
ஊர் சுற்றிய சஞ்செய்
இயற்கையிலேயே முரட்டு சுபாவம் கொண்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்செய்
காந்தி பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே
இருந்து குடைச்சல் கொடுத்து வந்துள்ளார். அவரை படிப்பை தொடருமாறு இந்திரா
காந்தி பல முறை வற்புறுத்தியும் காதில் வாங்கவில்லை. அதையடுத்து, சஞ்செய்
காந்தியை வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார் சஞ்செய்.
கடிவாளம்
சஞ்செய் காந்திக்கு கடிவாளம் போட எண்ணிய இந்திரா காந்தி புதிய பொறுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தார். ஹிட்லருக்கு இருந்த மக்கள் கார் கனவு காரணமாக ஃபோக்ஸ்வேகன் பிறந்தது. அதுபோன்றே, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இந்தியாவிலேயே குறைந்த விலை காரை தயாரித்து வெளியிட விருப்பம் இருந்தது. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும் என்று கருதினார். அந்த கார் நிறுவன பொறுப்பை சஞ்செயிடம் வழங்க முடிவு செய்தார்.