வெள்ளி, 21 ஏப்ரல், 2023

12 மணி நேர பணி வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு!

minnambalam : 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே 12 மணி நேரம் பணி செய்யலாம் என்றார்

இதுதொடர்பாக பேசிய விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், “தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம் வேண்டும் என்பதற்காக 2023-ல் தொழிற்சாலை திருத்த சட்டம் தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஏப்ரல், 2023

அவதூறு வழக்கு | ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

.hindutamil : சூரத்: தூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.

இனி, ராகுல்காந்தி, இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க மனுவும் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

thinathanthi : கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலைஅடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

விஷ ஊசி போட்டு 300 பேரை கொன்று இருக்கேன்.. நாமக்கல்லில் கருணை கொலை -ஷாக் வீடியோ

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரூ.5 ஆயிரம் பெற்று கொண்டு விஷஊசிப்போட்டு கருணை கொலை செய்ததாக 3 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது சர்ச்சையாகி உள்ள நிலையில் தான் அவர்கள் கருணை கொலை செய்வது எப்படி? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவரை குணமாக்க முடியாதபோது அவர் துடிதுடித்து சிரமப்படுவதை தடுக்கும் வகையில் அவரை கருணை கொலை செய்ய குடும்பத்தினர் அனுமதி கோருவார்கள்.

ilakkiyainfo ;இதுபற்றி உரிய முறையில் பரிசீலனை நடத்தி முறையான அனுமதியுடன் கருணை கொலை மேற்கொள்ளப்படும். இதனை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் தான் செய்வார்கள்.

இந்நிலையில் தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கருணை கொலையை சிலர் சட்டவிரோதமாக செய்து வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சார்பில் வீடியோவுடன் ஆதாரம் குமாரபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் 3 பேர் சிக்கினர். பிணவறை ஊழியர் மோகன், போலி டாக்டர் அப்பாவு மற்றும் மருத்துவமனை ஊழியர் கோவிந்தன் ஆகியோர் பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

புதன், 19 ஏப்ரல், 2023

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விபத்தில் 10 பேர் சிக்கி தவிப்பு

 மாலை மலர் : சென்னை: சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டிடம் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 'டமார்' என்று வெடிச்சத்தம் போன்று பயங்கர சத்தம் கேட்டது. கடுமையான புகை மூட்டமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஓடி வந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள் மலை போல குவிந்து கிடந்தன. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

சைலேந்திர பாபு ஓய்வு: தமிழக டி.ஜி.பி பதவிக்கான போட்டியில் டெல்லி போலீஸ் கமிஷனர்?

tamil.indianexpress.com  : Delhi police commissioner Sanjay Arora  for Tamil Nadu DGP post Tamil News: தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் (டி.ஜி.பி) சைலேந்திர பாபு வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த அவர் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.
அவரை ஆளும் திமுக அரசு கடந்த 2021 மே மாதத்தில் காவல்துறைத் தலைவராக நியமித்தது.
அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டது. அதனால், அவர் முதலில் ஜூன் 2022 இல் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில், டி.ஜி.பி சி சைலேந்திர பாபு வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
அவரது ஓய்வைத் தொடர்ந்து, டி.ஜி.பி பதவிக்கான போட்டி மூத்த அதிகாரிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் டெல்லி நகர காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா களமிறங்கியுள்ளது புதிய திருப்பத்தை அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

 தினத்தந்தி  :புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு
காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், இந்த விவகாரம் தொடர்பாக அமைதி காக்கும்படி பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
காங்கிரஸ் சரமாரி கேள்வி

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்!

 மின்னம்பலம் - கவி  : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் எம்,பி.கார்த்தி சிதம்பரத்தின் 11.04 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை இன்று (ஏப்ரல் 18) முடக்கியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டியது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2019ஆம் ஆண்டு ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே வழக்கில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிந்து ப.சிதம்பரத்தை கைது செய்தது. பின்னர் இரண்டு வழக்குகளிலும் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றார்.

De-Dollarisation பங்களாதேஷ் டாலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயத்தை ரஷ்ய கொடுப்பனவுக்கு ,,,,

 tamil.goodreturns.in  - Prasanna Venkatesh  :  சர்வதேச வர்த்தகத்தில் டாலர் ஆதிக்கமாக இருக்கும் வேளையில் ஒவ்வொரு நாடும் தனது ஏற்றுமதி இறக்குமதிக்கு சொந்த நாணயத்தை டாலராக மாற்ற பேமெண்ட் செய்து வந்தது. இதனால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து பிற நாணயங்களின் மதிப்பு சரிய துவங்கியது.
இந்த நிலை ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு தலைகீழாக மாறியுள்ளது. முதலில் ரஷ்யா அரசு தான் விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்-க்கு யுவான் மற்றும் ரூபாயில் செலுத்த சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வழிவகை செய்தது. இதன் மூலம் ரஷ்யா சர்வதேச பொருளாதார தடைகளை தகர்த்து தொடர்ந்து உலக நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய முடியும்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் துப்பாக்கிகளுடன் கைது.

 மாலைமலர்   :  வடக்கு கலிபோர்னியாவில்  போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள்.  . வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய கோவிலிலும், கடந்த மார்ச் 23-ந்தேதி சாக்ராமென்டோவில் உள்ள சீக்கிய கோவிலிலும் துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

 minnambalam.com  - monisha :  சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) மானியக் கோரிக்கையின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.
2023-24 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கை விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், துறை சார்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சூடானில் தொடரும் வன்முறை - பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

 மாலை மலர் : கார்டோம்: ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை ராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை முன்னாள் தலைவர் சுகிர்தனின்( தமிழரசு கட்சி) வீட்டு வளவுக்குள் விஜிதா என்ற குடும்ப பெண் தீமூட்டி உயிரிழப்பு

File Vedio

 ilakkiyainfo :  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகிர்தனின்  வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழரசு கட்சியின் ஒரு புகழ் பெற்ற ரமுகராகும்.
சம்பவம் தொடர்பில் தெரியருவதாவது,
ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தலைவர் சுகிர்தனின் வீட்டுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற குறித்த பெண் , வீட்டின் வளாகத்தினுள் தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.

திங்கள், 17 ஏப்ரல், 2023

கர்நாடக பாஜக ex முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார்

 மாலை மலர்  :கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார்
தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் இணைந்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

அம்பாசமுத்திரம் பலபுடிங்கி ஏ எஸ் பி பல்பீர் சிங் மீது வழக்குகள் பதிவு

மாலை மலர் : அம்பை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

சீனவை அடுத்து அமெரிக்காவுக்கும் பறக்க போகும் குரங்குகள் .. இலங்கை

/thesamnet. அருண்மொழி  : குரங்குகள் கொள்வனவிலும் வல்லரசு போட்டி – சீனாவை அடுத்து அமெரிக்காவுக்கும் பறக்கவுள்ள இலங்கை குரங்குகள் !
இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது.
எனினும்,  அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் , சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம் ! ஆளுநரை கண்டித்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம் -

  Kalaignar Seithigal - Praveen : ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, தமிழ்நாடு வழியில் ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் நாட்டின் புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் டெல்லி மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம்.
டெல்லி மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நமது நாட்டின் நலன் கருதி மிக முக்கிய விவகாரம் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே என்றும்,

ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும்..” -ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலைக்கு திமுக அதிரடி

 Kalaignar Seithigal - KL Reshma ; தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய முன்தினம் திமுக குறித்தும், ஊழல் செய்ததாக பல்வேறு போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து அண்ணாமலை கூறியதற்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றும், விரைவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்போவதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அவதூறு பரப்புவதற்காக திமுக மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சுமத்திய அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமித் ஷா கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு .. 50 பேர் பாதிப்பு மகாராஷ்டிரா நவி மும்பாயில்

 மாலை மலர் :  மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

யாழ்ப்பாணத்தில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

 தேசம் நெட் : 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகிலிருந்து 23 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் 62 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவற்றின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள் ஆச்சர்யம் - தோண்ட, தோண்ட செப்பேடுகள்

மாலை மலர் : மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுபான ஊழல்: விசாரணை வளையத்தில் கெஜ்ரிவால் சிக்கியது எப்படி?

 minnambalam.com  -Selvam  :  டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஏப்ரல் 16) ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது தேசிய அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மதுபான ஊழல்!
2021-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுபான விற்பனை செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டது.
மதுபான உரிமங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

44 ஆண்டுகளாக மாபியாவாக மிரட்டி வந்த அதீக் அஹமத் 51 நாட்களில் சரிந்த கதை!

 zeenews.india.com -  Vidya Gopalakrishnan  :  உ.பி.யில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா  என கூறப்படும் அதிக் அகமது சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது,
 ​​3 ஆசாமிகளால் தாக்கப்பட்டு இறந்தார். அடையாள அட்டைகள் மற்றும் பைகளை மாட்டிக்கொண்டு ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் வந்த ஆசாமிகள்
துப்பாக்கியால் ஒன்றன் பின் ஒன்றாக 18 தோட்டாக்களை சுட்டதில் அதீக் மற்றும் அவரது தம்பி அஷ்ரப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
கடந்த 58 மணி நேரத்தில் அதிக், அவரது மகன் ஆசாத் மற்றும் சகோதரர் அஷ்ரப் ஆகியோர் உலகை விட்டு பிரிந்தனர்.

போலீஸ் முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை-உத்தர பிரதேசம் . 3 பேர் கைது

மாலை மலர்  : சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தவர் ஆதிக் அகமது. கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச கேங்ஸ்டராக கருதப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவரும் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நிருபர்களுக்கு இருவரும் போலீசாரின் முன்னிலையில் பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.