சனி, 26 ஏப்ரல், 2014

சிபிஐ மூலம் காங்கிரஸ் என்னை மிரட்டுகிறது : TRS சந்திரசேகர் ராவ் !

தெலங்கானா நிதி மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ், சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய சந்திரசேகர் ராவ், தேர்தலுக்கு முன்பு எனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டதால் சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறார்கள். இது என்னை அடக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம். காங்கிரஸ் இதுபோல் தான் அனைவரையும் பணிய வைக்க முயலுகிறது என்றார். உங்களை மட்டுமா ?

ஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க கொடநாடு பயணம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் 3–ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அவர் கடந்த 21–ந்தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்தார். நேற்று கோட்டைக்கு வந்து அலுவலக பணிகளை கவனித்தார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்லும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு செல்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையிலிருந்து நாளை (27–ந்தேதி) நீலகிரி மாவட்டம் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்’’ என்று கூறப்பட்டுள்ளது. கோடநாட்டில் முதல்–அமைச்சரை வரவேற்க நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. maalaimalar.com

பார்வதி மேனன்! உத்தம வில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் தற்போது படுபிஸியான நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 5 படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழிலும் சீரான இடைவெளியில் சில படங்கள் நடித்து தனது மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். சமீபத்தில் விஷாலின் பூஜை திரைப்படத்தில் கமிட் ஆன ஸ்ருதி, அதற்கு முன்பு கமல் நடித்துக்கொண்டிருக்கும் உத்தமவில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடிப்பதற்கு பேசப்பட்டிருக்கிறார். வேறு நடிகை மகளாக நடிப்பதை விட, உண்மையான மகளே மகளாக இருந்தால் கதாபாத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும் என்ற எண்ணத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசி ஓகே செய்ப்பட்டது. ஆனால் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனன் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்காதது குறித்து சமீபத்தில் பேசிய ஸ்ருதிஹாசன் “கால்ஷீட் இல்லாததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கமுடியவில்லை. என் தந்தைக்கு மகளாக நடிக்க முடியாதது குறித்து வருந்துகிறேன்” என்று கூறினாராம்

1800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன் .முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா

ஊட்டி: "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில், ஆயிரத்து 800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, எம்.பி., கனிமொழி மற்றும் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், நீலகிரி தொகுதி எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, 'தினமலர்' நிருபருக்கு அளித்த பேட்டி:

தி.மு.க., காங். வேட்பாளர்கள் செலவுகளை சமாளிக்க திணறல்: ! பணம் பட்டுவாடாவில் கடும் பாகுபாடு

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்கென, முதல்கட்டமாக, கட்சி சார்பில், பணம் வழங்கப்பட்டதோடு சரி; இரண்டாம் கட்டமாக, பணம் தர முடியாது என, ஸ்டாலின் கைவிரித்து விட்டதால், மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர்களுக்கு, கடைசி கட்ட செலவுகளை சமாளிக்க, தவித்துப் போனதாக, தகவல் வெளியாகி உள்ளது கொதிப்பு: அதேபோல், காங்., கட்சியில், தேர்தல் செலவுக்கு, வேட்பாளர்களுக்கு பணம் வழங்கியதில், பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். லோக்சபா தேர்தலை ஒட்டி, தி.மு.க., சார்பில், தேர்தல் நிதி திரட்டப்பட்டது. மாவட்ட வாரியாக, திரட்டப்பட்ட நிதியான, 115 கோடி ரூபாய், திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க., மாநில மாநாட்டில், கட்சித் தலைமையிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், தேர்தலில் போட்டியிட, விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்தும், கட்டணமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், கட்சித் தலைமை நேர்காணல் நடத்திய போது, 'கோடிக்கணக்கான பணத்தை, தேர்தலுக்கு செலவிட தயாராக உள்ளோம்' என, வாக்குறுதி அளித்த பலருக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜகவில் இணைந்தார் ! டீலுக்கு எவ்வளவு காசு ?

அமிர்தசரஸ்:பா.ஜ.க.,வில் பிரதமர் மன்மோகன்சிங் சகோதரர் தல்ஜித் சிங் கோலி நேற்று இணைந்தார்.பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 30ம் தேதி பஞ்சாபில் தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் பிரதமரின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வி்ல் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து நன்கு அறிந்ததால் தான் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வில் சேர முடிவு செய்திருப்பார் என்றார். தம்பி தல்ஜித் சிங் இந்த டீலுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று தெரியல? மன்மோகனின் ஆட்சி பற்றி சுய கருத்துக்கு வர இந்த நேரம் தான் கிடைத்ததா ? இவனையெல்லாம் சேர்க்கிற பாஜகாவின் யோக்கியதை???.

வீதியில் வைத்து டாக்-ஷோ ! பாகிஸ்தானின் டி.வி. சேனலை பாக். ராணுவம் முடக்க நினைப்பதன் பின்னணி!

பாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை, பாக். ராணுவம் முடக்க
நினைப்பதன் பின்னணி! " பாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை தடை செய்து, லைசென்சை பறித்து, இழுத்து மூடும்படி கோரிக்கை விடுத்துள்ளது, பாகிஸ்தான் ராணுவம். ஒரு நாட்டின் ராணுவம், அந்த நாட்டின் தனியார் டி.வி. சேனலை தடைசெய்யுமாறு அதிகாரபூர்வமாக கேட்டிருப்பது, உலக அளவில் மிக ஆச்சரியமான ஒரு விஷயம்.
பாகிஸ்தான் டி.வி. சேனல்களில் மிகப் பிரபலமாகவுள்ள ‘ஜியோ நியூஸ்’ செய்தியாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. உள்ளது என, அந்த சேனல் தொடர்ந்து கூறிவரும் நிலையிலேயே, அந்த டி.வி. சேனலையே தடை செய்ய கோருகிறது, பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானில் தகவல் தொடர்பு அமைச்சகத்தில், டி.வி. ஒளிபரப்பை கட்டுப்படுத்தும் ரெகுலேட்டரி பிரிவிடம், தமது கோரிக்கையை எழுத்து மூலமாக கொடுத்துள்ளது ராணுவ தலைமை.
ரகசிய விவகாரங்களை கவனிக்கும் அமைப்பான உளவுத்துறை இந்த விஷயத்தில் வெளிப்படையான கோரிக்கை வைக்க முடியாது என்பதால், ராணுவத்தின் மூலம், டி.வி. சேனலை தடை செய்யும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை ! விஜயகாந்த் போட்ட கணக்கு தப்பாது ?

தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதால், விஜயகாந்தின் வெற்றிக்கணக்கு தப்பாது' என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஐந்து தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெறும் என, அக்கட்சி தலைமை கணித்தது. ஆனால், தொகுதிகளில் இருந்து வந்த தகவல்களும், ஊடகங்களில் வெளியான செய்திகளும், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மோடி அலையே இதற்கு காரணம் என்றும், புதிய வாக்காளர்கள், பா.ஜ., கூட்டணிக்கு, அதிக அளவில் ஓட்டளித்ததே காரணம் என, கூறப்படுகிறது. 10 தொகுதிக்கு டெபாசிட்டே கிடைக்காது...

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

மாற்றுத்திறனாளி Actress அபிநயா இருமொழிகளில் பிஸி !

சென்னை: ஹீரோயின்கள் சிலர் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கி
கிடக்கும் இந்நேரத்தில் மாற்றுத்திறனாளி அபிநயா இருமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சசிகுமார் இயக்கத்தில் ‘போராளி‘ படத்தில் நடித்தவர் அபிநயா. வாய் பேசாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது. தெலுங்கிலும் இப்படத்தில் அபிநயாவே நடித்தார். அதற்கும் விருது பெற்றார். தொடர்ந்து ‘ஈசன்‘, ‘7ம் அறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஹரி இயக்கத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை‘ படத்தில் மற்றொரு நாயகியாக அபிநயா நடிக்கிறார்.பிற மொழிப் படங்களிலும் நடித்து வரும் அபிநயா மலையாளத்தில் ‘ஐசக் நியூட்டன் சன் ஆப் பிலிபோஸ்‘ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பஹத் பாசில் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த பிஸி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று எலக்ஷன் பாணி யில் கோஷம் போடுகிறது அபிநயாவின் நட்பு வட்டாராம்.
tamilmurasu.org

117 முறை பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளி Millionaire தண்டனையிலிருந்து தப்பினார்


A multi-millionaire tech-entrepreneur, who was once named one of America’s ‘most eligible bachelors’, has avoided jail time despite allegedly beating and kicking his girlfriend 117 times in a 30 minute attack.
Gurbaksh Chahal, 31, was charged with 45 felony counts over the incident, which took place in his San Francisco apartment in August last year.
Police obtained CCTV which allegedly show Chahal, who ironically describes himself as ‘die hard’, kicking his then-partner in the head multiple times and attempting to smother her.அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இளம்பெண்ணை 117 முறை தாக்கிய அவரது நண்பரான இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்பக்ஸ் சாகல் என்பவர் தண்டனையிலிருந்து தப்பினார். அப்பெண்ணை அவரது வீட்டிற்குள்ளேயே வைத்து அரை மணி நேரத்தில் 117 முறை சாகல் தாக்கியது அங்குள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது.

வாரணாசியில் பார்ப்பனிய பயங்கரவாததம் ? தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !


வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்விகடன் பத்திரிகை தன்னை நட்டநடு சென்டராக காட்டிக் கொண்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்குபவது போன்ற ‘சிரமம்’ தினமலருக்கு இல்லை. பாஜக-வின் சின்னமான தாமரை மலரையே, ராமசுப்பையர் ஆரம்பித்த தினமலரும் கொண்டிருப்பது தற்செயலான ஒற்றுமை மட்டுமல்ல, அவசியமான உள்ளச் சேர்க்கையும் கூட.
மோடிக்கும், பாஜகவிற்கும் ஆதரவாக செய்தி போன்ற கருத்துக்கள், கருத்து போன்ற பொய்கள், கட்டுரை போன்ற அபாண்டங்கள், கேலிச் சித்திரத்தின் பெயரில் விளம்பரங்கள், நேர்காணல் வழியாக நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் வாசகர் வாயில், கடப்பாறை கொண்டு திணிக்கிறது தினமலர். பாபர் மசூதியை இடித்த கடப்பாறையும், பத்திரிகை வாசகர்களை வாட்டும் இந்த கடப்பாறையும் ஒரே குருகுலத்தில் வார்க்கப்பட்டவையே!

தமிழ் சினிமாவின் வருமானம், இன்றும் 80 முதல் 85 சதவீதம் தனியரங்குகளை நம்பியே

பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே?
பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் அரிதினும் அரிதாக
வெளிவருகிறது. அப்படியிருக்க அதுபற்றிய சொல்லாடலும் தமிழ்ச் சூழலில் அரிதாகவே இருக்கிறது.
ஆனால் இந்திப் பட உலகில் பேஷன், நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா, த டர்ட்டி பிக்சர், ஹீரோயின், காஹானி, இங்க்லிஷ் விங்கிலிஷ், இஷ்கியா, குலாப் கேங், ஹைவே, குயீன் என பல படங்கள் வெற்றி பெறுகின்றன. கான்சி, பாபீ ஜாஸூஸ், மேரீ கோம் என பல படங்கள் தயாராகி வருகின்றன. தமிழில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், தமிழில் வெற்றி கண்ட, பெண்களை மையப்படுத்திய படங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு சாதனைப் பட்டியல்
1938-ல் கே.சுப்ரமணியத்தின் சேவாசதனம் என்ற படம் தொடங்கி, சகுந்தலா, கண்ணகி, மீரா, மணமகள், அவ்வையார், அடுத்த வீட்டு பெண், கொஞ்சும் சலங்கை, அன்னை, நானும் ஒரு பெண், வெண்ணிற ஆடை, இதய கமலம், சித்தி, எங்கிருந்தோ வந்தாள், வெகுளி பெண், அரங்கேற்றம், சூரியகாந்தி, அவள் ஒரு தொடர்கதை, அவளும் பெண் தானே, அன்னக்கிளி, பத்ரகாளி, அவர்கள், அவள் அப்படிதான் என்று கருப்பு வெள்ளை காலத்தில் ஒரு சாதனைப் பட்டியலே போடலாம்.

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர்
ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களுட்ன, இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காங்கிரஸ் வலை சிபிஅய் எப்படி இயங்குகிறது என்பது ஒன்றும் உலக மகா ரகசியம் அல்ல 

மதம் மாறினால் தான் கல்யாணம் ! நடிகை அமலாபாலுவுக்கு காதலை விட மதம் பெரிதாம் !

Amala Paul New Photosநடிகை அமலாபாலும் – இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் பரவியது. அமலாபாலும், தான் விஜயை காதலிப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார் பின்னர் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த திகதிகளையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் எழும்பியுள்ளது. அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், விஜய்யோ செட்டியார், இந்து மதத்தை சேர்ந்தவர்.
திருமண திகதி குறிக்கும் வரை மதத்தை பற்றி கவலை படாத அமலாபாலின் பெற்றோர் இப்போது ஒரு புதிய புதிரை போட்டுள்ளார்களாம்.
விஜய்யை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் படி வற்புறுத்தி வருகின்றனராம், ஆனால் விஜய்க்கோ இவ்விஷயத்தில் விருப்பமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம்.  இதெல்லாம் ஒரு காதல் சீ  தூத்தேரி !

முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு பெயரை பயன்படுத்தி தமிழக விவசாயிகளே!"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு" ;டந்த 2011-ம் வருடம் இறுதியில் கேரளாவில் உள்ள காங்கிரசு, சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க சதி வேலைகள் செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கானோர் திரண்டு பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க விடாமல் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது. கடந்த 2011-ம் வருடம் இறுதியில் கேரளாவில் உள்ள காங்கிரசு, சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க சதி வேலைகள் செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கானோர் திரண்டு பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க விடாமல் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து தடுத்து நிறுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து தேனி, மதுரை மாவட்டங்களில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கட்சி சார்பற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு” என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுப்பினர்கள் சேர்த்து, ஒருங்கிணைப்பு குழு அமைத்து மதுரை, தேனி மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுத்து சட்டப்படி 82/2012 நம்பராகப் பதிவு செய்துள்ளோம்.

1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

அயர்லாந்துரோப்பா முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் வீடு இல்லாமல் தெருவில் தவிக்கையில், மறுபுறம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் யாரும் தங்காமல் “காலியாக”வே இருக்கும் அதிர்ச்சியான தகவலை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை இனி விரிவாக.
அயர்லாந்தில் உள்ள காலியான விற்கப்படாத வீட்டுத் தொகுப்பு.
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான கார்டியன், ஐரோப்பிய யூனியன் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இங்கிலாந்தில் சுமார் 7 லட்சம் வீடுகளும், ஜெர்மனியில் 18 லட்சம் வீடுகளும், பிரான்சில் 24 லட்சம் வீடுகளும், ஸ்பெயினில் 34 லட்சம் வீடுகளும் கேட்பாரின்றி காலியாக கிடப்பது தெரிய வந்துள்ளது.

கோச்சடையான் ரிலீஸில் பிரச்சனையா? அதிர்ச்சியடைந்த படக்குழு!

மே 9-ஆம் தேதி கோச்சடையான் ரிலீஸாகவில்லை என்ற தகவல் கோலிவுட்டில் பரவத்துவங்கியதும் ரசிகர்கள் குழப்பமடந்துவிட்டனர். கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு தயாரிப்பாளரான முரளிமனோகருக்கு கோச்சடையான் திரைப்படத்தில் திருப்தி இல்லையென்றும், அதனால் அவர் மே-9ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டாம் என்று கூறியதாகவும் பேசப்பட கோச்சடையான் திரைப்படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். ஆனால் இது குறித்துவிசாரித்தபோது, கோச்சடையான் திரைப்படத்தை வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் இந்த வதந்தி வெளியாகியிருக்கின்றது என்று தெரியவந்திருக்கிறது.

இதுதாண்டா குஜராத் ! எதிர்கட்சி காரனுக்கு அடி உதை இதுதான் குஜராத் மாதிரியா’? மோடிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி ?

மக்களை மிரட்டுவதுதான் ‘குஜராத் மாதிரியா’ என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
கேஜ்ரிவாலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாரணாசியின் அஸ்ஸி காட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி பங்கேற்றார். அப்போது, அவரை பாஜக தொண்டர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வாரணாசியில் செய்தி யாளர்களிடம் கேஜ்ரிவால் வியாழக் கிழமை கூறியதாவது: “இந்த புனித நகருக்கு என்ன மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது?

இளம் வாக்காளர் அதிகரித்த வாக்குப்பதிவு: வேட்பாளரா, நோட்டாவா?- குழப்பத்தில் கட்சிகள்

தமிழகத்தில் இளம் வாக்காளர் களின் எழுச்சியால் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களின் மனம் கவர்ந் தது கட்சி வாக்காளர்களா, ‘நோட்டா’வா என்று புரியாததால் அரசியல் கட்சிகள் கலக்கத்திலும் குழப்பத்திலும் உள்ளன.
வாக்குப்பதிவின்போது, அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தால் அது ஆளுங் கட்சிக்கு எதிராக போடப்படும் வாக்குகள் என்று சொல்வது வழக்கம். அதில் உண்மை இல்லா மலும் இல்லை.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது இவ்வாறு நிகழ்ந்து அது அப்போதைய ஆளுங்கட்சி யான திமுகவுக்கு எதிராக அமைந்து, எதிர்க்கட்சியான அதிமுக அதிக இடங்களைப் பிடித்து தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் வியாழக்கிழமை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிலும் வாக் காளர்கள் திரண்டு வந்து வாக் களித்திருப்பது அதிலும் குறிப் பாக, இளம்வாக்காளர்கள் ஆர்வத் தோடு வந்து தங்கள் வாக்கைப் பதிவுசெய்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருவித எதிர் பார்ப்பையும், அதேநேரத்தில் சற்று கலக்கத்தையும் உண்டாக்கி யிருக்கிறது. புதிய வாக்காளர்களின் வாக்குகள் அம்மாவுக்குதான் அதிக கலக்கத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது ` அவர்களின் வாக்குகள் பாஜக கூட்டணி ஆம் ஆத்மி திமுக போன்றவற்றிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது 

புதுக்கோட்டையில் ஜரூராய் நடந்த அதிமுக பண பட்டுவாடா- கண்டுகொள்ளாத போலீஸ்


 மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனக் கச்சிதமாக நடந்ததுள்ளது. திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் பண பட்டுவாடா நடந்ததுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்ட பணம் வாக்காளர்களிடம் முறையாக சென்றுள்ளதா என்பதை கிளை நிர்வாகிகள் ஆய்வு செய்ததும் தெரியவந்துள்ளது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததை திமுக உள்ளிட்ட இதர அரசியல் கட்சியினரும் சரி, காவல்துறையும் சரி கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

EVKS இளங்கோவன் : அதிமுக வினர் வாக்குக்கு ரூ.200 ,தேர்தல் ஆணையராக இருப்பவர் கண்டிக்கத்தக்கவர்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு
மத்திய முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எ ஸ்.இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தனது மனைவி வரலட்சுமியுடன் வியாழக்கிழமை வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’’இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியான சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிமுக வினர்  வாக்குக்கு ரூ.200 கொடுத்திருந்தாலும் கூட, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.;இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி, லேடி, டாடி மூவருக்கும் மக்கள் டாட்டா காட்டி விடுவார்கள். ஈரோடு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.200 கொடுத்திருக்கின்றனர். அதை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.;இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்களை சொன்னாலும், அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வருவதே இல்லை. புகார் செய்தவரின் எண்ணை வாங்கிக் கொண்டு, 10 நிமிடத்திற்கு பின், நாங்கள் அங்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை என சொன்னபதிலையே திரும்ப திரும்ப சொல்கின்றனர்.

தமிழக கட்சிகளை நடுங்க வைக்கும் வரலாறு காணாத 73 வீத ஒட்டு பதிவு ?

பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை 6:00 மணிக்கு முடியும் வரை, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஓட்டு போட்டனர்.
நாட்டின் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஒன்பது கட்டமாக, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஐந்து கட்டத் தேர்தல் முடிந்து விட்டது.ஆறாவது கட்டமாக நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, 12 மாநிலங்களில், 117 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

தஞ்சையில் ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்த அதிகாரி பிடிபட்டார் !

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார். 
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 8 வாக்குப்பெட்டிகளூம் சீல் வைக்கப்பட்டது.  பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பெட்டியை லாரியில் ஏற்றுவதற்காக வெளியில் காத்திருந்தனர்.
அப்போது, அந்த வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி, 8 வாக்கு பெட்டிகளையும் பிரித்து வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தார்.  ஏதேச்சையாக அந்தபக்கமாக சென்ற ஒரு வாக்குச்சாவடி முகவர்,  அதை பார்த்து, அங்கிருந்த மற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கும், திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் டி.ஆ.ர் பாலுவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து டி.ஆர்.பாலு அவரது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.   நடந்த சம்பவம் குறித்து ஆவேசமாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.  அவரை போலீசார் சமாதானம் செய்துவருகிறார்கள்.  8 வாக்கு பெட்டிகளும் திறைந்தே கிடக்கிறது.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படங்கள் : பகத்சிங்

வியாழன், 24 ஏப்ரல், 2014

பணம் + ஜெயலலிதா + பிரவீன்குமார் ? மட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமா?மே 16-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.”

தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் சற்றும் மனம் தளராமல், நேற்றும் (புதன்கிழமை) வாக்காளர்களுக்குப் ‘நேர்மையாக’ பணம் கொடுத்தனர். ‘நேர்மையாக’ என குறிப்பிடுவதன் காரணம், பணத்தை வாங்க மறுத்த மற்றும் வெளியே சென்றிருந்த வாக்காளர்களின் வீடுகளுக்குள் பணத்தை வீசிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
வேண்டாம் எனும்போதே பணத்தை வீசிச் செல்கிறார்கள் என்றால், அம்மா பிரதமரானால், நாட்டில் பாலாறும் தேனாறும் மட்டுமல்ல, கரன்சியாறும் ஓடுமே என புல்லரித்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள்.
நேற்றைய சாதனையாளராக, ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளரிடமிருந்து அதிகபட்சமாக ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டபோதிலும் அவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.


வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்!

வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!
என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் முன்பு 21.04.2014 காலை 10.00 மணியளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் சார்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம் அவர்களின் தலைமையில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது “ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உடனே முடிக்கவேண்டும் என்று லோதா தலைமையிலான அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் 3 வாரம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கிய சௌகான் – தலைமை நீதிபதி சதாசிவத்தின் நெருங்கிய நண்பர். நீதியரசர் சதாசிவத்தின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே இந்த 3 வார காலத்தடைஎன்பது “ஜெ”க்கு வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.

சென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காதசென்னை சில்க்ஸ்.. சீல் ! 3 ஐடி நிறுவனங்களில் ரெய்ட் 3500 ஊழியர்கள் வெளியேற்றம்

நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
சென்னை : தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி இன்று விடுப்பு வழங்காமல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய மூன்று தனியார் நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் லோக்சபா தேர்தல் தினமான இன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப் படும் எனவும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. தமிழக அரசும் அதனை வலியுறுத்தி இன்று பொது விடுமுறை அளித்திருந்தது. சென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காத 3 ஐடி நிறுவனங்களில் ரெய்ட், 3500 ஊழியர்கள் வெளியேற்றம் ஆனால், சோழிங்கநல்லூரில் இயக்கி வரும் சில ஐ.டி நிறுவனங்கள் இன்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்திருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 3500 ஊழியர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக ஊழியர்களை வெளியேற்றிய தேர்தல் ஆணையம், மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கும் பூட்டுப் போட்டனர். தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறியதாக ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
tamil.oneindia.in/

மதம் பிடித்தால் யானைக்கும் ! மனிதனுக்கும் ஆபத்து!


பட்டுக்கோட்டை, ஏப்.22- யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட் டுக்கு ஆபத்து; எனவே, மதவாத பி.ஜே.பி.யையும், அதற்கு நேராகவோ, மறைவாகவோ ஆதரிக்கும் சக்தி களை வரும் தேர்தலில் விரட்டியடிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பேராவூரணி, பட்டுக்கோட்டையில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது (21.4.2014).
இன்டர்நெட் இளைஞர்களே!
பதினெட்டு வயது நிரம்பி இருக்கின்ற, புதிய இன்டர் நெட் இளைஞர்களை புதிதாக வாக்களிக்கப் போகிறீர்கள் மகிழ்ச்சி. நீங்கள் வெறும் இன்டர்நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் கணினியைப் பார்க்கக் கூடிய அளவிற்கு செய்த பெருமை. திராவிடர் இயக்கத்தை சார்ந்தது. உருவாக்கிய பெருமை  தந்தை பெரியாரைச் சார்ந்தது.

தயாநிதிமாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் 'கெடு'!

டெல்லி: ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக தயாநிதிமாறன் மிரட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தயாநிதி மாறன் வழக்கு தொடர்பாக மே 1ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. tamil.oneindia.in/

அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தடை !

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723  பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு  அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பான விபரங்கள் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி  அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்  அங்கீகாரமின்றி செயல்படும் 1296 மழலையர் மற்றும் தொடக்க  பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளில் அடுத்த 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை  நடைபெறாத வகையிலும், இப்பள்ளிகளில் பயின்று வரும்  மாணவர்களை அடுத்த கல்வியாண்டில் அருகில் உள்ள அரசு  அங்கீகாரம் பெற்ற பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinakaran.com

AmWay ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்

ஈரோடு: ஈரோடு, ஆவின் இயக்குனர் வீட்டில், 51 லட்சம் ரூபாய் மற்றும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்ததாக பிடிபட்டபோது, பணம் வைத்திருந்த பெட்டிகளில், 'ஆம்வே' நிறுவனத்தின், பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. <>பல இடங்களில் பணம்:< ஏற்காடு இடைத்தேர்தல் போல, 16 பேர் கொண்ட, பூத் கமிட்டி ஏற்படுத்தி, ஏ - அ.தி.மு.க., பி - பிறகட்சிகள், சி - கட்சி சாராத பொது, எனக் கணக்கெடுத்து, அ.தி.மு.க.,வினர் பணம் வினியோகித்ததாக புகார் எழுந்தது. புகாரையடுத்து, ஈரோட்டில், ஆவின் இயக்குனர் அசோக்குமார் வீட்டில், 51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஈரோடு, பெரியசேமூரில், டூவீலரில் வைத்து வினியோகித்த, 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மாநிலம் முழுவதும், பட்டுவாடா செய்தபோது, பல இடங்களில் பணம் பிடிபட்டது. விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது ! கோயிலில் வனிதாவிடம் : பிராமண ஜாதியை சேர்ந்தவரா ?

பிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது உடுப்பி கோயிலில் பாரபட்சம்உடுப்பி: "நீ பிராமணர் இல்லையா, இங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது" என்று கூறி கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் உணவருந்தும் இடத்தில் இருந்து விரட்டி விடப்பட்ட சம்பவம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்துள்ளது. ஆலய நிர்வாகிகளுக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
800 ஆண்டுகள் பழமையான உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அதன் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகத்தால் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற மனப்பாங்கு இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு இருப்பதில்லை. பிராமணர் சாப்பிட்ட இலையின் மீது வேறு ஜாதியினர் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் உள்ள வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கையை சிலர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விதைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்கபிரதட்சண சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் எச்சில் இலை அங்கபிரதட்சணத்துக்கு கூட்டம் குறைந்துள்ளது.

புதன், 23 ஏப்ரல், 2014

பிரியாமணி பாலிசி மாற்றம் வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார் -

வில்லி வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரியாமணி.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் பிரியாமணி. இளம் ஹீரோயின்களின் வரவால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. கடந்த ஆண்டு தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் இந்தி மோகம் ஏற்பட்டது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் குத்தாட்டம் ஆட மட்டுமே வாய்ப்பு வந்தது அதை ஏற்றார். பட வாய்ப்புகள் டல்லடிக்க தொடங்கியதால் விரக்தி அடைந்தார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்று பிடிவாதமாக இருந்த பிரியாமணி திடீரென்று பாலிசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘நடிப்பில் பல விதமான பரிமாணங்களை ஏற்று பரிசோதனை செய்துபார்க்க விரும்புகிறேன். பிரபல ஹீரோவுக்கு வில்லியாகவும் நடிக்க விரும்புகிறேன்’ என்றார். - See more at: tamilmurasu.org

தனியாக இருக்கும் லேடிக்கு 900 ஏக்கர் நிலம் எதற்கு? விஜயகாந்த் சாடல் -

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து நங்கநல்லூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பகுதி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் தலைமை தாங்கினார். மதிமுக நகர செயலாளர் கத்திப்பாரா சின்னவன், பாமக நகர செயலாளர் கணபதி, பாஜ நகர செயலாளர் பாபு, கேப்டன் மன்ற மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அனகை முருகேசன் எம்எல்ஏ வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:நிர்வாக திறமையில் சிறந்தவர் இந்த லேடியா, அந்த மோடியா என அந்தம்மா கேக்கிறாங்க. மக்களாகிய நீங்கள்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

தென் சென்னை தொகுதி பிரசாரத்தில் அக்ரஹார மாமிகள் அணிவகுப்பு ! பிஜெப்பியாய நமஹ !

பா.ஜ.க மகளிர் அணி`பா.ஜ.க மகளிர் அணி  சார்பில் தென் சென்னை தொகுதி வேட்பாளரான இல.கணேசனுக்கு ஆதரவு திரட்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல் ஆர் ஈசுவரியின் மகமாயி பாடல்களில், பாஜக கோமகன்களது பேர்களை தூவி விட்டு நாராசரமாக தாக்கி வந்தனர். இதாவது பரவாயில்லை, அடுத்த பாட்டு ரஜினியின் “பொதுவாக எம் மனசு தங்கம்” எனும் பாடலை “பொதுவாக கணேசன்தான் தங்கம், போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்” என்று ரகளையாக போட்டு பட்டையைக் கிளப்பினர். யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை (இல கணேசனுக்கு பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க மகளிர் அணியினர், நின்றவாறு முழங்கும் மாமிதான் லலிதா சுபாஷ்) பாரத மாதாவின் புத்திரர்கள் இப்படி ஒரு சேர குத்தாட்டத்தையும், மகமாயி பாடலையும் இணைத்து பின் நவீனத்துவத்தின் கலை நோக்கை ஏற்றுக் கொண்டிருந்ததை பார்த்தால் அறிஞர் அ.மார்க்ஸ் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார். கணேசன் எனும் முதியவர் இப்படி சிங்கம், தங்கம் என்று தனது பாடலை சுட்டிருப்பது மோடியின் ரசிகரான ரஜினிக்கு ஆனந்தமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தற்கொலையே செய்திருப்பார்கள்.

மோடி, குஜராத், வளர்ச்சி:? உண்மையில் பயம்தான் சார் குஜராத்தை ஆட்சி செய்கிறது ! Thugraath ?

இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம்
கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத். >வரலாற்றில் வித்தியாசமான தேர்தல் இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

மோடிக்கு ஆதரவாக பகிரங்கமாக ஜூனியர் விகடனின் தேர்தல் கணிப்பு ! Best Pimp of the Season ?

ஜூனியர் விகடன்ண்ணாசாலையில் அலுவலகத்தை கொண்டிருந்தாலும், விகடன் குழுமத்தின் ஆன்மா கமலாலயத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆன்ம மாற்றத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை நாம் அறியோம். அதனால் என்ன, ஒரு மாதத்தில் அவை தானே வெளியே வரும்.
தமிழகத்தில் பா.ஜ.க-வின் அதிகார பூர்வ ஏடுகளின் நம்பர் ஒன்னான ஜூனியர் விகடனின் 27.4.14 தேதியிட்ட “தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்” வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்றே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தாக வேண்டும். சட்டத்திறகு கீழ்ப்படிந்தாலும் தாமரை மலர மானம் கெட்டு தண்ணீர் ஊற்றும் வேலையையும் விட்டு விட முடியாது. இதனாலேயே செவ்வாய்க்கிழமை அன்றே விகடன் குழுமத்தினர் பா.ஜ.க-வுக்கான தமது இறுதி பிரச்சார அறிக்கையை வாசகர்களின் கைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்; கூடவே மோடிக்கான பிரச்சாரத்தை மனதில் ஊறப் போட்டு நல்ல முறையில் வாக்கு போட வாசகர்களுக்கு அவகாசம் கொடுக்கிறார்களாம்.

ADMK யினரின் பணம் பட்டுவாடாவுக்காக 144 தடை உத்தரவு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ஆளும் கட்சியினரின் பணம் பட்டுவாடாவுக்காக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:  தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்துள்ள 144 தடை உத்தரவு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கிரானைட் பளபளக்க தேர்தல் நன்கொடையாக ரூ1700 கோடி வாரியிறைத்த அதிபர்?

பின்னே பளா பளா  என்றிருந்தவர் வெறும் ஆண்டியாகி பழனிக்கு  சாமி ஆக முடியுமா என்ன ?
மதுரை: முடங்கிப் போன தமது "கிரானைட்' தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ரூ1700 கோடியை அந்த தொழிலதிபர் வாரி இறைத்துவிட்டு 'முடிவு'க்காக காத்திருக்கிறாராம். தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாத காலமாக பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. தேர்தல் களத்தில் இறங்கிய பலரும் எப்படியும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடுவது என்ற கனவில் பல கோடி ரூபாயை தண்ணீராக செலவு செய்துவிட்டு போட்ட முதலீட்டை எடுக்கவும் லாப கணக்கு பார்க்கவும் இலவு காத்த கிளியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இத்தேர்தல் மூலமாவது தமக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று பல்லாயிரம் கோடி ரூபாய் முடங்கிப் போன விரக்தியில் இருந்த கிரானைட் பிசினெஸ் தொழில் அதிபரும் ஏக்கத்துடன் இருந்திருக்கிறார். தமது வாட்டத்தைப் போக்கிக் கொள்ள தொடாத தொடர்புகளும் இல்லை.. ஏறாத படிக்கட்டுகளும் இல்லை.. எதுவுமே சரிவரலையே என்று கைபிசைந்து கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், நீங்க ரெடின்னா..நாங்களும் ரெடின்னு என கூறி சில உயர்மட்ட சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். அந்த தொழிலதிபரும் ஆஹா வழி பிறந்துவிட்டதே என்று நம்பி இதுவரை இந்த தேர்தலில் சுமார் ரூ1700 கோடியை அந்த கட்சிக்காக செலவழித்துள்ளாராம். அதாவது அந்த கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ500 கோடியையும் மீதி 1200 கோடியை 40 தொகுதிகளுக்கும் தலா ரூ 30 கோடி வீதமும் அவர் பட்டுவாடா செய்துள்ளாராம். இதுவரை எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது.. எப்படியும் தேர்தலுக்குப் பின்னர் கிரானைட் பழையபடி பளபளத்துவிடும் என்ற பேராசையுடன் காத்திருக்கிறாராம்
tamil.oneindia.in/

விமானத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை

பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். /> இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com/

தேமுதிக The End ! கருத்து கணிப்புகளின் 'திடமான' ஆரூடம்!!

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் ஆறுதலாக இருக்கிறது.. ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் எல்லா கருத்து கணிப்புகளுமே "சங்கு ஊதி" அதன் கதை முடியப் போவதை கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப்பணிகள் தொடங்கிய நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் பார்வையுமே தேமுதிக பக்கமே இருந்தது. இதனால் தேமுதிகவும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் காட்டிய பந்தாவுக்கு அளவே இல்லை.. தமிழகம் என்ன இந்தியாவே அதிர்ந்து போகும் வகையில் எல்லா கட்சிகளுக்கும் போக்கு காட்டியது. உச்சமாக திமுக, பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளுடனும் சம நேரத்தில் சீட்டு, நோட்டு என சகலவித பேரங்களையும் சளைக்காமல் நடத்தி சண்டியர்தனம் செய்து கொண்டிருந்தது தேமுதிக. லோக்சபா தேர்தலில் தேமுதிகவை விட்டால் நாதியே இல்லை என்ற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க அந்த கட்சியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அதிமுகவினர் பணப் பட்டுவாடா ! திமுகவின் வழக்கை முடித்து வைத்த ??????. ஹைகோர்ட் !

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் தஞ்சை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அவசர மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவதாக குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்தார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்ரேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது அப்போது, தேர்தல் முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்
tamil.oneindia.in

தமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா திமுக, தேமுதிக, பாமக, பாஜ புகார் பறக்கும் படை செல்போன்கள் ‘டெட்’

சென்னை: மாநிலம் முழுவதும் ஆளும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 என அதிமுகவினர் வினியோகம் செய்து  வருகின்றனர். இது குறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பறக் கும் படை அதிகாரிகளின்  செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது. தேர்தலுக்கு நாளை ஒரு நாள்தான் உள்ளது. நாளை  மறுநாள் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பணம் வினியோகம் செய்து வருகின்றனர்.  இதுகுறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசாரும் தேர்தல்  ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெயலலிதா அமைச்சர்களிடம் : “40-க்கு-30 கிடைக்காவிட்டால், தொலைந்தீர்கள்”


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அனல் பறக்கும் கோடை கால வெயிலில் தலைவர்களின் பிரசாரத்திலும் அனல் தெறித்தது. இதுவரை தமிழகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான தேர்தல் பிரசாரமாக இருந்தது.
அதற்கு காரணம், தமிழக தேர்தல் வரலாற்றில் 5-க்கும் மேற்பட்ட அணிகள் களம் காணுவது இந்தத் தேர்தல் மட்டுமே என்பதால்தான்!
தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகள் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. ஆனால், வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நாளான ஏப்ரல் முதல் வாரம் வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

தன்பாலின உறவு வழக்கு: வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

குஷ்பு: வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை!

டி.பி.சத்திரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு பேசினார். மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகை குஷ்பு டி.பி.சத்திரம் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்,  ‘’தயாநிதி மாறன் சாதனையால் இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த புரட்சியை ஏற்படுத்தியவர். பல சாதனைகளை செய்ததால்தான் 2 தடவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மூன்றாவது தடவையாக சாதனைகள் செய்ய உங்கள் முன் நிற்கின்றார். அ.தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மின்சார தடை அதிகமாக உள்ளது. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் வரை மின் தடை இருக்கிறது. ஆட்சிக்கு வரும்போது மின் தடையை நீக்குவோம் என்று சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வாழ்க்கையே இருண்டு கிடக்கிறது. தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் இலவச குடிநீர் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்.

ஸ்டாலின்: மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்!'

அரசுத் துறைகளில் சிறந்த நிர்வாகத்தை அளித்தவர் மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்,” என, கருணாநிதியை மேற்கோள்காட்டி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
திருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, புதுக்கோட்டையில் நடந்த, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் கஷ்டங்கள் எங்கு பார்த்தாலும், தண்ணீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு, மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை.நேற்று முன்தினம், சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, 'அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழகத்தில் இந்த லேடி தான்' என, சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, தன்னைத் தானே பெருமைபடுத்தியுள்ளார்

கலைஞர்: தேர்தல் கமிஷனே மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.!

தேர்தல் கமிஷன், ஒரு தலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது,'' என, தி.மு.க., தலைவர் கலைஞர்  கருணாநிதி பேசினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதனால் தான், தமிழகத்தில் முதன் முறையாக, '144' தடை உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. ஆளும் கட்சியினரால் எங்கள் கட்சியினரும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதையெல்லாம், தேர்தல் கமிஷன் கவனிக்க மறந்து விட்டது. தேர்தல் கமிஷன் தன் பொறுப்பை தட்டி கழித்து செயல்படுகிறது. இதன் பாதிப்பு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை,நாம், ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தையும் பார்த்து விட்டோம். தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தேர்தல் கமிஷனே, ஆளும் கட்சியினருக்கு மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ஆ.ராசா: நான் செய்தது புரட்சியே; அந்தப் புரட்சியை மீண்டும் செய்வேன்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் கடைசி நாள் பிரசாரமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில்  திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியபோது,‘’கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அந்நியனாக போட்டியிட்டு தற்போது உங்களில் ஒருவனாக மாறியுள்ளேன். பல்வேறு தடைகளையும், வழக்குகளையும் தாண்டி மீண்டும் நீலகிரி மக்களைச் சந்திக்கிறேன். ஒரு மக்களவைத் தொகுதியில் இரு இடங்களில் அலுவலகங் களைத் தொடங்கியுள்ள ஒரே மக்களவை உறுப்பினராகிய எனக்கு நீலகிரி மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. 34 இடங்களில் சி.பி.ஐ. சோதனையிட்டும் எதுவும் சிக்கவில்லை. ராசாவிடம் எந்த சொத்துமில்லையென சி.பி.ஐ.யும் தெரிவித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த நட்டமும் இல்லையென நிதித் துறை அமைச்சகமும் கூறிவிட்டது. அதனால், நான் செய்தது புரட்சியே.< அதை குற்றம் என மற்றவர்கள் சொன்னால் ஏற்க முடியாது. அந்தப் புரட்சியை மீண்டும் செய்வேன். நீலகிரி மாவட்டத்தில் மின்வெட்டே இல்லாததற்கு கருணாநிதி வெளியிட்ட ஆணையே காரணம். ஆனால், தமிழகத்தில் தற்போது 12 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் துறையும் பாதிக்கப் பட்டுள்ளது. உலகிலேயே குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரே அரசு, தமிழக அரசு தான்’’ என்றார்.

சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மா னிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ்கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரியவாய்ப்பு ஆகும். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின்ஆட்சிகளில் தமிழகம் பெற் றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா... அல்லது இந்த லேடியா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சி யையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப்பார்க்கும் போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.nakkheeran.in

பாஜகவிடம் இருந்து எஸ்கேப் ஆனா நயன்தாரா ! கோடிகள் வேண்டாம் கொடியும் வேண்டாம்

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம். அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை பிரச்சாரத்திற்கு அழைக்கிறது. 10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.
tamil.oneindia.in 

நக்கீரன் : திமுகவுக்கு 22 - அதிமுகவுக்கு 14 பாஜக-1, பாமக-1, தேமுதிக, மதிமுகவுக்கு 'முட்டை'

சென்னை: 40 தொகுதிகளுக்குமான நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 இடங்களை திமுக வெல்லும் என்றும், அதிமுகவுக்கு 14 இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் கிடைக்கிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் வெல்லுமாம். தென் சென்னையில் இழுபறி நிலவுகிறது. தேமுதிக, மதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம். முதல் கட்டமாக கடந்த 18-4-2014 வெள்ளியன்று வெளியான நக்கீரன் இதழில் 15 தொகுதிகளுக்கான சர்வே முடிவுகள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள 25 தொகுதிகளுக்கான முடிவுகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.
தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி. அவருக்கு தொகுதியில் 175 பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக வேட்பாளருக்கு 173 வாக்குகள் கிடைத்தன. மதிமுகவின் ஜோயல் 129 வாக்குகளுன்3வது நிலையில் இருக்கிறார். காங்கிரஸுக்கு 4வது இடமும், ஆம் ஆத்மிக்கு 6வது இடமும் கிடைக்கின்றன. நக்கீரன் கருத்துகணிப்பு இப்படி ஜூவியின் கருத்து கணிப்பு ஜெயாவுக்கும் பாஜாகவுக்கும் பெரிய வெற்றி என்று சொல்கிறது 

ரேஷன் கடைகளில் பண வினியோகம்?

லோக்சபா தேர்தலை ஒட்டி, வீடுகளில், பணம்
வினியோகம் செய்வதில்
சிக்கல் உள்ளதால், ரேஷன் கடைகள் மூலம், பணம் வினியோகிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தமிழகத்தில், 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்ற மற்ற உணவு பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.வரும் 24ம் தேதி, தமிழகத்தில், ஒரே கட்டமாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில், ஐந்து முனை போட்டி நிலவுவதால், வீடுகளில், பணம் வினியோகம் செய்யும் போது, யாரேனும் ஒருவர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கின்றனர். எப்படியாவது பொது மக்களுக்கு பணம் கிடைத்தால் ஒரு நாளாவது சந்தோசமாக செலவு செய்யலாம்.

ஆ.ராசா நள்ளிரவில் தர்ணா ! அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? மேட்டுப்பாளையத்தில் பதட்டம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி ரகளையில் ஈடுபட்டு வரும் தொகுதியாக மாறியிருக்கிறது ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதி. இதன் உச்சகட்டமாக திங்கட்கிழமை நடுஇரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ராசாவே களத்தில் இறங்கி ரகளை மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மக்களவைக்குள் வருவது மேட்டுப்பாளையம் பகுதி. இந்த நகரப்பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் 112 ஆம் எண் அறையை திங்கட்கிழமை 9 மணிக்கு எடுத்து தங்கியுள்ளார் நீலகிரி அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளரும், மேலவை எம்.பியுமான ஏ.கே.செல்வராஜ். அதையடுத்து தி.மு.கவின் மேட்டுப்பாளையம் தி.மு.க நகரச்செயலாளர் அமீது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 11 மணி வாக்கில் 112ம் அறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்படிருக்கிறது. அதை சோதனையிட வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அறையில் இருந்த ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை; வேண்டுமானால் சோதனையிட்டுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் வர, அந்த 1 மணி நேர இடைவெளியில் தி.மு.கவினர், அ.தி.மு.க வினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து விட இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

கலைஞர் : தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா?

தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கலைஞர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? என்பது தெரியவில்லை என்றார்.
மேலும், இந்தியாவில் நல்லாட்சி அமைய வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தான் சிறந்தவரா என்பதை, ஜெயலலிதா கண்ணாடி முன்பு நின்று கேள்வி கேட்டு பதில் அளிக்கட்டும் என்றும் கலைஞர் கருணாநிதி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
குஜராத் முதல்வர் மோடியை விட தானே சிறந்தவர் என்று நேற்றைய பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததற்கு கலைஞர்  இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். dinamani.com

அதிமுக பிரச்சாரத்துக்கு சென்ற அரசு பஸ் டிரைவர்கள்- மக்கள் தவிப்பு !

சென்னை: அதிமுக செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்க ஊழியர்கள் அனைவரும் சென்றதால் சென்னை முழுவதும் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3657 பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்னை முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கப்பா அந்த பிர வீண் குமாரு? 

ஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம் ! சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது

பூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 
இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க அனுமதி வழங்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து, மாவட்டந்தோறும் பயணம் சென்று,  அங்குள்ள, மதுவால் சீரழிந்த குடும்பத்தில் உள்ள பெண்களை சந்தித்து, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். நோட்டோவுக்கு ஓட்டு போட்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்  என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
சென்னை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.  பல்வேறு மாவட்ட பெண்களில் குமுறல் களைக்கொண்டு,  அவர்களின் சார்பாக முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று மண்ணை வாரி இறைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.  நாளை (22.4.2014) இந்த போராட்டத்தை நடத்தப்போவதாகவும், சென்னை மெரினா கடற்கரையில் துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார் நந்தினி.  அவருடன் தந்தையும் உடனீருந்தார்.
துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த நந்தினியை போலீசார் கைது செய்தனர்.  அவரது தந்தை யையும் கைது செய்தது போலீஸ். nakkheeran.in

திங்கள், 21 ஏப்ரல், 2014

தொடரும் நீதித்துறை நாடகங்கள்? வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்

வாய்தா ராணி

குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’’. இது கடந்த மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.
வாய்தா ராணியால் மிரட்டி விரட்டப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.
தன் மீதான வழக்கை நடத்தவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக நீதித்துறையில் ‘புரட்சி” செய்து வரும் ஜெயலலிதா அம்மையாருக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தாது போலும்! இப்படி உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதிலும், நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வர் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து அம்மாவுக்கு ஆறுதல் அளித்துள்ளார்கள்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் அம்மா வாய்தா ராணி என்றால், அவருக்கு கேட்டபடியெல்லாம் வாய்தா வழங்கிய நீதியரசர்களை வாய்தா ராஜாக்கள் என்று அழைப்பதுதானே பொருத்தம்? ஒரு கிரிமினல் வழக்கை நடத்த விடாமல் சட்டப்படியே அதனை முடக்குவது எப்படி என அம்மா ஒரு புத்தகம் எழுதினால், அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் தகுதி பெற்றவர்கள் இந்த நீதியரசர்கள்தான்.  

ராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் வாக்குமூலம் ! முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம்


புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தி.முக.,வைச் சேர்ந்த ராஜா, கனிமொழியிடம், அடுத்த மாதம், 5ல், வாக்குமூலம் பெறப்படும்' என, டில்லி, சி.பி.ஐ., கோர்ட் தெரிவித்துள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க,, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தொழில் அதிபர்கள், மத்திய அரசு துறை அதிகாரிகள் உட்பட, 16 பேரை கைது செய்தது.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், ஜாமின் பெற்று, வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை, நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 824 பக்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள, 1,718 கேள்விகளை படித்து பார்த்து, கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது ? பெரிய எண்ணிக்கையில் சிறிய தெருமுனைக் கூட்டங்கள்.


 திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள். 

பாஜகவிடம் ஏமாந்த ஜெயலலிதா குஜராத் / BJP மீது கடும் கோபம் !

குஜராத்தின்-மோடியா-தமிழகத்தின்-லேடியா-ஜெயலலிதா-பேச்சு  சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம். குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என்றார்.
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் து.ஜெயவர்தனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று கந்தன்சாவடியில் பிரச்சாரம் செய்தபோது பேசியது:
"மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த தி.மு.க-வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நீங்கள் அனைவரும் இன்று இங்கே கூடி இருப்பதைப் பார்க்கும் போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மோடியை நினைக்கும் போதெல்லாம் அன்று நெஞ்சம் இனித்தது அதிபுத்திசாலி அம்மாவின் மடியில் இருந்த மேல்தட்டு வாக்குவங்கியை குறிவைத்துதான் அன்றே நயவஞ்சமாக பாஜக உறவாடியது ,இது புரியும் சக்தி ஜெயாவுக்கு இல்லை ! தூக்கி மடியில் வைத்து விட்டு இப்போ குத்துது குடையுது என்றால் எப்படி ? பாஜகவிடம் களவு போய்கொண்டிருக்கும் வாக்குகளை தடுக்க தலையால் தவம் 

விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி

>நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த அவர் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் ‘நரேந்திரமோடி அவர் நினைப்பது போலவே வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார். இந்த நிலையில் கோவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த நரேந்திரமோடியை ‘இளைய தளபதி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் வந்து சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னைக்கு நரேந்திரமோடி வந்தபோது என்னை சந்திக்க விரும் பினார். அப்போது நான் ஆந்திராவில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே கோவைக்கு வந்த அவரை சந்தித்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம் மற்றபடி எதுவும் இல்லை என்றார்.

மீண்டும் சிறுமி பஸ்சிற்குள் வைத்து5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்: ரோட்டோரம் தூக்கி வீசபட்டார்

மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-
தலித் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். சித்திக் பகுதிக்கு செல்லும் பஸ்சில் செல்பவர்கள் அவருக்கு லிப்ட் கொடுக்க முன்வந்தார்கள். அந்த பஸ் உள்ளூரை சேர்ந்த ஒரு வியாபார பிரமுகரின் திருமண வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். பஸ்சில் இருந்த 5 பேரும் சிறுது நேரத்தில் சிறுமியை பலவந்தபடுத்தி உள்ளனர்.  

கலைஞர் : டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதை அழகிரி சொல்லட்டும்.


வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 21.04.2014 திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேள்வி :- தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில் உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
கலைஞர் :- நன்றாக இருக்கிறது.
கேள்வி :- ஜெயலலிதா நேற்றைய தினம் சென்னையில் பேசும்போது, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தன்னலத் திட்டங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- சொத்துக் குவிப்பு வழக்கு எங்கள் மீது நடக்கவில்லை. அவர் மீது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி முதல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக் குவிப்பு வழக்கு அந்த அம்மையார் மீது தான் நடக்கிறது.
கேள்வி :- ஜெயலலிதா நேற்று பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், தங்க நாற்கரை சாலைத் திட்டம் போன்றவற்றில் டி.ஆர். பாலுவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி மு.க. அழகிரி சாட்டிய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருக்கிறாரே?
கலைஞர் :- யார் குற்றம் சாட்டினார்கள் என்பதல்ல; திட்டவட்டமாக டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதைச் சொல்லட்டும். 

இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்?

சங்கர் ராஜாவையடுத்து இஸ்லாம் மதத்துக்கு நடிகர் ஜெய் மாறியதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இந்நிலையில் ‘ராஜா ராணி‘, ‘எங்கேயும் எப்போதும்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவரது நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது,‘கடந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தார். அப்போது முதல் இஸ்லாம் மத கோட்பாடுகளை கடைபிடிக்கிறார். ஒவ்வொரு வெள்ளியும் தர்கா செல்கிறார். இதற்கு காரணம் தெரியவில்லை. வேறென்ன பலதார திருமண குற்றத்தில் இருந்து விடுபட இதை தவிர வேறென்ன வழி ?

இந்திய ஜனநாயகத்தைப் பற்றியும் தேர்தல்களைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்? பினாயக் சென் பேட்டி

இந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை.
சத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம்.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.

திருவனந்தபுரம் கோயில் தங்கம் லாரி மணலோடு தஞ்சாவூர் வந்ததா?: 577 பக்க அறிக்கை


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது உள்பட பல தகவல்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 577 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் புராதனமானது. கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டி.பி.சுந்தரராஜன், கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம் : திமுகவின் திட்டங்களை முடக்கி இருக்கிறோம் ! இது தாண்டா ஜெயலலிதா !

திமுகவின் தன்னலத் திட்டங்களைத்தான் முடக்கி இருக்கிறோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.நீங்கள் முடக்கிய சமசீர் கல்வியை நீதிமன்றம் விடுவித்ததே ? வாய்தா ராணி அவர்களே அந்த நீதிமன்றத்தையும் முடக்கி இருப்பீர்களா ? மதுரவாயில் பறக்கும் சாலை ? அண்ணா நூலகம் ? செம்மொழி பூங்கா ? சேது சமுத்திர கால்வாய் ?
திமுகவின் திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவிட்டதாக கருணாநிதி
கூறிய புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் இதை அவர் தெரிவித்தார்.
வட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து ஆர்.கே.நகர்-மணலி சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:
முடக்கத்துக்குக் காரணம் என்ன? ""திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி உள்பட அந்தக் கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு முடக்கவில்லை.
உதாரணமாக, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் திட்டம் திமுகவால் கொண்டு வரப்பட்டது. அதனை முடக்கி வைத்தோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டம். திமுக தலைமைக்கு கமிஷன் பெற்றுத் தரும் திட்டம். ஒரு மனநோயாளியின் கையில் தமிழகம் இது தாண்டா ஜெயலலிதா !

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

அரசனாகவும் தெனாலிராமனாகவும் அகட விகட வடிவேலுஅடித்து நொறுக்கி இருக்கிறார் / நடித்திருக்கிறார்.

வடிவேலுவின் மறுபிரவேசமாக அமைந்திருக்கும் தெனாலி ராமனில் புதிய இயக்குநர் யுவராஜ் தயாளன் பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹாஸ்யம் கலந்த அறிவு சாகசம் என்பதை வைத்து வடிவேலுவின் பாத்திரத்தை வடிவமைத்துள்ள அவர் அதற்குத் தோதான தெனாலிராமன் பாத்திரத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்.
வெகுளித்தனம் கொண்ட ஒரு அரசன். அந்த வெகுளித்தனத்தைச் சாதகமாக்கி நாட்டைச் சீரழிக்கும் நயவஞ்சக அமைச்சர்கள். இவர்களுக்கு இடையில் இன்னொரு அமைச்சராக வரும் தெனாலிராமன் தன் சமயோசித புத்தியால் நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்கிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் படம்தான் ‘தெனாலிராமன்’. அரசனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு நடித்திருக்கிறார்.
அரசனின் ஒன்பது அமைச்சர்களில் எட்டுப் பேர் சீன அரசின் கைக்கூலிகள். கையூட்டு பெற்றுக்கொண்டு நாட்டைச் சீன வியாபாரத்துக்குத் திறந்துவிட ஒப்புக்கொள்கிறார்கள். அமைச்சர்களில் ஒருவர் மட்டும் நாட்டின் நலன் கருதி இதை எதிர்க்கிறார். அவரைச் சீன ஆட்கள் கொன்றுவிட, அந்த இடத்திற்கு வருகிறான் அகட விகட தெனாலிராமன்.

மோடி வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.குதுபுதீன் பேட்டி

  • உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி 28, 29 ஆகிய இரு நாட்களும் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், மார்ச் 1-ம் தேதி அகமதாபாதில் ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப்.