சனி, 16 ஜனவரி, 2021

பூமி பட விமர்சனம்! முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை கும்பலின் கூத்து


Hema Sankar 
:   தற்சார்பு, இயற்கை விவசாயம், லட்சத்தில் சம்பாதிக்கலாம், ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம், படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லனு சொல்லி எத்தன பேர் குடிய கெடுத்துற்கானுங்கனு தெரியல.
இந்த நாம் தமிழர், முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை கும்பல் , இயற்கை மருத்துவம்னு சொல்ற ஹீலர் கோஷ்டி, வாட்சப் மெசேஜ்ல வரும் அத்தனையும் உண்மைனு நம்ப வெக்கற கூட்டம் ,
இது எல்லாமே தமிழ் நாட்டுல கடந்த சில ஆண்டுகளா பரவிட்டே இருக்காங்க.
இவங்க சொல்ற எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிச்சா ஒன்னு மட்டும் புரியும் ‘ கல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்னு’ பிள்ளைகள் மனசுல எங்கயோ பதிய வெக்கறாங்க.
கல்வியால் வர சமூக மற்றும் அறிவியல் மாற்றத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ, தரமான வாழ்வியலையோ , பகுத்தறிவு சிந்தனையோ,  நமக்கு துளியும் எழக்கூடாதுனு தெளிவா இருக்காங்க.
தமிழ் குடினு சொல்லி சாதிய கண்டறிஞ்சி , நமக்கே தெரியாம கொம்பு சீவி விட்றவங்களும் இவங்க தான்.
முன்பை விட இன்னும் ஆக்கப்பூர்வமா இவங்கள விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயமும், தேவையும் இருக்கு.
சங்கிகளும், தமிழ் தம்பிகளும் ஒன்னு.they are the real threat for our inclusive social development.

நாடு முழுவதும் இன்று 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

dhinakaran : டெல்லி: நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர் முக்கிய கட்சியில உச்ச பதவிக்கு வந்திருக்கிறது சந்தோஷம்! (ராமதாஸ் to துரைமுருகன்)

minnambalam : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 16) காலை உடல்நிலை சரியில்லாமல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட ஒரு காயம் அவரை கடந்த சில நாட்களாக வேதனைப்படுத்தி வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் துரைமுருகனை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினார்கள்..."வெளி மாவட்டத்தில் இருந்து அவரிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதற்காக சென்றிருந்த எங்களை... திமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளராக இருந்தபோதும் அமரவைத்து ஆசுவாசமாக அன்பொழுகப் பேசினார். அப்போதுதான், கடந்த சில நாட்களாகவே துரைமுருகனுக்கு காலில் ஏற்பட்ட வலி மட்டுமல்ல மனதில் ஏற்ட்ட ஒரு வலியும் எங்களுக்குத் தெரிந்தது.

அண்ணா காலத்தில் தனக்கு ஏற்பட்ட கட்சி அனுபவங்களில் இருந்து தொடங்கி தற்போதைய நிலைமை வரை விவரித்தார். ஒரு கட்டத்தில்... ‘திமுக கூட்டணியில் பாமகவை கொண்டுவந்தால், வெற்றி வாய்ப்பு மென்மேலும் உறுதியாகும். இது எனது அபிப்பிராயம். ஆனால் தலைவரிடம் இதைத் தெரிவித்தும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் .. கங்கை. சாக்கடை என்று சொல்லியிருப்பது அறிவிலி

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதில்
minnambalam : பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியரான குருமூர்த்தி, “வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த சசிகலாவும், அதிமுகவும் இணைய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

“எரிந்துகொண்டிருக்கும் வீட்டை அணைப்பதற்கு கங்கை நீரை தேடிக் கொண்டிருக்காமல் கையில் கிடைக்கும் சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”என்று அவ்விழாவில் பேசியிருக்கிறார் குருமூர்த்தி.    ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்தை தானே தர்மயுத்தம் செய்யத் தூண்டியதாக கூறியவர் குருமூர்த்தி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல வேண்டுமானால் அதிமுகவும், அமமுகவும் சேர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அரசியல் அரங்கில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.    இந்நிலையில் இதுகுறித்து ஜனவரி 15 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார். 

ஹெம்ப் செடி .. அற்புதமான தாவரமாகும்.. இயற்கையை காப்பாற்றகூடியது .. எரிபொருள் உணவு ஆடை போன்ற பல பயன்பாடுகளை கொண்டது

Industrial hemp is the most misunderstood plant in the world. Learn why that is and how industrial hemp and hemp derived சி.பி.டி. can change your life and the planet! Hemp is the common name for plants of the entire genus கஞ்சா. This term is often used to refer only to Cannabis strains cultivated for industrial (மருந்து அல்லாத) பயன்பாடு. தொழில்துறை சணல் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, காகிதம் உட்பட, ஜவுளி, biodegradable சணல் பிளாஸ்டிக், கட்டுமானம், healthy hemp food, CBD extracts and fuel.
USDA Organic

What is Hemp?

ஹெம்ப் செடி  (சணல்)  கஞ்சா Sativa L குறைந்த டி.டி.சி ரகம். plant. சணல், கஞ்சா, மற்றும் மரிஜுவானா பெரும்பாலும் குழப்பமடைகின்றன, எங்கள் வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிக சணல் எதிராக. மரிஜுவானா பக்கம். நாகரிகங்கள் தொழில்துறை நோக்கங்களுக்காக சணல் பயிரிட்டன 12,000 ஆண்டுகள். தி ஃபைபர், விதைகள் மற்றும் எண்ணெய் (பெறப்பட்ட சணல் உட்பட சி.பி.டி.) உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்பாடுகளுடன் நம்பமுடியாத மதிப்புமிக்கவை ஆடை, மருந்துகள், உணவுகள், எரிபொருள்கள், மற்றும் கட்டிடத்திற்கான பொருட்கள். சணல் ஆலை மிகவும் கடினமானது மற்றும் பல்வேறு மண் நிலைகளில் விரைவாக வளரும். தொழிற்துறை சணல் கிரகத்தின் மிகவும் பயனுள்ள ஆலை என்ற கூற்றை திகைப்பூட்டும் பயன்பாடு மற்றும் வளர்ச்சியின் எளிமை நியாயப்படுத்துகிறது.

வெள்ளி, 15 ஜனவரி, 2021

6 விமான நிலையங்கள் குத்தகை: அதானி குழுமத்திற்கு சிவப்புக் கொடி காட்டிய நிதி அமைச்சகம்

schema.org - tamil.indianexpress.co : Adani Enterprises Ltd Airports Leasing:  2019 ஆம் ஆண்டு இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலப்போட்டியில் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட அதானி குழுமத்திற்கு ஆறு விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆட்சேபனைகள் தெரிவித்திருந்தும் ஒப்புதல் வழங்கப்பட்டது.   கடந்த ஆண்டு பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில்அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு  குத்தகைக்கு விடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு இயக்கி, பராமரித்து, மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு இந்த விமான நிலையங்களை குத்தகைக்கு விடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

த.மா.கா. தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னையில் காலமானார்.

tamilnadu politicians mourns gnanadesigan

nakkheeran.in : த.மா.கா. மூத்தத்தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலமானார். இந்நிலையில், ஞானதேசிகன் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
maalaimalar.com :தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் - அறிவிக்கப்போகிறாரா சசிகலா? டிஜிட்டல் திண்ணை: முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் - அறிவிக்கப்போகிறாரா சசிகலா?

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் - அறிவிக்கப்போகிறாரா சசிகலா?

minnambalam :  மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“தேனியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாளன்று நடந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் விழா வழக்கத்தைவிட இந்த வருடம் கூடுதல் முக்கியத்துவத்தோடு நடைபெற்றது. தொண்டர்களில் இருந்து பிரதமர் மோடி வரை ஓ.பன்னீரை வாழ்த்தியிருக்கிறார்கள்.   கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், தென்மாவட்ட அமைச்சர்கள் ஓபிஎஸ்ஸைக் காலையிலேயே நேரில் சென்று வாழ்த்தினார்கள். அதேநேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சேலம் நெடுஞ்சாலை வீட்டில் இருந்து தொலைபேசி மூலமாகவே ஓ.பன்னீரை வாழ்த்தியிருக்கிறார்.

பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

maalaiamalar : பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை 

பாட்னா: பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார். மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !

https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2021/01/hariharan-400.jpg

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.

By வினவு செய்திப் பிரிவு - ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார்.

சசிகலாவை சாக்கடைக்கு ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தி ! திமுகவை எதிர்க்க சசிகலாவை சேர்த்துக் கொள்ளுங்கள்

thinathanthi : பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார் சென்னை தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார். 

 சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.

சமசுகிருதம் தனித்த மொழியா? சமஸ்கிருதம் . தமிழுக்கு சமமாக உருவாக்கப்பட்ட மொழி .. சம + கிருதம்

kuthoosi.wordpress.com : சமசுகிருதம் என்றால் சமமாக செய்யப்பட்டது என்று பொருள், சித்தர்களால் தமிழுக்கு சமமாக செய்யப்பட்டது (சம + கிருதம் ) சமம் என்ற தமிழ்ச் சொல்லும் கிருதம் (செய்யப்பட்டது) என்ற சமசுகிருத  சொல்லையும் சேர்த்தே நாடோடிகளான வட ஆரியர்களுக்கு சமைத்து தரப்பட்ட மொழி. இதன் காரணமாகவே சமசுகிருதம் ஒரு தனித்தன்மை கொண்ட மொழியாக கருதப்பட முடியாது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என் தாய் மொழி தீந்தமிழ் மொழி இதன் சிறப்பை தமிழர்கள் உணரும் வரை சமசுகிருத மொழியில்தான் எல்லாம் உள்ளது என்று சமசுகிருத மொழியில் ஒரு சொல் கூடத்தெரியாத கும்பல் பொய் சொல்லித் திரிய முடியும். ....

இப்பதிவில் தமிழிலிருந்துதான் சமசுகிருதம் யாசகம் பெற்றே ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து உலக மக்களை ஏமாற்றிவருகிறது என்பதற்கு உதாரனமாக சில சொற்களை பார்ப்போம். அதற்கு முன் ஒரு வேண்டுகோள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் தமிழில்லை அது வடமொழி அல்லது சமசுகிருதம் என்றும் இது சமசுகிருத நூல்களில் உள்ளதென்று சொல்லும் மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் சமசுகிருத வேர் சொல்லோடும் , பொருள் படும்படி வழக்காட்டுச் சொல்லோடும் வாதிடலாம் இல்லையேல் வழக்கம் போல் பிறாமண துவேசி என்று கூறிவிட்டு சென்றிடலாம்.

வியாழன், 14 ஜனவரி, 2021

மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி

Arsath Kan -  tamil.oneindia.com :மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
எப்போதும் தன்னை சுற்றி நிற்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சற்று தள்ளியே வைத்திருந்தார் ராகுல். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக ராகுலை சந்திக்க முடிந்த காட்சிகளை மதுரையில் காண முடிந்தது.
ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார் ராகுல். இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர் அதற்கு பிறகு தென் பழஞ்சி என்ற ஊருக்கு சென்றார்.
அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் முறையை கவனித்தார். மக்களுடன் மக்களாக மக்களுடன் மக்களாக பின்னர் அங்கு மக்களுடன் மக்களாக மதிவு உணவு சாப்பிட ராகுல் அமர்ந்தார்.

பீகாரில் வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - அடையாளம் காட்டாமல் இருக்க கண்களை சிதைத்த கொடூரம்

maalaimalar.com : மதுபானி: பீகாரின் மதுபானி மாவட்டத்தில் காவாகா பார்கி கிராமத்தை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி, காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு கொண்டவர். சம்பவத்தன்று அந்த சிறுமி தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு அழைத்து சென்றாா். அவருடன் வேறுசில சிறுவர்களும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அவளை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காம கொடூரர்கள், சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவளுடன் சென்ற சிறுவர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து தகவல் கூறியதாக தெரிகிறது. உடனே அவளது பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

600-க்கும் மேற்பட்ட காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் கண்டுகளித்தனர்

hindutamil.in : பொங்கல் பண்டிையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. அமைச்சர் செல்லூர் கே.ராஜு கொடியைசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் வாடிவாசலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடபட்டன.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் களமிறங்கின. பதிவான காளைகள் எண்ணிக்கை 1261. சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடபட்டன. வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்ககாசு, மிக்சி, பேன், கிரைண்டர், சைக்கிள் மோாட்டார்ை சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை காண, திமுக மாநில இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் காலை 11.15 மணிக்கு மேடைக்கு வந்தார்.

தந்தை பெரியாரின் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது! கோவையில் போகி பண்டிகை

தந்தை பெரியாரின் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!
kalaignarseithigal : கோவையில் போகி பண்டிகையின்போது, தந்தை பெரியாரின் நூல்களைக் கொளுத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்கள் தலைவர்களை அவமதிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.கோவை அசோக் நகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரசன்னா தலைமையில் கூடிய சிலர், தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்' உள்ளிட்ட சில புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர்.    அப்போது அங்கு வந்த கோவை போலிஸார் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி பிரசன்னா என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்

DMK ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: MKS
tamil.cdn.zeenews.com : திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் விழா (Pongal Festival) நடத்தி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK. Stalin) அவர்கள் சமத்துவ பொங்கல் விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக திண்டார்கள் கலந்து கொண்டனர்.

சென்னைக்கு வந்தது கோவாக்சின் 20,000 டோஸ்

 

dinakaran : சென்னை: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வரும் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. இதன்படி நாடு முழுவதும் தடுப்பூசியை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5.56 லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சென்னை வந்தது.      இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை விமானம் மூலம் 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தடைந்தது. சென்னை வந்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின், சிறப்பு வாகனம் மூலம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கே பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

nakkheeran.in - பா. சந்தோஷ் :

 avaniyapuram jallikattu peoples pongal festival

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.      உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, தமிழக அரசின் விரிவான கரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

முறிவை நோக்கிச் செல்கிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி?

டிஜிட்டல் திண்ணை: முறிவை நோக்கிச் செல்கிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி?
minnambalam.com : "அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி குழப்பங்களுக்குப் பின், பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி ‘அதிமுகதான் பெரிய கட்சி. அதுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவித்த பிறகு... ஓரளவுக்கு தெளிவடைந்து கொண்டிருக்கும் நிலையில்... திமுக காங்கிரஸ் கூட்டணியில் பெரிய அளவுக்கு குழப்பங்கள் எழுந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடங்கள் அளவுக்கு இந்த தேர்தலில் கண்டிப்பாக காங்கிரசுக்கு இடங்கள் கொடுக்க மாட்டோம் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. மேலும் திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக மேடைப் பேச்சுகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுகவே தான் போட்டியிட வேண்டும். என்று வெளிப்படையாக பேசி வருகிறார். அதிலும் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிப்பிட்டே பேசி வருகிறார்.அந்தவகையில் காங்கிரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 15 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளது.       இதைக்கூட தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லாமல் டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் திமுக தெரிவித்துள்ளது.       திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் தலைமையிடம் தனக்குள்ள தொடர்புகள் மூலமாக... '2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 15 இடங்கள் தான் திமுக ஒதுக்க முடிவு செய்திருக்கிறது' என்ற தகவலை தெரிவித்திருக்கிறார். அதற்கு காங்கிரஸ் தலைமை அப்படி என்றால் எங்களுக்கு கூட்டணியே தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

புதன், 13 ஜனவரி, 2021

மலையக மக்கள் .. ஈழப்போராட்டத்தின் கறிவேப்பிலைகள் !

ஈழப்போராட்டத்தில் மலையக மக்களின் இழப்புக்கள் குறித்து இதுவரை எவரும் பெரிதாக பேசவில்லை

இது பற்றி உலகம் தெரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுவது போல தெரிகிறது.        புலிகளின் வெறும் வடக்கு தலைமைகள் மட்டுமே ஈழப்போராட்டம் என்பதாக போலி பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது
அதிலும் இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால் வடக்கிலும் கூட ஒரு குறிப்பிட்ட பிரதேச வாதம்தான் அங்கு ஆட்சி செய்தது .      
வன்னி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களிலும் குடியேறி இருந்த மலையக மக்களின் வறிய நிலைமையை பயன்படுத்தி அவர்கள் மேல் சவாரி விட்டது புலிகள் இயக்கம்.
போர் முடிந்த பின்னாலும் கூட புலம்பெயர் தமிழர்கள் போராளி குடும்பங்களின் வறுமையை ஒரு அரசியல் காட்சி பொருளாக பயன்படுத்துகிறார்கள்,
ஆனால் காத்திரமான எந்த உதவியும் அவர்கள் செய்வதில்லை.      உலக அரங்கில் அந்த மக்களின் வறுமையும்  தகர குடிசைகளும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு அரசியல் பொழுது போக்காகவே பயன்படுகிறது .
அந்த மக்கள் ஒரு அங்குலம் கூட முன்னேறிவிட கூடாது என்பதில் இந்த புலம்பெயர் அரசியல் மேதாவிகள் முனைப்பில்  இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.

திருமணமான தம்பதிகள் சுயஇன்பம் செய்ய மாட்டார்கள் இது உண்மையல்ல... மணவாழ்க்கை பற்றிய கற்பிதங்கள்

Marriage Intercourse Life Myths Debunked

Saran Raj - tamil.boldsky.com : திருமணத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கை இப்படி இருக்கும்னு சொன்னது எல்லாமே பொய்தானாம் தெரியுமா? 

திருமண வாழ்க்கையும் அதனை சார்ந்த விஷயங்களும் பல குழப்பங்களை உள்ளடக்கியது. திருமணத்தை சுற்றி எண்ணற்ற பயங்கரமான கட்டுக்கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளன. இவை பெரும்பாலான தம்பதிகளுக்கு திருமண பந்தத்தில் இணையும் முன்னரே அதிக பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக திருமண உறவில் அதிக பயத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான விஷயமாக உடலுறவு உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் பெரும்பாலான தம்பதிகளின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. இந்த பதிவில் திருமணத்திற்கு பிறகான பாலியல் வாழ்க்கையைப் பற்றிய சில பொதுவான கட்டுக்கதைகளையும் அவை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி: ஜனவரி 16 முதல் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது

நிதின் ஸ்ரீவாஸ்தவா பிபிசி செய்தியாளர் : கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசி ஜனவரி 16 முதல் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. முதலில் மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கும் முன் கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று கடந்த சனிக்கிழமை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்தது. அடுத்த கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு உட்பட்டவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசி

இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை 27 கோடி. பிரதமர் மோதி தலைமையிலான தொற்றுநோய் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்க பேனர் வைக்க அனுமதி வேண்டும் – அமமுக மனு?

 Permission is required to place a banner to welcome Sasikala - Ammk petition

nakkeeran : சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா, 4 ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27- ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.    சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன் சில ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களுரூவில் இருந்து சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

அஞ்சல் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

minnambalam : இந்திய அஞ்சல் துறையில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது பற்றி மத்திய அஞ்சல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இன்று (ஜனவரி 13) டி.ஆர்.பாலு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “இந்திய அஞ்சல் துறையின், தமிழ் நாட்டு பிரிவிற்கு, கணக்காளர்களை துறைத்தேர்வு மூலம் தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை தபால் துறை அதிகாரியினால் கடந்த ஜனவரி 2021 நான்காம் தேதியன்று வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில் (No.REP/12-2/2020) வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாகவுள்ளது கண்டு, தமிழக மக்கள் முழுவதுமாக அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மலைகளில் மீண்டும்..... மீண்டும்...மீண்டும்..பெண்கள் கொழுந்து பறித்துப்.....பறித்து. சாஸ்திரி சிறிமா வதைப் படலம் பழையன நினைத்தல்--5

Image may contain: 5 people, including Murugan Sivalingam, people standing, people walking and outdoor
Image may contain: 2 people, people standing, tree, shoes, outdoor and nature
Murugan Sivalingam : · சாஸ்திரி சிறிமா வதைப் படலம் பழையன நினைத்தல்--5 : புனர்வாழ்வில் தமிழகம் சென்ற மக்களில் கணிசமானவர்கள் குளிர் பிரதேசங்களையே நாடிச்சென்றார்கள்.அவ்வாறு வால்பாறைக்குச் சிலரும் நீலகிரி மாவட்டத்துக்குப் பலரும் சென்றார்கள். அகதிகளாகச் சென்ற மக்கள் ஒழுங்கற்ற புனர்வாழ்வு வேலைத்திட்டங்களால் அலைக்களிக்கப்பட்டார்கள். நண்பர் மு.சி. கந்தையாவின் மொழியில் சொல்வதென்றால் அவர்கள் சிதைக்கப்பட்டார்கள்.! கலாநிதி எல். வேதவல்லி மொழியில் சொல்வதென்றால் அவர்கள் வேரறுக்கப்பட்டார்கள்!. நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற மக்கள் திக்கற்றவர்களாக இருந்தபோது...மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமே ஆபத்பாந்தவனாகவிருந்தது. அவ்வாறான உண்மையும் நேர்மையும் நிறைந்த மன்றம் சிவா..செந்தூரன் இருவரின் மறைவுக்குப் பிறகு மன்றமும் மறையத்தொடங்கியது! இந்த துயர நிலைமைகளை அறிந்துக்கொள்வதற்காக நண்பர் மா.சந்திரசேகரன் அவர்களை ம.ம.ம.மன்றக் காரியாலயத்தில் சந்தித்து உரையாடியபோது.......

கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்

ஜக்கி வாசுதேவ்
madrasreview.com : ஆலயங்களில்  இருந்து அரசே வெளியேறு என்று சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் குரல்கள் சில தற்போது கேட்கத் துவங்கி இருக்கிறது. பழங்குடிகளுக்கும் யானைகளுக்கும் சொந்தமான வெள்ளையங்கிரி மலையை ஆக்கிரமித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியார் நேற்று இதனை பேசியிருக்கிறார்.

மன்னர் அரசுகள் வீழ்ந்து வெள்ளையர் ஆட்சி நடக்கும் போது கோவில் நிர்வாகத்தில் கோலோச்சியவர்கள் பெரும் வருமானம் வரும் கோவில்களை மட்டும் நிர்வகித்துக் கொண்டிருந்தனர். மேலும்  பல கோவில்களின் சொத்துகள் ஊழல்கள், முறைகேடுகள் மூலம் சீரழிக்கப்பட்ட பின் கைவிடப்பட்டன. அப்படி கைவிடப்பட்ட கோவில்களையும் நிர்வாக சீர்கேடுகள் நடக்கும் கோவில்களையும் அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமும் பக்தர்களிடமும் எழுந்தது. 

அக்குபஞ்சர் பிரசவத்தால் குழந்தை, தாய் உயிரிழப்பு – என்ன நடந்தது?

BBC :பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயவர்மன் (35). இவருக்கு செவிலியர் பிரிவில் இளங்கலை படிப்பு முடித்த அழகம்மாள் (29) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு கருவுற்றிருந்த அழகம்மாளை மாதாந்திர பரிசோதனைக்காக கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம், இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே பின்பற்றிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது.... இந்த நிலையில், அழகம்மாளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது கணவர் விஜயவர்மன், மாமனார் வீரபாண்டியன் (60) ஆகியோர் அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். ஆனால், குழந்தையின் தலைப் பகுதி மட்டும் வெளியே வந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், இயற்கை முறையில் குழந்தையை எடுக்க முயன்றுள்ளனர். இதனால், அந்த குழந்தையை வெளியே எடுக்காததால் அன்றைய தினமே அது உயிரிழந்து விட்டது.

ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை அவனியாபுரம்

minnambalam : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜனவரி 14 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாவில் கலந்துகொள்கிறார். இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று சத்தியமூர்த்தி பவனில் அறிவித்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று, ‘ராகுலின் தமிழ் வணக்கம’ என்ற பெயரில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, பெருமை மிக்க விவசாயிகளின் சின்னமான காளையை அடக்குகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பொங்கல் தினத்தன்று காலை 11 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 மணி நேரம் அங்கேயே செலவிடுகிறார்.

துக்ளக் தர்பார் ! நாம் தமிழர் சீமானுக்கு விஜய் சேதுபதி இருட்டடி?

nakkeeran  :விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காட்சியில் அந்த பெயர் பொறித்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்து இருப்பதாக கருதி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் இப்படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

விலையுயர்ந்த கார்களில் புலிக்கொடி கட்டிக்கொண்ட விடுதலை வேஷதாரிகள்...

Annam Sinthu Jeevamuraly : · யாழ்ப்பாண பல்கலைகழகத்தை நிரந்தரமாக மூடுவதற்கும், அதை இராணுவ முகாமாக மாற்று வதற்கான முயற்சிகளே இன்று தமிழ் அரசியல் தரப்பாலும் , புகலிட தமிழ் உசுப்பே த்திகளாலும் முன்னெடுக்கபடுகின்றன. இலங்கை அரசியல் வரலற்றில் ஜேஆருக்கு பின் , பலம் பொருந்திய ஆட்சியதிகாரத்தை , கோட்டாவின் அரசு கையில் வைத்திருக்கின்றது. பிரபாகரனின் ,அடிமுட்டாள் தன இராணுவவாதமே முள்ளிவாய்களின் முடிவு. கோட்டாபயவும் பிரபாகாரனுக்கு இணையான இராணுவவாதிதான் 

அதை நாம் முதலில் புரிந்துகொள்ள் வேண்டும். பிரபாகரனின் இராணுவவாதம் முடிவுக்கு வர முப்பது வருடங்களாயின. கோட்டாவின் இனவெறியும் இராணுவவாதமும் எப்பொழுது முடிவுக்கு வரும் என்று இன்று உள்ள அரசியல் சூழலை வைத்து யாராலுமே கணிப்பிடமுடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் அப்பாவி மக்களை அவர்களின் அரசியல் இலாபங்களுக்காக உசுப்பேத்த முடியும்.    1983, பாடசாலைகளில் இறுதியாண்டு பரிட்சை நடைபெறவிருந்த வேளைகளில் வினாத்தாள்களை , இயக்கங்கள் கடத்திசென்று கொளுத்தின. சொந்த மக்களின் வங்கிகளையும் , கூடுறவுசங்கக்கடைகள் தபால் நிலையங்கள் , ஆசிரியங்களின் சம்பளப்பணம் , பென்சன் பணம் என இயங்கங்கள் கொள்ளையடித்தன. இதற்கு பின்னால் இருந்தவர்கள் தமிழ்தேசிய அரசியல்வாதிகள்.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

அவளே பேசிட்டு அவளே கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாமா? கொடுக்கலாம். ஒரு தவறும் இல்லை. Surely a brave girl.அச்சில் ஏற்றமுடியா ஆபாசம்!' - பப்ளிக் ஒப்பீனியன், ப்ராங் யூ-ட்யூப் சேனல்களுக்கு வார்னிங்!

Kathir RS : · Behindwoods அந்த பொண்ணு கிட்ட பேட்டி எடுத்திருக்கான்..ஒரிஜினலா அந்த பொண்ணு பேசுனதவிட கேவலமா பேசுறான்.முட்டாள் மாதிரி கேள்வி கேக்குறான். அந்த பொண்ணோட சர்வைவலே இது மாதிரி சேனல்ஸ் மீடியா ஒர்க்ஸ்தான்.அதனாலதான் 1500 ரூபாய்க்கு நடிக்க வந்திருக்கா.ஜாலியா பேசிட்டு போயிருக்கா..She got carried away. சேனல்காரனுங்க மச்சி செம மேட்ருடான்னு வைரலாக்கியிருக்கானுங்க... அந்த சேனல் ல இன்னும் பல வீடியோ இப்டிதான் இருக்கு.. ப்ராங்க் ஷோ அத்துமீறல் அருவருப்பான பேச்சுக்கள் நிறைந்ததாகத்தான் இருக்கு.ஆனா அதைத்தான் மக்கள் பாக்குறாங்க என்பதும் உண்மை. பெண்கள் இயல்பாவே இப்டி பேசுற சூழல் இருந்தா கூட ஏதோ சமூகம் முன்னேறிடுச்சின்னு நெனைக்கலாம்.. ஆனா இது எல்லாமே பிக்பாஸ் மாதிரி ஸ்க்ரிப்டட்.. அந்த பொண்ணு கம்ப்ளைன்ட் குடுத்தது கரெக்ட்தான். அவளே பேசிட்டு அவளே கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாமா என்றால் தாராளமாகக் கொடுக்கலாம்.ஒரு தவறும் இல்லை. Surely a brave girl.

 

  nakkeeran : மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.    யூட்யூப்  என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்தநிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்துவந்தது.

சிறுமி, கர்ப்பணி கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை! உயர் நீதிமன்றம்

tamil.hindu  :நடத்தையில் சந்தேகப்பட்டு கற்பகவள்ளியை 2015 ஜூன் 21-ல் சுரேஷ் தேனி கர்ப்பிணி கொலை, புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரும் மனு தொடர்பாக தூக்கு தண்டனை கைதிகள் இருவரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேனி சின்னமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவள்ளி (19). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கற்பகவள்ளி 3-வதாக கர்ப்பம் தரித்திருந்தார்.தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். முன்னதாக வயிற்றில் தாக்கியதில் கற்பகவள்ளி வயிற்றில் இருந்த கரு கலைந்தது. இந்த வழக்கில் சுரேஷூக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் டிச. 15-ல் தீர்ப்பளித்தது. 

சிறுமி கொலை

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி, கடந்த ஜூன் 30-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏம்பல் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா என்ற சாமிவேல் (27) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு

maalaimalar :கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா, தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.
கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு
தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு - பெற்றோருடன் தேவயாணி, விக்னேஷ் தாம்பரம்:  இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.
இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அமைக்கப்படும்”: மு.க.ஸ்டாலின் உறுதி

kalaignarseithigal :தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அனைத்து தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மையம் அமைக்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜிவ் காந்தி நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, திருமலைநகர் பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அமைக்கப்படும்”: மு.க.ஸ்டாலின் உறுதி
அதனைத் தொடர்ந்து அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 197 மகளிருக்கு தையல் இயந்திரம் மற்றும் பொங்கல் பரிசுகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதேப்போல், டேலி பயிற்சி முடித்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு மடிக்கணினி, சான்றிதழ் மற்றும் பொங்கல் பரிசுகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி, தனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததார்.

தடுப்பூசி சென்னை வந்தது! மாவட்ட ரீதியான விபரம் வெளியானது

 dailythanthi.com ;  

சென்னை (63,700) , காஞ்சிபுரம்(10,900), செங்கல்பட்டு(23,800) மற்றும் திருவள்ளுவர்(19,600) மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள்

 கடலூர் (7,800), விழுப்புரம்(11,500), கள்ளக்குறிச்சி(6,200) மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் 

திருச்சி(17,100), அரியலூர்(3,300), பெரம்பலூர்(5,100), புதுக்கோட்டை (6,900),கரூர்(7,800) ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் 

தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம்(6,400), திருவாரூர்(6,700) மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் 

மதுரை(23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர்(9,700), தேனி (8,200) மாவட்டங்களுக்கு 54,100  தடுப்பூசிகள் 

சிவகங்கை(10,700), ராமநாதபுரம்(8,300) மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள் 

நெல்லை (10,900), கன்னியாகுமரி(22,600), தென்காசி(5,100), தூத்துக்குடி(13,100) மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் 

சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்" - விவசாயிகள் திட்டவட்டம் BBC

Image may contain: 2 people, text that says 'Iா தி.மு.க தாக்கல் செய்த ரிட் மனுவில், என்னுடைய வாதத்தை கேட்ட பின்பு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இது தி.மு.க மற்றும் நாட்டின் அத்தனை விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. பி.வில்சன் எம்.பி.,'
விவசாயிகள் போராட்டம்
BBC :இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நடவடிக்கையை பெரும்பாலான விவசாயிகள் வரவேற்றாலும், சட்டங்களை திரும்பப்பெறும் தங்களின் கோரிக்கையில் அவர்கள் உறுதியுடன் காணப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களில் டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா பேசினார். அதில் பலரும் "விவசாயிகள் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை, தங்களுக்கு கிடைத்த பாதி வெற்றியாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குரிய அந்த சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெற்றால்தான் அது தங்களுக்கு கிடைத்த 100 சதவீத வெற்றி ஆக கருத முடியும்," என்று தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.. விவசாய சங்கங்கள் ஏற்காது?

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை  - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

maalaimalar :புதுடெல்லி: டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. 

 அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

எம்ஜியார் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் ஏமாற்றினார்? அவரை மட்டுமல்ல ...

Image may contain: 1 person, text that says 'ஜெயல்லிதா மனமும் மனமும்மாயையும் ஸந்தி'
நிலவு மாணிக்கம் : · பெரியாரின் பேரன் நான் மகோரா அடித்த அந்தர் பல்டிகள்...என்ற இந்த பதிவு கண்டிப்பாக மகோராவின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க அல்ல.... இருந்தாலும் அவரது பல்டிகளை குறிப்பிடும் போது "விமர்சிப்பது" போல இருந்தால்....நான் பொறுப்பல்ல...மகோராவே பொறுப்பு... ஒரு வாத்தியாராக இருந்துகிட்டு செத்துப் போன ஒருத்தர பத்தி பேசுறீங்களே....இது தானா ஒங்க அரசியல்... தோழர் மாவோ....இப்ப நா என்னங்க பண்றது.... நீ எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை வெங்கி தானே தீர்மானிக்கிறார்....அதே ஆயுதத்தை நீயும் எடுத்துக்கொள். முதல் பல்டி :
புரட்சித் தலைவிக்கு
"புதுவித பல்டி"....
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
நா எம்ஜியார் பேசுறேன்...ஜெய்சங்கர் மனைவி இருக்காங்களா?
நான்தான் பேசுறேன்...சொல்லுங்க...
மரியாதையா உன் புருஷன்கிட்ட சொல்லி ஜெயலலிதா கூட நடிக்க வேணான்னு சொல்லீரு...இல்லேண்ணா உயிரோட இருக்க மாட்டான்....
ட்ரிங்...ட்ரிங்...குமுதம் பத்திரிக்கை ஆபீஸா...நா எம்ஜியார் பேசுறேன்...உங்க பத்திரிக்கைல..... ஜெயலலிதா சோபன் பாபு கூட வாழ்ந்த living together பத்தி....ஜெ எழுதுற
"சொல்லத்தான் நினைக்கிறேன் " ங்கிற தொடரை உடனே நிறுத்தணும்..
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
ஏய் சாந்தினி...நான்தாண்டி உன் School mat ஜெயலலிதா பேசுறேன்...
என்னடி விசயம்...
எம்.ஜி.ஆரை நான் காதலிக்கிறேன்டி... அவரை நான் ஒதுக்கினால்...என்னால் நடிக்கவே முடியாது...அவரது அதிகாரம் அப்படி !

மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுகிறது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம்

    ட thinathanthi : ெல்லி, மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதி அடங்குவதற்குள் பறவை காய்ச்சல் என்னும் மற்றொரு பூதம் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. இந்த கொடூர வைரஸ் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பரவுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களில் கோழிகள், வாத்துகள், காட்டு பறவைகள், காகம் என பல்வேறு வகையான பறவைகள் அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக செத்து மடிகின்றன. அவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கிரண்பேடியை எதிர்த்து அமைச்சர், எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

nakkheeran.in - சுந்தர பாண்டியன் : புதுச்சேரி மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், மத்திய அரசு கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், கடந்த 8- ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Minister, MLAs sit-in struggle against Kiranpedi! 

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதேசமயம் நேற்று இரவு முதல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கினார்.         ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ.18 கோடியில் அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்வதற்கான கோப்பு சமர்ப்பிக்கப்பட்டதில் ரூ.6 கோடி மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 11 ஜனவரி, 2021

வாரா கடன் வட்டி தள்ளுபடி , அசல் தொகையில் 80 முதல் 90 % வரை தள்ளுபடி.. ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன்

Maha Laxmi : · மிக அவசரம், உங்களுக்கு பயனில்லை எனில் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன் வாங்கி நீண்ட காலமாக கட்டமுடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தி. ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தாமல் உள்ள வாரா கடன்களுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி, அதோடு மிக முக்கியமாக இப்போ இருக்கிற அசல் தொகையில் 80 முதல் 90 % வரை தள்ளுபடி. இந்த திட்டத்தோட பெயர் ரின் சமாதானம். இது இந்தமாதம் 31 ஜனவரி 2021 வரை மட்டுமே.
ஒருத்தர் 1 லட்சம் பயிர்க்கடன் வாங்கி இது வர பலவருடமா கடன் கட்ட முடியல னு வச்சிக்கிட்டோம்னா அவர் வெறும் 10000 முதல் 20000 காட்டினா போதும் அவரோட கடன்ல மீதி இருக்கிற வட்டி அசல் மற்றும் அனைத்து தொகையும் தள்ளுபடி செய்து கடன close pannikalam.
அசல் 20 லட்சம் வரை இருக்குற அனைத்து கடன்களையும் இந்த திட்டத்து மூலமா close பண்ணலாம்.
கடன் கட்டாம வழக்கு நீதிமன்றத்துல நிலுவைல இருக்கக்கூடிய அனைத்து கடன்களையும் இது மூலமா நீங்க close செய்ய முடியும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து நீதிமன்றம் செலவுகளும் தள்ளுபடி செய்றாங்களாம்.
இன்னொரு நற்செய்தி என்னனா விவசாயிகள் 30 நாட்கள் கழிச்சு அதே வங்கி கிளையில் மீண்டும் விவசாய கடன் பெறலாம்.

சசிகலா - தினகரன் குழுமத்தின் சொத்துக்களும் ஊழல் வழக்குகளும் பட்டியல்

Image may contain: 2 people, text that says 'திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! PIARE கடനി மன்னார்குடியிலிருந்து மாச சம்பளத்துக்கு போயஸ்தோட்ட வீட்டு வேலைக்கு வந்த எச்சக்கலை பய நீ... உனக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்துச்சி...'
Nanthivarman : தலைவர் தளபதியாரை விமர்சித்து திரியும் திருட்டு தினகரனின் மீதான ஊழல் வழக்குகளின் பட்டியல்.. 1991-95 ஒரு கோடியே லட்சம் டாலர் ($10,493,313) மற்றும் நாற்பத்தி நான்கு லட்சம் பவுண்ட் (€44,37,242.90) அளவிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 27/1996) வழக்கு,
● 1994-95ல் நான்கு லட்சம் டாலர் ($477,760) மதிப்பிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 81/2001) வழக்கு
● அதே காலகட்டத்தில் $90,000 டாலர் மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 82/2001) வழக்கு
● பத்து லட்சம் டாலர் ($1,000,000) மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 83/2001) வழக்கு
● மேலும் 36 லட்சம் டாலர் ($3,636,000) மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் (€1,00,000) மதிப்பிலான மற்றுமொரு வழக்கு
● இவையெல்லாம் போக,லண்டன் ஹோட்டல் வழக்கு மூலம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐந்தாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்

வெத்து பேப்பர் அறிக்கை வேண்டாம்.. ரஜினிக்கான போராட்டக் குழு பரபர அறிக்கை! உங்களை இயக்குவது யார் ?

Protest committee of Rajini releases a statement goes viral

Vishnupriya R - tamil.oneindia.com :  சென்னை: ரஜினி அரசியலுக்கு வரும் வரை விட மாட்டோம் என போராட்டக் குழுவினர் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் போராட்டக் குழுவினர் என்ற பெயரில் ஒரு அறிக்கை வலம் வருகிறது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திரு தலைவர் அவர்களுக்கு.. உங்களை அரசியலுக்கு அழைக்கும் போராட்ட குழுவின் கடிதம். நீங்கள் கடந்த சில நாட்களாக காகிதம் முலம் அரசியல் இல்லை என்று பத்திரிகைக்கு கடிதம் அனுப்புவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. கொரோனோ என்ற கொடிய நோய்க்கு அஞ்சாமல் என் உயிர் போனாலும் கவலையில்லை. நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிவிட்டு, "அண்ணாத்தை" படபிடிப்பிற்க்கு ஆந்திரா சென்ற தாங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?

வாட்சாப்
சாய்ராம் ஜெயராமன் -  பிபிசி தமிழ்   :  வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுவது ஒருபுறமிருக்க, இந்தியர்கள் பெரியளவில் பின்தொடர்ந்து வரும் அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்க்கே வாட்சாப்க்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துங்கள் என்று கூறுவதும், வாட்சாப் குழுக்களில் கூகுள் தேடல் வழியாக யார் வேண்டுமானாலும் உள்நுழைந்துவிட முடியும் என்ற சர்ச்சையும் பயன்பாட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், மக்கள் உண்மையிலேயே வாட்சாப் செயலியிலிருந்து மற்ற செயலிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்களா என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் சேவையை கொண்டு பரிசோதித்து பார்த்தோம்.

இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் 'கோவிஷீல்டு' தடுப்பூசி கிடைக்கும்

 This is the price of 'Covshield' vaccine in India - Serum Company

nakkheeran.in : வருகின்ற 16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.கரோனா தடுப்பூசி செலுத்துவதில், முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுது கொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக பிரதமர்  மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளைக் கேட்கிறது பாமக.

தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள்: ராமதாஸ் கேட்டது எத்தனை?

minnambalam : அதிமுக கூட்டணியில் பாமக தற்போது வரை இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (ஜனவரி 11) பகல் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை இரண்டாம் முறையாக சந்தித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் கே.பி.அன்பழகனும் தங்கமணியும் ராமதாசை சந்தித்தனர். இப்போது அடுத்த கட்டமாக அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் ராமதாசை சந்தித்துள்ளார்கள்.  முதலில் நடந்த அமைச்சர்கள் சந்திப்பின்போதே, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் எழுப்பி வரும் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று ஒரு வாரத்துக்குள் தீர்வு சொல்வதாக சொல்லிச் சென்றிருந்தனர். ஆனால் முதல்வர் பிரச்சாரம், அதிமுக பொதுக்குழு போன்ற காரணங்களால் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ராமதாசை அவர்கள் சந்திக்கவில்லை.

இதற்கிடையே கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நடந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. 

போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்

அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நம் படை களத்தில் இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.    இதன் பிறகு தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அரசியல் ஆர்வத்தை தூண்டிய ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தை முடித்து விட்டு அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்தார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கொரோனா பரவியதையடுத்து ரஜினியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.  ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்க மாட்டேன் என்றும் கூறி இருந்தார்.  இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு முன்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்

malaimalar :
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னை அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் என்று கூறி இன்று உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குற்றப்பரம்பரை .. சசிகலாவோட மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனம். சசிகலாவோட மூத்த அக்காவுக்கு மூணு பசங்க....

Jayalalithaa: The Amma of Tamil Nadu politics - The Hindu BusinessLine
Raja Rajendran : · குற்றப்பரம்பரை கொஞ்சம் உன்னிப்பா வாசிக்கணும். சசிகலாவோட மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனம். சசிகலாவோட மூத்த அக்காவுக்கு மூணு பசங்க. அவங்க பேரு தினகரன், பாஸ்கரன், சுதாகரன். சசிகலாவோட இன்னொரு அண்ணன் பெயர் தெரில, ஆனா அண்ணி பேரு இளவரசி. அவங்களுக்கு ஒரு பையன், அவன் பேரு விவேக்.
இதுல இந்த விவேக் மாமானார்தான் இந்தப் பதிவோட ஹீரோ. நெகட்டிவ் ரோல். அவர் பெயர் பாஸ்கர். பாஸ்கரன் இல்ல. பாஸ்கர், கட்ட பாஸ்கர்.
கட்ட பாஸ்கர்ன்னா ஆள் குள்ளமா இருப்பாரோன்னு கேக்குறீங்க. அது குடும்பத்துல வச்ச பெயர் இல்ல. போலிஸ் வச்ச பெயர். ஓ, ஆள் கட்டுமஸ்தா இருந்திருப்பாருன்னு முந்திரிக்கொட்ட போல முந்தக் கூடாது. அந்தாள் கட்டை கடத்தறவன். செம்மரக் கட்டை !
தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே செம்மரக் கட்டை கடத்தல் பிசினசில் டாப் டானாம் !

மக்கள் பாதை அமைப்பில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நீக்கம்

மக்கள் பாதை அமைப்பில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நீக்கம்

dailythanthi.com : . சென்னை, மக்கள் பாதை அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி செ.நாகல்சாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இருந்தார். வழிகாட்டி என்று சொல்வதை விட அவர் மக்கள் பாதை அமைப்பை நிர்வகித்து வந்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் மக்கள் பாதை அமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் செயல்பாடு எதுவும் சரியில்லை. மாவட்ட, மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கு நெருக்கமான நிர்வாகிகளை மட்டும் சந்தித்த அவர், மற்றவர்களை புறக்கணித்து வந்தார்.>இதனால் நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தார்கள். மேலும் மக்கள் பாதை அமைப்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

திமுகவின் தேர்தல் மாநாடு: பி.கே. நடத்திய கூட்டம்!

minnambalam :  சட்டமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கிறது திமுக கூட்டணி. தேர்தல் நோட்டிபிகேஷன் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற நிலையில் கூட்டணிக் கட்சியினருக்கான தொகுதிகள், திமுக போட்டியிடும் தொகுதிகள் என்பது பற்றிய ஆலோசனைகள் தீவிரமாகியிருக்கின்றன. திமுக தலைவரை அண்மையில் வைகோ, ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்தார்கள். அப்போது திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கான இடங்கள் பற்றி அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில்...

திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த வாரம் சென்னையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என். நேரு, ஆ.ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சேகர்பாபு, செந்தில்பாலாஜி , சிற்றரசு, உள்ளிட்டோரோடு சபரீசனும் கலந்துகொண்டிருக்கிறார்.

இஸ்லாமிய சமூகம் படும்பாடு அவர்களே தேடிக்கொண்டதாகவே ...

Image may contain: 4 people, crowd and outdoor
ஆலஞ்சியார் : · தமிழக முஸ்லிம்கள் .. என் அடையாளத்தை இறக்கிவைத்துவிட்டு பேசவரவில்லை ஆனாலும் இதுதான் என் அடையாளமென முத்திரை குத்தியிருக்கிறீர்கள் .. நான் முதலில் மனிதன் இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன் என்ற என் உண்மையான அடையாளத்தை இழந்து பேசினால் அது பொய்யாகிவிடும்.. என் மீது சுமத்தபட்ட சுமையின் வலி உணர்ந்தவன் பொய்யோ சரியோ இதை நான் இழக்க சமூகம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது அரசும் கூட.. ஆனால் சமீபகாலமாக இஸ்லாமிய சமூகம் படும்பாடு ..அதை அவர்களே தேடிக்கொண்டதாகவே உணர்கிறேன்.. வேறெங்கும் இல்லாதளவில் இங்கே தலைவர்கள் உண்டு .. அரசில் அதிகாரமென்பது ஏன் கிடைக்காமல் போனதென்று யாரும் மீளாய்வுசெய்யவே இல்லை.. யார் உண்மையான நண்பன் என்ற தெளிவு நிச்சயமாக இல்லை ‍‍.. எந்த மண்ணில் வாழ்கிறோம் நம் கலாச்சாரம் எது நம் பண்பாடு எதுவென்ற புரிதலை விட்டு விலகி குறைய காலமாகிவிட்டது .. வாழ்வியல் வழிமுறைகள் வேறு அரசியல் வழிகள் வேறென்ற முதலில் வரையறுக்காமல் இலக்கை கூட அடையாளம் காண முடியாது ..

க்ரிப்டோ கரன்சி ?.. டிஜிட்டல் எண்களை கோடிகள் பெறும் என்று நம்பி ஏமாந்து.. பல பில்லியன் டாலர்களை இழந்த....

Narain Rajagopalan : · என்னுடைய டெலிகிராம், சிக்னல் செயலிகளில் நிறைய தெரிந்த முகங்களை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது. நானெல்லாம் வாட்ஸாப்பினை விட்டு வெளியேறி பல வருடமாகிறது. நானே பலருக்கும் பல காலமாக சொன்னது டெலிகிராம் தான். ஏனென்றால், டெலிகிராம் உருவான கதையே ஹுசைன் சைதி எழுதுகின்ற க்ரைம் திரில்லர்களுக்கு இணையான கதை. டெலிகிராமின் கதையை இணையத்தில் தேடி படித்து கொள்ளுங்கள். என்றைக்கு வாட்ஸாப்பினை பேஸ்புக் வாங்கியதோ, அன்றைக்கே இது நடக்கும் என்று தெரியும். அதனால் தான் இன்றைக்கு வரைக்கும் இன்ஸ்டாகிராமில் எனக்கு கணக்கு கூட கிடையாது. ஒரு போதும் செல்பேசியில் ட்விட்டர், பேஸ்புக்கினை நிறுவுவதும் இல்லை. இப்போது ட்விட்டரை பயன்படுத்துவதே இல்லை. ட்விட்டர் கணக்கு என்பது எனக்கு நான் கவனித்து கொண்டு இருக்கும் ஆட்களை அவதானிப்பதற்கு மட்டுமே.
ஏற்கனவே என் மீது எல்லா நிற கட்சி, கழகம், இயக்கங்கள் காண்டில் இருப்பதால் தேடுதல் கூட கூகிள்ளில் பெரும்பாலும் கிடையாது, duckduckgo தான். உலாவியும் க்ரோமிலிருந்து பயர்பாக்ஸ் போய், இப்போது Braveனினை பரீட்சார்த்த முயற்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை! கக்கனின் பேத்தி எஸ் பி ராஜேஸ்வரி ஏன் நக்கீரன் ஆசிரியரை மிரட்ட வேண்டும் ?

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வீடியோக்கள் டேரா பைட் கணக்கில் பதிவாகி உள்ளது
இவற்றை எக்ஸ்போஸ் பண்ணிய நக்கீரனை பயமுறுத்திய சி பி சி டியில் ஒரு எஸ் பி .

கக்கனின் பேத்தியாம் இந்த ராஜேஸ்வரி எஸ் பி!
பொள்ளாச்சி பாலியல் பயங்கர குற்றங்களை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த நக்கீரன் ஆசிரியர் ராஜகோபாலை மிரட்டி பணியவைக்க முயற்சித்திருக்கிறார் மறைந்த தலைவர் கக்கனின் பேத்தி எஸ் பி ராஜேஸ்வரி. .
போலீஸ் நிலையத்தில் வைத்து இந்த கக்கனின் பேத்தி எஸ் பி ராஜேஸ்வரி ஏன் நக்கீரன் ஆசிரியரை மிரட்ட வேண்டும் ? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
இந்த கக்கனின் பேத்திக்கு பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தொடர்பு?
அந்த குற்றங்களை மூடி மறைக்க இவர் ஏன் முயன்றார்?
இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன .
நக்கீரன் உதவி ஆசிரியர் பிரகாஷ் அவர்களின் இந்த பேட்டி மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது
சுமார் 600 தமிழர்களை இந்தி ஆதிக்கத்துக்கு வால்பிடித்து சுட்டு கொன்ற கக்கனின் பேத்தி என்பதை இவர் புரூப் பண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.  
குற்றவாளிகளுக்கு பல்லக்கு தூங்குவதே பிழைப்பாகி விட்டிருக்கிறது    
 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

Maniam Shanmugam : · யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

பொள்ளாச்சி: கனிமொழி தடுக்கப்பட்டபோது நடந்தது என்ன?

minnambalam: ொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று (ஜனவரி 10) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்காக கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தக் கனிமொழி எம்.பி. இன்று (ஜனவரி 10) காலை சென்று கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி செல்ல அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. உட்பட திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அடுத்த சில நிமிடங்களில் போலீஸின் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப் புறப்பட்டுச் சென்றார் கனிமொழி. 

இடையில் என்ன நடந்தது என்பதை இன்று (ஜனவரி 10) சென்னை ராயபுரத்தில் நடந்த மக்கள் வார்டு சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

சென்னை மின்சார ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பாலியல் பலாத்காரம்.. ஊழியர்களே கூட்டு.... தாம்பரம்

tamil.samayam.com: தமிழகத்தில் கொரோனா காலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் நாகப்பட்டினம் அருகே இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண் கோவிலுக்குள் தூக்கி செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மின்சார ரயிலில் பயணித்த பெண்ணை ரயில்வே ஊழியர்களே கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரைச் சேர்ந்தவர் 40 வயதான பெண் கூலி தொழிலாளி. இவர் நேற்று பரனூருக்கு செல்வதற்காக பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். குடிப்பழக்கம் கொண்ட இவர் ரயில் கிளம்பிய சில நேரத்தில் தூங்கிவிட்டதால் பரனூரில் இறங்காமல் அதே வண்டி மீண்டும் சென்னை கடற்கரை வரை திரும்பி வரும்வரை உறக்கத்திலேயே இருந்துள்ளார்.

Indonesia: விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜய ஏர் விமான Black box கிடைத்தது

Indonesia: விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜய ஏர் விமான Black box கிடைத்தது
zeenews.india.com :  இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இந்தோனேசிய ஜெட் விமானத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை (Black box) கண்டறிந்தனர்."கருப்பு பெட்டிகளின் (Black box) இரண்டையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், இரண்டு Black box-உம் கிடைத்துவிட்டது" என்று இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (Indonesia's transport safety agency) தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜான்டோ (Soerjanto Tjahjanto) தெரிவித்துள்ளார்.  

விமானத்தை இயக்குவதற்கான அறை காக்பிட் (cockpit) என அழைக்கப்படுகிறது. அதில் இரண்டு கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். விமானிகள் மற்றும் விமான இயக்கத்தின்போது காக்பிட்டுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அனைத்தையும் பதிவு செய்து வைக்கும் அமைப்பு கருப்புப் பெட்டி எனப்படும் black boxes. இவை விபத்தின் போது விமானிகளும், விமானப் பணியாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களை தெரிந்துக் கொள்ள உதவும். அதாவது விபத்திற்கான காரணத்தை தெரிந்துக் கொள்வதற்கு உதவுகிறது black box.  

தமிழகத்தில் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி

malaimalar :கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் வருகிற 16-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்காக ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 226 இடங்களில் நடத்தப்பட்டது.

கமல் என்றொரு நியாயஸ்த்தன் இருந்தார். அவரை எங்காவது, யாரவது பார்த்தீர்களா?

சுமதி விஜயகுமார் : · விஸ்வரூபம் வெளியீட்டில் பிரச்சனை வந்த போது கமல் சொன்னது 'என்னிடம் பணம் இல்லை . திவால் ஆகும் நிலைமையில் உள்ளேன். இந்த படம் வெளியாகவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டு இல்லையென்றால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என்று அறிவித்தார்.
அதே கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் துவங்கிய போது , கட்சி நடத்த பணத்திற்கு எங்கே போவீர்கள் என்று கேட்ட பொழுது 'மக்களிடம் நிதி திரட்டி கட்சி நடத்துவோம்' என்றார். அதே கமலிடம் மிக சமீபத்தில் ஹெலிகாப்டர் உபயோகிக்க நிதி ஏது என்று கேட்ட பொழுது, ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உடைப்பது போல் அவ்வளவு கோவம்.   
அ வளவு கோவத்திலும் நிதி எங்கிருந்து வந்தது என்று கூறவில்லை மாறாக எதிர் கேள்வி வைத்தார்.'டீ கடை , பூ கடை வச்சவங்க எல்லாம் இன்னைக்கு கோடீஸ்வரங்க ஆயிட்டாங்க. 235 சொச்சம் படம் நடிச்சிருக்கேன். மக்களை பாக்க ஹெலிகாப்டர் இல்ல , போயிங் விமானதுல கூட வருவேன். இது 'எங்க' பணம். என்னை பார்த்து கேக்க உங்களுக்கு எங்கிருந்து துணிவு வருகிறது' என்று கேட்டுள்ளார். 

ராமதாஸ் ஆரம்பித்து வைத்த ஆணவக்கொலை கலாச்சாரம் .. நாவிதர் - தெலுங்கு செட்டி ...

Image may contain: 1 person, outdoor
தோழர் ஜீவகன் : கரூர் ஜாதி ஆணவக்கொலை. ஆணவக்கொலை என்றதுமே அது SC பசங்க சம்பந்தப்பட்ட விவகாரம் என்று பொதுப்புத்தி விலகிச் சென்று விடுகிறது. கொலை செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் நாவிதர் (MBC) வகுப்பை சேர்ந்தவர். கிடைத்த செய்திகளின்படி, கொலை செய்த குடும்பம் தெலுங்கு செட்டி. ஹரிஹரன் - மீனா இருவரது காதலுக்கும் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. மீனாவை தான் திருமணம் செய்வேன் என்று ஹரிஹரன் உறுதியாக நின்றிருக்கிறார்.
விளைவாக, அம்பட்டையனுக்கு எங்க பொண்ணு கேக்குதோ என்கிற வசையுடன் கல்லால் அடித்தும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தலித் அல்லாத ஜாதிகளின் கூட்டமைப்புக்காக சுற்றிச் சுழன்று பாமாக்கா ராமதாஸ் கூட்டங்களை ஏற்பாடு செய்து ஜாதி வெறியை தூண்டியதன் விளைவாகவே தமிழகத்தில் அடுத்தடுத்து
ஆணவப் படுகொலைகள் நடக்கத் துவங்கின.
இளவரசன் - திவ்யா,
சங்கர் - கௌசல்யா, கோகுல்ராஜ் - சுவாதி என தேடித்தேடி பட்டியலின இளைஞர்கள் மட்டும் கூலிப்படை உதவியுடன் கொலை செய்யப்பட்டனர்.
ராமதாசின் நச்சுப் பரப்புரையானது காதலே ஒரு நாடகம் தான் என்கிற கேவலமான மனநிலையை சத்திரிய வீரம் பேசும் இளைஞர்களிடத்து உருவாக்கியது. இதனால் பொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் மோசமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகினர்.

பொதுக்குழு: இபிஎஸ்- ஓபிஎஸ் மோத வைத்த 16 ஏ! சசிகலா விவகாரமும் நியூமரலஜியும் காரணம்?

 

பொதுக்குழு: இபிஎஸ்- ஓபிஎஸ் மோத வைத்த தீர்மானம் 16 ஏ!

minnambalam :அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு, முதல்வர், துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள் இரண்டரை மணிநேரம் காலதாமதமாக வந்ததற்கு, ஜோதிடமும், தீர்மானம் 16ஏ-வும்தான் காரணம் என்கிறார்கள் அதிமுகவினர்.  அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நேற்று(ஜனவரி 9), நடைபெற்றது. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடந்த 4ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களாக முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசித்து வந்தனர்.

பொதுக்குழுவில் சசிகலா சம்பந்தமாகத் தீர்மானத்தை நுழைக்க முயற்சி செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். அதற்கு முதல்வர் இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு சசிகலாவைப் பற்றி பொதுக்குழுவில் பேசவேண்டாம், தலைமை கழகத்தில் மாலையில் நடைபெற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசலாம் என்று முடிவுசெய்தனர்.

கிரண்பேடிக்கு எதிராக இரண்டாம் நாளாக போராட்டம் முதல்வர் நாராயணசாமியை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு

hindutamil.in :முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு போராட்டக்களத்திலேயே படுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்கிரண்பேடி மக்கள் நலத்திட்டங் களுக்கு தடை ஏற்படுத்தி முட்டுக் கட்டை போடுவதாகக் கூறி காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சார்பில் மறைமலை அடிகள் சாலை- அண்ணா சிலை அருகே 4 நாட் கள் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்வர் நாராயணசாமி தலை மையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று முன்தினம் போராட்ட களத்திலேயே உணவுசாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கி விடிய, விடிய போராட் டத்தை தொடர்ந்தனர். அதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ், கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாளவன் எம்பி, பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் போராட்ட களத் துக்கு வந்தனர்.

வடக்கு கொள்ளையர்களை தோலுரிக்க 2G அலைக்கற்று வழக்கு நாடகத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசவேண்டும்

Kandasamy Mariyappan : · வடக்கத்திய கொள்ளை கும்பலின் முகத்தை உலகிற்கு காண்பிக்க... திரு. ஆ. ராசா 2G அலைக்கற்றை பற்றி மீண்டும் மீண்டும் பல தளங்களில் பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும்! 2010ல் 2G ஊழல் என்று ஊடகங்கள் கொக்கறித்த பொழுது, எனது So called Elite நண்பர்களுடன் ஆ.ராசாவை ஆதரித்து, நான் மட்டுமே விவாதம் செய்வேன்! தமிழ்நாட்டு So called intellectuals கும்பலுக்கு வடக்கத்திய கொள்ளையர்களை பற்றி கவலை இல்லை! நீதிமன்றமே ஆ.ராசா குற்றமற்றவர் என்று கூறிய பிறகும்...
பிஹாரிலிருந்து பிழைக்க வந்த எச். ராஜா, 2019 தேர்தல் முடவு வந்தவுடன், இன்னும் 6 மாதத்தில் ஊட்டி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வரும் என்றா(ன்)ர்!
இரண்டு வருடங்கள் கடந்து விட்டது!
ஒரு சுயநல கூட்டம், ஜனவரி 2, 2021ல் ஆ.ராசா திகார் சிறையில் இருப்பார் என்றது!
ஜனவரி 2021 முடிய போகிறது!
உச்ச நீதிமன்றம், செல்வி ஜெயலலிதாவை No 1 குற்றவாளி என்று அறிவித்த பிறகும், அந்த தலைவியை வைத்து வாக்கு பிச்சை கேட்கும் அடிமைகள் கூட்டம்...

அர்ச்சகரை மணந்தால் 3 லட்சம் ரூபாய் தானம் .. 550 பார்ப்பனக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25,000 ரூபாய் தானம் . கர்நாடக பாஜக அரசின் பார்ப்பன சேவை

 இந்தியாவில் பணக்காரர்கள்
பார்ப்பனர்கள் - 49.9%
பிற்படுத்தப்பட்டோர் - 9.5%
பட்டியலினத்தோர் - 9.5%
இந்தியாவில் ஏழைகள் பார்ப்பனர்கள் - 4.6%
பிற்படுத்தப்பட்டோர் - 18.9%
பட்டியலினத்தோர் - 28% (‘எக்னாமிக் டைம்ஸ்', 12.5.2019)

 கலி. பூங்குன்றன் : · கருநாடக பா.ஜ.க. அரசின் பார்ப்பனத்தனம்! கருநாடக மாநில பார்ப்பன மேம்பாட்டு வாரியம், மாநிலத்தில் பார்ப்பனப் பெண்களுக்காக இரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, அவ்வகையில் ‘அருந்ததி' திட்டத்திற்கு மணமகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வழங்கப்படும். 'மைத்திரேயி' எனப்படும் மற்றொரு திட்டத்தில் பார்ப்பன மணமகள் ஒரு பார்ப்பன அர்ச்சகரை மணந்தால் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

‘அருந்ததி‘ திட்டத்தின் மூலம் 550 பார்ப்பனக் குடும்பங்களும், ‘மைத்ரேயி' திட்டத்தின் மூலம் பல பார்ப்பனப் குடும்பங்களும் பயனடைவர்கள்.
இதைப் பற்றி பேசிய பார்ப்பன மேம்பாட்டு வாரியத் தின் இயக்குநரான சச்சிதானந்தா தெரிவித்துள்ளதாவது: ‘இத்திட்டத்தால் பயனடைபவர்கள்

மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ரூ1921 கோடி மெகா ஊழல்.. அரசு கஜானாவை பகல் கொள்ளை!

மடிக்கணினி வழங்கும்  திட்டத்தில் ரூ1921 கோடி மெகா ஊழல்.. அரசு கஜானாவை பகல் கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசு!
kalaignarseithigal.com : மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி தனது அமைச்சரவை சகாவுடன் இணைந்து, ரூ.1921 கோடி மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மாபாதக மெகாஊழல் இது "தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை 'ப்ளாக் லிஸ்ட்' செய்து, அந்நிறுவனத்திற்கு 'பகல் கொள்ளையாய்' மேலும் வழங்க இருக்கும் தொகையை நிறுத்தி வைத்து, அந்நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும்" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “1921 கோடி ரூபாய் மதிப்பில் மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில்” பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியருக்கு 15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. அந்த டெண்டரில் சீன நிறுவனம் ஒன்று பங்கேற்று - அந்நிறுவனத்திடம் இருந்து எப்படியும் மடிக்கணினிகள் வாங்குவதென்ற ஒரே உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ள “ஊழல் திருவிளையாடல்கள்” பேரதிர்ச்சியளிக்கின்றன.