
ரஹ்மான் மகள் மேடையில் தன் முகத்தை மூடி போட்ட உடை தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகள்...இந்து மதம் என்ற பெரும்பான்மை மதத்தினராலும், பகுத்தறிவுவாதிகளாலும் , ஒடுக்கபட்டவர்கள்னு சொல்லப்படும் தலித்தியவாதிகள் வரை ஏன் சில முற்போக்கு இஸ்லாமியர்களாலும் அனைவராலும் தாக்க படும் இஸ்லாத்தை நாமும் நம் பங்குக்கு அடிக்க வேண்டாமேன்னு அமைதியா இருப்பது பழக்கம்..
யார் ஒடுக்கபடுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்கும் நிலை காரணம்...ஆனாலும் சில விஷயத்தை பேசாமல் போவதும் சரி இல்லை என்பதால் இதை எழுத வேண்டி வந்தது . ரஹ்மான் சகோதரி அல்லது மகள் என்ன உடை போடனும் என்பதை நாம் முடிவு செய்ய கூடாது தான்...ஆனால் புர்க்கா அடிமைதனத்தில் அடையாளம் என்பதை சொல்லி தான் ஆகனும்...ரஹ்மான் தன் மகளை புர்க்கா போடுன்னு நிர்பந்திக்கல . புர்க்கா போடாதன்னும் நிர்பந்திக்க இயலாது ..அது விமர்சனத்திற்குரியது இல்லை தான்... ஆனால் கதிஜா புர்க்கா அணிந்ததை அவரின் பகுத்தறிவற்ற தன்மைன்னு பேசாம கடக்க இயலாது ..
எல்லாத்தையும் ரைட் டூ சூஸ்ன்னு எடுக்க இயலாது ...புர்க்கா ரைட் டூ சூஸ்ன்னா பூணூலும் ரைட் டூ சூஸ் தான் .சாதியும் ரைட் டூ சூஸ் தான்.. ஒரு பெண் புர்க்கா அணியும் போது தன் குடும்பம் சார்ந்த ஆணையும் அவமான படுத்துகிறாள்ன்னு தான் அர்த்தம் .