சனி, 13 ஜூலை, 2019

நடிகர் சூர்யா பேச்சு : மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வு, பள்ளிகள் மூடல் - புதிய கல்விக் கொள்கை


kalaignarseithigal.com ; சென்னையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்தார்.
விழாவில் பேசிய சூர்யா, “ புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை தவறானது. பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர்.
ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

மகளை கொலை செய்ய பாஜக எம்.எல்.ஏ திட்டம் மகள் வெளியிட்ட .. வீடியோ


மாலைமலர் : தலித்  இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ் மிஸ்ரா. இவரது மகள் சாஷி மிஸ்ரா. 23 வயதான இவர் தனது தந்தை மற்றும் சகோதரர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சாஷி மிஸ்ரா வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது வீடியோவில் ”மரியாதைக்குரிய எம்.எல்.ஏஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். நான் திருமணம் செய்து கொண்டேன். ஃபேஷனுக்கான குங்குமம் வைக்கவில்லை” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் இதனிடையே கடந்த வியாழக்கிழமை சாக்‌ஷி மித்ரா, அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ”தனது தந்தை தங்களை தாக்க குண்டர்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

போபால் பாஜக தலைவர் இளைஞரோடு பாலியல் சீண்டல் ? வைரல் ..

Veerakumar amil.oneindia.com :  போபால்: 25 வயது இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பாஜக தலைவர் ஒருவர் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையின் பாஜக டிவிஷனல் செயலாளராக பதவி வகித்தவர் 55 வயதாகும், பிரதீப் ஜோஷி. ஆளுக்கு வயதாகியுள்ளதே தவிர, விவஸ்தை இல்லை என்று தெரிகிறது. 25 வயதாகும் ஒரு இளைஞரிடம் ஓரினச்சேர்க்கை உறவுக்கு முயன்றுள்ளார் இந்த பிரதீப் ஜோஷி. 
ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி இளைஞருக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். 
இதுதொடர்பான சாட்டிங் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது பாஜக. 
ஆனால், இதை சும்மாவிடுவதாக இல்லை காங்கிரஸ். மத்திய பிரதேச காங்கிரஸ் செயலாளர் ராகேஷ் சிங் யாதவ் "பாலியல் சுரண்டல்" என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். 

ஸ்டாலின் : மத்திய அரசு பணிகளில் தென்மாநிலத்தவர்கள் சேரக்கூடாது என திட்டமிட்டு செய்துள்ளது தபால்துறை

தினகரன் : சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கணடனம் தெரிவித்துள்ளார்.
தபால்துறை போட்டித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது. நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுகுறித்து அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபால்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளின் வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படும். மாநில மொழிகள் இடம்பெறாது. எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இனி தேர்வு எழுத வேண்டும். இது முதல் தாளுக்கு மட்டுமே பொருந்தும்.அதே சமயம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் வழங்கப்படும். இரண்டாம் தாளை மாநில மொழிகளில் தேர்வர்கள் பதிலளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ராகுல் காந்தி : பண பலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை பாஜ கவிழ்க்கிறது.. : வீடியோ


தினகரன் : அகமதாபாத்: ‘‘மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜ பண பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை நிலவரம்,’’ என  காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.கடந்த 2016ம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது, ரூ.750 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை குஜராத் மாநிலம், அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் அஜய் படேல் உதவியுடன் பாஜ.வினர் மாற்றியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது அஜய் படேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் ஆஜராவதற்காக அகமதாபாத் வந்த ராகுல், தான் நிரபராதி என்று நீதிபதியிடம் குறிப்பிட்டார். பின்னர், இந்த வழக்கில் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஏ.சி.சண்முகம் : நான் தோற்றால் அதிமுகவே இருக்காது: கடும் ஆத்திரத்தில் வேலூர் .....

 வெப்துனியா :  வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவிட்ட நிலையில் மீண்டும். அதிமுக கூட்டணியின் சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். வேலூரில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என இரண்டு தரப்பினர்களும் பணத்தை தண்ணீராக செலவு செய்ய முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென முதல்வர் தரப்பும், துரைமுருகன் தரப்பும் நெருக்கம் காட்டி வருவதாக ஏ.சி.சண்முகத்திற்கு ரகசிய தகவல் வெளிவந்துள்ளதாம். இதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அதிமுக அரசை துரைமுருகன் கடுமையாக விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது .மக்களவை தேர்தலின்போது அதிமுக தலைமை குறிப்பிட்ட மூன்று தொகுதிகளுக்கு ஏ.சி சண்முகம் கணிசமாக செலவு செய்தாராம். ஆனால் தற்போது தன்னுடைய வெற்றிக்காக அதிமுக ஒன்றுமே செய்யவில்லை என்று ஏ.சி.சண்முகம் தரப்பினர் அதிருப்தியில் உள்ளார்களாம். ;ஏ.சி.சண்முகம் தனது ஆதரவாளர்களிடம், 'நான் தோற்றால், வேலூரில் அ.தி.மு.க-வே இருக்காது’ என்று கொந்தளித்து வருவதாகவும்
கூறப்படுகிறது</

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்மின்னம்பலம் : அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும் தேனியில் மிகப்பெரிய விழா எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கவுள்ளேன் எனவும் கூறியிருந்தார். அறிவாலயத்திலிருந்து வெளியில் வரும்போது தனது காரில் திமுக கொடியைப் பறக்கவிட்டார்.
தங்கம் திமுகவில் இணைந்து இரண்டு வாரம் காலம் கடந்துவிட்டது. அமமுக நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டுவந்து தேனியில் இணைப்புக் கூட்டம் நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று விசாரணையில் இறங்கினோம்.

கேரள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவருக்கு கத்திக்குத்து.. இந்திய மாணவர்கள் கூட்டமைபுக்கும்


கேரள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவருக்கு கத்திக்குத்து; எதிர்க்கட்சிகள் கண்டனம்தினத்தந்தி : கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் கேரள பல்கலைக்கழகம் உள்ளது.  இங்கு பி.ஏ. அரசியல் அறிவியல் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் சந்திரன்.  இவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டார்.
இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) உறுப்பினர்களுக்கும் மற்றும் பிற மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.  அகில் எஸ்.எப்.ஐ. அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார்.  இதனை அடுத்து அகில் உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இந்த சம்பவத்தில் வேறு 3 மாணவர்களும் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் ஒன்றாக திரண்டு கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், கே.எஸ்.யூ., எம்.எஸ்.எப்., ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.< இதன்பின் அடையாளம் தெரியாத 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  16 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொல்..திருமாவளவன் : ரெயில்வே பணியில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வீடியோ


தினத்தந்தி : மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு. ரெயில்வே பணி நியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
 புதுடெல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசிய போது கூறியதாவது:- ரெயில்வே பணிநியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 80 சதவீத பணியிடம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
திருச்சி பொன்மலையில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வட இந்தியாவை சேர்ந்த 1,600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 165 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெள்ளி, 12 ஜூலை, 2019

குமாரசாமியின் அதிரடி அறிவிப்பு.. பயந்து போய் ரிசார்ட்டுக்கு ஓடும் பாஜக எம்எல்ஏக்கள்.. செம திருப்பம்

Veerakumar /tamil.oneindia.com : பெங்களூர்: கர்நாடக அரசியலில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்தனை நாட்களாக பாஜகவுக்கு பயந்து, ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாத்து வந்த நிலை மாறி, இப்போது பாஜக எம்எல்ஏக்கள் பாதுகாக்கும் நிலை வந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் திடீரென 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள் என  மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்து விட்டனர்.
 பாஜகதான் இதன் பின்னணியில் இருப்பதாக ஆளும் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில்தான், அவர்கள் ரிசார்ட்டில் இருந்து பெங்களூர் அழைத்து வரப்பட்டனர். ஆனால், இன்று திடீரென பாஜகவின் 105 எம்எல்ஏக்களும் பெங்களூரின் புறநகர் பகுதியான ராஜனகுண்டே, என்ற பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு எழுதவேண்டும் .. மத்திய அரசின் இந்திவெறி

தினகரன் : இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட தயாநிதி மாறன் கோரிக்கை. புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சலக பணியிடங்களுக்கான தேர்வினை எழுத வேண்டும் என்றும், மாநில மொழிகளில் இனி தேர்வு நடைபெறாது என்கிற மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

லாலு யாதவுக்கு ஜாமீன் .. கால்நடை தீவன வழக்கில் .. ஆனாலும் சிறையில் தான் இருக்க வேண்டும்


zeenews.india.com :ராஞ்சி: தீவன ஊழல் வழக்கில், தண்டனை பெற்ற முன்னால் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவருமான லாலு யாதவுக்கு மிகுந்த நிம்மதி கிடைத்துள்ளது. கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தேவ்கர் கருவூல வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும், அவர் சிறையில் தான் இருக்க வேண்டும்.
லாலு யாதவ் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு யாதவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. லாலு யாதவுக்கு ரூ.50,000 மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பத்திரங்களில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தனியரசு MLA : தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படவேண்டும்

சென்னை: தமிழகத்தில்
நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தனியரசு எம்எல்ஏ பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

புதுசேரி மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது ..கிரண் பேடிக்கு உச்சநீதிமன்ற அடி


puducherry government related case supreme judgement cm narayanasamy speechnakkheeran.in - sundarapandiyan : புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்புக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
> இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி.  ஜனநாயகம் வென்றுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என்றார். இதனிடையே தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!

மின்னம்பலம : டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின்  மீண்டும்  முயற்சி!மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
"தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்குப்பின் வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளில் இரு கழகத்தினரும் தீவிரமாகி விடுவார்கள்.
சட்டமன்றத்தில் திமுகவும் அதிமுகவும் இயல்புக்கு மாறான நெருக்கத்தோடும் கலகலப்போடும் பழகுவது பற்றி விமர்சனங்களும் திமுக தரப்பிலேயே எழுந்தன.
ஒருபக்கம் இப்படி சட்டமன்றத்தில் அதிமுகவோடு அனுசரணையாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே... இன்னொரு பக்கம் இந்த ஆட்சி மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்க திமுக முழுவீச்சில் இறங்கி விட்டதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திமுக எதிர்பார்த்திருந்த நிலையில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மயிரிழையில் தக்கவைத்துக்கொண்டது அதிமுக.

கடத்தப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகர் சத்தீஸ்கரில் பிணமாக மீட்பு

கடத்தப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகர் சத்தீஸ்கரில் பிணமாக மீட்புமாலைமலர் ; மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகரான சீனிவாசா ராவ் சத்தீஸ்கரில் இன்று பிணமாக மீட்கப்பட்டார். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள கோத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (45). இவர்  தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர். கடந்த 4 தினங்களுக்கு முன் இவர் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள எர்ரம்பட்டி பகுதியில் சீனிவாச ராவ் இன்று பிணமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அவரது உடலில் குண்டுகள் பாய்ந்திருந்தது. அவரது உடல் அருகே இருசக்கர வாகனமும் கிடந்தது.  போலீஸ் இன்பார்மராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி கொன்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?மின்னம்பலம் : தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் டெல்லியில் வெவ்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளைப் பற்றி மனுக்கள் அளிக்கிறார்கள்; வேண்டுகோள்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன் டெல்லியில் திமுக எம்.பி ஒருவர் மத்திய இணையமைச்சரைச் சந்தித்துப் பேசியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
திமுகவின் மத்திய சென்னை மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஓரிரு நாட்கள் முன் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னணி இருப்பதாக டெல்லியில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. காரணம், தமிழக எம்பிக்கள் பலரும் மத்திய அமைச்சர்களை அவரவர் அலுவலகங்களில் சந்திக்கும் நிலையில் தயாநிதி மாறன் மட்டும் ஜிதேந்திரசிங் கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
 மின்னம்பலம் :  தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. சுமார் 2 கிமீ தூரத்துக்குச் சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்க இருந்தது.
ஆனால், இந்த ஆய்வு மையம் அமைவதன் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டாரப் பகுதியினரும் அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றன. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்க கிரீன் கார்டு வரம்பு நீக்கம் .. இந்தியர்கள் மகிழ்ச்சி

US House, country cap, Green Card, அமெரிக்கா, கிரீன் கார்டுதினமலர் : வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், 'கிரீன் கார்டு'க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம்.இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்கள், 'எச் 1 பி' விசாவை பெறுகின்றனர். அவர்களில் பலர் நிரந்தரமாக அங்கு குடியேற விரும்பினால் முடிவதில்லை.

சௌகார் பேட்டை காதலியை கொன்ற காதலன் .. சயனைட் வாங்கியது கண்டுபிடிப்பு


தந்தி டிவி : சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சுமர் சிங், காஜல் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் அவர்களது காதலை ஏற்காத காஜலின் பெற்றோர், அவருக்கு, வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்,காஜல் சயனைடு குப்பிகளை சாப்பிட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். அவரது காதலன் சுமர்சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், விசாரணைணையை தொடர்ந்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் சுமர்சிங்கிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் படுகொலை

தீக்கதிர்,.com : அகமதாபாத்: ரஜபுத் சமூகப் பெண்ணைக் காதல் திருமணம்
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்திலுள்ள வார்மோர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேஷ் (25). தலித் இளைஞரான இவர், ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜாலாஎனும் பெண்ணை காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு,முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

செய்து கொண்ட தலித் இளைஞர், அரசு அதிகாரி மற்றும் காவல்துறை பெண் கான்ஸ்டபிள் முன்பாகவே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்திலிருந்து இந்த திருமணத்தை ஏற்காத ஊர்மிளாவின் பெற்றோர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஊர்மிளா கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை அறிந்து,அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். ஹரேஷூம் அனுப்பி வைத்துள்ளார்.இதனிடையே, ஹரேஷ் தனது மனைவியை அழைத்துவருவதற்காக, ‘அபயம்’ என்ற ஹெல்ப்லைன் மைய ஆலோசகர் பவிகா, பெண் கான்ஸ்டபிள் அர்பிதா லீலாபாய் ஆகியோருடன், ஊர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். எனினும் அவர் நேரில் செல்லாமல், தூரத்தில் இருந்தவாறே, தனது மனைவியின் வீட்டைக் கைகாட்டி, தன்னுடன் வந்த அதிகாரிகளை அங்கு சென்று மனைவியை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓவிய வியாபாரம் பற்றி இங்கு போதிய புரிதல் இல்லை... ஓவியர் ரம்யா சதாசிவம்

Ramya Sadasivam : ஜனநாயகம் பழகுங்க please... ஓவிய வியாபாரம் பத்தி இங்க
யாருக்கு எந்த புரிதலும் இல்ல. ஒரு ஓவியம் வரைஞ்ச பிறகு அது ஒரு product. எந்த ஆர்ட் galleryயும் எந்த நல்ல ஓவியரையும் represent பண்றதில்ல தமிழ்நாட்டுல. எந்த galleryயும் எங்க
ஓவியங்கள வித்து தரரது இல்ல. பண்ற ஓவியங்களை அவங்களே கஷ்டப்பட்டு விற்பனை செய்ர அலவுக்குத்தான் இங்க நிலமை. பொது மக்களை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. அரசாங்கம் தான் இதுக்கு காரணம். வெளி நாட்டுல இந்த இந்த ஓவியர் hard work பண்ணுறாங்க, award வாங்குறாங்க, அதன் அடிப்படையில் இவர் ஓவியத்துக்கு இவ்ளோ rate போகும் futureலேனு முடிவு பண்ணுறவங்க. ஒரு ஓவியம் share marketல வர stock மாதிரி treat பண்ணுவாங்க. இங்க ஓவியர்களை அவங்க ஓவியம் வெச்சோ இல்ல அவங்க award வெச்சோ எந்த curatorம் மதிப்பிடறதில்ல,ஓவியங்களை evaluate பண்றது இல்ல. அதுனால நாங்களே வித்துக்க வேண்டியதா இருக்கு. எங்க விற்பனைக்கு உதவுறது linkedin facebook twitter youtube.
தினமும் போடுற work பாத்துட்டு நேத்துவிட இவ இன்னைக்கு நல்லா வரைரா, இல்ல என்ன விட இவ நல்லா வரைரா, இது மாதிரி சேருற கூட்டம் தான் social media கூட்டம். ஓவியம் வரைய எவ்ளோ effort போடறோமோ அதே அளவு அது 4 பேருக்கு கொண்டு சேர்க்க social mediaல effort போடவேண்டியதா இருக்கு.

உயிர் அச்சுறுத்தலில் ஷர்மிளா சையத் .... ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்பு...

sharmila.seyyid : உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்வது ”ஃபேஷன்” என்று சிலர் நினைப்பதிலோ, சொல்வதிலோ உண்மை இல்லை. அப்படிச்
சொல்கிறவர்களுக்கு அதன் விளைவுகள் சுத்தமாகத் தெரியவில்லை என்றுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவன்/ள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்வதை விளங்கிக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் குறைந்தபட்ச நேர்மை, உண்மை, வெளிப்படைத்தன்மை, சமூகப் பார்வை, புரிதல் தேவையாயிருக்கிறது. 
பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், ஆணவம் போன்ற மனிதத் தன்மையற்ற குணங்கள் தலைக்குள் ஏறியிருப்பவர்கள் ஆபத்தான சூழல்களைப் புரிந்து கொள்வதோ, அத்தகைய சூழலில் இருப்பவர்களுக்குத் தோழமை ஆதரவு அளிப்பதோ முடியாது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு உயிராபத்து இருப்பதாக சொல்லப்பட்டவர்கள் இன்னும் அதே சூழலில்தான் இருக்கவேண்டியுள்ளது. இந்த உயிராபத்து வெறும் கட்டுக் கதைகள் அல்ல.
யாரோ முகம் தெரியாத ஃபேக் ஐடிக்கள் சமூக வலைத்தளங்களில் விடுத்த எச்சரிக்கையும் அல்ல. (இந்த எச்சரிக்கைகள் பொருட்படுத்தக்கூடாதவை என்பதுகூடத் தவறான அபிப்பிராயம். இவை கட்டாயம் கவனிக்கப்படவேண்டியவை.)
இந்த உயிராபத்து எச்சரிக்கைகள் பொலிஸ் திணைக்களம், புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பவற்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவை. ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்பு கைதான நபர்களை விசாரித்தபோது அவர்கள் அறிவித்திருக்கும் தகவல்களிலிருந்து உறுதி செய்யப்பட்டவை.

பட்ஜெட் , ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள் மாயமாகியுள்ளது .. ஊடகங்கள் மௌனம் Mystery of the 'Missing' Rs 1.7 lakh Crore in India's Budget


kalaignarseithigal.com  : நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கணக்கில் வராமல் விடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள புள்ளிவிபரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரதின் ராய் என்பவர், பட்ஜெட்டில் உள்ள குளறுபடிகளைத் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் அவர் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், “பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19ம் ஆண்டில் இந்திய அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடி எங்கே போனது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு முன்பும் நீட் தேர்வுக்கு பின்பும் .. ,,, புள்ளி விபரம்

பழூரான் விக்னேஷ் ஆனந்த் :
நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 611

தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 01
தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

காங்கிரசை அழித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே.. ஆர் எஸ் எஸ் இன் ரகசிய உளவாளிகள் காங்கிரசுக்குள் ..?

ஜீவா வனத்தையன் தமிழரிமா : 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி
காங்கிரஸ்காரர்களால் தனித்து விடப்பட்டார். செந்நாய்கள் மத்தியில் சிக்கிய செம்மறியாக, ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கிய மான்குட்டியாக தனியாகப் போராடிய ராகுல்காந்திக்கு தோள்கொடுக்க ஒரு காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை. அப்படி ஒரு இக்கட்டான நிலை இந்தியாவில் எந்த வாரிசு தலைமைக்கும் வந்ததில்லை.
ராகுல்காந்தியை எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ , அந்த அளவுக்கு பப்பு என்றெல்லாம் சொல்லி இழிவுபடுத்திய பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரசில் யாரும் முன்வரவில்லை. மோடி பற்றி, ஆர் எஸ் எஸ் பற்றி ராகுல் வாயைத் திறந்த போதெல்லாம் பாஜகவினர் துவங்கி, தேர்தல் ஆணையம், உச்சநீதி மன்றம் என அனைவரும் வரிசைக்கட்டி வந்தனர். ராகுல் பரப்புரைக்கு இடையே இந்தப் பிரச்சினையும் கையாள வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்பட்டார்.
மாநிலக் கட்சிகளோடு விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்கலாம் என்று முயன்றால் காங்கிரசின் மாநிலத் தலைவர்கள் அதற்கும் முட்டுக்கட்டையாக நின்றனர். தன் கட்சியினரின் சுயநலப்போக்கால் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ள ராகுல் தயங்கினார் என்பதுதான் கொடுமை.

வியாழன், 11 ஜூலை, 2019

வைரமுத்து வாரிசு கவிஞர் மதன் கார்க்கி போடும் கொத்து பரோட்டா... லிரிக்_இஞ்சினியரிங்...

Kathir RS : டிக்டிக்டிக் படம் வெற்றி பெற்றிருக்கிறது.(இரண்டாவது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக க்ரோம்பேட் வெற்றியில் ஓடிக் கொண்டிருக்கிறது.)
எல்லா அப்பாக்களும் தங்கள் மகன்களுடன் சென்று பார்த்த ஒரு படமாக இருக்கிறது டிக்டிக்டிக்.
வாழ்த்துகள்.
ஆனால் இந்த பதிவு படத்திற்காக அல்ல. படத்தின் பாடலாசிரியர் அன்பு அண்ணன் கார்க்கி அவர்களுக்காக.
அப்பா கொடுத்த கிக் ஸ்டார்ட்டில் பாட்டெழுத வந்தவர்.
அப்பாவை மிஞ்சிவிட வேண்டும் என முக்க முக்க அவரது மக்குத்தனம் பல்லிளிக்கிறது.
அப்பாவின் அறிவு புத்தகங்கள் டேட்டா பேஸ் சங்கத்தமிழ் அகராதி பத்தாதற்கு கூகுள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இவர் போடும் கொத்து பரோட்டாவிற்கு பெயர் #லிரிக்_இஞ்சினியரிங்.
பற்றாக்குறைக்கு திரைப்பட டப்பிங் துறையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார்.
அவ்வப்போது தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்யப்போவதாக திகிலூட்டுகிறார்.
கடந்த பத்தண்டுகளில் அவர் பல பாடல்களை எழுதிவிட்டார்.

பட்டியலினத்தவர் வர்க்க பார்வையை முற்றிலும் இழந்துவிட்டனரா? கம்யுனிஸ்டுகளின் பொருளாதார பாடம் ..

Adv Manoj Liyonzon : .1,72,500 வரை வரி செலுத்தும் ₹.8 லட்சம் வரை வருமானம் உடையோர் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஏழைகளா!?
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை என்பது மாபெரும் அரசியல் பிழை. சாதிய படிநிலை உணர்வு என்பேன்
முதலாவது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் "இழப்பீடு" தான் இடஒதுக்கீட்டு பிரதிநித்துவம் என்று தெரிந்திருந்தும், முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரித்தது அரசியல் அயோக்கியத்தனம் என்பேன். மாபெரும் அரசியல் பிழை என்பேன்.
இது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமல்ல, ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும்.
இரண்டாவதாக, வருடத்திற்கு ₹.8 லட்சம் வரை ஈட்டுவோர் எந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஏழைகளாக தெரிகின்றனர்!?
அதாவது வருடத்திற்கு 8 லட்சம் என்பது ஒரு நாளைக்கு ₹.2186. இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியே ₹.1,72,500.
இந்திய அரசை பொறுத்தவரை ஏழ்மை என்பது நாளொன்றுக்கு கிராமபுற வருமானமாக ₹.32 (வருடத்திற்கு ₹.11,712) மற்றும் நகர்ப்புற வருமானமாக ₹.47 (வருடத்திற்கு ₹.17,202) இருக்க வேண்டும். அதாவது ஒரு ஏழையின் அதிகப்படியான வருமானமே வருடத்திற்கு ₹.17,202 மட்டும் தான் இருத்தல் வேண்டும்.

குமுதம் இதழ் ..பிற்படுத்தப்பட்டவரால் தொடங்கப்பட்டு.. இன்று "பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளுக்குள்

அட கூறு கெட்ட "குமுதமே"!
- கருஞ்சட்டை -
'குமுதம்' இதழ் இப்படியொரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்தி மரக்கட்டையை வைத்துப் பொம்மை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வருகின்றார்கள்.
ஊடகங்கள் ஊதிப் பெருக்கி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அத்திவரதரை தரிசித்து விட்டுச் சென்ற செட்டித் தாங்கல் (வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்களே - இதுபற்றியெல்லாம் இந்தக் குமுதங்களின் கண்களுக்குத் தெரியாதா?
வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் பட்டப் பகலில் கோயில் மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டாரே - அதன் காரணமாக *சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சிறைக்குப் போனாரே - நினைவில்லையா? என்ன செய்தார் வரதராசர்?*
*கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுவதுபோல, ஒரு பிற்படுத்தப்பட்டவரால் தொடங்கப்பட்ட ஒரு இதழ் "பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளுக்குள் சென்ற நிலையில் பார்ப்பனீயத்தை வளர்க்கும் இதுபோன்ற மூடத்தனங்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.*

கேரள கம்யுனிஸ்டுகளின் ராமநாம சங்கீர்த்தனத்துக்கு தமிழக தோழர்களுக்கும் அழைப்பு....?

LRJ : சென்ற ஆண்டு இதே நாளில் எழுதியது என்று Facebook நினைவூட்டுகிறது.
ஓராண்டுக்குப்பின்னும் CPM கட்சி எந்தவிதத்திலும் மாறவில்லை; தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான சாட்சியே உயர்ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை அது விழுந்து விழுந்து ஆதரித்துக் கொண்டிருப்பது.
கேரள காம்ரேடுகள் நடத்தப்போகும் ராமநாம சங்கீர்த்தனத்துக்கு தமிழக காம்ரேடுகளுக்கு அழைப்புண்டா? ஜீவா காலத்திலிருந்தே ராம பஜனை செய்தவர்கள்; கலியுக ராமனான எம் ஜி ராமச்சந்திரனை தமிழக முதல்வராக்க ஓயாமல் உழைத்தவர்கள்; அவரை பல்லாக்கில் சுமந்தவர்கள்; அதன் பரிணாம வளர்ச்சியாக பாரம்பரிய வைஷ்ணவரான விஜயகாந்த் வடிவில் ராமனை சேவித்து அவரையும் தமிழக முதல்வராக்க பாடுபட்டவர்கள்; ராம சேவை செய்வதில் இத்தனைதூரம் அனுபவமிக்க தமிழக காம்ரேடுகளை கேரள சேட்டன்கள் புறக்கணிக்கக்கூடாது. ஒருவேளை தமிழக காம்ரேடுகளுக்கு சமஸ்கிரதம் தெரியாது என்பது காரணமானால் சென்னை சபாக்கள் நடத்தும் கர்நாடக கச்சேரிகளில் கட்டக்கடைசியாக தமிழுக்கு ஒதுக்கப்படும் துக்கடா பாடல்கள் என்கிற இடத்தையாவது கேரள காம்ரேடுகள் தமிழக தோழர்களுக்கு ஒதுக்கியருள வேண்டும். 

ரெயில்வே அதிகாரிகள் 10 லட்சம் லிட்டர் குடிநீரை தண்டவாளத்தில் கொட்டினர் .. ஜோலார்பேட்டை- வீடியோ

Hemavandhana /tamil.oneindia.com  :  வேலூர்: "குடிக்க கூட எங்களுக்கு தண்ணியில்லை.. ஆனா இவ்ளோ தண்ணி இப்படி அநியாயத்துக்கு வீணா போகுதே" என்று பொதுமக்கள் வயித்தெரிச்சலுடன் சொல்கிறார்கள். சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்து அதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கியது. 
இதற்காக அதிகாரிகள் 3 கட்டமாக ஆய்வும் அங்கு நடத்தினர். இதற்காக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அந்தசமயத்தில் ஏதோ கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறியது. 
ஆனால், 2 மணிநேரம் போராடி அது சீர் செய்யப்பட்டது. அதன்பிறகு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. 
இதையடுத்து, நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர். அப்போது ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர். 
எப்படியும் இன்று மதியம் சென்னைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது பிஜேபிக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல். அதை மனசுல வெச்சு வேலை பாருங்க... வேலூரில் முழு மூச்சில் பாஜக போர் முழக்கம்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!
மின்னம்பலம் :மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லி காட்டியது. தயாராக இருந்த ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.
"பிஜேபி ஆட்சி அமைந்த பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தல் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கானது. அதனால் வேலூர் தேர்தலை கௌரவ பிரச்சினையாக பார்க்கிறது பிஜேபி. அதனால் வேலூரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாகி இருக்கிறது. வேலூர் தேர்தல் தேதி அறிவித்ததுமே பிஜேபியில் உள்ள கரு.நாகராஜன், பி.டி.அரசகுமார் உள்ளிட்ட ஒரு டீம் தொகுதிக்குப் போனது. தொகுதி முழுக்க சுற்றி வந்து ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. மத்திய உளவுத் துறை மூலமாகவும் வேலூர் தொகுதி பற்றிய ரிப்போர்ட் வாங்கி இருக்கிறார்கள். எல்லாம் கைக்கு வந்ததும், எடப்பாடியை தொடர்பு கொண்டு டெல்லியில் இருந்து பேசி இருக்கிறார்கள்.
'40 தொகுதியில் ஒரு தொகுதி தான் ஜெயிச்சோம் என்பது நமக்கு பெரிய அசிங்கம்.இப்போ மறுபடியும் ஒரு வாய்ப்பு வருது. ஒரே தொகுதிதான். அதுல முழுசாக வேலை பார்த்து ஜெயிக்கலைன்னா தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பிஜேபியும் ஆட்சியில் இருப்பது வேஸ்ட். அதெல்லாம் பார்த்துக்கலாம் என இனியும் சொல்லாதீங்க. நாங்க போட்டுக்கொடுக்கும் ப்ளான்படி வேலை பாருங்க அதுவே போதும்.

குழந்தைகள் பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை... புதிய சட்ட திருத்தம்

குழந்தைகள் பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை!மின்னம்பலம் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பச்சிளங்குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே இக்குற்றங்களுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டம் 2012இல் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஜூலை 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் இளைஞர் மர்ம மரணம் .. தற்கொலை என்று போலீஸ் ..

காவல் நிலையத்தில் லாக் அப் டெத்!மின்னம்பலம் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தின் கழிவறையில் விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் என்னதான் நடந்தது என்று விசாரணையில் இறங்கினோம்.
ஜூலை 10ஆம் தேதி, மாலை நகரப் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் ஓம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (66) பணம் எடுக்க வந்துள்ளார். அவருக்குப் பணம் எடுப்பது எப்படி என்று தெரியாததால் அவருக்குப் பின்னால் சென்ற இளைஞர் ஒருவர் பணம் எடுக்க உதவிசெய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.
உடனே ஜெகதீசனின் ஏடிஎம் கார்டு மாறிப்போனதைப் பற்றியும் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1200 பணம் எடுக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்துள்ளது பற்றியும் எஸ்.பி.ஐ. வங்கியிலும் காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்தபோதுதான் தெரிந்தது அந்த இளைஞர் ருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்று. காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள ருத்திரசோலை கிராமம் பொதிகை வீதியில் உள்ள பத்தர் (முதலியார்) சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் வினோத் என்பவர்தான் ஜெகதீசனிடம் ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.

கர்நாடகா .. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயகர்!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயகர்!மின்னம்பலம் : எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீதான முடிவை இன்று இரவுக்குள் எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகக் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், குறிப்பிட்ட முறையில் முடிவெடுக்க சபாநாயகருக்கு எதிராக உத்தரவிட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி வருகின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். தாங்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகச் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்த போது, ’10 எம்.எல்.ஏக்களும் மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும், அதன் மீது சபாநாயகர் இன்று இரவே முடிவு எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குமாரசாமி ராஜினாமா செய்கிறார் .. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!

Samayam Tamil : தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் த ஹைலைட்ஸ்
  • கர்நாடகாவில் இன்று காலை அமைச்சரவை கூட்டம்
  • கூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கும் முதல்வர்
  • கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆரம்பம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மோதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதனால் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.

வைகோ உட்பட ஆறு பெரும் மாநிலங்கள் அவைக்கு தெரிவு செய்யபட்டனர் . சான்றிதழ் பெற்றனர்



தினகரன் :சென்னை: மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் தேர்வானது குறித்து ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6  மாநிலங்களவை எம்பி பதவிகள் இந்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. அதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு எம்பியை தேர்வு செய்ய 34  எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 எம்பி பதவி கிடைப்பது உறுதியானது. திமுக சார்பில் தொமுச  பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் வைகோவும் மனு தாக்கல் செய்தனர்.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி  ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

ஆட்சியை கலைக்க முதல்வர் குமாரசாமி முடிவு?

KARNATAKA CM HD KUMARASAMY INVITE CABINET MEETING, GOVERNMENT DISSOLVE DECIDEnakkheeran.in - santhoshb: கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்களிடம் சமாதானம் பேசியும், அவர்கள் ராஜினாமாவில் உறுதியாக உள்ளன. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்ததால் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

Kona Electric car இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்.. வீடியோ


தினத்தந்தி :ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற பெயரில், எஸ்யூவி வகை எலக்ட்ரிக் காரை சென்னை தொழிற்சாலையில் தயார் செய்து, அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற பெயரில், எஸ்யூவி வகை எலக்ட்ரிக் காரை சென்னை தொழிற்சாலையில் தயார் செய்து, அறிமுகம் செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். விரைவில், ஹூண்டாய் "கோனா" எலக்ட்ரிக் கார், சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெகத்ரட்சகனை வேலூரில் களமிறக்கிய ஸ்டாலின்... வெற்றி பெற திமுக அதிரடி வியூகம்..

Stalin who fielded Jagathrakshaka at Velloretamil.asianetnews.com/author/thiraviaraj-: வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டுள்ள திமுக வலுவான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டுள்ள திமுக வலுவான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்று தனது பலத்தை தமிழகத்தில் நிரூபித்தது. வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்ற அதிமுக, வேலூரில் வெற்றிபெற்று தங்களது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி சார்பில் அங்கு புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பணபலத்திலும், தேர்தல் பணிகளில் வியூகம் வகுப்பதில் கைதேர்ந்தவர் இந்த ஏ.சி.சண்முகம். ஆகையால் அவரை சமாளிக்கும் விதமாக வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், காந்தி, முத்துசெல்வி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நளினி சிதம்பரம் பேட்டிதான் அனிதா உயிரைப் பறித்தது’ ... அமைச்சர் விஜபாஸ்கர்

vikatan.com - -khalilullah.s" : சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `நளினி சிதம்பரத்தின் பேச்சுதான், அனிதாவின் உயிரைப் பறித்தது’ என்று பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இதையடுத்து தி.மு.க சார்பில் நீட் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டுவந்தார்.
 அப்போது பேசிய அவர், ``நீட் தேர்வு தொடர்பாக 2 மசோதாக்கள் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அது குடியரசு தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த கடிதம், தமிழக சட்டத்துறை செயலாளருக்கு வந்துள்ளது. ஆனால் இதை அரசு மற்றும் சட்டதுறை அமைச்சர் சொல்லாமல், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விவாதத்தில் மறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது, இரு மசோதாக்களையும், மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்ததாகவும், பின் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முகிலனை இருட்டு அறையில் வைத்து சித்திரவதை செய்கிறார்கள்’ - மனைவி பூங்கொடி கண்ணீர்

p  நக்கீரன்  ஜெ.டி.ஆர். :
கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன். இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 மீட்டர் முன்னதாக பேரிகேட் கொண்டு தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி, ‘’யாராவது தூண்டி விட்டுத் தான் இந்த சம்பவம் நடக்கிறது. யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். முதலுதவி சிகிச்சை கூட செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது? நாம் எந்த நாட்டில் இருக்கிறோம். மக்களுக்காக போராடியது பெரிய குற்றமா? கொலை செய்து கொள்ளையடித்தவர்ளை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.

ரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி

மாலைமலர் : இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் நகரில் தான் படித்த காலத்தில் மளிகை கடைகாரருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் 200 ரூபாய் கடன்பட்ட கென்யா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அதை திருப்பி செலுத்திய வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை: கென்யா நாட்டின் யாரிபாரி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ரிஸ்சர்டு டாங்கி. அவர் 1985 முதல் 1989 ஆண்டு வரை மஹராஷ்ர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை கல்வி பயின்று வந்தார்.< கல்வி பயின்ற காலத்தில் ரிஸ்சர்டு டாங்கி தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் தனக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சில சமயங்களில் போதிய பணம் இல்லாதபோதும் மளிகை கடையில் கடன் வாங்கி அதை தனது பெற்றொரிடமிருந்து பணம் வந்த பின்னர் பாக்கி தொகையை கடை உரிமையாளரான காசிநாத் ஹவ்லியிடம் திருப்பி கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

புதன், 10 ஜூலை, 2019

நந்தினி திருமணம் எளிமையாக நடந்தது .. சமுக போராளி ..

நந்தினி திருமணம்.vikatan.com[] அருண் சின்னதுரை - வி.சதிஷ்குமார் : மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில், நந்தினிக்கும் குணா ஜோதிபாஸுக்கும் இன்று திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் நடத்திவரும் நந்தினியின் திருமணம், குலதெய்வக் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.
மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும், டாஸ்மாக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் கையில் எடுத்துள்ளனர். எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் தந்தையின் ஆதரவோடு வாசகங்கள் நிறைந்த பதாகையோடு போராட்டத்தில் இறங்கிவிடுவார். பெரும் கூட்டங்களைக் கூட்டுவதோ, வேறு சில அமைப்புகளோடு இணைவதோ இல்லாமல், தன்னுடைய போராட்டங்களை முன்னெடுப்பார். இந்நிலையில், ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்கும் குணா ஜோதிபாஸுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

துப்புரவு பணியாளர்கள் இறப்பில் தமிழ்நாடு முதலிடம்

சமூக நீதி தமிழகத்தின் அவலநிலை!! துப்புரவு பணியாளர்கள் இறப்பில் முதலிடம்zeenews.india.com-shiva-murugesan :புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இந்த கொடுமையால் வருடா வருடம் பலர் உயிரிழந்து வருகின்றனர். துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். உரிய உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை, துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது சட்டப்படி குற்றமாகும்.
எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும் என சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுகளை சுத்தம் செய்ய ஏன் இப்படி பாதாள சாக்கடைகளில் இறங்குகிறார்கள்? முக்கிய காரணம் ஏழ்மை தான். வறுமையின் காரணமாக சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசாங்க ஒழுங்கான பாதுகாப்புக் கவசத்தை கொடுப்பதில்லை என்பது வேதனையான விசியம்.
1993 ஆமா ஆண்டு முதலே மனிதர்கள் நேரிடையாக மனிதக்கழிவுகளைத் துப்புரவு செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் பல இடங்களில் இன்னும் அந்த அவலம் நடைபெற்று வருகிறது.

செக்ஸ் திருவிழாவில் பெண்ணுக்கு நெஞ்சு வலி ...இங்கிலாந்து ..

zeenews.india.com/tamil : செக்ஸ் திருவிழாவில் 52 வயது பெண்   செக்ஸில்
ஈடுபடும்போது  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு!!
இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஸ்விங் பீல்ட்ஸ். இந்த பகுதியில் நடக்கும் செக்ஸ் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. செக்ஸ் திருவிழா என்றால் ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அதில் கலந்து கொள்பவர்கள் யார் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஒருவர் ஒருவருடன் மட்டும் இல்லாமல் அங்கு வரும் யாருடன் வேண்டுமானாலும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்து கொள்வது வழக்கம். இதற்கு எந்தவிதமான தடையும் இல்லை மேலும் லெஸ்பியன், கே போன்ற LGBT சமூகங்கலுக்கும் உடல்உறவுகளுக்கும் அனுமதியுள்ளது.
இந்தாண்டு நடந்த இந்த திருவிழாவில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒருவருக்கு 250 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

திருமணத்திற்கு எச் ஐ வி சான்றிதழ் கட்டாயமாக்க அரசு ..

webdunia :திருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை கட்டாயமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தினமும் உதயநிதியை கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் ... வாய் மொழி உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!மின்னம்பலம் : அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு ஒரு வாரம் ஆகிறது. அதற்குள் இரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றியிருக்கிறார். மாநில நிர்வாகிகளையும் மாற்றுவது பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரம் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.
இதுகுறித்து தலைமையிடம் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. அதாவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதனால் அன்பகத்தில் தினந்தோறும் நிர்வாகிகள் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

மக்களின் தகவல்களை காப்பறேட்டுக்களுக்கு விற்பனை செய்யும் மத்திய அரசு ...

மக்களின் தகவல்களை விற்பனை செய்த மத்திய அரசு!மின்னம்பலம்: அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார அறிக்கையில்,  தகவல்களை பயன்படுத்தி எப்படி வருவாய் ஈட்டுவது என்பது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்திய அரசு ஏற்கெனவே பொது மக்களின் தகவல்களை விற்பனை செய்து பணம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பியான ஹுசைன் தல்வாய் மாநிலங்களவையில், “வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமத் தகவல்களை மொத்தமாக மத்திய அரசு விற்பனை செய்ய முயல்கிறதா? அப்படி முயன்றால், தகவல் விற்பனையால் எவ்வளவு வருவாய் கிட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இக்கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாகனப் பதிவு விவரங்களையும், ஓட்டுநர் உரிம விவரங்களையும் விற்பனை செய்து மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். இத்தகவல்களை பயன்படுத்த 87 தனியார் நிறுவனங்களுக்கும், 32 அரசு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைகோ மற்றுமொரு சிக்கல் ..சசிகலா புஷ்பா வைகோவுக்கு எதிராக துணை குடியரசு தலைவரிடம் மனு ... தேசத்துரோக வழக்காம் .. ...

வைகோவுக்கு இன்னொரு செக்!மின்னம்பலம் : ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்பு மனு ஒருவேளை நிராகரிக்கப்படக் கூடுமோ என்ற சந்தேகம் நிலவியதால், திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று காலை தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதன் மூலம் வைகோ ராஜ்யசபாவுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 10) மாலை முதல் டெல்லியில் இருந்து வேறு ஒரு தகவல் கிடைக்கிறது.
அதாவது, இப்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுக ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா புஷ்பா, வைகோவுக்கு எதிராக ராஜ்யசபா தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ஒரு புகார் மனுவை அளிக்கத் தயாராகிவருகிறார்.

சுதந்திர பஞ்சாப் ஆதரவு அமைப்புக்கு மத்திய அரசு தடை.. .. நீதிக்கான சீக்கியர்கள் அமைப்புக்கு..

தனிநாடு போராட்டம்
காலிஸ்தானை ஆதரிக்கும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்புக்கு மத்திய அரசு தடைமாலைமலர் : பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க போராடும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்புக்கு தடை விதிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நீதிக்கான சீக்கியர்கள் புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பு ஆதரவு அளிக்கின்றது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.