மின்னம்பலம் : இந்திய
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வேலை
இழந்தோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டியுள்ளதாக புதிய ஆய்வொன்று
கண்டறிந்துள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2011-12 முதல் 2017-18 வரை நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி கே. பரிதா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த 6 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளது என தெரிவித்திருக்கிறது.
மொத்த வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும், வேலையில்லாத இளைஞர்களின் இருப்பு மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் ஒப்பந்தமயமாக்கல் அதிகரிக்கும் போக்கையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 90 லட்சமாக குறைந்துள்ளது, 2011-12 முதல் 2017-18 வரை ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளன என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.