 |
கலைஞருக்கு இடது பக்கம் நூர்ஜஹான் |

சிவசங்கர் எஸ்.எஸ் :
நேற்று
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட மகளிரணி
நிர்வாகிகள் கூட்டத்தில்
பங்கேற்றிருக்க வேண்டியவர் அம்மா நூர்ஜஹான் பேகம். ஆனால் உடல்நலக் குறைவு
காரணமாக, மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
மாநில மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி அவர்கள் மதுரை சென்று, அம்மா
நூர்ஜஹானை பார்த்துவிட்டு தான் பெரம்பலூர் வந்து கூட்டத்தில் கலந்து
கொண்டார். இங்கு கூட்டம் முடியும் தருவாயில், அங்கு கூடு பிரிந்திருந்தார்
அம்மா நூர்ஜஹான்.
கடந்த சில மாதங்களாக இந்தக் கூட்ட ஏற்பாட்டிற்காக
தொடர்ந்து பேசி வந்தார். கடந்த வாரமும், அழைத்து கூட்ட ஏற்பாடுகள் குறித்து
பேசிவிட்டு, "24 மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் அரியலூர் வந்து
விடுகிறேன்", என்று சொன்னார். ஆனால், வரவில்லை. விடைபெற்று விட்டார், ஒட்டு
மொத்தமாக.
இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பெண் பொதுவாழ்விற்க்கு வருவது,
இப்போது எளிதாக சாத்தியமாகி வருகிறது. ஆனால், அம்மா நூர்ஜஹான் வந்த
காலத்தில், அது அவ்வளவு சிரமமான காரியம்.
அதுவும் பெரியாரிய
சிந்தனையோடு, திராவிட இயக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,
கொள்கைப் பிரச்சாரம் செய்தது அசாத்தியமான செயல். செய்து காட்டினார்.