சனி, 9 நவம்பர், 2019

அயோத்தி தீர்ப்பு .. எந்த இஸ்லாமிய நாடும் கண்டிக்க வில்லையே ...?

தமிழ் மறவன் : இதோ, முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதே! எந்த இசுலாமிய நாடு கண்டித்தது?
எந்த இசுலாமிய நாடு குரல் கொடுத்தது?
குஜராத் முசுலீம்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடுதான் அரபுதேச மன்னர்கள் மகிழ்வோடு மோடியிடம் கை குலுக்கினார்கள்.
உலகெங்கும் அடிப்படைவாத சிந்தனையை வளர்க்கும் அரேபிய ஷேக்குகள், இசுலாமிய மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை.
அம்மக்களின் வாழ்வியலைப் பற்றி சிந்திப்பதில்லை.
தமிழக முஸ்லீம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தால்தான் கூலி கொடுப்பான் அரேபிய ஷேக்கு..!
ஏனெனில், அவர்களுக்கு மதம் என்பது ஓர் பொருட்டே அல்ல,
மதம் ஓர் வர்க்க அரசியலின் கூறுதான்...
இங்கே, பீடி சுற்றுகிற பாய் தன் மத நம்பிக்கையை ஷேக் உடையில் காட்டிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?
இம்மண்ணின் பண்பாட்டிலிருந்தும், பொது நீரோட்டத்திலிருந்தும் விலகி நிற்பதால் யாருக்கு இலாபம்?
இங்கே உங்களை வைத்து அரசியல் செய்யும் அடிப்படைவாத அமைப்புகளுக்கே இலாபம்.
அந்த அமைப்புகள் ஓர் கட்டத்தில் பார்ப்பனீயத்தோடு கூட மத நல்லினக்கம் என கூட்டு சேர்த்துக் கொள்ளும்.
ஆனால், திராவிடக் கோட்பாட்டையும், பெரியாரியலையும் ஒருக்காலும் ஏற்காது..,
அவர்கள் யாருக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பதுதான் இங்கே நுணுக்கமான அரசியல்.

பாபர் மசூதியை 6 ஆம் தேதி இடிக்க, டிசம்பர் 5ஆம் தேதியே ஒத்திகை நடந்தது... லிபரான் ஆணைக்குழு ..Samayam Tamil : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்துத்துவ அமைப்புகளால் இடிக்கப்பட்டது. பாபர் மசூயை இடிக்க, டிசம்பர் 5ஆம் தேதியே ஒத்திகை நடந்தது தெரியுமா?
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்துத்துவ அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இதற்கு டிசம்பர் 5ஆம் தேதியே ஒரு ஒத்திகை பார்க்கப்பட்டது என்று தெரிவிக்கிறார் அதனை நேரில் பார்த்த சாட்சியாக அறியப்படும் பிரவீன் ஜெய்ன். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் குறித்து விசாரித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று 1992ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். லிபெரான் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து 17 ஆண்டுகள் விசாரித்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில், “இந்துத்துவ உணர்வாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்தனர் என்று, வலதுசாரி அமைப்புகள் சொல்லி வந்த வேளையில், பாபர் மசூதி இடிப்புக்கு , முன்னதாகவே ஒரு ஒத்திகையும் பார்க்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேயர் பதவிகளுக்கு அதிமுகவே போட்டியிடும் ... கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி ?

dmdk
நக்கீரன் :தற்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் கவனத்தை செலுத்தி வருகின்றன. அதிமுக, கட்சி நிர்வாகிகளை அழைத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அதன் கூட்டணிக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. கூட்டணியில் உள்ள தேமுதிக, சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகராட்சிகளோடு சில நகராட்சித் தலைவர் இடங்களையும் கேட்டு ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. பாமகவும், சென்னை, வேலூர், சேலம் ஆகிய மூன்று மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என்றும் மேலும் சில நகராட்சித் தலைவர் இடங்களையும் கேட்டு ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. சென்னை, திருப்பூர், நாகர்கோவில், கோவை, ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளை கேட்டுள்ளது பாஜக. இதனை பார்த்த அதிமுக சீனியர்கள் நாடாளுமன்றத் தேர்தல் மாதிரி இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி வருகிறார்களாம். மேலும், மேயர் பதவிகள் முழுவதிலும் அதிமுகவே போட்டியிட வேண்டும். துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை வேண்டுமானாலும் கூட்டணிக்கு ஒதுக்குகிறோம் என்று சமாளியுங்கள்.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினால் எக்காரணத்தைக்கொண்டும் சென்னை, சேலம், கோவை, மதுரையை விட்டுக்கொடுக்காதீர்கள்.

பாபர் மசூதி .. ராமர் கோயில் .. பாஜக ... நீதிமன்றம் ...

Raja Rajendran.: 1.) ராமர் அங்குதான் பிறந்தார் என்பது இந்துக்கள் நம்பிக்கை !
ஆஹா, இவன் அவிங்க ஆளா
2.) ஆனால் தனிமனித நம்பிக்கையை வைத்து தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை !
அடடே, இவன் நம்மாளுதான்ய்யா
3.) பாபர் மசூதிக்கு அடியில் இருந்த கட்டிட அமைப்பு கோயில் கிடையாது !
ஹப்பாடா, உண்மைய உரக்கச் சொன்னீங்க எசமான்
4.) அதேவேளையில் பாபர் மசூதி காலி இடத்திலும் கட்டப்படவில்லை !
அய்யோ என்ன இங்கிட்டு திருப்புறானுக ?
5.) அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது !
அப்படி போடுங்க அருவாள ம்ம்ம் அப்புறம் ?
6.) இந்துக்கள் பல நூறு வருடங்களாக ராமர், சீதையை அங்கு வழிபட்டு வருகிறார்கள் !
ம்க்கும் இத நீங்கச் சொல்லலைன்னா யாருக்கும் தெரியாது பாருங்க🤔
7.) தொழுகை நடந்துக் கொண்டிருந்த இடத்தில் வம்படியாக பால ராமர் சிலைகளை நிறுவினார்கள் இந்துக்கள் !
ஆமா எசமான், அகராதி புடிச்ச பயக செஞ்ச வேல 🤕
8.) ராமர் பிறந்ததாய்ச் சொல்லப்படும் இடம் தொழுகை நடத்திய இடத்திலில்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது !
ஓ, அதனால ?
9.) மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் !
அதேதான். புடிச்சி எல்லாத்தையும் தூக்குல போடுங்க எசமான், நான் கூட நீங்கல்லாம் லூசோன்னு ஒரு செகண்ட் குழம்பிட்டேன் !
10.) அதற்காக அந்த மண் இந்து மண் என்றில்லை என ஆகிவிடுமா ? வெள்ளைக்காரன் வருவதற்கு முன், இஸ்லாமியர்கள் வருகைக்கு முன் அங்கு இருந்தது இந்து மண்தானே ? ராமர் மண்தானே ?
அய்யிய்ய இவனுங்க லூசேதான்டா. இதெதுக்கடா உருட்டிக்கிட்டு ? கவுத்தித் தொலைங்க. அடுத்து தாஜ்மகால்க்கு கீழ செவன் கோயில் இருக்குன்னு இடிப்பாய்ங்க, அதுக்கும் இதே மாதிரி உருட்டி கமுத்துங்க, நாடு வெளங்கீரும்

நடிகை பூஜா குமார் கமலஹாசன் வீட்டில் வசிக்கும் வாய்ய்பை பெற்று இருக்கிறார் ....?

Rebel Ravi : · ஹாலிடே இன்னும்..ஒரு பெண்ணும்...
அப்போது விஐபி படத்தின் கதைவிவாதத்திற்காக நானும் பிரபுதேவாவும் மும்பை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்கியிருந்தோம்.
அதேநேரத்தில் கதைக்கான நாயகியும் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.
ஒரு மாலை நானும் பிரபுவும் Holiday Inn ரெஸ்டாரண்ட்டில் வந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.
அப்போது தூரத்தில் ஓர் அழகான பெண் இருப்பதை நான் பார்த்தேன். பிரபுவிடம் கூறினேன்.
அந்தப் பெண் நடிக்க வருவாரா.. கூப்பிட்டுப் பார்க்கலாமா என நான் யோசிக்கையில் போய்க் கூப்பிடுங்கள் ரவி என்று தைரியம் அளித்தார் பிரபு.
எனக்கு சற்று பயம். ஏன் என்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் வந்து உணவு அருந்துகிற பெண் என்றால் பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும். நடிக்க வருகிறீர்களா என நான் போய்க் கூப்பிட்டால் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று தய்ங்கினேன்.
அப்போது பிரபு கவலைபடாதீர்கள் நான் இருக்கிறேன் என்னை காட்டுங்கள் என்றார்.

மகாராஷ்ட்ரா.. ஆட்சியமைக்க பாஜக தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு

 Governor calls on Devendra Patnavis to rulenakkheeran.in - கலைமோகன் : மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிற நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்விற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வரும் நிலையில் 9 ஆம் தேதியான இன்றுடன் தற்போதைய பாஜக ஆட்சியின் காலம் முடிவடைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மகாராஷ்டிரா முதல்வர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் <

பிரதமர் மோடி : அயோத்தி தீர்ப்பு புதிய அத்தியாயம்: புதிய இந்தியாவில் அச்சம், கசப்புணர்வு இல்லை:

  hindutamil.in " ஏஎன்ஐ : புதுடெல்லி அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம்
எழுதப்பட்டுள்ளது. புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவில் அச்சம், கசப்புணர்வு, எதிர்மறையான சிந்தனை ஆகியவற்றுக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
நூற்றாண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் இன்று வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

BBC : அயோத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.. ஒரே பார்வையில்

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி நிலத் தகராறு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சரியாக காலை 10:30 மணிக்கு தீர்ப்பை வாசிக்க தொடங்கியது.
ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃபு வாரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?

 • 10. 30 மணிக்கு தலைமைந் நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். தீர்ப்பை வாசிக்க 30 நிமிடங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.
 • ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பு இல்லை.
 • ராம் லல்லா சட்டப்படியான நபர் என்பது ஏற்பு.
 • ;
  • நிலம் தொடர்பாக இருக்கும் தொல்லியல் துறை அறிக்கையை புறக்கணிக்க முடியாது.
  • மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.
  • இந்துக்கள் சார்பில் நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய இரு தரப்புகள் உரிமை கோரியிருந்தனர். இவர்களில் நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராம் லல்லாவுக்கு சர்ச்சைக்குரிய இடத்தின் முழு உரிமையும் வழங்கப்படுகிறது.

காதர் மொகிதீன் : அயோத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை

தினகரன் : டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அயோத்தி தீர்ப்பு பற்றி அறிக்கை அளித்துள்ளார். பாபர் மசூதி - ராமஜென்மபூமி இடம் சம்பந்தமான நீண்டகால வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சத்தை பற்றியும் வாதப்பிரதிவாதம் தேவையில்லை என்று காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவரும் இணைந்து வாழும் சமூக நிலையை உருவாக்க பாடுபடுவதே அனைவருடைய தேசிய கடமை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது<

அயோத்தி தீர்ப்பு : ராமர் கோயில் கட்டலாம் ! ...பாபர் மசூதி இருந்த இடம் தங்கள் இடம் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் நிருபிக்கவில்லை ...

அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள் .
நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் தீர்மானிக்க முடியாது . சர்ச்சைக்கு உரிய நிலம் அரசுக்கு சொந்தமானது .
அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் . ஆவணங்களின் படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.
1857 ஆம் ஆண்டுவரை அந்த இடத்தில இந்துக்கள் வழிபட தடை இருந்ததில்லை.
1857 இல்தான் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன ...
 : பாபர் மசூதி இருந்த இடம் தங்கள் இடம் என்று இஸ்லாமிய அமைப்புக்கள்  நிருபிக்கவில்லை
இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமாக 5 ஏக்கர் நிலம்  வழங்க உத்தரவு .!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் .!

ரஜினி மனைவி லதாவிற்கு தமிழக அரசு கொடுக்க போகும் பதவி...

latha rajinikanth
நக்கீரன் : ரஜினிகாந்த் சென்னையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோன்று, என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாஜகவில் சேரவோ, கட்சியில் சேர்ந்து தலைவர் ஆக வேண்டும் என்றோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் திடீரென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.

அயோத்தி : ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தினமலர் : புதுடில்லி: வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளித்தனர். இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரி, ஷியா வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் 1992 டிசம்பரில் நடந்த போராட்டத்தின் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2010 செப்டம்பரில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.br /> தீர்ப்பில் கூறப்பட்டதாவது: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் லாலா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் மீதமுள்ள பகுதி ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாடாவுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பளிக்கப் பட்டது.

பாஜக-சிவசேனா: 35 வருடக் கூட்டணி உடைகிறதா?

பாஜக-சிவசேனா: 35 வருடக் கூட்டணி உடைகிறதா?மின்னம்பலம் : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 35 வருட கூட்டணியான பாஜகவும் சிவசேனாவும் உடையும் நிலையில் உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆட்சியமைக்க போதுமான இடங்கள் பாஜக-சிவசேனா கூட்டணியிடம் இருந்த போதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனாவின் முதல்வர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அம்முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

Babri Masjid Verdict Live: அயோத்தி வழக்கில் தீர்ப்பு..... லைவ் தொலைக்காட்சி வீடியோ


/tamil.samayam.com/ : பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

 • உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கும் இந்தியா
 • அயோத்தி வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும்?

 • உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்குகிறது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

  Live Updates:

  * தீர்ப்பு வழங்குவதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார்.

  * அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்களை தனது இல்லத்திற்கு வருமாறு அமித் ஷா அழைத்துள்ளார்.

  * ஸ்ரீராம் லல்லா கோயிலிற்கு பக்தர்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். இதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராக இருக்கிறது - அசுவதோஷ் பாண்டே, ஏடிஜி(உ.பி போலீஸ்)

  சிறப்பு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் .. இருவர் ஆபத்தான நிலையில் அனுமதி

  தற்கொலைக்கு முயன்ற இருபது இலங்கை தமிழ் இளைஞர்களில் இருவர் ஆபத்தான நிலையில்...சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பல நாட்கள் உண்ணாவிரத்தின் பின்னர் யாரும் கவனிக்கவில்லை என்று விசம் அருந்தி உள்ளனர். 
  தந்தி டிவி :திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 72 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை எனக்கூறி, நேற்று முதல், இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த 46 பேர் தொடர்
  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2ஆம் நாளான இன்று, அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறப்பு துணை தாசில்தார் சுந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
  வெப்துனியா ": செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 23-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் தவதீபன், காண்டீபன், செல்வராஜ் உள்பட 6 பேரின் உடல்நிலை மோசமானது.
  இந்நிலையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து அங்கும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

  கபாலீஸ்வரர் கோயிலின் சொத்துக்களை 473 பேர்..... வாடகையோ குத்தைகையோ கொடுப்பதில்லை .. பார்ப்பனர்களே பெரும்பான்மை ..

  மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனகளின் பட்டியல் பெரிது.
  வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி.

  அயோத்தி வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு.. நாடு முழுக்க உச்ச கட்ட பாதுகாப்பு!

  Shyamsundar- tamil.oneindia.com   டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
  அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை நடந்து வந்தது 
  வழக்கு விவரம் அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

  600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ள தஞ்சை அமிர்த கணேஷ்

  பாண்டியன் சுந்தரம் :   600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ள
  தஞ்சை அமிர்த கணேஷ் :"இதுவரை கண்டு பிடித்த கருவிகளையும், அதன் தொழில் நுட்பங்களையும் அரசுக்கு விட்டுத்தரத் தயாராக இருக்கிறேன்!"
  தஞ்சை மாவட்டம் மருத்துவக் கல்லூரி ரகுமான் தெருவில் வசித்து வருபவர் 33 வயது நிரம்பிய அமிர்த கணேஷ். மின்னணுவியல் தகவல் தொடர்பில் பொறியியல் படித்து முடித்த இவர், கடந்த 12 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
  முக்கியமாக, விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
  கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை தமிழகத்தில் மட்டும் 144 பேர் விஷவாயு தாக்கி இறந்து உள்ளனர். பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும் கிணறு மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயுக்கள் இருக்கும். அப்படி இருக்கும் தொட்டிகளில் விஷவாயுக்கள் உள்ளதா என்பதை மேலிருந்தே தெரிந்து கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்து உள்ளார்.

  கமலஹாசனின் புதிய கட்டிடம்... திறப்பு விழா வீடியோ  November 8, 2019, and Kamal Haasan invited the film industry for the launch of his new office in Chennai. And among the chief guests on the dais: Superstar Rajinikanth, Acclaimed Director Mani Ratnam, and Kavi Arasu Vairamuthu. for the inauguration of the new office of his production house, Raaj Kamal Films International, a day after his birthday..
  விஸ்வரூபம் படம் பிரச்சினையின் போது தான் பெரும் கடன் சுமையில்
  இருப்பதாகவும் தன் வீடு அடமாணத்தில் இருப்பதாக கண்ணீர் வடித்தார்...
  அதற்கு பிறகு அவரின் எந்த படமும் வெற்றி பெறவில்லை.... விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த ஒப்பந்த அடிப்படையில் வாரம்தோறும் வந்தார்...
  திடீரென்று அரசியலில் இரங்கினார்...
  கடனில் இருந்து விடுபட விஜய் டிவியில் நின்றவருக்கு அரசியல் கட்சி நடத்த
  ஏது பணம் என்று எந்த நடுநிலை நக்கியும் கேட்கவில்லை...
  சரி அது போகட்டும்... தேர்தலில் நின்ற எல்லா தொகுதியிலும் தோல்வியை தழுவும் புதுச் கட்சி சற்றே துவண்டு போகும், அதுதானே எதார்ததம்...
  ஆனால் இங்கே சற்றும் சலனமில்லாமல் பல கோடி ரூபாய் மதிப்பில் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய அலுவலகம் திறந்துள்ளார் உலக்கை நாயகன்...
  நிச்சயமாக விஜய் டிவியில் அவ்வளவு பணம் சம்பாதிக்க வாய்ப்பே இல்லை ...
  ஆக... தான் மிகச்சிறந்த அரசியல் வியாபாரி என்பதை நிரூபித்துள்ளார்...

  கைம்பெண் கொடுமை அதுவும் double MA, B.Ed, M.Phil(ஆசிரியர்). சொந்த கால்ல நிக்கற independent women.

  File picture..  film water
  Hema Sankar : கேள்வி: தாலி நம்பிக்கை உங்களுக்கு முழுசா எப்போ போச்சு?
  பதில்: அப்பா இறந்தப்ப. தாலி எடுக்கற சடங்குனு ஒரு கொடுமை இந்து மதத்துல இருக்கு. அம்மாக்கு பெரிய பொட்டு, பூ, வளையல்னு அலங்காரம் பண்ணி அடுத்த நாள் இதையெல்லாம் எடுத்தாங்க. நா எவ்ளோவோ சண்ட போட்டும், இது வேணாம்னு கத்தி அழுதும் இத எங்க பாட்டி, அம்மாவோட கூட பொறந்தவங்க, அப்பா கூட பொறந்தவங்க, சொந்தக்காரங்கனு எல்லாரும் இருக்க இந்த சடங்க பண்ணாங்க.
  அம்மா இது வேணாம்மா இதெல்லாம் என்னால பாக்க முடியலமானு நா சொல்லியும், எங்க அத்தைங்க ‘நீ வாழ வேண்டிய பொண்ணு, உனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாதுனு சொல்லி, நீயும் உன் சங்கதிகளும் நல்லா இருக்க இதலாம் பண்ணனும்னு’ சொல்லி, என்ன ரூம்ல இருந்து வெளிய வராம உள்ளையே இருனு தள்ளிட்டாங்க. எங்க அப்பா போனத விட, எங்க அம்மா கதறி அழுத சத்தம் தான் இன்னும் என்ன உடைய வெச்சுச்சு.
  தன்னோட துணைய இழந்துட்டு நிலை குளைஞ்சு இருக்க ஒரு பொண்ண, அவங்க அம்மாவுல இருந்து அவங்க ஒட்டு மொத்த குடும்பமே சடங்குங்கற பேர்ல தாலி எடுத்து, பொட்ட எடுத்து, வளையல் உடைச்சி அலங்கோலமா ஆக்கி அவள நொறுக்கிட்டு இருக்கு. வெளிய வந்து பாத்தப்ப நெத்தில விபூதி பட்டைய வெச்சு, கோணி புடவைய அம்மாவுக்கு சுத்தி வெச்சிற்தாங்க. அம்மா நல்லா படிச்சவங்க. double MA, B.Ed, M.Phil(ஆசிரியர்). சொந்த கால்ல நிக்கற independent women. ஆனாலும் இந்த சமூகமும், சொந்த குடும்பமுமே இந்த கொடுமைய அவங்களுக்கு பண்ணும் போது அவங்களால வாய் திறந்து பேச கூட முடியல.

  வெள்ளி, 8 நவம்பர், 2019

  மதுரை கண் தெரியாத பிச்சைக்காரர்கள்! .... நான் கடவுள் படத்தில் வரும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது

  Mahalaxmi : மதுரை காளவாசல் சிக்னலில்…
  நான் கடவுள் படத்தில் வரும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது .
  காளவாசல் சிக்னலில் சமீபகாலமாக நான்கு சாலைகளிலும் கண் தெரியாதவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். கண் தெரியாதவருக்கு உதவியாக கூடவே இன்னொருவருடன் இருக்கிறார். தினந்தோறும் இவர்களில் கண்தெரியாத வரும் உதவியாளரும் வேறுவேறு சிக்னலுக்கு மாற்றப்படுகின்றனர்.
  காலையில் ஜெயராம் பேக்கரி சிக்னலில் பிச்சை எடுக்கும் அந்த இருவர்கள் மாலையில் எதிர்ப்புற சிக்னலில் நின்று பிச்சை எடுக்கின்றனர்.
  என்னுடைய கேள்வி….
  1. கண்ணில்லாத இவர்களின் உரிமையாளன் எவன்?
  2. இவர்களின் இவர்களை பிச்சை எடுக்க வைத்து சம்பாதித்து உடம்பை வளர்க்கும் கொடூர கும்பல் எங்கே உள்ளது?
  3.கண்ணில்லாதவர்களை மட்டும் எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?
  4.இவர்கள் மனித உரிமை எங்கே ?
  5.வயிற்றுப் பிழைப்பிற்காக 10 மணிநேரம் நடுரோட்டில் வெயிலில் இவர்கள் காய்வது ஒரு பத்திரிக்கையாளர் , காவல் அதிகாரிகள், மனித நல அதிகாரிகள் கண்ணில் கூட படாதது எப்படி?

  கலைஞர் நினைவிடத்தில் நடந்த சுயமரியாதை திருமணம்.. வீடியோ .. ஸ்டாலின் மடல் ...

  “தமிழினத் தலைவரின் ஓய்விடத்தில் தன்மான மணவிழா!” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்! .kalaignarseithigal.com - Vignesh Selvaraj :
  இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தின் முன்பு சுயமரியாதைத் திருமணம் ஒன்றை நடத்திவைத்து நெகிழ்ந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார். அவர் எழுதிய மடல் பின்வருமாறு :
  “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்!
  கழக வரலாற்றில் எத்தனையோ நாட்கள், இனிமையான நாட்களாக அமைந்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள், நெருக்கடியான நாட்களாக அமைந்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள், சோதனையான நாட்களாக இருந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ நாட்கள், வெற்றிகரமான நாட்களாக அமைந்திருக்கின்றன. இன்றைய நாள் என்பது மகிழ்ச்சியும், மனநிறைவும் தரக்கூடிய நாளாக, பொழுதாகத் தொடங்கி இருப்பதை, தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  Demonetization பணமதிப்பு இழப்புக்கு பாஜக மட்டுமே காரணமா? அதிமுகவுக்கும் பங்கில்லையா? மக்களுக்களின் அறிவு எங்கே போனது? சமுகவலையில் எரிமலை...


  Devi Somasundaram :       பணமதிப்பிழப்பு  பற்றி  பேசலயான்னு சில உடன்பிறப்புக்ள் கேட்டார்கள் .. ஏன் பேசனும்... யார்காக பேசனும்..டீமானிடைஷேஷனால பாதிக்கப் பட்டது திமுகவா மக்களா? ...அப்படி பாதிக்கப் பட்டவர்களுக்கு அது குறித்த தெளிவு என்ன இருக்கு ? .
  நீட் தேர்வால மக்களின் கல்வி பாதிக்கப் படுவதையும், அதனால் தமிழகத்தின் சுகாதாரம் பாதிக்கப் படபோவதையும் தினம் எழுதுகிறோம்.
  இதற்கு யார் காரனம்..பி ஜே பி மட்டுமா? ..எடப்பாடி அரசு காரணம் இல்லயா ? .. அதற்காக இந்த மக்கள் என்ன எதிர்ப்ப தெரிவித்தார்கள் ? .

  தமிழக வேலை வாய்ப்பு வடக்கத்தியான்கிட்ட பறிபோகுதுன்னு தினம் எழுதுகிறோம்..இதற்கு காரணம் பி ஜே பி அரசா ? . எடப்பாடி அரசு இல்லயா ? ..இந்த அரசுக்கு என்ன அடிப்படையில் இடைத் தேர்தலில் ஓட்டு போட்டார்கள் .
  பொள்ளாச்சி வன்புணர்வு குற்றவாளிகளை சரிவர சாட்சிகளை தராமல் தப்பிக்க விட்டது மோடி அரசா ? .பி ஜே பி அரசா ? .
  தன் வீட்டு பெண் மானம் போவது பற்றி கூட கவலை படாமல் அதிமுகவுக்கு ஓட்டு போடும் இவர்களுக்காக எதை ஏன் பேசனும்..
  ஸ்டாலின் டீமானிடைஷேஷன் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார் ..அதில் வந்த 50 பின்னூட்டத்தில் 45 பின்னூட்டம் மூல பத்திரம் எங்க என்று கேட்டு ? .
  சரி ..யார் அவர்கள் என்று தேடி பார்த்தால் அவர்கள் தலித் அமைப்பை சேர்ந்தவர் யாரும் இல்லை .அத்தனை பேரும் தன்னை சாதியால் அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பும் பா ம க , நாதக, போன்ற் கட்சியினர் .
  இவர்களுக்கு தலித் நிலத்தின் மீது அக்கறையா ...அப்படி என்றால் வன்னியர்கள், மற்றவர்கள் ஆகரமித்த பஞ்சமி நிலம் எவ்வளவு அல்லவா பேசனும்...ஏன் பேச வில்லை ? .

  நீட்’ விலக்கு; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: கி.வீரமணி எச்சரிக்கை


  இந்து பத்திரிகை : சென்னை . தமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று திரட்டப்பட்டு , வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' ‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும் - சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம். இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது. லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து ‘நீட்’ கோச்சிங்கில் யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட தருமபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.
  மீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன? ஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றார்கள்.

  கர்நாடகா : 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் திரும்பிய தம்பதியர் கல்லால் அடித்து ஆணவ கொலை


  மாலைமலர் : கர்நாடகாவில் கலப்புத்திருமணம் செய்துவிட்டு 4 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பிய தம்பதியரை கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்தனர். அந்த வாலிபர் வேறு சாதி என்பதால் பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு தலைமறைவாயினர். கர்நாடகா மாநிலத்திலயே பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர்.
  இந்நிலையில், இந்த தம்பதியர் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். கடந்த 6-ம் தேதி ஊருக்குள் நுழையும் போதே அவர்களை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

  சோனியா காந்தி குடும்பத்தின் சிறப்பு படை பாதுகாப்பு நீக்கம்

  சோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்மாலைமலர் : சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. > புதுடெல்லி: 1985 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு படை பாதுகாப்பு (எஸ்.பி.ஜி)  உருவாக்கப்பட்டது. இவர்கள் பிரதமர் முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
  தற்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு சிறப்பு படையினரின்  (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

  அயோத்தி தீர்ப்பு... டிஜிபியுடன் முதல்வர் ஆலோசனை


  நக்கீரன் - இரா. இளையசெல்வன் : அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் பங்கேற்றார்.

  பணமதிப்பு இழப்பை மறக்கடிக்க ரஜினியின் 2 பேட்டிகள்.. டேக் 1.. டேக் 2 ...நடிகன்

  Don Ashok : · பேட்டி கொடுத்த அரை மணி
  நேரத்தில், "காவி சாயம் பூசுகிறார்கள்
  என நான் பாஜகவை சொல்லவில்லை, ஊடகங்களைத் தான் சொன்னேன்," என மறுவிளக்கம் கொடுத்திருக்கிறார் ரஜினி. 30 நிமிடங்களில் என்ன நடந்திருக்கும்? டெல்லியில் இருந்து 'வசீகரன்' பேசியிருப்பார். "சிட்டிக்கு எதுக்கு சொந்த அறிவு? நாங்க ப்ரோகிராம் பண்ணத மட்டும் பேசு போதும்," என சொல்லி இருப்பார். பாவம். ரஜினியைப் பார்க்க பாவமாக இருக்கிறது

  tamil.oneindia.com -  Shyamsundar  சென்னை: சரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார். அவரின் இந்த இரண்டு பேட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும். அது லோக்சபா தேர்தல் வந்த சமயம் ரஜினியிடம் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ரஜினி யார் பலசாலி? 10 பேர் சேர்ந்து கூட்டணி இருக்கிறார்களே? அப்படியென்றால் யார் பலசாலியாக இருப்பார்? என்று கேட்டார். அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றவர்களை, யார் அந்த 7 பேர் என்றும் கேட்டார். அவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி சர்ச்சையானது.

  பணமதிப்பு இழப்பு "இன்றோடு" 1095வது நாள்...... மோடி : 50 நாட்களுக்குள் நான் தவறென்றால் என்னை கொழுத்துங்கள்

  பணமதிப்பு இழப்பை வரவேற்ற ரஜினி 
  பணமதிப்பு இழப்பை வரவேற்றவர்கள்
  Natarajan Kandasamy :  · மறக்க முடியவில்லை இந்த கருப்பு நாளை?? நூற்றுக்கணக்கான மக்கள் ATM வாசலிலும் மருத்துவமனையிலும் பணம் இல்லாமல் மரணம் அடைய காரணமான நாள் மறக்க முடியுமா இந்த நாளை ??? ஒவ்வொரு நாளும் வேலை வெட்டிக்கு செல்லாமல் பேங் வாசலில் கால்கடுக்க நின்ற நாட்களை
  இம்மூன்று வருடங்களில் எந்த வெற்றியும் இல்லாமல், ஆனால் எல்லா
  தோல்விகளையும், பொருளாதார வீழ்ச்சியையும், சமூக சீரழிவையும்,
  சாமான்யர்களின் சரிவையும் உண்டாக்கியதை தவிர செல்லாக்காசு திட்டம் சாதித்து என்ன? ஒரு தோல்வியை மறைக்க ஓராயிரம் பொய்களையும், போலி புள்ளிவிவரங்களையும், ஊடக அடிமைகளையும் உருவாக்கியது தான் பிரதமர் மோடியின் சாதனை. குடிமக்களை கொன்று விட்டு, சுடுகாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தியாகம் செய்யுங்கள் என்று சொன்ன அபத்த
  திருநாள்!
  இன்று சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட போதும், பிஎஸ்என்எல் நட்டம் ஆன போதும் எல்லாத்தையும் மடைமாற்றம் செய்து வள்ளுவர், பஞ்சமி என இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லிக் கொண்டு இருப்பது பெரிய சாதனை அல்லவா?
  நேத்திக்கி ஒரே நாளில் cognizant 12000 பேரை தூக்கிடுச்சி .. 60 லட்சம் பேருக்கு வேலை போச்சி 3 வருஷசத்திலே ..  இதே 3 வருஷசத்திலே கள்ளநோட்டு 2000 ரூ மட்டும் இல்ல , 500 நோட்லையும் கீதுபா.. ஆனா 11000 மடங்கு அமித்ஷா மகன் வருமானம் 3 வருஷத்திலே உயர்ந்து போச்சிபா.. பட் பாருப்பா .. 2019 தீபாவளி சேல்ஸ் எல்லாம் கூட படுத்து போச்சாம் .. வியாபாரிகள் எல்லாம் புலம்புறாங்கோ .. 3 வருஷம் போச்சே .. புதுசா பொறந்த இந்தியா தயவு செய்ஞ்சு கண்ணில காட்டுப்பா .. பொருளாதார சீர்குலைவுநாள்
  PS: பகிராதீர்கள். காப்பி + பேஸ்ட் இந்த ஹாஷ்டேக்குகளோடு போடுங்கள்.
  By Narain Rajagopalan

  திராவிடத்தை அழிக்க ஆர் எஸ் எஸ் களம் இறக்கிய தமிழக தலைவர்கள் வரலாறு

  Kandasamy Mariyappan : எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் பழனிச்சாமி வரை!
  டெல்லியின் நண்பர்களாக இங்கே உருவெடுக்கும் ஒவ்வொருவரும் அவரவர் காலத்தில் திராவிட சித்தாந்தத்தை அழிக்க நேரடி &; மறைமுக RSS ஆட்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகளே!
  1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, திமுகவை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டியது RSS. ஏனென்றால் இங்க ராமரை செருப்பால் அடித்த திமுக என்று பிரச்சாரம் செய்தும், திமுக அமோக வெற்றி பெற்றிருந்தது.
  வேத புரட்டுகளை மக்களுக்கு எடுத்துரைத்த சித்தாந்தங்கள், ஒன்று கம்யூனிஸம் மற்றொன்று திராவிடம். கம்யூனிஸத்தை வளைத்துப்போட்ட பார்ப்பணர்களால், பெரியாரின் சீரிய சிந்தனை காரணமாக திராவிட இயக்கத்திலும், திமுகவிலும் நுழைய முடியவில்லை.
  எனவே அது ராமச்சந்திரன் என்ற இந்திராவின் அடிமையை பயன்படுத்திக்கொண்டது. திமுகவை விட்டு வெளியேறியிருந்த அவரை வைத்து, வேத சித்தாந்தமான சாதீயத்திற்கு மீண்டும் தூபம் போட்டது. பார்ப்பனீய ஊடகங்களின் துணையோடு கலைஞர் மீதும், திமுக அமைச்சரவை மீதும் சேற்றை வாரி வீசத் தொடங்கியது.
  1976 - 77
  நெருக்கடி நிலையை எதிர்த்த ஆளுங்கட்சிகள்: ஒன்று திமுக மற்றொன்று குஜராத் சுதந்திரா கட்சி

  அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு

  கோப்பு படம்அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு மாலைமlarலர் :  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, அங்கு 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நயாகாட்பகுதியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
  புதுடெல்லி உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.< இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

  சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; .. கவர்னர் ஆலோசனை

  தினத்தந்தி : சிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
   மும்பை, 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

  BBC ஆந்திரா பிரசாதத்தில் சைனைடு கலந்து கொடுத்து 10 பேர் தொடர் கொலைகள்


  ஆந்திரா தொடர் கொலைகள்: ரைஸ் புல்லிங் மோசடி, சைனைடு கொடுத்து 10 கொலை செய்த நபர் ! ஷங்கர் வடிசெட்டி - பிபிசி தெலுங்கு
   தொடர் கொலைகளை செய்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவா என்று அறியப்படும் சிம்ஹாத்ரிக்கு எதிராக ஆந்திர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 20 மாதங்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் 10 கொலைகளை சிம்ஹாத்ரி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  கொல்லப்பட்ட 10 பேரில் மூன்று பேர் பெண்கள். கொல்லப்பட்டோரில் சிம்ஹாத்ரியின் உறவினர்கள், வீட்டு உரிமையாளர், நண்பர்கள் மற்றும் அவருக்கு கடன் வழங்கியோர் உள்ளனர்.
  இவற்றில் 4 மரணங்கள் மட்டுமே சந்தேகத்திற்குரிய மரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனையவை இயற்கை மரணங்களாக நம்பப்பட்டவை.
  பிரசாதத்தில் சைனைடு கலந்து கொடுத்து சிம்ஹாத்ரி இந்த கொலைகளை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

  வியாழன், 7 நவம்பர், 2019

  BBC : மறுக்கப்படும் ஹெச் – 1பி விசா: இந்திய நிறுவன ஊழியர்களை குறி வைக்கிறதா அமெரிக்கா?

  குடும்பம்அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கை கட்டுப்பாடுகளால், ஹெச் – 1பி விசாக்கள் மறுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
  குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு என அமெரிக்க ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை நடத்திய ஆய்வில், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பிரபலமான ஹெச் -1 பி விசாக்கள் மறுக்கப்படும் விகிதம் 2015 ல் வெறும் 6 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 24 சதவீதமாக இது அதிகரித்துள்ளது.
  2017ம் ஆண்டு அமெரிக்காவை சிறந்ததாக்குவோம் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு, ”பை அமெரிக்கன் அண்ட் ஹையர் அமெரிக்கன்” என்ற உத்தரவை அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.

  பேரறிவாளனுக்கு மீண்டும் 1 மாதம் சிறை விடுப்பு .. தமிழக அரசு அறிவிப்பு

  Rajiv Gandhi Murder: Perarivalan gets 1-month parol from Monday tamil.oneindia.com - shyamsundar : சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட இவர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது தூக்கு தண்டனை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைக்காக அவரின் தாய் அற்புதமம்மாள் போராடி வருகிறார்.
  இந்த நிலையில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் காரணம் கட்டி பரோல் கேட்கப்பட்டது.

  மகாராஷ்டிராவில் கூவத்தூர் பாணி!


  மகாராஷ்டிராவில் கூவத்தூர் பாணி!
  மின்னம்பலம் :நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்ற நிலையில் சிவசேனா தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்துள்ளது.
  105 இடங்களை வென்ற பாஜகவும், 56 இடங்களைப் பெற்ற சிவசேனாவும், முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையை புதிய அரசாங்கத்தில் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் ஆதித்ய தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சிவசேனா உறுதியாக இருப்பதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.

  திமுக பொதுக்குழுவில் திருமாவுக்கு எதிராக குரல்?

  திருமாவுக்கு எதிராக பொதுக்குழுவில் குரல்: திமுக திட்டம்!மின்னம்பலம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் எங்களை திமுக முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகளும், விடுதலை சிறுத்தை நிர்வாகிகளை அதிமுக வளைத்துவிட்டது என்று திமுகவினரும் களத்தில் பரஸ்பரம் புகார் சொல்லிக் கொண்டிருந்தனர்.
  அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தல் களத்தை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, திருமாவளவனையும், விழுப்புரம் மாவட்ட சிறுத்தை நிர்வாகிகளையும் கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியது.
  ஆனால் அப்போது இதை வெளிக்காட்டாத திருமாவளவன், தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ச்சியாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்துவரும் பேட்டியில் இதைச் சொல்லி வருகிறார்.

  கோவை சிறுமி பாலியல் வழக்கு: தூக்கு தண்டனை உறுதி... உச்ச நீதிமன்றம் ...

  தினமலர் :  புதுடில்லி: கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
  கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிக்கும் துணிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார்(40). இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
  கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.
   கோவையைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகிய இருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் துாக்குத் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை உறுதி செய்து ஆகஸ்டு 1 -ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்து துாக்கு தண்டனையை உறுதிபடுத்தியது.

  ஸ்டாலின் வேண்டுகோள் : மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள்


  மாலைமலர் : அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் -
  சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்

  பசுமைப் புரட்சியல்ல அது!... உண்மையில், ’’பசுமையை சூறையாடிய சதி?

  சாவித்திரி கண்ணன் : புரட்சி வந்து தான் இந்திய மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றியது என்ற பச்சைப் பொய்யை ஒட்டு மொத்த
  சமூகத்தையும் நம்ம வைத்துவிட்டன! - அரசின் பிரச்சாரங்களும்,அரசு ஆதரவான அதிகாரவர்க்கத்தின் ஊதுகுழலான ஊடகங்களும்!
  இல்லை, பசுமைப் புரசியல்ல அது!
  உண்மையில், ’’பசுமையை சூறையாடிய சதி’’ என்பதை ஆதாரபூர்வமாக நிருபிப்பதே இந்த நூல்களை நான் எழுதியதன் நோக்கம்!
  பசுமைப் புரட்சிக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 30 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகிவிட்டன!
  காவேரி டெல்டாவில் 21 லட்சம் ஹெட்டேரில் விளைந்த நெற்பயிர்கள் இன்று 8.5 லட்சம் ஹெட்டேராக சுருங்கிவிட்டது.
  இந்தியாவில் ஆண்டுக்கு 500 லட்சம் டன்னுக்கும் அதிகமான ரசாயன உரங்கள் வெளி நாடுகளில் இருந்து, பல ஆயிரம் கோடி செலவில் தருவிக்கப்படுகிறது.
  இதன் மூலம் வெளி நாட்டின் நச்சு உரங்களுக்கான சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது மட்டுமல்ல, நமது விவசாயமே அன்னிய நாட்டின் தயவில் தான் நடக்க முடியும் என்ற நிலைமை தோன்றியுள்ளது.

  சஞ்சனா டீச்சரின் செல்போன்.. தோண்ட தோண்ட ஆபாச படங்கள்.. அதிர்ந்த சென்னை போலீஸ்!

  tamil.oneindia.com-  Hemavandhana  :;சென்னை: "எனக்கு என் காதலன் வேணும்.. அதுக்காகத்தான் என்னிடம் படிக்க வந்த மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, காதலனுக்கே விருந்தாக்கினேன்" என்று சஞ்சனா டீச்சர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
  சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா என்ற 28 வயது பெண் பட்டதாரி, வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்திவருகிறார். இதில், 10,11, 12ம் என 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அவரது முகம் களைப்புடன் காணப்பட்டது.. ஆடைகள் கலைந்திருந்தது.. முகமெல்லாம் அழுது வீங்கியிருந்தது... அந்த கோலத்தை பார்த்ததுமே பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால், மகளிடம் வந்து இதை பற்றி விசாரித்தனர். 
   அப்போது, டியூசன் டீச்சர் சஞ்சனாவும், அவரது ஆண் நண்பர் பாலாஜியும் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் பெட் ரூமில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரவும், சஞ்சனா, ஆண் நண்பர் பாலாஜியை பிடித்து விசாரித்தனர்.

  முரசொலி அலுவலகம் முற்றுகை என அறிவிப்பு: பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் திமுக மனு

  murasoli-office-declared-a-siege-dmk-appeals-to-police-commissionerhindutamil.in :  சென்னை. முரசொலி அலுவலகத்துக்கு 'நாகர் சேனை - மறு உலகப் பேரரசு' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பி வரும் செய்தி குறித்து காவல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது. 'அசுரன்' படத்தைப் பார்த்துப் பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்துப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
  இதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, முரசொலி அலுவலக தாய்ப்பத்திரத்தை பதிவிட்டு நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் இல்லாவிட்டால் ராமதாஸும், அன்புமணியும் விலகத்தயாரா என ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்.

  வார்டனை 15 முறை கத்தியால் குத்திய 19 வயது திருச்சி கல்லூரி மாணவன் கைது!

  incident in duraiyoor... police investigation nakkheeran.in - ஜெ.டி.ஆர் : திருச்சி துறையூர் கண்ணனூர் பகுதியில் உள்ளது இமயம் வேளாண்மை கல்லூரி. இந்த கல்லூரியில் பொள்ளாட்சியில் இருந்து வெங்கட்ராமன் என்பவர் கடந்த 15 வருடமாக கல்லூரி விடுதியில் வார்டனாக இருக்கிறார்.
  இந்த கல்லூரியில் பெரம்பலூர் குன்னம் பகுதியிலிருந்து அப்துல் ஹக்கீம் என்கிற மாணவன் வேளாண்மைதுறையில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறான். வெளியூரில் இருந்து தங்கி படிக்கும் அப்துல் ஹக்கீம் சமீப காலமாக கல்லூரிக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பதும் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை கண்காணித்த விடுதி வார்டன் வெங்கடன்ராமன் மாணவர் ஹக்கீம் அப்பா அப்துல் ரகுமானுக்கு உங்கள் பையன் கல்லூரிக்கு வருவதில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.

  ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! ஆசாத் பெயரை மாற்றி தந்தை பெயரை வைக்க எதிர்ப்பு

  m.dailyhunt.in : ஆந்திர மாநிலத்தில் அப்துல் காலம் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருதின் பெயரை மாற்றியதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 'ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புராஸ்கர்' என்று வழங்கப்பட்டு வந்த விருதின் பெயர் 'ஒய்.எஸ்.ஆர் வித்யா புராஸ்கர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
  மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆந்திர மாநில பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருதுகள், உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் நிலவிய கடும் பஞ்சங்கள் .. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி பிறந்த கதை இது

  பாண்டியன் சுந்தரம் : நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது
  "சாப்பிட்டாச்சா?" என்று இன்று கேட்கிறோமே, இது எப்போது துவங்கியது தெரியுமா?
  தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம்1896இல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் பஞ்சங்களுக்கு முக்கியக் காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே. கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
  துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்தப் பஞ்சங்கள் காவு வாங்கின.

  காமராஜரை நேருவா கண்டுபிடிச்சாரு .. இல்ல வெள்ளைக்காரனா கண்டு பிடிச்சாங்க? அமரர் இரா.வெற்றிகொண்டான் பேச்சு ... வீடியோ


  ராஜாஜி கல்கத்தாவில கவர்னராகவும் இருந்தாரு  இங்கே முதலமைச்சராகவும் இருக்கிறாரு ..    அப்பத்தான் பெரியாறு நினைசாரு ..
  அடேய் இவனுக குடுமியையும் பிடிசுகிரானுக  காலையும் பிடிசுக்கிராணுக .  இதுக்கொரு வழி பண்ணல இனிமே இந்த ஜனங்களை காப்பாத்த முடியாது ..
  அப்போ ஒரு கோஷத்தை கொண்டுவாறாரு ... பச்சை தமிழன் ஆட்சியை கொண்டுவருவேன் .
  பண்டித நேருவா காமராஜரை கண்டுபிடிச்சாரு ? இல்லை வெள்ளைக்காரனா கண்டு பிடிச்சாங்க ?
  காமராஜர் என்ற ஒரு தலைவரை விருதுநகர்ல போயி  வா இங்க .. இந்த பார்ப்பனுங்களுக்கு கோட்டையில போயி எவன் முத்திரை தாள் குத்திட்டு இருக்கானோ அவனை கீழ இறக்கணும்னா அது உன்னை வச்சுதான் இறக்குனும் வா .
  பெரியார் கொண்டுவந்த சீதனம்தான் காமராஜர் என்கின்ற தலைவனேதான் தவிர , பெரியார் உருவாக்கிய ஆட்சிதான் காமராஜர் ஆட்சியே தவிர ...
  ஒரு பெரிய புரட்சி பண்ணாம பெரிய போராட்டம் பண்ணாம இவனுகளை ஒட்டுமொத்தமா தூக்கி கடாசனும்னா காமராஜர்தான் ஒரே துருப்பு சீட்டுன்னு கூட்டிட்டு வந்தார் .
  குடியாத்தம் இடைதேர்தல்ல நில்லு .. நான் வந்து பார்த்துக்கிறேன் ..
  காமராஜர் சொன்னார் .. : நான் ரொம்ப பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில பிறந்தவன் .. நாடார் சமுதயத்தில பிறந்தன் .. ராமநாதபுரம் ஜில்லாவில பிறந்த என்னைய போயி வட ஆர்காட்டுல ஜில்லாவில நிக்க சொல்றீங்களே எனக்கு யார் ஒட்டு போடுவா ?  ..  அங்க இஸ்லாமியர்களும் முதலியார்களும்தான் அதிகம் .. எனக்கு என் ஜாதிக்கு யார் ஒட்டு போடுவா
   அப்ப இருக்கிற நிலைமையை பாருங்க .. கண்ணீர் விட்டு அழலாம் இந்த இனமே அழுலாம் ... அந்த ஜாதிஉணர்வால எவ்வளவு அழுத்தபட்டிருப்பார் .. அவர்இருதயத்தில இருந்து அந்த வார்த்தை வெடிச்சு ...

  சமுக வெளியில் பாண்டியராஜனுக்கு கடுமையான அர்ச்சனை

  ஆலஞ்சியார் : மாஃபா பாண்டிய ராஜன் அரசியல் கழிவு ..
  மும்பையில் பிரமோத் மகாஜன் இடத்தில் வேலைபார்த்து அவர் மறைவுக்கு பிறகு சென்னைக்கு வந்தவர் .. வரும் போது "கொண்டுவந்ததை" காத்துக்கொள்ள அரசியலுக்கு வந்து பாஜக தேமுதிக அதிமுக என தன் நிலைப்பாட்டில் "உறுதியாய்" இருப்பவர் .. இவரெல்லாம் தளபதியாரை பேசுவதும் அதை ஊடகங்களும் சமூக கிருமிகளும் பிரபலபடுத்துவதும் இன்றைய அரசியலில் நிலையை தெள்ளதெளிவாக காட்டுகிறது .. ..
  மிசா தளபதி ஆர்எஸ்எஸ் இந்திய ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஒருமைபாட்டிற்கே ஆபத்தானது .. வரலாற்றை திரித்து அல்லது மறைத்து
  பொய் மூட்டைகளை அவிழ்த்து உண்மைக்கு புறம்பாய் வரலாற்றை எழுத நினைப்பதும் அது தொடர்ந்து அறிவுடை சமூகமான தமிழ் சமூகம் புறக்கணிப்பதும் எள்ளுவதும் தொடர்ந்து நடப்பதுதான் இவருக்கெல்லாம் பதில் தேவையா என்று கூட சிலர் நினைக்கலாம் அரசியல் விபச்சாரிக்கு ஏன் விளம்பரம் தர வேண்டுமென நினைக்க தோன்றும் .. கழிசடைகளை மக்கள் முன் தோலுரிக்கவேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது ..

  புதன், 6 நவம்பர், 2019

  Simon Casie Chetty.. தமிழும் அகராதிகளும் உள்ளவரை சைமன்காசிச் செட்டியார் புகழ் வாழும் ம்.

  Thulakol Soma Natarajan : சைமன் காசிச்செட்டி நினைவு நாள் , நவம்பர் , 5 , (1860)
  #(Simon Casie Chetty, மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860),
  #19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார்.
  அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
  #இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
  #தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச்செட்டியின் புதல்வராகப் பிறந்தார்.
  இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது.
  வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது.
  தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர்.

  பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )

  Thulakol Soma Natarajan : பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )

  எம்.எல்.பிள்ளை என்றும் கா. சு.பிள்ளை என்றும் அறியப்பட்டவர்
  நெல்லைச் சீமை' தமிழுக்களித்த நற்றமிழ் வளர்த்த கா.சு. பிள்ளை.
  இந்திய அளவில் நடந்த சட்ட நூல் ஆய்வுப் போட்டியில் வெற்றி பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டத்தை வென்று 10 ஆயிரம் வெண் பொற்காசுகள் பரிசாகவும் பெற்றவர்.
  இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை ஆகியவை,
  பிற்கால வரலாற்று நூல்களும், திருக்குறள் உரைகளும் எழுதியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.
  இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று வறுமையில் வாடிய இவரை செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தி ஆதரித்தார்.
  சைவர். ஆனால் முற்போக்காளர் .
  இவர் நினைவாக " பல்கலைப்புலவர் தமிழ்க் கா.சு. நூறு" என்ற நூலில் 100 அறிஞர்கள் இவர் புகழ் பாடும், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளனர்.
  அதில் முதற்கட்டுரை பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு சிறு பகுதி இது......
  . "சைவமாம் கடலில் நீந்திச் செல்லும் போது எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடம் வீசி எறிந்துவிட்டு
  மீண்டும் அச்சைவக் கடலிலேயே நீந்திச் சென்றவரைச் சைவ உலகம் கைவிட்டு விட்டதென்றால் அது பெரிதும் வருந்தத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும் "

  இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் .. இரு பெண்கள் வயிற்றுக்குள் .. அந்த பெண்களை வழியில் கடத்திய மர்ம மனிதர்கள் .

  தங்கத்தை கடத்தி வந்த பெண்களை கடத்தி சென்ற கும்பல்- சினிமா பாணியில் சென்னையில் பரபரப்புமாலைமலர் :வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த பெண்களை பரிசோதனையின் போது வழிமறித்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம்:
  இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, திரேசா என்ற 2 பெண்கள் வந்தனர்.அவர்களது வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது 2 பேரின் வயிற்றிலும் சிறிய மாத்திரை வடிவிலான தங்க கட்டிகள் இருந்தன.>
  இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து தங்கத்தை வெளியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு 2 சுங்க அதிகாரிகள் பெண்களை அழைத்துச் சென்றனர். இதில் பெண் அதிகாரி ஒருவரும் இருந்தார்.
  ஆஸ்பத்திரி அருகில் வைத்து 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழி மறித்தது. காரில் இருந்து இறங்கியவர்கள் சுங்க அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டி, பாத்திமாவையும், திரேசாவையும் கடத்திச் சென்றனர்.

  இன்போசிஸ்: 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு!

  இன்போசிஸ்: 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு!மின்னம்பலம் : நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ், சரியாக செயல்படாத ஊழியர்ளை பணி நீக்கம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ், பணிகளைச் சரியாக செய்யாத ஊழியர்கள், தன்னிச்சையாக செயல்படும் ஊழியர்கள் என பல மட்டங்களில் இருக்கும் ஊழியர்களின் சேவைகளை நிறுத்தியுள்ளதாக தனியார் நிறுவன வட்டாரம் நேற்று(நவம்பர் 5) தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.
  சமீபத்தில் காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனமும் இதுபோன்ற அதிரடியான பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது இன்போசிஸும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

  வள்ளுவருக்கு காவி: பாஜகவை முந்திக் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை!

  வள்ளுவருக்கு காவி: பாஜகவை முந்திக் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை!மின்னம்பலம் : திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜகவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுகிறார்கள், இது கண்டிக்கத் தக்கது என்று திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க அதிமுக அரசின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
  பாஜகவோ, ‘திருவள்ளுவர் ஒரு இந்துதான். அதனால் அவருக்கு காவி உடை பொருத்தமானதுதான்’ என்று பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலைக்கு தமிழர் அல்லாதோர் சாணம்பூசிவிட்டுப் போக, இன்று அதே வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி ருத்ராட்சம் அணிவித்துக் கைதாகியிருக்கிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
  அந்த சிலையை சுற்றி வேலி அமைத்து போலீஸார் பாதுகாத்து வருகிறார்கள்.
  இந்த பரபரப்புக்கு இடையே மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதில் பாஜகவுக்கு முன்னோடியாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைதான் செயல்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜவாஹிருல்லா.

  விமானத்தில் யோகா செய்த சிங்களவர் இறக்கி விடப்பட்டார் ..

  வீரகேசரி :  சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர் கீழே இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளத சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை – கொழும்புக்கு இன்று காலை ஸ்பைஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். விமானத்தில் யோகா செய்த நபருக்கு நேர்ந்த கதி !இந்நிலையில்,  இலங்கையைச் சேர்ந்த குணசேனா என்ற இளைஞர் திடீரென விமானத்தின் கதவு அருகே சென்று அமர்ந்தபடி யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை செய்தார். இதை பார்த்த மற்ற பயணிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். குணசேனாவிடம் இருக்கைக்கு சென்று அமருமாறு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.< ஆனால் குணசேனா தொடர்ந்து யோகா பயிற்சி செய்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  திருக்குறள் முதல் மொழி பெயர்ப்பு 1730ம் ஆண்டு... வெளியிட்டவர் பாதிரியார் கோன்ஸ்டண்டின் பெஸ்கி (வீரமாமுனிவர்)

  Subashini.thf : திருக்குறளின் மீது தீராத பற்று கொண்டு அதனை மொழிபெயர்ப்பு செய்து ஐரோப்பாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை முதலில் பாதிரியார் கோன்ஸ்டண்டின் பெஸ்கி (வீரமாமுனிவர்) என்ற இத்தாலிய தமிழ் அறிஞரையே சாரும். இவரது முதல் திருக்குறளுக்கான மொழி பெயர்ப்பு நூல் 1730ம் ஆண்டு வெளிவந்தது. இதற்குப் பிறகு படிப்படியாகப் பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என சில மொழிபெயர்ப்புகள் வெளிவரத்தொடங்கின. இத்தகைய முயற்சிகளின் வரிசையில் F.W.எல்லிஸ் அவர்களது பங்களிப்பு சிறப்பிடம் பெறுவது. அவர் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கி 1810ம் ஆண்டில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயங்களை 1810ம் ஆண்டில் வெளியிடுகின்றார். F.W.எல்லிசின் இந்த மொழிபெயர்ப்பு நூலின் 2 பக்கங்கள் இணைத்துள்ளேன். இதில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவத்தையும் வாசிப்போர் கவனத்தில் கொள்க!
  -சுபா