சனி, 2 நவம்பர், 2013

சிதம்பரம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூற நேரில் வந்தது ஏன் ? உண்மையான காரணம் தேர்தல் ஜூரம் !

சனிக்கிழமை திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த
ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, தாம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறி;

ஸ்வேதா மேனனிடம் பாலியல் சேஷ்டை செய்த காங்கிரஸ் எம்.பி. பீத்தாம்பர குரூப் (வயது 73)

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு
நடிகை ஸ்வேதா  வெறும்  ஒரு சாதாரண சினிமா நடிகை அல்ல . அவர் உண்மையில் சமுக உணர்வு  உள்ள ஒரு திரைப்பட போராளி என்றே சொல்ல வேண்டும், பிரசவகாட்சியில் நடித்ததன் மூலம்தாய்மையின்  மகத்துவத்தை புரிய வைத்தவராவார் 
‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.>ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது.

அமெரிக்காவின் மருத்துவ மோசடிகள் செய்த இந்திய டாக்டர் கைது

Amar Nath Bhandary, 53, from Oklahoma was sentenced to 30 months in prison, followed by three years supervised release and a $20,000 fine, US Attorney for the Western District of Oklahoma Sanford Coats said in a statement. 
இந்திய மருத்துவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓக்லஹாமாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இந்தியரான பண்டாரி, 2008ஆம் ஆண்டு தாம் செய்யாத சேவைக்காக போலி ஆவணங்கள் மூலம் காப்பீட்டுத் தொகை கோரியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பண்டாரி மீது கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஓக்லஹாமா நீதிமன்றம் பண்டாரிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும் 20 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் வரையில் அவரை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை வினியோகம் செய்ததாகவும் பண்டாரி மீது ஓக்லகாமா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானிய தாலிபான் தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் !

A suspected U.S. drone strike possibly targeting Pakistani Taliban leader Hakimullah Mehsud killed 
பாகிஸ்தானில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் தலைவர் ஹகிமுல்லா மசூது உள்பட 6 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிகிமுல்லா மசூதின் பாதுகாவலர் தாரிக் மற்றும் முக்கிய தலிபான் தளபதிகளில் ஒருவரான அப்துல்லா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. dinamani.com

வெள்ளி, 1 நவம்பர், 2013

தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினை ! சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.
கேள்வி :
பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.
- ஆர்.கே தாஸ்

பசும்பொன் முத்துராமலிங்கம்
அன்புள்ள தாஸ்,
நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.
சரி, விசயத்துக்கு வருவோம்.

கும்பகோணம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து ! 9 பேர் வெடித்து சிதறினர் ! குழந்தை தொழிலார்களும் அகப்பட்டனர் ?

பட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி.கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனா இவர் விழாக்கலுக்கும் கிராம திருவிழாக்களுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் வானங்கள் மற்றும் வெடிகள், பட்டாசுகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இதைத் தவிர நாளை தீபாவளியை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிப்பது மும்முரமாக இவரது தொழிற்கூடத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆனந்த் (18), த.பெ.செல்வகுமார், வெங்கடேசன் (16)

சஹாராவை கடக்க முயன்றபோது தண்ணீர் கிடைக்காததால் 92 பலி!


அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர். சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது. (Death in the desert: A graphic showing where the bodies of 87 migrants were found in Niger after two vehicles taking them to Algeria broke down before reaching the border)
இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர்.
முதல் கட்டமாக கடந்த 28ம் தேதி சடலங்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பாலைவனத்தில் வேறு யாராவது இறந்தார்களா என்று மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சற்று தூரத்தில் மற்றொரு டிரக் பழுதாகி நின்றது. அதில் பயணம் செய்த 52 பேர் இறந்தது தெரிய வந்தது. அழுகிய நிலையில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்திய தம்பதியினர் 12 மில்லியன் டாலர் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை! தாய் --- 0--- கோதானம் கொடுக்கும் பிள்ளை

அமெரிக்கவாழ் இந்திய தம்பதியரான சதிஷ்-யாஸ்மின் குப்தா வழங்கியுள்ளனர். இந்த தொகையானது டல்லாஸ் பல்கலை க்கழக கட்டிட விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.; வெவ் வேறு மதத்தை சேர்ந்தவர்களான சதிஷ், யாஸ்மின் இருவரும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றபோது, முதல்முறையாக இந்த டல்லாஸ் பல்கலைக் கழகத்தில் பயின்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சதிஷ் குப்தா கூறியதாவது:-; இந்த புதிய கலைக்கட்டிடம் தொடங்கப்பட்டவுடன் வர்த்தகக் கல்லூரியின் வகுப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இயங்கும். உலக கலாச்சாரங்களுக்கிடையே ஒரு புரிதலையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய்வதற்கான ஒரு உலக அரங்காக இந்த வர்த்தகக் கல்லூரி மாறும் என்பது எங்கள் கனவு. மேலும் இந்த கல்லூரியானது, மாணவர்களை உலகத் தலைவர்களாக மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவர்கள் வழங்கியுள்ள இந்த தொகையானது கடந்த 57 வருட கால அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவிற்கு இதுவே அதிகமான நன்கொடையாக கருதப்படுகிறது. .ilankainet.com<

EVKS இளங்கோவன் : ஊதி ஊதி பெருசாக்கபடும் பலூன்தான் நரேந்திர மோடி !

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தான் இலங்கை வடக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடந்தது.
இதுபோல தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இன்னும் போலீஸ் துறை உள்பட பல்வேறு உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த உரிமையை இந்திய அரசு தான் பெற்று தர முடியும்.
இதற்கு இலங்கை அரசுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும். உறவை துண்டித்து விட்டு உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாது.

கட்டவுட் பாலாபிஷேகத்துடன் அஜீத்தின் ஆரம்பம் மகா மகா வெற்றி போலத்தான் தெரிகிறது ! ம்ம்ம்ம்

அஜித்தின் ஆரம்பம் படம், மெகா ஓபினிங்குடன் ஆரம்பமாகியுள்ளது. படம்
வெளியாகும் முன்னரே வெளியான செய்திகள் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்க, இன்று தமிழகம் முழுவதிலும் சுமார் 1,400 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. சென்னையிலும் வேறு சில நகரங்களிலும், நேற்று நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருந்தது.
இதனால், அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டது. சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே முதல் காட்சி ஓடத் தொடங்கிவிட்டது.வேறு சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி, 4.30 மணி என விடிவதற்கு முன்னரே காட்சிகள் தொடங்கின.

திருப்பதி ஆசிரியை மாணவர்களை மூலம் திருடினார் ! வாழ்க ஆசிரியர்கள் !

திருப்பதி : ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் மண்டலம்
ஐயவாரிபல்லி கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியையாக ஷமிம்பீ பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த திப்பண்ணா, புஷ்பவதி தம்பதியின் மகள் மகாலட்சுமி 3ம் வகுப்பு படித்து வருகிறாள்.கடந்த 4 நாட்களுக்கு முன்பு திப்பண்ணாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,180 காணவில்லை. இந்த பணத்தை மனைவி தான் எடுத்து இருப்பதாக கூறி, அவரிடம் திப்பண்ணா தகராறு செய்தார். ஆனால், அந்த பணத்தை அவர் எடுக்கவில்லை. இந்நிலையில், அன்று முதல் மகாலட்சுமி தினமும் பிஸ்கட், மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வந்தாள். இதனால் சந்தேகமடைந்த திப்பண்ணாவும், புஷ்பவதியும் மகளின் புத்தகப் பையை சோதனை செய்து பார்த்தனர். அதில் புத்தகத்தில் சில 10 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி தப்பி ஓட்டம் ! தேர்தல் நேரத்தில் தப்பிக்க விடும் காங்கிரஸ் கலாசாரம் !

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பீகார் போலீசார் விசாரித்த இந்த வழக்கு, அதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குண்டுகள் வைத்த சதிகாரர்கள், 'இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாதிகள் என்று அறிவித்த தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேர் சிக்கினர். நேற்று, டில்லி விமான நிலையத்தில், முகமது அப்சல் என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர் பிடித்துள்ளனர்.
பொதுக் கூட்டத்தில், குண்டுகள் வைத்த பயங்கரவாதி, கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.,) பிடியில் இருந்த போது, தப்பி ஓடியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி நிகழ்ச்சியில் நடந்ததால், என்.ஐ.ஏ., அசட்டையாக விசாரணை மேற்கொள்வதாக, குற்றச் சாட்டு எழுந்துள்ளது.கடந்த ஞாயிறு அன்று, பீகார் தலைநகர் பாட்னாவில், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான குண்டுகள் வெடித்தன. இதில், ஐந்து பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாட்னாவில் பயங்கர குண்டுகள் வெடித்தபோது, மும்பையில் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, தேசிய புலனாய்வு அமைப்பினரை அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளச் செய்தார். இந்த "தப்பிக்க விடும் கலாச்சாரம்" அதிகரித்துள்ளது...அதுவும் தேர்தல் நேரத்தில் ............மக்களை யோசிக்க வைத்துள்ளது....

வாசன் ராஜினாமா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி தேறாது என்ற முடிவில் வாசன் ?

சென்னை: இம்மாதம் 15ம் தேதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்
மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதா, அடுத்தக் கட்டமாக நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் நாளை, தீபாவளியன்று, சென்னையில் உள்ள தன் ஆபீசில், கருத்து கேட்க, மத்திய அமைச்சர் வாசன் திட்டமிட்டுள்ளார். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்த பின், முக்கிய முடிவை வாசன் எடுப்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரட்டம் தீவிரமாக நடந்த போது, அப்போதைய முதல்வர் காமராஜருக்கு, டில்லியிலிருந்து, இந்தி மொழியில் கடிதம் வந்தது, அந்தக் கடிதத்தை கிழித்தெறிந்து, அதே கவரில் போட்டு திருப்பி அனுப்பிய வரலாறு நடந்துள்ளது. வாசனுக்கு முன்பிருந்த அரசியல் செல்வாக்கு இப்போது அவ்வளவாக இருக்க வாய்ப்பே கிடையாது. காங்கிரஸ் என்றாலே இன்றைய இளைஞர்கள் காத தூரம் ஓடுகின்றார்கள். வாசனின் சமயம் பார்த்து வெளியேறும் திட்டத்திற்கு இதுவே நொண்டிச்சாக்கு.

வியாழன், 31 அக்டோபர், 2013

கமல் : பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை

சூப்பர் ஹிட் படங்களின் வசூலை சொல்வதில் நேர்மை வேண்டும் என்றார்
கமல்ஹாசன்.பெங்களூரில் பேட்டி அளித்தபோது கமல் கூறியது:சினிமாவை பொறுத்தவரை அதன் வசூல் விவரத்தை சொல்வதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால்  எவ்வளவு பெரிய தொழில் நுட்பமோ அல்லது வெற்றியோ சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நடிகரும் சரி அல்லது தயாரிப்பாளரும் சரி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூல் என்ன என்பதை வெளிப்படையாகவே சொல்ல வேண்டும். அந்தவகையில் பார்த்தால் ஹாலிவுட் பட வசூலைவிட நமது படங்களின் வசூல்தான் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் 100 கோடி சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம்பேர் சூப்பர் ஹிட் படம் பார்த்தால்கூட இன்றைய விலை நிலவரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இருக்கும். ஆனாலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வசூலை யாருமே சொல்வதில்லை.இவ்வாறு கமல் கூறி உள்ளார். - .tamilmurasu.org

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கை இனிமேல் ஜான் மைக்கேல் குன்ஹா விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ! அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுகளை பின்பற்ற கூடாது

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற 85 உயர் அதிகாரிகள் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதை தடுக்கும் வகையில், அவர்களின் நியமனம் மற்றும் பணியிட மாறுதல்களை முடிவு செய்ய வாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் இந்த வாரியத்தை அமைப்பதை பற்றி முடிவு எடுக்குமாறும் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் நடிகர்கள் கிரிகெட்டு வீரர்கள் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய கட்டுபாடு விதிக்கிறது !

புதுடில்லி : தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும், பிரபல நடிகர், நடிகைகள்,
விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியலை, முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நட்சத்திரங்களை மட்டுமே பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் கெடுபிடி விதித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல்: டில்லி, ராஜஸ்தான், மத்தி பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், இம்மாதம் நடைபெறவுள்ளன. இதில், மூன்று மாநிலங்களில் காங்கிரசும், இரு மாநிலங்களில் பா.ஜ., வும் ஆட்சி செய்கின்றன. இம்முறை எப்படியும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ.,வும், இருக்கும் இடங்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பீதியில், காங்கிரசும், தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மத்திய அரசின் ஊழலை பட்டியலிட்டும், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்னிறுத்தியும், பா.ஜ., மக்களிடையே ஓட்டுகளை சேகரித்து வருகிறது.

infosys மோசடி அம்பலம் ! அமெரிக்காவுக்கு visitors visa வில் வருபவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதால் 35 மில்லியன் டாலர்களை அபராதமாக?

நாராயணமூர்த்தி இந்திய நிறுவனங்கள்தான் வட அமெரிக்காவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சந்தையை கையில் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ன்போசிஸ் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதில் செய்த மோசடிகளுக்காக 35 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த நேரும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கடந்த புதன்கிழமை கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வரலாற்றிலேயே விதிமுறை மோசடிக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒரு நிறுவனம் செலுத்துவது இதுதான் முதன்முறை. ஊழியர்களுக்கான விசாவுக்கு பதிலாக வருகையாளர்களுக்கான விசாவைப் பெற்று இன்போசிஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், கட்டணம் குறைவாக இருக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதுவே அதற்கு காரணம் என்றும் இதுபற்றி எழுதியுள்ள வால்ஸ்டிரீட் ஜர்னல் கூறியுள்ளது.
நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம் என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்மை கடைசியில் ‘யோக்யன் வர்றான், சொம்ப எடுத்து உள்ளே வை’ என்ற கதையாகி அமெரிக்காவிலேயே சந்தி சிரிக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதிய தொழில்முனைவோருக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு என நினைத்து விடாதீர்கள், வியாபார மோசடிகளுக்கும் தான். அவரைப் பொறுத்த வரை நரேந்திர மோடி தான் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகியாம். பொருத்தமான ஜோடிதான்.
எளிதில் கிடைக்க கூடியதும், கட்டணம் குறைவானதுமான B1 விசாக்களை கணக்கு வழக்கில்லாமல் வாங்கிய இன்போசிஸ் அதன் மூலமாக அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்திய பொறியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்துள்ளது.

Raid : ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி சந்தானம் வீடு, அலுவலகங்களில் ரெய்டு

 சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர். சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது. சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
tamil.oneindia.in

ஜில்லா : விஜய்க்கு 20 கோடியை கொடுத்துவிட்டு ஏனையோரின் சம்பளத்தை இன்னும் கொடுக்க வில்லையாம்? கண்ணீர் விடுறாங்க ,

ஜில்லா! இளைய தளபதி விஜய் - மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காம்பினேஷனில் அறிமுக டைரக்டர் நேசன் இயக்கத்தில்  சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் பிரம்மாண்ட படைப்பு. 2014   பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணும் தீவிரத்தில் படு ஜரூராக ஷூட்டிங் நடந்து வருகிறது.    போலீஸ் அதிகாரி யாக விஜய் நடிக்கும் காட்சிகள் ‘தளபதி’யின் ரசிகர்களுக்கு தித்திப்பான கரும்புச்சுவையாக இருக்கும்  என இப்போது கோலிவுட்டில் பரபர டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர் நடிச்ச சீன்கள் எல்லாம் தித்திப்பாகத்தான் இருக்கும். ஆனா, இந்த தீபாவளி எங்களுக்கு கசப்பா போயிருச்சே,  எங்க சந்தோசமெல்லாம் தண்ணியில ஊறுன பட்டாசு மாதிரி நமத்துப்போச்சே’’ என புலம்பித் தவிக்கிறார்கள்.   ஜில்லா படக்குழுவினர்.

மிருகத்தனமாக கற்பழித்தவர்களை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள் பாதிக்கப்பட்ட புகைப்பட நிருபர் நீதிமன்றில் கதறல்


மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில்
சில மாதங்களுக்கு முன்பு பெண்
போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது. டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது திடீர் என்று 18 வயது இளம் பெண் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டேன் என்று பரபரப்பு புகார் கூறினார்.

திருந்த வேண்டிய ஆசிரியர்கள் அதிகம் பேர் உள்ளனர் !

 மாணவர்களுக்கு கல்வி கற்று தருவதுடன் நில்லாமல், அவர்களை
நல்வழிப்படுத்தி அழைத்து செல்வது ஆசிரியர்களின் மிகப் பெரிய கடமையாகும். அதற்கு முதல் கட்டமாக, ஆசிரியர்கள் தங்களின் நன்னடத்தைகள் மூலம் முன்மாதிரியாக விளங்க வேண்டும். ஆனால், சமீப காலமாக பள்ளி ஆசிரியர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிறார்கள். குற்ற வழக்குகளில் சிலர் சிக்குவது ஒரு புறம். இன்னொரு புறம், பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த சம்பவம்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஜமுனாராணி, லதா என இரு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். லதாவிடம் பயிலும் 8ம் வகுப்பு மாணவனிடம் நோட்டு வாங்கி வருமாறு ஜமுனாராணி கூறியிருக்கிறார். அப்போது அந்த மாணவனிடம் லதாவை பற்றி ஏதோ விமர்சித்துள்ளார். அந்த மாணவன் அதை ஆசிரியை லதாவிடம் அப்படியே கூறி விட்டான். இதைத் தொடர்ந்து, இரு ஆசிரியைகளும் பள்ளியிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு ஆசிரியை இன்னொரு ஆசிரியையை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

Thenee.com : ஈழத்தமிழருக்கு ஜனநாயகத்தை பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது ! எதற்கும் பிரச்சனைதான் ?

ஜனநாயக விரோதமும் தமிழர்களும்‏;-வடபுலத்தான் 
தமிழர்களுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகு தூரம். சில பழக்கங்கள் சிலருக்குச் சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. அதைப்போல ஜனநாயகம் என்ற விசயம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு வரவே வராது. அவர்களுக்கு அது புரியவும் மாட்டுது. >இன்று தமிழர்கள் உலகெங்கும் சிதறிப் பரந்து வாழ்கிறார்கள். >இப்படி அவர்கள் சிதறி வாழவேண்டியேற்பட்டதே ஜனநாயகமின்மையால்தான். ;ஒன்று கொழும்பு அரசியற் தலைமையின் ஜனநாயக விரோதப்போக்கினால் ஏற்பட்டது. மற்றது தமிழ்ச் சூழலில் நிலவும் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளின் விளைவினால். ஆகவே உலகத்திசையெங்கும் அகதிகளாகச் சிதறிப் பல்கிப் பெருகியுள்ள தமிழ்க்குடிக்கு இன்று ஜனநாயகத்தின் அருமை பெருமையெல்லாம் தெரிந்திருக்க வேணும். உள்நாட்டில் நிலவிய ஜனநாயக மறுப்பின் தீமையைப் பற்றியும் தற்பொழுது தாம் வாழுகின்ற நாடுகளில் நிலவுகின்ற ஜனநாயக உரிமைகளின் நன்மை பற்றியும் புலம்பெயர்ந்திருக்கிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்களிற் பலர் நடைமுறையில் ஜனநாயக விரோதிகளாக அல்லது ஜனநாயக மறுப்பாளர்களாகவே உள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் அவர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களும் ஊடகங்களும். மேலும் உதாரணம் வேண்டுமென்றால் அவர்களுடைய முகப்புத்தகங்கள்.இன்னும் சொல்லவேண்டுமானால் அவர்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள்.

டிரைவர் தூங்கியதால் 45 பயணிகள் கருகி சாவு

பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி பலியானார்கள். விபத்துக்குள்ளான சொகுசு வால்வோ பஸ் பெங்களூரைச் சேர்ந்த ஜப்பார் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. பஸ்சில் 50 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இவர்களில் 45 பேர் பலியானார்கள். பஸ் டிரைவர் பெரோஸ்கான், கிளீனர் ரியாஸ் மற்றும் 5 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினார்கள். பஸ்சில் 38 பேர் மட்டுமே முன்பதிவு செய்து பஸ்சில் ஏறியுள்ளனர். மற்றவர்கள் வழியில் ஏறி இருக்கிறார்கள். பலியானவர்கள் அனைவரின் உடலும் கரிக்கட்டையாகி போனதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மரபணு சோதனை மூலமே அடையாளம் காணபட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் பலர் பெங்களூரில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றபோதுதான் விபத்தில் சிக்கியுள்ளனர்.
பஸ் பயணிகளின் உறவினர்கள் ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு கவலையுடன் உறவினர்கள் பற்றி விசாரித்து வருகிறார்கள்.
பஸ்சின் டிரைவர் பெரோஸ்கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் அவர் வாகனம் ஒட்டி வந்தாரா? என்பதை அறிய அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க (5 லட்சம்) லஞ்சம் ! அங்குசம் பட தயாரிப்பாளரால் வெளிவந்த உண்மைகள் !

 சென்னை: திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க லஞ்சம்
மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்த பிரச்னைகள் அதிகமாகி கொண்டிருக்கிறதே?
இந்த பிரச்னை குறித்து ஒரு ஆங்கில  இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், தமிழ்த் திரைப்படங்களுக்கு தரப்படும் கேளிக்கை வரிவிலக்கு முறையாகத்தான் அளிக்கப் படுகிறதா என்கிற கேள்வியை அண்மைச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன; அங்குசம் திரைப்பட இயக்குநர் மனு கண்ணன் தன் படத்திற்கு வரி விலக்கு தர லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டி னார்.  மறுநாளே அங்குசம் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸின் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அளித்த புகாரில், தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையைக் கதை களமாகக் கொண்ட படம் நீர்ப்பறவை அதற்குப் பட விழாக்களில் விருது கிடைத்தது.  தமிழக அரசோ அந்தப் படம் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான படம் என்று சொல்லி வரி விலக்கு தர மறுத்தது.

உலகின் மூன்றாவது சக்திவாய்ந்த பெண் சோனியா காந்தி !

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 72 பேர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 21–வது இடம் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், இந்த பட்டியலின்படி சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில், சோனியா 3–வது இடத்தில் இருக்கிறார். சோனியாவுக்கு முன்பாக ஜெர்மனி அதிபர் அங்கேலா மெர்கல் முதல் இடத்திலும், பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசப் 2–வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவை விட 7 இடங்கள் பின் தங்கி உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், சோனியாவுக்கு 9–வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள சோனியாவின் வாழ்க்கைக்குறிப்பில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவருக்கும் இடையே இருந்து வருவதாக கூறப்படும் கருத்து வேறுபாடு பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதுடன், அடுத்த வாரிசான ராகுல் காந்தி, அவசர சட்ட விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை பகிரங்கமாக மட்டம் தட்டி பேசிய தகவலும் இடம் பெற்று உள்ளது  dailythanthi.com

பிரெஞ்ச் உளவுத்துறை 20 மில்லியன் யூரோ கொடுத்து பணயக் கைதிகளை மீட்டது உண்மையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 4 பிரெஞ்ச் பிரஜைகள், திடீரென
விடுவிக்கப்பட்ட செய்திதான் தற்போது சர்வதேச மீடியாவில் ஹைலைட். அல்-காய்தாவின் வடக்கு ஆபிரிக்க பிரிவால் கடத்தப்பட்டு, பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இந்த நான்கு பேரையும் விடுவிக்க, பிரான்ஸ் அரசு பணயத் தொகையான பணம் கொடுத்ததா என்ற சர்ச்சை பெரிதாக தொடங்கியிருக்கிறது.
பணம் கொடுத்ததை பிரெஞ்ச் அரசு மறுத்தாலும், பிரெஞ்ச் அரசின் உளவுத்துறை ஊடாக தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறியது என்கிறார்கள்.
கொடுக்கப்பட்ட பணம், பிரான்ஸ் அரசின் ரகசிய பட்ஜெட் ஒன்றில் இருந்து போனது என்று உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடு ஒன்றில் வைத்து இந்தப் பணம் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னரே அல்-காய்தா வடக்கு ஆபிரிக்க பிரிவான ‘இஸ்லாமிய மக்ஹ்ரெப்’ தீவிரவாத அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவித்தனர் என்றே பரவலாக கதை அடிபடுகிறது.

லோக்சபா தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடும் ! ஐந்து முனை போட்டி ? தினமலர் செய்தி

லோக் சபா தேர்தலில், ஐந்து முனைப் போட்டி ஏற்படலாம். அ.தி.மு.க.,வை போல், தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும் நிலை வரலாம். அதை மனதில் கொண்டு, தேர்தல் பணியை துவங்குங்கள் என, கட்சியினருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கட்டளையிட்டுள்ளார். அறிவாலயத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்திய போது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்கான, கூடடணி உத்திகள் குறித்து, ஒவ்வொரு கட்சியிலும் ஆலோசனை நடந்து வருகிறது. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று முடிவு செய்து விட்டது. டில்லியில் நேற்று, மார்க்சிஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும், அ.தி.மு.க., பங்கு கொண்டு, அதை உறுதிப்படுத்தி உள்ளது.பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க விரும்பியது. ஏற்கனவே, தி.மு.க., அணியில், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காங்.,-தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, அணியை வலுவடையச் செய்வதற்கான, பேச்சு வார்த்தைகளை, தி.மு.க., துவங்கியது. இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரசும், தே.மு.தி.க.,வும் தனியாக பேசி, தங்களுக்கு இடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தகவல், தி.மு.க., தலைமைக்கு தெரியவந்தது.

புதன், 30 அக்டோபர், 2013

யார் இந்த ரஸ்ஸல் பிராண்ட் ? திடுதிப்பென்று அவரை ஏன் உலகம் பார்க்கிறது ?

ரஸ்ஸல் பிராண்ட் தமது சொகுசு அறைகளுக்குள் இருந்து கொண்டு சவடால் அடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டுகிறார் ரஸ்ஸல் பிராண்ட் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்.
ரஸ்ஸல் பிராண்ட்
தான் பங்கேற்கும் அரங்குகளில் ஆளும் வர்க்கங்களால் கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களை, தனது வர்க்க கோபத்தால் கலைத்து முன் இருப்பவர்களை நிர்வாணமாக்கி நிறுத்தும் ரஸ்ஸல் பிராண்ட் அக்டோபர் 25-31, 2013 தேதியிட்ட நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை இதழின் கௌரவ ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.
அதை ஒட்டி பி.பி.சி.யின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் தோன்றிய ரஸ்ஸல் பிராண்ட், “ஓட்டு போடாதே, புரட்சி செய்” என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதையும், அவரை பேட்டி கண்ட ஜெரமி பேக்ஸ்மனின் போலி ஜனநாயக முற்போக்கு திரை கிழிந்து தொங்குவதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
பி.பி.சி யூடியூபில் பகிர்ந்த இந்த வீடியோவை அக்டோபர் 29 மாலை வரை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். (http://www.youtube.com/watch?v=3YR4CseY9pk). கமென்டுகள் இடும் வசதியுடன்  பகிரப்பட்ட இன்னொரு வீடியோவை (http://www.youtube.com/watch?v=xGxFJ5nL9gg) 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள், 11,000-க்கும் மேற்பட்ட கமென்டுகள் இடப்பட்டிருக்கின்றன.
உரையாடலின் தமிழாக்கம் கீழே :
ஜெரமி பேக்ஸ்மன்
ரஸ்ஸல் பிராண்ட், ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆவதற்கு நீங்கள் யார்?
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம்ம், என்னை ஒரு கவர்ச்சியான பெண் அன்பாக கேட்டார் என்ற வகையில் இருக்குமோ? ஒரு செய்தி பத்திரிகையின் ஆசிரியராவதற்கு என்ன தகுதி என்று எனக்குத் தெரியாது. எனக்கு செய்தி பத்திரிகை ஆசிரியர்கள் பலரை தெரியாது.  போரிஸ் [லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்], ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார், இல்லையா? வேடிக்கையான தலை முடி, சிறந்த நகைச்சுவை உணர்வு இரண்டும் உடைய ஆள் நான். மேலும், எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது, நான் சரியான நபர்தான்.
ஜெரமி பேக்ஸ்மன்
ஆனா, நீங்க ஓட்டு போடுவது கூட இல்லை என்பது உண்மையா?
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, நான் ஓட்டு போடுவதில்லை
ஜெரமி பேக்ஸ்மன்
அப்படீன்னா, அரசியலைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

நாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாகிறார்கள்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்தியத் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள்
நிறைய நடப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை பெண்களுக்கு ஏதிராக நடந்துள்ள குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், 1330 கற்பழிப்புகள், 2844  பாலியல் தொல்லைகள், 793 கேலி கிண்டல்கள், கிட்டத்தட்ட 3000 பெண்கள் கடத்தல், 2487 பேர் கணவன்களால் கொடுமைப்படுத்தல், வரதட்சனை கொடுமையால் 123 பெண்கள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது.

டெல்லியில் 14 கட்சிகள் மோடிக்கு எதிராக கூடின ! ஐ. ஜனதா தளம், சமாஜ்வாடி , இடதுசாரிகள் , தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட

இடது சாரிகள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தீவிர முயற்சி எடுத்து
வருகின்றன. புதுடெல்லியில் இன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தேசிய வாத காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மதவாத கட்சியான பாரதிய ஜனதாவிற்கும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் எதிராகவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதற்காகவே நாம் இங்கு இணைந்திருக்கிறோம். பாசிச கட்சிகளை தோற்கடிக்க கூடுமான வரை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் பேசியபோது, மூன்றாவது அணியை சேர்ந்த ஒருவரே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். ஆனால், 2014 தேர்தலுக்கு பிறகே இது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஆந்திரா:பேருந்து தீ விபத்து ! பயணித்த 45 பேரும் பலி ! ஏசி வசதிக்கான ஜன்னல்கள் கதவுகள் central locking system திறக்க முடியாமல் போய்விட்டது

passengers could not escape as the central locking system of the bus made it impossible for them to open the door.

ஆந்திரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து  Volvo தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! உடனtamil.oneindia.in

ஒபாமா நிர்வாகம் தீபாவளியை இனி கொண்டாடுமாம் ! வால்மார்ட்டின் விற்பனைக்கு மேலும் ஒரு பண்டிகை !

This year, 2013, many Members of Congress will celebrate Diwali in the United States Capitol for the first time," the resolution said noting that Diwali, a festival of great significance to Indian Americans, is celebrated annually by Hindus, Sikhs, Jains, and others throughout the US.
"Diwali is a festival of great significance to millions of Indians and Indian-Americans and I'm thrilled and proud to be a part of the first-ever Congressional Diwali," Congressman Crowley told PTI.
அடப்பாவிகளா ஏற்கனவே கனடா போன்ற நாடுகளில் வால்மார்ட் சியர்ஸ் போன்ற காபரெட் கடைகள் எல்லாம் தீபாவளி வியாபாரம் படு ஜோராக ஆரம்பித்து விட்டனர், நம்ப கவலை எல்லாம் இந்த BJP அரசியல் வாதிகளை பாத்தீகளா அமெரிக்காவே இந்துமத பெருமையை கொண்டாடுகிறது என்று தேர்தல் மேடைகளில் சொல்லபோகிறார்கள் அதையும் சில டுபாக்கூர்கள் நம்ப போகின்றன வாழ்க Walmart !
வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளியை கொண்டாட இதையொட்டி இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நாடாளுமன்ற கட்டிடம் வண்ண வண்ண சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளியூட்டப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் நடைபெறும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள், செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இதுதான் முதல் முறை.
நாடாளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.க்கள் 2 பேர் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.அமெரிக்காவில் ஆளும் கட்சி எம்பிக்கள் 2 பேர், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு:சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு விலக்கு ??????

புதுடெல்லி,
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில்  நேரில் ஆஜர் ஆவதில் இருந்து, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி நியமனத்துக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், அக்டோபர் 1–ந்தேதியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.பி.முடிகவுடரை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

மகாராஷ்ட்ராவில் பில்லி சூனிய மந்திரவாதிகளுக்கு எதிராக போராடிய தபோல்கரின் மரண விசாரணை அதோ கதியானது !

மகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல
ஆண்டுகளாக போராடி வந்த,
நரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.

குளிர்பானங்களில் கிருமிகளை அகற்ற கிருமிநாசினி பயன்படுத்துவதை கண்டு பிடித்த சுனிதா வாகன விபத்தில் ???

சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.சுனிதா நாராயணன்:
உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது, தெரிய வந்த போதிலும், பூச்சிக்கொல்லி குளிர்பானங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர், சுனிதா நாராயணன்.டில்லியை சேர்ந்த இவர், 'சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனத்தை, நடத்தி வருகிறார்.

கேரளா சிறுமியை 40 நாட்களில் 400 தடவைக்கும் மேலாக கற்பழித்தவர்களுக்கு ( குரியன் MP உட்பட) எந்த தண்டனையும் இல்லை ?


அந்தக் கொடூரம் நிகழ்ந்து, 17 ஆண்டுகள் ஆகி விட்டன. அவளை சீரழித்த,
40க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், வழக்கை விசாரித்த போலீசார், தீர்ப்பு வழங்கிய நீதித் துறையினர், அந்தப் பெண்ணை சுமையாக கருதும் பெற்றோர் தவிர, வேறு யாருக்கும், 'இந்தப் பெண் தான், சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்' என, தெரியாது.யாருக்குமே நிகழக் கூடாத அந்த கொடுமை, அந்தச் சிறுமிக்கு, 16 வயதில் நிகழ்ந்தது.அந்தச் சிறு வயதில் குழந்தைகள் அறிந்திராத, 'அந்த' வக்கிரம், அந்தச் சிறுமிக்கு, 40 நாட்களில், 400 தடவைக்கும் மேலாக நடந்தது. கட்டிளம் காளைகள் முதல், வயது முதிர்ந்த பெருசுகள் வரை, போலீஸ்காரர்கள் துவங்கி, போலீஸ் அதிகாரிகள் வரை, தெருவோர பிச்சைக்காரன் முதல், பெரும் கோடீஸ்வரன் வரை, அனைத்து தரப்பு அக்கிரமக்காரர்களால், அந்தப் பிஞ்சு சேதப்படுத்தப்பட்டது.

தேமுதிக: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஜெயலலிதாவே முயற்சிக்கிறார்

தமிழக முதல்வர் எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளானது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாகும் என்றார் தேமுதிக எம்எல்ஏவும், எதிர்கட்சி கொறடாவுமான வி. சி. சந்திரக்குமார்.புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோனைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தேமுதிக தொடங்கியதிலிருந்து 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தவிர அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட்டுள்ளது. எனவே ஏற்காடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட நாங்கள் அஞ்சவில்லை. இருப்பினும் தேர்தல் குறித்து பல விஷயங்களை விஜயகாந்த் ஆராய்ந்து கொண்டுள்ளார். உரிய முடிவை விரைவில்அறிவிப்பார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தங்கப்புதையல் கிடைக்கவில்லை ! சாமியார் கைதுசெய்யப்படுவாரா ? உ.பி கோட்டையில் எதுவுமில்லை ! மத்திய அரசை இந்த ஒரு அபத்தத்திற்காகவே டிஸ்மிஸ் செய்யலாம் !

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை
முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நாளாக தேடியும் ஒருகிராம் தங்கத்தை கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். சாமியார் கனவு பொய்யானது.... உ.பி கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை!' இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறினார். இதன் அடிப்படையில், அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது.

C காசு P பணம் M மணி ! CPM விளையாடு மங்காத்தா ! அரசியல்தான் எங்காத்தா இனிஎல்லாம் பணம்தான் !

சி.பி.எம் கார்ட்டூன் சி.பி.எம்.க்கு கொள்கை ஒன்றுதான். அதாவது, “காண்ட்ராக்ட் எடுப்பது, கமிசன் அடிப்பது போன்றவை தவறல்ல. அதனை ஊரறிய உளறிக்கொட்டுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்!”கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு பணத்தாசைப் பிடித்து அலைபவர்கள்
ங்காத்தாவில் வருகின்ற அஜித் போல சி.பி.எம்.மின் சமர் ஆச்சார்ஜி இருக்கிறார். காம்ரேடுகள் கார்ப்பரேட்டுகளாக காட்சியளிக்கின்றனர். சி.பி.எம்மின் மத்திய கமிட்டி, கார்ப்பரேட் ஆபீசு போலவும் பழங்கால மன்னர்களின் அந்தப்புரம் போலவும் சீரழிந்துபோயுள்ளது. போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம்., சி.பி.எம். தலைமையை அம்பலப்படுத்தி, சீரழிந்த அவர்களது நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அவர்களது சீரழிவுக்கான காரணங்களையும் விளக்கி பு.ஜ.தொ.மு., வி.வி.மு.வினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் உள்ளடக்கம்: சி.பி.எம். கட்சியை கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதுபவர்களின் சிந்தனைக்கு…
ம்யூனிசத்தை நேசிக்கும் தோழர்களே, நண்பர்களே!
சமர் ஆச்சாரி
சமர் ஆச்சார்ஜி
இதோ, இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பவர், பணத்தினால் பஞ்சணை செய்து அதில் படுத்துப் புரண்டு கொண்டு, தன் மீது பணக் கட்டுகளைப் போட்டு மகிழ்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்த வக்கிரபுத்திக் காரார் யார் தெரியுமா? திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர், தான் வசிக்கும் அகர்தலா மாநகராட்சியில் கழிப்பிட காண்ட்ராக்ட் எடுத்ததில் 2.5 கோடி ரூபாய் கமிசனடித்துள்ளார். இந்தப் பணத்தில் 20 லட்ச ரூபாயை வங்கிலியிருந்து எடுத்து படுக்கை தயாரித்து பணத்திலேயே புரண்டு மகிழ்ந்துள்ளார்.

இலக்கிய உலகின் நித்தியானந்தா (சாரு நிவேதிதா) : முஸ்லீம்களை கொன்ற மோடியை ஆதரிகிறேன். அதுக்கு இப்போ என்னா?’

சாரு நிவேதிதா”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ?
மோடி பக்தர் சாரு
இப்போது அவர் ‘நான் எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவன் அல்ல. நான், நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் என்பதிலிருந்தே நீங்கள் இதை அறியலாம்’ என்று எழுதுகிறார். சாரு அவ்வப்போது அடித்துவிடும் அதிரடி ஸ்டேட்மென்டுகளில் இதுவும் ஒன்று என்றபோதிலும், இது சற்று ஜெயமோகன் தனமாக உள்ளது. ஜெமோ எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவர் அல்ல. அந்தரங்க மன எழுச்சி, உள்ளொளி தரிசனம் போன்றவைதான் அவரது எழுத்தின் அடிநாதம். அதைப்போல அரசியல் நேர்மை பற்றி கவலைப்படாமல் சாருவின் நெஞ்சு இப்போது, ‘மோடி, மோடி’ என்று துடிக்கிறது.
பொதுவாக மோடியை உள்மனதில் ஆதரிப்பவர்கள் கூட வெளிப்படையாக அதை அறிவிக்கத் தயங்குகின்றனர். கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி முதல், பல்வேறு இலக்கியவாதிகள் வரை அனைவருமே ‘குஜராத்… வளர்ச்சி..’ என்று சுற்றி வளைத்துதான் மோடிக்கு கொடி பிடிக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் யோக்கியதை என்ன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளியானாலும், அவற்றைப் பற்றி இந்த ‘அறம்’பாடிகள் கவலை கொள்வது இல்லை. ‘2002 இஸ்லாமியர் படுகொலைகள்…’ என்று யாராவது ஆரம்பித்தால், ‘அதைப்பத்தியே இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள்? ” என்று பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள்.

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு இலங்கை பெண் உரிமையாளர்கள் கோரிக்கை!


வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட
ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்;கள் அரசியல் அககடமி என்ற அமைப்பு கோரிக்கை
விடுத்துள்ளது. நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சுற்றலாத்துறையில் பாலியல் தொழில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் திட்டப் பணிப்பாளர் டொக்டர் நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெண்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டமென அவர் வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சும் மகளிர் விவகார அமைச்சும் பெண்களின் பால் நிலை சுகாதாரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் 47000 பெண் தொழிலாளிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிரமமான கண்காணிப்பு முறைமை இன்றி பாலியல் தொழிலாளிகளை கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.athirady.

வறுமைக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு ! தாழ்த்தப்பட்ட மக்களின் வறிய நிலை ஜாதியும் காரணமா ?

புதுடில்லி, அக்.27- ஜாதிக்கும் வறுமைக் கும் உள்ள தொடர்பு கள் குறித்து
11ஆவது அய்ந்தாண்டுத் திட் டத்தில் வெளியான தகவல்கள் மிக முக்கிய மானவை. அது குறித்து தகவல்கள் வருமாறு: தலித் மக்களின் வீடு களில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந் தைகள் ஒரு வயது முடி வதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடு களில் இந்த விகிதாச் சாரம் 1,000: 61.< அய்ந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந் தைகள் 1,000-இல் 39 இறந்து விடுகின்றன. தலித் அல் லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.< தலித் குழந்தைகளில் 75 நோஞ்சானாக இருக் கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49 .
2000 ஆண்டு கணக் குப்படி 66 தலித் குடும் பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங் களில் இது 33 .
முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளர்கள்
தலித் மக்களில் முக் கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர ஜாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால் வாசியாக உள்ளது.

மணிசங்கர் ஐயர்: Chogm மாநாட்டில் பங்கேற்கவேண்டும் ! உறவு தொடர்வது அவசியம் !

காங்கிரஸ் கட்சியினர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து
இருவேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர்,  ‘’ இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம்’’ என்று வலியுறுத்தி யுள்ளார்.

திங்கள், 28 அக்டோபர், 2013

பிள்ளை, செட்டி, செங்குந்த முதலி, வன்னியர், கள்ளர் என்று ஆளுக்கு ஆள் ஜாதி சங்க வெறியோடு ?Time to delink caste politics in Tamil Nadu

மராட்டிய பால்தாக்ரே வைப் போல், தமிழ்நாட்டு தாக்ரே ஆவதற்கு பலபேர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். தாக்ரே-மோடி இவர்களின் களம் தலித்-இஸ்லாமிய எதிர்ப்பு. பார்ப்பன மற்றும் இடைநிலை ஜாதிகளிடம் செல்வாக்கு. (தலித் அல்லாத கிறித்துவர்கள் உட்பட)
இது போன்ற முறை தான், தமிழ்நாட்டிலும் இனி வருகிற தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகளோடு தமிழ்த்தேசியக் கட்சிகளும் அணிவகுக்கும்.
ஜாதி இந்துக்கள் செல்வாக்கு பெற்ற மற்ற கட்சிகளும் இந்த முறையையே ஆதரிக்கும். தனக்கு எந்தக் கட்சி அதிக  இடங்கள் தருகிறதோ அந்தக் கட்சியின் கூட்டணிக்குள் தலித் கட்சிகளும் இடம்பெறும்.
ஒவ்வொரு ஜாதி இந்துவும் கோடிக்கணக்காண தாழ்த்தப்பட்ட மக்களைவிட தன்னை உயர்வானவனாக கருதுகிறான் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கிறான். கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னைவிட பொருளாதார ரீதியாக உயர்ந்தால் அவனுடைய காழ்ப்புணர்ச்சி அதிக வேகம் பெற்று வன்முறையாக வடிவம் பெறுகிறது.
ஆனால், தன்னிச்சையாக தலித் மக்கள் மீது வன்முறையை நிகழ்த்துவதற்கு அவன் தயார் இல்லை. அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறான்.
இந்த மனோபாவம் கொண்ட ஜாதி இந்துவின் மனதில், உட்ஜாதி பிரிவுகளாக தனித் தனியாக இருக்கிற தலித் கட்சிகள், ஜாதிக் கட்சிகளாகத்தான் அடையாளமாகிறது. அந்தக் கட்சிகளின் வளர்ச்சி ஜாதி இந்துவின் மனதில் இன்னும் கூடுதல் காழ்ப்புணர்ச்சியாக தலித் விரோத மனோபாவத்தையே ஏற்படுத்துகிறது.
‘தன் ஜாதி’ என்கிற நிலையையும் தாண்டி, ‘தலித் அல்லாதவன்’ என்கிற நிலையாக வடிவம் பெறுகிறான்.

எனக்கு 2ஜி என்னன்னு தெரியாது. எனக்கு எதுவுமே ஞாபகத்திலும் இல்லை ! தயாளு அம்மையார்

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன் இன்று விசாரணை நடத்தியபோது, 2ஜி என்றால் என்ன என்று தயாளு அம்மாள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாள் உடல் நிலை சரியில்லை என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உபியில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம், பிளாட்டினம் கண்டுபிடிப்பு ! இது சாமியாரின் வாக்கினால் அல்ல !

உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே 'பந்தெல்கன்ட்' பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
தங்க புதையல் 'பந்தெல் கன்ட்' பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 'பந்தெல்கன்ட்' பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

முஷரப் முன்பு எப்படி நவாஸ் ஷெரிப்பை கவிழ்த்து ஆட்சியை பிடித்தார் ? விபரம் வெளியாகியது

பாகிஸ்தானில் கடந்த 1999–ம் ஆண்டு நவாஸ் செரீப் பிரதமராக வந்த போது பர்வேஸ் முஷ்ரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது
அக்டோபர் 12–ந் தேதி ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரி ஆனார்.
பின்னர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்து கொண்டார். நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி நடத்த முஷ்ரப் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.
அதை ராணுவ முன்னாள் தளபதி ஷாகித் அஷீஷ் தற்போது அம்பலபடுத்தியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், இந்த தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மைக்கல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் விடுதலை

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம்
அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் கூறி 2011-ம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டாக்டர் முர்ரே இரண்டு ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் டாக்டர் முர்ரேயின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் மயக்க மருந்தை அதிகமாக மைக்கேல் ஜாக்சனுக்கு கொடுத்ததாலேயே அவர் இறந்தார் என்று கூறப்பட்டது.

புதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா மனு ! சொத்து குவிப்பு வழக்கை எப்படியாவது பைசல் பண்ணலாம்னா முடியல்லை ?

பெங்களூரு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலக்கிருஷ்ணா கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். வழக்கை விரைவாக முடிக்க அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலக்கிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி பாலக்கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக செயல்பட்ட முடிகவுடரை சிறப்பு நீதிபதியாக நியமனம் செய்து கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டது.

நடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்

நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார்.
சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை; விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினல் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சரிதாவின் குற்றச்சாட்டுக்கு முகேஷ் சார்பில் அவர் வழக்குரைஞர்வெளியிட்டுள்ள பதிலில், ”சரிதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. சரிதாவை சட்டரீதியாகப் பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் அவர் தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

அம்மா உணவகத்திற்கு Traffic ராமசாமி வழக்கு ! அம்மா குடிநீருக்கும் வழக்கு !

சென்னை: ‘அம்மா' உணவகம் பெயரை மாற்றக்கோரியும்... குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை நீக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மலிவு விலையில் குடிநீரும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகம் பெயரை முதலமைச்சர் உணவகம் என்று மாற்றக் கோரியும், தமிழக அரசு வழங்கிவரும் அம்மா குடிநீர் பாட்டிலில் இருக்கக்கூடிய இரட்டை இலை சின்னத்தை நீக்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். மக்கள் வரிப்பணத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் முதலமைச்சர் படங்களும் , கட்சி சார்ந்த சின்னங்களும் இடம் பெறுவது சட்டவிரோதமான செயல் என்று அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு ஆயிரம் லிட்டர் குடிநீரை 5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது 1 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
tamil.oneindia.in/

நம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் ஆனால் அதையே சவாலாக எடுத்தேன் -

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி நடிக்கும் புதிய
படம் ‘ரம்மி. விஜய் சேதுபதி, ‘இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா நடிக்கின்றனர். கே.பாலகிருஷ்ணன் டைரக் ஷன். டி.இமான் இசை. ஜே.சதீஸ்குமார் வெளியீடு. இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் நேற்று காலை வெளியிட்டார். பட குழுவினர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காயத்ரி கூறியதாவது:இதுவரை நகரத்து பெண்ணாக மாடர்ன் உடைகள் அணிந்துதான் நடித்திருக்கிறேன். ‘ரம்மி‘ படத்தில் நடிக்க என்னிடம் கால்ஷீட் கேட்ட இயக்குனர் கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு நிமிடம் ஷாக் ஆனேன். ‘கிராமத்து பெண் வேடத்துக்கு என்னை எப்படி தேர்வு செய்தீர்கள். இதுவரை அந்த வேடம் ஏற்றதில்லையே என்றேன். ‘கதைப்படி கொஞ்சம் மாடர்ன் தோற்றத்திலான கிராமத்து பெண் தேவை அதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். அதன்பிறகு ஏற்றுக்கொண்டேன். முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் சென்றேன். பிறகு அதை சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன் என்றார் - See more at: tamilmurasu.org

முன்னாள் போராளிகள் ஏன் சொந்த ஊருக்கு போக விரும்புவதில்லை ?

-இலங்கையில் நேரடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், ரிஷி.
மேலேயுள்ள போட்டோவில் இடதுபுறம், விடுதலைப் புலிகள்
முன்னாள் போராளி ஒருவரும் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ. வலதுபுறம், களுத்துறை மாவட்டம் பாயகல என்ற இடத்தில் உள்ள பயிற்சி மையத்தில் முன்னாள் போராளிகள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த பிரச்னை, இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்களிடம்தான், அதிகம் உள்ளது. அரசியல் பிரிவு உட்பட இதர பிரிவில் இருந்தவர்களிடம் அவ்வளவாக கிடையாது.
இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்கள், தமது வாழ்வின் நீண்ட காலப் பகுதியில் சமூகத்தை ஒரு ராணுவ பார்வையில் புரிந்து கொண்டவர்களாக (understand the socity from a military perspective) உள்ளார்கள்.

நரேந்திர மோடி: நிதிஷ் குமார் ஒரு துரோகி ! புலிகளிடம் இருந்து இந்த துரோகி லேபில் வியாபாரத்தை மோடி வாங்கிவிட்டார்

‘‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு துரோகி’’ என பாட்னாவில் நடந்த பா.ஜ கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தையும் பொருட்படுத்தாமல், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜ.வில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ஏன் விலகினார் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயன், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்களை முதுகில் குத்தியவர்களால், நீண்ட காலமாக நட்புடன் இருந்த பா.ஜ.வை விட்டு எளிதில் வெளியேற முடியும்’’ என நான் கூறிவருகிறேன். காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் குரு ஜெயப்பிரகாஷ் நாராயன். ராம் மனோகர் லோகியாவின் சீடர் என கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் உறவாடுகிறார்.

சமுக வலைதளங்கள் ! முழு உலகத்தையும் விரல்நுனிக்கு கொண்டு வருவது ஒரு அற்புதமே

 சுவிட்சர்லாந்து சென்றாலும் சரி. சொந்த ஊருக்குச் சென்றாலும் முழு உலகத்தையும் உங்கள்  அறிவுக்கு எட்டிய தூரத்தில் கொண்டு வருவது இது தான்  
கெளரி தன் காதலன் சங்கரைத் தேடிச் சென்னைக்கு வருகிறாள். ஆனால் அவள் வருவதாகத் தெரிவித்து எழுதிய கடிதம் சங்கருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அவள் வழி மாறி இறக்க நேரிடுகிறது. இது 1988இல் வெளிவந்த இதயக்கோயில் படத்தில் உள்ள ஒரு சம்பவம். The Notebook என்ற ஆங்கிலப் படத்தில் நாயகன் தன் காதலிக்கு 365 கடிதங்களை எழுதுகிறான். அவை எல்லாமும் கிடைக்காமல் போய்விடுகிறது. இருவரும் வேறு ஒருவருக்கு நிச்சயயிக்கப்படுகிறார்கள்.இந்த இரண்டு சம்பவங்களும் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றக்கூடியது. 'ஒரு டெக்ஸ்ட் செஞ்சிருக்கலாமே?' எனச் சொல்வார்கள்.இன்றைக்குத் தகவல் தொடர்பு அவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. தொலைபேசி முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உண்மையிலேயே தகவல் தொழில்நுட்பப் புரட்சி எனலாம். இன்று செல்போன் என்பது பேசும் கருவியாக மட்டுமில்லை. பலவிதமான பயன்பாடுகளுடன் இருக்கிறது. அதில் இருக்கும் மிக முக்கியமான பயன்பாடு இன்றைக்கு விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சமூக வலைத்தளங்கள்.