சனி, 15 மே, 2010

கலைஞர். பார்வதி அம்மாள் சிகிச்சை பிரச்சினை: அரசியலுக்காக திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள் கலைஞரி பேட்டி

கே:- உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வா கத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் அவற்றின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

ப:- குற்றம் சாட்டா விட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த்தமும் இல்லை; அடிப்படையும் இல்லை.

கே:- சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாகவும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?

ப:- அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத் துவம் எதையும் நான் தர வில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும்.

கே:- முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம் - வாதம் - எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும் - வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பண பலம் மாறி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். சாமானியர்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியாமல் செய்து விடும் இந்தச்சூழல் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?

ப:- காலக்கணக்கெடுத்திட; நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய சம்பவாமி யுகே யுகே நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

கே:- நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் மாறுபட்டுள்ள டி.20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அண்மைக் காலத்தில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

ப:- டி.20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர - சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், ஜாகஸ் காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்களாவர்.

கே:- தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர் கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?

ப :-தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கி றீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் - கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை யெல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.

கே :- நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?

ப:- ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.

கே :- இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?

ப :- இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும் - அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும். இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை களில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோ ரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கே:- மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அழகிரி மாநில அரசியலுக்கு வருவார் என்றும், கனிமொழி மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றனவே?

ப:- நீங்கள் தான் உங் கள் கேள்வியிலேயே ஊடகச் செய்தி என்று சொல்லி விட்டீர்களே?

கே:- இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் - பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?

ப:- இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

கே:- ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்ட மன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்த னையை வரும் ஆண்டிலாவது பார்க்க முடியுமா?

ப :- என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டி யோடு இணைந்த சீனியாரிட்டி யைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட படித்த ஒரு இளைஞரான புது முகத்தைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தோம்.

கே:- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?

ப:- இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

ஆனையிறவு உப்பு உற்பத்திப் பேட்டையினை மீண்டும் இயக்குவதற்கு


ஆனையிறவு உப்பு உற்பத்திப் பேட்டையினை மீண்டும் இயக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது கடந்த சில வருடங்களாக செயற்படாத நிலையில் இருக்கும் ஆளைனயிறவு உப்பளத்தை மீளச் செயற்படுத்துவதற்குரிய தடைகளை ஆராய்வதற்கு உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அக்குழுவின் ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் அதனால் பல்லாயிறக்கணக்கான தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரூன் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான பரோனஸ் சயீதா வர்சி (39) அந் நாட்டு அமைச்சராகிறார். இவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கேமரூன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார். இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்பதும் இதுவே முதல் முறை

ஒரு காதல்ஜோடி தாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடத்தப்பட்டு விட்டதாக நாடகம்

யாழ்குடாநாட்டில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும்வரை அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். தமது குழந்தைகளை யாராவது கடத்திச் சென்று விடுவார்களா? என்று பயப்படும் அளவுக்கு அங்கு கடத்தல் என்பது மிகவும் மலிந்துள்ளது. இந்நிலையில் ஒரு காதல்ஜோடி தாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடத்தப்பட்டு விட்டதாக நாடகம் ஆடியுள்ளனர். யாழ் பிரதான வீதியில் தண்ணீர்த் தாங்கிக்கு அண்மையாக நேற்று நண்பகல் 1.00மணியளவில் இளம்பெண் கடத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. இத்தகவலை அடுத்து யாழ் நகர தளபதி மேஜர் நிசந்த தலைமையில் படையினர் தேடுதல் நடத்தி அப்பெண்ணை மீட்டுள்ளனர். உண்மையில் தேடுதலின் போது அப்பெண்ணும் அப்பெண்ணைக் கடத்தியதாக தெரிவிக்கப்படும் நபரும் ஜோடியாக ஓரிடத்தில் தங்கி இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டதினல் இவர்களை காணவில்லை என்று கிட்டதட்ட ஒன்றரை மணித்தியாலமாக இருந்த பரபரப்பின் முடிவில் தெரிய வந்தது என்னவெனின் இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதே இந்த ஜோடி தற்போது யாழ்பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனராம்.

குஷ்பு திமுக தலைவர் [^]முன்னணியில் கட்சியில் இணைய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு
திமுகவில் நேற்று சேர்ந்த பிறகு குஷ்பு அளித்த பேட்டி:

திமுக தலைவர் [^]முன்னணியில் கட்சியில் இணைய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறி இருக்கிறது. எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது இந்த நிகழ்ச்சி.

மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க.தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி என்றால் அது தி.மு.க.தான்.

நடிப்பு எனது தொழில். தொடர்ந்து 'டிவி'யிலும், சினிமாவிலும் நடிப்பேன். தி.மு.க., கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு உழைப்பேன். காங்கிரஸ் [^] மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை..." என்றார் குஷ்பு.

ஜெயா டிவியில் உங்கள் ஷோ தொடருமா என்றதற்கு, எல்லா டிவியிலும் நான் நடிப்பேன். எனக்கு எந்தத் தடையும் இல்லை, என்றார் குஷ்பு.

உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம்.

உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்” என அவர் மேலும் கூறினார். ‘பிரேவ் ஹார்ட்’ செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

வெள்ளி, 14 மே, 2010

இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார்- மீண்டும் மருத்துவமனையில் மரணம்

மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.

மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளுக்கும், சுந்தரமூர்த்திக்கும் திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது.

இதையடுத்து இருவரையும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து சுந்தரமூர்த்தியின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென சுந்தரமூர்த்தி கண் விழித்து தலையை உயர்த்திப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கை, கால்களில் அசைவு தெரியவே அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்தனர்.

இதையடுத்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சுந்தரமூர்த்தைய தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த தகவல் பரவி மருத்துவமனையில் உறவினர்களும், கிராம மக்களும் குவிந்து விட்டனர்.

சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறினீர்களே, இப்போது அவருடன் உயிருடன் இருக்கிறார். முறையாக மீண்டும் சிகிச்சை அளியுங்கள் என்று டாக்டர்களை வலியுறுத்தினர். இதையடுத்து டாக்டர்கள் மீண்டும் சிகிச்சையைத் தொடங்கினர்.

ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக மீண்டும் கூறினர். இதைக் கேட்ட உறவினர்களும், கிராமத்தினரும் கோபமடைந்தனர். போராட்டத்தில் குதித்தனர்.

டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதால் தான் சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறி போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது அவர்கள் மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும் சுந்தரமூர்த்தியின் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அனைவரும், போராட்டம் நடத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.

பின்னர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுந்தரமூர்த்தியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்து பெண் முஸ்லிம் பையனை காதலித்து திருமணம் செய்து


மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'-முத்தலிக்கை அம்பலப்படுத்திய தெஹல்கா!
 
பதிவு செய்தவர்: செல்வராஜ்
பதிவு செய்தது: 14 May 2010 10:10 pm
இங்க ஒரு முஸ்லிம் பெண் இந்து பையனை காதல் திருமணம் செய்தால் அந்த பையல் முஸ்லிமாக மாறவில்லை என்றால் அவன் வீட்டின்மேல் பெட்ரோல் குண்டு போடுகிறார்கள் சம்பவம் (ஆத்தூர் )அல்லது அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் சுடு போட்டார்கள் சம்பவம் (விழுப்புரம் ) இது உதாரணத்திற்கு இது போல சம்பவம் நாடு முழுவதும் நிறைய உண்டு ஒரு இந்து பெண் முஸ்லிம் பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டால் உடனயாக முஸ்லிம் மாக மதம் மாற சொல்கிறார்கள் (திருநெல்வேலி மட்ரும் அணைத்து ஊர்களிலும் )இது எந்த முட்டாள் இந்துக்கவது தெரியுமா..

பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக்
 கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.

கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தலிக்.

47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர். 1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக்.

பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.
பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மத ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா.

இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந் நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.

பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.

இந்து- முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்ப்ப்பட்ட நிருபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.

பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர்.

இதற்காக ரூ. 60 லட்சம் செலவாகும் என்று முத்தலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.
முத்தலிக்கின் இந்தப் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராணுவத்தினர் 45 வீடுகளை கையளித்தனர். இவ்வீடுகள் ராணுவத்தினர் கட்டப்பட்டதாகும்

சாவகச்சேரி நுணாவில் கைதடி பகுதிகளில் ராணுவத்தினர் 45 வீடுகளை கையளித்தனர். இவ்வீடுகள் ராணுவத்தினர் கட்டப்பட்டதாகும்.
இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு நாடு கடந்த கூட்டமும் இது போன்ற வீடுகளை கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்போம். ம்ம்ம்ம்

கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன் மாவட்ட நீதிமன்றம்

தமிழரும் நோர்வே வாசியுமான நடராஜா சேதுரூபன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில், "ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இக்கட்டுரைகள் மற்றும் செய்திகளால் சேதுரூபனுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக உடனடியாக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் சுவீடன் நாட்டு குரோணர் பணத்தை வட்டியுடன் செலுத்தும்படியும் நீதிமன்றின் இத் தீர்ப்பை மேற்படி "ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்திலும், இலங்கையில் ஒரு பத்திரிகையின் முன்பக்கத்திலும் துலாம்பரமாக பிரசுரிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த அவதூறு ஏற்படுத்தும் கட்டுரைகள் மற்றும் செய்திகளால் சேதுரூபனுக்கு ஏற்பட்ட மானநஷ்டத்திற்கான இழப்பீடு தொடர்பல் இனி நீதிமன்றம் கணக்கிட்டு முடிவு செய்யும் தொகையை மானநஷ்டத் தொகையாக வழக்காளிக்கு செலுத்தும்படியும் நீதிமன்றம் தனது 23பக்கத் தீர்ப்பில் உத்தரவு வழங்கியுள்ளது.

சுவீடன் தலைநகரம் ஸ்ரொக்கொம்மில் உள்ள நொட்டாலி மாவட்ட நீதிமன்றில் மூண்று நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை கடந்த புதனன்று பிற்பகல் வழங்கியது. தம்மைப் புலி உறுப்பனர் என்றும், தாம் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுக்காகப் பணிபுரிபவர் என்றும், தெரிவித்து உண்மைக்குப் புறம்பான அவதூறுத் தகவல்களை கே.ரி.இராஜசிங்கம் தமது "ஏசியன் ரிபியூன்' இணையத்தளம் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் என்றும் இக்கட்டுரைகள் மற்றும் தகவல்களை இலங்கையில் சில அரச சார்பு ஊடகங்களும் மேற்குலகில் இலங்கைத் தரப்பிற்குச் சார்பாகச் செயற்படும் சில ஊடகங்களும் மறு பிரசுரம் செய்து பிரசாரப்படுத்தி வந்தன என்றும் இதில் தமது உயிருக்கு பேராபத்தும், தமது பெயருக்கு அபகீர்த்தியும் ஏற்பட்டு வந்துள்ளன என்றும், சேதுரூபன் தனது வழக்கில் சுட்டிக்காட்டி இருந்தார்.

கே.ரி.இராஜசிங்கமும் அவரது "ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்தை நடத்துவதாக கூறப்படும் ஆசிய கற்கைகளுக்கான உலக நிறுவனமும் சுவீடனை மையமாகக் கொண்டு இயங்குவதால் அங்கு இந்த வழக்குத் தொடரப்பட்டது.

வழக்காளியான சேதுரூபன் சார்பல் இலங்கையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பனர்களின் விசேட பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி பின் தற்போது சூடானில் .நா அதிகாரியாக சேவையாற்றிவரும் அதிகாரி ஒருவர் சுவீடன் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்காளியான சேதுரூபனை பற்றியவை எனக்கூறப்படும் செய்திகளை இலங்கையின் தேசிய உளவுப் பிரிவினர் தம்மிடம் அவ்வப்போது வழங்கி அவற்றை பிரசுரிக்கும்படி கேட்டுக்கொண்டமையால் தாம் அவற்றை வெளியிட்டு வந்தார் என்பதை கே.ரி.இராஜசிங்கம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு கே.ரி.இராஜசிங்கத்திற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்கப்பட்டள்ளது. அதன்பின்னர் இத்தீர்ப்பு நடைமுறைக்கு வரும். தீர்ப்பு நடைமுறைக்கு வந்து இரண்டு வார காலத்திற்குள் இத்தீர்ப்பின் முழு ஆங்கில மொழியாக்கத்தை "ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்தின் முன்பக்க இணைப்பாக பிரசுரிக்க வேண்டும் என்றும் மூன்று வாரத்திற்குள் இலங்கையில் ஒரு பத்திரிகையில் முற்பக்கத்தில் தீர்ப்பின் முக்கிய பகுதிகளை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பணித்துள்ளது.

ஜெனரலும் ஜே.ஆரும்


இராணுவ தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை அமைத்திராவிட்டால் கடந்த பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனைக்கு (ஜே.வி.பி.) ஏற்பட்டிருக்கக் கூடிய கதி என்னவாக இருந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான 7 பேரில் ஐவர் ஜே.வி.பி.உறுப்பினர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை நிறுத்திய எதிரணிக் கட்சிகளின் செயலினால் இறுதியில் சொற்ப பயனையாவது அடையக் கூடிய வாய்ப்பு ஜே.வி.பி.க்குத்தான் ஏற்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஜெனரல் பொன்சேகா ஜே.வி.பி.க்கு அனுகூலமாக இருப்பாரா அல்லது ஒரு பிரச்சினையாகி விடுவரா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் பாராளுமன்றத்திலும் சரி ஊடகவியலாளர் மகாநாடுகளிலும் சரி தன்னெண்ணப்படியே பேசுகிறார். தன்னால் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் தன்னுடன் அணிசேர்ந்து நிற்கும் ஜே.வி.பி.யினருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பற்றி ஜெனரல் பொன்சேகா அக்கறைப்படுபவராகத் தெரியவில்லை.
கடந்தவாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் மகாநாடொன்றைக் கூட்டிய ஜெனரல் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவை வானளாவப் புகழ்ந்தார். ஜெயவர்தனவினால் எழுதப்பட்ட நூலொன்றை தற்போது வாசித்து வருவதாகவும் அவரே இலங்கை இதுவரையில் கண்ட அரசாங்கத் தலைவர்களில் மிகவும் சிறந்தவர் என்றும் ஜெனரல் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரங்களை நாட்டின் நலன்களுக்காகப் பயன்படுத்திய ஒரேயொரு ஜனாதிபதி ஜெயவர்தன தான் என்றும் கூட அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஜெயவர்தனவை முன்மாதிரியான அரசியல் தலைவர் என்று முன்னாள் இராணுவத் தளபதி புகழ்ந்துரைத்த போது அருகில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத்தும் சுனில் ஹந்துன்நெத்தியும் அமர்ந்திருந்தனர். ஜெயவர்தனவைப் பற்றிய ஜே.வி.பி.யினரின் கருத்துகள் எத்தகையவை என்பதை ஜெனரல் பொன்சேகா அறியாதவராக இருந்திருக்க முடியாது. ஜெயவர்தனவைப் பற்றி ஜெனரல் கூறிக்கொண்டிருந்த போது ஜே.வி.பி.முக்கியஸ்தர்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. முன்னாள் இராணுவத் தளபதியின் அந்தக் கருத்துகள் ஜே.வி.பி.க்கு ஏற்புடையவையல்ல என்று கூட பகிரங்கமாக கூறுவதற்கும் அன்றைய தினம் விஜித ஹேரத்தோ அல்லது சுனில் ஹந்துன்நெத்தியோ முன்வரவில்லை. ஜெனரலின் தயவில் அரசியல் நடத்தப் புறப்பட்டிருப்பதால் அசௌகரியங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு.
ஜெயவர்தன இந்த நாட்டை எவ்வாறு ஆட்சி செய்தார் என்பதை இங்கு நாம் விளங்கக்கூற வேண்டியதில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஜெயவர்தனவின் அரசியல் அணுகுமுறைகளே என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் ஆட்சி நிருவாகத்தில் எதேச்சாதிகாரப்போக்குத் தலைதூக்குவதற்கு வழிவகுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவரும் ஜெயவர்தனவே. தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆணைப் பெண்ணாகவோ பெண்ணை ஆணாகவோ மாற்றமுடியாதே தவிர, மற்றும்படி சகல காரியங்களையும் சாதிக்க முடியுமென்று மார்தட்டிய ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் போக்கிற்கு வழிகாட்டிக் கொடுத்தார். தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களைப் பார்த்து "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று கர்வத்தனமாகப் பேசிய ஜெயவர்தன இனநெருக்கடி தொடர்பில் கையாண்ட பொறுப்பற்ற அணுகுமுறைகளே இது நாள்வரை தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அவலங்களுக்குகெல்லாம் காரணம்.
இத்தகையதொரு படுமோசமான பிற்போக்குவாதியை சிறந்த ஜனாதிபதி என்று வர்ணித்திருப்பதன் மூலமாக ஜெனரல் பொன்சேகா தனது குணாதியங்களை மேலும் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். ஒருவர் பின்பற்றவிரும்புகின்ற தலைவரைப் பார்த்து அவரின் இயல்புகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு,கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கே பெரும்பான்மை வாக்குகளை அளித்தார்கள். ஜெயவர்தனவைப் பற்றிய தனது கருத்துகளை ஜெனரல் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் தமிழ் மக்கள் நிச்சயமாக அவருக்கு வாக்களிக்க முன்வந்திருக்கமாட்டார்கள்.
நன்றி : தினக்குரல்

இளம் பெண் வெட்டுக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்பு உடுவிலில் சம்பவம்

உடுவில் மல்வம் பகுதியில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ஜெ.கலைவாணி (வயது 19) என்பவரே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவராவார். இதுகுறித்து தெரியவருவதாவது:

இவர் தமது வீட்டிலிருந்து
உறவினருடைய ஆட்களில்லாத வீட்டிலுள்ள வளர்ப்பு பிராணிக்கு வழமையாக உணவு கொண்டு செல்வதாகவும் நேற்றைய தினம் அவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர் தேடிச்சென்றபோதே இவர் வெட்டுக்காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து இவரை உறவினர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகள் அபகரிப்பு.14.05.10
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணின் நகைகளை வைத்தியசாலை சிற்றூழியன் சீருடையில் இருந்த ஒருவர் அபகரித்து சென்றதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த அரசடி வீதி கந்தர்மடத்தைச் சேர்ந்த கிருஷ்ணர்த்தி தில்லைராஜேஸ்வரி (ஜயது 55)   என்பவர் சிகிச்சைப் பிரிவுக்குள் பரிசோதனைக்காக உட்செல்ல முற்பட்டபோது அப்பகுதியில் வைத்தியசாலை சீருடையில் நின்ற ஒருவரே நகைகளை கழற்றி தந்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

குறித்த பெண்ணும் அவ்வாறு கழற்றிகொடுத்துவிட்டு பரிசோதனையின் பின்னர் வந்து பார்த்தபோது குறித்த நபர் தலைமறைவாகிவிட்டார்.  இதனையடுத்து  குறித்த பெண் போதனா வைத்தியசாலையில் முறைப்பாடு செய்ததுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவத்துடன் அவரது இரண்டு சோடி காப்புகளும் ஒரு சங்கிலியுமே களவாடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.
இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திரு ந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.
2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இர்கள் யாழ். மாவட்டத்தில் குறி ப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுளளதாக பொலிஸ் தலைமையகம்​ தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் [^] வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி [^] முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.

கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் [^] அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் [^], சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.

ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

புலிகளின் மறுஅவதாரமே உலகத் தமிழர் பேரவை

நெடியவன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையே தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரமெனவும் அமெரிக்காவை தளமாகக் கொண்டு விஷ்வநாதன் ருத்ரகுமாரின் தலைமையில் இயங்கும் அமைப்பு அல்ல எனவும் சிங்கப்பூரில் வசித்துவரும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் யாழ் மேயரின் மகனான ருத்ரகுமார் அமெரிக்காவில் வசித்துவரும் ஒரு வழக்கறிஞர். எனவே அரசியல் பற்றிய தெளிவான அறிவு கொண்டதனால் அவர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கூடுமெனவும் ஆனால், மொஸ்கோவில் கல்வி கற்ற நெடியவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் எனவும் புலிகளின் நிதி விவகாரங்களை கவனித்து வந்த கெஸ்ரேவின் உதவியாளராகவும் கடமையாற்றியதாகவும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாடு கடந்த தமிழீழத்திற்காக வாக்களித்த அனைவரும் மற்றுமொரு நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் இவர்களில் 90 வீதமானவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேரமாட்டார்கள் என்றும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments:

Anonymous,  May 12, 2010 7:59 PM  
உண்மையில், அந்த சுயநல நரிக்கூட்டத்தின் 90 அல்ல 100 வீதமானவர்கள் மீண்டும் இங்கு திரும்பி வந்து குடியேரமாட்டார்கள். வெளிநாடுகளில் பணத்திக்கும், ஆடம்பர வாழ்வுக்கும், வரட்டு கௌரவதிக்கும், கொத்தடிமைகளாக, அடிமட்ட இனமாக, வேற்று நாடுகளுக்கு, வேறு இனத்துக்கு கடுமையாக ஊழியம் செய்யும் தமிழர்களே! முக்கியமாக, அதிஉயர் தமிழ் பற்றார்களே!, அதிஉயர் தமிழ் உணர்சியாளர்களே!, தமிழ் அறிஞர்களே!, அறிவுக்கொளுந்துகளே! முதலில், நீங்கள், உங்கள் குடும்பத்துடன் இங்கு திரும்பி வந்து, எங்களைப்போல், எமது மண்ணில், எமது இனத்துடன் தன்மானத்துடன் வாழ உங்களில் யாரும் ரெடியா? அப்படிப்பட்ட உங்களுக்கு ஏன் தமிழீழம்? எதற்காக, நாடு கடந்து தமிழீழம்?

புதன், 12 மே, 2010

thambiththurai sentenced    jk;gpj;Jiu gpughfud; vd;wiof;fg;gLk; cyfj;jkpoh; gaq;futhjp fdlhtpy; fk;gp vz;zg; Nghfpwhh;.  gaq;futhjr; nray;fSf;fhf epjp Nrfhpj;jhh; vd;w Fw;wr;rhl;bd; fhuzkhf 2008 k; Mz;L khh;r; khjk; fNdba tpNrl Gydha;Tg; gphptpduhy; ifJ nra;ag;gl;l jk;gpj;Jiu Fw;wthspahff; fhzg;gl;L jhd; Fw;wthsp vd;W xg;Gf;nfhz;Ls;shh;.
    fdlhtpy;  gaq;futhjpfSf;F epjp Nrh;j;J  Kjy; Fw;wthspahff; fhzg;gl;lth; ,tuhthh;. ,th; Fw;wj;ij xg;Gf; nfhz;ljdhy; ,tUf;F Fiwe;j glrj; jz;lid toq;fg;glyhk; vdf; fUjg;gLfpwJ. fNdba csT ];jhgdk;  ,tuJ eltbf;iffis gy ehl;fshf cd;dpg;ghff; ftdpj;J ,tiu gy Mjhuq;fSld; ifJ nra;jJ. ,tuJ ifJf;F td;$thpy; jkpo; kf;fs; nghpJk; cjtpAs;sdh; vd;gJ Fwpg;gplj;jf;fJ. ,Nj Nghy N[h;kdpapy; Xngz;Ngh;f; efhpYk; Gypg;gpdhkp xUth; jkpo; kf;fsplk; kpul;bg; gzk; Nrh;j;jhh; vd;w Fw;wr;rhl;by; ifJ nra;ag;gl;L;s;shh;. Nkyjpf tpguq;fSf;F http://www.open-report.de/artikel/Mutma%DFlicher+Helfer+einer+Tamilen-Terrororganisation+festgenommen/56864.html

கடத்தப்பட்ட 2 ½ வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

களனி விகாரையின் உற்சவத்திற்காக இம்புல்கொட பிரதேச்தில் இருந்து வந்திருந்த 2 ½ வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டிருந்தார். இச்சிறுமி சற்று முன்னர் மாறவில பிரதேச்தில் வலுவத்தை எனும் மிடத்திலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக செயலில் இறங்கிய பொலிஸார் சோதனைச் சாவடிகளை அமைத்து தேடுதல்களை நடாத்தியதுடன், பிரதேசங்களை சுற்றிவளைத்து வீடுவிடாகவும் சோதனையிட ஆரம்பித்ததை தொடர்ந்து கடத்தல் காரர்கள் குழந்தையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அங்கத்தவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தமது தலைமைத்துவம் சிறந்ததில்லை என நினைத்தார்களேயானால் கட்சி நன்மைக்காக தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவிடம்  கேட்டபோது, இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றார்

யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா இளங்கோ ் கைது பணிகளைத் தொடருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

11.05.2010 - செவ்வாய்க்கிழமை

யாழ் மாநகர பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (11) நண்பகலுடன் இடைநிறுத்தி பணிகளைத் தொடருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா இளங்கோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழ் மாநகர சபையின் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற யாழ் மாநகர சபை வளாகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போராட்டத்தை இன்று நண்பகல் 12.00 மணியுடன் இடைநிறுத்தி பணியாளர்கள் அனைவரும் தத்தமது கடமைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன் பிரதி மேயரின் கைது விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அதுவரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவுடனும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணியாளர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினார்.

பிரதி மேயர் விடுவிக்கப்படாத பட்சத்தில் இன்று நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுமென யாழ் மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்திருதமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வங்கி ஏடிஎம் வாட்ச்மேன் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் பலி: 4 பேர் உயிர் ஊசல்


பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வங்கி ஏடிஎம் காவலர் துப்பாகியால் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். மேலும் 5 பொது மக்கள் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

பாபநாசம் ஸ்‌டேட் பாங்க் ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப இன்று பிற்பகலில் ஊழியர்கள் வந்தனர். அவர் எந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பொது மக்களுக்கும், ஏ.டி.எம் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பணம் எடுக்க வந்தவர்களை காவலர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதைப் பார்த்த பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

துப்பாக்கியால் சுட்ட வாட்ச்மேன் ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீ்ர்செல்வம் வங்கி ஏடிஎம்முக்கு விரைந்தார்.

ஏ.டி.எம்முக்குள் பதுங்கியிருந்த வாட்ச்மேனைப் பிடிக்க அவர் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தையும் அவர் துப்பாக்கியால் சுட்டார்.

படுகாயமடைந்த பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வாட்சேன் சுட்டதில் படுகாயமடைந்த 5 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பாபாநாசத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அ்கு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் 1000 பாலங்களை

நாடளாவிய ரீதியில் 1000 பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலங்களை நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், வடக்கு, ழக்கு வீதிகளை அமைப்பதற்கும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வீதி நிர்மாணப் பணிகள் அனைத்தும் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ் குடாநாட்டில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள வெள்ளைவான்

குடாநாட்டில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள வெள்ளைவான் கடத்தல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இன்றையதினம் கரவெட்டி சம்பந்தர் கடையைச் சேர்ந்த 37வயதான குடும்பப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு வல்லைப்பகுதியில் குற்றுயிராக வீசப்பட்டிருக்கின்றார். குறித்த பெண் தனது மகனை பாடசாலையில் விட்டுவிட்டு சம்பந்தர்கடை கரவெட்டியிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வாகனத்தில் வந்த சிலர் இவரை பலாத்காரமாக கடத்தியதாக தெரிய வருகின்றது. ஆட்கள் நடமாட்டமற்ற வல்லைப் பகுதியில் இவரை கூரிய ஆயதங்களால் தாக்கி அவர் உயிரிழந்ததாகக் கருதி அப்பகுதியிலுள்ள பற்றை ஒன்றினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதிக்கு ஈச்சம்பழம் சேகரிப்பதற்காகச் சென்ற சிறுவர்கள் குற்றயிராக அனுங்கிய நிலையில் இப்பெண்ணைக் கண்டதை அடுத்து பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலீசாரினால் மீட்கப்பட்ட குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. குடாநாட்டில் தற்போது நிலவுகின்ற இவ்வாறான சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே வலிகாமம் சங்கரவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் வந்த மூவரால் இதேபோன்று கடத்தப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக கொடிகாமம் மற்றும் மீசாலையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிட்ட ரீதியில் இவ்வாறான கடத்தல் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒருபுறம் கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர மறுபுறம் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இவ்வாறான உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவது குடாநாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முயற்சித்தன - பாதுகாப்புச் செயலர் தெரிவிப்பு

இலங்கையில் பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முதன்மை கொடுத்தன. இந் நாடுகள் பிரபாகரனையும் முக்கிய சில தளபதிகளையும் காப்பாற்ற முயற்சி எடுத்தன. ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே அவை இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன எனப் பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப் போரை வெற்றி கொள்வதற்குப் படை துறை, அரசியல், சமூக மற்றும் சர்வதேச ரீதியில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழும் வழிகாட்டலின் கீழும் மேற்கொண்டோம் என கோத்தபாய ராஜபக்ச பிஸ்னஸ் ருடேயின் மே மாத இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப்புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்காக அவர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் விடுதலைப்புலிகள் இப் பேச்சு வார்த்தையில் இதயசுத்தியுடன் கலந்து கொள்ளாததால், அவர்கள் இராணுவ ரீதி யில் தோற்கடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறுதி முடிபு எடுத்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றி கொள்வதற்குப் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் திட்டமிட்டு மேற்கொண் டோம். 30 வருட காலப் போரின் போது கடந்த கால அரசுகள் விட்ட தவறுகளை இனங் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றி கொள்வதற்கு உறுதியான படைத்துறையும் அவர்களை வழிகாட்டக் கூடிய நல்ல தலை மையும் இருக்க வேண்டும் என உணர்ந்தோம். முப்படைகளையும் வழிநடத்துவதற்குரிய பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த கட்ட மாக முப்படைகளையும் விரிவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் மூன்றரை வருடங்களாக நடைபெற்ற போர்க் காலப் பகுதியில் 5 ஆயிரம் இளைஞர்கள் கிராமங்களில் இருந்து வந்து படைத்துறையில் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுப் படைத்துறையில் இணைக்கப்பட் டார்கள். அடுத்ததாக, படைத்துறையில் ஆயுத தளபாடங்களுக்கும் மற்றும் உபகரணங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு இருந்தது. இதனை உணர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்்ச அவற்றை நிவர்த்தி செய்வதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதியைப் படைத்துறைக்கு ஒதுக்கினார்.

இந் நிதியைக் கொண்டு பெருந்தொகை ஆயுத தளபாடங்கள் சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற எமது நட்பு நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. விடுதலைப்புலிகள் மீதான வலிந்த தாக் குதலை ஆரம்பித்து பெரும் எடுப்பில் போரை முன்னெடுத்துச் செல்லும் போது சர்வ தேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம&#