சனி, 15 டிசம்பர், 2018

ISCKON ..சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

வினவு :அரசு உத்தரவிட்டாலும் பள்ளி
மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்க்க முடியாது என “அட்சய பாத்ரா” எனும் என்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கர்நாடக அரசு பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
அதில் ஒரு என்.ஜி.ஓ-தான் “அட்சய பாத்ரா”. இந்நிறுவனம் இந்துத்துவா அமைப்பான “இஸ்கான்” (ISCKON) அமைப்பின் துணை நிறுவனமாகும். கர்நாடகத்தின் மிகப்பெரிய மதிய உணவு வழங்குனராக இந்த என்.ஜி.ஓ செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நன்கொடைகள் பெறுவதன் மூலமாக கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.43 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜக ரூ.100 கோடி கொடுத்தது? வாக்குகளை பிரிக்கவா? முன்னாள் மாக்சிஸ்ட் எம்பி

“சிபிஎம் சார்பில் ராஜஸ்தானில் வெறும் 27 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டனர். ஏறக்குறைய 4 லட்சம் மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுபடுத்த மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. மூன்று தொகுதிகளில் பாஜகவின் வெற்றிக்கும் மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. பில்லிபங்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்மேந்திர குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 278 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் 2659 மதச்சார்பற்ற வாக்குகளைப் பெற்றுள்ளார்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜக ரூ.100 கோடி கொடுத்ததா?மின்னம்பலம் : மதச்சார்பற்ற வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி பாஜகவை வெற்றிபெற வைக்க அக்கட்சியிடமிருந்து சிபிஎம்மின் பிரகாஷ் காரத் பிரிவு 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியிலிருந்து 1999-2009 வரை இருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல்லா குட்டி.
மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009ஆம் ஆண்டு சிபிஎம்மிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்த அவர், கண்ணூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ராகுல் காந்தி : விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் .. ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநிலங்களில் ..

raghulதினமணி :புது தில்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்ர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 3 மாநிலங்களிலும் விவசாயக் கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். 
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதல்வர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி.. தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதிதினத்தந்தி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.

மகிந்தா பதவி விலகினார் .நாளை ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி ஏற்கிறார்! விடியோ

சற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுஸ்டானங்களை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.

tamil.samayam.com :இலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே"
இந்த வழக்கை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது. நான்கரை
ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
 முன்னரே கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார்.

சிம்புவின் பெரியார் குத்து ஆல்பம் ! எச் ராஜாவை குறிவைத்து ..விடியோ


வெப்துனியா :நடிகர் சிம்பு சினிமாக்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனம்,
பாடல் என அனைத்திலும் அவருக்கு விருப்பம் அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆல்பங்களில் பாடி வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் பெரியார் குத்து என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.
ரமேஷ் தமிழ்மணி இதற்கு இசை அமைத்திருக்கிறார் . இதனை தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ரெபெல் ஆடியோ நிறுவனம் இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்துள்ளது .
 உலக புகழ் பெற்ற பாடகர் ஏகான் (Akon) உடன் லவ் அந்தம் பாடலை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள "பெரியார் குத்து ஆலப்பும்" சிம்புவின் மாஸான நடனத்தால் அலறவிடுகிறது.

பா.ரஞ்சித்தின் கருத்து சனநாயகத்திற்கானதே.. சனாதனமல்ல!


இரஞ்சித்தின் கருத்து சனாதனமல்ல, சனநாயகத்திற்கானதே!
மின்னம்பலம்: வாசுகி பாஸ்கர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித், தலித் மக்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளுக்கு அரசியல் ரீதியாகத் தொடரும் மௌனத்தையும் மெத்தனப் போக்கையும் சுட்டிக் காட்டினார். தலித் இயக்கங்களும் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவையைக் கூறினார். அதற்கான முன்னோட்டமாக வருகின்ற நடாளுமன்றத் தேர்தலில் ஏழு தனித் தொகுதிகளில் மட்டும் வெற்றி தோல்வி குறித்துக் கவலைகொள்ளாமல் முயன்று பார்க்க வேண்டும் என்று கூறியியிருந்தார்.
இது தலித் மேடைகளில் காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டுவரும் கருத்துகளின் தொடர்ச்சிதான். ஒடுக்குமுறைக்கு எதிரான கோபமாகவும், அரசியல் தேவையாகவும் இது போன்ற கருத்துகள் வெளிப்படுவதாகவே புரிந்துவந்திருக்கிறோம்.

இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கு நேபாள அரசு தடை

இந்திய,ரூபாய் நோட்டு,பயன்படுத்த,நேபாள அரசு,தடைதினமலர் :காத்மாண்டு : நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள, 200 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, நேபாள மக்கள் பயன்படுத்த, அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது. நம் நாட்டில், 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய, 50 - 100 - 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்டை நாடான, நேபாளத்தில், இந்திய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, கொள்முதல்
செய்யவோ அல்லது அந்நாட்டு கரன்சியாகவோ மாற்ற முடியும். இந்நிலையில் நேற்று, நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள, 200 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, நேபாள மக்கள் பயன்படுத்த, அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது.

கர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 12 பேர் உயிரழப்பு .. விசம் கலந்த உணவு .. சதி வேலை


BBC : கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர்.
 டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த சம்பத்தை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சாகியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். "துர்நாற்றம் வீசிய தக்காளி சாதம் எங்களுக்கு வழங்கப்பட்டது," என்று இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
"அதனை உண்ணாமல் எறிந்துவிட்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அதனை சாப்பிட்டவர்கள் வாந்தி எடுக்க தொடங்கி, வயிற்று வலியெனக் கூற தொடங்கினர்," என்று அவர் மேலும் கூறினார்.

பொதுப் பட்டியலை ஒழித்துக்கட்டுங்கள்.. மாநிலங்களின் உரிமை பறி போகிறது .. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்

கண. குறிஞ்சி : பொதுப் பட்டியலை ஒழித்துக்கட்டுங்கள்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று அருமையான ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
" மாநிலங் களின் உரிமை பறி போய்க் கொண்டிருப்பதை எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருப்பது? இதற்கு விடிவுதான் எப்பொழுது? இந்த நோயை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய தேவை வந்து விட்டது. எனவே இந்திய அரசியல் சட்டத்திலுள்ள பொதுப் பட்டியலை ஒழித்துக் கட்ட வேண்டும்" என ஆவேசமாகப் பொங்கியுள்ளார்.
அருமை முதல்வரே, அருமை!
கடந்த 70 ஆண்டுகளாக யாரும் எடுத்துரைக்காத, போற்றிக் கொண்டாட வேண்டிய பரிந்துரை இது.
இந்திய அரசியல் சட்டத்திறுள்ள ஏழாவது அட்டவணைப்படி, அதிகாரங்கள் மூன்று வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளதைப் பலரும் அறிவர்.
ஒன்றியப் பட்டியல் ( Union List )
இந்தப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. பாதுகாப்பு, வெளிநாட்டு நடவடிக்கைகள், தொடர்வண்டி, வங்கி போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசிடம்தான் உள்ளன.
மாநிலப் பட்டியல் ( State List )

அண்ணா அறிவாலயம், ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் சோனியாகாந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


தினத்தந்தி: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த
தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கலைஞர் சிலையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் 16-ந்தேதி மாலை சென்னை வருகை தருகிறார். பின்னர் விமானநிலையத்தில் இருந்து நேராக விழா நடைபெறும் இடத்துக்கு வருகிறார். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் மாலை 5.30 மணியளவில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கலைஞர்  சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்திலும் சோனியாகாந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

EVM ஒட்டு இயந்திரம் வித்தை பலிக்கவில்லையா? அல்லது பாஜக அடக்கி வாசித்ததா?

Periasamy Pnm : இந்த தேர்தலில் EVM TAMPERING பற்றி பல முறை கூறி ாமல் மிக நுட்பமாக பண்ண ஆட்கள் இருப்பதே வழக்கம். அதன்படியே இது நாள் வரை நடந்தது. ஆனால் இவர்கள் இந்த முறை அதை நடைமுறைப்படுத்த சரியான பயிற்சி பெற்ற ஆட்கள் கிடைக்காததால் வடிவேல் பாணியில் அப்புரசன்டிகளை வைத்துப் பண்ணியதால் டீம் மொத்தமும் மாட்டிவிட்டது.
வந்துள்ளோம். அதைமீறி எப்படி காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கேட்கும் தோழர்களுக்கான பதிவு இது. எப்போதும் EVM TAMPERING என்றவுடன் ஒட்டு மொத்தமாக அனைத்து ஓட்டுக்களையும் தாமரைக்கே விழும் படி செய்வதற்கு இவர்கள் முட்டாள்கள் அல்ல. பொய் சொன்னாலும் அதை பொருத்தமாக சொல்வது போல ஒரு பூத் வாக்காளர் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பதிவிட்டு அதை தெரிய
இதை அறிந்து ஒரு parallel BACK- UP PLAN இருந்தது. அதாவது ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடுவது. அதுவும் மத்திய பிரதேசத்தில் அம்பலமாகி பாசக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மாட்டிக்கொண்டனர். அதையும் பிடித்து ஒரு STRING OPERATION மூலம் டேட்டாவை கொணரசெய்தது பத்திரிகையாளர்களையே சாரும்; பின்னர் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சியினரும் விழிப்புடன் இருந்ததால் தப்பித்தது ஜனநாயகம். ஆக EVM என்றைக்கும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றமில்லை.

1984 சீக்கிய கலவரத்தில் கமல்நாத் மீது கொலை குற்றசாட்டு ? மத்திய பிரதேச முதல்வராக எதிர்ப்பு?


தினத்தந்தி :புதுடெல்லி, 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மாறி மாறி கூடுதல் இடங்களை பிடித்து, கடும் இழுபறி நிலவி வந்தது.
 கடைசியில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன.
பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும்,
சமாஜ்வாடி 1 இடத்திலும்,
சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படுகின்றன. 114 இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. எனவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இருப்பினும் முதல்வர் யார்? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்

savukkuonline.com : பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு சேகரிக்கும் நம்பர் ஒன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்; களைப்பே தெரியாமல் தேர்தல் பிரசாரம் செய்வதும் அவர் மட்டுமே. ஆனால் இப்பங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில் தான் நாட்டின் பிரதமரும் கூட என்பதை மோடி சில சமயங்களில் மறந்துவிடுகிறார்.
இந்த நினைவிழப்பின் ஒரு மோசமான உதாரணம் போன வாரம் கண்கூடாகத் தெரிந்தது. ராஜஸ்தானில் சுமேர்பூரில் தேர்தல் கூட்டமொன்றில் டிசம்பர் 05இல் பேசிய மோடி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் VVIP ஹெலிகாப்டர் பேரத்தில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் கிறிஸ்டியன் மிச்செல்லை துபாயிலிருந்து நாடு கடத்துவது பற்றிப் பேசினார்.

கோதண்ட ராமர் சிலை .வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்கிறது .. மக்கள் போராட்டம்

அலறி ஓடினர் tamil.oneindia.com hemavandhana.: வழியெல்லாம் வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்லும் கோதண்டராமர்-வீடியோ திண்டிவனம்: வந்தவாசி பக்கம் வீடுகளில் டம்...டம்.. சத்தம்தான் காதை பிளக்கிறது!!
பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை செதுக்க ஒரே கல்லிலான பாறை தேவைப்பட்டது. இந்த பாறை வந்தவாசி அருகே இருக்கிற கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை அறிந்து 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது.

தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் தெரிவித்த குரங்கு .. கர்நாடகவில்

monkey
webdunia :கர்நாடகாவில் தந்தையை இழந்த மகனுக்கு குரங்கு ஒன்று ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் நரகுந்தா தாலுகாவை சேர்ந்த பாட்டீல் என்பவ்ர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அக்கம் பக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். பாட்டீலின் மகன் தந்தை இறந்த துக்கத்தில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று பாட்டீலின் மகன் தலையில் மேல் அமர்ந்து அவரது தலையை வருடியபடி அவருக்கு ஆறுதல் கூறியது. இது அங்க்ருந்தவர்களை நெகிழச் செய்தது. மனிதனுக்கு இல்லாத பாசம், மனிதனுக்கு இல்லாத நன்றியுணர்வு மிருகங்களுக்கு இருக்கிறது என இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது

கரும்பலகையில் பெயர் எழுதியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி,, விழுப்புரம்

வெப்துனியா :விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவிகள் சிலரை மாணவர்களுடன் தொடர்பு படுத்தி கேலி செய்யும் விதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மிகவும் வருத்தமடைந்தார்கள்.இதனையடுத்து மாணவிகள் 5 பேரும் பள்ளி இடைவேளையின் போது வீட்டுக்கு சென்று எலி மருந்தை தின்றுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் ஐந்து பேரும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை சங்கராபுரம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்லபடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறிந்து சங்கராபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

குட்கா ஊழல்: விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை

குட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன்மாலைமலர் : குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue புதுடெல்லி: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

திருவண்ணாமலை தெருவில் பெண் குழந்தை! வீசி எறிந்த தாய் .. சிரித்தபடி தெருவில் கிடந்த தேவதை

 A girl baby on the street! nakkheeran.in: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டூ களம்பூர் செல்லும் வழியில் பென்னாகரம் என்கிற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தின் சாலையோரம் டிசம்பர் 13ந்தேதி மாலை குழந்தை ஒன்றின் அழுக்குரல் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டுயிருந்தது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் எங்கிருந்து சத்தம் வருகிறது எனதேடிச்சென்று பார்த்தபோது மரம் ஒன்றின் கீழ் துணியால் போர்த்தப்பட்ட குழந்தை சாலையோரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அதை தூக்கி எடுத்தனர்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் சந்தேகம் இல்லை: உச்ச நீதிமன்றம்.. உச்சி குடுமி நீதிமன்றம்?

மின்னம்பலம் : ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அதன் விலை,
கொள்முதல் செயல்முறை ஆகியவற்றில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) தெரிவித்துள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. விமானங்களுக்கு
விலை நிர்ணயம் செய்தது முதல் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் ரஃபேல் விமானம் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும், அதனால் அனில் அம்பானி பலனடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது
எனவே ரஃபேல் ஊழல் தொடர்பாக, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வினித் டண்டா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்தனர்.

சென்னை ஐஐடியில் நவீன தீண்டாம.. சைவ அசைவ உணவு விடுதிகளுக்கு தனிதனி வாயில் ..

சென்னை ஐஐடியில் நவீன தீண்டாமையா?மின்னம்பலம் : சென்னை ஐஐடியில் சைவ, அசைவ உணவுகளுக்கென தனித்தனி நுழைவு வாயிலும், கை கழுவும் இடங்களும் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) தனியார் உணவு விடுதி ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கும், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கும் தனித்தனியே கை கழுவும் இடங்களும், நுழைவு வாயில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்களை மாணவ அமைப்பான அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பகிர்ந்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக ஐஐடியில் நவீன முறையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் மாணவர்களும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி ... திமுக உறுப்பினர் படிவத்தில் ஒப்பமிட்டார் .. விரிவான பேட்டி

tamil.oneindia.com - veerakumaran : முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார்-வீடியோ சென்னை: திமுகவில் இணைந்த முன்னாள் டிடிவி தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, இன்று தனது செய்தியாளர் சந்திப்பில் தினகரன் குறித்து பேச மறுத்துவிட்டார்.
திமுகவில் இணைந்த பிறகு நிருபர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது: கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தளபதி முன்னிலையில் திமுக உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்கள். பாஜகவிற்கு அடி பணிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறது. தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர் ஸ்டாலின். அவர் கரத்தை வலுப்படுத்த திமுகவில் இணைந்தேன்.

ஞாயிறு காலை 10 மணிக்கு ரணில் பதவி பிரமாணம்.. நாமல் ராஜபக்சே : பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ ..

ஞாயிறு காலை 10 மணிக்கு பதவி பிரமாணம் எடுக்க வாங்களேன் - மைத்ரி
ரணிலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
BBC :பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக,
அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வார் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
>எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவொன்றினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 03ஆம் தேதி இந்த இடைக்கால தரையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரம் இல்லை எனத் தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் தடையினை விதித்தது.

ரபேல் - நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் - ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் - ராகுல் காந்திமாலைமலர் : ரபேல் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!

சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!மின்னம்பலம்: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நேற்று காலை 11 மணி முதல் மாலை 7.30 மணி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகம் என 189 இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். ஐந்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சசிகலாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென, பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு, வருமான வரித் துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், டிசம்பர் 13, 14 தேதிகளில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஒட்டு இயந்திர மோசடியை மறைக்க குதிரை பேரத்திலும் ஈடுபடாமல் .. நல்ல பிள்ளை நடிப்பு பாஜகா

amil.thehindu.com- ஆர்.ஷபிமுன்னா ம.பி.யில் ஆட்சி அமைக்கத் தேவையான தனி மெஜாரிட்டி எண்ணிக்கை 116 பாஜக, காங்கிரஸ் இருவருக்கும் கிடைக்கவில்லை. இதற்காக நடைபெறும் என அஞ்சப்பட்ட குதிரை பேரம், மக்களவைத் தேர்தலில் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. ம.பி. சட்டப்பேரவையின் 230 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், காங்கிரஸ் 114, பாஜக 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி மற்றும் கோண்டுவானா கன் தந்திரக் கட்சி தலா ஒன்று பெற்றிருந்தன. சுயேச்சைகளுக்கும் மூன்று தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தது.
இந்த முடிவுகளில் ஆட்சி அமைக்க கிடைக்க வேண்டிய தனிமெஜாரிட்டியான 116 எவருக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு இரண்டு மற்றும் பாஜகவிற்கு ஏழு தொகுதிகளும் குறைவாக இருந்தன.

சபரிமலை ஆர்.எஸ்.எஸ்காரர் தீக்குளித்து சாவு - கேரளாவில் முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு

சபரிமலை விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து சாவு - கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்புதினத்தந்தி :சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்தார். இதனால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரம், சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் உடல்நிலை மோசமானது. அவர் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர் அன்பழகனின் 97-வது பிறந்த நாள் 19 ஆம் தேதி .. விழா கொண்டாடுவதை தவிர்க்க வேண்டுகோள்.

tamilthehindu :தனது 97-வது பிறந்த நாளைத் தொண்டர்கள் கொண்டாடுவதைத்
தவிர்த்திட வேண்டும் என, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளரான க.அன்பழகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார். கருணாநிதி வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், தள்ளாத வயதிலும் அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க தினமும் மருத்துவமனைக்கு வருவார்.
மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதும், தற்போது தலைவராக உள்ள நிலையிலும், கட்சியின் முக்கியச் செயல்பாடுகளுக்கு க.அன்பழகனின் ஆலோசனைகளை அவ்வப்போது ஸ்டாலின் பெறுவார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவுடன் உள்ள க.அன்பழகன், தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். ஆண்டுதோறும் தன்னுடைய பிறந்த நாளுக்கு கலைஞரிடம் வாழ்த்தைப் பெறுவார் அன்பழகன். அதேபோன்று, அண்ணா நினைவிடத்திற்கும், பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்துவார்.

செந்தில் பாலாஜி 50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... நாளை தி.மு.க-வில்

செந்தில் பாலாஜிமாலைமலர் :ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர்: 2006, 2011 சட்டமன்ற தேர்தலில்களில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்த போது அவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தார். பின்னர் 4½ ஆண்டுகளை கடந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. உடனே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். பின்னர் 2016 தேர்தலில் விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதி மாற்றி வழங்கப்பட்டது.
பணப்பட்டுவாடா விவகாரத்தில் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கினார்.

சதிஸ்கார் 31% பட்டியல் பழங்குடி மக்கள் வாக்குகளை தவற விட்ட மாயாவதி .. 25 ரிசர்வ் தொகுதிகள். பெற்றது..?

Don Vetrio Selvini : சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்டியல் மற்றும்
பழங்குடியினர் எண்ணிக்கை 31%. இந்த மாநிலத்தில் மொத்தம் 25 ரிசர்வ் தொகுதிகள். இந்த, 25 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட மாயவதியின் பிஸ்பி கட்சி வெற்றிபெறவில்லை.ஒரே ஒரு இடத்தில் மட்டும் இரண்டாம் இடம் வந்துள்ளது. மற்ற இடங்களில், 3ம் இடத்துக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 4% வாக்குகளை வாங்கியிருக்கிறது.
இந்த 25 தொகுதிகளிலும் 90% இடங்களை காங்கிரசும், 10% இடங்களில் பிஜேபியும் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் தேசிய கட்சிகளை, ஏன் பிஜேபிக்கு கூட வாக்களிக்கிறார்கள், ஆனால் பிஸ்பியை புற்கணிக்கிறார்கள். இத்தணைக்கும் சத்திஸ்கர் என்பது உத்திர பிரதேசத்தின் அருகில் இருக்கும் மாநிலம்.

பாஜகவுக்கு ரஜினி கொடுத்த அல்வா? ம்ம் ரசிகர்களுக்கும் சேர்த்தே அல்லவா அல்வா!

இந்தியா முழுக்க காலூன்றியும் தமிழகத்தில் ஹேரில் கூட மலர முடியாமல் இருப்பது  நாக்பூருக்கு ஆர் எஸ் எஸ் பாஜக  ) பெரும் அவமானமாக இருந்ததாம்.
தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு நகருக்கு  ( நாக்பூர் ஆர் எஸ் எஸ் ) நிதிப்பிரச்சனையில் சிக்கியிருந்த உச்சத்தை (ரஜினியை) அடையாளம் காட்டியுள்ளனர் துக்ளக்(சோ.ராமசாமி + குருமூர்த்தி)அறிவாளிகள் .
பண உதவி செய்வது போல உச்சத்தின் குடும்பத்தை ( ரஜினி குடும்பம்)  தன் கைப்பிடியில் கொண்டு வந்த காவி அதற்கு கைமாறாக அரசியலில் இறங்கச் சொல்லி வற்புறுத்தியதாம்.
பணப்பிரச்சனை, குடும்பத்தினரின் வற்புறுத்தல், காவிகளின் நெருக்கடி என பல பக்கமும் அடிவாங்கிய உச்சம் ( ரஜினி)  பேரே வைக்காத கட்சியை உப்புக்கு சப்பாக ஆரம்பித்தாராம். தினமும் கட்சி ஆரம்பிக்க சொல்லி போன் செய்து தொந்தரவு செய்கின்றனராம். நிம்மதியாக தூங்க கூட விடாமல் தினமும் பிரச்சனையாம். மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கும் உச்சம் (ரஜினி) ஒரே வருடத்தில் மூன்று படம் நடித்து பொருளாதார சிக்கலில் இருந்தும் ஓரளவு தப்பித்து விட்டார். 
இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் லோட்டஸ் காலி எனும் செய்தி அவரது காதில் தேனாக பாய்ந்துள்ளதாம். பணத்தை கொடுத்துவிட்டு கொஞ்சப் பாடா படுத்துனானுங்க? அடிமை மாதிரில நடத்துனானுங்க. ?

வியாழன், 13 டிசம்பர், 2018

வெற்றியை நிர்ணயிக்கும் தலித் கிறிஸ்தவ இஸ்லாமிய வாக்குவங்கி .. 5 மாநில சட்டசபை தேர்தல்..

Adv Manoj Liyonzon : தெலுங்கானா ராஜஸ்தான் சட்டீஸ்கர் மத்தியபிரதேசம் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றாலும் போட்டியிடும் வலிமையுடன் தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் உயர்த்தப்பட்ட சாதியினர், இடைநிலை சாதிகள் மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய தலித் வாக்காளர்கள் என்று வாக்காளர்களை வரையறுக்கலாம். அதில் பெரும்பான்மையாக வாழும் இடைநிலை சாதியினர் சரிநிகராக காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் வாக்களிக்கிறார்கள். உயர்த்தப்பட்ட சாதியினரும் இந்துக்களாக இருப்பதனால் அவர்களின் வாக்குகளும் பெரும்பாலும் பாஜகவிற்கே. ஆக FC மற்றும் BC வாக்குகளை பொறுத்தமட்டில் பாஜகவே பலம் பொறுந்தியிறுக்கிறது.
அதையும் தாண்டி எது தற்போது பாஜகவை தோற்கடித்திருக்கிறது!?
பாஜகவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித் வாக்குகள் தான்.

பாட்னா .. 3 தலாக் கூறிய கணவனை பஞ்சாயத்தில் வெளுத்து வாங்கிய மனைவி

tamiloneindia:  பாட்னாவின் முசார்புர் மாவட்டத்தில், ஊர் மக்கள் முன்னிலையில் தலாக் சொன்ன கணவரை, அங்கேயே வைத்து மனைவி சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இரவு, பெற்றோர்களை எதிர்த்து, ஓடிப்போய் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள், முஹமது துலாரேவும் சோனியா கட்டூனும். பின்னர் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் இருவரும் கணவன் -மனைவியாக வாழத் தொடங்கிய பின்னர், சில மாதங்களுக்கு பின் எழுந்த கருத்து வேறுபாட்டினால் இருவருக்கும் அதிக சண்டைகள் வந்தன.
 ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி! இதனால் இனி, மனைவியுடன் வாழ முடியாது என்று முடிவு எடுத்த துலாரே,

ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே? ( ஜெயமோகனும்? )

பார்ப்பன ரஜினி குடும்பம்  பணிப்பெண்ணை (தலித் ) நிற்கவைத்து படம் பார்க்க வைத்தனர்
மின்னம்பலம் : தான் தொடங்கவுள்ள கட்சிக்கு
ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே?
ஆலோசகராக ரங்கராஜ் பாண்டே வரவுள்ளதாக வெளியான தகவல் குறித்து ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
அரசியலில் இறங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்,, தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் கூறியுள்ளார். அரசியல் கட்சிக்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறார்.
இதற்கிடையே தந்தி டிவியின் தலைமை செய்தியாசிரியராக இருந்த ரங்கராஜ் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிலிருந்து விலகினார். பத்திரிகை துறையில் தொடரப்போவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி கட்சியில் ஆலோசகராவதற்கே பணியிலிருந்து விலகினார் என்ற தகவலும் வெளியானது.இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அதில் உண்மையில்லை, வதந்திதான்” என்று ரஜினி பதிலளித்துவிட்டார்.

கமல் நாத் மத்திய பிரதேச முதலமைச்சர்! அசோக் கெலாட் ராஜஸ்தான் முதலமைச்சர்.. சதீஸ்கார் முடிவாகவில்லை!

ராஜஸ்தான் அசோக் கெலாட் - மத்தியபிரதேசம்  கமல் நாத்
பெரும் இழுபறிக்கு பின்பு பழைய தலைமுறையை சேர்ந்த கமல்நாத் மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதே போல ராஜஸ்தானிலும் அசோக் கெலாட் முதல்வர் பதவிக்கு தெரிவாகி உள்ளார். சதீஸ்கார் மாநில முதல்வர் பதவி இன்னும் தீர்மானிக்க படவில்லை.
NDTV :ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் முதலமைச்சர் யார் என தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நிலவுகிறது. அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பல மணி நேரமாக ஆலோசித்து வரும் நிலையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், இளம் தலைவர் சச்சின் பைலட்டும் முட்டி மோதுகின்றனர். இதனால் இருவரையும் டெல்லிக்கு அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதன் பின்னர் அசோக் கெலாட் ராஜஸ்தான் திரும்பினார்.   அவர் முதலமைச்சராகவும், பைலட் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

சென்னை தெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள் பிடித்து வரப்பட்டனர்

tamil.thehindu.com : கூகுள் மேப் மூலம் அப்போலோ மருத்துவர் உள்ளிட்ட செல்வந்தர்வர்கள் வீடுகளை ஸ்கெட்ச் போட்டு பின்னர் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். கொள்ளையர்களிலும் லோக்கல் கொள்ளையர்கள் முதல் நவீன விஞ்ஞான கொள்ளையர்கள் வரை திருடுபவர்கள் உள்ளனர். சாதாரணமாக வேவு பார்த்து கொள்ளையடிப்பது ஒருவகை என்றால் கூகுள் மேப் உதவியுடன் வசதியானவர்கள் வீடுகளை அட்சர சுத்தமாக அளவிட்டு கோடிக்கணக்கில்  கொள்ளையடித்து போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர்கள் தெலுங்கானாவில் சிக்கினர். சமீபத்தில் சென்னை திநகரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலகுமார் வீட்டில் அக்டோபர் 22-ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது.

தினகரனின் நாடகம் முடிவுக்கு வருகிறது : செந்தில் பாலாஜி விலகல் குறித்து வைகைச்செல்வன் பேட்டி

Vaigaichelvannakkheeran.in - rajavel : அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல கட்சிகளுக்கு தாவியவர். பல கட்சி சாயங்களை பூசிக்கொண்டவர். சிந்தாந்த ரீதியாக கொள்கை ஈடுபாடோ, லட்சிய ஈடுபாடோ இல்லாத செந்தில் பாலாஜி, தனி நபர் வளர்ந்தால் போதும் என்று நம்புகிற ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், ''தன்னுடைய வளர்ச்சியை மாத்திரமே நம்புகிறவர் அந்த இயக்கத்தின் புற்றுநோய் போல. மாறாக கட்சியினுடைய வளர்ச்சியை நம்பி தன்னை அதற்காக அர்ப்பணித்துக்கொள்பவர்களே நல்ல தொண்டர்கள்'' என்று சொல்லுவார். அதைப்போல ஒவ்வொரு கட்சிக்கும் பலபேர் இருப்பார்கள். அந்த வகை பட்டியலில் செந்தில் பாலாஜியும் அடங்குவார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

srilanaka supreme court says sirisena s decision to dissolve parliament was unconstitutional and illegalSamayam Tamil | :இலங்கை நாடாளுமன்ற கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய ஊட்டமைப்பு ஆகியா கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில்,இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றுள்ளது. அதனால் அவரது அரசு செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது.

BBC :பிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது


பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நடந்த பிரதமர் தெரீசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார். தெரீசா மே நேற்றைய தினம் வெற்றிபெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.
பழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றார் தெரீசா மே. சுமார் 63% வாக்குகளை அவர் வென்றுள்ளார்.
2016-ல் நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் ஒப்பந்தம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் கோபம் கொண்ட அவரது கட்சியின் 48 எம்.பிக்களின் கடிதம் காரணமாக பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ வின் பார்ப்பனிய குமுறல்

வினவு செய்திப் பிரிவு: இரண்டு ஆயிரம்
ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பனிய சாதித் திமிர் பிடித்த வெளிவந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காவி வெறியர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது.  மாட்டு மூளையை வைத்துக்கு கொண்டு தங்களது தோல்விக்கு என்ன காரணம் என ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மாட்டு மூளை பகுத்தறிவுள்ள மனிதர்களைப் போலவா சிந்திக்கும்? இதோ பார்ப்பனிய ஆதிக்கப் பேச்சுக்குப் பெயர் போன உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ.  சுரேந்திர சிங்,  ‘உயர்சாதியினரை பகைத்துக்கொண்டால் பாஜக வெல்ல முடியாது’ என தெரிவித்துள்ளார்.
“சவர்னா சாதிகளின் (உயர்சாதிகள்)  உணர்வுகளைப் புண்படுத்தினால், பாஜக தேர்தலில் வெற்றி பெற முடியாது. எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் முடிவு பாஜக- வை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறது” என ஐந்து மாநில தேர்தலில் பாஜக-வின் தோல்வி குறித்து கருத்து சொல்லியிருக்கிறார் சுரேந்திர சிங்.

ரங்கராஜ் பாண்டேயை தந்தி டிவி கடாசியதால் வெளிவரும் ரகசியங்கள்...

லணடனில் வாங்கிய சொத்துக்கு தந்தி டிவி குழுமம் பாண்டேவின் உதவியை அணுகியதாகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிம்மியின் உதவியோடு, ஒரு ஆயுத வியாபாரியை அந்த தொகையை லண்டனில் கொடுக்க வைத்தார்
வெப்துனியா : தந்தி டி.வியின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகிவில்லை. தந்தி டிவி குழுமத்தால் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தந்தி டிவியின் தலைமை செயல் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
அந்த வீட்டியோவிலி ‘ நான் தந்தி டி.வி. யின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் ஊடகத்துறையில் இருந்து விலகவில்லை. நான் தொடர்ந்து ஒரே வேலையை செய்வதால் ஏற்படும் அயர்ச்சியின் காரணமாகதான் எடுத்துள்ளேன். தந்தி டிவி குழுமத்தோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் என்னை ராஜாவைப் போல பார்த்துக் கொண்டார்கள்.
என்னுடைய ராஜினாமாவால் இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகமாகும் என நம்புகிறேன். இந்த முடிவை தந்தி குழுமமும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டது. இது புரிதலோடு எடுக்கப்பட்ட ஒரு பிரிதல். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. எனது இத்தனை வருட ஊடக வாழ்க்கையில் அதிகமாக சம்பாதித்தது உங்களைத்தான். உங்களை என்றும் இழக்க மாட்டேன். பயணங்கள் எப்படி அமையும் எனத் தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

சுந்தர் பிச்சையை வறுத்து எடுத்த அமெரிக்க காங்கரஸ் விடியோ ....கூகுளில் முட்டாள் என ட்ரம்ப் ...


NDTV : "முட்டாள் என்ற வார்த்தையோடு ட்ரம்ப் புகைப்படம் ஒத்து போயிருக்கலாம்" என்ற சுந்தர் பிச்சை தெரிவித்தார்
அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒருவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் எழுப்பிய கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் தேடல் எப்படி நடக்கிற‌து என்பது பற்றி விளக்கும் போது '' கூகுளில் முட்டாள் என தேடினால் அதிகமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் வருவது ஏன்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை '' எதையும் கூகுள் உள்நோக்கத்துடன் செய்வதில்லை. அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், அதிகமான பதிவுகளில் உள்ள வார்த்தைகள் என தேடி அல்காரிதம் செட் செய்யப்பட்டிருக்கும். அதிலிருந்து சிறந்த தேர்வை கூகுள் தேர்வு செய்யும். ஒருவேளை அந்த வார்த்தையோடு ட்ரம்ப் புகைப்படம் ஒத்து போயிருக்கலாம்" என்ற அர்த்தத்தில் தெரிவித்தார்.

அதிமுக - அமமுக இணைப்பில் அமித் ஷா மகன்!

அதிமுக - அமமுக இணைப்பில் அமித் ஷா மகன்!
மின்னம்பலம் : அதிமுக - அமமுக இணையும் என்பதற்கான மேலும் சில அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், “அதிமுக - அமமுக விரைவில் இணையும். இணைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘இமயமலை - காளான்’ என்று உவமை சொன்னாலும், நடப்பதே வேறு என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
டிசம்பர் முதல் வாரத்தில் தினகரன் டெல்லி சென்றபோது அவரை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து அதிமுக - அமமுக இணைப்பு பற்றிப் பேசியதாக தகவல் வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷா மகன் ஜெய் ஷா, தினகரனைச் சந்தித்து பேசியுள்ளார் என்றும் தகவல்கள் படபடக்கின்றன. 60 நிமிடத்துக்கும் மேல் நடந்த அந்தச் சந்திப்பில், “அமமுக -அதிமுக இணையுங்கள். கட்சி உங்களிடம் இருக்கட்டும். ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கட்டும். மந்திரி சபையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் பிரிந்திருப்பதால் திமுகவுக்குத்தான் பலம் கூடும்” என்று அமித் ஷாவின் தகவலை அவரது மகன் டிடிவியிடம் தெரிவித்துள்ளாராம்.

அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை ? கண்டறிந்த சீனா.?

By Vivek Sivanandam /tamil.gizbot.com: விண்வெளி பந்தயத்தில் ரஷ்யாவை வெற்றிகொள்ள நம்பிக்கையில்லாத அமெரிக்க அரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கியது போன்று மாயபிம்பத்தை ஏற்படுத்த இரகசிய செட் அமைத்து படம்பிடித்ததாக சதிகோட்பாட்டு வல்லுநர்கள் எப்போதும் நம்புகின்றனர். ஆனால் தற்போது அந்த சதிகோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் புதிய ஆதாரமாக, கடந்த சனிக்கிழமை ஆளில்லாத சீனா விண்கலமான சேன்ஜ்3 (Chang’e 3) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. நிலவில் பழுப்பு நிற மண்? 
சீன அரசு தொலைக்காட்சியின் தகவலின் படி, சேன்ஜ்13 விண்கலம் பூமியில் இருந்து 13 நாள் பயணத்திற்கு பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்தில் யூடு அல்லது ஜேட் ரேபிட்(Jade Rabbit or Yutu in Mandarin Chinese) என அழைக்கப்படும் சூர்யசக்தியில் இயங்கும் ரோபோட் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

114 அடி உயர திமுக கொடி.. இந்தியாவிலேயே மிக உயரமான கொடி கம்பத்தில் ... அண்ணா அறிவாலயத்தில்

Samayam Tami :  நாட்டிலேயே மிக உயரமாக, 114 அடி உயரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கழக இருவண்ணக் கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னள் முதலமைச்சருமான மு. கருணாநிதி, கடந்த ஆகஸ்டு 7ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்பட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி நடக்கயிருக்கிறது. இகுறித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆணவத்தை வீழ்த்தி அசைகிறது நம் வெற்றிக்கொடி!.
விரைவில் வெற்றிக்கொடி இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் பறக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சோனியா காந்தி : 5 மாநில தேர்தல் பா.ஜவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி

மாலைமலர் : பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ்
கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.