பற்றியெரியத் தொடங்கியுள்ளது பாலாற்று உரிமைப்
பிரச்னை. இதுகுறித்து, மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக
தலைவர் மு.கருணாநிதி. அதில் தெரிவித்துள்ளதாவது:
‘1892இல், மெட்ராஸ்
அரசாங்கத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில், பட்டியல் “ஏ”
இணைப்பின்படி துங்கபத்ரா, வட பெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட
15 ஆறுகளின் மேற்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கப்
பகுதிகளின் உயரத்தையும், பரப்பளவையும் பராமரிப்பு என்ற பெயரில் அதிகரிக்கக்
கூடாது. அதன் பாசன பரப்பளவையும் அதிகரிக்கக் கூடாது. மேலும்,
கீழ்ப்பகுதியில் பாசனம் பெறும் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள்
கட்டித் தண்ணீரை வேறுபகுதிக்கு திசை திருப்பக்கூடாது மற்றும்
தேக்கிவைப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், தமிழக அரசின்
எந்த முன்அனுமதியும் இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல
இடங்களில் தடுப்பணை கட்டி, அதைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில்
உச்சநீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அப்போது அணை கட்ட
தடைவிதிக்கப்பட்டது.