நக்கீரன் : திரு ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து அவரது எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
சனி, 8 ஏப்ரல், 2023
ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை: வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்1
மாலைமலர் : . சென்னை: பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார்.
அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி.
மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தரும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்.
வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தேவை. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு தேவையான போதிய ரெயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நெருக்கமாக மாநிலங்கள் தான் இருக்கிறது.
யாழ்ப்பாணம் இருபாலை சிறுவர் இல்லத்தில் 80 வயதான போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: அமைச்சர் எ.வ.வேலு
மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைளை துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று(ஏப்ரல் 7) கூறியுள்ளார்.
மதுரையில் 90 சதவீத பணிகள் முடிவுற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
புதன், 5 ஏப்ரல், 2023
கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு முதலிடம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : டெல்லி : கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்றபோதும், மலக்குழி மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், சாக்கடை மற்றும் கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திர திருவிழாவில் கலச பூஜையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் விலை ரூ.30 ஆயிரம்
மாலைமலர் : மேலசொக்கநாதபுரம்: தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.
அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருமண வேள்வி கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
சென்னை, மடிப்பாக்கம் கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் மரணம்; பங்குனி உத்திரம் நிகழ்ச்சியின்போது சோகம்!
மாலைமலர் : சென்னையில் உள்ள கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை சுவாமியைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சுவாமி பல்லக்கு மூவரசம்பேட்டை பகுதியிலுள்ள கோயில் குளத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் திமுக கூட்டணியில் புகைச்சல்! திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!
திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை: 2 ஆண்டுகளாக கோவிலூர் மருத்துவமனை மரத்துக்கடியில் செயல்படுகிறது.
கோவிலூர் ஊராட்சித்தலைவர் செல்வமணி நடராஜன் ஒரு பழைய சமுதாயக்கூடத்தில் மருத்துவமனை செயல்பட அனுமதித்துள்ளார்.
டொனால்டு ட்ராம்ப் கைது செய்யப்பட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் ..
BBC Tamil : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ட்ரம்ப், பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தன்னுடைய மரலாகோ (Mar-a-Lago) இல்லத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட பின் அடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
சிறுநீரகத்தின் சக்தியை இரட்டிபாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!
zeenews.india.com - Vidya Gopalakrishnan : சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும்.
இது இரத்தத்தை வடிகட்டுகிறது.
ஆனால் சிறுநீரகத்தை நோய் தாக்கினால், அதன் வடிகட்டும் சக்தி பலவீனமாகிறது.
சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ பல நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன.
இது ஆரோக்கியமான மனிதரை கூட நோயாளியாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக ஆகும்.
மறுபுறம், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக நோயின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது.
கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு! - கர்ப்பம் - டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவலால் பெற்றோர் கதறல்..!
tamil.asianetnews.com : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அந்த மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார். கோவையில் கடுமையான வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி யிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அந்த மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாணவிக்கு கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.
அழகான விசுவாசமான நம்பகமான அன்பான அக்கறையுள்ள துணிச்சலான சக்திவாய்ந்த பணக்கார பிராமண மணமகள் வேண்டும்
Prince Ennares Periyar : பிராமணர் டாக்டர். அபினோ குமார், BDS, 5'8" (தற்போது வேலை செய்யவில்லை) (பிறந்தநாள்-2.4.1989, பிறந்த நேரம்-காலை 9:45, பிறந்த இடம்-பாகல்பூர், பீகார், ஜாதி-பிராமணர், கோஹ்த்ரா- பரதவாஜ்)
மிகவும் நியாயமான, அழகான, மிகவும் விசுவாசமான, மிகவும் நம்பகமான, அன்பான, அக்கறையுள்ள, துணிச்சலான, சக்திவாய்ந்த, பணக்கார, இந்தியாவின் மீது மிகுந்த தேசபக்தியுடனும், இந்தியாவின் இராணுவ மற்றும் விளையாட்டு திறன்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும், ஒரு தீவிரமான ஆனால் இரக்கமுள்ளவராகவும், குழந்தை வளர்ப்பில் சிறந்தவராகவும், சுவையான சமையல்காரராகவும், இந்திய, இந்து, ஜார்கண்ட் அல்லது பீகாரைச் சேர்ந்தவராக உள்ள பிராமண, வேலை செய்யும் பெண் தேவை.
முழுமையான ஜாதகமும், 36 குணங்களும் நிச்சயம் பொருந்த வேண்டும்.
ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொதுக் காரியம். பிராம்மணாளுக்கு செய்றதுனால இது ஸ்ரீ காரியமாகவும் இருக்கும். பிற வழிக்குப் புண்ணியம் - அதுதான் தமிழ்லயும் போடலாம்னுட்டு! பீகார் ஜார்க்கண்ட் என்று கேட்டு இருக்க தமிழ்ல ஏன் போடுற அப்படின்னு கேக்குறீங்களா? நமக்குத் தெரிஞ்ச வா யாராவது அங்க இருப்பா... அவாளுக்கு சொல்லலாமோல்லியோ!
பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை..maalaimalar.
டியாகோ கார்சியாவில் 68 தமிழர்கள் .. புலம்பெயர்தமிழர்களின் உதவியை நாடுகிறார்கள்
hirunews.lk : புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் டியாகோ கார்சியா புகலிடக் கோரிக்கையாளர்கள்!
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 68 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு சென்று 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தங்களை அங்கிருந்து மூன்றாம் தரப்பு நாடுகளுக்காவது அனுப்புமாறு கோருகின்றனர்.
குறித்த தீவில் இதுவரை 68 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பெண்களும், 47 ஆண்களும், 17 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி...’ -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்!
மின்னம்பலம் -Aara : சென்னை கலாஷேத்ராவில் பரத துணை பேராசிரியராக பணியாற்றும் ஹரி பத்மன், மாணவிகளின் பாலியல் புகாருக்கு உள்ளானதால் ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதுக்குப் பிறகு சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறிது நேரம் விசாரிக்கப்பட்ட ஹரிபத்மன், பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஹரிபத்மனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிபத்மன்.
கலாஷேத்ராவில் பரத ஆசிரியராக இருந்த ஹரிபத்மன், போலீஸ் கைகளில் சிக்கி கைதிகளின் ஷேத்ராவான புழல் சிறைக்கு போனது எப்படி?
கேரளா: ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மனிதர் - விசாரணையை துரிதப்படுத்த பினராயி விஜயன் உத்தரவு
BBC News தமிழ் : கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து கண்ணூருக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், சக பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் குறித்த உருவப்படத்தை காவல்துறையினர் இன்று வெளியிட்டிருந்தனர்.
அந்த உருவப்படத்தில் இருப்பது போன்ற நபர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் காணப்பட்டார் என்று தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் விசாரணையில், சிசிடிவியில் காணப்பட்ட நபர், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் அல்ல எனத் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழாவிலிருந்து மதியம் 2.55 மணிக்கு கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.55க்கு கண்ணூரை சென்றடைவது வழக்கம். இந்நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி மதியம் வழக்கம்போல பயணிகளுடன் ஆழப்புழாவில் இருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில், கோழிக்கோடு அருகே சென்றுகொண்டிருந்தது.
திங்கள், 3 ஏப்ரல், 2023
கலாஷேத்ரா பாலியல் - 3 உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்துக்கு பணிந்தது நிர்வாகம் !
Kalaignar Seithigal - Praveen : பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உத்தரவு பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு- ஜாமீனும் நீட்டிப்பு
மாலை மலர் : சூரத் அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!
vinavu.com : “சுற்றி வளைக்குது பாசிச படை: வீழாது தமிழ்நாடு துவளாது போராடு”
மே 1 மதுரை மாநாட்டுக்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இன்று (02.04.2023) காலை 9 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவில் மரத்தடியில் அமர்ந்து மாநாட்டு பிரச்சாரத்திற்கான பிரசுரங்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் மடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு போலீசு உடையில் இல்லாத ஒருவர் (போலீசு ஆய்வாளர்) ”இங்கு என்ன நடக்கிறது;
யார் நீங்கள்” என்று கேட்டார்.
தோழர்களிடம் பிரசுரத்தை வாங்கிப்படித்துவிட்டு “இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது.
மக்கள் அதிகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நீங்கள் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபடலாம்;
திரு இராம அரங்கண்ணல் - செலவின்றி 2 முறை மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆனவர் !
Aram Online - -சாவித்திரி கண்ணன் : திமுகவின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர் இராம.அரங்கண்ணல். பெரியார், அண்ணாவிடம் குருகுலவாசம் செய்தவர்.
தனி மனித ஒழுக்கம், எதிரிகளையும் நண்பனாக்கிடும் சுபாவம், பொதுநலத் தொண்டு, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட அரங்கண்ணல் அரசியலிலும், சினிமாவிலும் சந்தித்த சவால்கள் சுவையானவை..!
சிறுவயதில் தீவிர காங்கிரஸ் பற்றாளராக இருந்த இராம.அரங்கண்ணல் தன் தமிழ் பற்றாலும், திருவாரூர் பள்ளித் தோழன் கலைஞர் கருணாநிதியின் நட்பாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் நகர்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!
மின்னம்பலம் - Selvam : எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் பாஜக அல்லாத 37 மாநில மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை காணொலி காட்சி வாயிலாக மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.
ஞாயிறு, 2 ஏப்ரல், 2023
செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் இறந்த சிறுவன் உடலில் 96 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை
செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அண்மையில் அவரது உடற்கூராய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்வே லைனில் பேட்டரியை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட ,
அங்கு நடந்த சித்ரவதையால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை காட்டுகிறது என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசிர்வாதம்.
அறிக்கையில் என்ன இருக்கிறது?
ஆன்லைன் ரம்மியில் பறிபோன 50 லட்சம்;அண்ணனை அடித்தே கொன்ற தம்பி-தூத்துக்குடி
நக்கீரன் : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்திருக்க மறுபுறம் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த அண்ணன்
அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க பூர்வீக வீட்டை விற்க முயன்ற நிலையில், சகோதரர் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதி சேர்ந்தவர் நல்லதம்பி இவர். இரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மதவாத சக்திகளை எதிர்கொள்ள பெரியார் என்ற பெருவிளக்கு தேவை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு
நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நானும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கலந்து கொண்டோம்.
அக்கூட்டத்தில் பேசிய நான் - வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதனைத் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்குப் பிறகு பேசிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், அதனை உறுதிப்படுத்தி பேசினார்கள். அதனை உறுதிப்படுத்தி பேசினார்கள்.
ஆருத்ரா மோசடி வழக்கு... வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்!
tamil.news18.com : ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு ஜூலை மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்தது.
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம்.....திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம்
ராதா மனோகர் திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம் யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம்
கீழ்கண்டிருக்கும் கனவான்கள் தாங்கள் இச்சங்கத்தின் போஷகர்களாக இருப்பதற்கு சம்மதப்பட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ மான் சேர் அம்பலவாணர் கனகசபை அவர்கள்
2. கௌரவ ஸ்ரீமான் துரைசாமி அவர்கள்.
3. கௌரவ ஸ்ரீ மான் எஸ் ராஜரத்தினம் அவர்கள்
4. கௌரவ ஸ்ரீ மான் தா மு. சபாரத்தினம் அவர்கள்
இப்பொழுது நாங்கள் சங்கம் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிறது.
பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அலுவல்கள் நடந்து வருகிறது.. சங்கத்திற்கு புதிய அங்கத்தினர்கள் தொகையாக சேர்க்கிறார்கள்.
சென்ற மாதத்தில் மயிகம்பட்டி, மயிலணி என்னும் இடங்களில் கிளைச்சங்கங்கள் ஏற்படுத்த பட்டன.
அங்கத்தினர்கள் தயவு செய்து தங்கள் மாதாந்த கட்டணங்களை கொடுத்து ரசீது பெற்றுகொள்ளவும்.
சித்திரை மாதம் பள்ளிக்கூடத்திற்கு அத்திவாரம் போடுவதற்கு தீர்மானிக்க பட்டிருக்கிறது.