புஸ்ஸி ஆனந்த் - முதல்வர் ரங்கசாமி - நடிகர் விஜய் |
தோழர் வினேஷ்பாபு : வில்லங்கமான விறகுக்கடை முதலாளி புஸ்ஸி ஆனந்த்!
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்??
புதுச்சேரியில், வெறும் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் 'புஸ்ஸி தெரு'.
இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து, பின்பு அதே தொகுதியில் 2 முறை தோற்ற நபர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.
புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.