சனி, 21 ஏப்ரல், 2018

அமெரிக்காவில் 18 வயது இந்திய மாணவன் போலீசாரால் சுட்டு கொலை


Eighteen-year-old Nathaniel 'Nathan' Prasad was killed during an encounter with Fremont, Calif., police. Prasad, who had just graduated from high school,
வீரகேசரி :அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர்.
இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.

கலைஞரை சந்தித்த வங்க மாநில உரிமை போராளி கோர்கோ சட்டர்ஜி !

கருணாநிதியை சந்தித்த வங்க மொழிப் போராளி!Dr. Garga Chatterjee :If the Tamils had their fully sovereignty, he would have been a world leader.
மின்னம்பலம்: முதுமையால் உடல் நலம் குறைந்து தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை, வீடு தேடி வந்து சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வங்காள மொழியின் செறிவு மிக்க படைப்பாளியான கோர்கோ சாட்டர்ஜி.
கோர்கோ சாட்டர்ஜி வங்க மொழிக்காகவும், வங்காளிகளுக்காகவும் போராடி வரும் படைப்புப் போராளி. மொழியுரிமை நிகர்மை இயக்கத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், வங்க தேசிய இனச் செயற்பாட்டாளராக பரவலாக அறியப்படுபவர். இவரது, ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்ற நூல் தமிழில் இன்று (ஏப்ரல் 21) மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆழி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. இதற்காகவும் ஏப்ரல் 19-ம் தேதி நடந்த நீட் எதிர்ப்பு மாநாட்டுக்காகவும் சென்னை வந்தார் கோர்கோ சாட்டர்ஜி.  http://www.newagebd.net/article/24505

பாஜகவில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விலகினார்

மின்னம்பலம்: பல மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைக்
கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இன்று (ஏப்ரல் 21) பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை பதவியேற்றபோது, வாஜ்பாயின் அமைச்சரவையில் பதவி வகித்த எவருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. விதிவிலக்காக, சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சராக நீடித்து வருகிறார்.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உட்பட பல மூத்த தலைவர்களுக்கான முக்கியத்துவம், மோடி பதவியேற்றதும் குறைந்துபோனதாகச் சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக, மோடி அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார் யஷ்வந்த் சின்ஹா.

எஸ் வி சேகர் கைது செய்யப்படும் வாய்ப்பு .... லெட்டர் பேட் ரூபத்தில் ?

எஸ்.வி.சேகர் மீது புதுப் புகார்!மின்னம்பலம்: பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தரக்குறைவான கருத்துகளை தனது சமூக தளத்தில் பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது.
மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வழங்கப்பட்ட லெட்டர் ஹெட்டை பயன்படுத்தியிருக்கிறார், அது குற்றம் என்று கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி, நேற்று மின்னம்பலம். காம் மாலை ஏழுமணி பதிப்பில் வெளியிட்ட, ‘மன்னிப்பு கேட்டாலும் குற்றம் குற்றமே’ என்ற செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இந்நிலையில், ‘தனது தரக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதற்காக தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்தியது குற்றம். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று போலீஸில் புகார் செய்திருக்கிறார் பரமக்குடியைச் சேர்ந்த சகாயராஜா.

போக்கிடம் இல்லாமல் 9 நாட்கள் கடலிலேயே 8 குழந்தைகள் உட்பட 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் ..

tamilthehindu :மியான்மர் அடக்கு முறையிலிருந்து தப்பி படகில் ஏறி கடலில் 9 நாட்கள் தத்தளித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் சுமத்திராவில் ஒருவழியாக கரை சேர்ந்தனர்.
8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் வெள்ளி மதியம் அசேவில் உள்ள பைரூயன் தீவுக்கு கரைசேர்ந்தனர். கடலிலேயே 9 நாட்கள் தத்தளித்ததால் இதில் பலருக்கும் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர். இவர்களுக்கு உடலில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது, கடுமையாகக் களைப்படைந்துள்ளனர் என்பதால் தேவையான மருத்துவ வசதிகளை இந்தோனேசியா செய்து கொடுத்துள்ளது.
மியான்மரின் கொடூரமான இனமையப் போர் நடக்கும் ராக்கைனிலிருந்து தலைக்கு 150 டாலர்கள் கொடுத்து படகைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பேரா .நிர்மலாவின் கணவர் சங்கர பாண்டியன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு..

வெப்துனியா :மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதேபோல், ஆளுநரால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேற்று விசாரணையை துவங்கியது. நிர்மலா தேவியும், அவரது கணவர் சங்கர பாண்டியனும் கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை .. அமைச்சரவை தீர்மானம்

tamilthehindu : 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்  தண்டனை  விதிப்பதற்கான அவசரச்சட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி  இனிமேல் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தாலோ அல்லது கூட்டு பலாத்காரம் செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும். காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மேலும், சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதேப் போன்று நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து நடந்து வந்தது பெரும் கவலையை அளித்து வந்து, மக்கள் மனதில் ஒருவிதமான அச்சுறுத்தலான நிலையை ஏற்படுத்தி வந்தது.
இது சம்பவங்கள் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

தமிழிசை : எஸ் வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்

மாலைமலர் :எஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை
சவுந்தரராஜன் சேலம்: சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண் பத்திரிக்கையாளர்ளுக்கு எதிராக எந்த கட்சியை சேர்ந்தவர்களும் தவறான கருத்துக்களை வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினார். நான் உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 நிமிடங்களில் அந்த பதிவுகள் அழிக்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கருத்துகளை தவறுதலாக பதிவு செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயலாகும். இணையதளத்தில் வரம்பு மீறி கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் பத்திரிகையாளர் குறித்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் தூண்டுதலில்தான் .. நிர்மலாதேவி வாக்குமூலம் ... 2 பேராசிரியர்களும் தலைமறைவு

காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்மாலைமலர் : காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசினேன் என்று பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகர்: மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.
பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவு பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

எஸ் வி சேகர் வீடு.. கைது செய்யப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் விபரம் :

Shankar A : எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் விபரம்.
1) எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ்
2) எச்.நாசர், செய்தி வாசிப்பாளர், சன் நியூஸ்
3) ஜே.சதீஷ் குமார், நிருபர், தினகரன்
4) ஜீவசகாப்தன், ப்ரொடியூசர், நியூஸ் 18
5) சீனிவாசன், கேமராமேன், பாலிமர் நியூஸ்
6) இளையபாரதி, நிருபர், நியூஸ் 18
7) வீரமணி, நிருபர், நியூஸ் 18
8) டி.பர்தீன், ஸ்க்ரோலிங், கேப்டன் நியூஸ்
9) டி.பிரகாஷ், மூத்த நிருபர், நியூஸ் 18
10) எஸ்.விஜய் ஆனந்த், நிருபர், நியூஸ் 18
11) கே.சிவராமன், நிருபர் நியூஸ் 18
12) எஸ்.விஷ்ணு, நிருபர், நியூஸ் 18
13) ஜி.தமிழரசன், நிருபர், கலைஞர் டிவி
14) ஐ.ஆசிப், நிருபர், நியூஸ் 18
15) எஸ்.பாலசுப்ரமணியன், நிருபர், உதயா டிவி
16) பி.பாண்டியராஜ, நிருபர், நியூஸ் 18

ராஜஸ்தான்.. திருமணத்திற்கு முதல் நாள் மனைவி ,தம்பி , தம்பியின் மனைவியை கொலை செய்தார் ..Man kills wife, brother hours before daughters' wedding


tamilthehindu :ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரத்தில் தன் மனைவி, தன் தம்பி, தம்பியின் மனைவி ஆகியோரை நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த நபரின் இரண்டு மகள்களின் திருமணம் நடைபெறவிருந்ததால் உறவினர்கள் அனைவரும் இந்த நபர் இவரது தம்பியின் வீடுகளில் உற்சாகமாக பேசி அரட்டை அடித்து விட்டு மகிழ்ச்சியுடன் இரவு தாமதமாகத் தூங்கி உள்ளனர். இந்நிலையில் தலா ராம் என்ற இந்த நபர் முதலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி கமலாவின் தொண்டையை அறுத்துக் கொலை செய்தார் பிறகு அருகில் இருந்த தன் சகோதரர் ரேவ்தா ராம் (35) வீட்டுக்குச் சென்று அவரையும் அவர் மனைவி ஹரியா தேவி (30) யையும் கொடூரமாக கொலை செய்தார் என்று பால்சூண்ட் காவல் நிலைய அதிகாரி பாக்கர் ராம் தெரிவித்தார்.

நீதித்துறை . காவித்துறை .. தூதரகங்களிலும், அரசு நிறுவனங்களிலும் ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை..



ஆதனூர் சோழன் : மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பை
ஏற்றதிலிருந்தே நீதித்துறையையும், ஊடகத் துறையையும் கைப்பற்றும் முயற்சி தொடங்கிவிட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமே இந்தியாவின் அடித்தளமான வேற்றுமையில் ஒற்றுமையை சீர்குலைப்பதுதான்.
நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவது, அந்தத் தீர்ப்பை சரியென்பது போல ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் பதியச் செய்வதுதான் பாஜகவின் நோக்கம்.
1977 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதாக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோது, "ஜனசங்" என்ற பெயரில் இயங்கிய பாஜக, மொரார்ஜி தேசாயிடம் வெளியுறவுத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றை கேட்டுப் பெற்றது.
அப்போதிருந்து, வெளிநாட்டுத் தூதரகங்களிலும், அரசு செய்தி நிறுவனங்களிலும், நாட்டில் அப்போதைய முக்கியமான ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை உள்ளே நுழைத்தார்கள். அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே பதவியில் இருந்தாலும் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றினார்கள்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பெண்களுக்கு எதிரான குற்றம் - பாஜக முதலிடம்: புள்ளி விவரத்தால் அதிர்ச்சி!

webdunia :பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் பாஜக முன்னிலை வகிக்கிறது
என்ற புள்ளி விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இண்டஹ் தகவல், தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது கட்சியினர் கொடுத்த தகவல்களை வைத்து இதை வெளியிட்டு இருக்கிறது. கட்சியினரின் குற்ற செயல்களை ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது இந்த புள்ளி விவரம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக கட்சியினர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இந்தியா முழுக்க 1,580 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் 45 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த 45 பேரில் 12 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள். இதில், வன்புணர்வு செய்தல், கடத்தல், கொலை, வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என அனைத்தும் அடக்கம்.

ஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் ’ சொந்த பணத்தில் ...

ஏரி தூர்வாரும் பணிஎம்.திலீபன் விகடன் : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன், அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.  நீராதாரத்தைப் பாதுகாக்க தனிமனிதனாக அவர் முயற்சி எடுத்து வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன். இவரின் மகள் திருணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில் வறட்சியான பகுதியாக உள்ள தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணியவர்கள் தன் தந்தையிடம் ஆலோசித்து அதற்கான நிதியாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதைக் கொண்டு விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

மிரட்டப்பட்ட நிர்மலாவின் வழக்கறிஞர்.. ‘நிர்மலா தேவி வெறும் அம்புதான்! அதை எய்தவரை பிடிங்க..

டிஜிட்டல் திண்ணை: மிரட்டப்பட்ட  நிர்மலாவின் வழக்கறிஞர்!மின்னம்பலம்:  மறைக்கப்படும் ரகசியங்கள்! மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. இதற்கிடையில் நிர்மலா தேவியை சந்திக்க அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் நேற்று சிறைக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் நிர்மலா தேவி.
‘ஏதோ நான் தப்பு செஞ்ச மாதிரி எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. நான் அடிமட்டத்துல இருக்கும் ஒரு சாதாரண ஊழியர். அவங்க செய்யச் சொன்னதை செய்யும் ஒரு ஊழியர். மேல் மட்டத்தில் இருக்கிறவங்க சொல்லும் போது செய்யாமல் எப்படி இருக்க முடியும்? யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லை. ஆனால் அதுக்குள்ளவே எனக்கு நிறைய மிரட்டல் வரத் தொடங்கிடுச்சு. ஜெயிலுக்குள்ள என்னை சுத்தி ஏதோ நடக்குது. ஜெயில்ல இருந்து நான் உயிரோடு வெளியே வருவேனா என்பது கூட தெரியல. அந்த அளவுக்கு எல்லாமே மர்மமாக இருக்கு...’ என்று புலம்பியிருக்கிறார்.

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : குற்றவாளி பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை !

நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அக்கலவரத்தை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியான, பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது, குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு. By வினவு:

மாயா கோட்னானி
பாபு பஜ்ரங்கி
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் முக்கியமான வழக்கு நரோடா பாட்டியா படுகொலை வழக்கு. குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு, வெள்ளி (20.04.2018) அன்று முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது. பாபு பஜ்ரங்கியை மட்டும் குற்றவாளியென அறிவித்திருக்கிறது.
இதே வழக்கில் மாயா கோட்னானி குற்றவாளி என அவருக்கு  விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்துமதவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் பலர் தொடுத்திருந்த வழக்குகளை வைத்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய வழக்கு இது. தற்போது விசாரணை நீதிமன்றத்தின் அரை குறை தீர்ப்பையும் ரத்து செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் தொடுத்திருந்த மனு மீதான தீர்ப்பில்தான் குஜராத் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பினை அளித்திருக்கிறது.

தோழர் மருதையன் :எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !

vinavu :பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில். பத்திரிகையாளர்களுடன் கரம் கோர்ப்போம்! ;எ ஸ்.வி.சேகர் முகநூலில் எழுதியிருப்பதை, ஒரு பொறுக்கி யாரேனும் ஒரு மானமுள்ள பெண்ணிடம் நேரில் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்? சேகருக்கு செருப்படி கிடைத்திருக்கும். அல்லது கும்பல் அதிகமிருந்திருந்தால் சேகர் செத்திருப்பான்.
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கவர்னருக்கு பதிலாக வேறு யாரேனும் இப்படி தட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அந்தப் பெண் பதிலுக்கு கன்னத்தில் அறைந்திருக்கக் கூடும். அல்லது காறி முகத்தில் உமிழ்ந்திருக்கக் கூடும்.
இப்படிப்பட்ட பொறுக்கிகளின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்போது, ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி., அல்லது தனது நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த அச்சம் ஆகியவற்றை மனதில் நிறுத்திப் பார்த்து, இந்தக் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் நமது எதிர்வினையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நிர்மலாதேவியை நமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் பிழைப்பதற்கான வழியாக இருக்கும்.

நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணிதமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95. 9445112675
பத்திரிக்கைச் செய்தி!
ருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளை பாலியல் முறைகேட்டிற்கு அழைத்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், யாருக்காக இந்த இழிசெயலை நிர்மலா தேவி செய்தாரோ அந்த உயர் அதிகாரிகள் யார் யார் என்று இன்னும் அடையாளப்படுத்தவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும்  தமிழ ஆளுநரும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதுரை கமாராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேந்தரான ஆளுநரும் அவசர அவசராம மாற்றி மாற்றி விசாரணைக்குழு அமைத்தார்கள்.
ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தார். அங்கேயும் பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறி நடத்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ள வேந்தரே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை வைத்து ஒரு நபர் விசாரணை குழு அமைத்துள்ளது அதிகார வரம்பை மீறிய செயல் மட்டுமல்ல, இது உண்மையை மூடிமறைப்பதற்கான முயற்சியாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !

நீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியை தமிழகமாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என நீட்டி முழக்கினர் அதன் ஆதரவாளர்கள். உண்மையில் நீட் தேர்வு முறையின் தகுதி என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
vinavu.com :நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, இப்புதிய தேர்வு முறை ”தகுதி மற்றும் திறமை” கொண்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்று அதன் ஆதரவாளர்களாலும், மத்திய அரசாலும் சொல்லப்பட்டது.
நீட் தேர்வுகளை எதிர்த்தவர்களோ இது கிராமப்புற ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமை என்றனர். எனினும், கல்வி விசயத்தை சாதி உள்ளிட்ட பிரிவினைகளின் அடிப்படையில் பார்ப்பது அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர் பார்த்தசாரதிகள்.
அவர்களே சொல்லிக் கொண்ட தகுதி / திறமைகளின் யோக்கியதை என்னவென்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை தகர்த்தெரிகிறது.
நீட் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் (2016 -க்கு முன்) மருத்துவ நுழைவுக்கான கட் ஆப் பொதுப்பிரிவுக்கு 50% மதிப்பெண்களும், ரிசர்வ் பிரிவுக்கு 40% மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுகளுக்குப் பின் சதமான (Percentile) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு .. வங்கி மோசடிகள் .. எல்லா பேய்களும் வந்துவிட்டன .. ப.சிதம்பரம்

பேய் திரும்ப வந்துவிட்டது!மின்னம்பலம் :போதிய நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறும் ரிசர்வ் வங்கியின் கூற்று ஏற்புடையதாக இல்லை எனவும், அவ்வாறு இருந்தால் இப்போது ஏன் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். “பணமதிப்பழிப்பு என்னும் பேய் மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் முற்றுகையிட மீண்டும் திரும்ப வந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு 17 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னமும் ஏடிஎம் எந்திரங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன? முதலில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பழிப்பு செய்த மத்திய அரசு பின்னர் ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது.

கார்பறேட்டுக்கள் வசமாகும் கடற்கரைகள்! கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) திருத்தம்

சிறப்புப் பார்வை: ரியல் எஸ்டேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படும் கடற்கரைகள்!சேது ராமலிங்கம்- மின்னம்பலம் : கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) முழுமையாகத் திருத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பரப்பை ரியல் எஸ்டேட்டுகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்பதே இந்தத் திருத்தம் கூறும் செய்தி.
இது வரை 21 முறைகளுக்கு மேலாக திருத்தப்பட்டு நீர்த்துப்போக வைக்கப்பட்ட அறிவி்ப்பாணை தற்போது முழுமையாக ஒழித்துக்கட்டப்பட உள்ளது. ‘கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2011’ மாற்றப்பட்டு கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையாக (Marine and Coastal Regulation Zone) இயற்றப்பட்டு அது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்புதிய அறிவிப்பாணை பொதுமக்கள் மற்றும் மீனவா் சமூகத்தினரின் பார்வைக்கு வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் நீதிக்கான திட்டம் என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த மீனாட்சி கபீர் என்பவர் இது தொடர்பாகச் சில கோப்புகளை பார்வையிட்டபோது அறிவிப்பாணையில் அரசு அதிர்ச்சிகரமான மாற்றங்களைச் செய்ய வந்தது தெரிய வந்தது.

சிறுமி பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை .. சட்டதிருத்தம் வருகிறது?

ச.ப.மதிவாணன்  நக்கீரன் : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் மரண தண்டனை விதிப்பதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
ஜம்முவின் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யபட்டது மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.வால் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது என நாடு முழுவதும் சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என மத்திய மகளிர் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்தார்.

தூதரக அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு ... பிரான்சின் கலாசாரத்தை அவமதித்ததாக ..

Shyamsundar - Oneindia Tamil  பாரிஸ்: தூதரக அதிகாரியுடன் கைகுலுக்காத காரணத்தால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. 
அந்த பெண் முஸ்லீம் என்பதால் கைகுலுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண் தன் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடமாக அந்த பெண்ணிற்கு குடியுரிமை வழங்காமல் பிரான்ஸ் தூதரகம் இழுத்தடித்து வருகிறது. அந்த பெண் இதுகுறித்து வழக்கும் தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணிற்கும், பிரான்ஸை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்து இருக்கிறது. இதையடுத்து அந்த பெண், பிரான்ஸ் நாட்டிற்கு, தன் கணவருடன் குடியேற நினைத்துள்ளார். இதற்காக பிரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ளுதல், அந்த நாட்டின் சட்டங்களை படித்தல் என்று தீவிரமாக இயங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆண்டும் அவர் விண்ணப்பித்த பிரான்ஸ் குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
கேள்வி கேட்கும் அதிகாரியை பார்த்தவுடன் அந்த பெண் கைகுலுக்கவில்லை என்று விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இரண்டு வருடமாக அந்த பெண் குடியுரிமை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். 

நடிகர் சேகர் வீட்டிற்கு சரமாரியாக கல்லெறிந்து ஊடகவியலாளர்கள் போராட்டம்

Gajalakshmi -Oneindia Tamil சென்னை : பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் செய்தியாளர்கள் பற்றி அவதூறான வகையில் மிகவும் கீழ்த்தரமான கருத்து பதிவிடப்பட்டிருந்ததால் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.

எஸ் வி சேகர் பெண் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார்

tamilthehindu :பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவை தான் தவறுதலாக முகநூலில் பகிர்ந்துவிட்டதாக பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.
எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் திருமலை என்பவரின் பதிவை வியாழக்கிழமை பகிர்ந்தார். அப்பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். இந்நிலையில், எஸ்.வி.சேகர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வியாழக்கிழமை முகநூலில் திருமலை என்பவரின் கருத்தைப் படிக்காமல், தவறுதலாக என் பக்கத்தில் பகிர்ந்துவிட்டேன். சற்று நேரத்தில் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக என் நண்பன் சொன்னதையடுத்து உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டு விட்டது.

ஒரு திராவிட சக்கரத்தாள்வாரின் கதை!

Karthikeyan Fastura : இதை ஒரு திராவிட நிறுவனம்
என்று சொன்னால் மிகையில்லை. ஏனென்றால் ஐந்து தென்மாநில மக்களும் இந்த நிறுவனத்தின் இமாலய வெற்றியில் பங்குபெற்றிருக்கிறார்கள். அதில் மிக அதிக பங்கு தமிழ்நாட்டை சேரும்.
இந்தக்கதை 1946ல் சென்னை திருவெற்றியூரில் இருந்து ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கிறது. பாசமலர் படம் ஞாபகம் வருகிறதா.. அந்தப்படத்திற்கு இந்தக் கதை ஒரு Inspiration ஆக இருந்திருக்க கூடும்.
K.M.மாமன் மாப்பிள்ளை ( ஆங்கிலத்தில் மேமன் மாப்பிள்ளை என்று விளிப்பார்கள். மலையாளத்தில் மாமன் மாப்பிள்ளை தான் அது. என்ன ஒரு பெயர்?
அப்பா புகழ் பெற்ற பத்திரிகையாளர் "கண்டதில் செரியன் மாமன் மாப்பிள்ளை". மலையாள மனோரமா இதழின் ஆசிரியர்.அது அவரது தாய்மாமா கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை உருவாக்கிய பத்திரிகை. தாய்மாமனின் பெயரை தன்பெயரில் தாங்கி இருக்கிறார் என்றால் அந்த பந்தத்தில் பாசமலர் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.
ஓகே நாம் K.M.மாமன் மாப்பிள்ளை கதைக்கு வருவோம். இவர் அந்த பெரும் குடும்பத்தின் கடைக்குட்டி. இவருக்கு மூத்தவர்கள் பத்திரிகை உலகில் கவனம் செலுத்த நம்ம ஹீரோ சென்னை திருவெற்றியூரில் Madras Rubber Factory என்ற பெயரில் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய கோரி எதிர்கட்சிகள் மனு ...

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் நோட்டீஸ்மாலைமலர் :நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை குழு அமைக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர். புதுடெல்லி: மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். எனவே, “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து சுதந்திரமான சிறப்பு குழுவினரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

தினத்தந்தி :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும்
மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தி.மு.க.வும், கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்திய பிறகே, சற்று விழித்தெழுந்து அனைத்து கட்சி கூட்டத்தை மாநில ஆட்சியாளர்கள் நடத்தினார்கள். அதன் தீர்மானங்களை மத்திய ஆட்சியாளர்கள் மதிக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினேன்.

லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்புதினத்தந்தி :பிரதமர் மோடிக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை அவர் சந்தித்து பேசினார். இதற்காக டவுனிங் தெருவுக்கு மோடி சென்ற போது, அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதில் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.
அப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் பின்னர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டது. இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் ...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள செம்ஹ பஜ்ஹா கிராமத்தில் இருக்கும் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி புதன்கிழமை இரவு திருமண ஊர்வலத்தை பார்க்க வெளியே சென்றுள்ளார். 
ஊர்வலம் அவர்களின் வீட்டை கடந்து சென்றும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியை சேர்ந்த ஜிதேந்திர யாதவ்(28) என்பவர் சிறுமியை தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி மயங்கிய நிலையில் ரத்தப் போக்குடன் தோட்டத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளையே தந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்கும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர் . மாதத்திற்கு 700 மக்கள்... பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் குருடர்களாக்கப்பட்டு, ஊனமான சமுதாயமாக

டக்ளஸ் முத்துக்குமார் : இந்திய ராணுவத்தால் குருடர்களாக்கப்படும் காஷ்மீர்
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் - காவிகளின் திரைமறைவு இனஅழிப்பு..
காஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பெல்லட் வகை குண்டுகள் இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகள் இது அபாயகரமான வகையை சேர்ந்த ஆயுதம் இல்லை என்கின்றார்கள் .
ஆனால் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களோ இது அபாயகரமான ஆயுதம் இதனால் ஒருவருக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓரே குண்டில் 100 க்கும் மேற்பட்ட சிறு சிறு துகள்கள் வெளியே சீறி பாய்ந்து எதிர் இருபவர்களை கடுமையாக பதம் பார்க்கும் என்கிறார்கள் .
ஒவ்வொரு துகளும் சர்வ சாதாரணமாக உடலை கிழித்துக்கொண்டு உள்ளே செல்லும். கண் பகுதியில் தாக்கினால் திசுக்கள் கிழிந்து முழு பார்வை பறிபோகும் அளவிற்கு தாக்கம் இருக்கும். பெரும்பாலும் கண் பார்வை இழக்க நேரிடும் என்கிறார்கள்.
கலவரங்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர்
இதில் பொது மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் மாதத்திற்கு 700 மக்கள் என்ற சராசரி எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.

மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..!’ எஸ்பிஐ தலைவர் அயோக்கிய கார்பரேட் அடிமை.

Chinniah Kasi : ‘விவசாயிகள் எப்படி தூக்குமாட்டி சாகிறார்கள்? எங்கே தூக்கு
மாட்டிக்கோ பார்ப்போம்! அயோக்கிய  கார்பரேட் அடிமைகள். மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..!’
எஸ்பிஐ தலைவர்
புதுதில்லி,

நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக, ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தங்களின் அன்றாடச் செலவுக்குக் கூட காசில்லாமல் திண்டாடி வந்தனர்.பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தைப் போல, ஏடிஎம் மையங் களில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க வேண்டும் என்று பல வங்கிகள் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைமை ஏற்பட்டது.இதனைச் செவ்வாய்க்கிழமை காலை, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் ஒப்புக்கொண்டார். விரைவில் இந்நிலை மாறும் என்றார். ஆனால், பணத்தட்டுப்பாட்டுக்கான காரணங்களை அவர் தெளிவாக்க வில்லை. மறுபுறத்தில், பணத்தட்டுப்பாடு குறித்துப் பேட்டி ஒன்றை அளித்த, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார், “பணத்தட்டுப்பாடு இருப்பதாக பெரிய அளவில் பேசப்படுகிறது; ஆனால் அப்படி ஏதுமில்லை” என்றுகுற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

பாஜக எம்பிகளுக்கு தலைமை கடிதம் ::அமித் ஷா மீதான கொலை வழக்கு - ராகுல் காந்தி மீது SMS சேறு வாரி வீசுங்கள்

Shankar A : ராகுல் காந்தியை எப்படி திட்ட வேண்டும். என்ன எஸ்எம்எஸ்
அனுப்ப வேண்டும். பத்திரிக்கைகளுக்கு என்ன பேட்டியளிக்க வேண்டும் என்று பிஜேபி எம்பிக்களுக்கு கட்சித் தலைமை கடிதம். இந்த பொழப்புக்கு...

வியாழன், 19 ஏப்ரல், 2018

நீதிபதி லோயா கொலை வழக்கு தீர்ப்புக்கு முன்பாகவே பாஜக அமைச்சர் கைக்கு எப்படி வந்தது ?


Shankar A :இன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்து பிரத்யேக விசாரணை அமைக்க வேண்டும் என்று கோரிய பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொது நல வழக்குகள், அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதை கடுமையாக கண்டிக்கிறோம். இது தடுக்கப்பட வேண்டும் என்று கூறினர். மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளன.
சமீப காலங்களில் உச்சநீதிமன்றம் விசாரித்து, விரிவான தீர்ப்பு வழங்கிய சில பொது நல வழக்குகள்
1) கோகினூர் வைரத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.
2) திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும்.
3) சான்டா பான்டா ஜோக்குகளை தடை செய்ய வேண்டும்.
4) நீலப்படங்கள் பார்ப்பதை தடை செய்ய வேண்டும்.
5) யோகாசனம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த அமர்வில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளார் என்பதையும் கூறிக் கொண்டு…..

தெலுங்கு நடிகைகள் சாட்டை .. பாலியல் குற்றச்சாட்டுக்களால் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் திணறல்

பாலியல் பிரச்சினை: போராட்ட களமாகும் திரையுலகம்!மின்னம்பலம்: மூத்த நடிகைகள் ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜீவிதா.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் பவன் கல்யாண், "பாலியல் புகார் பிரச்சினையை பொதுவெளியில் சொல்வதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தை நாடலாம் " என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீரெட்டி, "அவரை அண்ணனாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்கிறேன்" என்று செருப்பால் அடித்துக்கொண்டார். இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக அவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

சுவிஸ் பேருந்து விபத்து 12 இலங்கையர் உட்பட 15 பேர் காயம்

tamilnew:சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில்
இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை உல்லாசப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் மையத்தில் இரண்டு ட்ரக்குடன் மோதியதால் இவ்விபத்து நேர்ந்ததாக சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த வேளை பேருந்தில் 40 உல்லாசப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை பேருந்தில் இருந்த பெண் வழிகாட்டி பலத்த காயத்திற்கு உட்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிர்மலா விவகாரம் எடப்பாடி அரசுக்கு தொடர் கண்ணி வெடியா?

மின்னம்பலம்: “நிர்மலா தேவியின் ஆடியோ வைரலாகப் பரவியது என் வழியாகத்தான்.
இப்போது நிர்மலா தேவி அனுப்பியதாக சொல்லப்படும் மெசேஜ்கள் எல்லாமே என் வழியாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது!” என்பது அந்த மெசேஜ்.
“இதுல உனக்கு ஒரு பெருமையா?’” என்று கிண்டலடித்தது ஃபேஸ்புக் கமெண்ட்.
தொடர்ந்து, அடுத்த மெசேஜ் வந்தது. “நிர்மலா தேவியைக் காவல் துறை கைது செய்தபோது, அவரிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. அது சாதாரண போன்தான். அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. 27 போன் நெம்பர்கள் மட்டுமே அந்தப் போனில் பதிவு செய்யப்பட்டிருந்ததாம். இன்பாக்ஸில், கஸ்டமர் கேர் மெசேஜ்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அவுட் கோயிங் மெசேஜ்களும் எதுவும் இல்லை. அந்தப் போனை அலசி ஆராய்ந்த பிறகுதான், திடீரென அந்தப் போனிலிருந்து இன்னொரு நெம்பருக்கு டயல் செய்து பார்த்திருக்கிறார்கள். அது நிர்மலா தேவி வழக்கமாகப் பயன்படுத்தும் எண் இல்லை. அதாவது மாணவிகளிடம் பேசிய செல்போன் நெம்பர் அது இல்லை.

ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்தை தாண்டியது!

நக்கீரன் :ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் 24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் பவுன் 23 ஆயிரத்து 824 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு 112 ரூபாய் உயந்து 23 ஆயிரத்து 936 ஆனது. இன்று பவுனுக்கு மேலும் 88 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு பவுன் 24 ஆயிரத்து 24 ஆக விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் தங்கம் மீதான அதிக முதலீடுதான் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலருகு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுக்கிறது.

Child Abuse ஜெயின் துறவியாக வைர வியாபாரியின் 12-வயது மகன்

இந்த சிறுவனுக்கு வாழ்க்கையை பற்றி என்ன தெரியும் ? ஏதோவொரு கார்னிவல் அல்லது பிறந்தநாள் விழா போன்று இதையும் எண்ணிக்கொண்டு இருக்கிறார், அதுவும் அல்லாது வீட்டில் அல்லது வழிபாட்டு தலங்களில் உள்ள மதவாதிகள் இது போன்ற சிறுவர்களை மூளை சலவை செய்து தங்கள் மத சாயங்களை அப்பாவி சிறுவர்களின் மனங்களில் விதைத்து விடுகின்றனர் . இது ஒரு Child Abuse தான் .
ஜெயின் துறவியாக மாறிய வைர வியாபாரியின் 12-வயது மகன்மாலைமலர் :குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 12-வயது மகன் உலக வாழ்வை துறந்து ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #BhavyaShah அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திபேஷ் ஷா வைர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், திபேஷின் 12-வயது மகன் பவ்யா ஷா தனது உலக வாழ்விலிருந்து வெளியேறி துறவு மேற்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற விழாவில் பவ்யாவிற்கு 450 ஜெயின் துறவிகள் முன்னிலையில் தீட்சை வழங்கப்பட்டது. இவ்விழாவில் 7 ஆயிரம் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய பவ்யா ஷா, 'துறவியாக மாறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தான் சரியான பாதை என என் பெற்றோர் கூறியுள்ளனர். விரைவில் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பாதையை பின்பற்றுவர்' என கூறினான்.

ஸ்டாலின் : இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்

இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்மாலைமலர் :தமிழகத்தில் இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, லோக் ஆயுக்தா தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்த உத்தரவு, நிர்மலா தேவி விவகாரம் மற்றும் எச்.ராஜா சர்ச்சை கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஸ்டாலின் கூறியதாவது:-
தாங்கள் செய்து வரும் ஊழல்கள் வெளியில் வந்துவிடும் என பயந்து லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வராமல் உள்ளனர். சட்டமன்றத்தில் இதனை பலமுறை நான் எழுப்பியபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதை கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இப்போதாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்து, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவேண்டும்.

தமிழக ஆளுநர் மாற்றப்படுகிறார் ..நிர்மலாதேவி விசாரணை .. சந்தானம் குழுவில் 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்படுகிறார் . இரண்டு மாதங்களுக்குள் மாற்றப்படுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மத்திய புலனாய்வு அதிகாரிகள் இது பற்றி அறிந்தே இருந்தனர் என்று தெரிய வருகிறது .. இதனால் மோடி அரசின் மானம் அடியோடு கப்பல் ஏறிவிடும் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது
மாலைமலர் :மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர். நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.

பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு உருக்கம்

மாலைமலர் :அரியானா மாநிலத்தின் குருசேத்ரா பல்கலைக்கழக விழாவில்
பங்க்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், பெண்களை மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பாரம்பரியத்தை பின்பற்றுங்கள், பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு அறிவுரை சண்டிகர்: அரியானா மாநிலத்தின் குருசேத்ரா நகரில் உள்ள குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியர்கள் தங்களது நாட்டை பாரத மாதா என அழைத்து வருகின்றனர். விகடனில் வெளிவந்த கவர்னரின் நிகழ்வில் புகைப்படத்தில் சிறுமியின் மீது கவர்னரின் கை இருக்கும் இடம் ..(சிறுமியின் முகம் அவரின் பிரைவசி கருதி மறைத்துள்ளேன்)

நீதிபதி லோயா மரணம் / கொலை சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு..

BBC :நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு
உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நான்கு நீதிமன்ற அலுவலர்களின் வாக்குமூலங்களை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது தான் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் நீதிபதிகளையே சதிகாரர்கள் போல சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கண்டித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை ஏற்கனவே வி வி ஐ பிக்களுக்கு .... மதுரை காமராஜ் பல்கலை கழக பேராசிரியர் விசாரணையில் ..

tamiloneindia :சென்னை: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி ஏற்கனவே பல மாணவிகளை விவிஐபிகளுக்கு விருந்தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் முதல் விவிஐபிக்கள் வரை பலரது பெயர்களை பேராசிரியை தெரிவித்திருப்பதாக கூறப்படுவதால், இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி, இவர், அக்கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதிக மதிப்பெண் மற்றும் பணம் பெற்று தருவதாகவும், அரசு வேலைக்கு உத்தரவாதம் தருவதாகவும் கூறி பல்கலைக்கழக விவிஐபிக்கள், உயரதிகாரிகளுக்காக, சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அவர் பேசிய மாணவிகள், பெற்றோர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை!..தெலங்கானாவில் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்

ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை! minnamalam :தெலங்கானாவில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் பட்டுப்போகும் தருவாயில் இருப்பதால், தற்போது அந்த மரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் ஒன்று சுமார் 700 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் புயல் எனத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது.
இவ்வளவு பழைமையான ஆலமரம் மூன்று ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. தற்போது இந்த ஆலமரத்தில் உள்ள ஒரு கிளையில் பூச்சுத்தொற்று காணப்படுகிறது. இந்த பூச்சுத்தொற்று மற்ற கிளை பகுதிகளுக்குப் பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயத்தில் இருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அம்மரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வருகைதந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலமரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பஞ்சாப் காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்

  காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்dinamalar :பாடியாலா: காலிஸ்தான் விடுதலை படை  அமைப்பின் தலைவன் மாரடைப்பு காரணமாக சிறையில் இறந்தார். பஞ்சாபில்காலிஸ்தான் விடுதலை படை அமைப்பை நிறுவியவர் ஹர்மீந்தர்சிங் மின்டோ.
பல்வேறு போராட்ட  செயல்களில் ஈடுபட்ட இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திறங்கியவரை டில்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் பஞ்சாபின் நாபாஹ் சிறையில் அடைத்தனர். தற்போது பஞ்சாப் பாடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிறை டாக்டர்கள் பரிசோதனை செய்து. பின்னர் மேல்சிகிச்சைக்காக ரஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பஞ்சாப் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை


A 15-year-old girl was brutally murdered after raping . Siva - Oneindia Tamil குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிபூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு மாயமானார். தாயில்லாத அந்த சிறுமி வறுமையின் காரணமாக 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். 15-year-old girl raped and killed in Punjab 
 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து அவரை அவர் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புதன்கிழமை காலை பயன்படுத்தப்படாத பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறுமி பிணமாக கிடந்ததை சில சிறுவர்கள் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் .. காரைக்குடியில்..

காரைக்குடியில் எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்தினத்தந்தி  :தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் காரைக்குடியில் உள்ள எச்.ராஜாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் காரைக்குடியில் ஊர்வலமாக சென்று எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

அமெரிக்காவின் சிஐஏ தலைவர் வட கொரியாவுக்கு ரகசிய பயணம்... வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை..

bbc :அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின்
இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி அளவில் நடைபெற்றதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவோடு உயர் நிலை பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றி அதிபர் டிரம்ப் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்க்காத இந்த ரகசிய கூட்டம் 2000ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தையாக அமையும்.
"உயர் மட்ட அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினோம்" என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்ற ஃபுளோரிடாவில் இருந்து டிரம்ப் அறிவித்தார்.

புதன், 18 ஏப்ரல், 2018

ஜெயலலிதாவின் மகளுக்கு மறுக்கப்பட்ட நீதி ! அம்ருதா .மரபணு சோதனை தேவை இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

மரபணு சோதனை தேவையில்லை: தமிழக அரசு!மின்னம்பலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை எனத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தங்களுடைய குல வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் பெங்களூரூவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் ஜெயலலிதாவின் மகள் என நிரூபிக்க டி.என்.ஏ சோதனைக்குத் தான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
விசாரணை நடந்துவரும் நிலையில் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு இது வரை எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது. ,