இலங்கையில் பிரபல சுற்றுலாத் தலமான நுவரெலியாவில் உள்ள கிரான்ட் நட்சத்திர ஓட்டலில் ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா ஒன்றினைத் தயாரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நுவரெலியாவின் மேயர் சந்தன லால் கருணாரத்ன கலந்து கொண்டு பீட்சாவை வெளியிட்டார். இது குறித்து மேயர் சந்தன லால் கருணாரத்ன கூறுகையில், ''இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்களை உலகளவில சந்தைப்படுத்தும் நோக்கத்தில் இந்த ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும். இந்த பீட்சாவை 10 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்'' என்றார்.
சனி, 18 ஆகஸ்ட், 2018
இலங்கை.. உலகிலேயே மிகப் பெரிய ஸ்ட்ராபெரி பீட்சா. .. 6 ஆயிரம் பேர் வரையிலும் சாப்பிடலாம்
இலங்கையில் பிரபல சுற்றுலாத் தலமான நுவரெலியாவில் உள்ள கிரான்ட் நட்சத்திர ஓட்டலில் ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா ஒன்றினைத் தயாரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நுவரெலியாவின் மேயர் சந்தன லால் கருணாரத்ன கலந்து கொண்டு பீட்சாவை வெளியிட்டார். இது குறித்து மேயர் சந்தன லால் கருணாரத்ன கூறுகையில், ''இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்களை உலகளவில சந்தைப்படுத்தும் நோக்கத்தில் இந்த ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும். இந்த பீட்சாவை 10 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்'' என்றார்.
நாய்களையும் காப்பாற்றுமாறு கதறிய பெண்! கேரளா வெள்ளத்தில் ....

கேரளாவில் தொடர்ந்து வரும் பெருமழையினால் திருச்சூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் விளைநிலங்களில் நீர் புகுந்ததால், மக்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களைக் காப்பாற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று, திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுனிதா என்ற பெண்ணைக் காப்பாற்றச் சென்றனர் மீட்புப் படையினர். சர்வதேச கருணை சமுதாயம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த தகவலின் பேரில், அவர்கள் அங்கு சென்றனர். ஆனால், அவர்கள் அழைத்தபோது சுஜாதா தனது வீட்டை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். அந்த வீட்டில் அவரும் அவரது கணவரும் வசித்து வந்தனர். அது மட்டுமல்லாமல், 25 நாய்களும் வசித்து வந்தன. அவை அனைத்தும் சுஜாதாவின் அருகில் நின்று கொண்டிருந்தன.
“இந்த நாய்களையும் மீட்பதாக இருந்தால் மட்டுமே, நான் வீட்டை விட்டு வருவேன். இல்லையென்றால், இங்கேயே இருப்பேன்” என்று மீட்புப் படையினரிடம் தெரிவித்தார் சுனிதா. அதற்கு மறுப்பு தெரிவித்த மீட்புப்படையினர், அங்கிருந்து வெளியேறினர்.
சசிகலா : இதில கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு?


மின்னம்பலம்: “பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் நேற்று மாலையில் இருந்தே ஜெயா டிவியின் லைவ் வேன் காத்திருந்தது. இன்று சசிகலாவுக்கு பிறந்தநாள். வாழ்த்து சொல்ல
தினகரன் குடும்பத்தினர் வருகிறார்கள் என்பதால் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா, தினகரனின் மகள், மற்றும் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் அவரது மனைவி, மகள், ராஜராஜன் அவரது மனைவி ஷகிளா, சசிகலா உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோர் பரப்பானஅக்ரஹார சிறைக்கு சரியாக 11.50 மணிக்கு வந்தார்கள்.
ஏற்கெனவே இவர்களுக்கான அனுமதி வாங்கப்பட்டு இருந்ததால், காத்திருக்காமல் நேராக சிறைக்குள் போனார்கள் சசிகலா குடும்பத்தார். மதியம் 1.30 மணி வரை அவர்கள் எல்லோருமே சிறை வளாகத்துக்குள்தான் இருந்தார்கள்.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்.பென்னி குக் பேத்தி டயானா ,

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தியான டயானா ஜீப் நேற்று தேனி வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரலாறு காணாத அளவுக்குக் கேரள மாநிலம் மழையைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதை நானும் நேரில் பார்த்தேன். கொச்சின் சென்று அங்கிருக்கும் மக்களுடன் பேசிவிட்டு வந்தேன். மீண்டு வந்திடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்கிறது. இடுக்கி மாவட்ட மக்களுக்காக 4 டன் காய்கறிகள் வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அதற்காகப் பலர் உதவி செய்திருக்கிறார்கள். மேலும் உதவி செய்துவருகிறார்கள்.
கொள்ளிடம் பாலம்: ராணுவ உதவி தேவை! ஸ்டாலின் அவசர கோரிக்கை!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தின் வேகத்தால் இரும்புப் பாலத்தின் ஒரு தூண் வலுவிழந்து பாலம் விழும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று பாலத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “இந்த பாலம் தற்போது காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. போக்குவரத்துக்கு புதிய பாலமே பயன்பாட்டில் இருந்துவருகிறது. வெள்ளம் வடிந்தவுடன், இந்தப் பாலம் இடித்து தரைமட்டமாக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள்... ஹெலிகாப்டர் வராவிட்டால் நிலைமை மோசமாகும்... செங்கனூர் எம்எல்
திருவனந்தபுரம்: வெள்ளத்தால் வெளியேற முடியாமல் தவிக்கும் 50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள் என்று செங்கனூர் தொகுதி எம்எல்ஏ சஜி செரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Chengannur MLA Saji Cheriyan has made a desperate plea through the media to save thousands of people... .manoramaonline.com/
மாலைமலர் :கேரளாவில் தொடர்ந்து வெள்ள நிலைமை
மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி
செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain
#ChengannurMLA #SajiCherian
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில்
தத்தளிக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் உணவு பொருள்
மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், சுத்தமான குடிநீர்
கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள்.
ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர், குட்டநாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டு
உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, அனதோடு, கொச்சு பம்பா
அணைக்கட்டுகள் திடீர் என்று திறக்கப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது./
கெங்கனூரில் ஏற்கனவே 50 பேர் பலியாகிவிட்டார்கள்.
தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Chengannur MLA Saji Cheriyan has made a desperate plea through the media to save thousands of people... .manoramaonline.com/

தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரிகையின் சமஸ் .. கலைஞரை .. கருணாநிதி என்று .. தொண்டர்கள் கொதிப்பு

கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்னும் தலைப்பில் ஊடக வல்லுநர்கள் கலந்துகொண்டு பேசிய முதல் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார்.
இந்து குழும தலைவர் என்.ராம், நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன், நியூஸ் 7 உள்ளடக்க ஆசிரியர் ஆர்.முத்துகுமார், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், சன் டிவி சிறப்பு செய்தியாளர் ராஜா திருவேங்கடம், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். பார்வையாளர் பகுதியில் திமுக செயல்தலைவர் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
முல்லைப்பெரியாறில் இருந்து கேரளாவுக்கு அதிகம் தண்ணீரை திறந்து விடு! எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றும் கேரள போலீசின் அடாவடி!

அதோடு முன்னூறுக்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் உயிர் இழந்தும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் தண்ணீரால் தத்தளித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊத்துவது போல் முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் உள்ள கேரளா போலீசே அதிகப்படியான தண்ணீரை கேரளாவுக்கு திறந்து விடு என தமிழக அதிகாரிகளை மிரட்டி வருவது வாட்சப் மற்றும் பேஸ்புக்குகளில் காட்டு தீபோல் பரவிவருகிறது.
தமிழக கேரளா எல்லையான குமுளி தேக்கடியில் இருந்து 14 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது தான் கர்னல் பென்னிக் கட்டிய முல்லைப் பெரியாறு. இந்த முல்லைப்பெரியாறு அணையை தென் தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, ராம்ராடு, சிவகங்கை ஆகி பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதரத்திற்காக பென்னிக் கட்டி கொடுத்து இருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் : ஒரு குற்றவாளியின் ஆட்சியை அம்மாவின் ஆட்சி உத்தமியின் ஆட்சி ....
சிங்கராயர் ஆரோக்கியசாமி : கேட்டானய்யா ஒரு ஒரு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கொள்வது மாதிரி என்று
பெரியோர் பலபேர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். அப்படியான வார்த்தைகளைக்
கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது உண்மைதான்.
ஆனால் இன்று ஒரு மூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் கேட்டாரே ஒரு வார்த்தை. ஆம். இதுவரை நடந்த பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் பேசுபவர்கள் கூட்டத்தைப் பார்த்து கேள்விகளைக் வைப்பார்கள் அல்லது கூட்டத்தில் இருந்து எதிர்கேள்வியாக பேசுபவரை நோக்கி கேள்விக் கணைகள் எழும்,எழுந்திருக்கிறது.
இன்று கேட்டாரய்யா ஒரு கேள்வி. அதுவும் மேடையைப் பார்த்து,சக பத்திரிகை நண்பர்களைப் பார்த்து. ஆம் நண்பர்களே, தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பத்திரிகை,ஊடகங்கள் சார்பில் திருச்சியில் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலும் சில குறைகள் இருந்தாலும் ஒத்து ஊதாத ஊடக,பத்திரிகை ஆசிரியர்கள்,நிறுவனர்கள் என பழுத்த அனுபவம் உள்ளோர் அனைவரும் வந்திருந்தனர். அதில் யார் பேச்சையும் குறைசொல்ல முடியாது. இருந்தாலும் திரு.திருமாவேலன் அவர்களும், திரு.அருணன் , திரு.குணா அவர்களின் பேச்சு என்னை ஈர்த்தது எனச் சொல்லலாம். மற்றவர்கள் அனைவரும் அவரவர் பார்வையில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
ஆனால் இன்று ஒரு மூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் கேட்டாரே ஒரு வார்த்தை. ஆம். இதுவரை நடந்த பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் பேசுபவர்கள் கூட்டத்தைப் பார்த்து கேள்விகளைக் வைப்பார்கள் அல்லது கூட்டத்தில் இருந்து எதிர்கேள்வியாக பேசுபவரை நோக்கி கேள்விக் கணைகள் எழும்,எழுந்திருக்கிறது.
இன்று கேட்டாரய்யா ஒரு கேள்வி. அதுவும் மேடையைப் பார்த்து,சக பத்திரிகை நண்பர்களைப் பார்த்து. ஆம் நண்பர்களே, தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பத்திரிகை,ஊடகங்கள் சார்பில் திருச்சியில் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலும் சில குறைகள் இருந்தாலும் ஒத்து ஊதாத ஊடக,பத்திரிகை ஆசிரியர்கள்,நிறுவனர்கள் என பழுத்த அனுபவம் உள்ளோர் அனைவரும் வந்திருந்தனர். அதில் யார் பேச்சையும் குறைசொல்ல முடியாது. இருந்தாலும் திரு.திருமாவேலன் அவர்களும், திரு.அருணன் , திரு.குணா அவர்களின் பேச்சு என்னை ஈர்த்தது எனச் சொல்லலாம். மற்றவர்கள் அனைவரும் அவரவர் பார்வையில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
வாஜ்பாய் ... குஜராத் கலவர குற்றவாளி மோடி மட்டுமல்ல .. பிரதமர் வாஜ்பாயும்தான் ..


By Thameem tantra : வாஜ்பாய் ! முதலில் வாஜ்பாய் இறந்ததிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
முதலில் ஒன்றை தெளிவாக சொல்லிவிடுகிறேன்.... யாராக இருந்தாலும் நமக்கு தீங்கே செய்தவாராயினும், ஒரு சக மனிதனின் சாவை கொண்டாடுவதோ அல்லது ஒருவர் இறந்த செய்தியை கேட்டு சந்தோசபடுவதோ கொடூர புத்தியின் செயல். அந்த புத்தியுள்ளவர்களை யாராயினும் எவராயினும் என்னிடத்தில் இருந்து அவர்களை தள்ளியே வைத்து இருக்கிறேன். என்னதான் அவர்கள் சமூக நீதி நாட்டுக்கோழி என்று பேசினாலும் அவர்களின் உண்மை முகமாக அந்த கொடூர புத்தியையே நான் அனுமானிதுருக்கிறேன். I always considered such mindset as cannibalistic behavior.
நிற்க.
அதே சமயம் ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரை புனிதபடுத்துவதும் அக்கிரமம். குறிப்பாக அவரின் தீங்கான செயல்களை மறந்துவிட்டு selectiveவாக நமக்கு எது தோதுவாக இருக்கின்றதோ அதை மட்டும் வைத்து, அவரை இன்னொரு கொடூரமான நபரிடம் ஒப்பிட்டு பிசாசுக்கு பேய் பரவாயில்லை என்று தான் தோன்றி தனமாக எதுவுமே தெரியாமல் உளறுவது. சரி அந்த மினியன்களை விட்டுத்தள்வோம்.
இப்போது விசயத்துக்கு வருகிறேன் !
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
உச்சநீதிமன்றம் : முல்லை பெரியாறு நீரின் அளவை குறைக்க முடியாது .. பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை .. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுக்க கோரினார்.
எடப்பாடி.. அழகிரியை வைத்து ஸ்டாலினுக்கு டென்ஷனை உண்டாக்க ...
மின்னம்பலம்:
"அழகிரி
தரப்பில் கோபமாக இருப்பதையும், அவரது
ஆதரவாளர்களை ஒன்று திரட்டி வருவதையும்
வைத்து புதுக்கணக்கு போட ஆரம்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி
பழனிசாமி. ‘அழகிரியின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் வாட்ச் பண்ணுங்க. அவரோட
ஆதரவாளர்கள் யாரெல்லாம் இருக்காங்க... யாரையெல்லாம் அவரு சந்திக்கிறாரு
என்ற முழு விவரங்களும் எனக்கு உடனுக்குடன் வரணும்..' என உளவுத் துறையை
முடுக்கி விட்டிருக்கிறார் முதல்வர்.
இது தொடர்பாக அமைச்சர்கள்
சிலரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. 'கலைஞர் இருந்தவரை நாம
செஞ்ச அரசியல் வேற. ஸ்டாலின் பெருசா நமக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்தாரு.
இனி அப்படி இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. நாம மெரினாவில் இடம்
கொடுக்கவில்லை என்ற கோபம் அவங்களுக்கு நிறையவே இருக்கு. நாம அஞ்சலி
செலுத்தப் போனபோது ஸ்டாலின் எப்படி நடந்துகிட்டாருன்னு நீங்களே
பார்த்தீங்க. இன்னும் சில வாரங்களில் அவங்க எடுத்து வைக்கிற அடி நிச்சயமாக
நமக்கு சவாலாகத்தான் இருக்கும். இதுநாள் வரை எதுவும் பேசாமல் இருந்த திமுக
எம்.எல்.ஏ.க்கள் இனியும் அப்படி இருக்க மாட்டாங்க. எல்லா பக்கம் இருந்தும்
நமக்கு இடி வரும். எல்லாத்தையும் சமாளிச்சுதான் ஆகணும். அம்மா இறந்தபோது
நம்ம கட்சியில் எப்படி ஒரு சலசலப்பு இருந்துச்சோ அதே சலசலப்பு இப்போ
திமுகவில் இருக்கு.


கடைமடைக்கு நீர் செல்வதைத் தடுக்கும் மணல் கொள்ளை!

கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த பெருமழையால், காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது. அதனால் காவிரியிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.
இந்நிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்குக் காரணம், இயற்கை அல்ல, மணல் கொள்ளை எனும் மனிதர்களின் பேராசை என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் வாஜ்பாய்க்கு இரங்கல் :ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் ..

இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்" முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இன்று அவரின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:05 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் வாக்கெடுப்பில் வெற்றி .. நாளை பதவி ஏற்கிறார்
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.
வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்திய சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்
![]() |
ஆர் எஸ் எஸ் குண்டர்கள் பேருந்து மீது .. |

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது குறித்து சுவாமி அக்னிவேஷ் கூறும் போது அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு நான் அஞ்சலி செலுத்த பா.ஜ. தலைமையிடத்திற்கு சென்ற போது நான் தாக்கப்பட்டேன். சுமார் 20-30 பேர் பா.ஜ.கவினர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு என்னை கிழே தள்ளினர். அவர்கள் என்னை துரோகி என்று அழைத்தார்கள். என் மீது தாக்குதல் தொடுத்தனர். சில பெண்களும் என்னை செருப்பை கொண்டு தாக்கினார்கள். அங்கு சில போலீஸ்காரர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. என கூறினார்.
பினராயி விஜயன் " கேரளாவில் 324 பேர் உயிரிழந்துள்ளனர்,, 100 ஆண்டுகளில் இல்லாத மழை சேதம்
மாலைமலர் :கேரள மாநிலத்தில் பெய்துவரும் அதிகப்படியான கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை சேதம் - 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல் திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை சேதம் - 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல் திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் 18-வது தூணில் விரிசல்

18-வது தூணில் நேற்று முன்தினம் இரவு திடீர் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசல் அதிகமாகி நேற்று காலை தூணின் ஒரு பகுதி ஆற்றுக்குள் இறங்கியதால், எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் திருச்சியில் கொள்ளிடம் ஆற் றின் குறுக்கே 1852-ல் கட்டப்பட்ட பாலம் 1924-ல் நேரிட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட் டது. இதையடுத்து, திருவானைக் காவல் நெ.1 டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில், 1928-ல் 12.5 மீ.அகலம், 792 மீ.நீளத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. 24 தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் கனத்த இரும்புக் கம்பிகளால் ஆனவை.
ஸ்டாலின் .. அழகிரி ... கனிமொழி ... என்னதான் நடக்கிறது?



மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இன்று காலை மு.க அழகிரி சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார்.
இது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி தமிழகம் முழுக்க எழுந்துள்ளது.
யாழ் - திருப்பதி விமான சேவை? பலாலி விமான நிலையத்தில் நேரடியாக வெளிநாடுகளுக்கு விமான சேவை ... இந்திய துணை தூதர் அறிவிப்பு

வியாழன், 16 ஆகஸ்ட், 2018
சென்னை மழைநீர் கால்வாயில் உடன் பிறந்த குழந்தை ,,, கண்டெடுத்த சின்னத்திரை நடிகை
மின்னம்பலம்: சென்னையில்
மழைநீர் கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்த சின்னத்திரை நடிகை கீதாவைப் பாராட்டி, தமிழகச் சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பரிசு வழங்கினார்.
சென்னை எழும்பூரில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு சிடி வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த விழாவில், மழைநீர் கால்வாயில் இருந்து குழந்தையை மீட்டதற்காகச் சின்னத்திரை நடிகை கீதாவை அழைத்துப் பாராட்டினார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்குப் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.
சென்னை எழும்பூரில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு சிடி வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த விழாவில், மழைநீர் கால்வாயில் இருந்து குழந்தையை மீட்டதற்காகச் சின்னத்திரை நடிகை கீதாவை அழைத்துப் பாராட்டினார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்குப் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.
முல்லை பெரியாறு நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

வேண்டும்: உச்ச நீதிமன்றம்" பெரியாறு அணையின் நீர் அளவை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று அணையின் பேரிடர் மேலாண்மை துணைக் குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நிலவும் மிக மோசமான மழைக் காரணமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். நாளை காலை துணை குழு, மத்திய பேரிடர் மேலாண்மை குழுவுடனும், தமிழகம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர்களுடனும் அவசர சந்திப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நேரில் சந்திக்க இயலாத பட்சத்தில், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசிக்கவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும். நீரோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்றது உச்சநீதிமன்ற அமர்வு.
வாஜ்பாய் காலமானார் - புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு

முன்னாள் rபிரதமர் வாஜ்பாய் iஇன்று காலமானார்.
இவர் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர்
குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
வாஜ்பாய் கவிதை எழுதுவதில் வல்லவர் , தேசபக்தி கவிதைகளாக எழுதுவார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய் பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் வாஜ்பாய் அரசியலில் நுழைந்தார்.
மெரினா நோக்கி அழகிரி பேரணி?... வேலைகள் தொடங்கி விட்டனவாம் ..

அழகிரியின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய இசக்கிமுத்து சென்னையில் இருந்து மதுரை திரும்பிவிட்டார். இசக்கிமுத்து என்றால் அழகிரி வட்டாரத்தில் அறியாதவர்களே கிடையாது. 38 வருடமாக அழகிரியோடு எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர். அழகிரி மதுரையில் முரசொலி பணிக்காக வந்தபோதில் இருந்து அவரோடு இருப்பவர் இசக்கிமுத்து. இன்றைக்கும் ஒரு நாளைக்கு பத்து முறையாவது இசக்கிமுத்துவோடு போனில் பேசிவிடுவார் அழகிரி.
இப்படிப்பட்ட இசக்கிமுத்து திமுக செயற்குழுவுக்கு முதல் நாளான ஆகஸ்டு 13ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனை கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தார். நடப்பு அரசியல் சூழல் பற்றி பேராசிரியரோடு பேசியிருக்கிறார் இசக்கி. ‘கொஞ்ச நாள் அமைதியா இருக்கச் சொல்லுய்யா...’ என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் பேராசிரியர். இது அழகிரிக்கும் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அழகிரி அன்றுதான் மெரினாவில், ‘கலைஞரின் விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்’ என்று பேட்டி கொடுத்தார் . திமுகவுக்கு திரும்புவதற்கு யார் சிபாரிசும் தேவையில்லை, தொண்டர்கள் சிபாரிசுதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அழகிரி.
எல்லா நோபல் பரிசுகளுக்கும் மோடிக்கு உரியவை!

அன்பு சகோதரி, சகோதரர்களுக்கு,
இனிய 72ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள். நம்முடைய வரலாற்றின் முக்கியமான இந்த தருணத்தில், நம்முடைய தேசம் உருவாக்கிய மிகச் சிறந்த தலைவரான நரேந்திர மோடியால் வழிநடத்தப்பட அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். யுனஸ்கோ மோடி அவர்களை உலகின் சிறந்த பிரதமராக அறிவித்திருப்பதோடு, அவரது தலைமயின் கீழ், நம்முடைய தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் தேசியப் பறவைக்கு இதே போன்ற கவுரவம்
அளிக்கப்பட்டிருப்பதை, நீங்கள் வாட்ஸ் அப்பில் பார்வேர்டு செய்யப்படும் செய்திகளில் இருந்து அறிந்திருக்கலாம். நம்முடைய தேசம் மகத்தான பாய்ச்சலுக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய தலைவருக்கு மறுக்கப்பட்ட நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுத்தர கோருவதில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
உண்மை என்னவெனில், மோடி அவர்கள் ஒன்றல்ல, எல்லா நோபல் பரிசுக்கும் உரியவர். கடந்த வாரம் தான், அவர் ரசாயன நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
வாயுக்களை தனிமைப்படுத்துவது மற்றும் அழுத்தம் தருவது ஆகிய செலவு மிக்க முறைகள் இல்லாமல் குப்பை குவியல் வாயுக்களை சமையல் எரிவாயுவாக மாற்றும் ஆற்றல் குறித்து எடுத்துரைத்தற்காக அவர் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிக திறந்த வெளி சாக்கடைகளைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு இந்த நேரடி மாற்றத் தொழில் நுட்பம் மிகவும் பொருத்தமானது.
கன்னியாகுமரி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .. 11 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை ..

தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று 2.50 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் 4வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவே இல்லை.. ஜாதி பெருமைகள் .....

பெருமைகள் இல்லையடி பாப்பா அதில் தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாப்பம் என்றுதான் 1913 இல் அவர் தொடங்கிய ஞான பானு இதழில் - 1915 பங்குனி .. பக்கம் 287 -288 எழுதினர். இது பின்பு நெல்லையப்பர் பதிப்பில் 1917 சாதிகள் இல்லையடி பாப்பா அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மாறிவிட்டது .
இந்த விபரங்களை பாரதியாரை பற்றி தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்த சீனிவாசன் காலவரிசையில் பாரதி படைப்புக்கள் (அல்லயன்ஸ் பதிப்பகம்) என்ற தலைப்பில் 16 தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெளிவந்த பாரதியின் களஞ்சியத்தில் 9 தொகுதியில் 148 பக்கத்தில் இந்த உண்மை தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
பாரதியார் தனது மகளின் திருமணம் போன்ற வைபவங்களில் தனது பார்ப்பனீய கோட்பாடுகளை எள்ளளவும் வழுவாது கடைப்பிடித்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே.
TVS குழும வேணு சீனிவாசன்.அறக்கட்டளை கோயில்களில் புனரமைப்புகளை ... சந்தேகம் இருக்கிறது ...

விசாரிக்கவே கூடாதாம்,அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதற்கே விசாரணை நடத்த வேண்டுமாம்!அரசியல் தலைவர்களும்,வி வி ஐ பி களும் வரிந்து பேசி கொண்டு, நிற்பது யார்க்காக?
இந்தியாவின் மிக செல்வாக்குள்ள தொழிலதிபரான டி வி எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசனுக்காக!
சிலை கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது, என வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியது ஏன்?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக் கோயிலில்,மயிலொன்று மலரெடுத்து சிவனுக்கு பூஜை செய்யும் சிலை 2004 ல் காணாமல் போகிறது.அதற்கு மாற்றாக வேரொன்று வைக்கப்படுகிறது.
அதற்கடுத்து,திருவரங்கம் ரங்கனாதன் கோயில் மூலவர் விக்ரம் களவாடப்பட்டு,வேறு ஒன்று மாற்றப்பட்டதாகப் புகார்.
இவை தொடர்பாக இது வரை அற் நிலைய துறைக்கும், காவல் துறைக்கும் புகார் தரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் நீதி மன்றத்தை ரங்க ராஜன் என்பவர் அணுகுகிறார்.
கலைஞரை வேண்டுமென்றே கருணாநிதி கருணாநிதி என்று தினமணி தினமலர்.... காஞ்சி சங்கரன், ராசகோபாலாசாரி ...போன்றரை மட்டும்,,,,?

அதில் ஸ்டாலின் உருக்கமாக,தன் தந்தையை கூறிப்பிடும் போதெல்லாம்’’ தலைவர் ’’என்றே விளிக்கிறார். ஆனால், இன்றைய தினமணியிலும்,தினமலரிலும் அவர் தலைவர் என விளித்த இடங்களில் எல்லாம்,’கருணாநிதி’ என மாற்றி போட்டுள்ளனர்.
தினமணியில் நான் கவனித்த வகையில்,சுமார் 14 இடங்களில் தலைவர் என ஸ்டாலின் குறிப்பிட்டதை மெனக்கெட்டு பார்த்துப்,பார்த்து கவனமாக மாற்றியுள்ளனர்,
ஒரு நிருபரோ,ஆசிரியரோ தான் ஒரு செய்தியை கூறவருமிடத்து,கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்,அவ்வாறு கூறியுள்ளார் என எழுதினால் நாம் அதை குற்றம் காணமுடியாது.
ஆனால்,மற்றொருவர் ஒன்றை கூறுமிடத்து,சம்பந்தபட்டவர் எவ்விதம் கூறிப்பிடுகிறாரோ,அதை, அவ்விதமே எழுதுவது தானே சரியாக இருக்க முடியும்? அதுவும் தன் தந்தையை ஸ்டாலின் எப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும் என தொலைகாட்சி நேரலையை பாக்காதவர்களும் யோசிக்க தானே செய்வார்கள்?
தினமணி,தினமலரில் சிறப்பு கட்டுரை எழுதும் நண்பர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி என்னிடம் கூறி வருத்தப்பட்டதுண்டு.
ஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை சுற்றி சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி அவர் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்முறையாகக் கொடியேற்றினார்.
இலங்கை ராணுவத்தினர் வெடி பொருட்களை கண்டறிய கீரிப்பிள்ளையை வளர்க்கின்றனர்

மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வெடி பொருட்களைக் கண்டறிய கீரிப் பிள்ளையைப் பயன்படுத்தும் திட்டமொன்றை இலங்கை இராணுவம் முன்னெடுக்கிறது.>இந்தத் தகவல் கிடைத்த பின்னர், இதுகுறித்த விரிவான விவரங்களைச் சேகரிக்க பி.பி.சி தமிழ் நேரடியாக சென்றிருந்தது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான மத்தேகொட என்ற இராணுவ முகாமில் இந்த கீரிப்பிள்ளைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இராணுவத்தின் பொறியியல் பிரிவு இந்த செயல்திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.
வெடிபொருட்களைக் கண்டறிய இலங்கை இராணுவத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. தற்போது விலங்கினத்தில் அதிக மோப்ப சக்தி கொண்ட கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என இலங்கை இராணுவம் தெரிவித்தது.
சமச்சீரான கல்வி தந்தவர்
இதை உணர்ந்து 8-ம் வகுப்பு வரையாவது பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த பெண்கள் திருமண வயதுக்கு வந்த பிறகு திருமணத்துக்கான உதவித் தொகையாக ரூ. 5,000 வழங்கும் திட்டத்தை 1989 ஜூன் 3 அன்று தொடங்கி வைத்தவர் கருணாநிதி. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் நடுநிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கிராமப்புறப் பள்ளிகளில் பெண்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்தது.
செயல்வழிக் கல்வி
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளி பாடப் பிரிவில் கணினிப் பாடத்தை 1999-2000 ஆண்டு தொடங்கினார் கலைஞர் கருணாநிதி.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளி பாடப் பிரிவில் கணினிப் பாடத்தை 1999-2000 ஆண்டு தொடங்கினார் கலைஞர் கருணாநிதி.
2 மாதக் கைதி 36 வருடக் கைதியானார்... ஜெய்ப்பூர்காரருக்கு பாகிஸ்தானில்.. இந்திய தூதரகத்தின் அலட்சியம்

இதில் வேடிக்கை என்னவென்றால், கஜானந்த் என்ன குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார் என்பதே தெரியவில்லை. மேலும், அவருக்கு பாகிஸ்தானில் அளிக்கப்பட்ட தண்டனைக் காலம் வெறும் 2 மாதம் மட்டுமே. ஆனால், தூதரகத் தொடர்பின்மையால், அவர் இத்தனை ஆண்டுகள் அந்நாட்டு சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பரஸ்பரம் இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எதிர் நாடுகளின் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். குறிப்பிட்ட ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியக் கைதிகளை விடுதலை செய்து, இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானும், அந்நாட்டுக் கைதிகளை இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடமும் ஒப்படைப்பார்கள். இந்த நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது.
புதன், 15 ஆகஸ்ட், 2018
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !

கடந்த 07-08-2018 அன்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான முனைவர் கார்த்திக் நவாயனா இந்த விளம்பரம் அடங்கிய பேனரின் புகைப்படத்தை டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
சுத்தமான பிராமண உணவு வகைகளை, பெங்களூரு ஜே.பி. நகர், பி.டி.எம். லே-அவுட், புட்டெனஹள்ளி, பிலேகாஹள்ளி ஆகிய பகுதிகள் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விரைவாக ’டோர்-டெலிவரி’ செய்வதாக அந்த விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்தமான சைவ உணவு ரூ.40, ரூ.45, ரூ.60 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பிராமண உணவு சேவை வழங்குவதற்கு இந்நிறுவனம் மட்டுமே வழங்கவில்லை. இதுவே முதல் நிறுவனமும் அல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய ’சேவை’ நிறுவனங்கள் நிறைய உண்டு.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள முதல்வர் கடிதம்
மாலைமலர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை
142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு
கேரள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்:
முல்லைப்பெரியாறு
அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக்
கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும்,
பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்
கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து
2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய
மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை
எட்டவில்லை.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.
மோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்!


மோடி பேசியது ஏமாற்றமளிப்பதாக விமர்சித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மோடி உண்மையைப் பேசியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி. கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு சாதனைகளையும், இந்தியா உலக அரங்கில் முன்னேறியிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுப் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை தயாநிதிக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர் என்று மு.க.அழகிரி 13-ம் தேதி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட
அறிக்கையில், “துக்கம் தணியாத 6-வது நாளில் தூண்டிவிடப்பட்ட அம்புகள்,
வடக்கே இருந்து வந்த திட்டப்படி சில சத்தங்களை எழுப்பினால் சரித்திரம்
மாறிவிடும் என்று நப்பாசை கொள்கின்றனர்” என்று அழகிரியை மறைமுகமாக
விமர்சித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)