![]() |
tamil.asianetnews.com - vinoth kumar : சென்னையில் தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்து ஆசிரியை திருகியதால் காது அறுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன். இவரது மகன் மனிஷ்(10). இவர் ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பள்ளி வகுப்பறையில் தமிழில் பேசியதால் பள்ளி ஆசிரியர் நாயகி அவரது காதை பிடித்துக் திருகியுள்ளார்.