மின்னம்பலம் - Selvam : “கடந்த எட்டாம் தேதி கடலூரில் சீமான் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் குறித்து மிக இழிவான சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து உடனடியாக மூத்த பெரியாரியவாதி கோவை ராமகிருஷ்ணன், ‘பெரியார் சொன்னதாக சீமான் சொன்னது பற்றிய ஆதாரங்களை உடனடியாக அளிக்க வேண்டும்.
ஜனவரி ஒன்பதாம் தேதி அவரது நீலாங்கரை வீட்டிற்கு நாங்கள் வருகிறோம். அப்போது அவர் உடனடியாக ஆதாரத்தை அளிக்க வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வீடியோ வெளியிட்டார்.
சனி, 11 ஜனவரி, 2025
சீமான் கைது - ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெட?
ஈரோடு கிழக்கு தொகுதி- தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் அறிவிப்பு
மாலை மலர் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.
வெள்ளி, 10 ஜனவரி, 2025
மலையாள திரை உலகின் பாவ காயகன் ஜெயச்சந்திரன் காலமானார்
அமெரிக்காவில் காட்டுத்தீ... 1,30,000 பேர் வெளியேற்றம்- பலர் உயிரிழப்பு
tamil.samayam.com - மகேஷ் பாபு : : லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
Los Angeles Fire
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகள் தீக்கு இரையாகி வருகின்றன. 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதைய சூழலில் 27 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 1,30,000க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல பேர் முன்னிலையில் பெண் ஊழியர் கொலை! மஹாராஷ்டிர - புனே
![]() |
தினமலர் : புனே : புனேவில், 'கால் சென்டரில்' கணக்காளராக பணியாற்றிய சுபதா சங்கர் கோதரே, 28, என்ற பெண்ணை, உடன் பணியாற்றிய இளைஞர், நிறுவன வளாகத்தில் பல பேர் முன்னிலையில் வெட்டி சாய்த்த கொடூரம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேவின் ஏரவாடாவில் உள்ள பி.பி.ஓ., கால் சென்டரில் வேலை பார்த்தவர் சுபதா சங்கர் கோதரே.
இவருடன் கிருஷ்ண சத்ய நாராயண் கனோஜா என்பவர் பணியாற்றினார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானுக்கு எதிராக கொந்தளித்த தமிழகம்
AI தான் next best கிங்... பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் - அசந்து போன ஸ்டாலின்
மின்னம்பலம் - Selvam : AI தொழில்நுட்பம் தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் பேசப்படுகின்ற ‘Next Big Thing’ என்பதை உணர்ந்து,
சரியான திசையை நோக்கி, இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்றுதொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐடி துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வியாழன், 9 ஜனவரி, 2025
திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷப்பிரியா கொலைக்குற்ற சாட்டில் எப்படி சிக்கினார்? நிமிஷப்ப்ரியாவின் அம்மா கூலித்தொழிலாளி மகளை மீட்க போராடுகிறார்
![]() |
Loganayaki Lona : நிமிஷப்பிரியா கேரளாவின் பாலக்காட்டைச்சேர்ந்த செவிலியர்.
2008 இல் ஏமனில் செவிலியராக பணி செய்ய செல்கிறார்.
அங்கு வேலை பார்த்த அனுபவ அடிப்படையில் சுய தொழிலாக க்ளினிக் தொடங்க நினைத்தார்.
கணவரும் ,குழந்தையும் பொருளாதார போதாமையால் கேரளா திரும்பிவிட அவர் மட்டும் அங்கு பணி செய்தார்
.அங்குள்ள சிட்டிசனோட ,பார்ட்னராகத்தான் தொழில் தொடங்க வேண்டும் என ,இடையில் ஒரு குடும்ப நண்பர் தலால் மஹதி என்பவர் தன்னோடு சேர்ந்து தான் தொழில் செய்ய முடியும் என்கிறார்.
ஆனால் நிமிசப்ப்ரியாவுடன் இன்னொரு நண்பர் இணைந்து க்ளினிக் துவங்கப்பட்டது.
புதன், 8 ஜனவரி, 2025
பெண்ணின் 'உடல் அமைப்பு' குறித்து விமர்சிப்பது பாலியல் துன்புறுத்தல் குற்றம் - கேரள உயர்நீதிமன்றம் -
மாலை மலர் : பெண்ணின் "உடல் அமைப்பு" குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரிய (கேஎஸ்இபி) ஊழியர் இருவர் அளித்த மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பத்ருதீன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட அந்த ஊழியர் மீது சக பெண் ஊழியர் புகார் அளித்திருக்கிறார். அந்த ஊழியர் தனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பம் – 450 பேர் உயிருடன் மீட்பு – உயிரிழப்பு 126 ஆக அதிகரிப்பு
தினமணி : திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொலைதூர பகுதிகளில் உயிருடன் இருக்ககூடியவர்கள் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது.
450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளம் – திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Hindu tamil : இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது 7.1 ரிக்டராக பதிவானது.
இந்நிலையில் நேபாள – திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 4.5 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 7 ஜனவரி, 2025
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்?
BBC News தமிழ் : எதிர்பார்க்கப்பட்டபடியே கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன்.
நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.
வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.
திங்கள், 6 ஜனவரி, 2025
சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு! சிறுபிள்ளைத்தனமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆனால் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் முழு உரையையும் வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இலங்கை நுண் கடனில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தற்கொலை.. அதிர்ச்சி புள்ளிவிபரம்
tamlmirror : இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
hindutamil.in : விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்றது.
அன்றிலிருந்து இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது.
முதல்நாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.
கைது வளையத்தில் கதிர் ஆனந்த்… துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்! நடந்தது - நடப்பது என்ன?
![]() |
minnambalam.com - Aara : “ஜனவரி 3-ஆம் தேதி காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகம், துரைமுருகனின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்கள் என மொத்தம் நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
துரைமுருகனின் வீட்டில் யாரும் இல்லாததால் நிர்வாக நடைமுறைகள் முடிந்து அவரது வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைவதற்கு அன்று மதியம் 2:30 ஆகிவிட்டது.
லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ceylonmirror.net -Jeevan : லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
ஸ்வர்ணவாஹினி, ஸ்ரீ FM, மொனரா TV உள்ளிட்ட இலங்கை வெகுஜன ஊடகங்களின் உரிமையை லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லைக்கா குழுமம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், லண்டனை தலைமையகமாகக் கொண்ட லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை ஊடகத்துறையில் “மறைமுகமாகவும் இரகசியமாகவும்” தொழில்களை கையகப்படுத்துவதாக சிவில் செயற்பாட்டாளர் ஜமுனி கமந்த துஷார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
அருந்ததியர் பேரணி - தலைநகரில் கூடுவோம், தலை நிமிரச் செய்வோம்.!
Kathiravan Mayavan : தலைநகரில் கூடுவோம்,
தலை நிமிரச் செய்வோம்.!
ஜனவரி - 06 . காலை 10 மணி
எழும்பூர் எல் .ஜி .சாலை சந்திப்பு ..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொடுக்கப்பட்ட அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
அடித்தட்டு மக்களின் உரிமைகளை வென்றிட இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட சமூக நீதிப் போற்றுகின்ற, ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அனைவரும் அணி திரளுவோம்.
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் இரா. அதியமான் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆதிக்க தலித்சாதியினாரலால் அபகரிக்கப்படும் அருந்ததியர் மக்களின்
இட ஒதுக்கீடு பாதுகாத்திட சென்னையில் கூடுவோம்.
.மும்பை கதிரவன்
இலங்கை அரசியல் - என்னதான் நடக்கிறது?
Salman Lafeer : கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் கப்பல் தரித்து நின்றது. பணத்தை செலுத்தி எரிபொருளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்தது.
மின்சாரம், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் இல்லை.
பணவீக்கம் உச்சத்தை தொட்டிருந்தது, ரூபாயின் பெறுமதி மிக மோசமாக விழுந்தது,
எங்கு பார்த்தாலும் வரிசை, வரிசையில் நின்றாலும் பொருள் கிடைக்காது என்கிற நிலைமை.
மக்களின் அன்றாட வாழ்வே தலைகீழாய் நிலைகுலைந்து போயிருந்தது.
அப்பொதைய நாட்டு நிலமை Debt unsustainable. நாடுகள் கடன் கொடுக்கத் தயாரில்லை.
முதலிடவும் தயாரில்லை. பணவீக்கம் அதிகம். பணத்தை அச்சிட முடியாது. Tax கூட்டவேண்டும். ஆனால் மிகையாகக் கூட்டவும் முடியாது. உள்நாட்டு வருமானம் குறைவு.
துரைமுருகன் ரெய்டு: பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய்… அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன?
மின்னம்பலம் - Aara : வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது குடும்பத்தினர் நிர்வகிக்கும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினர்.
ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய ரெய்டு, துரைமுருகன் வீட்டில் நேற்று இரவுடன் முடிந்தது. ஆனால் கிங்ஸ்டன் கல்லூரியில் இன்றும் அமலாக்கத் துறையினரின் ரெய்டு தொடர்ந்தது.
இதுபற்றி வேலூர் வட்டாரங்களில் விசாரித்தபோது,
“2019 மக்களவைத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் என்பவருடைய இடத்தில் பத்து கோடிக்கும் மேல் பணம் ஐ.டி.யால் பறிமுதல் செய்யப்பட்டது.