வெள்ளி, 21 ஜூன், 2024

2016 பூரண மதுவிலக்கு அறிவித்தார் கலைஞர் அப்போது திருமா கலைஞரை தோற்கடிக்க சசிகலா நடராஜனின் சூட் கேஸ் அரசியலில்

 LR Jagadheesan  :   2016 தேர்தலைப்பற்றியெல்லாம் திருமா பேசலாமா?
சிலதை பற்றி சிலர் பேசாமல் இருப்பது அவர்களுக்கு ரொம்பவும் நல்லது.
2016 தேர்தல்பற்றி மநகூ என்கிற கூட்டணியில் இருந்த கட்சிகள் பேசாமல் இருப்பது அந்த கட்சிகளுக்கு நல்லது.
குறிப்பாக அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு. அவர்களின் மிச்சசொச்சமிருக்கும் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள அது உதவும்.
அயோத்திதாசரின் பேரனும் நடமாடும் நவீன அம்பேட்கரும் தமிழ்நாட்டு தலித்துகளின் விடிவெள்ளியுமான தொல் திருமாவளவன் அவர்கள்,
 2016 தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக கொடுத்த முழுமையான மதுவிலக்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறுகிறார். நல்லது.
அந்த 2016 தேர்தலில் தொல் திருமா எங்கே இருந்தார்?
என்ன செய்தார்?
யாரை தோற்கடிக்க யாரை ஆதரித்தார்?
அதுவும் எதற்காக?
இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 மாவீரர்களின் ( ?) உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..!

 வெப் துனியா : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

புலிகளால் நயவஞ்சகமாக கொல்லப்பட்ட 600 போலீசாரின் சாபம் புலிகளை அழித்தது

 கருவூர் இஞ்சினியர் :  1989 பிரேமதாசா விடுதலை புலிகள் கூட்டில் கொல்லப்பட்ட சிங்கள குடும்பங்களின் இளைஞர்கள் தான்,
 பெரும்பாலும் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழருக்கு எதிராக மிக வன்மமாக போரிட்டதாக 2009 க்கு பின்வந்த பல செய்திகள் தெரிவித்தனர்.
போர் முடிந்த பின்பு பல கிராம சிங்களஇளைஞர்கள் யுத்தம் பற்றியும் கொலைகள் பற்றியும் அரசியல்வாதிகளின் பதவிக்காக பல ஆயிரம் தமிழ் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதாக உண்மையான வருத்தத்துடன் தெரிவித்ததாக செய்திகள் வந்தன.
அவற்றை பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் பெரிது படுத்த விரும்பவில்லை
பிரேமதாசாவின் காலத்தில் புலிகளிடம் சரணடைந்த 600 போலீசாரை புலிகள் நயவஞ்சகமாக சுட்டு கொன்றார்கள் .
ராதா மனோகர் : உண்மையில் அந்த 600 போலீசாரும் புலிகளோடு சண்டையிட தயாரானார்கள்
அப்போது புலிகளை நம்பிய பிரேமதாசா அவர்களை சரணடையுமாறும் கேட்டு கொண்டார்
அன்டன் பாலசிங்கத்தின் பேச்சை நம்பி பிரேமதாச செய்த முட்டாள்தனம்

திமுக ஆட்சிக்கு வந்தாலும், திமுகவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.!


 Kandasamy Mariyappan
  :  தலைவரே M. K. Stalin ...
திமுகவை அவ்வளவு எளிதாக, நிம்மதியோடு ஆட்சி செய்ய விட மாட்டார்கள்.!
நீங்கள் எண்ணுவது போல், அவ்வளவு எளிதாக மீண்டும் ஆட்சிக்கு வர வைத்துவிட மாட்டார்கள்.!
பொதுமக்களும் நல்ல புரிதலோடு ஆதரவு கரம் நீட்ட மாட்டார்கள்.!
மக்களின் தாகம் தீர்க்க வழி செய்யும், கழகம்.,
கழகத்தை புதைத்து தண்ணீர் தெளிப்பார்கள், மக்கள்.!
மக்களின் பசிக்கு அரிசி வழங்க போராடும், கழகம்.,
கழகத்திற்கு வாய்க்கரிசி போட குறியாக இருப்பார்கள், மக்கள்.!
மக்கள் நிம்மதியாக வாழ வீடு வழங்கும், கழகம்.,
கழகத்தை புதைக்க குழி தோண்டுவார்கள், மக்கள்.!
மக்கள் தன்மானத்துடன் வாழ கல்வியை வழங்கும், கழகம்.,
பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, துக்ளக், கீதையின் உதவியோடு கழகத்தை சிறையில் வைப்பார்கள், மக்கள்.!
நோயை குணப்படுத்தும் மருந்துகளை வழங்கும், கழகம்.,
கழகத்தை மருத்துவமனையில் படுக்க வைக்க துடிப்பார்கள், மக்கள்.!
சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருக்கும், கழகம்.!
கழகம் ஆட்சியில் இருக்கும் போதுதான், உக்கடத்திலிருந்து உரிமைக்காக குண்டுகளை வீசுவார்கள், சிறுபான்மையினர்.!
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டும், கழகம்.,
கழகத்தை ஒழிக்க திட்டமிடுவார்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்.!

பூரண மதுவிலக்கு வேண்டும்! - அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை

 tamil.samayam.com -  எழிலரசன்.டி :  கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 42 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுமார் 100க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் கருணாபுரம் பகுதிக்கு இன்று இரவு நேரில் சென்ற விசிக தலைவர் திருமாவளவன்,
அங்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் தூங்கிக் கொண்டிருந்த வாலிபருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை! உபி டாக்டர்களின் கொடூரம்

 UP Man's Genitals Removed, Sex-Change Surgery Done While He Was Sleeping
Samiran Mishra link:   UP -mans-genitals-removed

 மாலை மலர் :  உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
பாரதிய கிஷான் யூனியன் (BKU) இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் இந்த சம்பவம் முஜாஹித் (வயது 20) வயது வாலிபருக்கு நடந்துள்ளது.
இதெல்லாம் தனக்கு ஓம் பிரகாஷ் என்பரால் நடைபெற்றதாக முஜாஹித் தெரிவித்துள்ளார். முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரியில் ஓம்பிரகாஷ் சேர்த்துள்ளார்.

வியாழன், 20 ஜூன், 2024

பாடறியேன் படிப்பறியேன் ... பஞ்ச பரம்பரைக்கு அப்புறமா? பஞ்ச பரம்பரை கற்பரமா?

ராதா மனோகர் :  :  பாடறியேன் படிப்பறியேன் ... பஞ்ச பரம்பரைக்கு அப்புறமா? பஞ்ச பரம்பரை கற்பரமா?
சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்ற பாடலின் வரிகளை திட்டமிட்டு திரிபு படுத்தும் முயற்சியை பல பார்ப்பன ஊடகங்கள் அல்லது எழுத்தாளர்கள் முயன்று வருகிறார்கள்!
அந்த பாடலில் உள்ள ஒரு வரி பார்பனர்களை பாடாய் படுத்துகிறது! அந்த வரிகள் :
சஜ்ஜூவம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரை கற்பரம்தான்!
இந்த வரிகள் சாஸ்திரிக சங்கீதம் என்று பார்ப்பனர்களால் உயர்த்தி பிடிக்கப்பட்டு வரும் இசையானது உண்மையில் மண்ணின் மைந்தர்களின் கண்டு பிடிப்பு என்பதை ஒரு வரலாற்று சாசனமாக எழுதிவிட்டார் கவிஞர் வைரமுத்து!

: திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம் - கைவிட்ட அண்ணாமலை.! காரணம் என்ன தெரியுமா?

 tamil.asianetnews.com - Ajmal Khan :  அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு மற்ற பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்த திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக பாஜக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதிமுகவுடன் நாங்கள் தான் பெரிய கட்சி, திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் போட்டி என கூறி வருகின்றனர். தினமும் திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்து அறிக்கை மற்றும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா தன் பங்குக்கு திமுகவை விமர்சித்து பதிவு செய்ய தொடங்கினார்.

கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு- 16 பேர் கவலைக்கிடம்!

  BBC News தமிழ் :  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 34 பேர் இன்று காலை வரை உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேரும் இதில் அடங்குவர்.
அடுத்தடுத்து பலர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கவலைக்கிடம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பனங்கள்ளு பனஞ்சாராயம் ஏற்றுமதி .. யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்ஸ் துபாய் கனடா சீனா...

பனங்கள்ளு பனஞ்சாராயம் ஏற்றுமதி  
யாழ்ப்பாணத்தில் இருந்து பனம் கள்ளு பனம் சாராயம் பிரான்ஸ் துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது . பல அரிய செய்திகளை கொண்டிருக்கும் காணொளி

புதன், 19 ஜூன், 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 9 பேர் உயிரிழப்பு! எஸ்பி சஸ்பெண்ட்.. கலெக்டர் பணியிட மாற்றம்!

 tamil.oneindia.com -  Nantha Kumar R  கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் இறந்துள்ளனர்..
 மேலும் 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் அதிகமானவர்கள் திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஹஜ் பயணத்தில் 550 பயணிகள் உயிரிழப்பு!

 hirunews.lk : இந்த ஆண்டு ஹஜ்  பயணத்தின் போது 550  பயணிகள்  உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ்  பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் நெரிசல் காரணமாக உடல் நசுங்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அமெரிக்கா்களை மணந்த குடிவரவாளர்கள் அகதிகளுக்குக் குடியுரிமை

 தினமணி : வாஷிங்டன்: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான குடிவரவாளர்கள்  அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலை மனதில் கொண்டே அவா் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவா்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியுரிமையைப் பெற முடியும்.

செவ்வாய், 18 ஜூன், 2024

EVM சரிப்பட்டு வராது.. இந்தியா கூட்டணியுடன் கை கோர்த்த ஜெகன்

 மாலை மலர் :  உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.
மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

அகதிகளை கிரீஸ் கடலோர காவல்படை கடலில் வீசியது” – நேரில் கண்ட சாட்சிகள் தகவல்

BBC Tamil  : மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர்.
கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர்.
கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ,
கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

மோடி அரசின் நாடுகடந்த பயங்கரவாதம் பற்றி அவுஸ்திரேலியா ABC காணொளி How the Modi regime targets people overseas

 ராதா மனோகர் : அவுஸ்திரேலிய ஏ பி சி தொலைக்காட்சி நிறுவனம் மோடியை பற்றிய ஒரு ஆவண காணொளியை வெளியிட்டுள்ளது
ஆர் எஸ் எஸ் இன் நாடு கடந்த பயங்கரவாதம் பற்றியும் பாஜகவின் இந்த்துவ மதவெறி அரசியல் பற்றியும் பல செய்திகளை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது
இந்த காணொளியை தவறவிடாமல் பாருங்கள்
மோடி குழுமத்தின் வண்டவாளங்கள் உலக அரங்கில் அம்பலமாகி விட்டது

அரியலூர மூட நம்பிக்கையால் சொந்த பேரனை கொன்ற வீரமுத்து

 tamil.oneindia.com  -  Mani Singh S :   அரியலூர்: அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை டிரம் தண்ணீரில் முக்கி கொலை செய்த தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பேரக்குழந்தையை அவர் கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து - ரேவதி தம்பதி. இவர்களுக்கு அனுசியா, சுகன்யா, சங்கீதா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். இதில், அனுசியா உள்ளூரிலேயே திருமணம் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.

பிரியங்கா காந்தி வயநாட்டில் (கேரளா) போட்டி! ராகுல் காந்தி ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார்


BBC தமிழ்  : மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த முடிவின் பின்னணி என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முந்தைய இரு தேர்தல்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு கிட்டத்தட்ட இருமடங்கு இடங்களை வென்றது. காங்கிரசுக்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்த ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் இருந்து மக்களவைக்கு தேர்வானார். இரு தொகுதிகளிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நீட் மோசடி: பீகாரில் மாணவர்களிடம் ரூ.32 லட்சம் - வினாத்தாளை கசியவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம்

dinakaran.com - Lavanya :  பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் 32 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும், திடுக்கிட வைத்துள்ளது.
கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் சற்று எதிர்பாராத வகையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4 தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகி பலத்த சந்தேகத்தை கிளப்பியது.
அந்த சந்தேகத்திற்கு பளு சேர்க்கும் விதமாக நீட் தேர்வில் நடத்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன.

திங்கள், 17 ஜூன், 2024

மேற்கு வங்க ரயில் விபத்து 15 பேர் உயிரிழப்பு ! “மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

 hindutamil.in :  புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

இவிஎம் மெஷின் பாதுகாப்பானதா? எலான் மஸ்க் - ராஜீவ் சந்திரசேகர் இடையே வார்த்தைப் போர்


மின்னம்பலம் - Selvam :  ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பம் மூலம்   இவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது” என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களால் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன நடந்தது? - BBC News தமிழ்

காபூலில் நடத்தப்பட்ட போராட்டம்

bbc.com -  Parwana Ibrahimkhail Nijrabi : ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலை, கல்வி மற்றும் பொது வெளியில் அவர்கள் நடமாடுவது தொடர்பான பல தடைகளை தாலிபன்கள் விதித்தனர். தொடக்கத்தில் சில பெண்கள் இந்தப் புதிய விதிகளை எதிர்த்து தெருக்களில் இறங்கிப் போராடினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் பிற முக்கிய நகரங்களில் 'உணவு, வேலை, சுதந்திரம்' என உரிமைகளைக் கோரியவர்கள், தாலிபன்களின் முழு பலத்தையும் வெகு விரைவில் உணர்ந்தனர்.

ஞாயிறு, 16 ஜூன், 2024

பாகிஸ்தானில் 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை - முதியவர் போலீசாரால் கைது!

 தினத்தந்தி :  பாகிஸ்தானில்  பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை
பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைபர் பக்துன்குவா,
பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரிகோணமலை ஹாசன் சலாமா - 15 வயது!

 hirunews.lk :  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சிறுவன்!
திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஹஷன் ஸலாமா என்ற குறித்த சிறுவன் முற்பகல் 11மணியளவில் தலைமன்னாரை அடைந்துள்ளார்.
இதன்படி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் 8வது நபராக அவர் திகழ்கிறார்.

எலன் மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர் - எதிர்த்து நீதிமன்றம் செல்லும் பங்குதாரர்கள்

 tamil.goodreturns.in  :   உங்க பேராசைக்கு அளவே இல்லையா? – எலான் மஸ்க்கிற்கு குட்டு வைக்கும் பங்குதாரர்..!
அமெரிக்கா: எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர்களை மொத்த ஊதியமாக வழங்குவதற்கு முக்கிய பங்குதாரரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய மொத்த ஊதியமாக 56 பில்லியன் டாலர்களை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.