சனி, 3 டிசம்பர், 2011

ஸ்டாலின் விவகாரம் பேக்-ஃபயர் புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா

நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தபின், ஸ்டாலினுக்கு இப்படியொரு எழுச்சியை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது. அப்படிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார் ஒன்றில் ஸ்டாலின்மீது வழக்கு பதிவு செய்து, தி.மு.க.-வின் அடுத்த தலைவராகும் அளவுக்கு செல்வாக்கை எகிற வைத்திருக்கிறார் முதல்வர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று கைது செய்யுமாறு சவால் விட்டுத் திரும்பும்போது..
முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தொடுத்தவர்களே எதிர்பாராத ஒரு ட்டுவிஸ்டைச் சந்தித்தது.

நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?

நவம்பர் 9-ம் தேதி உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வாரில், ஆசிரமம் ஒன்றில் நடந்த யாக பூஜையில் கலந்து கொள்ளச் சென்ற பக்தர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி..!
  • 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தானின் சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலி..!
  •  ஆகஸ்டு 2008-ல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள நைனா தேவி கோயில் ஏற்பட்ட நெரிசலில் 160க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலி..!
  • ஜனவரி 2005-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் நடந்த வோய்த் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 350 பக்தர்கள் பலி…!
  • கடந்த ஜனவரியில் சபரிமலையில் ஏற்பட்ட நெரிசலில் 104 பேர் பலி..!

பெரியாறு அணை நீர்மட்டம்: கேரள முதல்வர்-அட்வகேட் ஜெனரல் இடையே கருத்து வேறுபாடு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து இருப்பதால், நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூற, "நீர்மட்டத்தை உயர்த்துவதால், பாதிப்பில்லை,' என, கேரள ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்தது, அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

தமிழக தென்மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை, பலவீனமாக இருப்பதாக கூறி, மாற்று இடத்தில் அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. அதற்கு ஆதரவாக, அம்மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலோடு, பிரசாரம் செய்து வருகின்றன. இந்த பிரச்னையில் கேரளாவின் பல்வேறு அமைப்புகள், அங்குள்ள ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்சு, விளக்கம் கேட்டு கேரளா அரசுக்கு உத்தரவிட்டது. கேரளா அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்தார். அதில், "முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும், அணையின் பாதுகாப்பிற்கும் சம்மந்தம் இல்லை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு – வினாக்களும் விடைகளும்


Disclaimer: அமெரிக்க முதலாளிகளின் அடிவருடி, MNC நாய், முதலாளித்துவ பூர்ஷ்வா சமூகப் பிரதிநிதி என ஆசையோடும் அன்போடும் திட்டும் இடதுசாரி நண்பர்கள், ப்ளட் பிரஷர் எகிறாமல் எஸ்’ஸாகவும்.என்ன நடந்தது?
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை ஊக்குவிக்கும்பொருட்டு, இது நாள்வரை இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. நேரடி அந்நிய முதலீடு, பல்பொருள் வணிகத்தில் (Multi-brand retail) 51% வரையும், ஒரு பொருள் வணிகத்தில் (Single brand retail) 100% வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மக்கள் தொகை 10 லட்சத்துக்குமேல் இருக்கும் 53 நகரங்களில் இப்போதைக்கு இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சரியாக நிர்வகிக்கப்படும் பட்சத்தில், பிற சிறிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்த 53 நகரங்களில் 28 நகரங்கள் அந்நிய முதலீட்டை உள்ளே விட மறுக்கும் 11 மாநிலங்களில் இருக்கின்றன. ஆக 53 – 28 = 25 நகரங்களில் நேரடியாக வால்மார்ட்டோ, கேர்ஃபோரோ வரச் சாத்தியங்கள் உள்ளன.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்: குஷ்பு


நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். கலைஞர் ஆட்சியின் அருமை, பெருமையை தமிழ்நாட்டு மக்கள் இன்று உணருகிறார்கள். இன்னைக்கு தமிழ்நாட்டு மக்கள் கலைஞர் ஆட்சியில எவ்வளவு மரியாதையா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம் என இன்னைக்கு உணருகிறார்கள். தப்பை உணர்ந்துகிட்டதா சொல்லிக்கிட்டு இருக்காங்க. உண்மையிலேயே தலைவர் அருமை, பெருமையை உணர்ந்துகிட்டீங்க. அதுக்காக அதிமுகவுக்கு நாம நன்றி சொல்லியாகனும். ஒரு ஒரே நம்மையை அவங்க ஆட்சியில செய்திருக்காங்க. தலைவர் அருமை, பெருமையை மக்களுக்கு அவுங்களே சொல்லிக்கொடுத்திட்டாங்க.

என்மீது குற்றம் இல்லை... இதை நிரூபிப்பேன்!- கனிமொழி

என்மீது எந்த குற்றமும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிப்பேன் என்றார் கனிமொழி எம்பி.
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆன அவர், சென்னைக்கு கிளம்பும் முன் முதல் முறையாக டெல்லி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்புவதால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே, இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம்.
ஜாமீன் கிடைத்துள்ளது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முதல் முன்னேற்றம். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னோடு பலரும் ஜாமீன் பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன். இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளியே வருவேன்," என்றார்.

சென்னை திரும்பினார் கனிமொழி... விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு

சென்னை: 7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார்.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர்.
29-ம் இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார்.
இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினார். காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
கருணாநிதி
பிற்பகல் 12 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்தும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனி மொழியை வரவேற்க விமான நிலையம் சென்றனர்.
கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன. 'மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு?' என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

திங்கள், 28 நவம்பர், 2011

Kingfisher வருமான வரியா.. அப்படீன்னா?: இது தான் மல்லையாவின் கிங்பிஷர்!


Vijay Mallya
மும்பை: கிங்பிஷர் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 422 கோடி வருமான வரியைக் கூட கடந்த சில ஆண்டுகளாக அந்த நிறுவனம் வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் இருந்துள்ளது. மேலும் பிராவிடண்ட் பண்ட் (வருங்கால வைப்பு நிதி) அமைப்புக்கு செலுத்த வேண்டிய ரூ. 15 கோடியையும் செலுத்தவில்லை.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் பெரும் நிதிச் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. இதற்கு விமானத்துறையின் விதிகளையும், எரிபொருள் விலை உயர்வையும் காரணம் சொல்லி வருகிறார் மல்லையா. ஆனால், கிங்பிஷர் அளவுக்கே கட்டணம் வசூலிக்கும் பிற விமான நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நஷ்டத்தை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்

Danush
எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.
இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை.இதுதான் இங்கு ஹைலைட்.

தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது

சென்னை: டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபரை சென்னையில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரும், அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட இன்னொரு நபரும் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட நபர்கள், டிசம்பர் 6ம் தேதி பெங்களூரில் பெரும் நாசவேலைக்குத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபி உளவுப் பிரிவினர் ஒரு தீவிரவாத இயக்கத்தின் செல்போன் பேச்சுக்களைக் கண்காணித்து வந்தபோது, சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் விஜயராமன் நகரில் சில கல்லூரி மாணவர்கள் அந்தத் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் நிர்வாகிகளுடன் பேசியதும், அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் விஜயராமன் நகரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

சுக்ராமின் தண்டனை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய டெல்லி ஹைகோர்ட்

டெல்லி: முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் சுக்ராமின் தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீனும் வழங்கியுள்ளது.
1996ம் ஆண்டில் தனியார் கேபிள் நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத்துறையில் ஒப்பந்தம் அளித்த வழக்கில் சுக்ராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந் நிலையில் தனது வயதைக் கருத்தில் கொண்டு (86 வயது) கருணை காட்டுமாறு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்தார். இதை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. அவருக்கு 5 வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கி உத்தரவிட்டது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இவர்கள் தவிர குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம ஜாமீன் கோரி ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நந்தன் நிலகேனி நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ப.சிதம்பரம் புகார்



P Chidambaram and Nandan Nilekani
டெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்ட தலைவர் நந்தன் நிலகேனி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிரமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆதார் அட்டை வழங்கும் திட்ட தலைவர் நந்தன் நிலகேனி மீது புகார் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 11ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ப. சிதம்பரம் எழுதியிருப்பதாவது,
ஆதார் அட்டை திட்டத்தின் தலைவராக உள்ள நந்தன் நிலகேனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பணிகளில் தலையிடுகிறார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் அவராகவே பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கத் துவங்கியுள்ளார். இந்த திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பொறுப்பில் இருந்து தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.
பயோமெட்ரிக் தகவல்களை யார் சேகரிப்பது என்பது குறித்து அமைச்சகத்தில் முடிய செய்யக் கோரி ப. சிதம்பரம் இந்த விவகாரத்தை பிரதமர் மற்றும் திட்டக்குழு தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பெரியாறு அணைக்கு பாதிப்பில்லை' : மத்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அணைப் பகுதியின் அருகே வசிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என, அணையை பார்வையிட்ட மத்திய நிலநடுக்க முதன்மை ஆராய்ச்சியாளர் ஜான் மத்தேயு தெரிவித்தார்.
கேரளாவில், அண்மையில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் பெரியாறு அணை பாதிக்கப்பட்டுள்ளதாக, கேரள அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இது, பெரியாறு அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் அணையின் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த, மத்திய நிலநடுக்க முதன்மை ஆராய்ச்சியாளர் ஜான் மத்தேயு நேற்று மாலை அணைப் பகுதிக்கு வந்தார். இவருடன், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் டோமி ஜார்ஜ், தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் ராஜேஷ் உடன் சென்றனர்.

நூற்றாண்டு காணும் சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி!


மனோஜ்கிருஷ்ணா
புரட்சி என்ற வார்த்தையை பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெறுமனே வாய் வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தியதையும் பயன்படுத்தி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த வார்த்தைக்குரிய உண்மையான பொருளுணர்ந்து அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் "தென்னிந்திய சினிமா ராணி' எனப் போற்றப்பட்ட மறைந்த டி.பி.ராஜலட்சுமிதான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.11-11-1911 அன்று பிறந்து நாடகம், சினிமா, இலக்கியம் உள்ளிட்ட கலையுலகின் அனைத்துப் பிரிவுகளிலும் கொடிகட்டிப் பறந்த டி.பி.ராஜலட்சுமிக்கு இது நூற்றாண்டு விழா. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். சில துறைகளில் ஆண்களையும் விஞ்சி சாதனை படைக்கிறார்கள் என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மையான கணக்கெடுப்பின்படி பார்த்தால் பெண் சுதந்திரம் என்பது இந்த 21-ம் நூற்றாண்டிலும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை.

DMK: இவ்வளவு பி.ஏ.,க்கள்., எம்.ஏ.,க்கள் பட்டதாரிகள் இருப்பார்களா? இருக்க முடியாது

சென்னை:"தீமையும், நன்மையும் நாமாகவே தேடிக் கொள்வதாகும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், அச்சுத கவுண்டரின் மகன் வாசுதேவன், சென்னை ரஞ்சன் நாயக்கர் மகள் காஞ்சனமாலாவிற்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
ஒருவருடைய வாழ்க்கை என்பது, அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்துக் கொண்டு, தங்கள் நலன்களை காத்துக் கொண்டு, பிறர் நலம் பேணி வாழ்கின்ற வாழ்க்கையை யார் தேர்ந்தெடுத்து கொடுத்தார்களோ, அவர்களுக்கு எந்த நேரத்திலும், எந்தத் தீமையும் வராது.

தீமையும், நன்மையும் நாமாக தேடிக் கொள்வதே தவிர, மற்றவர்களிடமிருந்து வரக்கூடியவைகள் அல்ல என்று அன்றைக்கே பாடி வைத்திருக்கின்றனர்.தமிழினம் இன்றைக்கு சில பேரது நுழைவால், சிலரது சூழ்ச்சியால், சிலரது தாக்கத்தால் அவற்றை மறந்து, பலரது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை காண்கிறோம்.

Punjab வேலைக்கு வந்தால் மொபைல் போன், சைக்கிள் இலவசம்:தொழிலாளர்களை கூவி அழைக்கின்றன நிறுவனங்கள்

லூதியானா:போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்காததால், பஞ்சாபில் உள்ள பிரபலமான சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்களை கவர்வதற்காக மொபைல் போன், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாகத் தரும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிரபலமான சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள நிறுவனங்களில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழிலாளர்களாக உள்ளனர். இது தவிர, பீகாரிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர், பிழைப்பு தேடி, லூதியானாவுக்கு வருவதும் உண்டு. இவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.ஆனால், சமீபகாலமாக, பீகாரில் இருந்து, பஞ்சாபுக்கு தொழிலாளர்கள் வருவது கணிசமாகக் குறைந்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மாநிலத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால், பீகாரிலேயே அதிக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

லண்டன் ரங்கநாதன் தெருவில் இருந்து…


சென்னை ரங்கநாதன் தெரு வெறிச்சோடி கிடக்கும் இந்த நேரத்தில், லண்டனுக்கு அருகிலுள்ள ரங்கநாதன் தெருவை ஒருமுறை சற்றி வரலாம், வாருங்கள்!
லண்டனிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு சிறிய நகரம், நியூகாஸில். முழுப்பெயர் Newcastle Upon Tyne & Wear.  ஊரைச் சுற்றி ஆறு; ஆற்றின் மேல் அமைந்திருக்கும் நகரம் என்று பொருள். வருடத்தில் முக்கால் வாசி நேரம் குளு குளுதான். சூரியன் வருவதும் தெரியாதும், விலகுவதும் தெரியாது.
நகரத்தின் மையப்பகுதியை சிட்டி செண்டர் என்று அழைக்கிறார்கள். இங்குதான் நியூகாஸிலின் ரங்கநாதன் தெரு, Northumberland Street உள்ளது. குட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை ஒரு சேர இங்கே அணிவகுத்து நிற்கின்றன. பேருந்து மற்றும் ரயில் மூலமாக இந்தத் தெருவை அடையலாம். பேருந்தில் வருபவர்கள் Pilgrim Street என்று கேட்டு இறங்க வேண்டும். ரயிலென்றால் Monument என்ற நிலையத்தில் இறங்கவேண்டும்.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு இல்லை. திடீரென்று சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டும் வழக்கம் இல்லை. மின்சார வெட்டில்லை. குளிரும் இளம் தூறலும் சர்வ சாதாரணம் என்றாலும் சாலைகளில் குட்டைகளோ குளங்களோ இல்லை. எறும்புக் கூட்டம் போல் மக்கள் வரிசை வரிசையாக குவிந்துகொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.
அனைத்து வயதினருக்கும், அனைத்து விருப்பங்களுக்கும் தீனிபோடும் இடம் இது. சாப்பாட்டுப் பிரியர்களுக்கு மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், க்ரெக்ஸ் போன்ற ஜாம்பவான்களும், சுவையான சிற்றுண்டிகளும் கிடைக்கும். ஜவுளிக்கு ப்ரைமார்க், மார்க் & ஸ்பென்சர், பீகாக். வீட்டு உபயோகப் பொருள்களுக்கு க்லாஸ்ஹோல்ஸன், W.H ஸ்மித், பிசி கர்ரி வோல்ட், அர்கோஸ், ஃபென்விக், பூட்ஸ் மருந்தகம் என்று பல கடைகள். எல்டன் ஸ்கொயர் என்னும் மிகப்பிரிய வணிக வளாகம் இந்தத் தெருவுக்கு மிக அருகில் இருக்கிறது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இலங்கை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

கொழும்பு, நவ.27: இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிபர் மஹிந்த ராஜபட்சவினால் இன்று அதிகாரப்பூர்வமாக றந்துவைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார்.மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக சாலையானது கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை 152 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்தியே பயணிக்க முடியும். இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு மூன்று சக்கர வண்டி-மோட்டார் சைக்கிள்- உழவு இயந்திரம்- சைக்கிள்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளும் இந்த சாலையில் செல்ல முடியாது.நாட்டில் முதல் தடவையாகவே இவ்வாறான அதிவேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணி்க்கு 120 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும்.இந்த சாலையில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மட்டுமே நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களிலிருந்து பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளன.இந்த சாலைகளில் பொது மக்கள் நுழையாத வகையில் சாலையின் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் சாலை தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.

போயஸ் கார்டன் ‘கலை’ தெரியாத ஆளா, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி?


முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே தலைக்குமேல் சட்டப் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் செய்யும் சில காரியங்கள் குறித்து மிக ஜாக்கிரதையாக இருக்கிறார் அவர் என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள். குறிப்பிட்ட சிலர் கார்டனில் எவ்வளவுதான் செல்வாக்காக நடமாடினாலும், சட்ட ரீதியாக பிரச்சினைகள் வரும்போது, அவர்களைக் காப்பாற்ற முதல்வர் தயாராக இல்லை என்கிறார்கள் அவர்கள்.
இந்த அணுகுமுறை கடந்த சில நாட்களாக கடுமையாக அமல் செய்யப்பட்டதில் மகா சிக்கலில் உள்ளார் ‘தோட்டக்கலை’ கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவருகிறது.

இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு


Vijayakanth
சென்னை: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்துவிட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா காப்பி மன்னர்களின் கையில்


பழங்குடி பெண்களை கற்பழித்த போலீசார் மீண்டும் ஒரு வாச்சாத்தி


3 மாத கர்ப்பிணி என்று கூறி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். என் வாயை பொத்தி என்னை பலாத்காரம் செய்தார். இதேபோல் மற்ற மூன்று பேரையும் பலாத்காரம் செய்தனர். ஒரு பெண்ணை 3 பேர் மாறிமாறி பலாத்காரம் செய்தனர்.
 VILLUPURAM: Four cops allegedly raped four girls in a grove near Thirukovilur in Villupuram district on November 22. Victims Rani (18), Maheshwari (20), Ratimeena (17) and Vinodini (20) of a single family belonging to the Irula community lodged a complaint with Superintendent of Police, N Bhaskaran on Saturday.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தி.மண்டபம் பெருமாள் கோவில் மண்டபப்படியைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி பெருமாளை சந்தித்து நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 3 போலீசார் கடந்த 22ம் தேதி வந்தனர். என் கணவர் காசியை அழைத்து சென்றனர். வீட்டில் இருந்து என்னையும், அண்ணி நாத்தனார்கள் கணவரின் தம்பிகள் படையப்பா(12), மாணிக்கம்(10), ரெங்கநாதன் (8), சின்ன மாமனார் குமார் (45) ஆகிய 9 பேரையும் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 4 போலீசார் எங்களோடு வந்தனர். எங்களை ஊரை கடந்து உள்ள தைலமரம் தோப்பிற்கு அழைத்து சென்றனர். அப்போது என்னையும், மற்ற மூன்று பெண்களையும் வேனில் இருந்து கீழே இறக்கினர். ஆளுக்கு ஒருவர் என எங்களை 4 போலீ சாரும் தனித்தனியே மறைவான இடத்திற்கு இழுத்து சென்றனர்.

ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது


சேலம்: ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கைதான தமிழ்மணி கோகுல்நாதாமகாஜன பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
ஆங்கில ஆசிரியையை கொலை செய்யுமாறும், ஆசிரியை மாடியில் நிற்கும்போது கீழே தள்ளிவிட்டு கொலை செய்யுமாறு யோசனை கொடுத்ததாகவும், கொலை செய்யாவிடில் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவதாக தமிழ்மணி மிரட்டல் விடுத்தாகவும், +1 மாணவன் அப்துல் ஜாபர் போலீசில் புகார் அளித்துள்ளான்.மாணவன் அப்துல் ஜாபர் புகாரின் பேரில் தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள் இறக்க அனுமதிக்காவிட்டால் போராட்டம்:


தமிழ்நாடு பனை மற்றும் தென்னை மர தொழிலாளர்கள் நலச்சங்கம்

பனை மரம் ஏறவும் கள் இறக்கவும் அனுமதி வழங்காவிட்டால் 15 லட்சம் தொழிலாளர் குடும்பங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு பனை மற்றும் தென்னை மர தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் எம்.என்.ராஜா கூறினார்.
சென்னை அடையாறு சங்க அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில்
கள் இறக்குவதை தடுப்பதைவிட கள்ளில் கலப்படம் இருப்பதை தடுக்கலாம். பனை மரத்தில் வேர் முதல் நுனிவரை மருத்துவ குணம் உள்ளது.
பனை  பொருள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனி மையம் அமைக்க வேண்டும். பனை தொழில் விவசாய தொழில் போன் றது. இதை மக்களும் அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கள் வேண்டுமா, வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டு கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, தொழிற்கடன், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எனவே, மரம் ஏறவும் கள் இறக்கவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் 15 லட்சம் பனை தொழிலாளர் குடும்பங்களை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கசப்பான உண்மை

முன்பு சென்ட்ரல் மார்க்கெட் முழுவதையும் தி.மு.க. புள்ளிகள், கவுன்சிலர்களின் பினாமிகள் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். கடையை உள்வாடகைக்குவிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, இப்போது அதே வேலையை அ.தி.மு.க-வினர் செய்கிறார்கள். கிராமத்துப் பெரியவர்களுக்கு ஓ.ஏ.பி. வாங்கிக்கொடுப்பது போன்ற வேலைகளுக்குக்கூட தி.மு.க. கரை வேட்டிகள் சிபாரிசுக்காக கலெக்டர் ஆபீஸ் பக்கம் வர, அ.தி.மு.க. கரை வேட்டிகள் கமிஷன் பெரிய தொகை என்றால் மட்டுமே ஆஜர் கொடுக்கிறார்கள்!
நடுரோட்டில் கொலைகள்!
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரையில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கசப்பான உண்மை. 'தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்றவை மதுரையில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக வெளியுலகத் துக்குக் காட்டியது. ஆறடி உயர காம்பவுண்ட் சுவர், உள்ளே அல்சேஷன் நாய், அதற்குள் கேட் போட்ட வீடு என்று கருவறைக்குள் இருக்கும் கடவுள் போல வாழும் மேல்தட்டு மக்கள் டி.வி. சேனலைப் பார்த்துவிட்டு அடித்த 'கமென்ட்’தான் அது. ஆனால், அன்றைய தினம் மதுரை வீதிகளில் எந்தப் பதற்றமும் இல்லை. தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டபோது, அது கருணாநிதியின் குடும்பச் சண்டை என்றும், தா.கிருட்டிணன் கொல்லப்பட்ட போது, அது தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை என்றும் பேசிக்கொண்டார்களே ஒழியே, மதுரையில் யாரும் பதற்றப்படவில்லை.
ஆனால், இந்த ஆட்சியில் 6 மாதங்களுக்குள் 15-க்கும் அதிகமானோர் பட்டப்பகலில், நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். போக்குவரத்துப் பாதிப்பு, பதறி ஓடும் பெண்கள், கடை அடைப்பு, ஒரு வாரத்துக்கு அந்த வழியாகப் பள்ளி செல்லத் தயங்கும் குழந்தைகள் என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப் பது இந்த ஆட்சியில்தான்!'' என்கிறார் ஒரு பொது நல ஆர்வலர்.

சிம்புவுக்கு ரெண்டு முகம். கேரவனுக்குள்ள இருக்கும்போது ஒருவிதமா பேசுவார்.

ஏ.ஜே.முருகனை நினைவிருக்கிறதா? சிம்புவை ‘மன்மதன்’ ஆக்கிய மன்மதன் படத்தின் டைரக்டர். ‘இல்லையே, சிம்புதானே அந்தப் படத்தோட டைரக்டர்’ என்று நம்புபவர்களும் இன்றுவரை இருக்கிறார்கள். மன்மதனுக்காக சிம்புவுக்கும் முருகனுக்குமிடையே நடந்த லடாய் குறித்து செய்திகள் பரபரப்பாக அடிபட்டபோதுகூட முரு கனின் தரப்பில் கனத்த மௌனம்தான் பதில். அதே முருகன் தற்போது மனக்குமுறலில் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அவரைச் சந்தித்தபோது அத்தனையையும் கொட்டித் தீர்த்துவிட்டார்.

”நான் எழுதுன ‘மிஸ்டர் லவ்’ங்கிற கதையை 2001-ல் சிம்புகிட்ட சொன்னேன். கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு. ‘என்னோட மூணாவது படமா இதுல நடிக்குறேன்’னு சொன்னார். ஆனால் சிம்புவின் ஆறாவது படமாதான் அது வந்தது. காரணம், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர்.

குண்டு உடம்புக்காரருக்கு பிளேனில் உட்கார இடமில்லை... 7 மணிநேரம் நின்று கொண்டே பயணம்


Fat Guy on A Plane
நியூயார்க்: உடல் குண்டாக இருந்த காரணத்தால் விமானத்தில் உட்கார முடியாமல் 7 மணிநேரம் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார் அமெரிக்க தொழிலதிபர் ஒருவர். தனக்கு இடமளிக்காமல் விமான நிறுவனம் அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் பெர்கோவிட்ஜ் 181 கிலோ உடற்எடை கொண்டவர். முன்னணி ‌தொழிலதிபரான இவர் சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு செல்ல யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்‌கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை போதுமானதாக இல்லை.

கனமழையால் நிரம்பி வழியும் தமிழக அணைகள் – ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

Vaigai dam nears danger mark; second flood warning issued தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளும், ஏரிகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து திருவனந்தபுரம் அருகே நிலை கொண்டிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் கன மழை கொட்டிவருகிறது. சென்னையில் வியாழக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், ஹோட்டல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு: சீன பொருட்களை தான் விற்பார்கள்-ராமதாஸ்


Ramadossசென்னை: இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்கள் மற்றும் சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாத மத்திய அரசு பல தரப்பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் அம்பானிகளும், ஆதித்ய பிர்லாக்களும் சில்லறை வணிகத்துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டால் நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை 'ஈசி ரீசார்ஜ்' செய்தபோது, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை.
இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று கூறி, கடந்த 2009-ம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், கடந்த மே 21-ந் தேதி, அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு மாஜிஸ்திரேட் பி.கே.பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை கோரி வழக்குத் தொடர தயாராகி வருகிறார் அனில் அம்பானி.