சனி, 16 மார்ச், 2019

தினமலர் : காங்கிரசில் குமுறல் சத்தம்? எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை?

தினமலர் : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, ஒன்பது ; தொகுதிகளில்,  வெற்றி வாய்ப்புள்ள, மயிலாடுதுறை, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, அரக்கோணம் தொகுதிகள் கிடைக்காமல் போனதால், அக்கட்சியில் போட்டியிட விரும்பியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட, 10 தொகுதிகள், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த பட்டியலில், காங்கிரசின் பாரம்பரிய தொகுதிகளான, திருநெல்வேலி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தென்காசி போன்றவை இடம் பெறவில்லை.
காங்கிரஸ் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்ட, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், அரக்கோணம், தென் சென்னை போன்ற தொகுதிகளையும், தி.மு.க., கொடுக்கவில்லை. ஈரோடு தொகுதியில், முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிட விரும்பினார். அத்தொகுதி, ம.தி.மு.க.,வுக்கு போய் விட்டது. அதேபோல், சேலம் தொகுதியில் களமிறங்க, முன்னாள் தலைவர் தங்கபாலு, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் விரும்பினர்; அத்தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. 'ஈரோடு தரவில்லை என்றால், திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குங்கள்' என, இளங்கோவன் வலியுறுத்தினார். அதுவும் கிடைக்கவில்லை.

மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்

tamil.oneindia.com  -  hemavandhana. கோவை: "நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை சீரழிச்சோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார்.
இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது" என்று கைதான திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்திருக்கிறான்.
400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்த தகவல்களாக இவை கூறப்படுகின்றன.
திருநாவுக்கரசு கூறியதாவது : "என் அப்பா வட்டிக்கு பணம் தர்ற தொழில் செய்றார். எங்களுக்கு 5 ஏக்கரில் பண்ணை இருக்கு. எனக்கு என் வீட்டில் ரொம்ப செல்லம். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவாங்க. அதனால் இஷ்டத்துக்கு பைக், கார்னு சுத்தி வந்தேன். எங்க கேங் ரொம்ப பெரிசு. அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், உள்பட 20 பேர் அதில இருக்கோம். எல்லாருமே அதிமுகக்காரங்கதான். ஒன்னா தண்ணி அடிப்போம், எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் செஞ்சோம்.
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்ட பார் நாகராஜ் கட்சியில கடுமையா உழைச்சி மேல வந்தார்.
பொள்ளாச்சி விஐபிதான் அவருக்கு பார் நடத்த பர்மிஷன் வாங்கி தந்தார். காலங்காத்தால 6 மணிக்கே நாகராஜ் பாரை திறந்திடுவார்.
போலீசும் இதை கண்டுக்காது. அவருக்கு போலீஸ் நெருக்கமானாங்க. அவர் மூலமாக எங்களுக்கும் போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அதனால தப்புக்கு மேல தப்பு செய்ய ஆரம்பிச்சோம்.
பெண் டாக்டர் இதில பெண்கள் சமாச்சாரமும் அடங்கும். முக்கியமா பேஸ்புக்கில் லேடீஸ் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்தோம். அதனாலதான் எங்களால் நிறைய பெண்களை எங்க பக்கம் சாய்ச்க முடிஞ்சது. இப்படித்தான் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டர்கிட்ட ஏமாத்தி ஒன்றரை கோடி ரூபாய் ஏமாத்தினோம்.

ராஜசேகர் ரெட்டி தம்பி கொலை- சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் புகார்


மாலைமலர் :ராஜசேகர் ரெட்டி தம்பி விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் புகார் தெரிவித்துள்ளார். திருமலை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி (வயது 68). கடப்பா மாவட்டம் புலி வெந்துலாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
1989 மற்றும் 94-ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணி புரிந்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான வி‌ஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார்.
2 முறை கடப்பா எம்.பி.யாவும் பணிபுரிந்த விவேகானந்தரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சி பணிகளை அவரது அண்ணன் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார்.

இளங்கோவன், குஷ்பு போட்டியிட மனு.. கன்னியாகுமரி-திருவள்ளூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி

மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி-திருவள்ளூர்
தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளங்கோவன், நடிகை குஷ்பு போட்டியிட மனு கொடுத்துள்ளனர். சென்னை:
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.
இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.

செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் பொள்ளாச்சி விவகாரம் போலவே இதுவும்?

பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்மாலைமலர் : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம்: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார் இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மதுரை ராகிங் விஷம் குடித்த இரு மாணவரகள் உயிரிழப்பு

minnambalam : ராகிங்: விஷம் குடித்த 2 மாணவர்கள் பலி!ராகிங் பிரச்சினையினால் விஷம் குடித்த மதுரை தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
மதுரை தெப்பக்குளம் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தனர் முத்துப்பாண்டி, பரத் என்ற இரண்டு மாணவர்கள். கடந்த சில நாட்களாக, இவர்களைச் சில மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முத்துப்பாண்டியும் பரத்தும் மனமுடைந்தனர். கடந்த 2ஆம் தேதியன்று, இவர்கள் இருவரும் விஷம் குடித்தனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர், பரத் சிகிச்சை பலனின்றி பலியானார்.

BBC : மலையகத்தில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கர சத்தத்துடன் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் இருப்பதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
எனினும், இந்த நில அதிர்வு குறித்து எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.<>நில அதிர்வு ஏற்படும்போது, பாறைகள் உரசப்படுவதால் சத்தம் எழுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிக்கின்றார்.

வேல்முருகன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு .. தமிழக வாழ்வுரிமை கட்சி

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு
மாலைமலர் : பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று இரவு அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்<

BBC: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்


கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வினை அசாதாரணமான ஒன்றாக மக்கள் பார்க்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், தங்கள் குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல என்கிறார் கர்நாடக அரசு அதிகாரியான அஷோக் பரகுன்டி.
"இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன" என்று பிபிசி இந்தியிடம் பேசிய அஷோக் தெரிவித்தார்.
திருமணத்தில் என்ன நடந்தது?
மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா சிலைக்கு அருகில் இருந்த திருமண மேடையில், இரண்டு மணமகன்கள் மற்றும் மனமகள்கள் அமர்ந்திருந்தனர்.

திமுக தென்மண்டலங்களில் போட்டி இடுவதை தவிர்த்தா? அழகிரி Factor ?

வெப்துனியா :திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலை கூர்ந்து கவனித்தால் தென்மண்டல பகுதிகளை திமுக பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது தெரியவரும்.
குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டலத்தில் தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.
தென்மண்டலத்தில் உள்ள தூத்துகுடி தொகுதியில் கனிமொழி போட்டியிட போவதால் வெற்றி நிச்சயம் என்பதாலும், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை வாங்க எந்த கூட்டணி கட்சியும் முன்வரவில்லை என்பதாலும் திமுகவே அந்த தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அழகிரியின் மேல் உள்ள பயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்னும் மு.க.அழகிரிக்கு செல்வாக்கு உள்ளது. தேர்தல் நேரத்தில் திடீரென அழகிரி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முற்பட்டால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திமுக, மதுரை மண்டலத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது

நெடுநல்வாடை: நமக்கான சினிமாவை நாமே எடுக்கலாம்!


நெடுநல்வாடை: நமக்கான சினிமாவை நாமே எடுக்கலாம்!
மதரா- மின்னம்பலம் : செல்வக்கண்ணன் இயக்கத்தில் பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் நெடுநல்வாடை. பூ ராம் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் எல்விஸ் அலெக்ஸாண்டர், அஞ்சலி நாயர் இணைந்து நடித்துள்ளனர்
தன் விருப்பப்படி மணம் முடித்துச் சென்ற மகளையும் அவளது இரு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பு வயதான விவசாயி செல்லையாவுக்கு வந்து சேர்கிறது. இதற்கு தன் மகன் கொம்பையா (மைம் கோபி) எதிர்ப்பு தெரிவிக்க அதையும் மீறி அவர்களை வளர்த்தெடுக்கிறார். குழந்தைகளை படிக்கவைத்து ஆளாக்குகிறார். பேரன் இளங்கோ (அலெக்ஸாண்டர்) படித்து நல்ல வேலைக்கு சென்று தனக்குப் பின் அவனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கனவாகவும், ஒரே விருப்பமாகவும் இருக்கிறது.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்;உயர் நீதிமன்றம்

tamilthehindu : பாலியல் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடை யாளங்களை வெளியிட்ட கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடை யாளங்கள் இல்லாமல் புதிய அரசாணை வெளியிடவும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த இளமுகில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
பாலியல் உட்பட பல்வேறு குற்ற வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் பொதுவெளியில் அதிகம் பரப்பப் படுகின்றன. பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப் பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் :19000 கோடி...பாஜக சென்ற தேர்தலில் செலவு... கிருஷ்ணா கோதாவரி இயற்கை வாயு மோசடி.. வீடியோ


பீட்டர் அல்போன்ஸ் : தென்னிந்தியாவில் உள்ள துறைமுகங்கள் விமான நிலையங்கள் எதுவும் தென்னிந்தியர்கள் கையில் இல்லை. தென்னிந்தியாவின் ரெயில்வே காண்டீன்கள் காண்ட்ராக்டுகள் எதுவும் தென்னியர்களுக்கு இல்லை... தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஹரியானாவில் இருந்து அவர்கள் தமிழில் பரீட்சை தேறி 85 மாக்ஸ் பெற்று வேலைக்கு சேர்ந்துள்ளவர்கள். ஆனால் எவருக்கும் தமிழ் எழுத தெரியவில்லை .. முழுக்க முழுக்க எல்லாம் பறிபோய் கொண்டிருக்கிறது ..
காந்தி அடிகள் ஏன் பட்டேலை பிரதமர் ஆக்கவில்லை என்பதற்கு காந்தி சொன்னது : ஒரு குஜராத்தியரை பிரதமராக்கினால் நாட்டில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும் .. நானும் ஒரு குஜராத்தி பனியாதான் என்றார்.
இதுதான் காமராஜரும் குஜராத்தி மொரார்ஜியை பிரதமர் ஆக்கவில்லை .. அவர்கள் வியாபாரிகள் நாட்டை சூறையாடிவிடுவார்கள்
சென்ற தேர்தலுக்கு முன்பாக 2005 juin கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகையில் 20 Trillion cubic feet கனஅடி இயற்கை எரிவாயும் கண்டு பிடிக்கபட்டதாகவும் இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2 இலட்சம் கோடி என்று மோடி அறிவித்தார் .
சவூதி அரேபியாவில் கூட இவ்வளவு இருக்குமா சந்தேகம்தான் . இந்த கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவால் இந்தியாவுக்கு வருடாவருடம் பத்தாயிரம் கோடி அன்னியசெலவாணிி வரும் என்று முழக்கினார் மோடி.
இந்த இல்லாத காஸ் கிணறுக்கு தீனதயாள் என்று பேரு வேற .
இந்த இயற்கை காஸ் எடுக்கும் நிறுவனம் அரசின் Gujarath natural gas 7000 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக அறிக்கை வருகிறது

வானம் வசப்படும் .. பிரபஞ்சன் .. ஆனந்தரங்கம் பிள்ளை...

RS Prabu : 'வானம் வசப்படும்' நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம்
துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம்.
பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர்.
ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார்.

வெள்ளி, 15 மார்ச், 2019

ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்?! சிக்கலில் போயிங்

விபத்து
போயிங்ம.காசி விஸ்வநாதன் vikatan : இதுவரைக்கும் நடந்த இரண்டு கோர விமான விபத்துக்களுக்குக் காரணம் ஒரே ஒரு மென்பொருள்தான் என்றால் நம்புவீர்களா?<"இந்த ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்?! சிக்கலில் போயிங்"விமான தயாரிப்பை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டே நிறுவனங்களுக்குத்தான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். உலகமெங்கும் இயங்கும் விமான சேவைகளை வாங்கி வைத்திருக்கும் விமானங்கள் இந்த நிறுவனங்களுடையதுதான். காரணம் இவை தயாரிக்கும் விமானங்களில் இருக்கும் தரமும் கொடுக்கப்படும் கூடுதல் வசதிகளும்தான். ஆனால், தற்போது போயிங் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் சிக்கல் ஒன்றைச் சந்தித்துவருகிறது. உலகம் முழுவதும் 50-க்கும் மேலான நாடுகளில் போயிங் 737 MAX 8/9 ரக விமானங்களைப் பறக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்தின் புதிய ரக விமானங்களான இவை 737 MAX 8 கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இரண்டு கோரமான விபத்துகளைச் சந்தித்துள்ளன. முதல் விபத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நிகழ்ந்தது. லயன் ஏர் (Lion Air) சேவையின் விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் உயிரிழந்தனர். இப்போது இரண்டாவதாக எத்தியோப்பியா நாட்டில் மேலும் ஒரு பயங்கர விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி, தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா, தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்துவந்தார். நேற்று 40 தொகுதிகளுக்கும் தீபா பேரவை சார்பாக போட்டியிட விருப்ப மனு பெறப்படும் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!மின்னம்பலம் : பசுமை பட்டாசு உற்பத்தியை மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடையில்லை. ஆனால் சில நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

தினகரனுக்கும் அதிமுகவுக்கும் இடையில் சமரச முயற்சியா?

மின்னம்பலம் :சிறையில் சசிகலாவை தினகரன் சந்திப்பதற்கு முன்பே, சசிகலாவை பாஜக சார்பில் ஒரு நபர் சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளார். ‘தினகரன் ஓவர் ஸ்பீடு போகிறார், இந்தத் தேர்தலில் அமமுக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும். அதனால் போட்டியிடுவதைத் தவிர்க்கச் சொல்லுங்கள்’ என்று அந்த பாஜக பிரமுகர் சசிகலாவிடம் கூறியுள்ளார். மேலும், ‘இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் மீண்டும் போட்டியிடவைத்து வெற்றிபெறச்செய்வோம். அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரோடும் அதிமுகவில் இணையச் சொல்லுங்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்பதற்கான செலவுகளையும், அவர்களுக்கு கணிசமான தொகையும் கொடுக்கிறோம். ஆட்சியில் நீங்கள் சொல்பவருக்கு மந்திரி கொடுக்கிறோம். முடிவை சீக்கிரம் சொல்லுங்கள்’ என்றும் அவர் சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்.
டிஜிட்டல் திண்ணை:  மும்முனைத் தாக்குதல்- கடும் நெருக்கடியில் தினகரன்“தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட ஆரம்பித்துவிட்டனர். அதிமுக அணியும் விரைவில் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருக்கிறது. எல்லாரும் களத்தில் இறங்கிவிட்ட நிலையில் தினகரன் தலைமையிலான அமமுக வருகிற மக்களவை தேர்தலில் பொதுச் சின்னமான குக்கர் சின்னத்தில் நிற்க முடியுமா என்ற கேள்வி இன்று டெல்லியில் இருந்து தீவிரமாக எழுந்திருக்கிறது.
டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து இன்று ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு ஆரம்பிக்கிறது. இந்த இரண்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் நாளிலே தினகரனுக்கு நெருக்கடி மேலும் முற்றியிருக்கிறது.
தேர்தலில் நிற்கக் கூடாது என்று பாஜக தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக நேற்று சிறையில் சசிகலாவை சந்தித்தபோது தினகரன் சொல்லியிருந்தார். இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த சின்னம் தொடர்பான வழக்கு மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவுமாலைமலர் : புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
பாரிஸ்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம்தான் காரணம் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில், பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

BBC :நியூசிலாந்தில் 49 பேர் உயிரிழப்பு இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு


நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.< "இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்" என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை துப்பாக்கித்தாரிகள் உள்ளனர் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றாலும், துப்பாக்கித்தாரிகளில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது ஏன்?- கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ்

tamil.thehindu.com : சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி கல்வித்துறை கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 தொடங்கி நடக்க உள்ளது. இதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிரச்சாரம், கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. கடந்த 10-ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 13-ம் தேதி புதன்கிழமை நாகர்கோவிலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்தார் ராகுல். சென்னை வந்த அவர் அதற்கு முன்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!மின்னம்பலம் : திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சி எந்தெந்த இடங்களில் போட்டியிடுகின்றன என்பதற்கான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 15) வெளியிட்டார். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதி அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளர்கள் யார் யார்? உத்தேச பட்டியல்

tamilthehindu :2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது
என்பது குறித்து திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்திவிட்ட நிலையில் காங்கிரஸ் புதுச்சேரி தொகுதி மற்றும் தமிழகத்தின் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது.
இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக சம்மதம் தெரிவித்தது. பின்னர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் தங்கள் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின்  பட்டியலை அளித்தார்.
அதனடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 20 தொகுதிகளிலும் திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஏற்கெனவே திமுக கூட்டணிக்கட்சிகள் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியிட்ட நிலையில் அடுத்து திமுக வட்டாரத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல்:
திமுக தொகுதி வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் :
1. வடசென்னை – டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)
2. மத்திய சென்னை-  தயாநிதி மாறன்
3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5. காஞ்சிபுரம் (SC) – அண்ணாதுரை அல்லது செல்வம்
6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
7. வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
8. தருமபுரி – மணி அல்லது செந்தில் குமார்
9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

நியுசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு 6 பேர் உயிரழப்பு .


தினத்தந்தி : கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ஹாக்லே பார்க் பகுதியில் உள்ள மசூதிக்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள்  சென்று இருந்ததாகவும்  எனினும் பத்திரமாக திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வங்காளதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலும் இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மிகவும் அபாயகரமான அனுபவமாக இருந்ததாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

சவுக்கு : திட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்


அரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர்நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள், சாலைகள் , பிக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் போன்றவற்றை மையமிட்டதாகவே இருக்கின்றன, சட்டமன்றத் தேர்தலின்போது , பாஜகவைச் சேர்ந்த இவர் குப்பை மேலாண்மை, மின்சாரம், கல்வி குறித்த ட்வீட்டுகளை அதிகம் பகிர்ந்துள்ளார் என சுயாதீன ஊடகமான ‘சிட்டிசன் மேட்டர்ஸ்’ ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எப்படிப் பார்த்தாலும், பொதுவாக அன்புடன் பழகும் தன்மை கொண்ட லிம்பாவலி பொறுப்பான அரசியல்வாதியாகவே தெரிகிறார். ஆனால், ஒருவரின் அறிவும் பொறுப்புணர்வும், பீதி, மனப்பிரமை ஆகியவற்றின் பலிபீடத்தில் காவு கொடுக்கப்படும் காலம் இது.
மார்ச் 1ஆம் தேதி, லிம்பாவலி வழக்கத்திற்கு விரோதமான இந்த ட்வீட்டை வெளியிட்டார்: கடந்த 5 ஆண்டுகளில், மோடி அரசு வெளிநாட்டு எதிரிகளுக்குப் பாடம் புகட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு எதிரிகளை நாம் அகற்ற வேண்டும். அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட தேசத்தை உருவாக்க இது நாம் செய்ய வேண்டிய முக்கியச் செயலாகும்.

முழு இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்த ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் .. ராகுல் பேச்சு

Rahul Gandhi won the students over, as he did social media. The video, shared by news agency ANI, was retweeted more than 800 times and liked by more than 2,500 people at the time of filing this.
மின்னம்பலம் : கல்லூரி மாணவிகளுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு அவருக்கு எதிர்பாராத பேராதரவைத் திரட்டித் தந்திருக்கிறது.
மார்ச் 13ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் மாணவிகளுடனான ஒரு திறந்த உரையாடலை நிகழ்த்தினார்.
ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வந்த ராகுல் காந்தியைப் பார்த்து, ‘இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் இவ்வளவு எளிமையாக, இளமையாக இருப்பது ஆச்சரியம்’ என்று கல்லூரி மாணவிகளே பாராட்டினர்.
அதுவும் தன்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்று அழைத்தால் போதும் என்று ராகுல் காந்தி கூற, அதற்கு ஒரு மாணவி, ‘ஹாய் ராகுல்’ என்று அழைத்துவிட்டு நாக்கை நீட்டி வெட்கப்படும் வீடியோ இந்தியா முழுவதும் பரவி மாணவிகள் மத்தியில் ராகுலுக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!
மின்னம்பலம் :திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பஞ்சாயத்து ஒருவழியாகப் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. ராகுல் காந்தியின் சென்னை விசிட்டுக்குள் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்துவிடலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் குமரிக்கும் சென்னைக்குமாகப் பயணித்துக்கொண்டிருந்ததால் ராகுலின் வருகைக்குள் தமிழக காங்கிரஸால் 10 தொகுதிகள் பற்றி திமுகவோடு உட்கார்ந்து பேசி இறுதி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறிவாலயத்தில் திமுக குழுவினரைச் சந்தித்தது. ஏற்கெனவே இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று நடந்த மூன்றாவதுகட்டப் பேச்சில் காங்கிரஸுக்கான 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அப்போது திருச்சி, கரூர், நெல்லை, திண்டுக்கல், ஆரணி போன்ற தொகுதிகள் பற்றி இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

சென்னை அண்ணா சாலையில் .. ஹூப்ளி மக்களின் மனம் கவர்ந்த சிகாரி ரகப் பேருந்துகளை

சிகாரி பஸ்
எம்.குமரேசன் "வ.யஷ்வந்த்".vikatan.com ;நீ ண்ட நாளுக்குப் பிறகு, வட கர்நாடகத்துக்கு விசிட் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை சென்ற நகரம் ஹூப்ளி.  சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 16 மணி நேரம் பயணம். பெங்களூரு சென்று அங்கிருந்து புனே நோக்கி 8 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு பளபளவென விடியும் நேரத்தில் பேருந்து ஹூப்ளி நகரம் வந்தடைந்தது. லைட்டாக குளிர் இருந்தது. காலை 6 மணிக்கே நகரம் பரபரப்பாகக் காணப்பட்டது. ஹூப்ளி சென்ட்ரல் பேருந்துநிலையத்தில் கூண்டு வடிவில் பலவிதமான  கர்நாடக அரசுப் பேருந்துகள் பயமுறுத்திக்கொண்டிருந்தன. பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் ராஜஹம்சாவும் ஐராவத்தும் விரைந்தன. காலையிலேயே ஹோட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது எப்.ஐ.ஆர்.. பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அரசியல்..

Pollachi Sexual Abuse case: FIR registered against Sabarisan tamil.oneindia.com - veerakumaran. சென்னை: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின்பேரில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு எதிராக சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தால், தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது. இந்த நிலையில், தன் மீது திமுக திட்டமிட்டு பழி சுமத்தி வருவதாக சில தினங்களுக்கு முன்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்து இருந்தார்.
ஆனால் இதன் பிறகும் சமூகவலைத்தளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை தொடர்புபடுத்தி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இது போல சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக ஸ்டாலின் மருமகன், சபரீசன் தகவல் பரப்பி வருவதாக சென்னை காவல் துறையில் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்தார்.

Tamilnadu's Lydian Nadhaswaram Wins $1M Prize - தமிழக லிடியன் நாதஸ்வரம்.. 1 மில்லியன் டாலர் பரிசு The World's Best வீடியோ


மின்னம்பலம் : உலகம் முழுவதிலும் கவனம் பெற்ற தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன்.
 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வந்த இவர் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்து பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பண குவியல் ... பாஜக கண்ட பாரதம் ..

Swathi.K : கடந்த நான்காண்டுகளில் 100 கோடிக்கு மேல் இந்திய வங்கியில்
ஆட்டய போட்டு வெளிநாட்டிற்கு சென்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் 17 பேர்.. இவர்கள் அனைவரும் இங்கு ஆட்டய போட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்து மாபெரும் கோடீஸ்வரர்களாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.. எல்லா குற்றங்களும் டிஜிட்டல் உலகில் நடந்தது தான்..
யோசிச்சு பாருங்கள்.. ஒரு சின்ன குற்றம் செய்தாலே உங்களுக்கு Look Out Circular (LOC) கொடுத்து உங்கள் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு நீங்கள் வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது.. ஆனால் 1000 கோடிக்கு மேல் ஆட்டய போட்டவர்கள் எப்படி எளிதாக தப்ப முடிந்தது.. இவர்கள் அனைவரும் மோடிக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமானவர்கள்.. மோடி, அருண் ஜெட்லீ போன்றோரின் உதவி இல்லாமல் இவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை..
தூக்கி எறியுங்கள் இந்த டுபாக்கூர் அரசாங்கத்தை..
 Please save India.
குறிப்பு: வெளிநாடு தப்பி சென்ற அனைவருமே கோடிகளில் பிஜேபிக்கு தேர்தல் நிதி கொடுத்தவர்கள் என்பது சிறப்பு செய்தி

பொள்ளாச்சி வீடியோ திருநாவுக்கரசின் அம்மா பேட்டி .. என் மகனை அரசியல்வாதிகள் பயன்படுத்தி .

வியாழன், 14 மார்ச், 2019

நடிகர் சூரியா :தன்னை காதலிக்கும் ஒருத்தனை நம்பாமல், ஒரு பெண் வேறு யாரை நம்புவாள்?

indiaglitz.com: பொள்ளாச்சி விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் பலர் தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்த நிலையில் நடிகர் சூர்யா, ஒரு ஆராய்ச்சி கட்டுரை போன்று ஒரு நீண்ட அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மிரட்டப்படும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது குடும்பம் எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும், பாலியல் குற்றத்தைவிட பெரிதாக இருக்கும் சமூக குற்றவாளிகள் என விரிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை சமூகத்தில் நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதோ அந்த அறிக்கையின் முழுவிபரம்
என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது எனக்கு எவ்விதமான கற்பிதங்களோ, ஒழுக்க வரையறைகளோ இருப்பதே இல்லை. ஆனால், பெண் குழந்தையின் உடல் குறித்து, என்னையறியாமலேயே நிறைய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணித்துக்கொண்டே இருக்கிறேன். ‘நீ எப்படி உடுத்த வேண்டும், நீ எப்படி உட்கார வேண்டும், மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும்’ என்பதுபற்றி, சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த வரைமுறைகளை அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ’துணிவு மிக்க பெண்ணாக’ மகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கும், என் செயலுக்கும் இடைவெளி இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

கமல் ரஜினிகளை புரமோட் செய்யும் மீம்ஸ்கள்.. ஆர் எஸ் எஸ் பின்னணியா?

நல்ல கருத்துள்ள மீம்ஸ் இயற்றும் அநேகர் சினிமா நடிகர்களின்
படங்களையே பயன்படுத்துகின்றனர். அது ஒரு நல்ல டெக்னிக்தான்.
ஆனால் அப்படி போடப்படும்  அந்த நடிகர்கள் அந்த மீம்ஸ் கூறும் கருத்துக்களுக்கு சொந்த வாழ்வில்  எதிரான கருத்துடையவர்கள் ஆகத்தான் அனேகமாக இருக்கிறார்கள்.
உதாரணமாக தலித்தியத்தை வலியுறுத்தும் ஒரு மீம்ஸை உருவாக்கும் பொழுது,  மனதிற்குள் அசல் பார்ப்பனீயத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நடிகனின் படத்தோடு போடுவது சந்தேகத்தை தருகிறது.  மேலும்  அந்த நடிகர்களின் படங்கள் அந்த  மீம்சின் கருத்தையே கேலி செய்வது போல அமைந்து விடுகிறது .
அதிலும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் அடியாள் வேலையை மேற்கொள்ளும் கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றோரின் படத்தை போட்டு அவர்களுக்கு தொடர்பே இல்லாத கருத்துக்களை மீம்ஸ்களாக போடுகிறார்கள் .
அதில்தான் பலத்த சந்தேகமும் வருகிறது . ஒரு வேளை இந்த மாதிரி மீம்ஸ் தயாரிப்பவர்கள் வேண்டுமென்றே மக்களிடம் கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் கொண்டு போய் சேர்ப்பதற்காக காசு வாங்கி கொண்டுதான் இவற்றை தயாரிக்கிறார்களோ?
ஆர் எஸ் எஸ் இன் பணம் எங்கும் செல்லும் வல்லமை நிறைந்தது .
இந்த் மீம்ஸ் தயாரிப்பாளர்கள் இனியும் ஆர் எஸ் எஸ் சார்பு நடிகர்களின் படத்தை போட்டு கூறப்படும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றே கருத வேண்டும்.. raradha manohar

கால காலமாய் தொடரும் கட்டுப்பாடுகள் ... பெரியார் பூமியில் ஏனிந்த அடிமைத்தனம்?

Devi Somasundaram : கால காலமாய் தொடரும் கட்டுபாடுகள் .
பலருக்கு தெரியும் முத்து லெட்சுமி அம்மா தான் முதல் பெண் டாக்டர் .. முத்து லெட்சுமி அம்மா நல்லா படிப்பார் ..அவர்க்கு டாக்டர் படிக்க ஆசை . அப்ப பெண்கள் மருத்துவ கல்லூரி இல்ல .அவர் பிடிவாதம் பிடிக்க புதுகோட்டை சமஸ்தான மன்னர் ரெகமண்ட் செய்ய சென்னை மருத்துவ கல்லூரில ( mmc ) .அனுமதி கடிதத்தோட டீன மீட் செய்றாஙக .
டீன் மன்னர எதுர்த்து எதும் செய்ய முடியாம இது ஆண்கள் கல்லூரி நீ ஒரு பெண் க்ளாஸ்ல படிச்சா அது ஆண்கள ப்ரோவோக் செய்யும் க்ளாஸ்ல அனுமதிக்க முடியாது ..கூண்டு வண்டிகுல்ல இருந்து படிக்க தயார்ன்னா அனுமதிக்கிறேன்னு சொல்ல .முத்துலட்சுமி அம்மா மறுப்பே சொல்லாம சரின்னு ஒத்துகிட்டாஙக .
மாட்டு வண்டி ய ( கூண்டு வண்டி ) மாணவர்கள் வருவதற்கு முன்னாடியே காலேஜ் குல்ல வந்து வகுப்ப ஒட்டி நிறுத்தி வண்டில முன்ன பின்ன துணி ல திரை போட்டு...அந்தம்மா உள்ள இருப்பதே வெளில தெரியாம க்ளாஸ் கவனிக்கனும்

மாலை மாணவர் எல்லாம் வெளியேறினதும் தான் வண்டி வெளில போகனும்..
ப்ராக்டிகல் க்ளாஸ் அவர்க்கு மட்டும் தனியா மாணவர்கள் இல்லாத லீவ் நாளில் நடத்த படும் .
பீரியட்ஸ்ல , நாப்கின் அறிய படாத அந்த காலதுல யூரின் போக கூட வண்டிலேர்ந்து வெளிவராம .அந்த வண்டிகுல்லயே மத்தியம் சாப்ட்டு கிட்ட தட்ட 10 மணி நேரம் மேல அசங்காம வண்டிகுல்ல அமர்ந்து மருத்துவம் படித்தார் ..
இந்த ரூல்ஸ்லாம் பார்த்ததும் பெண்கள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்குனு தோணிச்சு ..
எத்தனை கட்டுபாடுகள் பெண்ணுக்கு .இது தான் பெண் சுதந்திரமா ? .

நக்கீரன் ஆசிரியருக்கு.. ( பொள்ளாச்சி வீடியோ) ..போலீஸ் அழைப்பாணை

nakkheeran gopal nakkheeran.in - kalaimohan : பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் நாளை (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம்  காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டுவந்து நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோ தமிழகம் எங்கும் பரவியது. இந்த வீடியோவில் நக்கீரன் ஆசிரியர் குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும், அவர்களுக்குள்ள அரசியல் பின்னணி குறித்தும் உறுதியாக வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நக்கீரன் பத்திரிகையிலும் இதுகுறித்த விரிவான கட்டுரைகள் வெளியாகி இருந்தன.

BBC : போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்


பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர். இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாயிலின் முன்பு போராட்டத்தினை நடத்தினர்.
மேலும், நேற்று பொள்ளாச்சியில் ,அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர் , நகராட்சி அலுவலகம் முன்பு திரளாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். வஜ்ரா தண்ணீர் பீச்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காவல் துறையினர் மாணவர்களை கலைந்து போகும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

முகிலன் காணவில்லை: சிபிசிஐடி அறிவிப்பு!

Nj Subash : பலருக்கு கோவம் வரலாம். ஆனா உண்மையை சொல்ல வேண்டிய தருணம். இந்த ஆள் 2012 ல் சுப.உதயகுமார், நம்மாழ்வார் குரூப்போட சேர்ந்து கூடங்குளம் போராட்டத்தில் பெரிய கட்சிகளை தனிமைபடுத்தினார்! தூத்துக்குடி ஸ்டர்லைட்போராட்டத்தில் பார்த்திமா பாபுடன் இணைந்து பெரிய கட்சிகளை தனிமைபடுத்தினார் காரணம் - போராட்ட புகழ் எல்லாம் M.l இயக்கத்திற்கே வரவேண்டும் என்ற பேராசை. விளைவு இன்று இவரை தேடவே பெரிய கட்சி ஆதரவு தேவைப்படுகிறது. காலம் அதன் பாடத்தை நடத்துகிறது.
முகிலன் காணவில்லை: சிபிசிஐடி அறிவிப்பு!மின்னம்பலம் : சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைக் காணவில்லை என்று அவரது சுயவிவரங்களுடன் கூடிய சுவரொட்டி சிபிசிஐடி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பான சில ஆதாரங்களை வெளிப்படுத்தினார் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். அன்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார் முகிலன். இதற்கடுத்த நாள் மதுரையில் ஒரு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதாகத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்தார். சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வரை சென்ற முகிலன், அடுத்த நாள் மதுரைக்குச் செல்லவில்லை. இதையடுத்து அவர் காணாமல் போனதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை" - பொள்ளாச்சி பார் நாகராஜ்!

பார் நாகராஜ்vikatan.com -r.guruprasad - தி.விஜய் : என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் பார் நாகராஜ் கூறியுள்ளார். என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் பார் நாகராஜ் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடிதடி பஞ்சாயத்தில் சிக்கிக் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ். ``அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள இவரது டாஸ்மாக் பாரை பொது மக்கள் நேற்று அடித்து உடைத்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பார் நாகராஜ், பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் பாலியல் வழக்குக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. செக் மோசடி செய்தது தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறிதான், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடம் பேச என்னை அழைத்துச் சென்றார். ஆனால், எனது அரசியல் மற்றும் பொது வாழ்வில் எனக்கு வேண்டாத சில விஷக்கிருமிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

ராகுல் என்று என்னை பெயரை சொல்லி அழையுங்கள்.

Karthikeyan Fastura : ஸ்டெல்லாமேரிஸ் ராகுல்காந்தியின் வீடியோவை
கேட்டேன். காங்கிரஸ் மீதான எனக்கு இருந்த கடந்தகால விமர்சனங்களை மீறி நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
3000 இளம் மாணவிகள் மத்தியில் நிச்சயம் இப்படி ஒரு Open Discussion வைப்பதற்கே ஒரு தில் வேண்டும்.அதிலும் மனிதர் தமிழ்நாட்டிற்கே பிடித்த கருப்பு நிறத்தில் T-shirt அணிந்துவந்தது சிறப்பு. அவரது PRO டீம் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது
வரவேற்புரை நிகழ்த்துபவர் Mr.காந்தி என்றே விளிக்கிறார். எந்த அடைமொழியும் இல்லை.
வரவேற்புரைக்கு பிறகு இவரை பேச அழைக்கிறார்கள். இவர் நேரடியாக விவாதத்திற்கு சென்றுவிடுகிறார். அதிலும் எனக்கு கடினமான கேள்விகளே கேளுங்கள் எளிதான கேள்விகள் வேண்டாம் என்று சொல்கிறார்
மாணவிகள் கேள்விகளை தொடுக்கும் முதல் கேள்வியிலேயே சார்..என்று விகுதி சேர்க்க தேவையில்லை. ராகுல் என்று பெயரை சொல்லி அழையுங்கள் என்கிறார். மீண்டும் ஒரு மாணவி சார் என்று சொல்லும்போது அதை மீண்டும் மறுக்கிறார். இது தான் இளமையின் அடையாளம்.
ஒவ்வொரு கேள்விக்கும் spontaneous ஆகவும், நேர்த்தியாகவும் பதில் சொல்கிறார்.

பொள்ளாச்சி பயங்கரம் அதிமுக விஐபி மகன்கள் கைதாவார்களா மக்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

splco.me/tam/ :;கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில், விஐபிக்கள் மற்றும் அவர்களது மகன்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. >கோவை மாவட்டம் பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர் பேஸ்புக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பில் இருந்தார்.
கடந்த மாதம் 12ம் தேதி உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அந்த மாணவியை அழைத்தார். மாணவி அங்கே வந்ததும், அவரை காரில் ஏற்றிச் சென்றார். சிறிது தூரம் சென்ற பின் நிறுத்தியுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த தனது நண்பர்களான பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (26), சதீஷ் (29), வசந்தகுமார் (29) ஆகியோரை ஏற்றினார். காரில் சபரிராஜன் மாணவியிடம் ஆடையை அகற்ற முயன்று அத்துமீறலில் ஈடுபட்டு, அதை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.

குமரியில் ராகுல் ..கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டே இருந்தது. முழு ரிப்போர்ட்


மின்னம்பலம் :மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி குமரி வந்து சென்ற நிலையில், நேற்று (மார்ச் 13) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சென்னையில் நேற்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் சந்திப்பு, பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டுப் புறப்பட்ட ராகுல் காந்தி, திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஹெலிபேடில் இறங்கினார்.
4.10க்கு ஸ்கோட் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். பொதுக்கூட்ட மேடை ஏறும் முன் ராகுலுக்குக் கைகொடுத்து வரவேற்க 60 விவிஐபிக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பல நூறு விவிஐபிக்களில் 60 பேரைத் தேர்ந்தெடுத்தாகக் கூறுகிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
ஒருபக்கம் ராகுல் காந்தி மற்ற தலைவர்களோடு மேடையேறிவிட்ட நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டே இருந்தது. கல்லூரி வளாகத்தைத் தாண்டி சாலைகளிலும் பெருங்கூட்டம் நின்றது. காரணம் பாதுகாப்பு கெடுபிடிச் சோதனைகள் காரணமாகப் பலர் கல்லூரி வளாகத்துக்குள் நுழைவதே பெரும் சிரமமாகிப் போனது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: பண்ணை வீட்டில் ஆய்வு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: பண்ணை வீட்டில் ஆய்வு!மின்னம்பலம் : பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகள், இளம்பெண்களிடம் பழகி, அதன்பின்னர் அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 12ஆம் தேதியன்று இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும் ஐந்து ஆய்வாளர்கள் உள்ளடக்கிய தனிப்படை இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தார் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவிருப்பதாகவும், இது தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றினால் எங்களிடமுள்ள ஆவணங்களை ஒப்படைப்போம் எனவும் அவர் கூறினார்.

ராகுல் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் அட்டகாசம் ...மோடியைக் கட்டியணைத்தது ஏன்?- ராகுல் காந்தி பதில்

I was sitting on parliament house, and i was watching the prime minister give a speech , and i have no anger to prime minister . i dont have animosity or hatred to prime minister and i could see the prime minister was very angry .and he was speaking about .. me and congress party and how we done nothing . and we will filthy and my father is a horrible person and my mother is a horrible person and my grand mother was... he is on that line... inside me i was feeling affection for him .. i was feeling that this man is not able see the beauty of the world .

tamil.thehindu.com  : மோடியைக் கட்டியணைத்தது ஏன் என்ற கேள்விக்கு, அன்பின் வழியாக ஆத்திரத்தைக் குறைக்க முயன்றேன் என்றார் ராகுல் காந்தி.
தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

லெஸ்பியனா இருக்கலாமா.. பெண் டாக்டரை மடக்கிய திருநாவுக்கரசு..

லெஸ்பியன் tamiloneindia.com :அப்பாவி பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கியது எப்படி?.. சென்னை: திருநாவுக்கரசு என்ற காமவெறியன், சென்னையை சேர்ந்த ஒரு டாக்டரையும் இப்படியே பேசியே ஏமாற்றி இருக்கும் பகீர் விஷயம் தெரியவந்துள்ளது!
நாளுக்கு நாள் புது புது தகவல்கள் கைதான திருநாவுக்கரசு குழு பற்றி வந்து கொண்டே இருக்கிறது. இப்போதுகூட பெண் டாக்டர் ஒருவர் அவனது வலையில் விழுந்து சீரழிந்ததாக செய்திகள் வருகின்றன.
அந்த பெண் டாக்டர் சென்னையில் ரொம்ப ஃபேமஸ் ஆனவர்! தனது பேஸ்புக்கில் டாக்டரை பார்த்ததுமே திருநாவுக்கரசு மனதில் டிங்-டாங் மணி அடித்துவிட்டது. உடனே டாக்டரிடம் அறிமுகமாகி இருக்கிறான்... அதுவும் தான் ஒரு பெண் என்று சொல்லி!

மேல்மருவத்தூர் பங்காரு அடியான் ஆக்கிரமித்த நீர்நிலைகள் புறம்போக்கு நிலங்கள் .. .மிரட்டப்படும் எதிர்ப்பாளர்கள்

ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்? - வழக்குத் தொடுத்தவருக்குக் கொலைமிரட்டல்... சி.ரவிக்குமார் திமன்றங்கள் பலமுறை கண்டனம் தெரிவித்தும்கூட, நீர்நிலைகளை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படும் போக்கு பல இடங்களில் தொடர்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள சாமானிய மக்களின் குடிசையை அகற்றுவதில் அரசு எந்திரம் காட்டும் வேகம், அதிகாரம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இருப்பதில்லை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான
அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது
ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை இயங்குகின்றன. மேலும், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களும் உள்ளன. இவற்றில் பல அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன என்று, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

மோடியின் எண்ணம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்; தமிழகத்தில் நடக்காது' - ராகுல் காந்தி ஆவேசம்!


ராகுல் காந்தி
பிரசார கூட்டம்vikatan.com - sindhu-எல்.ராஜேந்திரன்" ரா.ராம்குமார் : மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வரும்போது 'மேக் இன் தமிழ்நாடு' என உற்பத்தி பொருள்களில் எழுதியிருக்கும். சீனா ஆதிக்கத்தில் இருந்து நம் நாடு விடுபடவேண்டும் என நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்திநாகர்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ``தமிழகத்தின் தவப்புதல்வர் காமராஜர், மண்ணின் மைந்தர் மார்சல் நேசமணி ஆகியோரை நினைத்து இந்த உரையைத் தொடங்குகிறேன். ஸ்டாலின் அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார். வெகுவிரைவில் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வர உள்ளார். நான் கலைஞரை சந்தித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் மறைந்துவிடவில்லை அவர் தமிழக வளர்ச்சியில் இரண்டறக் கலந்திருக்கிறார். அதுபோலத்தான் காமராஜரும் மக்களுடன் இணைந்திருக்கிறார். கலைஞரும், காமராஜரும் மக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க தலைமையில் இங்கு ஒன்றிணைந்திருக்கும் நாம் அனைவரும் தமிழக மக்களின் உணர்வைக் காப்பவர்களாக உள்ளோம். தமிழகத்தில் இன்று நடக்கும் ஆட்சி மோடியின் கைப்பாவையாக நடக்கிறது. கடந்த காலத்தில் தி.மு.க, அ.தி.மு.க இடையே போட்டி இருந்தது. இரண்டு கட்சியிலும் வலுவான தலைமை இருந்தது. இன்று தமிழகத்தில் பின்புறமாக ஆட்சி நடக்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கிய காலமும் உண்டு.

புதன், 13 மார்ச், 2019

பொள்ளாச்சி மறைக்கப்படும் முதல் தகவல் அறிக்கை?.. பாலியல் வன்முறை வழக்கு!

 Pollachi sexual abuse case; First information report to be hidden?nakkheeran.in - cnramki : “தமிழகத்தையே உலுக்கிவரும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையோ காப்பாற்றுவதில் தீவிரமாக இருக்கிறது பொள்ளாச்சி டவுண் காவல்நிலையம். ஆன்லைனிலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. நீங்களே பார்த்துக்கொள்ளலாம்..” என்றார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்வேல்.
 “23-2-2019 அன்று அந்தக் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 58-ஐயும்,  26-2-2019 அன்று பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 60-ஐயும் ஆன்லைனில் பார்க்கமுடிகிறது. ஆனால்,  பாலியல் தொந்தரவு செய்தல், வழிப்பறியில் ஈடுபடுதல், விருப்பம் இல்லாமல் பெண்களை ஆபாச படம் எடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 59-ஐ மட்டும் ஆன்லைனில் பார்க்க முடியவில்லை. ஏனோ, பிளாக் செய்துவிட்டனர்.” என்பதே கதிர்வேலின் ஆதங்கமாக இருக்கிறது. 

விபச்சாரத்தை ஆரம்பிங்கடா, என்ன கலாச்சாரம்..வெங்காயம்: ஒரு நடிகையின் ஆவேசம் வீடியோ


வெப்துனியா: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பல திரையுலகினர் தங்களுடைய ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை சிந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வணக்கங்க.. நான் ஒன்னும் புதுசா பேச போறது இல்லை. அந்த காலம் மாதிரி இந்த காலம் கிடையாதுங்க. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நமக்கென்னன்னு சும்மா போக முடியலங்க. நம்மால முடிஞ்சது எதிர்த்து குரல்தான் தர முடியும்?
வேறென்னங்க பண்ண முடியும்?  மிருக நாய்ங்க.. இன்னும் கேவலமாக கூட அவங்களை பேசலாம். அவனுங்கள பேசி நான் இமேஜ் கம்மி பண்ணிக்க முடியாது.  4 வயசு குழந்தைங்கள கூட ரேப் பண்றானுங்க. இவனுங்க உயிரோட இருக்கணுமா?
அப்ராட் போயி பாருங்க. ஒரு பொண்ணை ரேப் பண்ணா நடுரோட்டில வெச்சு துண்டு துண்டா வெட்றாங்க.
இந்த மாதிரி இந்தியாவுல ஏன் சட்டத்தை கொண்டு வர மாட்டேன்றீங்க? பம்பாயில விபச்சாரமே நடக்குது.. அங்க இந்த மாதிரி ரேப் நடக்குதா? இங்க மட்டும் பாருங்க...
ஏதாவது ஒரு மூலையில பொண்ணு கற்பழிக்கப்படறது நடக்குது. இந்த மாதிரி சட்டத்தை இங்க கொண்டு வந்து தொலைங்களேன்.
என்ன கல்ச்சர், என்ன வெங்காயம்னு பார்த்துட்டு இருக்கீங்க. அந்த மாதிரி கர்மத்தை சட்டப்படி கொண்டு வந்தா, இந்த மாதிரி நாய்ங்களோட வெறியாவது கம்மியாகும் இல்லை?

பெண் டாக்டர் மீது பாலியல் வன்முறை .. 2 வருடங்களாக போலீஸ் ஊத்தி மூடிய வழக்கு .. பொள்ளாச்சி

tirunaவெப்துனியா : பொள்ளாச்சியில் அட்டூழியம் செய்த கும்பல் ஒரு பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர்
20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.