சனி, 13 மே, 2017

லஞ்சம் கொடுக்க மறுக்கும் கார் கம்பனிகள் .. வெளிமாநிலங்களுக்கு ஓடும் வேலை வாய்ப்புக்கள்!

விகடன் : உச்ச நீதிமன்றம் மூடச் சொன்ன டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் சென்று போராடுகிறது தமிழக அரசு. ஆனால், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரஇருந்த கார் தொழிற்சாலையை இங்கு திறக்க விடாமல், ஆந்திராவுக்கு விரட்டி அடித்திருக்கிறது. ஊழலும், லஞ்சமும், கமிஷன் கலாசாரமும் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீட்டு வாய்ப்புகளை வேறு மாநிலங்களுக்குத் துரத்திக் கொண்டிருக்கிறது!
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம், தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ். இந்தியாவில் சுமார் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தன் கார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்த கியாவின் முதல் சாய்ஸ், தமிழகமாக இருந்தது.
தமிழகத்தில் பொருத்தமான இடம் அமையாவிட்டால் குஜராத்தோ, ஆந்திராவோ  செல்லத்  தீர்மானித்தார்கள்.
ஆனால், இந்த வாய்ப்பைத் தமிழகம் பயன்படுத்திக்கொண்டதா?
தமிழ்நாடுதான் கியாவின் முதல் தேர்வாக இருந்ததற்குக் காரணங்கள் உண்டு.
ஹூண்டாய் மோட்டார்ஸ் சுமார் 25 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருவதால், அதன் அருகிலேயே தன் தொழிற்சாலையை அமைக்க கியா மோட்டார்ஸ் விரும்பியது.

உள்நாட்டு விற்பனை தவிர, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்ய சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் அதற்கு வசதியாக இருக்கும் என்று கருதியது.
சேஸி, ஆக்ஸில், சீட், இன்ஜின், கியர்பாக்ஸ், டயர், வீல், ஹெட்லைட்... என்று நூற்றுக்கணக்கான உதிரிப்பாகங்களை அசெம்பிளி செய்யும் - அதாவது கோக்கும் இடம்தான் கார் தொழிற்சாலை.
இந்த உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சென்னையைச் சுற்றிலும்தான் அதிகம். ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ எனப் பெருமை கொண்டது சென்னை.

அதிமுக அரசுக்கு சிண்டெல் நிறுவனத்தின் கொள்கைப்படி, சட்டவிரோதமாகப் பணம் கொடுக்க முடியாது

சிக்கலில் சிண்டெல்!வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி நிறுவனங்களில் முதன்மையானது, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிண்டெல். சென்னையைத் தாண்டி இரண்டாம் நிலை நகரங்களிலும் தங்கள் அலுவலகங்களை அமைக்க அது 2013-ம் ஆண்டு முடிவெடுத்தது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 ஏக்கர் நிலத்தையும் வாங்கியது. சுமார் 26,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப் பெரிய ஐ.டி பார்க் நிறுவத் திட்டமிட்ட சிண்டெல், முதல்கட்டமாக 2,500 பேர் வேலை செய்ய வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் ஒரு கட்டடத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்தது. கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையடைந்துவிட்ட நிலையில், இன்னும் இது செயல்பட ஆரம்பிக்கவில்லை. காரணம், தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கட்டடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருப்பதால், எல்லா ஒப்புதல்களும் விண்ணப்பிக்கப்பட்ட அதே வேகத்தில் ஒற்றைச் சாளர முறைப்படி வழங்கப்பட வேண்டும். ஆனாலும், இது நடக்கவில்லை. காரணம் வேறென்ன? பாழாய்ப்போன கமிஷன்தான். சிண்டெல் நிறுவனத்தின் கொள்கைப்படி, சட்டவிரோதமாகப் பணம் கொடுக்க முடியாது. அதனால் சிக்கலில் நிற்கிறது அந்த நிறுவனம். vikatan

ஊழல் விமர்சனத்துக்கு ஆளான ஏ.கே.விஸ்வநாதன் சென்னை புதிய போலீஸ் ஆணையாளராக நியமனம்

சென்னை பெருநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவர் சென்னையில் முன்பு பணியாற்றிய போது பல சர்ச்சைகள் சந்தித்துள்ளார்.
By: Mayura Akilan சென்னை: பெருநகர காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சென்னையில் பணியாற்றியபோது சர்ச்சைகளில் சிக்கியவர் ஏகே விசுவநாதன். 1990ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஏ கே விஸ்வநாதன், தனது பணி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலில் பங்கேற்று, பல வழக்கறிஞர்கள் படுகாயமடைய காரணமாக இருந்தார் ஏ.கே.விஸ்வநாதன் என புகார் எழுந்தது. ஆனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு என்று ஏ.கே.விஸ்வநாதன் கூறினா.

பொன்.ராதாக்கிருஷ்ணன் :தமிழகத்தை குண்டர்கள் ஆளக்கூடாது!

தமிழகத்தை குண்டர்கள் ஆளும் நிலை ஒருபோதும் வந்துவிடக்கூடாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
மே 13, புதுச்சேரியில் நடந்த அஞ்சல் துறைக் கட்டடத்திறப்பு விழாவில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “உள்ளாட்சி தேர்தலில் கட்சியை பயன்படுத்திக் கொள்ள திமுக பாசாங்கு செய்கிறது. அவர்களின் பாசாங்கு ஒருபோதும் பலிக்காது. கருணாநிதியின் வைரவிழா அரசியல் ஆதாயத்துக்காக கொண்டாடப்படுகிறது. தவறு செய்பவர்களை அழைத்து வைரவிழா கொண்டாடப்படுகிறது, எனவே வைரவிழாவில் நாங்கள் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டோம். சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடுவதற்கு டாஸ்மாக் உத்தரவிட்டது.

மைத்திரேயன் (பாஜக உளவாளி) :எடப்பாடி ஆட்சி தானாகவே கவிழும்; ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவார்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தன்னுடைய பாரம் தாங்காமல் தானே விரைவில் கவிழும். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார். ஓபிஎஸ் அணி ஆதரவாளரான அவர் இன்று (சனிக்கிழமை) சென்னை தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விரைவில் கவிழும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார். தமிழகத்தில் சட்டமும் இல்லை; ஒழுங்கும் இல்லை. மாநிலத்தில் சட்டமும் ஒழுங்கும் தேடக்கூடிய நிலையில் உள்ளது. சட்டம் ஒழுங்கை மட்டும் முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்றளவில்தான் இருக்கிறது. பல்வேறு முதலீட்டாளர்களும் தமிழகத்தில் இருந்து வெளியேறுகின்றனர். தமிழகத்தில் சில நாட்களாகவே மர்ம மரணங்கள் நடைபெறுகின்றன. நாமக்கல்லில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

இளையராஜா இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு ! மோடி வடபகுதிக்கும் செல்லவேண்டும் நெடுமாறன் கூஜா!

troll mafia : டம்ளர் தொம்பி: அண்ணே மோடி இலங்கை போய்டாருனே இன்னும் நீங்க ஏதும் கண்டிக்கவே இல்லையே டம்ளர் சீமார்: கண்டிச்சா அதை மதிச்சு பயணத்தை கேன்சல் பண்ண மன்மோகனா இல்ல ரஜினியா? இது மோடிடா. என் காரு பணம், வந்த கதையிலிருந்து விஜயலட்சுமி கதைவரைக்கும் தோண்டி நொங்கெடுத்துறுவாருடா. அதனால் நாம வெயிட் பண்ணுவோம். ஏதாவது புள்ளபூச்சி இலங்கை கெளம்பும் அதை மிரட்டி வசூல்பண்ணிக்கலாம். தொழில்ல பொறுமை வேணும் தொம்பி. ... திராவிடத்தால் வீழ்ந்தோமடா தொம்பி
இளையராஜா வீடு முற்றுகைப் போராட்டம்! தந்தை பெரியார் திராவிடர் கழகம் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘’வரும் ஜூலை மாதம்  யாழிலும், கொழும்பிலும் இசை நிகழ்வு  நடை பெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக  இசைஞானி  இளையராஜா  கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார்  திராவிடர்  கழகத்தின் ஏற்பாட்டில் வரும் 14 .05 .2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11  மணியளவில்  சென்னையில் உள்ள இளையராஜா  வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். சமீபத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிடத் தயாராக இருக்கிறோம். அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்’ என்று திரி கொளுத்திப் போட்டார். இதைத் தொடர்ந்து ஜெ. மரண விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. உண்மையில் அப்படி வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கின்றனவா? 

சினிமா உலகிலும் அரசியல் வாழ்விலும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அவற்றில், அதிகம் பேசப்பட்ட படங்கள் ஏராளம். ஆனால், அப்போலோவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படங்கள் பற்றிய மர்மம்தான் இப்போது வைரல்.

மானாமதுரையில் நிலாச்சோறு .. இந்து இஸ்லாமிய கிருஸ்தவர்கள் ஒன்றாக கூடி ...

‘மதமா... அப்படினா?’ - மானாமதுரையில் ஓர் அசத்தல் விழா!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஒவ்வோர் ஆண்டும் வைகையில் அழகர் ஆற்றில் இறங்கிய நாளுக்கு மறுநாள், இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஆற்றின் கரையோரத்தில் அமர்ந்து ‘நிலாச்சோறு’ சாப்பிடுவது அப்பகுதியினரின் வழக்கம்.
இந்நிலையில் இந்த விழாவனது கடந்த சில ஆண்டுகளாக, மதங்களைக் கடந்து மனித மனங்களை ஒன்றிணைக்கும் விழாவாகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த ‘நிலாச்சோறு’ உண்ணும் விழாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களும் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று நிலாச்சோறு சாப்பிட்டு, இந்து மக்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.
தனிப்பட்ட முறையில் பல இந்து மக்களின் அழைப்பை ஏற்று, நெருங்கிய நண்பர்களாக விளங்கும் பிற மதத்தினரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரண்பேடியின் அடுத்த அடாவடி :ஊழல் கண்காணிப்பு தனியார்வசம் ஒப்படைப்பு!

ஊழல் கண்காணிப்பு தனியார்வசம் ஒப்படைப்பு: கிரண்பேடிஅரசுத் துறைகளையும், பொது நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும் போராடி வருகிறார்கள். . ஆனால் மத்திய அரசோ, அரசுத் துறைகளையும், பொது நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி வாட்ஸ்அப்பில் ஓர் அதிர்ச்சி செய்தியை அனுப்பியுள்ளார்.
“புதுச்சேரி மாநிலம் சிறிய அளவில் இருப்பதால், ஊழல்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ராஜ் நிவாஸ் பெயரில் ஒரு ஐ.டி-யும், வாட்ஸ்அப் எண் ஒன்றும் பொதுமக்களுக்குத் தெரிவித்திருந்தேன். அதில் ஊழல் புகார்கள்தான் அதிகமாக வருகிறது. ஊழல் புகார்களைக் கண்காணிக்கும் துறை செயல்படவில்லை. அதனால் ஊழல்களைக் கண்காணிக்கத் தனியார் ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி? கடும் எதிர்புக்களையும் பொருட்படுத்தாமல் ...

மரபணு மாற்றுக் கடுகுக்கு விரைவில் அனுமதி!மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்குக் கொண்டுவர, அவற்றைப் பயிரிட அனுமதிக்கக் கோரி, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்டது.
இந்நிலையில் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்ய ஆதரவான அறிக்கைகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), தயார் செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கையாக அனுப்பிவைத்து ஒப்புதல் கோரியுள்ளது.

பன்னீர்செல்வம் :எங்களால் ஆட்சி கலையாது! ஓஹோ அப்படீன்னா நிச்சயம் கலையும்?


எங்கள் அணியால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலையாது’ என ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
மே 12ஆம் தேதி சேலத்தில் நடந்த கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி எங்களால் கவிழும் சூழல் ஏற்படாது. நாங்கள் எதற்காக தனியாகப் பிரிந்து வந்தோமோ, அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும். எனவே, ஆட்சியைக் கலைப்பது எங்கள் நோக்கமல்ல. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்றனர்” என்று அவர் கூறினார். மின்னம்பலம்

L.R.ஈஸ்வரி .. முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை ஒலித்த லூர்து மேரி

Shalin Maria Lawrence லூர்து மேரியும் அறுபதுகளின் பெண்ணியமும்
"ஓ....அழகு ஒரு மேஜிக் டச்ச் .....ஓ ஓ ஓ ...ஆசை ஒரு காதல் சுவிட்ச்ச்... " இந்த இடத்தில் நம் மனதின் ஸ்விட்ச்சை அனாயசமாக ஆன் செய்வார் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .1950 இன் கடைசி வருடங்களில் லூர்து மேரி ராஜேஸ்வரி என்கின்ற பெண் எல் ஆர் ஈஸ்வரியாக சினிமா இசையுலகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார் . அதுவரையில் ஒருவித மையலில் இருந்த தமிழ் திரை இசையை திடுப்பென்று கிளர்ந்தெழ செய்கிறார் தன் வசிய குரலில் .
தமிழ் திரையிசை வரலாற்றில் ஒரு குரல் பெண்ணியம் பேசியதென்றால் அது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் தான் .
அத்தனை வருடங்களாக தமிழ் சினிமா பாடல்களில் ஹீரோயின்களின் குரல்கள் ஆண்மை நிறைந்த ஹீரோக்களிடம் கொஞ்சி கொண்டிருந்தன ,கெஞ்சி கொண்டிருந்தன ,கைவிடப்பட்டு கதறிக்கொண்டிருந்தன ,ஆறுதலை தேடிக்கொண்டிருந்தன ஆனால் எல் ஆர் ஈஸ்வரியின் குரலோ மிஞ்சி கொண்டிருந்தது . அந்த குரல் அடக்கப்பட்ட காமத்தின் தேவைகளின் கூக்குரலாய் இருந்தது ,அந்த குரல் பெண்ணுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை பண்பாட்டு போர்வைக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்தது ,அந்த குரல் மட்டுமே முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை சத்தம் போட்டு உரைத்தது .

பஞ்சாப் பிரிவினைவாதிகள் விழாவில்) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ... இந்தியா கண்டனம்

டோரண்டோ: கனடாவில் ‛‛கல்சா'' தின விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கிய மதத்தினர் பெருமளவு வசிக்கின்றனர். இவர்களில் பலர் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக கோரி போராடி வந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கனடாவின் டோரன்டோவில் கடந்த ஏப். 30ம் தேதி ‛‛கல்சா' தினம் கொண்டாடப்பட்டது. இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டே கலந்து கொண்டார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 12 மே, 2017

ஹிட்லரை மிஞ்சிய RSS / பாஜக நிறவெறி ... வெள்ளைநிற உயரமான குழந்தைகள் தேவையாம்!வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.
சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !எங்களது குறிக்கோள் என்னவென்றால், உத்தமமான சந்ததியினரை உற்பத்தி செய்வதும் அவர்கள் மூலம் வலிமையான பாரதத்தைப் படைப்பதும் தான்” என்கிறார் மருத்துவர் கரிஷ்மா மோகன் தாஸ் நார்வானி.
”பெற்றோர் அறிவற்றவர்களாக இருந்தாலும், படிப்பறிவற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது குழந்தை அதீத புத்திசாலியாக பிறக்கும். சரியான முறைகளைப் பின்பற்றினால், கருப்பான நிறம் கொண்ட, குள்ளமான பெற்றோர்களுக்கும் கூட நல்ல வெளுப்பு நிறத்திலும் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை உயரமாகவும் வளரும்” என்கிறார் மருத்துவர் ஹித்தேஷ் ஜனி. இவர்கள் கர்ப விஞ்ஞான கலாச்சாரத் திட்டத்தின் (Garbh Vigyan Sanskar Project) தேசிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள்.
நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான வித்யா பாரதியின் துணை அமைப்பான ஆரோக்கிய பாரதியினுடையது. மேற்படி திட்டத்தின் நோக்கம் ’உத்தம சந்ததி’ ஒன்றை உருவாக்குவது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்!

பூவண்ணன் கணபதி: அரசின் அடிப்படை கடமை என்ன என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத புத்திசாலி கூட்டம் உருவாகி இருப்பது வேதனை தான்.
படிக்கின்ற அனைவரும் நூத்துக்கு நூறு வாங்க வேண்டும் என்பதா அரசின் வேலை. படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றா?
பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி படிப்பை நிறுத்தாமல் 12 ஆண்டுகள் படிக்கும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை .
பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெரும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்தவர்களில் பெரும்பான்மையானோர் கல்லூரிகளில் சேரும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

நீதிபதி கர்ணன் மன்னிப்பு கோரிக்கை நிராகரிப்பு! நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க தயார் என..

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறியதையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து கொல்கத்தா
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை திரும்பப் பெறக்கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தனது அதிகார எல்லையை மீறி தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தார். அதன் உச்ச கட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன்னை சாதி ரீதியாக அவமதித்துவிட்டனர் என்றும் அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை மீறிவிட்டனர் என்றும் கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் உள்பட 7 நீதீபதிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

திருமாவளவன் : உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்கிறதா?

சுப்ரீம் கோர்ட்டு சட்டப்படி நடக்கிறதா? : திருமாவளவன் கேள்வி!நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மே 12ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வில் ரேங்க் பட்டியல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளாகத் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இந்தப் பதவிகளை நிரப்புவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? கடந்த சிலநாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவ-மாணவிகளிடம் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்த பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர் ரெட்டிக்கு நிபந்தனை விடுப்பு!

சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்தது. பின்னர், அவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அரசாணையை ஏற்று பத்திரப்பதிவு தடை உத்தரவை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ஏற்று, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் தளர்த்தி உள்ளது. அரசாணையை ஏற்று பத்திரப்பதிவு தடை உத்தரவை தளர்த்தியது உயர்நீதிமன்றம் சென்னை: விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : ரேங்க் பட்டியல் இடம் பெறவில்லை!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.
1200 மதிப்பெண்ணுக்கு 1180 மதிப்பெண் மேல் 1171 பேர் பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: | 1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1171 பேர் |
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வு துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் |

ராஜபக்சேவுடன் மோடி சந்திப்பு!

கோப்புப் படம்.இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று கொழும்பு சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார். அதன் பின்னர் மோடி அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை கொழும்புவில் சந்தித்தார். பிரதமரின் இலங்கைப் பயணத்தில் ராஜபக்சேவை சந்திப்பது திட்டமிடப்படவில்லை. இருப்பினும், முன்னாள் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதா அப்போலோவில் விடியோ ஆதாரம் இருக்கிறதாம்..

நரைத்த தலையுடன் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் 4 வீடியோக்களை சசிகலா கோஷ்டி எந்த நேரத்திலும் ரிலீஸ் செய்ய கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
By: Prabha சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் சசிகலா உறவினர் வசம் இருக்கிறதாம்... இதை எந்த நிமிடத்திலும் சசி கோஷ்டி ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் இன்னும் தீரவில்லை. அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டதாக சசிகலா தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சசிகலா உறவினர்களிடம் நாம் விசாரித்த போது, ஜெயலலிதா சிகிச்சை காலத்தில் செல்போனில் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. நர்ஸ் ஒருவர் மூலம் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகளை சசிகலா உறவினர் ஒருவர் ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் என்றனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது... 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது. அந்த முடிவை அனைவரும் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.

பாகுபலி : ஜெய் பிரம்மாண்டம் ! ஜெய் அடிமைத்தனம் !

அடிமைத்தனம் குளோசப்பில் வந்தாலும் சரி, பிரம்மாண்டமான செட்டுக்களில் வந்தாலும் சரி, கம்யூட்டர் கிராபிக்சில் உப்பினாலும் சரி பாகுபலியின் ஒரே முதலும் கடைசியுமான உணர்ச்சி இதுதான்.
பாகுபலி  ஓரிரு நாளில் சுருட்டும் வசூல் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி
விடுமாம். இந்த வெற்றிக்கு காரணம் என்ன? பாகுபலியில் மனதையும், பணத்தையும் பறிகொடுக்குமளவு இழப்பதற்கு ஏராளமோ, ஓரளவோ வைத்திருப்பவர்கள் என்ன கூறுகின்றார்கள்?
“சினிமா நேசிப்பை தனது ரத்த நாளங்களிலேயே பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியால் மட்டுமே இத்தகைய படத்தை எடுக்க முடியும். பொது மக்கள் ரசனை, கதை – காட்சி – நுட்பம் பால் கொண்டிருக்கும் நம்பிக்கை – விடாமுயற்சி – படைப்புத்திறன், கட்டப்பாவின் பொட்டிலிருந்து, குதிரைக்கு அடிக்கப்பட்ட லாடம் வரை காட்சிகளின் துல்லியமான செய்நேர்த்தி…… என்று அடுக்குகிறார்கள். இவர்களைத் தவிர்த்து ஊடகங்கள் அனைத்தும் “ஜெய் பாகுபலி” என்றே அடிவயிற்றுக் குரலில் ஆர்ப்பரிக்கின்றன.

படத்தில் பிரம்மாண்டம் இருப்பதால் பட்ஜெட், வசூல் இரண்டுமே அதி பிரம்மாண்டமாக இருந்தாக வேண்டும் என்பது இயக்குநர், தயாரிப்பாளரின் விருப்பம் மட்டுமல்ல. சினிமா – ஊடக முதலாளிகளின் தேவையும் கூட.
பிரதமரான பிறகு மோடி எப்படி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக அல்ட்ரா சவுண்டு புகழ் அர்னாப் கோஸ்வாமி போன்றோர் நம்மை கருதவைக்க வற்புறுத்தினரோ, ரஜினி மாபெரும் நட்சத்திரமான பிறகு அவரது சூப்பர் மொக்கைகள் கூட செமையான மாணிக்கங்களென்று ஏன் தமிழ் ஊடகங்கள் வியக்கச் சொன்னதுவோ, ஏ -1 குற்றவாளி ஜெயா இன்றும் எப்படி தந்தி டிவி பாண்டே, புதிய தலைமுறை கார்த்திகேயன் போன்றோரின் காந்தி காமராஜ் வரிசையில் வருகிறாரோ அப்படித்தான் பாகுபலியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

நீட் தேர்வு – அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !

பிழைப்புவாதமும் அடிமைத்தனமும்
நமது  மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.
டந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 11 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு விதிமுறைகளை சி.பி.எஸ்.ஈ உருவாக்கி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கையாக வெளியிட்டது. அதில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி உள்ளிட்ட விவரங்களோடு, உடைகளுக்கான விதிமுறைகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. அவை,
  • கருப்பு நிற உடைகளையோ, அடர் நிற உடைகளையோ அணியக்கூடாது. வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
  • ஆண்களும் பெண்களும் முழுக்கை மேலாடை அணியக் கூடாது. மேலாடைகளிலோ, கீழாடைகளிலோ பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது.

அன்பழகன் கைதும் ஆபாச பத்திரிக்கையாளர்கள் அரசியலும்2245_112.savukkuonline.com  : ஒரு வாரத்துக்கு முன்பாக, உள்ளாட்சி அலசல் வார இதழ் மற்றும் மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியர் அன்பழகனை கோவை மாவட்டம் ஆலாந்துரை காவல் நிலையத்தினர் காலை 8.30 மணிக்கு மிகவும் ரகசியமாக கைது செய்து, அவர் வீட்டுக்கு கூட தகவல் சொல்லாமல் காரில் வைத்து கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.    கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பார்த்திபன் என்ற பொறியாளரை 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    காவல் நிலையத்தில் வைக்கப்படாமல் வேறு ஒரு தனி இடத்தில் வைக்கப்பட்டு, இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   சிறையில் அடைக்கப்பட்ட மறுநாள், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொறியாளர் பார்த்திபனை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் தற்கொலைக்கு வருமானவரி துறை அதிகாரியும் பி.எஸ்.கே.தென்னரசும்தான் ... கடிதம் !

வருமான வரி சோதனை
கடிதம் உண்மையா? தற்கொலை எண்ணம் வருமான வரி அதிகாரி தனது தற்கொலை முடிவுக்கு பி.எஸ்.கே தென்னரசு என்பவரும் வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கம் என்பவரும் தான் காரணம் என்று சுப்ரமணியம் எழுதியுள்ளார். By: Mayura Akilan
 சென்னை: விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்னதாக எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது. அதில் தனது தற்கொலை முடிவுக்கு மற்றொரு கான்ட்ராக்டரான பி.எஸ்.கே தென்னரசு என்பவரும் வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கம் என்பவரும் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சுப்ரமணியம் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.< 6ஆம் தேதியே கடிதம் எழுதி அதனை உறவினர்களுக்கு போஸ்ட் செய்துள்ளார். 4 பக்கங்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு முன்னேறினேன் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினேன். யாருடைய பணத்திற்கும் ஆசைப்பட்டதில்லை.

வாக்கு இயந்திரங்கள் மோசடி! . ஒரு மூடனின் கையில் சிக்கியுள்ள அரசின் நிறுவனங்கள் சிதறி சின்னாபின்னமாகி...


மோதி போன்ற ஒரு முரட்டு மூடனின் கைகளில் சிக்கியுள்ள அரசின் நிறுவனங்கள் சிதறி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுடைய ஆட்சியை அதிகாரத்தை நோக்கிய முதலடியே, தேர்தலை சீர்செய்வது தான்.
Elango Kallanai : அரவிந்த் கேஜரிவேல் மேல் திருட்டுப் பட்டம் சுமத்தி உள்ளே தள்ள முயல்வார்கள் என்பது நான் முன்பே கணித்தேன். இந்திய தேர்தல் கமிசன் முன்னரே இது போல வாக்கு எந்திரங்களை மோசடி செய்ய முடியாது என்று சவால் விட்டது. அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஹரிபிரசாத் வெமுறு மற்றும் வி வி ராவ் அடங்கிய ஒரு குழு மகாராஸ்ட்டிர மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களைக் கொண்டு ரிமோட் மூலமே மோசடி செய்ய முடியும் என்று நிரூபித்தது.
டெக்னிக்கல் துறையைச் சேர்ந்த ஹரிபிரசாத் பல முறை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். மென்பொருள் பொறியாளரான நண்பர் ஹரி அப்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவருடைய பாஸ்போட் முடக்கப்பட்டிருந்தது. அவர் அவ்வப்போது அமெரிக்க சென்று தன்னுடைய நிறுவனப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தார்.

வின்சென்ட் ராஜ் : நீதிபதி கர்ணன் ... ஸ்ரீரங்க அய்யருக்கும் முனியாண்டி பூசாரிக்கும் நடக்கும் சண்டை! நீதிபதிகள் அரசர்கள் அல்ல.பணியாளர்கள்தான்

இது ஸ்ரீரங்க கருவறை அய்யருக்கும் முனியாண்டி கோவில் பூசாரிக்கும் நடக்கும் சண்டை : -
சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது.இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது.நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும்.இந்த சகிப்புத்தன்மை உச்ச நீதி மன்றத்திற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் கூறி அவரை பரிசோதனை செய்யவேண்டும் என்று உத்தரவு போடுகிறது.உலகம் உங்களை பார்த்து கை தட்டி சிரிக்காதா? மன நிலை பாதித்தவர்தான் இதுவரை கொல்கத்தா நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பதை பரப்புரை செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்களா? அப்படியே அவர் மன நலம் பாதித்தவர் என்று நீங்கள் பொய்யாக ஒரு சான்றதழ் வாங்கினால், இதுவரை அவர் கொடுத்த தீர்ப்பின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படாதா? நீதிபதி கர்ணனின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர,அவரை மன நிலை பாதித்தவர் என்று இந்த அளவிற்கு சொல்ல முடிகிறது என்றால் இதற்கு சாதி துவேஷம்தானே காரணம்.கர்ணனின் கருத்தினை ஊடகங்கள் போடக்கூடாது என்று எப்படி உச்ச நீதிமன்றம் சொல்லலாம்? இது நீதிமன்ற எமர்ஜென்சி என்பேன்.

வியாழன், 11 மே, 2017

அமைச்சர் சரோஜா : 4000 கோடி சம்பாதிக்கும்வரை அடங்க மாட்டேன் ! ஜெயலலிதாவே செத்துட்டாள் இன்னொருத்தி சிறையில் ....

:ஜெயலலிதாவோ  செத்து தொலைந்து விட்டாள். இன்னொருத்தி பெங்களூர் சிறைக்கு சென்றுவிட்டால். அடுத்தவன் திகாரில் இருக்கிறான். 4 வருஷத்துல நான் 4000 கோடி சம்பாதிக்கும் வரை என் பணவெறி அடங்காது
சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் சரோஜா குறித்து அளித்த பேட்டி அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேசிக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் சரோஜா. இவரது துறையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி என்பவர். ஜெயலலிதாவால் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டவர் மீனாட்சி. இவரிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக அமைச்சர் சரோஜா பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் கேட்ட மீனாட்சியை தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்த அமைச்சர் சரோஜா அவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது அமைச்சர் சரோஜா பேசியதாக மீனாட்சி கூறியது பின்வருமாறு. உனது அப்பா ஜெயலலிதாவின் நண்பராக இருக்கலாம், அதெல்லாம் அந்தக்காலம். உனது ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள். இன்னொருத்தி பெங்களூர் சிறைக்கு சென்றுவிட்டால். அடுத்தவன் திகாரில் இருக்கிறான். 4 வருஷத்துல நான் 4000 கோடி சம்பாதிக்கும் வரை என் பணவெறி அடங்காது. உன்னால் 20 லட்சம் தர முடியாது என்றால் விட்டு விட்டு போய் விடு என்று மிரட்டியதாக மீனாட்சி கூறியுள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை அவரை அம்மா, அம்மா என கூவி கூவி அழைத்து, அவர் முன் குனிந்த முதுகு நிமிராமல் அளவுக்கு அதிகமாக பணிவு கட்டி வந்த அமைச்சர் சரோஜாவா இப்படி பேசினார் என அரசியல் வட்டாரம் பரபரத்துக்கிடக்கிறது. வெப்துனியா

BBC : நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ! அவரது கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதித்துள்ள ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்த்து அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் மக்கள் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
தன் மீது உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனை உத்தரவை திரும்பப் பெற கோரிஉச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் நெடும்பரா, இம்மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை தாக்கல் செய்த கர்ணனின் வழக்கறிஞரிடம் கர்ணன் தற்போது எங்குள்ளார் என்று தலைமை நீதிபதி வினவினார்.
இதற்கு பதிலளித்த கர்ணனின் வழக்கறிஞர், நீதிபதி கர்ணன் எங்கும் தப்பி ஓடவில்லை என்றும் அவர் சென்னையில்தான் உள்ளார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள சிறை தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தன் மனுவில் அவர் கோரியுள்ளார். உச்ச நீதிமன்றம் முன்னதாக, உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.25 சேவை கட்டணம் ! எஸ்.பி.ஐ. வங்கி அளித்த அதிர்ச்சி: ஒவ்வொரு முறைக்கும்

எஸ்பிஐ ஏடிஎம்-மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. எஸ்.பி.ஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் அதன் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது மட்டுமே சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேவைக் கட்டணங்களை மாற்றி புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டது. இதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும் 25 ரூபாய் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும். மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது சேவைக் கட்டணம் மாறுகிறது. 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது, ஒவ்வொரு முறையும், கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் பணம் எடுக்கும்போது சேவை வரியுடன் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்"

முற்போக்கு இயக்கங்களின் அரசியல் அதிகார பீடம் திமுகதான் எனவே பொறுப்பும் கடமையும் உள்ளது!

 வாசுகி பாஸ்கர்  :பாமக மத்தியில் காலூன்றியத்திற்கும், பெரும் பண பலத்தோடு தனியாக தேர்தலில் நிற்கும் அளவு வளர்ந்ததிற்கும் முக்கியம் காரணம் திமுக
அரசியலில், நன்றி விசுவாசத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, அப்படி எதிர்பார்த்தால் அது அரசியலே கிடையாது, அப்படி ஒருவேளை நன்றியோடு இருக்க வேண்டுமானால் ராமதாஸ் கண்டிப்பாக கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
ஆனால், நன்றி விசுவாசம் போன்றவையை எல்லாம், சில திமுகவினர், விசிக விடம் எதிர்பார்பார்களே ஒழிய, கடுமையாக விமர்சிப்பார்கள் ஒழிய, நியாயமாக திமுகவால் வளர்ந்த ராமதாஸின் கலைஞர் குறித்த நக்கல் நையாண்டி பேட்டிகளை பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் வளர்ந்தது பாமக மட்டுமல்ல, திமுக வை வீழ்த்த தமிழ் நாஜிக்கள் திமுக மீது சுமத்தும் சுற்றசாட்டு "திமுக சாதியத்தை வளர்த்தது என்பது"
திமுகவுக்கு முன் தமிழ் சாதிகள் ஒண்ணும் தோள் மேல் கைபோட்டு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றி பற்றவைத்து "முஸ்தபா முஸ்தபா" பாடிக்கொண்டிருக்கவில்லை, ஆகையால் இந்த கேள்வியை திமுக முன் வைக்கும் எல்லா தமிழ் நாஜிக்களுக்கும் அந்த யோக்கியதை இல்லை, சாதி பிரியர்களாக இருந்து கொண்டு கேரளா, ஆந்திரா போல சாதியை பின்னால் போட்டு கொள்ள முடியாமல், சாதி அரசியலை மறைத்து மறைத்து பண்ண வேண்டிய துர்பாக்கிய சூழலை திராவிட அரசியல் தான் உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது. திமுக மீது அந்த கடுப்பு தமிழ்ச்சாதி பிரியர்களுக்கு இல்லாமல் இல்லை.

அதிமுக - பாஜக (இணைப்பு ?) கூட்டணி அவசியம் ... எம் எல் ஏ கனகராஜ்

Prakash JP  அடேங்கப்பா, மோடி ; அமித் ஷா பிஜேபி கோஷ்டிகள் பெரிய
தில்லாலங்கடி ஆட்கள் தான்... அதிமுக அமைச்சர்களிடம் மாமூல் வசூலிக்கும் மூத்த பிஜேபி தலைவர்கள்... தொகுதி மாறி போட்டியிட அதிமுக அமைச்சரிடம் ரூ10 கோடி வாங்கிய கொங்கு பகுதி பாஜக பிரமுகர் (வானதி சீனிவாசனா ???) - பகீர் தகவல்கள்
 அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நேற்று (வியாழக்கிழமை) கூறியிருந்தார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு சொன்னதாக விளக்கமளித்திருந்தாலும் அப்படி ஓர் இணக்கத்துக்கு என்ன அவசியம் என்று 'தி இந்து' ஆன்லைனுக்காக அவரிடம் கேட்டபோது பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடனான பேட்டியில் இருந்து..
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பே இன்னும் உறுதியாக நிலையில் பாஜகவுடனான கூட்டணி பற்றி பேசியது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற நிலையே உருவாகியிருக்காது. அவர் மத்திய அரசை எதிர்கொள்வதில் வல்லவர். திறமையாக செயல்பட்டு மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுவார்.  அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கெமிஸ்ட்ரி நன்னா வேலை செய்யறது பாருங்கோ..  ? 

தங்கம் தென்னரசு தம்பிதுரைக்கு எச்சரிக்கை : நீட் தேர்வு ... திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள்:..

prakash.jp. நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள்: தம்பிதுரைக்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீட் தேர்வு என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் அதை எதிர்த்தது திமுக. நுழைவுத்தேர்வை ரத்து செய்து பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நிலை நாட்டி, சமூக நீதியைக் காப்பாற்றிய திமுக அரசு என்றைக்கும் நீட் தேர்வை ஆதரிக்காது என்பதை தம்பிதுரை போன்றவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்திலேயே 18.7.2013 அன்று இந்த நீட் தேர்வு கொண்டு வரும் மருத்துவக் கவுன்சில் அறிவிக்கைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதும் தம்பிதுரைக்குத் தெரியவில்லை. அப்படி ரத்து செய்யப்பட்ட நீட்தேர்வைத்தான் இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பது கூட இவரது நினைவுக்கு வரவில்லை என்றால், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஒரு முறை சொன்னது போல் திமுகவை மட்டும் விமர்சிக்கும் செலக்டிவ் அம்னெசியாவில் தம்பிதுரை சிக்கித் தவிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 

கம்மாட்டிப்பாடம் - தமிழ் படங்களை போலவே மலையாள படங்கள் ... மசாலா மசாலா ...

Arun Mo : கம்மாட்டிப்பாடம்-இன்னொரு தமிழ்ப்படம்
தமிழ்ப் படங்களை பார்த்து, அல்லது தமிழ் சமூகத்தை பார்த்து சீரழியும் சினிமாவாக மலையாள சினிமா மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சில உருப்படியான முயற்சி தோன்றினாலும் அவற்றை விட, தமிழ்ப் படங்கள் மாதிரியே இருக்கும் மலையாள படங்கள்தான் அதிகம் வரவேற்பை பெறுகிறது. பிரேமம் அதற்கு சரியான உதாரணம். இன்னொரு உதாரணம் கம்மாட்டிப்படம். சமீபத்தில்தான் கம்மாட்டிப்படம் பார்க்க நேர்ந்தது. பாதியில் நிறுத்திவிட்டேன். பாகிரதியின் மதியம் படித்து, புத்தகம் படிப்பதில் தொய்வு ஏற்பட்டது போல இந்த படம் பார்த்து அடுத்து படம் பார்க்கும் மனநிலை மாறிவிடும் என்பதால் பாதியில் நிறுத்தினேன். ஆனாலும் ஒரு படத்தை பாதியில் நிறுத்த கூடாது என்று முழுவதும் பார்த்தேன். மலையாள படங்களை பார்த்து நொந்துக்கொள்கிறேன். தமிழ்ப் படங்களை பார்த்து அவர்கள் கெட்டது போல், நல்ல மலையாள படங்களை பார்த்து நம்முடைய ஆட்கள் ஏன் இன்னமும் மாறாமல் இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

தமிழிசை : திமுகவிடம் அரசியல் நாகரீகம் இல்லை ... கலைஞர் பிறந்த நாள் விழாவுக்கு பாஜக , அதிமுகவுக்கு அழைப்பு இல்லை!

திமுகவிடம் அரசியல் நாகரீகமில்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வரும் ஜூன்  3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே கருணாநிதியின் வைரவிழாவிற்கு மதவாத சக்தியான
மேலும் திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி, இதையெல்லாம் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு இலக்கியவாதி,அவர் சட்டமன்ற உறுப்பினராகி வைர விழா காண்கிறார். அவரது விழாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடக்கூடாது. திமுகவுடன் எங்களுக்கு உறவு தேவையில்லை. எங்களை அழையுங்கள் என்று நாங்கள் கேட்க்கவில்லை, எதிர்பார்க்க்கவுமில்லை. ஆனால் பொதுவாழ்க்கையில் இந்தியா முழுவதும் நட்பை வைத்திருக்கும் ஒருவரை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கக் கூடாது. கருணாநிதி இருந்திருந்தால் தமிழக அரசியலை நாகரிகமாக நடத்தி இருப்பார்.
பாஜகவை அழைக்க மாட்டோம் என்றும் அதேபோல தமிழகத்தின் மதவாத கட்சியான அதிமுகவையும் அழைக்க மாட்டோம் என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார்.

ஆங்கில வழிக் கல்வி தொடரும்! தமிழக அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஆங்கிலம்..

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடரும்!
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி கிடையாது என, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அஃப் குழுக்களில் தகவல் பரவியது. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் இருக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது.

தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம்!

சென்னை உட்பட தமிழகத்தில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்-28 ஆம் தேதி எம்.சி.ஐ. துணைத் தலைவர் டாக்டர் சி.வி. பிர்மானந்தம் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் எம்.சி.ஐ. துணைத் தலைவர் பேசியதாவது: உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயல்படும் நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தரமில்லாத ஒரு மருத்துவ கல்லூரிக்கு எப்படி அனுமதி அளிக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு போதுமான நோயாளிகள் இல்லை என்றால் மாணவர்களுக்கு கற்று கொடுக்க முடியாது. மருத்துவக் கல்வி தரங்களில் சமரசத்துக்கு இடமில்லை. எனவே நாடு முழுவதும் பல மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.