சனி, 23 அக்டோபர், 2010

சிம்புவுடன் நடிக்கும் கௌதம் மேனன்


   
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம், தன்னை ஒரு ரொமாண்ட்டிக் ஹீரோவாக காட்டிய கௌதம் மேனன் மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருப்பதாக கூறும் சிம்பு அவரைதனது படத்தில் நடிக்க வைக்கப்போகிறாராம்.

வெப்பம், அழகர்சாமியின் குதிரை படங்களின் தயாரிப்பு பணி, நடுநிசி நாய்கள் படத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பு என படு பிஸியாக ஒருக்கிறார் கௌதம்.
வழக்கமாக கௌதம் படத்தில் ஹிட்டான பாடல்களின் அணிவகுப்பு இருக்கும். ஆனால் நடுநிசி நாய்கள் பாடலே இல்லாத திரில்லரான படம். சாமிரா ரெட்டி - வீரா ஆகியோர் நடிப்பில் வளர்ந்து வருகிறது நடுநிசி நாய்கள்.   இதனை அடுத்து விண்ணைத் தாண்டி வருவாயாவின் இந்தி ரீமேக் பணிகள் கௌதமுக்காக காத்திருக்கு.  இந்நிலையில் சிம்புவின் அழைப்பை ஏற்று போடா போடியில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

தனது படங்களில் எல்லாம் எப்படியாவது தலையை காட்டி விடுவது இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் கொள்கை. அதே போல மின்னலே, வாரணம் ஆயிரம் போன்ற தனது படங்களில் ஒரு சிலகாட்சிகள் வந்து போயிருப்பார் கௌதம். 

இப்படி தனது படங்களில் நடித்து வந்த கௌதம் மற்றொருவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதுதான். இயக்குனர் விக்னேஷ்சிவா இயக்கத்தில் ‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டலில் நடந்து வருகிறது. இதனால் தனது பகுதியை நடித்து கொடுக்க லண்டன் போகும் கௌதம் அங்கேயே 10 நாட்கள் தங்கி முடித்துக் கொடுத்துட்டுதான் வருவாராம்.

446 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு..!தெரணியகல காட்டுப் பகுதியில


கம்பஹா மாவட்டம் தெரணியகல நக்காவிட்ட பிரதேசத்தில் கற்குழி ஒன்றுக்குள் மக்கிப்போன நிலையிலிருந்த 446 தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுக்குத் தேன்சேகரிக்கச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளில் 303அ. அட்டைகள் முற்றாக மக்கி விட்டன. அவற்றலிருந்து விவரங்களைப் பெறமுடியவில்லை. 86 அட்டைகளில் உரியவரின் பெயரும், முகவரியும், இலக்கமும் தெரிகின்றது. 57 அட்டைகளில் இலக்கங்கள் மட்டுமே தெரிகின்றன. இந்த அடையாள அட்டைகள் பொத்தெனிகந்த, நக்காவிட்ட, மாலிபொட, மியனவிட்ட மற்றும் யட்டிவல பிரதேசவாசிகளுக்குச் சொந்தமானவை. 1989 ம் ஆண்டு ஜே.வி.பியினரால் சேகரிக்கப்பட்டவை என்று தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீன வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலம் தனது நாட்டுக்கு சொந்தமானது போன்று இணையதளத்தில் உலக வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது.

கூகுள் எர்த் இணையதளத்துக்குப் போட்டியாக சீன மொழியில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் இவ்வாறு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு திபெத் என்று சீனா வாதிட்டு வரும் பகுதியில் அருணாசலப் பிரதேசம் இணைந்திருப்பது போல் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு உட்பட்ட அக்சய் சின் பகுதியும் சீனாவுக்கு சொந்தமானது போன்ற தோற்றத்தில் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துடன் இந்தியாவின் அக்சய் சின் பகுதி இணைந்திருப்பது போன்று வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா அதிகாரிகள் வுரைபடத்தை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

கல்முனையில் பெருந்தொகையான அபின் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளது

கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள்ளிருந்து பெருந்தொகையான அபின் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிசாரால் கைப்பற்றப்பட்ட அபின் பைக்கற்றுகளின் எண்ணிக்கை 5500க்கும் அதிகம் என்று தெரிய வருகின்றது. அதன் பெறுமதி 1,37,500 என்றும் தெரிய வருகின்றது.
அபின் பைக்கற்றுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மாத்தறையிலிருந்து பொலநறுவைக்குப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 800 ஹெரோயின் பைக்கற்றுகளை இன்று அதிகாலையில் கலேவெலைப் பொலிசார் கைப்பற்றியிருந்தனர்.
பஸ்ஸின் நடத்துனரே ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில் அதனை எடுத்துச் சென்றமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் நடத்துனருடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகில் பௌத்த மதத்தினரின் தொகை வீழ்ச்சியடைகிறது : அமைச்சர் திசாநயக்க!


பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்தார்.

கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,
“தற்போது உலகம் மிக வேகமாக முன்னேறிச் செல்கிறது. இன்னும் 25 வருடங்களில் தீப்பெட்டி போன்ற கருவி ஒன்றின் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடன் பேச முடியும் என்று ஆதர் சீ க்லாக் 1964ஆம் ஆண்டு கூறியபோது, அவர் பைத்தியக்காரர் என்று அப்போது பாடசாலை மாணவர்களாக இருந்த நாங்கள் கூறினோம்.ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது.
அன்று உலகில் முதலிடத்தில் பௌத்த மதம் இருந்த போதும் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பௌத்த மதத்தில் காணப்படும் நடைமுறைச் சிரமங்களேயாகும்.
உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது.
மாலைதீவும் அப்படியே மதம் மாறிய ஒரு நாடாகும்.
உலகிலுள்ள 190 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாவர். 120 கோடி பேர் முஸ்லிம்களும் 90 கோடிப் பேர் இந்துக்களுமாவர்.ஆனாலும் பௌத்த மக்கள் 35 கோடியினரே உளர்” என்றும் அமைச்சர் கூறினார்.மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன உட்பட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

பயிற்சிபெற வெளிநாட்டுப் படைகள் விரைவில் இலங்கை வரும் : இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய!

யுத்தம், புலனாய்வு குறித்து நேட்டோ படையினர் உட்பட வெளிநாட்டு இராணுவத்தினர் விரைவில் இலங்கையில் பயிற்சி பெற வருகை தரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்தினரிடமிருந்து பல்வேறு விடயங்களை பரிமாறிக் கொள்வதற்காகவே வெளிநாட்டுப் படையினர் வருகை தரவுள்ளனர்.

யுத்தவெற்றி, விசேட புலனாய்வு, மக்கள் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பான விடயங்களுக்குப் பயிற்சியின்போது முன்னுரிமை வழங்கப்படவுள்ளது

காங்கிரஸ் போடும் கூட்டணிக் கணக்கு-பீகார் தேர்தலுக்குப் பிறகு அமல்!

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் மூழ்கியுள்ள நிலையில் காங்கிரஸும் தன் பங்குக்கு ஒரு பலே கணக்குடன் கமுக்கமாக காத்திருக்கிறது-சமயம் பார்த்து அதை வெளிப்படுத்த.

வழக்கமாக திமுகவும், அதிமுகவும்தான் கூட்டணிகளை நிர்ணயம் செய்யும். அவர்களோடு பிற கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் வந்து போகும். இதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது காலம் மாறிப் போயுள்ளதால் இந்த இரு கட்சிகளின் இரும்புப் பிடியும், உடும்புப் பிடியும் தளர்ந்து போய் விட்டது.

கூட்டணிகளுக்கு தலைமை தாங்குவது வேண்டுமானால் இந்தக் கட்சிகளாக இருக்க முடியும். ஆனால் கூட்டணிகள் உருவாவது இவர்களின் கையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ், தேமுதிக, பாமக. இந்த மூன்று கட்சிகளும்தான் இன்றைய தேதியில், வெற்றிக் கூட்டணியை நிர்ணயிக்கும் புதிய சக்திகளாக உருவெடுத்துள்ளன.

அதேசமயம், பாமக இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்பது பழைய கதை. இப்போது இந்த பெருமையில் பங்கு போட வந்து விட்டது தேமுதிக. தேமுதிகவும் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் கூட்டணி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அது தன் வசம் வைத்திருக்கும் லட்டு போன்ற வாக்கு வங்கி [^] . இவர்களுடன் காங்கிரஸும் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி என்பது அரசியல்வாதிகளின் கணக்கு.

விஷயத்திற்கு வருவோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் [^] இருக்குமா, பாமக மீண்டும் வருமா என்பது சமீப காலமாக பேசப்பட்டு வரும் முக்கிய விஷயமாக உள்ளது. அதேபோல தேமுதிக கூட்டணிக்கு வருமா, பாமக மீண்டும் வருமா, கூடவே காங்கிரஸும் வருமா என்ற எதிர்பார்ப்பில் அதிமுக ஆதரவாளர்களும், அனுதாபிகளும் காத்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் தனிக் கணக்கோடு படு கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த அரசியல் விளையாட்டை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

விஷயம் வெகு சிம்பிள். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். நமது தலைமையில் தனிக் கூட்டணி அமைப்பது. அதில், பாமகவையும், தேமுதிகவையும் இணைத்துக் கொள்வது. இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் கணிசமான இடங்கள் கிடைக்கும். தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கு (திமுக அல்லது அதிமுக) அதிக இடங்கள் கிடைக்கிறதோ அந்தக் கட்சியுடன் இணைந்து (பாமக-தேமுதிக வராவிட்டால் தனியாக போய்) ஆட்சியமைப்பது. இதுதான் காங்கிரஸின் திட்டம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று சமீபத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கியத் தலைவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டு பேசினாராம். அவர், திமுகவுடன் சேரும் முடிவை தாமதப்படுத்துங்கள். அவசரம் காட்ட வேண்டாம். சிறப்பான கூட்டணிக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தாராம் அந்தத் தலைவர்.

இதேபோன்ற ஒரு வாக்குறுதி தேமுதிக தலைமைக்கும் போய்ச் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணிக் கணக்கை காங்கிரஸ் போடக் காரணம், ராகுல் காந்தி [^] என்கிறார்கள். அதேசமயம், சோனியா காந்தியின் விருப்பத்திற்கு மாறாகவும் ராகுல் காந்தி நடக்கவில்லையாம். அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க காத்திருக்கிறார் ராகுல்.

ராகுலின் உத்தி என்னவென்றால், யாருடனும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இது நமது பலத்தை அறிய உதவும். தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் பங்கோடு கூட்டணி அமைக்கும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சோனியாவை சமாதானப்படுத்தி விட்டாராம் ராகுல்.

இந்த தனிக் கூட்டணியால் காங்கிரஸுக்கு என்ன பலன் கிடைக்கும்?

தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான பலத்தை அறிய முடியும். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் என்பதை அறியலாம். எதிர்கால அரசியலில் காங்கிரஸ் கட்சி முக்கியக் கட்சியாக, பலமான கட்சியாக உருவெடுக்க இது அடித்தளமாக அமையும். இறுதியில் தனித்து ஆட்சியைப் பிடிக்கக் கூடிய நிலையை அடைய இந்த புதிய கூட்டணி ஒரு பிள்ளையார் சுழியாக அமையும் என்பதே ராகுலின் திட்டமாம்.

அதேசமயம், திமுக, அதிமுகவை தவிர்த்து விட்டு பாமக, தேமுதிகவுடன் இணைந்து தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸுக்குப் பெரும் பாதகம் ஏதும் வந்து விடப் போவதில்லை. தேசிய அரசியலில் கடைப்பிடிக்கப்படும் உத்தியை இங்கு புகுத்துகிறார் ராகுல். அதாவது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும், இன்ன பிற மதச்சார்பற்ற கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுவது வழக்கம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுவது வழக்கம். அதே பாணியை இப்போது தமிழக அரசியலுக்குள் கொண்டு வரப் பார்க்கிறார் ராகுல்.

இந்தப் புதிய கூட்டணி குறித்த விஷயங்களை படு ரகசியமாக வைத்துள்ளது காங்கிரஸ். பீகாரில் நடக்கும் தேர்தலுக்காக இந்த அமைதியாம். பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. ஆனால் லாலு கூட்டணியை முந்தி 2வது இடத்தைப் பிடித்தாலே அது மிகப் பெரிய வெற்றி என்ற நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

அப்படி நடந்து பீகாரில் நம்பர் டூ கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தால், தமிழகத்தில் தனிக் கூட்டணி என்ற ரிஸ்க்கை எடுக்கும் முடிவை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்கும் என்கிறார்கள். தற்போது பீகாரில் காங்கிரஸ் கட்சியை மைக்ராஸ்கோப்பை வைத்து தேட வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் (ராகுல்) போட்டுள்ள இந்த புதிய கணக்கு தமிழகத்தில் எப்படி வரவேற்கப்படும், தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறுவார்களா அல்லது வழக்கம் போல ஏதாவது ஒரு 'மு.க'வை (திமுக அல்லது அதிமுக) தனிப் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுப்பார்களா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

பதிவு செய்தவர்: உண்மைவிளம்பி
பதிவு செய்தது: 23 Oct 2010 7:10 pm
அத்தனை இடத்திலும் தொர்கனும்னு காங்கிரசின் தலைஎழுத்து. முண்டகலப்பை ராகுலே, உன் பருப்பு தல்மில்நாட்டில் வேகாது.

பதிவு செய்தவர்: கற்பகம்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:08 pm
எப்படியோ ஜெயா அரக்கி மீண்டும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டைகுட்டிச்சுவாரக்காமல் விட்டால் போதும். அதிமுக இந்த தேர்தலோடு அழிய வேண்டும். கடவுள் அதற்கு துனை புரிய வேண்டும்.

ஆட்சி போய்விட்டால் என்ன ஆகும்? கட்சியினருக்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட தி.மு.க.,வினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: குழப்பமே இல்லாமல் நடந்த இந்த கூட்டம் எங்களுக்கு சற்று மனக்குழப்பதை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வில் ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியது, நற்பெயரை ஈட்டித் தந்ததோடு, கட்சியின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், கட்சிக்கு 30 முதல் 38 சதவீத ஓட்டுக்கள் உள்ள நிலையில், முஸ்லிம்கள், அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு நமக்கு வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. கூட்டணிக் கட்சியினரோடும் இணக்கமான சூழ்நிலை உள்ளது. கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளை முழுமையாக களைவதன் மூலமும், தொகுதிகளுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி வாய்ப்புள்ளது. இது 10 ஆகவும் உயரலாம்.

எனக்கு கிடைத்த நம்பகமான, நடுநிலையான தகவலை உங்களுக்கு சொல்கிறேன். அது உங்களை புண்படுத்தலாம். ஆபரேஷன் நேரத்திலே புண்படுத்தாமல், எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது என நீங்கள் கருத வேண்டும். செம்மொழி மாநாடு வெற்றி விழா பொதுக் கூட்டத்தைக் கூட தனித்தனியாக நடத்தியுள்ளீர்கள். கேட்டால், நாங்கள் இரண்டு வெற்றி விழாக் கூட்டங்களை நடத்தினோம் என சொல்லி நீங்கள் தப்பித்து விடலாம். கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுக்கு மேல் நான் இருந்த காரணத்தால், மாவட்டத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் அறிந்த தகவல்களை இங்கே பெரிது படுத்தி, ஒரு விசாரணை மன்றம் அமைத்து இது உண்மையா, பொய்யா என அறிவதற்காக இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. தவறே இருந்தாலும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தவறினாலும் அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு இந்தத் தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும். ஒன்று பட்டு போரிட வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டம். இந்த ஆய்வுக் கூட்டமே தி.மு.க.,வை வலுப்படுத்துவதற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் நடத்தப்படுகிறது. வெறும் தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. இந்த கட்சியினுடைய கொள்கைகளை, லட்சியத்தை விட்டு விட்டு, ஆட்சியிலேயே உட்கார வேண்டும் என எண்ணுகிற யாரும் தி.மு.க.,வில் இருக்க தகுதி படைத்தவர்கள் அல்ல.

இந்த லட்சியம், கொள்கைகள் வெற்றி பெற, நாடு பலன் பெற இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால் முடிந்த வரையில் இந்த ஆட்சியை பயன்படுத்திக் கொள்கிறோம். ஒரு வேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம். இந்நிலையில், நிர்வாக ரீதியாக வேறுபட்டு, ஒவ்வொரு ஊரிலும் இந்த இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளை பொருட்படுத்திக் கொண்டிருந்தால், தி.மு.க., வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தி.மு.க.,வின் வெற்றியில், நம் கொள்கை வெற்றியிருக்கிறது. அண்ணாதுரையின் லட்சியம் இருக்கிறது. அந்த இரண்டும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்தால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால் அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய் விடும். நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால், அங்கே அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கொள்கைகளுக்கு இடமில்லை. ஜாதி மறுப்புக்கு இடமில்லை. மூடநம்பிக்கை மறுப்புக்கு இடமில்லை. அப்படிப்பட்ட மவுடீகம், மூடநம்பிக்கை படர்ந்து, காடாக ஆகியிருக்கின்ற ஒரு ஆட்சியைத்தான் நாம் காண நேரிடும். நாம் வெற்றி பெற வேண்டும் என நான் எண்ணுவதற்கு காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நமது கொள்கைகளை காப்பாற்றுவதற்காகத்தான். எனவே நாம் ஒன்றுபடுவோம். தொடர்ந்து நமது அணியை நடத்திச் செல்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 09:27:19 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். தாத்தா, இத்தனை வருஷம் தமிழ் படிச்சும் எழுத்துப்பிழை வரலாமா தாத்தா? அதுவும் செம்மொழி கனிமொழி மாநாடு நடத்துன கோவை பத்தி பேசும்போது? ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார், அப்படீன்னு தானே இருக்கணும்.....
Daran - Chennai,இந்தியா
2010-10-23 09:24:05 IST
இந்த மஞ்ச துண்டு பெருசுக்கு பதவி வெறியும் ,பண வெறியும் அடங்கவில்லை. உங்க கொள்கையே ராஜதந்திரமாக ஊழல் செய்து, மக்களை ஏமாற்றி சொத்து சேர்ப்பது. இது தவிர கொள்கை,கோட்பாடு என்று ஏதாவது உண்டா ????...
மஞ்சள் துண்டு - சென்னை,இந்தியா
2010-10-23 09:22:24 IST
உங்கள் லட்சியமே கொள்ளை அடிப்பதுதானே............
மானமுள்ள தமிழன் - பெங்களூர்,இந்தியா
2010-10-23 08:50:27 IST
லொள்ள பாரு...!!! எகத்தாளத்த பாரு...! ஆட்சி மாற்றம் உறுதி என்ற நம்பகமான தகவல் மஞ்சள் துண்டாரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள் மக்களே..!!...
iindian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 08:49:15 IST
ஆமா அது என்னய்யா ஒங்க கொள்கை? பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்குவதா? அம்பது ௦தலைமுறைக்கு சுவிஸ் பாங்கில் பணம் சேர்த்து வைக்கிறதா? தமிழ் நாட்டை மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகளுக்கு பங்கிட்டு கொடுப்பதா? தெருவுக்கு பத்து சாராயக்கடை திறப்பதா? தமிழ்நாட்டின் நலன்களை சொந்த வியாபாரத்துக்காக அடகு வைத்து தமிழ்நாட்டை தண்ணீர் இல்லா பாலைவனம் ஆக்குவதா? உழவு, நெசவு தொழில்களை அடியோட அழிப்பதா? சுகாதார சீர்கேட்டின் மூலம் மக்களுக்கு சிக்குன் குனியா கொடுப்பதா? தமிழ்மக்களை இருட்டில் சாகடிப்பதா? லஞ்சத்தை அரசு அலுவலகங்களில் எழுதாத சட்டம் ஆக்குவதா? அரசு ஊழியர்களுக்கு தான் கொள்ளை அடிக்க துணை புரிவதற்காக அள்ளி அள்ளி கொடுப்பதா? மக்கள் வரிப்பணத்தில், ஊதாரித்தனமாக, சொந்த விளம்பரத்துக்காக, தி மு க காரர்கள் கொள்ளை அடிக்க இலவச திட்டங்களா? மாவட்டம், போக்கு வரத்து கழகங்களுக்கு ஜாதி தலைவர்கள் பேர் வைத்து ஜாதி கலவரம் உருவாக்குவதா? இந்துக்களை திருடர்கள் என்று பட்டம் கட்டுவதா, மதக்கலவரம் தூண்டுவதா? இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்து நட்டாற்றில் விடுவதா, நான்கு மணி நேரம் உண்ணா விரத கேலி கூத்தா? தமிழ் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதா, தனக்கு தானே பட்டங்கள் கொடுத்து கொள்வதா? தமிழ்நாட்டை கொலை, கொள்ளைகளின் இருப்பிடம் ஆக்குவதா ? கல்வி வியாபாரம் செய்து எல்லா இளம் தலை முறையினரையும் வீதியில் அலைய விடுவதா? கூத்தாடிகளுடன் கும்மாளம் போடுவதா? கள்ள வோட்டு போடுவதா? ரேஷன் பொருள் கடத்துறதா? மணல் கொள்ளையா? இலவச டிவி என்ற பேரில், தனது டிவி வியாபாரமா?, மக்களை ஆபாசபடங்களுக்கு, கேடு கேட்ட டிவி சீரியல்களுக்கு அடிமையாகுவதா, சோம்பேறிகள் ஆக்குவதா?...
Thiagarajan - Chennai,இந்தியா
2010-10-23 08:48:44 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' அப்படியல்ல! ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொண்டவற்றை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' கலைஞரின் பதட்டம் புரிகிறது?...
வீரா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-23 08:45:05 IST
சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள் (ளை)கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்....
jeyapandian - theni,இந்தியா
2010-10-23 07:23:52 IST
Typo, should be read like this "இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்"...
சிவா பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-23 07:05:19 IST
கொள்கையா? கொள்ளையா? சிலருக்கு இரண்டும் ஒன்றுதான். கொள்ளையே கொள்கைதான்....
தமிழன் - Madurai,யூ.எஸ்.ஏ
2010-10-23 06:55:17 IST
என்னால என்னோட கோவத்தை அடக்க முடியல ...கொள்கையா ???????? அப்படினா ???? 8 வயது என் பயனுக்கே உங்கள பத்தி நல்லா தெரியுது. நாங்க ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி மு கூ இல்ல சரியா ????...
கருத்து கண்சாமி - திண்டுக்கல்,இந்தியா
2010-10-23 06:34:59 IST
இன்ன தலைவரே அப்போ கோயம்புத்தூர் அவுட்டா? என்ன என்னமோ ஆபரேசன் வலி அது இது நு கதை விடறதுக்கு முன்னாடி உங்க கட்சி கோயம்புத்தூர் ல எதுமே நல்லது செய்யலியா? நல்லது செஞ்ச கோயம்புதூர் என்ன எந்த ஊருக்கும் பயப்பட தேவை இல்ல..இதுல எதுக்கு ஆட்சி போயிரும் கொள்கை அது இது நு பில்ட் அப் விடணும்...எனக்கும் என்னவோ கோயம்புத்தூர் உங்க கைய விட்டு போயிரும்னு தான் தோணுது போங்க வர எலெக்சன்ல...மதுர மாதிரி பிரியாணி சரிபட்டுவருமா தெரியல என்னமோ பண்ணுங்க போங்க கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பண்ண?...
ராஜன் - singapore,சிங்கப்பூர்
2010-10-23 06:19:47 IST
பண்ணியதெல்லாம் இவரும் இவர் குடும்பத்தினரும் .... ஆனால் பழி மட்டும் கட்சியினர் மீதா? கருணாநிதிக்கு ஆட்சி போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. கட்சியினர் பண்ணியதெல்லாம் இவரையும் இவர் குடும்பத்தையும் ஒப்பிட்டால் கால் தூசிதான். நடந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்துக்கும் இவரும் இவர் குடும்பமும்தான் பொறுப்பு....
ABCD - chennai,இந்தியா
2010-10-23 06:18:25 IST
கருணாநிதி--- பதவி முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம். இதை தன் வாரிசுகளுக்கு சொல்லலாமே? கட்சிக்காக உழைபவர்களுக்கு கொள்கை. தன் வாரிசுகளுக்கு பதவி...... சூப்பர்.....
2010-10-23 05:44:30 IST
கொள்கையா தலைவரே ? காமடி பண்ணாதீங்க. கொஞ்சம் வாய் தவறி கொள்ளை என்பதை மாற்றி சொல்லிட்டீங்க. திமுகவில் ஏதப்பா கொள்கை? குடும்பம் தானே திமுக...
karunanidhi - Tokyo,ஜப்பான்
2010-10-23 05:40:34 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். மேலும் கொள்ளை அடிப்பதையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்,...
பிரபா - chennai,இந்தியா
2010-10-23 05:36:13 IST
தேர்தல் வந்தால் தான் கருணாநிதிக்கு கொள்கைகள் எல்லாம் நியாபகம் வரும்... அம்மா ஆட்சி தான் அடுத்து என்ற பயம் கருணாநிதியின் பேச்சில் நன்றாக தெரிகிறது......
jopet - singapore,சிங்கப்பூர்
2010-10-23 05:19:10 IST
இது எங்கள் (திமுக )கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல், அதனால், இதைபற்றி ஆர்வகோளாறுள்ள( busybody ) அதிமுககாரர்கள் கமெண்ட் எழுத தேவையில்லை.அவரவர் கட்சிக்குள் நுழைந்து பார்த்தால் ஏகப்பட்ட ஒட்டடைகள் தொங்குவது தெரியும். என் தலைவர் தன கட்சி கூட்டத்தில் கூட ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்லும் அளவுக்கு நாகரீகம் தெரிந்தவர் என்பதை இந்த செய்தியை படித்து தெரிந்து கொள்ளலாம்....
அன்வர்ஷா - சென்னை,இந்தியா
2010-10-23 04:34:05 IST
//இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,// இதில் ஒரு சிறு தவறு. கொள்ளைகளை என்று இருக்க வேண்டும்....
R.டவுட் தனபாலு - இந்தியா,இந்தியா
2010-10-23 04:20:40 IST
இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவது தான் உங்கள் லட்சியமா? உங்களின் உண்மையான கொள்கை என்ன? மறு படியும் ஆட்சிக்கு வருவோம் னு சொல்றிங்களே அது எந்த நம்பிக்கையில்?...
ஜீவா - திருநெல்வேலி,இந்தியா
2010-10-23 04:06:56 IST
"தி.மு.க.,வில் ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியது, நற்பெயரை ஈட்டித் தந்ததோடு, கட்சியின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளது"...... அப்போ நீங்க தமிழ வளர்க்க அந்த மாநாடு நடத்தலையா? அரசாங்க செலவுல உங்க கட்சி செல்வாக்கு கூடிட்டு நு நீங்களே ஒத்து கொள்றீங்க அப்பிடித்தானே?......
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-10-23 04:05:10 IST
இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். சாரி கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று எச்ச்சரிதுள்ளாரா? எங்கப்பா இந்த திமுக அல்லகைங்க, என்னமோ திமுக வெற்றி பெறும் என்று மார்தட்டினார்களே, இரண்டு நாளைக்கு முன் ஆயிரம் அதிமுக வந்தாலும் நம்மை வெல்ல முடியாது என்று சொன்ன அதே வாய், இப்பொழுது ஒரு வேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால்? தெருவிலே நின்று போராடுவோம் என்று கூறுவதில் இருந்து என்ன தெரிகிறது, துண்டுக்கே நன்றாக தெரிந்துவிட்டது, நாம் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்று. இதற்க்கு உதாரணம் நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால்!!!! இதற்கு என்ன அர்த்தம் திமுக அல்லகைகளா, மதுரை மாநாட்டை பார்த்து மஞ்ச துண்டு கிலி வந்துவிட்டது, நாம் காவல் துறையை வைத்து இவ்வளவு தடை செய்தும், லட்ச கணக்கில் கூட்டம், தடை செய்யாமல் இருந்திருந்தால்??? நாம் எவ்வளவு தில்லு முல்லு செய்தாலும், கோடி கோடியா பணத்தை வாரி இறைத்தாலும் ஜெயிப்பது மிகவும் கடினம், சாத்திய கூறு இல்லை என்று தெரிந்துவிட்டது, எப்பவுமே மஞ்சள் இப்படி சொல்லாது, அதுவே இப்படி சொல்லுது என்றால் பார்த்துகோங்க, இதுவே அதிமுகவுக்கு பாதி வெற்றி தான்....
iyappan - நாகர்கோயில்,இந்தியா
2010-10-23 03:24:37 IST
சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்..பாவம் தமிழன் .....
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-10-23 03:07:46 IST
மாநில அரசு, மத்திய அரசு, பணபலம், அதிகாரபலம், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சிகள், வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள், ம செ'க்கள் , கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் இவ்வளவு பேர் இருந்தும் கருணாநிதிக்கு பயம், எங்கே தனது ஆட்சி பறிபோய்விடுமோ,,,,,பயப்படுகிறார்,,,, பதறுகிறார்,,,,,, யாரை பார்த்து பயப்படுகிறார்,,,,,, ஜெயலலிதா என்ற ஒரு பெண்மணியை பார்த்து.......(நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால்) மேலே உள்ள செய்தியின்படி உண்மையாகவே கருணாநிதிக்கு தோல்வி பயம் படுபயங்கரமாக பற்றிக்கொண்டது வெளிப்படையாகவே புலப்படுகிறது.........
சேகவி - mahe,செசேல்ஸ்
2010-10-23 02:54:16 IST
தி,மு,க.வின் கொள்கைகள், லட்சியங்களை விட்டுவிட்டு,ஆட்சியில் உட்கார வேண்டும் என நினைப்பவர்கள் தி,மு,க.வில் இருக்க தகுதி இல்லை என்றால் நீங்க தி,மு,க.வில் எப்படி இருக்கீங்க?யோசிச்சு பேசுங்க அப்பு!...
கிங் காங் - மதுரை,இந்தியா
2010-10-23 02:42:31 IST
"கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்" - ஏம்பா இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதும் இல்லியே...
குஷி - india,இந்தியா
2010-10-23 01:39:43 IST
பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு...
சங்கர் - தூத்துக்குடி,இந்தியா
2010-10-23 01:29:33 IST
தலைவரே உங்க கொள்கை என்னன்னு கொஞ்சம் தெளிவா தஞ்சாவூர் கல்வெட்டுலே செதுக்கி அது பக்கத்திலே உக்காருங்க. நமக்கு பின்னாலே வர்ற சந்ததிகள் அதை பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-23 01:20:25 IST
கொள்கைகளை காப்பாற்ற ஆட்சி தேவை. உண்மைதான். ஆனால் கொள்கை என்பது அடித்த கொள்ளையை காப்பாற்றுவது தானே?அண்ணா,பெரியாரின் கொள்கைகள் என்ன? உலக பணக்காரர் ஆவதா ?...

Narendra Mody,குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் [^]நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் [^] கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு [^] (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.
பதிவு செய்தவர்: மனித நேயன்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:12 pm
இவன் முகத்தை பத்திரைக்கையில் காட்டதிர் பச்சிலம் குழந்தையை தாயின்வைற்றிலிருந்து அறுத்தடுத்தவைகள்தான் நினைவுக்கு வருகிது

பதிவு செய்தவர்: ராஜா முஹம்மத்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:09 pm
நண்பா பேன் டு பேன் டு ( டூ பாத் ரூம்) மூடி வைப்பார்கள்..அசிங்கம் வெளியில் தெரியாவிட்டாலும் ஒரு நாள் அதன் நாற்றம் வெளியில் வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:05 pm
சிலருக்கு எப்பொதுமே கேட்டதை நினைத்து எல்லாம் நன்றாக தெரியாது.

பதிவு செய்தவர்: modern hindu
பதிவு செய்தது: 23 Oct 2010 7:04 pm
all hindus know this is the work of Sang parivar a national terrorist (v cant call them hindu terrorist) for ruling india they r doing wrong things

பதிவு செய்தவர்: dehalka
பதிவு செய்தது: 23 Oct 2010 7:02 pm
இதை தான் நாங்க எப்பவோ சொல்லிட்டோமடா. இது உங்களுக்கு முன்னமே தெரியாது மனசாட்சியை தொட்டு சொல்லு, மன்னிக்கணும் உங்களுக்கு தான் மனசாட்சியே கிடையாதே

பதிவு செய்தவர்: குண்டு
பதிவு செய்தது: 23 Oct 2010 6:58 pm
கோயமுத்துர் போல குஜராத்லேயும் பாம்வைத்தால் மோடி பாடியாகி விடுவான்

பதிவு செய்தவர்: மோடி தறுதலை
பதிவு செய்தது: 23 Oct 2010 6:54 pm
நானை இந்துகளை கொல்வேன் அதை ஏமாளிகள் தலைபோட்டுவிட்டு அப்பாவி இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக்கி நான் ஆட்சியை பிடித்தேன் எப்படி என் உத்தி நான் ஒரு கேடுகெட்ட மனிதபிறவி
பதிவு செய்தவர்: குஜராத்
பதிவு செய்தது: 23 Oct 2010 6:34 pm
ஏண்டா மக்குகளா! என்னைய வளர்கிறது அம்பானி கூட்டமும் டாட்டா பணமும்தான்.. இந்த மோடி கேடிஎல்லாம் சும்மா பேருக்குதான்.
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 23 Oct 2010 6:35 pm
அதுவே இங்க நடக்கவேண்டியது தானே

ஈராக் - தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன. 
 
இந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர்  கொலை : இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர். 
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-10-23 15:38:39 IST
இந்த நிகழ்ச்சியை இராக் மக்கள் வழியாக பார்த்தால் ஒசாமா பின் லேடன் ஒரு ஹீரோ தான். அமெரிக்க என்ற காட்டு வெறி பூனைக்கு மணிகட்டி இன்று வரை அமெரிக்காவை உறங்காமல் வைத்துள்ளார். வருங்காலத்தில் அமெரிக்கா க்கு ஹிட்லருக்கு இப்போ இருக்கும் மதிப்புதான் கிடைக்கும்....
சுதேசி - பரமக்குடி,இந்தியா
2010-10-23 15:34:23 IST
சர்வதேச போர் விதிகளை அப்பட்டமாக மீறியுள்ள அமெரிக்காவை எதிர்த்து UN மற்றும் உலக நாடுகள் போர் புரிய தயாரா? அல்லது கண்டனம் என்று வாய்க்குள்ளேயே முனகப் போகிரார்களா? மீடியாவும் அல்லவே இவர்களுக்கு உடந்தையாக இருக்கிறது. மற்ற நாட்டின் உள் நாட்டுப் பிரச்சனைக்குள் தானாக நுழைந்து, யாரையும் கேட்காமல் அவர்களின் மீது போர் புரியும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு யார்தான் முடிவு கட்டுவது....
hussain - jahra,குவைத்
2010-10-23 15:31:40 IST
நாட்டமை அமெரிக்க யோக்யதை இப்ப விளங்குதா. அமரிக்க பன்னாடைகளை ஆத்ரிக்கும் புன்னியவான்கள் இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டும்,...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-23 15:30:32 IST
இதே மாதிரி இலங்கைல நடந்துக்கிட்டிருக்கிற அட்டூழியங்களையும் யாராச்சும் வெளிச்சம் போட்டு காட்டணும்..இராக்குக்காவது சப்போர்ட் பண்றதுக்கு நாலு நாடுகள் இருக்கு..இலங்கை தமிழர்களுக்கு அதுவும் கிடையாது..இத்தனை பேர் வாயில் விழுந்து சாபத்தை சம்பாதிக்கும் அமேரிக்கா,கூடிய சீக்கிரம் அழிவை சந்திக்க போகிறது......
durai moni - riyadh,இந்தியா
2010-10-23 15:05:48 IST
is this demogracy in america & including UNO?...
சுதாகர் கே - மதுரை,இந்தியா
2010-10-23 15:02:15 IST
சூப்பர்...
ரபீக் - துபாய்,இந்தியா
2010-10-23 14:31:51 IST
இந்த மாதிரி தப்பு பண்ணிய அமெரிக்காவை கண்டிப்பாக எல்லா நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல ஈராக் நாட்டுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எல்லா நாடும் வலியுறுத்த வேண்டும் என்னுடைய கருது. ( அமெரிக்கா ஒழிக ) சுய நலவாதிகள் இருக்கும் ஒரு பயங்கரமான நாடு ( அமெரிக்க) தான் வாழ பிறரை கொள்ளும் கொடுமை கர நாடு....
திரு - சென்னை,இந்தியா
2010-10-23 14:29:28 IST
விக்கிலீக்ஸ் இது போன்ற தகவல்களை வெளியிடுவதன் மூலம் பல நாட்டு இராணுவங்களின் கோர முகம் தெரிய வருகிறது. இதே போன்று இலங்கை படு கொலைகள் பற்றியும் உண்மை தகவல்கள் வெளி வர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களே....
தாளைதீன் - பண்டார்,புருனே
2010-10-23 14:26:01 IST
ஆப்கானிஸ்தான்,ஈராக்,வடகொரியா, பாலஸ்தீனம்,ரஷ்யா,சீனா, ஜப்பான், சிரியா,கியூபா, இன்னும் எத்தனையோ நாடுகளை அமெரிக்கா தனது படை பலத்தாலும், பொருளாதார பலத்தாலும், செய்துள்ள கொடுமைகளை எந்தநாடும் மறந்திருக்காது. அடுத்தவரின் துன்பங்களை படம் எடுத்து ரசிக்கும் பழக்கம் அமெரிக்காவின் பழக்கம். நவீன யுகத்தில் அது பாதுகாக்கப்பட முடியாமல் வெளியாகிவிடுகிறது. இது போல் வெளியாவது இது இரண்டாவது முறை. மனித உரிமை பற்றி பேச சிறிதும் தகுதி இல்லாத அரக்கர்கள்....... ,...
அ.நவாப் ஜான் திருச்சி. - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 14:18:38 IST
இதற்கு இந்த புஷ்ஷு என்ன பதில் சொல்லப்போகிறார்....
கவிதா - திருச்சி,இந்தியா
2010-10-23 14:07:53 IST
தங்களுக்கு எதிரானவைகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைகள் .நாம் செய்வதெல்லாம் உண்மைகள்.கேட்கும் மக்கள் ஊமைகள்.இந்த விசயத்தில் மீடியாக்களின் ஈடுபாடு சொல்லும் அவைகளின் அமெரிக்க நிலைபாட்டை.எவ்வளவு தூரம் மக்களை சென்றடையும் அப்பாவி மக்கள் மீதான அமெரிக்காவின் இவ் வன் கொடுமை பார்ப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
2010-10-23 14:04:56 IST
அப்பா இலங்கையில இந்தியாவும் இலங்கை படையும் தமிழர்களை கொன்னது கொஞ்சம் தானா ?...
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-23 14:00:26 IST
இன்னும் பல ரகசியங்கள் ஈராக் மண்ணில் புதைந்து உள்ளது. இன்னும் தோண்டவும்....
2010-10-23 13:54:17 IST
The most heinous crimes ever perpetrated in the history of mankind. Americans who claim to profess good nature and human concern and guardians of human rights are rank perpetrators of colossal crimes un known in the annals of history. The then American Head of state and heads of allied forces should face trial for this crime as was done for war crimes during II world War....
தமீம் - singapore,இந்தியா
2010-10-23 13:51:22 IST
அட்டூழியம் புரிவதற்காகவே அவதரித்தவர்கள் அமெரிக்கர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்....
லாவண்யா பிரகாஷ் - குடமலசிட்டிலாடின்அமெரிக்க,கவுதமாலா
2010-10-23 13:18:45 IST
Hello Sir, I read this magazine everyday, I come to know about up to date information that is happening in our country. Though we are away from our home town,Dinamalar helps us to know about the present condition of our country. Thank you Dinamalar, Lavanya Prakash...
கோகுல் ரகுபதி - பெங்களுரு,இந்தியா
2010-10-23 13:03:43 IST
விகிலீக்சின் துணிச்சல் க்கு மிகவும் பாராடுக்கள். இந்த விஷயம் இதற்கு முன்னரே அனைவரும் அறிவர். இறந்த அனைவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபன்கள்... -கோகுல்...
 

மூதூர் வெடிவிபத்து சிறுவன் பலி

இன்று  காலை திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் உள்ள தக்வார் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் எறிகணையின் பியூஸ் உடன் விளையாட முற்பட்டபோதே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மூன்று வயது முதல் 9 வயது வரையிலுமான ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் பின்னர் திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவைக்கு நெடியவன் குழு மிரட்டல். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வி

இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு சர்வதேச தந்திரோபாய கற்கைநெறிசார் கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாநாட்டில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அவர்கள் பிரத பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார். இம்மகாநாட்டினை எதிர்த்து பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஆர்பாட்ட பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவையினரின் ஆர்ப்பாட்டம் படுதோல்வியடைதுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நெடியவன் குழுவினருக்கும் தமிழர் பேரவையின் தலைவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாக அதில் கலந்து கொண்ட புலி ஆதரவாளர் ஒருவர் இலங்கைநெற் க்கு தெரிவித்தார்.

இம்முரண்பாடு தொடர்பாக தெரியவருவதாவது, ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நெடியவன் குழுவினர் பைகளில் புலிக்கொடிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானபின்னர் பின்வரிசையிலிருந்து புலிக்கொடிகளை உயர்த்தியுள்ளனர். புலிக்கொடியை கண்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் இந்நிகழ்வில் புலிக்கொடியை காண்பிக்கவேண்டாம் என நெடியவன் குழுவினரை கேட்டுள்ளார். அப்போது தலைவருக்கும் நெடியவன் குழுவினருக்கும் வாக்குவாதம் முற்றயதுடன் தலைவரின் கால் அடித்து முறிக்கப்படுமெனவும் நெடியவன் குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு பயந்த தலைவர் நாங்களும் புலிகள் , நீங்களும் புலிகள் ஆனால் இந்நிகழ்வில் புலிக்கொடி காண்பிக்கமுடியாது நாம் சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ளநேரிடும் என மண்டாட்டமாக கேட்டதாகவும் , புலிகொடி காட்டவேண்டுமாயின் நாம் அதற்கான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் கடந்தகாலத்தில் புலிக்கொடி காட்டியதன் ஊடாக சந்தித்தித்த பின்னடைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும் பாரிய விளம்பரங்களுடனும் அறைகூவல்களுடனும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆர்ப்பாட்டம் ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பை எட்டவில்லை என தெரியவருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கு பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தபோதும் அங்கு கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மிகவும் கடினமான நிபந்தனைகளுடன் மாநாடு நுழைவாயிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே அவர்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் மாநாடு நடந்த நுழைவாயிலில் இலங்கை சார்பான பிரச்சாரத்தினை முன்னெடுப்பதற்கு பிரித்தானிய இலங்கையர் பேரவையினருக்கு பொலிஸாரின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கைத் சிங்கள , தமிழ், முஸ்லிம் மக்களை கொண்ட பிரித்தானிய இலங்கையர் பேரவையினர் மாநாட்டு நுழைவாயிலில் நின்று தமது பிரச்சார துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்வின் காரணமாக பிரித்தானிய தமிழர் பேரவையினர் மண்டப நுழைவாயிலை அணுகமுடியால்போயுள்ளதுடன் புலிகளின் இவ்வார்பாட்டத்தினை மாநாட்டில் கலந்து கொள்ளவந்திருந்தவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பேராசிரியர் ஜிஎல் பிரீஸ் தனது உரையினை முடித்துவிட்டு மண்டபத்திலிருந்து மதியம் 11.15 மணியளவில் வெளியேறிய பின்னர் , நண்பகல் 12.30 மணியளவிலேயே குறிப்பிட்ட ஆர்பாட்டம் ஆரம்பமானதும் , அதில் சுமார் 250 கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிகள்வுகளுக்கு கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் 250 பேரளவிலேயே திரண்டுள்ளனர். வெளிநாட்டுப் புலிகளின் செயற்பாடுகளின் பின்னால் ஒன்று திரழ்வதற்கு மக்கள் தொடர்ந்தும் தயாரில்லை என்பது இந்நிகழ்வினூடாக தெளிவாகியுள்ளது.

Swiss.சுவிஸில் ஈழத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது

சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஈழத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள்.இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து ஈழத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள்.
கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு தமிழரைக் கைது செய்து கொண்டு போனார்கள்.
ஆனால் சில மணி நேரங்களில் அங்கு மோதல் தொடர்ந்தது. உக்கிரம் ஆனது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் வந்து பார்த்தபோது இன்னொரு தமிழர் காயப்பட்டுக் கிடந்தார். சண்டை முற்றி இருந்தது. காரசாரமான வாய்த் தர்க்கமும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அடிபாடு நடந்தது.
பொலிஸார் அங்கிருந்து பத்துத் தமிழர்களை கைது செய்து கொண்டு போனார்கள். மோதலின் பின்னணி என்ன? என்பது குறித்துப் பொலிஸார் புலனாய்வு விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்களின் உதவி, ஒத்தாசைகளை விசாரணைக்காக கோரி உள்ளார்கள்.

வேலூர் மத்திய சிறையில் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிறைக்கே வந்து பாடம் எடுக்கிறார்கள்

சிறை என்றால் கொடூரமானவர்களின் கொட்டடி, திருந்தாதவர்களை திருத்தும் இடம் என அனைவரும் எண்ணிக்கொண்டுருப்பார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மை தான். ஆனால் சிறைபட்டவர்கள் எல்லோரும் தவறு செய்யவே பிறக்கிறோம் என எண்ணி பிறந்தவர்கள்யில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்கள் தான் அதிகம்.
  அவர்கள் யாரையும் கொலைகாரர்களாகவே, ரவுடிகளாகவோ பார்ப்பதில்லை வேலூர் மத்திய சிறை நிர்வாகம். மனிதர்களாக பார்த்து அவர்களை அடிக்காமல்,
உதைக்காமல்  நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது.  அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல கவிஞர்களை, ஓவியர்களை, படிப்பாளிகளை, தொழில் கலைஞர்களை உருவாக்கிவருகிறது. 


       157 ஏக்கர் பரப்பளவில் 150 ஆண்டுகள் பழமையான வேலூர் மத்திய சிறையில் தான் இந்த ஆச்சர்யம். சிறைவளாகத்துக்குள் ஒரு குற்றவாளி வருகிறான் என்றால் அவனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி கையெழுத்து போட தெரியுமா? என்ன படிச்சிருக்க? என்ற கேள்வி தான். 

படிக்கலயா?  சரி, நாளையிலயிருந்து ஸ்கூல்
போகணும்.  10வது படிச்சியிருக்கியா மேல ஏதாவது ஒரு டிகிரி படி என சிறைக்கு வருபவர்களுக்கு கல்வி பற்றி போதித்ததன் விளைவு... தற்போது இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக எம்.பி.ஏ 6 பேர், பி.சி.ஏ செகன்ட் இயர் 13 பேர், சி.எப்.என் என்கிற 6 மாத கோர்ஸ் 13 நபர்கள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக முதலாமாண்டில் எம்.பி.ஏ 6 பேர், எம்.ஏ தமிழ் 3 பேர், பி.ஏ வரலாறு 25 பேர். தமிழ்நாடு ஸ்டேட் போர்டு மூலமாக 8வது 40 பேர், 10வது 04 பேர், ஆக்சிலியம் காலேஜ் மூலமாக சி.ஐ.எம்.எஸ்ங்கற சர்டிப்கெட் கோர்ஸ் 5 பேர், டி.டீ.பி ஆப்ரேட்டர்க்கான பட்டயப்பயிற்சி 10 பேர் என கல்வி கற்று வருகிறார்கள் கைதிகள். 

      இவர்களுக்கு கற்றுதர ஊரிஸ், அக்சீலியம் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிறைக்கே வந்து பாடம் எடுக்கிறார்கள்.  8வது முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு டிகிரி முடித்த கைதிகள் பாடம் எடுக்கின்றனர்.  இந்த சிறை கல்விக் கூடத்திற்க்கு எம்.சி.ஏ படிக்கும் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் தான் மாஸ்டர்.

இவர் தன்னுடன், பாபு,
சென்னையன், அசோக், மோகன், சொக்கலிங்கம் என டிகிரி படித்தவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு பாடம் எடுக்கிறார். கொலை வழக்கில் தண்டனை பெற்ற மயிலாடுதுறை செந்தில்குமாரும், எம்.எஸ்.சி, எம்.எட், எம்.பி.எல் முடித்து எம்.பி.ஏ படிக்கும் ஆயுள் தண்டனை கைதி அருர் சென்னாமூர்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்க அவரும் இவர்களின் ஆர்வத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
  இன்றைய நவயுகத்தில் கம்யூட்டரின் அவசியம் பற்றியும், உலகமே கம்ப்யூட்டர் மையமாகி வருவது பற்றியும் அறிந்து... அதற்கு ஏற்றாற்போல் இண்டர்நெட் இல்லாத கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் சிறையில் செயல்படுகிறது. 
      கற்பதில் மட்டுமல்ல... கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.          சிறையில் நடக்கும் பொங்கல் விழா, தீபாவளி விழா மற்றும் கலை விழாக்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது இவர்கள் எழுதி தள்ளும் கவிதைகள் தான். கவி ரசம் சொட்டும்,
அருமையான மனிதாபிமான, ஐக்கூ கவிதைகளை எழுதி குவிக்கிறார்கள்.

 உலக பொது மறையான திருக்குறளின் 1330 குறளை எப்படி மாற்றி, மாற்றி கேட்டாலும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றலை சிறைக்கு வந்து கற்றுள்ளார் முனுசாமி.
கவிஞர்கள் மட்டுமல்ல ரவிவர்மாக்களும் இருக்கிறார்கள்.

ஒவியம் வரைவது, சிலைகள் செய்வதிலும் தங்களது கை திறனை காட்டும் இவர்கள் வரைவதற்கோ, சிலை செய்வதற்கோ எந்த விதமான பொருட்களும் சிறையில் கிடைக்காத நிலையில் குளிக்க தரும் சோப்பில் வேஸ்டாகவும் துகள்களை சேர்த்து வைத்து விநாயகர் சிலை, அம்மன் சிலை, தாய்மையை போற்றும் பெண்மையின் சிலைகளை தத்ருபமாக வடித்துள்ளார் 52 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நாகேந்திரன் என்ற இளைஞர். சிலைகள் மட்டுமல்ல பல வகையான ஒவியங்களை வரைந்து பார்ப்பவர்களை அதன் பால் ஈர்த்து விடுகிறார்.
யாரை பார்த்தாலும் அவர்களை அப்படியே அச்சு அசலாக வரையும் அவரின் திறமை அவருக்கே சிறைக்கு வந்தபின் தான் தெரிந்துள்ளது. மரம் போன்ற ஒரே ஓவியத்தில் இந்திய தலைவர்கள் முகங்களை காட்சியமைத்து தன் தூரிகை திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.  
வேலூர் ரோட்டரி க்ளப் மூலமாக 10 தையல் மிஷின்களை இலவசமா பெற்று, லயன்ஸ் க்ளப் மூலமாக தையல் பயிற்சி தந்துவருகிறார்கள். தற்போது 50 பேருக்கும் மேல் தையல் கற்றுக்கொண்டு எல்லா விதமான ஆடைகளையும் தைக்கும் கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள்.
சுலபமான வேலை என்பதால் பல கைதிகள் தையல் கற்றுக்கொண்டு வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி தைக்கிறார்கள் இந்த கைதி உடையில் உள்ள இந்த தையல் கலைஞர்கள். தற்போது ஆர்வமுள்ள கைதிகளை 30 பிரிவுகளாக பிரித்து தையல் கலைஞர்களாக உருவாக்கிவருகிறார்கள்.
 அதுமட்டுமல்ல வேலூர் சிறையில் உள்ள கைதிகளின் காலணி தயாரிக்கும் கை திறனை கண்டு தீயணைப்பு துறை, காவல்துறை, வனத்துறையில் புதுசாக சேர்பவர்களுக்கு புது சூ ( காலணி ) தர 50 ஆயிரம் ஷீ க்கான ஆர்டர் இவர்களிடம் தந்துள்ளது அரசு. இங்கு பணி செய்யும் கைதிக்கு தோராயமாக மாதத்திற்கு 2000 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
அந்த பணத்தை கொண்டு வழக்கு செலவு, பசங்க படிப்பு செலவுக்கு என பயன்படுத்திக்கொள்கிறார்கள். விடுதலையாகி போகிறவர்கள் புதுசாக வாழ ஒரு  தொழிலை கற்று தந்த சந்தோஷத்தில் மேலும் ஊக்கமடைந்து காலணி தயாரிப்பு பிரிவின் டெக்னிக்கல் பிரிவு இன்சார்ஜ்ஜாக பணியாற்றுகிறார்கள் பாஸ்கர், கோபிநாதன், குமார் ஆகியோர்.

மெழுகு வத்தி தயாரிக்க, மருத்துவமனைகளுக்கு பேண்டேஜ் தயாரிக்க, புக்ஸ் பைண்டிங் செய்ய, ஆபிஸ் ஃபேடுங்க செய்வதில் தங்களது கை வண்ணத்தை இதற்கான தொழிலை கற்ற கைதி கலைஞர்கள் காட்ட அதில் ஈர்த்து போன அரசு அரசு அலுவலக ஃபேட் தயாரித்து வழங்க 5லட்சம் ஃபேட் க்கு ஆர்டர் தந்துள்ளது. 

      இதுமட்டுமில்லை சுற்று சூழலை காக்க தங்களால் ஆனா முயற்சியாக வேலூர் ரோட்டாரி க்ளப் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி சிறையில் நட முயற்சியெடுத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை தற்போது நட்டுள்ளனர் இயற்கையின் மீது காதல் கொண்ட கைதிகள். 

      இதுப்பற்றி வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சேகரிடம் பேசியபோது, பிறக்கும் போது எல்லாருமே நல்லவர்கள் தான். வளர்ப்பு, சூழ்நிலைகள் தான் ஒருத்தரை குற்றவாளியாக மாத்துது. சிறை தண்டனை பெற்று உள்ளே வந்து அவுங்க செய்ததை நினைத்து தினம் தினம் அழும் போது மனிதனா பிறந்த எனக்கெல்லாம் ரொம்ப கஸ்டம்.
அப்படி சிறை தண்டனை பெற்று பல ஆண்டுகளா உள்ள இருக்கறவங்க மனம் உடைஞ்சி வாழ்க்கைய வெறுத்துவிட கூடாதுன்னு தான் அவுங்களுக்கு எதில் இன்ட்ரஸ்டோ அதில் அவர்களை ஈடுபடுத்துகிறோம். அப்படி ஈடுபடுத்தும் போது தான் பல கலைஞர்கள் தங்களோட திறமை தங்களுக்கே தெரியாம தெரிஞ்சிக்கிட்டாங்க.

அப்படி
திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கறோம். தன்னோட கலையை ஒருத்தர் பாராட்டும் போது அவனுக்கு கிடைக்கிற சந்தோஷம் அளவிட முடியாதது. இதனால அவன் இன்னும் சாதனை புரிய துடிக்கிறான். சாதிக்க துடிப்பவர்களுக்குள்ள போட்டிகள் நடத்தி பரிசுகள் தருகிறோம்.

வேலை செய்றவங்களுக்கான கூலியும் தருறோம். அதை அவுங்க குடும்பத்தார் யாராவது பாக்க வர்றப்ப பணத்தை தந்து பசங்கள படிக்க வைன்னு சொல்லும் போது
அவுங்க முகத்துல ஒரு சின்ன சந்தோசம் தெரியுமே அது தாங்க எங்களுக்கும் சந்தோஷம்.
ஒரு கைதியோட மனசை மாற்றி அவனை ஒரு மனிதனா மாற்றி திருத்தி அனுப்புகிறவனை வேதனைப்படுத்துவது இந்த சமுகம் தான். ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்து சிறைக்கு வந்தவனை ஜெயிலுக்கு போனவன், ஜெயிலுக்கு போனவன்னு பேசும் போதும், அவனுக்கு எந்த வேலையும் தராம சமுகம் புறக்கணிக்கும் போது மீண்டும் தப்பு பண்ண தூண்டுகிறது. 
  தமிழ்நாட்டிலேயே வேலூர் சிறைய கல்வியில், ஒழுக்கத்தில், சுற்றுச்சூழலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்து இலக்கியத்தில், கல்வியில், ஓவியத்தில், தொழிலில் கலைஞர்கள் உருவாக்குவது தான் எங்களோட குறிக்கோள் அது விரைவில் நிறைவேறும் என்று நம்கிறோம் என்கிறார்.
      திருத்த முடியாதவர்களை எங்களால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கைதிகளை கலைஞர்களாக உருவாக்கும் முயற்சசியில் உள்ள வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். 

-ராஜ்ப்ரியன்

      படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்.

தொடங்கியாச்சு ரஜினியின் ‘அவதார்’


      தனது இமயமலை பயணத்தை முடித்து சென்னை வந்த கையோடு சுல்தான் தி வாரியரை முடித்திட தயாராகிவிட்டார் ரஜினி. இதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளாராம் சௌந்தர்யாவுக்கு பதிலாக சுல்தானை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ள கே. எஸ். ரவிக்குமார். 


சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து தனது ஆக்கர் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்த ‘சுல்தான் தி வாரியர்’ சில பிரச்சினைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப் பட்டது அனைவரும் அறிந்த பழைய சேதி.  

ஆக்கர் ஸ்டுடியோவிடமிருந்து சுல்தானை ஜெமினி லேப் வாங்கிய பிறகு சுல்தான் தி வாரியர் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதுதான் புதிய சேதி.

‘அவதார்’ பட பாணியில் சுல்தான் வளராவிருக்கிறதாம். “அவதார்” படம் பாதி அனிமேஷனிலும் மீதி நிஜ காட்சிகளாகவும் எடுக்கப்பட்டிருந்தது. அதே போல ரஜினி - விஜயலட்சுமி, வில்லன் ராகுல் கேஷம் ஆகியோர்களின் காட்சிகளை நிஜமாக எடுத்து, ஏற்கனவே சௌந்தர்யா எடுத்துள்ள அனிமேஷன் காட்சிகளுடன் இணைக்க போகிறாராம் கே.எஸ். ரவிக்குமார்.

 சுல்தான் தி வாரியர் புது அவதாரம் எடுத்துள்ளது போல,  பெயரிலும் மாற்றம் பெறவுள்ளது.“சுல்தான்”  என்னும் பெயரை “ஹரா” என மாற்றப் போகிறார்களாம். 

இப்படி புதிய மாற்றகளுடன் வேகமாக வளரத் தொடங்கிவிட்ட ‘ஹரா’ தமிழ் புத்தாண்டிற்கு முழு 3 டி படமாக வெளிவரவிருக்கிறதாம்.

சீதா வீட்டுக்கு வரும் கார்களால் மோதல்-மாயா புகார்

Seethaநடிகைகள் சீதா-மாயா திடீர் மோதல்-சீதாவைத் தேடி வரும் கார்களால் பிரச்சினை!

சீதா வீட்டுக்கும், கவர்ச்சி நடிகை மாயா வீட்டுக்கும் வரும் ஏகப்பட்ட கார்களால் இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இருவரும் ஆபாசமாக திட்டிக் கொண்டு சண்டை போட்டுள்ளனர். தற்போது இருவரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆண்பாவத்தில் அறிமுகமாகி கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் சீதா. முன்னாள் குத்தாட்ட நடிகை மாயா. இவர்கள் இருவரும் சாலிகிராமம் புஷ்பா கார்டனில் அருகருகே உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.

நடிகை மாயா மீது சீதா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், "என் வீட்டின் முன்னால் வண்டிகளை நிறுத்தி மாயா இடைஞ்சல் செய்கிறார். இது பற்றி கேட்டால் ஆபாசமாக திட்டுகிறார். மிரட்டவும் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாயாவும் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து சீதா மீது புகார் அளித்தார்.

அதில், "சீதா என் வீட்டு முன் கார்களை நிறுத்தி தொந்தரவு செய்கிறார். இதனால் நானும் என் மகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். கார்களை வீட்டு முன் நிறுத்துவதை தவிர்க்குமாறு பலமுறை சீதாவிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. சீதா வீட்டில் இருக்கும் சதீஷும் அவருடன் மேலும் இருவரும் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சீதாவைத் தேடி நிறைய கார்கள் வருகின்றன

பின்னர் நிருபர்களிடம் மாயா கூறுகையில், "சீதா வீட்டுக்கு தினமும் நிறைய கார்கள் வந்து போகின்றன. இதனால் என் வீட்டில் கார் நிறுத்த முடியவில்லை. எனது எட்டரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சீதா வீட்டுக்கு வந்த ஒருவர் மோதுவது போல் காரை நிறுத்தினார்.

சீதா வீடு என நினைத்து சில பேர் என் வீட்டுக்கும் வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும் எனக்கும் பிரச்சினை வந்து விடுகிறது. சீதா என்னை மோசமாக திட்டியதால்தான் நானும் பதிலுக்கு திட்ட வேண்டி வந்தது..", என்றார்.

பிரிட்டனில் புகலிட மனு நிராகரிக்கப்பட்டவர்களும் எம்.வி. சண் சீ கப்பலில் கனடா வந்துள்ளனர்: ஜேசன் கென்னிஎம்.வி. சண் சீ கப்பலில் கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வருகை தந்தவர்களில் ஏற்கனவே பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மனு நிராகரிக்கப்பட்டவர்களும் அடங்கியுள்ளனர். இந்த தகவலை கனேடிய குடிவரவு துறை அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார்.  
தற்போது சட்ட விரோதமாக கனடாவிற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குடிவரவு சட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சில அகதிகள் தமது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படு;ம் போது ஏனைய நாடுகளை அணுகுவதாக அவர் குற்றச்சாட்டி உள்ளார்.
எப்படியிருப்பினும் கனேடிய சட்டங்களுக்கு அமைய, அகதி விண்ணப்பங்கள் ஏனைய நாடுகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதனை நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் விளக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக கனடா கைச்சாத்திட்டுள்ளதாகவும் அகதிகளின் நலன்கள் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குத் தடை,மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க 500க்கும்

சென்னை: மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரி வித்யாலாயா உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அமைத்துள்ள பள்ளிக் கட்டண நிர்ணயம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் பள்ளிகளுக்கு உங்களது மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதையடுத்து முன் அனுமதி பெறாமல் இனி எந்தக் கட்டணத்தையும் இந்தப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதிவு செய்தவர்: priya
பதிவு செய்தது: 22 Oct 2010 1:27 pm
can i know the list of the 500 school names........please if u know send me priya_chennai1987@rediffmail.com

பதிவு செய்தவர்: Kavitha
பதிவு செய்தது: 22 Oct 2010 12:29 pm
6000 தனியார் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசால் கட்டளை இட முடியாதா? கொள்ளை நோக்கோடு கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் படித்த மாணவன் அரசுத்துறையில் சேர்ந்தால் கண்டிப்பாய் இலஞ்சம் வாங்குவான் கொள்ளையை பள்ளியிலேயே கற்றுக்கொண்டு விடுகிறான் வீணாய் போன அரசியல் வாதிகள் கல்வியில் கொள்ளையடிப்பவனுக்கு பாதுகாப்பாய் உள்ளனர். கேடு கெட்ட தனியார் பள்ளிகள் இஷ்டம் போல் பள்ளிக் கட்டணம் விதிக்கின்றனர். அப்பாவி பொதுமக்கள் நெற்றி வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பள்ளிகளுக்கு கொடுக்கவேண்டும்

EPRLF மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரதராஜப்பெருமாள் ஜரோப்பா பயணம்!

ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரதராஜப்பெருமாள் ஜரோப்பா பயணம்!


பிரான்ஸில் இடம்பெறவுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னைநாள் வடகிழக்கு முதல்வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் நாபா அணியின் முக்கியஸ்தருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ஜரோப்பாவிற்கு பயணமாகியுள்ளார்.

இன்றையதினம் 23ம் திகதியும் நாளை 24ம் திகதியும் பிரான்ஸில் நாபா அணியின் சர்வதேச மகாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவ் அமைப்பின் இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, சுவிஸ்,நோர்வே போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் பிரான்ஸில் ஒன்றிணைந்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் சித்தார்த்தன்!

நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் தலைவர் சித்தார்த்தன் எதிர்வரும் திங்கள்கிழமை சாட்சியமளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெற்று முடிந்த யுத்தத்தின்போது எற்பட்ட மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகம், இலங்கை அரசுமீது பலத்த கண்டனங்களை செலுத்தியுள்ள நிலையில், உலகை ஏமாற்றும் நோக்குடன் மஹிந்த அரசினால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரிடமும் கருத்துக்கள், முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஆனந்தசங்கரி போன்றோரின் கருத்தினை அறிந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அறிந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கருத்துக்களை அறியவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி?

நான் பேஸ்புக்கில் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான அவர்களுக்கு மட்டுமே உரித்தான பழக்க வழக்கங்கள் உண்டு.
இப்போ நம்ம இலங்கையர எடுத்து பார்த்தா அவங்களுக்கு என்டு தனியான நடத்தைகள் ஸ்டைஸ் இருக்கும்.அத வைச்சு இவர் இலங்கையரா இல்ல வேற நாட்டவரா என்டு கண்டுபிடிச்சிடலாம்.
ஒகே இப்ப என்ன என்னத வைச்சு இவர் இலங்கையர் என்ரத பார்ப்போம்…
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்..
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) “இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது” என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற “Uncles And Aunties” என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.   இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை. 
இப்ப புரிஞ்சுதோ………………..
நன்றி ராதீஸ்

புங்குடுதீவு கடலில் ‘டைனமற்’ பயன்படுத்தி மீன்பிடித்த ஐந்து மீனவர்குளுக்கும் பிணை

‘டைனமற்’ வெடிமருந்தை பயன்படுத்தி புங்குடுதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  வேளை  கைதுசெய்யப்பட்ட ஐந்து கடற்தொழிலாளர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றதால் தலா 5 ஆயிரம் ரூபாய் பிணையில்  விடுவிக்கப்பட்டனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த  5 கடற்றொழிலாளர்கள்  நேற்று முன்தினம்  டைனமற்றை பயன்படுத்தி  புங்குடுதீவுக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அன்றைய தினமே இவர்கள் கடற்படையினரால் பெலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசார் இவர்களை ஊர்காவற்துறை மாவட்ட  நீதவான் நீதிமன்றில்  நீதிபதி  இரா.வசந்தசேனன் முன்னிலையில்   ஆஜர் செய்தபோது  நேற்றுவரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந் நிலையில் இவர்கள் நேற்று மீண்டும்  ஆஜர்செய்யப்பட்டபோது  இவர்களை 5 ருபாய் காசுப் பிணையில்  செல்வதற்கு அனுமதித்த  நீதிபதி , பிணைதொகையை செலுத்த தவறின்  ஒருவார காலம்  சிறை தண்டனையை  அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அத்துடன் இவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களையும்  ஏலத்தில் விற்பனைசெய்யுமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றங்கள் விஷேட ஏற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட மூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவுற்றதும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இச்சட்ட மூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் படி மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம், 1987ம் ஆண்டில் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் என்பன திருத்தப்படவிருக்கின்றன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் தேர்தல்கள் கட்டளைச் சட்டமும் திருத்தப்படவிருக்கின்றன.
இச் சட்டத் திருத்தத்தின் கீழ் தேசிய எல்லை நிர்ணயக் குழுவொன்று அமைச் சரால் தாபிக்கப்படும். இக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அத்தோடு தேசிய குழுவுக்கு துணை புரியும் வகையில் அமைச்சர் மாவட்ட மட்ட எல்லை நிர்ணய குழுக்களை நியமிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற் போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார். புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும். இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும்.
இத்திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்திலும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் நிலையத்திலேயே எண்ணப்படும்.

SLMC ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு

ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வரவே மு.கா. உருவாக்கப்பட்டது
ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த  முஸ்லிம் இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்காகவே தமது கட்சி உருவாக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடளுமன்ற சங்கத்தின் பிரித்தானிய கிளை தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யுத்த காலத்தில் ஒரு வகையான பங்கு வகித்ததாகவும், யுத்ததிற்கு பின்னரான தற்போதைய சூழ்நிலையில் இன்னொரு வகையான பங்கு வகிப்பதாகவும் தூதுக்குழுவிடம் தெரிவித்தனர். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்க முற்றிலும் பொய்யானவை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை இல்லாமல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கை முஸ்லிம்கள்  மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாத்திரத்தின் பங்கு தொடர்பாக பிரித்தானிய தூதுக்குழுவிற்கு விளங்கப்படுத்தப்பட்டது.  அத்துடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட  வட மாகாண முஸ்லிம்களின் இன்றைய நிலை தொடர்பாக இச்சந்திப்பின் போது தூதுக்குழுவினருக்கு விளக்கப்பட்டது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.