவிரி விவகாரம்- ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவுமாலைமலர் :காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. சென்னை:< காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தி.மு.க. எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்பிக்கள் பதவி விலகவும் மாட்டாரகள் .. தற்கொலை செய்யவும் மாட்டார்கள் .. ஒரு நாள் உண்ணாவிரதம் ..

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள், பலவித குரல்கள் ஒழிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தை நாடுவது, ராஜினாமா செய்வது, உண்ணாவிரதம் என பல குரல்கள் ஒலிப்பதால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
காவிரி பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், அதற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், காவிரி நீர் கர்நாடகாவுக்கு சொந்தமல்ல என்றும் ஆணித்தரமாக தெரிவித்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. 6 வார காலத்திற்குள் வாரியத்தை அமைக்க அழுத்தம் தரவேண்டும் என மாநில அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிமுக சார்பில் ஒரே பதில் 6 வாரம் இருக்கிறது, பொறுமை காப்போம் என்று கூறிவந்தனர்.

மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வருகை


tamilthehindu :இஸ்லமாபாத் விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் மலாலா அமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான மலாலா ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். தற்போது 20 வயதாகும் மலாலா பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக லண்டன் அனுமதிக்கப்பட்ட மலாலா, அதன் பின்னர் உடல் நலம் பெற்று தொடர்ந்து மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமையன்று ரகசியாக குடும்பத்தினருடன் மலாலா பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியது. இஸ்லமாபாத் விமான நிலையத்தில் மலாலா அமர்திருக்கும் புகைப்படங்களும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள ‘Meet the Malala’ என்ற நிகழ்சியில் மலாலா பங்கேற்கிறார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரியையும் சந்திக்கிறார். மலாலா பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 4 லோக்சபா சீட்தான்… கடந்த கால புள்ளி விபரங்கள் ...

Cong. shocks over DMKs seat sharing formula tamiloneindia :காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம்?-
சென்னை:

லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 4 லோக்சபா இடங்கள்தான் ஒதுக்கப்படும் என திமுக மூத்த தலைவர் ஒருவர் கறாராக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேற்றத்தான் இப்படி 2-ம் கட்ட தலைவரை வைத்து திமுக மேலிடம் பேசுகிறது என குமுறுகின்றனர் கதர்சட்டைகள்.
2014 லோக்சபா தேர்தலின் போதே திமுகவை வேறு கூட்டணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் வடமாவட்ட திமுக பிரமுகர். திமுகவில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து இருக்கக் கூடிய சீனியர் இவர்தான்
திமுக மேலிடத்தின் நிழலாக வலம் வரும் இந்த தலைவர்தான் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசுகையில், உங்களுக்கு லோக்சபா தேர்தலில் 4 சீட்டுதான்.. இதுவே அதிகம்..
இதை ஏற்றுக் கொண்டால்… இந்த 4 லோக்சபா தொகுதிகளுக்குள் இருக்கும் ‘ஜெயிக்கக் கூடிய’ சட்டசபை தொகுதிகள் அது 10 அல்லது 15 ஆக கூட இருக்கலாம் அதுவும் உங்களுக்கு என பேசியிருக்கிறார்.
இதை கேட்ட கதர்த்தலைவர் கொந்தளித்திருக்கிறார். ஆனால் திமுக மூத்த பிரமுகரோ சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் நீக்கம் ? மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்

tamilthehindu :ஆர்.ஷபிமுன்னா  ;புதுடெல்லி< தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை 5, 2012-ல் கோரப்பட்ட டிஜிட்டல் உரிமம் கிடைக்காமல் இருந்தது. பிறகு பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இருந்த நட்பு காரணமாக டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு ஆகஸ்ட் 2014-ல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணமாக அப்போது இரு அரசுகளுக்கு இடையே நிலவிய நட்பு ரீதியான அரசியல் சூழல் தற்போது மாறி வருகிறது.

திமுக ஈரோட்டு மாநாடு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது .. மாநிலத்துக்கும் மத்திக்கும்


விகடன் :ரமேஷ் கந்தசாமி-க.விக்னேஷ்வரன்&: கழுகார் உள்ளே நுழைந்ததும், தி.மு.க மாநாடு தொடர்பாக நம் நிருபர் அனுப்பிய கட்டுரையை வாங்கிப் படித்தார். திருப்பிக் கொடுத்தவர், ‘‘என்னிடமும் சொல்வதற்கு மாநாட்டு விஷயங்கள் சில உள்ளன. ஈரோடு தி.மு.க மாநாட்டை மத்திய, மாநில உளவுத்துறைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 24-ம் தேதி காலையிலிருந்தே, மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவது சம்பந்தமான அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்’’ என்றார். ‘‘எவ்வளவு கூட்டம் இருக்குமாம்?’’< ‘‘இந்தப் பிரமாண்டமான பந்தலை அமைத்தது பந்தல் சிவா. அவர் 60 ஆயிரம் நாற்காலிகளைக் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டக் கழகம் சார்பில் 35 ஆயிரம் நாற்காலிகள் வரவைக்கப்பட்டதாம். வெளிக்கூட்டம், உள்ளே வர முடியாதவர்கள் எனச் சேர்த்தால் இரண்டு நாள்களும் வந்து சென்றவர்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டும். இந்தக் கணக்கு ஆட்சி மேலிடத்துக்குப் போனது. ஆட்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தது ஸ்டாலின் பேச்சில்தான்.’’

மம்தா பானர்ஜி கலைஞரை சந்திக்க சென்னை வருகிறார்

தினமலர் :சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும் ஏப்.,11-ம் தேதி சென்னை வருகிறார்
மேற்குவங்க  முதல்வர் மம்தா பானர்ஜி . வரும் 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லிமெண்ட் தேர்தலில் 3 வது அணியை அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தி.முக தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும் ஏப்.,11 அல்லது 12ம் தேதி சென்னைக்குவர உள்ளதாக கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியானது.. சில பள்ளிகளும் பயிற்சி மையங்களும் விசாரணையில் . :

தினமணி : சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரம்: பிரதமர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மார்ச் 30, 2018, 02:08 AM சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியாகி இருப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி முறையின் தோல்விக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. மறுதேர்வு என்பது 28 லட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், தேசிய கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகர்ப்பதாகும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் :புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய முடிவு ..... ?

tamiloneindia :சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் உட்பட 6  பேர் மட்டும் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடுவும் முடிந்துவிட்டது.அதனால் அதிமுக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் ராஜினாமாவுக்கு பதில் தற்கொலை செய்வோம் என்றார் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன். இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்யப்

வியாழன், 29 மார்ச், 2018

கமலஹாசன் பாஜகவின் Sleeper cell தான்.. முதலில் அம்பலப்படுத்தப்பட வேண்டிய அயோக்கியன்..

Vivek.  May17movement.. :கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப்
போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்கிறார்.
முழுக்க முழுக்க மாநில அரசைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் யார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிறார்களோ, அவர்களுக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்று காட்டமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.
பத்திரிக்கையாளர் ஒருவர் இடையில் கேட்கிறார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டியது மத்திய அரசு, ஆனால் நீங்கள் மாநில அரசை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது என கேட்கிறார்.
உடனே கமலஹாசன் பம்மிக் கொண்டு, மோடி அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் சொல்ல முடியாது. அவர் நமது மதிப்பிற்குரிய பிரதமர்(Note the word: Honorable Prime Minister). நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தான் நான் கேட்க முடியும் என்று முடிக்கிறார்.
மத்திய அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன என்று மீண்டும் கேட்கிறார் பத்திரிக்கையாளர். அவ்வளவு நேரம் மாநில அரசைப் பற்றி காட்டமாக பேசிக் கொண்டிருந்த கமலஹாசன் தனது குரல் டோனை இறக்கி, ”Please Sir, உங்களுக்கு காவிரி மேலாண்மை “திட்டத்தை” அமைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. நீங்கள் அதை அமைக்க வேண்டும்”.

காவிரி மேலாண்மை வாரியம் .. கெடு முடிந்தது ... எடப்பாடியும் பன்னீரும் ஆலோசனை ...

tamiloneindia - Veera Kumar : காவிரி மேலாண்மை வாரியம் கெடு இன்றுடன்
முடிவடைகிறது சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றுடன் கெடு நிறைவு காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க செயல் திட்டத்தை 6 வாரங்களில் வகுத்திருக்க வேண்டும். இந்த காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.

அம்பேத்கார் பெயரில் 'ராம்ஜி' சேர்க்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு ஆர் எஸ் எஸ் வியாதிகளின் புதிய கண்டுபிடிப்பு

ambedkar-125-year
தினமணி :உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. 
மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891, ஏப்ரல் 14ல் பிறந்தார். இவருடைய தந்தை ராம்ஜியும், பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

லாலு பிரசாத் :நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை முடிந்தது

நிதிஷ் அரசியல் வாழ்க்கை முடிந்தது: லாலுமின்னம்பலம்: பிகார் முழுவதும் வன்முறையும் கிளர்ச்சியும் பரவியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன முறைகேட்டு வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல் ... பராமரிப்பு பணிக்காகவாம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்!
மின்னம்பலம்: பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.

சசிகலா வைகோ சந்திப்பு .... பழங்கணக்கு பார்க்கிறார்களோ ?

டிஜிட்டல் திண்ணை: வைகோ-சசிகலா சந்திப்பு...  திமுகவில் சலசலப்பு!
மின்னம்பலம் :“சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல், ஸ்டாலின் உட்பட அனைவருமே சென்று அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடியோ அதிமுகவில் இருந்து வேறு எவருமோ அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. நடராஜனுக்கு நெருக்கமான நண்பராக இருந்த வைகோவும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் வைகோ நேற்று மீண்டும் தஞ்சாவூர் போயிருந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சென்று பழ.நெடுமாறனை சந்தித்துப் பேசினார். பிறகு, நடராஜன் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்துக்கு நெடுமாறனுடன் சென்று மீண்டும் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் நிற்கவில்லை. நேற்று இரவே சசிகலா தங்கியிருந்த நடராஜன் வீட்டுக்குப் போனார் வைகோ.
வைகோ வருகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டதும், சசிகலாவும் தயாராகவே காத்திருந்தார். சசிகலாவிடம் நடராஜன் பற்றிய பல நினைவுகளை சொல்லி கண்கலங்கினாராம் வைகோ. தனக்கும் நடராஜனுக்குமான நட்பு, கட்சி என்ற பாகுபாடெல்லாம் தாண்டியது என்றும், கடைசி வரையில் தனக்கு நல்ல நண்பராக நடராஜன் இருந்தார் என்று வைகோ சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட நண்பரான வைகோவின் பெயர் நடராஜன் படத்திறப்பு நிகழ்வு அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அதுபற்றியும் தனது வருத்தத்தை தனது பேச்சினிடையே சசிகலாவிடம் பகிர்ந்துகொண்டாராம் வைகோ.
அதற்கு சசிகலா, ‘உங்களை ஒதுக்க வேண்டும் என எங்களுக்கு எந்த நோக்கமும் இல்ல. உங்க நட்பும் எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், நீங்க இப்போ இருப்பது திமுக கூட்டணியில். எடப்பாடிக்கும் எங்களுக்கும் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலுமே அக்காவுக்கு ஒரே எதிரி என்றால் அது திமுக தான். அவங்களோட நீங்க இருக்கும் போது உங்க பெயரை எப்படி அழைப்பிதழில் போட முடியும்? ஆரம்பத்துல நீங்க அக்காவை உடன்பிறவா சகோதரி என்றெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்க.ஆனால், இப்போ அப்படி இல்லையே... ஆயிரம்தான் இருந்தாலும் திமுக எங்களுக்கு எதிரிதானே...’ என்று சொன்னாராம் சசிகலா. திருமாவளவன், சீமான் ஆகியோர் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

டாடா மோட்டார்ஸின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து !

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!tamil.samayam.com :நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!
நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. முழுப் பயன்பாட்டுக்கு வரும் முன்னர், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து செயல்பாட்டில் டாடா ஸ்டார்பஸ்ஸின் புதிய ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜின் தண்ணீர் மற்றும் வெப்பத்தால் இயக்கப்படுவதால் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பில்லை. மாசுபாடு மட்டுமின்றி, சத்தத்திற்கும் இடமில்லை.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்தினதைந்தி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் திடீர், திடீரென போராட்டம் நடத்தி வருவதால் கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேரளா.. சாதியும் மதமும் வேண்டாம் ! 1,24 லட்சம் மாணவர்கள் அறிவிப்பு!


மின்னம்பலம்: கேரளாவில் நடப்புக் கல்வியாண்டில் 1.24 லட்சம் மாணவர்கள் சாதி, மதம் என எதுவும் இல்லையென்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநிலக் கல்வி அமைச்சர் சி.ரவேந்திரநாத் சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 28) கூறியதாவது: “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1,23,630 மாணவர்களுக்குச் சாதி அல்லது மதம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்று, பதினொன்றாம் வகுப்பில் 278 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்பில் 239 மாணவர்களும் இதையே குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்த மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேரும்போது சாதி மதமற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.”
கேரள மாநிலத்தில் இயங்கிவரும் சுமார் 9 ஆயிரம் பள்ளிகளில், சேர்க்கைப் படிவத்தில் மாணவர்கள் தங்கள் சாதி, மதம் குறிப்பிடாததின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல்? ,, அதிமுக எம்பீக்கள் வாக்குறுதி அளித்தபடி தற்கொலை செய்வார்களா ?

Shankar A :காவிரி ஆணைய நியமனத்துக்காக உயிர்த் தியாகம் செய்ய உள்ள வீரத் தமிழர்கள். வீர வணக்கம். வீர வணக்கம்.
தினத்தந்தி :காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? என்று விளக்கம் கேட்டு, மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளது. நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டு, இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று கூறியது என்பது பெரும்பாலானோரின் கருத்து.

திருப்பதி கோவிலில் தீ... லட்டு தயாரிப்பு மண்டபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ...


மாலைமலர் :திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் திடீர் தீ விபத்து திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பெருமாளை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
 இந்நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி கோவிலின் லட்டு தயாரிக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா ... விபத்துக்குள்ளான மூதாட்டியை கண்டுகொள்ளாத மனிதர்கள் ....

தினத்தந்தி:  திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது கடக்காவூர் என்னும் பகுதி. இங்கு உள்ள சாலை ஒன்றில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயங்களுடன் சாலையில் நடுவில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்ற அங்கிருந்த யாரும் முன்வரவில்லை.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் அந்த மூதாட்டியை காப்பாற்றாமல், வெறுமனே வேடிக்கைப் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்ற முன்வந்தார்.

விஜய் மல்லையா 3வது திருமணம்... மணமகள் பெயர் பிங்கி லால்வானி

3வது திருமணத்துக்கு தயாராகும் விஜய் மல்லையா
மாலைமலர் :இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #VijayMallya #Mallya3rdMarriage #PinkyLalwani புதுடெல்லி:< இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
; 62 வயதாகும் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக பிங்கி லால்வானி என்ற இளம் ஏர்ஹோஸ்ட்ரஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்துள்ளார்.

ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுமாலைமலர் :மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை இணைமந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Facebook என்ற மாயவலை. .. எந்த ஒரு நேர்மையான ஏழை அரசியல்வாதியும் தேர்தலில் ஜெயிக்கவே முடியாத சூழல்

savukkuonline :Jeevanand Rajendran ·: Facebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது? எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ? ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது, எதை வைத்து லாபம் ஈட்டுகிறது என்பதை அறிந்தீர்கள் என்றார் அதிர்ந்து விடுவீர்கள் நாம் தான் சமூக வலைதளத்தின் வியாபார பொருள், நாம் பகிரும் தகவல்கள், இடும் லைக் ஆகியவைவை தான் அந்த நிறுவனத்தின் வியாபாரம்.
எளிமையாக ஒரு உதாரணத்தை பார்ப்போம், ஒரு 25 வயது திருமணம் ஆகாத  பெண், அவரின் ப்ரொபைல் போட்டோ அவர் சற்றே பருமனாக இருப்பதை தெரிவிக்கிறது. அவர் உடல் எடையை குறைக்கும் விடயங்களை அதிகம் படிக்கிறார், ஆரோக்கியம் சார்ந்த குழுவில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். இந்த தகவலை சந்தைக்கு  விற்பதன் மூலம்  அந்த பெண்ணின் தேவையை அவர் சொல்லாமலே மற்றவர்கள் அறிந்து கொண்டு அவருக்கு ஏற்றவாறு விளம்பரங்கள் அவர் சுவரில் இடம் பெற செய்ய முடியும். உடல்  எடை குறைக்கும் மருந்து, பிட்னஸ் கருவிகள் போன்றவற்றை நேரடியாக விளம்பரம் செய்ய முடியும். 

புதன், 28 மார்ச், 2018

தோழர் கோவன் மீது பாஜகவினர் போலீசில் புகார் .. எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ..


கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!
வினவு :ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ரத யாத்திரையின் உண்மை முகம் ‘ரத்த யாத்திரை’ என்று தமிழகம் எதிர்த்து நின்றது. இந்த போராட்டத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பாடல் வீடியோ தயாரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. வினவு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்றளவும் பாராட்டி மறுமொழிகள் வந்த வண்ணம் உள்ளன. வைரலான வீடியோவை இலட்சக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளனர். இது போதாதா? உடனே பா.ஜ.க கும்பலுக்கு வெறியேறி விட்டது.
“இராமாயணத்தையும் இராமனையும் இராம ராஜ்யத்தையும் இழிவு படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமரிசிக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் மதக்கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது. எனவே உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் கோவனைக் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இத்தகைய பாடல்களை வெளியிட்டு தேச விரோதமாக செயல்பட்டு வரும் ம.க.இ.க -வை தடை செய்ய வேண்டும்” என்று, திருச்சி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கவுதம் நாகராஜன் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
திருச்சி நகரத்திலேயே பல காவல் நிலையங்களிலும், குமரி, கோவை மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் அவுட் போஸ்ட்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும் “சங்கிகள்” புகார் கொடுத்துள்ளனர். இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக-வினர்

இந்த தகவல் இன்றைய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலிருந்து நமக்கு தெரிய வந்துள்ளது.

தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை ஏடிஜிபி சைலேந்திரபாபு:உட்பட 10 போலீசார் நீந்தி கடந்தனர்

tamilthehindu :எஸ். முஹம்மது ராஃபி - ராமேசுவரம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு மற்றும் நீச்சல் வீரர்கள். இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு 12 மணி நேரம் 24 நிமிடங்களில் நீந்திக் கடந்தார்.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் பகுதி பாக் ஜலசந்தி கடல் ஆகும். ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள 13 மணல் திட்டுகளான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடல் பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் நீரோட்டங்கள் நிறைந்தது. பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள், கடல் பாம்புகளையும் உள்ளடக்கிய கடல் பகுதியாகும்.

திருப்பதி உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது தேவஸ்தானம்!

தினமலர்:தினமலர் :திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது. திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும் ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.
 நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.

குக்கர்.. உச்ச நீதிமன்ற தடை வாங்கிய எடப்பாடி-ஓபிஎஸ் : காவிரி விஷயத்துக்கு?..

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வெப்துனியா :குக்கர் சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோர் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.