சனி, 12 மார்ச், 2022

இமயமலை மர்ம சாமியார் இவர்தானா? உண்மையை போட்டுடைத்த CBI..!

tamil.goodreturns. :  இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில்

ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையெ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளும் இருந்து வருகின்றது.
இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில் நடந்த மோசடிகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
அதிலும் நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை இன்னும் அதிர வைத்தது.
மர்மமான இமயமலை சாமியார்   

என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குனராக 2013 - 2016 வரையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி தரப்பு வாதம் கூறியது. குறிப்பாக என்.எஸ்.இயின் முக்கிய முடிவுகள் அனைத்தும் யாரோ ஒரு இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டு நடந்துள்ளது. அனுபவமில்லாத ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல் என்எஸ்இ ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.
யார் அந்த இமயமலை யோகி
யார் அந்த இமயமலை முறைகேடு வழக்கில் யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவள் ஒரு ஆண்..என்னால் வாழ முடியாது..’ உச்ச நீதிமன்றத்தை மிரள வைத்த பாலியல் உறவு வழக்கு..

 tamil.asianetnews.com - Raghupati R  :  தனது மனைவிக்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதால் அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்ற ஆணின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
முதலில் மனுவை விசாரிக்கத் தயங்கிய நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய பெஞ்ச், அந்த நபர் தனது மனைவிக்கு ஆண்குறி மற்றும் கருவளையம் இருப்பதாக மருத்துவ அறிக்கையை வெளிப்படுத்தியதை அடுத்து,
மனைவியிடம் பதில் கேட்டனர். ஒரு குறைபாடுள்ள கருவளையம் என்பது ஒரு பிறவி கோளாறு ஆகும்.
இதில் ஒரு திறப்பு இல்லாத கருவளையம் யோனியை முழுமையாகத் தடுக்கிறது.
மூத்த வழக்கறிஞர் என்.கே. மோடி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (ஏமாற்றுதல்) இன் கீழ் ஒரு கிரிமினல் குற்றம், மனைவி "ஆணாக" மாறியதால் செய்யப்படுவதாக பெஞ்ச் முன் கூறினார்.

பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை – சர்ச்சை தகவல்களால் மெளனம் கலைந்த நாடுகள் – முழு விவரம்

BBC - Tamil :  பாகிஸ்தான் வான் பகுதியில் 124 கி.மீ ஊடுருவி அங்குள்ள மண்ணில் விழுந்த இந்திய ஏவுகணை, தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியிருக்கிறது இந்திய அரசு.
நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் அரசு, அது குறித்து விசாரிக்க உயர்நிலைக்குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
முன்னதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து தங்கள் நாட்டு வான் பகுதியில் விழுந்த இந்திய ஏவுகணை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பயணிகள் விமானங்களுக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்துமாறும் அதன் தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.

ராகுல் காந்தி குறித்து சர்ச்சை கருத்து! அமெரிக்கா நாராயணன் மீது நடவடிக்கை.. கே.எஸ் அழகிரி

 Vigneshkumar  -   Oneindia Tamil  : சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து அமெரிக்கா நாராயணன் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு வலுவான கம்பேக்கை கொடுக்க முடியும் என 5 மாநில தேர்தலைச் சந்தித்த காங். கட்சிக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த பேச்சுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ள நிலையில், பலரும் தலைமை குறித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Social media-வில் வன்மக் கருத்துகளை பதிவிட்டால்..” : முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

 கலைஞர் செய்திகள் - விக்னேஷ்  : குற்றங்களின் விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது போலிஸாரின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற- மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் சொல்றதா இருந்தா- இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை- உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.

துணை நடிகை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்.. சென்னையில் .. இருவர் கைது .

மாலைமலர் : சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துணை நடிகை வீட்டில் இருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனடியாக துணை நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர்.

கார்த்திகை செல்வனின் நேர்பட பேசு நிகழ்ச்சியால் வசமாக சிக்கிய கொலை குற்றவாளி கோகுல்ராஜ்

 Karthigaichelvan  :  வணக்கம் நண்பர்களே...
உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும், வாழ்த்துக்கும்  நன்றி !
 கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பில் "நேர்படப்பேசு" நிகழ்ச்சி சாட்சியமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது... குரலற்றவர்களின் குரலாக இயங்கி வரும்  புதிய தலைமுறை குழுவுக்கான அடையாளம் இது.  உண்மையின் பக்கம் நின்று  பேசும் பல ஊடகவியலாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்வு இது....
 கோகுல்ராஜ் வழக்கின் சாட்சியம் என்பது ஊடக அறத்திற்கான ஒரு சாட்சியமும் கூட...

மாயாவதி : எங்கெல்லாம் சமாஜ்வாதி முன்னணியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்.

 Vijayasankar Ramachandran :  தேங்க் யூ பெஹன்ஜி!
வரவிருக்கும் ஃபிரண்ட்லைன் இதழில் பத்திரிக்கையாளர் நளின் வர்மா எழுதியிருக்கும் கட்டுரையிலிருந்து சில துளிகள்:
பிஎஸ்பி தொண்டர் ரன்வீர் ஜாத்தவ்: “தேர்தலில் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகர் இருங்கள் என்று சொன்ன பெஹன்ஜி (மாயாவதி), எங்கெல்லாம் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்.
பட்டதாரி இளைஞரான முகேஷ் குமார்: “எங்கள் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள்தான் முன்னணியில் இருக்கிறது.
அகிலேஷ் வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். நான் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்கக் கூடாது?”
ரன்வீர்: “மாயவதிக்கு கணிசமான தொகுதிகள் கிடைத்தால் அமைச்சரவை அமைப்பதிலும், பஹுஜன்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுப்பதிலும் அவர் பிஜேபிக்கு கட்டளையிட முடியும்.”

வெள்ளி, 11 மார்ச், 2022

தெலுங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்ட காணொளி

 Noorul Ahamed Jahaber Ali -  e Oneindia Tamil  :  ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவுக்கு இடது கையில் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், தலைநகர் ஐதராபாத்தின் சோமாஜிகுடாவில் அமைந்துள்ள யசோதா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி ஷோபா, மகள் கவிதா, மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் ஆகியோர் உடன் சென்றனர்.

உபியில் 10 அமைச்சர்கள் படுதோல்வி.. 47 இடங்களை இழந்த பா.ஜ.க : உபி யில் செல்வாக்கை இழந்த யோகி!

 கலைஞர் செய்திகள் : உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருந்தாலும் 10 அமைச்சர்கள் படுதோல்வியடைந்திருப்பது யோகிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், 273 தொகுதிகளை வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட வாக்கு சதவீதம் கடுமையாக சரித்துள்ளது.

மம்தா பானர்ஜி : காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்-

 மாலைமலர் : சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024ல் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது போதும்.
உத்தர பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல், அந்த இயந்திரங்களை தடயவியல் சோதனை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை - கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்?

May be an image of 1 person, outdoors and monument

Arul Raj :  ராஜீவ் கொலைக்குற்றாவாளி பேரறிவாளனின்  ஜாமீன் விசயத்தில் திமுக இனியாவது  உஷாராக வேண்டும்…
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைக் கண்டு திமுகவினர் ஆர்ப்பரிக்கின்றனர். மு க ஸ்டாலின் செம கெத்து, மாஸூ என்றெல்லாம் மார் தட்டுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு முக்கியமான வரலாற்று விஷயத்தை அடியோடு மறந்து விட்டார்கள்.
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்தான் அது.
முதலில் பேரறிவாளன் விவகாரத்தை விட்டுவிட்டு இலங்கையின் புலிகள் விவகாரத்தை பார்ப்போம். பிரபாகரன் தலைமையிலான புலிகள் எப்போதுமே திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் கண்டு கொண்டதே கிடையாது. அவர்கள் நெருக்கம் காட்டியது எல்லாமே அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரிடம் தான்.
புலிகள் திமுகவை முழு அளவில் எப்போதுமே மதித்ததும் கிடையாது. நம்பியதும் கிடையாது.

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

மின்னம்பலம் :உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெற்ற மிகப் பெரிய வெற்றியைப் போலவே காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய தோல்வியும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
403 இடங்கள் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில்
காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். உத்தரபிரதேச மாநில தேர்தல் பணிகளை அவரே முழுமையாக கவனித்தார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்.. பாஜக ஆட்சிக்கு எதிராக கொந்தளிப்பு நடந்த உ பி - ஹத்ராசில் பாஜக அமோக வெற்றி

 Logi  - e Oneindia Tamil    : முழு நாட்டையே கலங்க வைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த ஹத்ராஸில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். ஆனாலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி 2020 செப்டம்பர் 29-ம் அப்பெண் உயிரிழந்தார்.

107 ஆண்டுகளுக்கு பிறகு அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

May be an image of text that says '107 ஆண்டுகளுக்கு பிறகு அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு'

Chinniah Kasi  : தீக்கதிர்  :  1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் 107 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.  
கடல்சார் வரலாற்றில் மிக உயரமான கப்பல் விபத்துகளில் ஒன்று அண்டார்டிகா கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
1915 ஆம் ஆண்டில் அண்டார்டிக் கண்டத்தை கடக்க ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது எண்டூரன்ஸ் கப்பல் பனிக்கட்டியால் நசுக்கப்பட்டது.  
தற்போது இந்த கப்பலை கண்டறிய 2022 பிப்ரவரி ஒரு பயணக் குழு, பெருமளவில் சேதமடையாத நிலையில் இந்த கப்பலை அப்படியே 3,008 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது.

வியாழன், 10 மார்ச், 2022

காங்கிரஸ் கட்சிக்கு RSS,VHP, ABVP, பஜ்ரங்தள் போல் targeted vote bank என்று எதுவும் இருக்கிறதா?

UP Elections: Priyanka Gandhi To Address Congress Rally In Mahoba,  Bundelkhand

விஜய்  :  2014-ல் இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போது கூட பஞ்சாபில் அருண் ஜெட்லியை எதிர்த்து போட்டியிட்ட அமரீந்தர் சிங் 1 லட்சம் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். 2017- ம் ஆண்டு அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் அமரீந்தர் சிங். நவ்ஜோத்சிங் சித்து பேச்சை கேட்டு அவரை மாற்றி சன்னியை முதல்வராக்கி பிறகு அமரீந்தரர் சிங் கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி இன்று அவரும் தோற்று காங்கிரஸ்ம் தோற்று விட்டது.

திமுக எம்.பி. என் ஆர் இளங்கோவின் மகன் விபத்தில் உயிரிழப்பு!

 மின்னம்பலம் : திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ். வயது 21. சென்னை விஐடி கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். ராகேஷின் நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த வேத விக்னேஷ். இவரும் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் வயது 21.
இருவரும், TN 02 CC 1000 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா தார் ஜீப்பில், சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுள்ளனர். ராகேஷ் ஜீப்பை ஓட்டியுள்ளார்.

4 மாநிலங்களில் பாஜக ஆட்சி- உபி . உத்தரகாண்ட் கோவா மணிப்பூரில் . பஞ்சாபில் ஆம் ஆத்மி அசுர வெற்றி

 மாலைமலர் : 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது.
காலை 8.30 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின. 5 மாநில தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச தேர்தல் முடிவைத்தான் நாடு முழுவதும் மக்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.
உத்தரபிரதேசத்தில் இந்த தடவை 4 முனைப்போட்டி ஏற்பட்டு இருந்தது. ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அப்னாதளம், நிசாத் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
4 முனைப்போட்டி ஏற்பட்டாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜனதாவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவியது. இதில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை தொடர்கிறது.
ஓட்டு எண்ணிக்கையின் போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

தமிழ்நாட்டை ஏற்கனவே பல ஒவைசிக்களும் மாயாவதிகளும் சீரழித்துவிட்டார்கள் - எல் ஆர் ஜெகதீசன்

May be an image of 4 people
May be an image of 5 people, people standing and indoor

LR Jagadheesan  : “தமிழ்நாட்டிலயும் ஒரு மாயாவதி ஒரு ஒவைஸி இருந்தா போதும் … சோலிய முடிச்சிர்லாம்” ஆதிஷா விநோத்.
தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே செய்யவேண்டிய சோலிகளை ஏறக்குறைய முடித்தும் விட்டார்கள்.

2001 தேர்தலில் தமிழ்நாட்டின் ஒவைசிகள் பாபர் மசூதியை இடிக்கும் கரசேவைக்கு ஆதரவாக அனைத்திந்திய அளவில் ஒன்றிய அரசின் கூட்டத்திலேயே கர்ஜித்த “பெண் சிங்கத்தை”
மதசார்பற்ற மாணிக்கம் என்று தலைமேல் தூக்கி கொண்டாடி
தேர்தலில் நிற்கவே நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட குற்றவாளியை தமிழ்நாட்டின் முதல்வராக்கி
நம் சமகால தமிழ்நாட்டின் அரசியல்/சமூக/பொருளாதார சீரழிவை வேகப்படுத்தும்

பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா..!??

 Kandasamy Mariyappan : பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா..!??
எனது பார்வை  !
என்னவோ, பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தவர்களைப் பிடித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சேர்த்தது மாதிரி எல்லாரும் ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.!
இந்தியாவில் ஏதேனும் உருப்படியாக ஒரு வேலையாவது செய்கிறார்களா?
லஞ்சம் வாங்கியவர்களை பிடித்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை தண்டிக்க சரியான ஒரு சட்டம் இல்லை.!
பல மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லை.!
சுண்டக்கா மாதிரி இருக்கிற இலங்கை நம் மீனவர்களை தூக்கி கொண்டு போவதை தடுக்க திராணி இல்லை.!
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்க தெம்பில்லை.!

Election Results 2022 Live 5 மாநில தேர்தல்:வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

 மின்னம்பலம் : உத்தரப் பிரதேசம் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பஞ்சாப், கோவா உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.
இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை தேர்தல் நடந்தது. இங்கு 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்தன. இங்கு ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவியாக ஒரு தேயிலை தொழிலாளியும்.. திமுகவின் மற்றோரு சாதனை

“தேயிலை தொழிலாளியும் சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!

கலைஞர் செய்திகள்  :  சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!
“தேயிலைத் தோட்டத் தொழிலாளியும் உயர்பதவிக்கு வர முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான் சாத்தியம்” என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில்தான் ஒரு சாதாரண மனிதர்கூட உயர் பதவிக்கு வரமுடியும் என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளி அந்தோணியம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் 45 கோடி மோசடி 11 பேர் கைது!

 மின்னம்பலம் : சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.45 கோடி பணம் மோசடி செய்த விவகாரத்தில் இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் உட்பட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, நிரந்தர வைப்பு நிதியாக ரூ.100 கோடி செலுத்தப்பட்டது.

புதன், 9 மார்ச், 2022

இஸ்லாமிய திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தங்களின் ( Muslim Marriage Divorce and Acts - MMDA Reform)

No photo description available.

Sharmila Seyyid  :  சட்டம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும், மார்க்கம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாமிய திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தங்களின் ( Muslim Marriage Divorce and Acts -  MMDA Reform) அவசியம் குறித்து அறிவூட்டும் இரு நாள் வதிவிட நிகழ்வொன்று கொழும்பில் நடந்தபோது நானும் அங்கு இருந்தேன்.
”எங்களுக்கு மெய்யாகவே இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டம் குறித்துத் தெரியவில்லை” என்பதை பெரும்பாலான சட்டம் படித்தவர்களும், மார்க்கம் படித்தவர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதைக் காண முடிந்தது.
அனுபவமிக்க சட்டத்தரணிகளையும், மார்க்க அறிஞர்களையும் கொண்டு இவர்களுக்கான முதல்நாள் நிகழ்வு நெறிப்படுத்தப்பட்டிருந்தபோதும் இரண்டாம் நாள் நிகழ்வின் கலந்துரையாடல் பகுதியில் சில இளைஞர்கள் எழுப்பிய கேள்விகள் பெரும் ஏமாற்றத்தையே அளிப்பதாக இருந்தன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

 மாலைமலர் : சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மீனவர்கள் இந்தோனேசியா கடல் எல்லையில் கைது!

Kanyakumari fishermen arrested off Indonesian waters

நக்கீரன் செய்திப்பிரிவு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் உரிய சான்றிதழ்களுடன், கடந்த பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி அன்று அந்தமான் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்பிடி விசைப்படகில் சென்றனர். பின்னர், அங்குள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, இந்தோனேசியா கடல் எல்லைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

உ.பி.யில் பாஜகவுக்கு கடும் பின்னடைவா? 2017 தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளை பறிகொடுக்கும்

உத்தர பிரதேச தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது பாஜக தோல்வியை நோக்கி செல்கிறது என்று சில கணிப்புக்கள் கூறுகிறது அகிலேஷ் யாதவ ஆட்சியை பிடிக்கிறார் என்று அந்த ரகசிய கணிப்புகள் கூறுகிறது

 Mathivanan Maran  -   Oneindia Tamil  :; லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதுதான் பொதுவாக எக்ஸிட் போல் தெரிவிக்கும் முடிவுகள். ஆனால் 2017 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக சுமார் 100 தொகுதிகள் வரை பறிகொடுத்துதான் ஆட்சியை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு மொத்தம் 202 இடங்கள் தேவை. 

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர்: தவிக்கும் பெற்றோர்!

 மின்னம்பலம் : உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா வந்துள்ளனர்.
இதனிடையே ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்கஉக்ரைன் ராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களும் போரிட வரவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். பொது மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் வழங்கப்பட்டன. அதுபோன்று ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வெளிநாட்டுத் தன்னார்வலர்களுக்கும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் -அமைச்சர் தலைமையில் ஆலோசனை

file video

 மாலைமலர் : பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள், 2017-2018 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் -அமைச்சர் தலைமையில்
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் இன்று (09.03.2022) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மூலம் நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் மற்ற துறைமுகங்களிலிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இயக்கப்பட்டு வந்தது. இக்கப்பல்கள் இயக்க போதுமான திறன் குறைந்துவிட்ட காரணத்தால் 2017-2018 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

கோகுல்ராஜ் வழக்கு அதிமுக ஆட்சியில் ... ஒரு பார்வை


Bilal Aliyar :
2015 ஜூன் 23-ந் தேதி இரவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி கும்பிட சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடினர்.
ஜூன் 24-ந் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர்.
2015,செப்டம்பர் 18-ந்தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை
டிசம்பர் 25-ந்தேதி யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கந்தாஹர் ஏர் இந்திய விமான கடத்தல் (1999-ம்) பாகிஸ்தான் பயங்கரவாதி கராச்சியில் சுட்டுக்கொலை..!

 தினத்தந்தி : 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்,  கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்ட விமானம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்துக்கு சென்றது.
விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் இந்திய ஜெயில்களில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென்று எடுத்து செல்லப்படுகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

 Rajkumar R  -   Oneindia Tamil :  லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்து மதத்திற்கு மாறிய இளம்பெண்..மாமனரை தூக்க வாட்ஸ் ஆப்பில் பக்கா ஸ்கெட்ச்..வசமாய் சிக்கிய 5 பேர்.!இந்து மதத்திற்கு மாறிய இளம்பெண்..மாமனரை தூக்க வாட்ஸ் ஆப்பில் பக்கா ஸ்கெட்ச்..வசமாய் சிக்கிய 5 பேர்.!

செவ்வாய், 8 மார்ச், 2022

குடும்பத் தலைவி பெயரில் வாரிய வீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (08/03/2022) மாலை 07.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மகளிரணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கென தனி கல்விக் கொள்கை: அமைச்சர் பொன்முடி

 மின்னம்பலம் : தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, தமிழ்நாட்டுக்கென தனி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் மற்றும் கணித தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். தமிழகத்தில், உலகளவில் உயர்ந்த கல்வி தரம் கொண்டுவரப்படும். 

கோகுல்ராஜ் கொலை வழக்கு யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை.. இறக்கும்வரை சிறைவாசம் ஜாமீன் கிடையாது

 மாலைமலர் :சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை .சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரும், நாமக்கல்லை சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கங்களின் வெற்றிகரமான நீர் மேலாண்மை! Lift Irrigation - ஸ்கீம் தண்ணீர்

No photo description available.
No photo description available.

RS Prabu  : கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கங்களின் வெற்றியும், விவசாயிகளின் சுயநிதி நீர் மேலாண்மைத் திட்டங்களின் எதிர்காலமும்.
கூட்டுறவு நீரேற்றுப் பாசன சங்கம் என்பது விவசாயிகள் ஒன்றிணைந்து ஆற்றுக்கு அருகில் கிணறு வெட்டி, மின் இணைப்பு பெற்று, இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்துக்கு சொந்த செலவில் குழாய் அமைத்து தண்ணீரை எடுத்துச்சென்று பயன்படுத்துவதாகும். இதை Lift Irrigation என்று கோப்புகளிலும், "ஸ்கீம் தண்ணீர்" என்று பேச்சு வழக்கிலும் அழைக்கிறார்கள்.

PTR நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம்.! TN நிதி அமைச்சர் பி.டி.ஆர்

 tamil.samayam.com : "நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம். அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும்" என, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் திமுகவைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

திங்கள், 7 மார்ச், 2022

5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்..? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

 நக்கீரன் : உ.பி., பஞ்சாப், கோவா, உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடந்துள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் உ.பி. தேர்தலின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.
உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களை வெல்லும் அதன்மூலம் ஆட்சி அமைப்பது அல்லது ஆட்சி அமைக்கும் கட்சியின் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கமுடியும்.
இதனால் தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை உ.பி தேர்தல் முடிவுக்காக பெருவாரியான மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி தேவை” : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மின்னம்பலம் : Vignesh Selvaraj : ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடரும் வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7-3-2022) கடிதம் எழுதியுள்ளார்.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்!

 மின்னம்பலம் : தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.
அப்போது இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பாக ஆலோசனை பெற்று சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டதாக அவர் மீது செபி குற்றம்சாட்டியது. அந்தச் சாமியாரின் ஆலோசனைப்படிதான் ஆனந்த் சுப்ரமணியனை தேசிய பங்குச் சந்தையின் சீஃப் ஸ்ட்ரேடஜிக் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாகவும் தெரிவித்தது.

மருத்துவ மாணவர்களை மொட்டை அடித்து ராகிங்- உத்தரகாண்ட் ...

மாலைமலர் :  எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் என்னிடம் வரவில்லை என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்டுவானி மருத்துவ கல்லூரியில் அடிக்கடி ராகிங் நடப்பதாக புகார்கள் எழுவதுண்டு.
கடந்த 2009-ம் ஆண்டு இந்த கல்லூரியில் ராகிங்கை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹல்டுவானி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 27 எம்.பி.பி.எஸ், முதலாம் ஆண்டு மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வரிசையாக நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த 27 மாணவர்களும் முதுகில் பையை சுமந்தபடி கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.

இருளர் சமூக பெண் மல்லிகா பேரூராட்சி தலைவராக பதவியேற்பு!

cuddalore district irular women Municipality president

நக்கீரன்   : கடலூர் மாவட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை (04/03/2022) நடைபெற்றது.  
இதில் கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி இருளர் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  
இதில் தலைவர் பதவிக்கு இருளர் சமூகத்தைச் சேர்ந்த 10- வது வார்டு உறுப்பினர் மல்லிகா போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் மல்லிகா, கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

1967 இல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.க அரசின் முதல் அமைச்சரவை பட்டியல்

பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசின் முதல் அமைச்சரவை பட்டியல் எப்படி இருந்தது தெரியுமா?

கலைஞர் செய்திகள்  : ஜனனி : தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைத்த நாள் (06-03-1967) இன்று.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிலேயே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த மாநில கட்சி என்ற பெருமையும் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கே சேரும்.
சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை, எழுத்தராக தொடங்கிய அவரது வாழ்க்கையை பி.ஏ., எம்.ஏ. என்ற பட்டதாரியாகவும், கல்லூரி ஆசிரியராகவும் , இந்தி திணிப்பை எதிர்த்த போராளி என நீண்டது.

உக்கிரேன் என்ற நாடே இருக்காது ரஷ்ய அதிபர் புடின் பகிரங்க எச்சரிக்கை

 தினகரன்  : ‘உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும்,’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது.

திமுக கோவை மகளிரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கம்

தொடர் நீக்கம்: அடுத்து மீனா

மின்னம்பலம் : கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட சலசலப்புகள், உள்குத்து தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கியமானவர்களை கூட ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று மார்ச் 6 காலை கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில்... மாலையில் கோவை மாநகரைச் சேர்ந்த திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கோவை மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் மீனா ஜெயகுமார் பேசும்போது... கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கை மேடையிலேயே ஒருமையில் பேசினார்.

தமிழ் இலக்கியத்தில் 7500 வருட கடல்கோள் (சுனாமி) தாக்குதல் சான்றுகள்


 இங்கர்சால் நார்வே
  : 7500 வருட சுனாமி சான்று
தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன. கடலுக்குத் தமிழில் “முந்நீர்” என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் “முந்நீர்” என்ற சொல் வருகிறது.
(புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் “சுனாமி” எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

யாழ்ப்பாணத்தில் 1961இல் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை தி மு க தோழர்கள் .. வரலாறு


செல்லபுரம் வள்ளியம்மை
:  1961 இல்  யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தின்  முதல் நாள் நிகழ்வை தலைமையேற்று நடத்திய இ தி மு க தோழர் இளஞ்செழியன்!
1961 ஜனவரி 20 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் சத்தியாகிரக போராட்டத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் கலந்து கொள்வதென்று தீர்மானிக்க பட்டது.
இது பற்றிய ஆய்வுக்காக  1960 டிசம்பர் 19 ஆம் தேதி  பண்டாரவளை நகரசபை மண்டபத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒரு கலாச்சார மாநாடு நடத்தப்பட்டது
இந்த மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர்களான திரு மு திருச்செல்வம் (முன்னாள் அமைச்சர் - நீலன் திருச்செல்வத்தின் தந்தை)   
மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சாம் தம்பிமுத்து ,
தமிழரசு கட்சியின் செனேட்டர் மாணிக்கம்,
அகில இலங்கை இஸ்லாமிய முன்னணியின் தலைவர் எம் எஸ் அமீது போன்றோரும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

உக்கிரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை: உலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!

 Manikandaprabu S -  Samayam Tamil :  உக்ரைன் மீது தங்கள் நாட்டு விமானங்கள் பறப்பதற்கு உலக நாடுகள் தடை விதிப்பது, அங்கு நடைபெற்று வரும் போரில் அந்த நாடுகள் இணைவதற்கு சமம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை. 

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தோடு மல்லுக்கட்டும் அய்யப்பன் எம்எல்ஏ: நீக்கத்தை அடுத்து என்ன?

அமைச்சரோடு மல்லுக்கட்டும் அய்யப்பன் எம்எல்ஏ:  நீக்கத்தை அடுத்து என்ன?

  மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தமிழகமெங்கும் திமுக பெரிய அளவு வெற்றி பெற்றிருந்தாலும்.... அந்த வெற்றிக்குப் பின்னால் திமுக கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் பல்வேறு சலசலப்புகளும் எழுந்திருக்கின்றன.
இந்த வகையில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால்.... கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அய்யப்பன் இன்று மார்ச் 6ஆம் தேதி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை திமுக தலைமை மேயர் வேட்பாளராக அறிவித்தது. தனது ஆதரவாளருக்காக மேயர் பதவியை குறிவைத்து காத்திருந்த எம்எல்ஏ அய்யப்பன் இதனால் ஏமாற்றம் அடைந்து தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை குழுக்களாகப் பிரித்து மறைமுக தேர்தலின்போது அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். இதன்

விசிக + பாமக கூட்டணி .. திமுக தொண்டர்கள் முறையீடு ..

சிறுத்தைகள் - பாமக கூட்டணி? திமுக புகார்!
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தலில் பங்கேற்றனர்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுகவுக்கு உள்ளேயும் திமுக கூட்டணிக்கு உள்ளேயும் கடுமையான போட்டி நிலவியதால் திமுக தலைமையே இந்தப் பதவிக்கு இன்னார் என்பதை மாவட்டச் செயலாளர்களோடு ஆலோசித்து முடிவு செய்து அறிவித்துவிட்டது. பின்னணியில் மார்ச் 4ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் அதன்படியே சுமுகமாக நடைபெற்ற நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டனர்.

பிளாட்ஃபார்முக்கு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. வெற்றி போதை கண்ணை மறைச்சிடுமாம்.. யாருக்கு சொல்றாரு?

Mari S  - tamil.filmibeat.com :  சென்னை: இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் புதிதாக யார் இந்த SAC எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முதல் வீடியோவிலேயே தனது மகன் விஜய்க்கு மறைமுகமாக சொல்வது போல எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தில் திட்டமிடல் இல்லையா?
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த வருத்தம் இருப்பது ஏன்?
யார் இந்த SAC யார் இந்த SAC?

திமுகவின் பாட்ஷாக்களும், யாசீன்களுமே இன்றைய சமூக சூழலுக்கான சமுதாய தலைவர்கள்!!

May be an image of standing

Bilal Aliyar  : திமுகவில் கட்சி பதவியாக இருந்தாலும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளாக இருந்தாலும்,
திமுகவின் அடிப்படை கட்டமைப்பை அறிந்து கட்சிப் பணியாற்றுபவர்களுக்கு நிச்சயாக வாய்ப்புகள் உண்டு என்பதை திமுக தலைவர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடுத்துகின்றார்.
இஸ்லாமியர்களுக்கு மேயர் பதவிகள் இல்லையா?
என்று விமர்சனம் வைப்பவர்கள் யாரும், பலம் பொருந்திய திமுக கூட்டணியில் நின்றும் கூட, முஸ்லிம் லீக்கின் மூன்று வேட்பாளர்களுமே, (சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி போன்ற முஸ்லிம்கள் நிறைந்த தொகுதியில் ஏன் தோற்றார்கள் என பேசுவதே இல்லை?

யாழ்ப்பாணம் திராவிடன் மாத இதழ் 1927 இல்! யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்.. வரலாறு

 kopinatht.com : தில்லைநாதன் கோபிநாத் 2020-03-14  - சாதி எதிர்ப்புப் போராட்டங்கள்
1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். சுன்னாகத்திலிருந்தும் அயற் கிராமங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புங்குடுதீவு போன்ற தொலைவிலிருந்த கிராமங்களில் இருந்தும் கூட சிலர் வந்திருந்தனர். அவர்களில் குறித்த பிரதேசங்களின் ஊர்ப் பெரியவர்களும் பிரமுகர்களும் இருந்தனர்.
கந்தரோடை ஆங்கிலப் பாடசாலை முகாமையாளரும் கிராம நீதிமன்ற நீதிபதியுமாகிய கந்தையாபிள்ளை கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசத்தொடங்கிய கந்தையாபிள்ளை ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” எனும் கருத்தைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார்.