tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய நிலையில் இன்று பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டினார்.
அப்போது பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட யாரும் செல்லவில்லை.
இது விவாதத்தை கிளப்பிய நிலையில் அதன் பின்னணியில் பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வார்த்தை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்படி பிரதமர் மோடி என்ன சொன்னார்? ஏன் பிரதமர் மோடியை வரவேற்க அவர்கள் 3 பேரும் செல்லவில்லை என்பது பற்றிய விபரம் வருமாறு:
சனி, 26 ஆகஸ்ட், 2023
கர்நாடகாவில் மோடியை வரவேற்காத கர்நாடக முதல்வர் ... மோடிக்கு முன்பே இஸ்ரோ விஞானிகளை பாராட்டி விட்ட கோபமாம் மோடிக்கு
பல ஆண்களுடன் தொடர்பு; பெற்ற மகளை கொன்று வீசிய தந்தை - திருச்சியில்
tamil.asianetnews.com - Velmurugan s : பல ஆண்களுடன் தொடர்பு; பெற்ற மகளை கொன்று வீசிய தந்தை - திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே கடந்த சில தினங்களுக்கு முன் இளம் பெண் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது தந்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் கடந்த 22ம் தேதி சாலையின் அருகே உள்ள முட்புதரில் இளம்பெண் சடலமாக கிடப்பதாக ஜெம்புநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் முசிறி காவல் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தா.பேட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர்.
சிலிண்டர், விறகு அடுப்பு, கரி.. ரயில்வே ஊழியர்கள் சோதனையில் சிக்காதது எப்படி? வெளியான தகவல்கள்
tamil.oneindia.com - Vishnupriya R :மதுரை: ரயிலில் எரிவாயு சிலிண்டர் எடுத்துச் செல்லக் கூடாது என்ற போதிலும் இந்த எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 65 க்கும் மேற்பட்டோர் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா ரயிலில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அந்த ரயில் புனலூருக்கு அதிகாலை 3.48 மணிக்கு வந்துள்ளது. அவர்கள் சென்னை வருவதற்காக அந்த ரயில் நிலையத்தில் இணைப்பு ரயில் வருவதற்காக காத்திருந்தனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணையில் தீப்பிடித்ததற்கு இவர்கள் ரயிலில் கொண்டு சென்ற சிலிண்டரே காரணம் என சொல்லப்படுகிறது.
மதுரை ரெயில் பெட்டியில் தீ விபத்து! 5 பேர் உயிரிழப்பு! பலர் மருத்துவ மனையில் சமையல் சிலிண்டர் வெடித்தது
மாலை மலர் : மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும். தீ விபத்து ஏற்பட்டது
திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ரெயிலின் சிறப்பு முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டியாகும்.
இந்த பெட்டியில் சுமார் 90 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் தீ விபத்து ஏற்பட்டதும் 80-க்கும் மேற்பட்டோர் பெட்டியில் இருந்த குதித்து தப்பித்துள்ளனர். அருகில் உள்ள பெட்டியில் உள்ளவர்கள், இந்த பெட்டியில் வந்து தூங்கினார்களா? என்பது தெரியவில்லை.
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023
சமஸ்கிருத மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது? கௌராவ் ஷா என்ற ஒரு ஆய்வாளன் எழுதிய கட்டுரை
திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு!
Thanam Vettivelu : நண்பா்களே!
தமிழ், சமஸ்கிருதம் என்பவைகளில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதை ஆராய்வது இன்பமானது.
இங்கு சமஸ்கிருத மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பது பற்றி கௌராவ் ஷா என்ற ஒரு ஆய்வாளன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் தமிழாக்கம் தரப்பட்டுள்ளது. படியுங்கள். ஆராயுங்கள்!
சமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி
திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
ஏனைய மற்ற மொழிகளிலிருந்து சமஸ்க்ருதம் எவ்வாறு வேறுபடுகிறது என்று எடுத்துக் காட்டும் வகையில் எழுதப்படும் இந்த கட்டுரை தொகுப்பில் இது முதல் பாகம்.
தமிழ்நாடு அரசின் 'காலை உணவுத் திட்டம்' - 5 கேள்விகளும் பதில்களும் - BBC News தமிழ்
BBC : காலை உணவுத் திட்டம் - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி செய்தியாளர் :
அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
கே. தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன?
ப. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டமே, காலை உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது.
கேரளாவில் 25 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.. பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் - அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, UAE , சவுதி அரேபியா மற்றும் ஈரான்
மாலை மலர் : பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது.
இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது.
2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு நாளாக இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகென்னஸ்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
2024-இல் அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய போகின்றன.
இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும் போது,"கூட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்," என தெரிவித்துள்ளார்.
வியாழன், 24 ஆகஸ்ட், 2023
மதுரை திமுக உண்ணாவிரதம்: பிடிஆர் ஆப்சென்ட்!
நீட் தேர்வை கண்டித்தும் ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்தது.
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற்றதால் அன்று திமுக போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு, இன்று நடக்கிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞரணி, மருத்துவரணி,மாணவரணி சார்பில் நடைபெற்று வருகிறது.
கோயில் தேர் மின்சார வயரில் முட்டியது இருவர் உயிரிழப்பு .. பதுளை இலங்கை
hirunews.lk : பதுளை - நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் இரதம் ஒன்று அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பதுளை நமுனுகுல பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதலாவத்த பகுதிக்கு சென்ற இரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 27 மற்றும் 37 வயது மதிக்கதக்கவர்களே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமமைடந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்மீக புரட்சிக்கு வித்திடும் ஆட்சியாக தி.மு.க. விளங்குகிறது- அமைச்சர் பி.கே.சேகர் பாபு
Maalaimalar .: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மயிலாடு துறை மாயூரநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறு வதை முன்னிட்டு, அங்கு நிறைவுபெற்றுள்ள திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி, சட்டநாதர் கோவிலையும் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
மயிலாடுதுறை, மயூர நாதர் சுவாமி கோவிலுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 9 கோடி மதிப்பீட்டிலும், துக்காச்சி, சவுந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஆபத்ச காயேசுவரர் கோவிலுக்கு ரூ,3.66 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு கோவில்களுக்கும் வரும் மூன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றன.
Lyca Productions Sri Lanka தொடக்க விழா! இலங்கையின் உள்ளூர் சினிமாவை ஊக்குவிக்க Lyca களம் இறங்கியது
Ceylonmirror.net - Jeevan : இந்தியாவின் முக்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்,Lyca Productions Sri Lanka எனும் பெயரில் , இலங்கையில் ஒரு அதிநவீன திரைப்பட தயாரிப்பு மையத்தை நிறுவும் அறிவிக்கும் விழா நேற்று (22) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் உள்ளூர் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட Lyca Productions Sri Lanka நோக்கமாகும் என தெரியவருகிறது.
Lyca Productions Sri Lanka , இலங்கையில் தயாரிக்கும் 6 திரைப்படங்கள் குறித்து ஒப்பந்தம் செய்தமை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஜயந்த சந்திரசிறி, ரஞ்சன் ராமநாயக்க, பிரியந்த கொழும்பகே, அசோக ஹந்தகம, சன்ன பெரேரா, எல். ராஜகுமார் ஆகிய திரைப்பட இயக்குநர்கள் தங்களது சமீபத்திய படங்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழுத் தலைவர் விமான விபத்தில் உயிரிழப்பு
hirunews.lk : கடந்த ஜூன் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சாத்தியமற்ற ஒரு சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் டாஸ் (Tass) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் எவ்ஜெனி ரிகோஜினும் இருந்ததாக ரஷ்ய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! படிப்படியான முன்னேற்ற பட்டியல்
மாலை மலர் : இந்தியா சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்
'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.
'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.
மேற்கத்தைய நாடுகள் BRICS கண்டு நடுங்குவது ஏனோ? 15th BRICS Summit in Johannesburg!
Annesley Ratnasingham : : .Brick by BRICKS will build a BRICS bridges ??..
Why The West is trembling ??...
15th BRICS (Brazil, Russia, India, China, South Africa) Summit in Johannesburg, 22-24 August..!!!
மேற்கத்தைய நாடுகள் BRICS கண்டு நடுங்குவது ஏனோ...15வது BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) உச்சி மாநாடு தென்னாபிரிக்காவின் Johannesburg நகரில் ஆகஸ்ட் 22,23,24 ஆகிய நாட்களில்...!!
இந்த சந்திப்பில் சர்வதேச விடயங்கள் பேசப்படுமா ?
உக்ரைன் ,ருசியா பிரச்னை பேசப்படுமா என்றால் பதில் இல்லை என்பதே.
ருசியா தலைவர் Putin கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது .
காரணம் "தென்னாப்பிரிக்கா" Rome Statute என்று அழைக்கப்படும்
The Rome Statute of the International Criminal Court is the treaty இல் கையெழுத்து இட்டபடியால், அதன் அடிப்படையில் Putin ஐ கைது செய்யவேண்டும்.The International Criminal Court (ICC) இல் போர் குற்றத்துக்காக Putin ஐ கைது செய்யும்படி கேட்டிருப்பதனால் .
.வழமையாக பேசப்படும் அரசு, வணிகம், சிவில் சமூகம் மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்கள் இங்கு ஒன்றிணைவது மட்டுமல்லாமல், பதட்டமான சூழலில் இது நடக்கிறது.
புதன், 23 ஆகஸ்ட், 2023
கண்டி பெரஹெரா விழாவில் திமிறிய யானை! பெண் ஒருவர் காயம்
ilakkiyainfo.com : கண்டி பெரஹெரா விழாவில் திமிறிய யானை! பெண் ஒருவர் காயம்
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் இரண்டாம் நாள் கும்பல் பெரஹெரவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரண்டு யானைகளும் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து முன்னோக்கி வந்தன. அதன் பின்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான மேலும் இரண்டு யானைகளும் வன்முறையில் ஈடுபட்டன.
லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் திடீர் ராஜினாமா?
தினமலர் : அமைச்சர் நேருவுக்கு எதிராக, 5 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும், நேரு தரப்பில் சிலர் கவனித்து வருகின்றனர். அதனால், நேருவுக்கு எதிராக, துறையூர், முசிறி, லால்குடி, மணச்சநல்லுார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை
மாலை மலர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை.
தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை கீழ் கோர்ட்டுகளில் நடைபெற்று வந்தது.
விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவின்பேரில் வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
அதிமுக திமுகவுடன் இணையும்! எடப்பாடி அடி தாங்கமாட்டார் -ஆர்எஸ் பாரதி ஒரே போடு
tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : சென்னை: அதிமுக தங்களின் பங்காளி எனவும் விரைவில் அவர்களும் தங்களுடன் இணைவார்கள் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருக்கிறார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் நடிகர்கள் பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. நாம் ஏதாவது பேசினால் அதனை திரித்து கூறுவார்கள். இன்னும் ஒரு ஆறு மாத காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்,
நாடாளுமன்ற தேர்தல் வரும். அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு போவார் என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சி தமிழர்" என்று பட்டம் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் எம்ஜிஆர் ஒரு மலையாளி, ஜெயலலிதா ஒரு கன்னடத்தவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச தேர்தல் ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. காங்கிரஸ்.. கார்கே அதிரடி..
மாலை மலர் : ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. பெண் வாக்காளர்களை குறிவைக்கும் காங்கிரஸ்.. கார்கே அதிரடி..!
இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்? . படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மாலைமலர் : தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறைறையை சேர்ந்த
மீனவர்கள் ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கையை சேர்ந்தவர்கள்கத்தி கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகில் ஏறி 800 கிலோ மீன்பிடிவலை 2 செல்போன் திசை காட்டும் கருவி உள்ளிட்ட ஜந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023
தாலிபான்கள் 200 முக்கிய பிரமுகர்களை கொன்றிருக்கிறது. முன்னாள் ராணுவம், சட்டம் அரசு பிரமுகர்களை தேடி தேடி
மாலை மலர் : பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது.
ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.
தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சி, அங்கு அதுவரை ஆட்சி செய்து வந்த அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டே வெளியேறினார்.
அதற்கு பிறகு தற்போது வரை நடைபெறும் தலிபான்கள் ஆட்சியில் மனித உரிமைகளை கண்டு கொள்ளாமல் பல கடுமையான சட்டங்களை அந்த அரசாங்கம் போட்டிருக்கிறது. இவற்றை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.
கோவை மணமகன் முகச்சவரம் செய்யாததால் பாதியில் நின்ற திருமணம்...
மாலைமலர் : கோவை சூலூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார். அந்த ஜோடியின் திருமணம் இன்று நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் தொழில் அதிபர், தனது மகனிடம் தாடியை எடுத்து விடு, அதுதான் உனக்கு நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார். இதன்படி புதுமாப்பிள்ளை சலூனுக்கு புறப்பட்டார்.
அப்போது அவருக்கு மணமகளிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. உங்களுக்கு தாடி அழகாக உள்ளது. எனவே அதை எடுக்க வேண்டாம். டிரிம் செய்து கொள்ளுங்கள். அது போதும் என்று அறிவுரை கூறி உள்ளார்.
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
மதுரை அதிமுக மாநாட்டில் வீணாகிப்போன உணவு! அண்டா அண்டாக்களாக கொட்டப்பட்ட கொடுமை
மாலை மலர் :மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
லிபியாவின் பிரமாண்ட Great Man-Made River நதியை அழித்த மேற்குலகம்
ராதா மனோகர் : லிபியாவிற்கு எதிரான மேற்கு நாடுகளின் போர் எதற்காக நடத்தப்பட்டது?
உலக மனசாட்சி இந்த கேள்வியை இன்னும் உரக்க எழுப்ப வேண்டும்!
Great Man-Made River லிபியாவின் செயற்கை நதி
உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய நதி
கிரேட் மேன் மேட் ரிவர் (GMMR) என்பது லிபியா முழுவதும் உள்ள நுபியன் மணற்கல் நீர்நிலை அமைப்பு புதைபடிவ நீர்நிலையிலிருந்து பெறப்பட்ட புதிய நீரை வழங்கும் குழாய்களின் வலையமைப்பாகும்.
இது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாகும்.
இந்தத் திட்டம் லிபியாவின் தெற்கே உள்ள நுபியன் மணற்கல் நீர்நிலை அமைப்பிலிருந்து தண்ணீரை பம்ப் செய்யும் பைப்லைன் அமைப்பைப் பயன்படுத்துகிறது.
நீர் 1,600 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது
லிபியாவில் பயன்படுத்தப்படும் மோஹத்தை நீரில் 70% வழங்குகிறது.
இது உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வழியாகும்
இதற்கு பாவிக்கப்பட்ட குழாய்களின் நீளம் 2,820 கிலோமீட்டர்கள் (1,750 மைல்)).
அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் கொடூரமாக கொலை
nakkheeran.in : கோலாகலத்திற்கு தயாராகும் அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் கொடூரமாக கொலை
நாளை மதுரையில் அதிமுக மாநாட்டு நடக்க உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகமானோரை மாநாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து ஊர்களிலும் வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் முகூர்த்த நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு கல்யாண நிகழ்ச்சிகளுக்குக் கூட வேன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மாநாடு முன் ஏற்பாடுகளில் மாஜி அமைச்சரும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளருமான விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தீவிரம் காட்டி வருகிறார்.
ஈரோட்டில் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை.!
tamil.asianetnews.com - vinoth kumar : ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் இருந்துள்ளார்.
மனோகரன் நடைபயிற்சி முடித்து கொண்டு பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023
நீட் திணிப்பு - களத்தில் அமைச்சர் உதயநிதி : நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
கலைஞர் செய்திகள் : நீட் திணிப்பு - களத்தில் அமைச்சர் உதயநிதி : நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - ‘நீட்’ தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் இருந்து 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர் ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் இன்று போராட்டம் நடைபெறுகிறது. முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள் குறித்த செய்தி குறிப்பை கீழே காணலாம்.
காங்கிரஸ் காரிய கமிட்டி குழு மாற்றி அமைப்பு- 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்
மாலைமலர் : காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், அதிரஞ்சன் சௌத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக, பிப்ரவரியில் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 35-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
tamil.samayam.co இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.
மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.