Kalaignar Seithigal - KL Reshma : வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் நாளை தைப்பூச திருவிழாவை ஒட்டி ஐயப்பன் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ஐயப்பன் தனது சொந்த செலவில் ஐந்தாயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக இன்று டோக்கன் விநியோகம் செய்ய இருந்தார்.
இதனை அறிந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.
சனி, 4 பிப்ரவரி, 2023
வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாட்டு மக்களுக்கான சுதந்திர நாள் உரையின் முழு வடிவம்! (காணொளி)
hirunews.lk ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாட்டு மக்களுக்கான சுதந்திர நாள் உரையின் முழு வடிவம்! (காணொளி)
இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனம், மதம் பேதமின்றி ஒன்றிணைவதே சிறந்த வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான டி.எஸ்.சேனாநாயக்க இன ஐக்கியத்தையே முக்கியமானதாக கருதினார்.
வாணி ஜெயராம் அவர்கள் காலமானார்..
nakkheeran.in வங்கி வேலையை உதறித் தள்ளிய இசை ஆர்வம்; வரலாற்றில் வாணியும் இசையும்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அவரின் இசைப் பயணம் குறித்த முகநூல் பதிவொன்று அவரது வாழ்க்கையின் முழுத்தொகுப்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
அந்த பதிவானது,
'1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. குறிப்பாக இவருடைய தாயார் இசையில் ஆர்வம் கொண்டவர்.
கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்று வந்த சிறுமி கலைவாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி நடுக்காட்டில் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு தருமபுரி
நக்கீரன் : அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் காட்டின் மையப்பகுதியில் எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள்.
இவருடைய மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.
திருவிழா நடைபெறும் பொழுது இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
நளினி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு
மாலைமலர் : புதுடெல்லி மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.
வெள்ளி, 3 பிப்ரவரி, 2023
சென்னை ரோகினி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் சடலம்; போலீசார் விசாரணை
nakkheeran.in சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் திரையரங்கில் வேலை பார்த்து வந்த எலக்ட்ரீசியன் சடலமாக மிதந்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பார்க்கிங் பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக லாரி வந்திருந்தது.
அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தெரிந்தது.
சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
மின்னம்பலம் -Kavi : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்குமாறு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நேற்று, தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில்,
“உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி , ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை நாங்கள் ஏற்கிறோம்.
அதிமுக வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலை இருக்கிறது.
அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி! எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி..
tamil.goodreturns.in - Pugazharasi S : அதானி குழுமத்தினை சேர்ந்த 10 பங்குகள் 8.76 லட்சம் கோடி ரூபாய் (107 பில்லியன் டாலர்) சந்தை மூலதனம், கடந்த ஆறு அமர்வுகளில் சரிவினைக் கண்டுள்ளது.
இது 81.80 ரூபாய் டாலர் மாற்று விகிதத்தில் எத்தியோப்பியா அல்லது கென்யாவின் 110 - 111 பில்லியன் டாலர் வருடாந்திர ஜிடிபி அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி குழும பங்குகளில் ஏற்பட்ட தொடர் சரிவில் அதானி டோட்டல் கேஸ் 29 பில்லியன் டாலர்கள் இழப்பினை கண்டுள்ளது. இதேபோல மற்ற பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீடு
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, ஜனவரி 24ம் தேதி வரையில் 119 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நாளில் தான் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையினை வெளியிட்டது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 150 பில்லியன் டாலராக இருந்தது.
வியாழன், 2 பிப்ரவரி, 2023
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!
minnambalam.com எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல்
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
டென்மார்க்கில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டு கும்பல்? யாழில் வன்முறை : முக்கிய சந்தேக நபர்கள் கைது
இலக்கிய இன்போ : யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழி நடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கைது மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்லா புகழும் பாஜகவுக்கே.. எல்லா பணமும் குஜராத்துக்கே
பாலகணேசன் அருணாசலம் : ஒரு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள். பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைக்கிறது.
இடத்தின் விலை மிகவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு விற்க தயாராக உள்ளது என்று கூறுகிறது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள்.
உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது பங்கு. ஒரு லட்சம்!
செலவழித்துவிட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
இந்த அறுபது லட்ச ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குங்கள்.
பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது.
எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறார்கள்.
நடிகை காயத்திரி ரகுராம் : இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்!
மின்னம்பலம் - ஆரா : கலைஞர் பேனாவுக்கு ஆதரவு: திமுகவின் ஸ்லீப்பர் செல்லா காயத்ரி?
மெரினாவில் அமைய இருக்கும் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதுபெரும் அரசியல் தலைவரான மறைந்த கலைஞர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.
இது தொடர்பாக நேற்று (ஜனவரி 31) சென்னையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துகொண்டு பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகளும் சுற்றுச் சூழல் காரணம் காட்டி இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
அமைச்சர் சேகர் பாபு : எங்கள் கை பூ பறிக்குமா” சீமானுக்கு அமைச்சர் பதிலடி!
minnambalam.com - Kavi : “எங்கள் கை பூ பறிக்குமா”: சீமானுக்கு அமைச்சர் பதிலடி!
கடலுக்குள் பேனா வைத்தால் உடைப்பேன் என்று சீமான் கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குக் கடலுக்குள் சிலை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மெரினாவில் கடலுக்குள் சிலை அமைப்பது தொடர்பாகச் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் பேனா வைத்தால், அதை நான் உடைப்பேன். பள்ளிகளுக்குச் செலவு செய்ய காசில்லை என்கிறீர்கள், இதற்கு மட்டும் எங்கிருந்து காசு வருகிறது என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்ட எந்த உடன்படிக்கையையும் நான் மதிக்க மாட்டேன்.” – சஜித் பிரேமதாச
தேசம்நெட் - அருண்மொழி : மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியது அவசியம். ஆனால் ஒப்பந்தங்கள் நேராக இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் மாத்திரமே தேசத்திற்கு நன்மை பயக்கும்.
புதன், 1 பிப்ரவரி, 2023
‘நிதி ஒதுக்கீடும்; புதிய அறிவிப்புகளும்’ - நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டம்!
நக்கீரன் : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், நாட்டில் 5 ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். சிறு குறு நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். 2070 ஆம் ஆண்டிற்குள் வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒடிசா மந்திரியை 15 நாட்களில் 5 முறை பின் தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர்
ஜார்சுகுடா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் என்பவர் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
“தமிழில் தீர்ப்பு மிகப்பெரிய சிந்தனை மாற்றம்.. அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம்” : முரசொலி
Kalaignar Seithigal -Prem Kumar: தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய முயற்சியாகும். மிகப்பெரிய சிந்தனை மாற்றமும் ஆகும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் உரிமைகள் நிலைநாட்டப் பட்டதாகவே இதனைப் பார்க்க வேண்டும். இதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று நினைத்ததாலும், இப்போதாவது நடந்துள்ளதே என்று மகிழ்ச்சியடையவே வேண்டும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றதற்கு பிறகு நடக்கும் மிக முக்கிய மாற்றம் இது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி, 'உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்' என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்கள். இதனை பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்று இருந்தார்கள்.
பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரிலிருந்து நீரை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மாலைமலர் : புதுடெல்லி கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.
காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய், 31 ஜனவரி, 2023
கடலில் பேனா வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
மின்னம்பலம் - Kavi : மெரினாவில் கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு கடலில் பேனா சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க திட்டம் வகுத்தது.
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கிய நிலையில் அடுத்தக்கட்டமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை இன்று (ஜனவரி 30) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தியது.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். சிலர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் பேசினர். குறிப்பாக எதிர்ப்புத் தெரிவித்து பேசும்போது சிலர் கோஷம் எழுப்பி கூச்சலிட்டனர்.
வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு – 7 பேர் கைது
BBC : சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டட வேலைக்கான ஒப்பந்ததாரராக ஓசூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.
அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக துணை ஒப்பந்தத்தை எடுத்து, பிரபாகரனுடன் பொங்கலுக்கு முன்பு வேலை செய்துள்ளனர். மீதி வேலை இருந்த நிலையில், இன்னும் வேலை தொடங்கவில்லை.
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - குறைந்தது 32 பேர் உயிரிழப்பு
bbc.com : பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மசூதியில் தொழுகையாளர்கள் நிரம்பியிருந்தபோது நடந்த இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருப்பதாகவும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது! ... விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டினார். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட நபர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது, திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாணிக்கத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.
திங்கள், 30 ஜனவரி, 2023
“நாங்க எவ்வளவோ சொன்னோம்; முதலமைச்சர் கேட்கல” - அமைச்சர் எ.வ.வேலு
நக்கீரன் : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்பது பட்டவர்த்தனமாக தெரியும். அதுகுறித்து நோட்டீஸ் கொடுக்கிறோம்.
வீடு வீடாகச் சென்று தெளிவுபடுத்துகிறார்கள்.
அதன் மூலம் தான் வெற்றி இலக்கை அடையமுடியும். இதில் அதிமுகவிற்கு சவால் விடவேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.
அவர்களே அந்த நிலையில் இல்லை.
சீமான் அரசியல் இயக்கம் நடத்துகிறார். ஜனநாயகத்தில் கட்சிகளை நடத்துகிறவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். அவரது கட்சி சார்பில் சீமான் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.
பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை
மாலை மலர் : தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது
மாலைமலர் : ஜூனியர் பெண்கள் உலக கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு
மாலை மலர் : பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.
“என்னை இந்து என்றுதான் அழைக்க வேண்டும்” - கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை
நக்கீரன் : “என்னை இந்து என்றுதான் அழைக்க வேண்டும்” - ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த இந்துக்கள் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார்.
நிகழ்வினைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்தியாவில் விளையும் உணவை நம்பி வாழ்பவர்கள்,
இந்திய நதிகளிலிருந்து நீரை குடிப்பவர்கள் எவரும் தன்னைத்தானே இந்து என அழைத்துக் கொள்ள வேண்டும்.
ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை எதிரொலி: கடும் பாதுகாப்பு- வாகனங்கள் சோதனை தீவிரம்
மாலைமலர் : சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
2024ல் சேது சமுத்திர திட்டம் நிறைவேறும்” : TR.பாலு! பாஜகவினருக்கு அறிவியல் பூர்வமாக சிந்திக்க தெரியாது..
நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத் தில் கொண்டு சேதுசமுத்திரத்திட்டம் மிகவும் அவசியமான திட்டம் எனக் கூறினார் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
நான் (டி.பாலு) மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது சேது சமுத்திரத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு களைக் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளக் கூறி கப்பல்துறை அமைச்சகத்தை அணுகிய போது அந்தக் கூட்டத்திலேயே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது.
ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு .நிலைமை கவலைக்கு இடம்
மாலை மலர் : புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
இதில் மந்திரி நபா கிஷோர் தாஸ் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.3 முதல் பிரசார இயக்கம்! ஆசிரியர் வீரமணி அறிவிப்பு
tamil.oneindia.com - Mathivanan Maran : சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்கும் என்கிறார் கி.வீரமணி
சென்னை: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 3-ந் தேதி முதல் பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி மதுரையில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தென்பகுதியில், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் அன்றைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அடிக்கல் நாட்டப் பட்ட திட்டம் முடிந்திருந்தால், மிகப்பெரிய அளவிற்கு மாறுதல்கள் வந்திருக்கும். அது சாதாரண மாறுதல் அல்ல; இன்றைக்கு ஒரு பெரிய வளமான தமிழ்நாட்டைப் பார்த்திருப்போம்; அதிலும் தென்பகுதி செல்வம் கொழிக்கக் கூடிய பகுதியாக இருந்திருக்கும்.
வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?
bbc.com : ஆய்வறிக்கை - BBC News தமிழ்
எழுதியவர், சிவகுமார் இராஜகுலம் - பிபிசி தமிழ் ; வீழும் அதானியில் மேலும் முதலீடு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபத்திய ஆண்டுகளில் சரசரவென மேலேறி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.