ராதா மனோகர் : 1868 இல் ராமநாதபுரம் ஜாமீன் அரசு வாரிசுரிமை வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் நடந்தது பற்றி தோழர் அருள்மொழி தெளிவாக கூறியதை பார்த்தேன்.
ஆரிய மனுவாதமும் திராவிட கோட்பாடும் நேரெதிராக மோதிக்கொண்ட வழக்கு அது!
திராவிட கோட்பாட்டின் மனித உரிமை விழுமியம் வெற்றி பெற்ற வரலாறு அது.
ஏறக்குறைய இதே போன்றொதொரு வழக்கு 1971 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவு பற்றியும் நடந்தது.
ஒடுக்க பட்ட மக்களின் கோயில் நுழைவுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் ஆரிய மனுவாதிகளின் ஏவல் பேய்களாக அடக்குமுறையை அவிழ்த்து விட்டிருந்தார்கள்!
நீதிமன்றங்களிலும் இது எதிரொலித்தது.
இவ்வழக்கின் உச்ச நிகழ்ச்சியாக கோயில் நுழைவிக்கு எதிராக லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் சி சுந்தரலிங்கம்!