சனி, 27 பிப்ரவரி, 2021
அனிதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் .. அனிதாவின் தந்தை த. பகுஜன் கட்சியிடம் வேண்டுகோள்
திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு புதிய குழு! மாநாடு, பொதுக்குழு ரத்து.... (திமுக உத்தேச பட்டியல்)
இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் மார்ச் 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை:தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது...ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர்.
மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு
அப்பகுதியை நீக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் பற்றிய குறிப்புகளில் எந்தத் தவறும் இல்லை என்றும் பாடப்புத்தகத்தில் இருந்து அவற்றை நீக்கக்கூடாது என்றும் மலேசிய திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது.
மலேசிய தமிழ்ப் பள்ளிகள்
மலேசியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பள்ளியில் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் 'செம்மொழி சிற்பிகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அதில் வீரமாமுனிவர், பெருஞ்சித்திரனார், தந்தை பெரியார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் புத்தகம் பயன்பாட்டில் உள்ளது.
பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணி... ?
Anbarasan Gnanamani - tamil.oneindia.com : சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மூத்த அரசியல்வாதி பழ கருப்பையாவை சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று (பிப்.26) அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார் இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சொல்ல முடியாது.. இந்நேரத்துக்கு கூட தக தகவென எரிந்து கொண்டிருக்கலாம். தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக தங்களது பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டது. அதுமட்டுமின்றி, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம், டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றையும் அறிவித்துவிட்டது. இப்படி மின்னல் வேக பணிகளை திமுக துவக்கிவிட, அதிமுகவும் தங்களது அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
ராமநாத சுவாமி கோவிலில் குருமூர்த்தி உடைத்த பழங்கால ஸ்படிக லிங்கம்! அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…!
பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அத்துமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.
தோழர் தா. பாண்டியனுக்கு செவ்வணக்கம்! .... அவரின் வரலாற்றில் சில பக்கங்கள்.
எல்லா அரசியல் தலைவர்களையும் போலவே பல விமர்சனங்களையும் தாண்டியது அவரின் அரசியல் சமூகப்பணி.
அமரர் தா. பாண்டியனின் பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கது.
இந்திய வரலாற்றை மட்டுமல்லாது ஈழ வரலாற்றையும் விரல்நுனியில் வைத்திருந்த வெகு சிலரில் தோழரும் ஒருவர்.
இடதுசாரி இயக்கங்களின் ஒரு முக்கிய தலைவராக இருந்தாலும் அவற்றின் வரலாற்று தவறுகளையும் நிகழ்காலத்தையும் பாரபட்சம் இல்லாதது விமர்சிக்கும் அவரது பண்பு மிகவும் பாராட்டுக்கு உரியது.
அவர் உண்மையில் ஒரு அரசியல் பல்கலை கழகம் என்றுதான் கூறவேண்டும்.
ஸ்ரீ பெரும்புதூரில் அமரர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிகழவில்லை தோழரும் படுகாயமுற்றார்
இவர் இறந்துவிட்டார் என்றே முதலில் கருதப்பட்டது நல்வாய்ப்பாக அவர் மீண்டுவிட்டார் ஆனாலும் அவரது உடலில் இன்னும் சில உலோக துகள்கள் நிரந்தரமாக புதைந்திருந்தது.
அந்த சம்பவத்தின் குற்றவாளிகளை அவர் மன்னித்தது மட்டுமல்லாமல் அவர்களது விடுதலைக்காகவும் ஓங்கி குரல் கொடுத்தது அவரின் மனித நேயத்திற்கு மிகப்பெரும் சான்றாகும்.
தேர்தல் அரசியல் காரணமாக அவர் மேற்கொண்ட சமரசங்கள் இப்போதும் ஏற்று கொள்ள கூடியவை அல்ல.
அவர் கூட அவற்றை இட்டு பிற்காலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றெண்ணுகிறேன்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்
5 மாநில தேர்தல் தேதிகள் : தமிழக வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ! புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம்....
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகம்
234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
மார்ச் 12- வேட்பு மனு தாக்கல்
மார்ச் 19 -வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள்
மார்ச்- 20 வேட்பு மனு பரிசீலனை
மார்ச் 22 - வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் ,
ஏப்ரல் 6 - வாக்குப்பதிவு .
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்து கொள்ளலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளலாம். வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி. தமிழகத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக தேவந்திர குமார், அலோக் வர்தன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!
nakkeeran : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) உடல்நலக் குறைவால் காலமானார். முதலில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார். பிறகு, சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் மூலம் தமிழகத்தில் குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்கள் . எம்பிக்கள்????
தமிழகத்திலும் இந்திய அளவிலும் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகுதிகளில் பெற்ற வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் ,கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை பற்றி அடிக்கடி பெரிதும் புகழ்ந்து பேசப்படுவதுண்டு.
அது பற்றி போதிய விபரங்கள் தெரியாமலேயே அது மிகவும் சிறந்த முறை என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த விகிதாசார தேர்தல் முறை என்பது உண்மையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகவும் ஆபத்தான முறையாகும்.
இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.
மிகவும் எளிதாக தெரியும் தீர்வுகள் சிலவேளைகளில் பல புதிய சிக்கல்களை கொண்டிருப்பவையாகும்.
Too good to be true என்பது போல் இது ஒரு சிலந்தி வலை என்பதே எனது கருத்து.
உதாரணமாக பிரான்சில் இந்த முறை முன்பு பரீட்சித்து பார்க்கப்பட்டது . அதனால் அந்த நாட்டில் மிகபெரும் இனவாத கட்சி ( Front National) தலைஎடுத்தத்து. அது வரை ஒரு தொகுதி அல்லது இரு தொகுதிகள் மட்டுமே பெற்று வந்த அந்த கட்சி 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது
அதன் பின்பு பிரான்ஸ் அரசானது விகிதாசார முறையயை கைவ்ட்டது.
தமிழகத்தில் விகிதாசார முறை அமுல்படுத்த பட்டால் ..
தமிழகத்தில் பல குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்களும் எம்பிக்களும் தெரிவாகும் சாத்தியம் உண்டாகும்.
எந்த தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாத மார்வாடிகளும் இதர மாநிலத்தை சேர்ந்தவர்களும் முழு மாநில அளவிலான தங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில்,
அவர்கள் தங்கள் மொழிபேசும் எம் எல் ஏக்கள் அல்லது எம்பிக்களை தமிழ்நாட்டில் தெரிவு செய்ய முடியும்.
அவர்கள் தமிழக அரசு மீது தங்கள் அதிகாரத்தை பலவழிகளிலும் செலுத்த அது வழி சமைத்து விடும்
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் தா. பாண்டியன் காலமானார்
190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்..(காங்கிரசுக்கு 15 ? ) உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்..
இதேநேரம் கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
10 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுக இந்த முறை எப்படியும் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்து வருகிறது.
முன் எப்போதும் இல்லா அளவிற்கு அசுரபலத்துடன் போட்டியிட வேண்டும் என்று விரும்பும் திமுக, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இது எதிரொலித்து வருகிறது...
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 190 இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
இது கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் கட்சி போன்றவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக விரும்புகிறதாம்.
அதற்கு கூட்டணி கட்கிகளிடம் தீவிரமாக பேசிவருகிறது. இதற்கு சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது.
ரத்தினகுமாரும் இளையராஜாவும் ....... .... போற்றி பாட என்ன இருக்கிறது?
பிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்பிக்கள் ! நமக்கு வாய்த்த அடிமைகள் .
50 தொகுதிகள் கேட்கிறதா காங்கிரஸ்? உம்மன் சாண்டி நேரில் வந்து திமுக.வுடன் பேச்சுவார்த்தை
திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுகளும் யூகங்களும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில், திமுக – காங்கிரஸ் தலைவர்கள் இடையே அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுர்ஜித்வாலா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறது? சமூகவலையில் சீரியஸ் விவாதங்கள் !
திமுக - 200
கம்யூனிஸ்ட் - 20 (CPI 10, CPM 10)
விசிக - 10
முஸ்லிம் லீக் - 4
அண்ணன் வைகோ, பேராசிரியர். ஜவாஹிருல்லா, திரு. வேல்முருகன், திரு. ஈஸ்வரன் போன்றவர்களின் இயக்கங்கள் உதயசூரியன் சின்னத்தில்!
அப்போ காங்கிரஸ்.? காங்கிரஸ், கமலஹாசன், தேமுதிக - மூன்றாவது அணி!!!
மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.திமுக கூட்டணியின் அதிகாரபூர்வமான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. முதன்முதலாக காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்தது. ஏற்கனவே திமுகவின் தலைவர் ஸ்டாலினுடைய பிரதிநிதியாக எ.வ.வேலு கூட்டணிக் கட்சியினருடன் சில ரவுண்டுகள் பேசி முடித்துவிட்ட நிலையில் அதிகாரபூர்வமான இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான அகில இந்திய காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்
அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி சாத்தூர் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 3 அறைகள் சேதமடைந்தன. அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கினார்
2000 ஆண்டுக்கு பிறகு எலீட் இனத்தின் அடையாளம் அழிய ஆரம்பிச்சுது... ரஜினி, கமல், சகாயம் ஐஏஎஸ் அன் சோ ஆன்...
இலங்கையில் ஜாதி பாகுபாடுகள், இயக்க கொலைகள் பற்றிய ஆழமான வரலாற்று பார்வை! அருண் சித்தார்த்
இலங்கையில் இருந்து ஒரு புதிய குரல் .. ஜாதி பாகுபாடுகள் . இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் போன்றவற்றை பற்றிய ஆழமான வரலாற்று பார்வை! அருண் சித்தார்த்
வியாழன், 25 பிப்ரவரி, 2021
பாகிஸ்தான் சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது – இ மு மு கவுன்ஸில்
சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை... வதந்திகளை நம்ப வேண்டாம் - முத்தரசன் கோரிக்கை
கமலஹாசனின் சக்கர நாற்காலி பேச்சு .. கலைஞர் மீதான பார்ப்பன விஷம் ...மீண்டும் மீண்டும்
கிட்டத்தட்ட 50 நிமிடங்கள். எந்தவிதமான அரசியல் புரிதலும், பொறுப்புமற்ற, வன்மம் நிறைந்த கிட்டத்தட்ட ஒரு அதிமுக அமைச்சரைப் போன்ற ஒரு பேச்சு.
எம்ஜியாருக்கு ஜால்ரா! நான் சிவாஜி, காமராசர்லேர்ந்து எல்லாரையும் பார்த்தவன் எனும் அதே சுயமோகப் பாட்டு!
ஊழல் மட்டுமே இங்கிருக்கும் ஒரே பிரச்சினை எனும் ஆபத்தான பிரச்சாரம்!
அதிமுகவும், திமுகவும் ஒன்று எனும் திட்டமிட்ட பழி!!
எல்லாவற்றையும் விட நான் மிக அதிர்ந்த விசயம், 'சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன்' எனும் வன்மம் மிக்க வார்த்தைகள்!
'முற்போக்குப் பேசும் பாப்பான் மிக ஆபத்தானவன்' என்று பெரியார் குறிப்பிட்டது எத்தனை உண்மை என்று உறைக்கிறது.
சொல்லப்போனால், பயமாகவே கூட இருக்கிறது. நாம் சிந்திக்கிறோம் எனும் நினைப்பிலிருக்கும் நம்மையே இத்தனை வயது வரை ஒரு முற்போக்குப் பாப்பானால் நிற்க வைத்து தலையில் மிளகாய் அரைக்க முடியும் என்றால் பொதுமக்களின் நிலை?
நல்லவேளையாக அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவே பல சந்தர்ப்பங்களில், தேர்தலில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் இருப்பார்கள். இந்த பித்தலாட்டக்காரர்களை எங்கு வைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருகை ..வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை
இந்தநிலையில், நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு நடந்தது. இருவர் மட்டுமே இடம்பெற்ற அந்த சந்திப்பில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கேரளா மீனவர்களோடு ராகுல் காந்தி கடலில் நீச்சலடித்து மீன் பிடித்த காட்சி
சட்டென்று படகில் இருந்து கடலில் குதித்து நீந்தினார்.
இதனைப் பார்த்த மீனவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்துள்ளார்.
கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது: மத்திய அரசு!
மின்னம்பலம் :இந்திய திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று, எல்ஜிபிடி(LGBT ) சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். மற்றொன்று, கடந்த எட்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் கவிதா அரோரா, அங்கிதா கன்னா தம்பதிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முயன்றபோது, சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், ஒரே பாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்....
இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு, ”ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிகளாக ஒன்றாக வாழ்வதையும், குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதையும், இந்திய குடும்ப அலகு கருத்தாக்கத்துடன் ஒப்பிட முடியாது. திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது என்பது சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியதே அல்லாமல், ஒருபோதும் அது நீதித்துறையின் பொருளாக இருக்க முடியாது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தா.பாண்டியன் - முத்தரசன் அறிக்கை!
nakkeeran : சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர். தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள் தா.பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி - ஒத்திகை பார்த்த வேலு ...
சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் தேர்தல் மோசடிகளை மறைக்க உதவும் முகமூடிகள்
டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி
Anbarasan Gnanamani - /tamil.oneindia.com மேற்குவங்கம்: எங்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எப்படியாவது இந்த தேர்தலில் காலி செய்துவிட வேண்டும் என்று இறங்கி வேலை செய்து வருகிறது பாஜக.
மம்தாவும், பதிலுக்கு மல்லுக்கு நிற்க, மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது
இந்நிலையில், ஹூக்ளியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மம்தா, "பிரதமர் மோடி மிகப்பெரிய கலகக்காரர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது.
வன்முறையிலிருந்து எதையும் பெற முடியாது. மோடியும் அவரது நண்பரும், இந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு பேச முடியுமோ பேசிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அதற்கு பிறகு நாங்கள் தான் பேசுவோம்.
சிங்கப்பூரில் சித்ரவதை செய்து மியான்மார் பணிப்பெண் கொலை.. தமிழ் தம்பதிகளும் மாமியாரும் சேர்ந்து செய்த கொடுமை
husband-woman abused-starved-domestic-worker-till-she-died-interdicted-senior-police
மியான்மார் நாட்டை சேர்ந்த இந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அமர்த்திய சிங்கப்பூர் வாழ் தமிழர்களான திரு.கெவின் செல்வம் (போலீஸ்காரன்) காயத்திரி தம்பதிகளும் கணவனின் தாயாரான பிரேமா நாராயணசாமியும் சேர்ந்து சித்திர வதை செய்து கொலை செய்துள்ளார்கள்.. இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
BBC :தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.
காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். Gaiyathiri ,Prema Naraynasamy, Kevin Chelvam
கலைஞர் ஜெயா மறைவை தொடர்ந்து RSS மீண்டும் சாதீய அரசியலை மூட்டி வைத்துள்ளது.
தமிழ் மொழியில் நீருக்கு 47 சொற்கள் உள்ளன . உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு
7 நாட்களில் கொரோனா குணமடைய மருந்து: பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ அறிவிப்பு!!
Patanjali promoter, yoga guru Baba Ramdev, released a scientific research paper in this regard at the launch, presided over by Union health minister Harsh Vardhan and transport minister Nitin Gadkari.
ndtv.com : பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகள் மீது மருத்துவ கட்டுப்பாடு
ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69
சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள்
குணமடைந்துவிட்டனர்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ராம்தேவ்...இதைப்
போன்று மாற்று மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பான WHO முன்னர்
எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘சில மேற்கத்திய, பாரம்பரிய மற்றும் வீட்டு
மருந்துகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை போக்கவும் உதவி
செய்யும். news link
புதன், 24 பிப்ரவரி, 2021
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.
பாலியல் புகார் - ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
nakkeeran : தமிழகத்தில் தேர்தல்கால பணிகளுக்காக, சிறப்பு டிஜிபியாக ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் அதிகாரங்களைக் குறைத்து நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ்தாஸின் கணவர். இவர்மீது விவகாரமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழும். சமீபத்தில் பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் முதல்வர் சென்றபோது அவரது பாதுகாப்புக்காக கூடுதல் டிஜிபியான ராஜேஷ்தாஸ் சென்றார். அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அவரிடம் பாலியல் அத்துமீறல்களைச் செய்திருக்கிறார் ராஜேஷ்தாஸ். ''எனக்கு ஆளும் கட்சி சப்போர்ட் இருக்கு. உன்னால ஒன்னும் பண்ண முடியாது'' என ராஜேஷ்தாஸ் மிரட்டியுள்ளார்.
தனுஷ் புதுவீடு 80 கோடியில்.. விஜய் வீடு 120 கோடி.. அஜித் வீடு 140 கோடியில் .. ரசிகனே நீ கட்டவுட்டுக்கு பாலூற்று
நடிகர்கள் கட்டும் வீட்டின் மதிப்பானது அவர்களுக்கு பெருமிதமான ஒன்றாக எப்போதுமே பார்க்கப்படும். சமீபத்தில் 120 கோடியில் விஜய் வீடு கட்டினார். அதுபோல, 140 கோடியில் அஜித் வீடு கட்டினார் எனச் சொல்லப்படும். அந்த மாதிரி, வீட்டினை சுமார் 80 கோடி பட்ஜெட்டில் கட்டிவருகிறாராம் தனுஷ். பெரிய தொகையில் வீடு கட்டுவதால் தான், முன்னரே சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வி கிரியேஷன்களுக்கு அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். தனுஷைப் போல, விஜய்சேதுபதியும் பெரும் தொகையில் வீடு கட்டிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியுமே வீட்டுக்காக பெரும் தொகையைப் பயன்படுத்துவதால் தான் இரவுபகலாக அதிகப் படங்கள் கமிட்டானார் என்றும் சொல்கிறார்கள்.
சசிகலாவை நேரில் சந்தித்த சீமான், அமீர், பாரதிராஜா, சரத்குமார் ...
சசிகலாவின் அடுத்தகட்ட மூவ் எப்படியிருக்கும் என அரசியல் கட்சியினர் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தி.நகரில் உள்ள தனது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார் சசிகலா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தன்னை நேசிக்கும் தொண்டர்களிடமும் ஊடகங்கள் மத்தியிலும் பேசியுள்ளார் சசிகலா.
திமுக கொடுத்த டிவி சிறப்பாக இருக்கா? உங்களுக்கு 1 லட்சம் பரிசு : அமைச்சர் ஜெயக்குமார்
தொடர்ந்து தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கும்போது. அதனை கேட்க மறுத்த திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ஸ்டாலின் முதல்வர் ஆனபின் தான் மீண்டும் சட்டசபை வருவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சபதம் எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தமிழகத்தில் தற்போது அரசியல் பரபரப்பு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், திமுகவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்து தமிழ்நாடு - அமித் ஷாவின் திட்டம்!
“புதுச்சேரியில் தேர்தலுக்கு இரு மாதங்கள் இருக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வருடம் 11 மாதங்கள் நீடித்த ஆட்சியைத் தேர்தலுக்கு முன் திடீரென எங்களால் தூக்கிப் போட முடியும் என்று டெல்லியில் இருந்து அமித் ஷா நடத்திய அரசியல் ஆபரேஷன்தான் இது.அதேபோல தமிழ்நாட்டிலும் ஓர் அரசியல் ஆபரேஷனைத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. பிப்ரவரி 22ஆம் தேதி சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலேயே இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ‘புதுச்சேரியில் நடந்தது ஒரு ரிகர்சல்தான். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கிறதோ’ என்று கூறியிருந்தார் திருமா.
மு க அழகிரி ஸ்டாலின் சமரசம் ! காத்திருந்த பாஜகவுக்கு ஏமாற்றம்....
இதன் பின்னணி குறித்து ஆராய்ந்த போது இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து கலைஞரால் நீக்கப்பட்ட அழகிரி, அக்கட்சியில் இணைய எத்தனையோ குட்டிக் கரணங்களை போட்டார்.
தாய் விடு தூது, தங்கை விடு தூது என எத்தனையோ தூதுகளை அனுப்பியும் கலைஞர் மனம் மாறவில்லை.
இந்த நிலையில் கலைஞர் மறைவுக்கு பிறகாவது திமுகவில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரை மீண்டும் கட்சியில் இணைக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் திட்டவட்டமாக இருந்துவிட்டார்.
இதனால் திமுகவை எதிர்க்கும் மனப்போக்கு மு.க. அழகிரியிடம் ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் பள்ளி மாணவர் மீது கடும் தாக்குதல்: முன்னாள் மாணவர் கைது - இருவர் மீது வழக்குப் பதிவு
இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர்கள் நான்கு பேரின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த நிலையில்தான், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி, திங்கட்கிழமை காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
14 வயது சிறுமியை மணந்த 54 வயது எம்.பி .. பாகிஸ்தானில்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றினார்!
தொடர்ச்சிமலையை உள்ளடக்கிய தமிழகத்திற்கு, குஜராத்தும், ராஜஸ்தானும் கிரானைட் சப்ளை செய்கின்றன!!!
குஜராத்,ராஜஸ்தான் கிரானைட் வியாபாரிகளுக்கு ஈடுகொடுத்துவந்த தமிழக கிரானைட் வியாபாரம் படுத்து செத்தேபோய்விட்டது.
கலைஞரின் மகன் அழகிரியும், பேரனும்தான் கிரானைட் பிஸ்னஸை, மதுரைல புடிச்சி ஆட்டுறதாக பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அப்புறம், அழகர் கோயிலே காணாமல் போய்விட்டதுன்னு பிரச்சாரம் செய்யப்பட்டது.
நான்குவருடம் நன்றாக பிரச்சாரம் செய்தபிறகு, ஒருநாள் கொம்பை பிடித்துவிட்டார்கள்.
அதிமுகவின் பைனான்சியர்தான் குற்றவாளி என்றதும்! அழகிரியை சம்பந்தப்படுத்த, அசுரமுயற்சியே நடந்தது.
குவாரிகளில் ரெய்டு நடத்திய சகாயம், சுடுகாட்ல படுத்து திமுகவை குற்றஞ்சுமத்தினார்.
திமுகவை களங்கப்படுத்தினமாதிரியும் ஆச்சு! கிரானைட் பிஸ்னஸை தமிழர்களிடமிருந்து பிடுங்கி, சேட்டுங்க கைல ஒப்படைச்சமாதிரியும் ஆச்சு!
ஆகமொத்தம், தமிழகத்தின் அன்னாஹசாரே செய்ததெல்லாம், மஹேஸ்வரிகளுக்கும், மக்ரானா உருதுபாய்களுக்குமான பிஸ்னஸ் டெவலப்மென்ட்தான்.
இந்திதான் குஜராத்தி வியாபாரிகளின் இரகசிய மூலதனம்! மாநில மொழிகள் காப்பரேட்டுக்களுக்கு ஒரு சுமை!
இலங்கையில் நாட்டார் வழிபாட்டை அழித்தொழித்த ஆறுமுக நாவலர்
நேபாளம் வழியாக வரும் இந்திய பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது
tamil.oneindia.com - Velmurugan P ; லக்னோ: இந்தியாவில் இருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் திடீரென வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது.
நேபாளத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 வரை குறைவு என்பதால் அதை வாங்க அந்த மாநில மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விற்பனையாகி வருகிறது. சில மாநிலங்களில் 100ஐ நெருங்கி வருகிறது.
நமச்சிவாயம்.. இதான் பாஜக.. ரங்கசாமிக்கு ஆப்பு.. கொந்தளிப்பில் 2 கட்சிகள்.. புதுச்சேரி கூத்து
Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "நமச்சிவாயம், நமச்சிவாயம்" என உச்சரிப்பதே நமது லட்சியம் என்று புதுச்சேரி பாஜக மேலிடப் பார்வையாளர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியைச் சேர்ந்த, 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.. நாராயணசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க தேவை எழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமும் தோற்று போய், காங்கிரஸ் அரசு கவிழ்ந்தே விட்டது..
நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததும், என்ஆர் காங்கிரஸின் தலைவர் ரங்கசாமிதான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்டது..
காரணம், இவர்தான் புதுச்சேரியை அன்று கட்டிப்போட்டவர்.. மூத்த தலைவரும் கூட.. தன் அரசியல் திறனால் பல சிக்கல்களை சாமர்த்தியமாக தீர்த்தவர்..
எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்! - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி!
அதையொட்டி, திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக நாளை முதல் பெறவிருக்கிறது. இதில் திமுக சார்பில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோட்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா, இன்று விருப்ப மனு அளித்தார்
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு முதன்முதலில் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார்.
மேலும் திமுகதான் திருநங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால், திமுகவின் சார்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தலைவர் ஸ்டாலினால் வாய்ப்பு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் செல்வப் பெருந்தகை கமல்ஹாசனின் கட்சியில் சேர இருப்பதாக தகவல்!
மின்னம்பலம் : தலைநகர் சென்னையில் தமிழக காங்கிரஸுக்கென சில கிரவுண்ட் ஒர்க்கர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் கராத்தே தியாகராஜன். ஆனால் அவரை தென் சென்னை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி நீக்கினார். அதன் பின் காங்கிரஸில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அண்மையில் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸுக்கு அடுத்த களச் செயற்பாட்டாளராக இருக்கும் இன்னொருவரும் காங்கிரசுக்கு டாடா காட்டப் போகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காங்கிரஸைக் கரைக்கப் பலவிதமான திட்டங்களைப் போட்டுவருகிறது பாஜக. மாநில நிர்வாகிகளிடமும், முன்னாள் இன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடமும் பாஜக பிரமுகர்கள் தொடர்பிலிருந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.70 இலட்சம் கோடி! பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் 62 ஆயிரம் ரூபாய் கடன்
1. ரூ.5.70 லட்சம் கோடி கடன், பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன் சுமை, ஆட்சியாளர்கள் நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
2. திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டுவிட்டது.
கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.
3. தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர்.
அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார்? - அதிர்ச்சி கொடுத்த IMA
இந்தியாவிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த போது, சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. அப்போது மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது மருத்துவர்களும்,சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.
ஸ்கூட்டியை மீட்கும் போது அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!
இதனால் ஹசினா பேகம் தனது வாகனத்தை நீரிலிருந்து மீட்க முயன்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இரு சக்கர வாகனத்துடன் அவரும் அடித்துச் செல்லப்பட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் டெண்டர்கள் ரத்து - ஸ்டாலின் அறிவிப்பு
விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை 5 லட்ச ரூபாய் அபராதம்!
சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது மணல் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு, டெல்லி சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருவெம்பாலபுரத்தில், கடற்கரைப் பகுதியில் மணல் ஆலை அமைப்பதற்காக, 2012ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரிக்கு, வைகுண்டராஜன் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
Killing Fields of Jaffna - யாழ் குடாநாட்டின் கொலைக்களம் எச்சரிக்கை, Warning
திங்கள், 22 பிப்ரவரி, 2021
அன்னா ஹாசாரே பாணியில் சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக கடை விரிக்கிறது?
திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் . மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே/ அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான் இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே உள்ளது .
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு இன்னொரு ஆட்டுக்கார அண்ணாமலை ரேஞ்சாக இருக்கலாமோ?
போயிங் 777: இயந்திரக்கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள்
\BBC :அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. .. கடந்த சனிக்கிழமை டென்வெரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
இதனால், அவசரமாக அந்த விமானம் தரையிறங்க கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த எஞ்சினின் சில பாகங்கள் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தகவலின்படி போயிங் 777 ரக விமானங்களை அங்குள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் மட்டுமே இயக்கி வருகிறது. அதே ரக விமானங்கள் சில ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இயக்கப்படுகின்றன.
இரட்டை இலையில் ஜெயித்தவரெல்லாம் பாஜகவுக்குப் போய்விடுவார்கள்- திருமா
இன்று புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சியை மோடியின் கும்பல் கவிழ்த்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.