சனி, 19 ஜனவரி, 2019

உயர் ஜாதி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக/ திக/ விசிக வழக்கு தொடுத்துள்ளதா?

No photo description available.Don Vetrio Selvini : கேள்வி : உயர் ஜாதி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக/ திக/ விசிக வழக்கு தொடுத்துள்ளதா?
பதில் : இல்லை. பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கிட்டைக் காக்கவே திமுக/ திக / விசிக கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளன.
இன்று பொருளாதர ரீதியில் இட ஒதுக்கீட்டை அனுமத்தித்தால் , ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும். அப்படி ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால், பாதிக்கப்படும் BC/MBC/DNC/BC-M ஜாதிகளின் பட்டியல் பின் வருமாறு.
BC List
1 Agamudayar including Thozhu or Thuluva Vellala
2 Agaram Vellan Chettiar
3 Alwar, Azhavar and Alavar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District.)
4 Servai (except Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts.)
5 Nulayar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
6 Archakarai Vellala
7 Aryavathi (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
8 Ayira Vaisyar
9 Badagar
10 Billava
11 Bondil
12 Boyas (except Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, The Nilgiris, Salem , Namakkal, Dharmapuri and Krishnagiri Districts) AND Pedda Boyar (except Tiruchirapalli, Karur , Perambalur and Pudukottai Districts) AND Oddars (except Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, Madurai,Theni and Dindigul Districts) AND Kaloddars (except Kancheepuram, Tiruvallur, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Madurai, Theni, Dindigul, Pudukkottai, Tiruchirappalli, Karur, Perambalur, Tirunelveli, Thoothukudi, Salem and Namakkal Districts) AND Nellorepet oddars (except Vellore and Tiruvannamalai Districts) Sooramari oddars( except Salem and Namakkal Districts)

பேட்ட, விஸ்வாசம் வசூல் . ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்: திருச்சி ஸ்ரீதர்

உண்மையான நிலவரம்: tamil.filmibeat.com- rajendra-: சென்னை : பேட்ட மற்றும்
விஸ்வாசம் பட வசூல் குறித்து வெளியாகி வரும் அனைத்து தகவல்களும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள் என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர்.
பொங்கலையொட்டி கடந்த வாரம் ரிலீசானது ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ரிலீசானது. தொடர்ந்து அமைந்த விடுமுறை காரணமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இரண்டு படமும் ஓடி வருகிறது. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், இரண்டு படத்தில் எது அதிக வசூலை அள்ளியது என்பதில் தொடர்ந்து இருதரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் நீடித்து வருகிறது.
பேட்ட படம் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக நேற்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக விஸ்வாசம் படம் 125 கோடியை வசூல் செய்துவிட்டதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்தது. இந்த வசூல் மோதல் கோலிவுட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை.

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலருக்கு என் மீது ஆத்திரம் - மோடி பேச்சு

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலருக்கு என் மீது ஆத்திரம் - மோடி பேச்சுமாலைமலர் : ஊழலை எதிர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலர் என் மீது ஆத்திரம் கொண்டு மெகா கூட்டணி அமைத்துள்ளனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சில்வாசா: இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யின் தலைநகரான சில்வாசா நகரம் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள 100 நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில்வாசா நகரில் இன்று புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
மத்தியில் முன்னர் ஆட்சி நடத்திய அரசு 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வெறும் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டித்தந்தது. ஆனால், எங்கள் தலைமையிலான அரசு ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டியுள்ளது.

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

10  சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!மின்னம்பலம் : மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இன்று (ஜனவரி 19) திக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. அதற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுபோன்று திமுக சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கொடநாடு .. மனோஜ் சயன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து .. எடப்பாடி தரப்பு புல் கியரில்?“மின்னம்பலம் :கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசிய சயன் மற்றும் மனோஜ் இருவரையும் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்துவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கிறது தமிழக காவல் துறை. ஆனால், அவர்களோ நேற்று ஜனவரி 18 எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் கேரளாவுக்கே போய்விட்டார்கள். சயன் விஷயத்தில் காவல் துறை ரொம்பவே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் சயனின் வாக்குமூலம் என்பது இப்போது மிகவும் கவனிக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரிடமும் கேரளாவை சேர்ந்த சிலர் மூலமாகவே நேற்று பேரம் பேசப்பட்டிருக்கிறது. ‘எனக்கு எதுவும் தெரியாது.. நீங்க சயன்கிட்ட பேசிக்கோங்க..’ என தன்னிடம் பேரம் பேசியவர்களை தவிர்த்துவிட்டார் மனோஜ். சயனோ, ‘என் பொண்டாட்டி புள்ளைய பறிகொடுத்துட்டு நான் நடு ரோட்டுல நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன். என்கிட்டயே பேரம் பேசுறீங்களா? உங்ககிட்ட எப்படி நான் சமாதானமாகப் போக முடியும்? இதைப் பத்தி இனி பேசாதீங்க..’ என கோபமாகவே சொல்லியிருக்கிறார்.

பஞ்சத்தால் கஞ்சித்தொட்டி! -பட்டாசுத் தொழிலாளர்களின் கையறுநிலை!

kknakkheeran.in - சி.என்.ராமகிருஷ்ணன் :
kஅரைசாண் வயிற்றை உணவால் நிரப்பினால்தான் மனிதன் உயிர் வாழமுடியும். வறுமை, வேலையின்மை, பிழைப்பதற்கு வழியில்லாமை என ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளானால், உறவினர்களோ, நண்பர்களோ உதவுவர். பல குடும்பங்களுக்கும் இதே நிலைமை என்றால், அந்தப் பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து உணவு வழங்குவர். ஒரு கிராமம் பாதிக்கப்பட்டிருந்தால், ஊர்கூடி கஞ்சி காய்ச்சி ஊற்றி, அம்மக்களின் பசியைப் போக்குவர். இது, ஒருவேளை கஞ்சியாவது அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடு ஆகும்.  1780-இல் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுவதும் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1876-லிருந்து 1878 வரையிலும் பெரும்பஞ்சம் சென்னை மாகாணத்தைப் பீடித்திருந்தது. இப்பஞ்சம் மைசூர், பம்பாய், ஹைதராபாத் வரைக்கும் பரவியது. வட இந்தியாவின் சில பகுதிகளும் தப்பவில்லை. அதனால், அந்த இரு ஆண்டுகளில் 1 கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்ததாகப்  பதறவைக்கிறது புள்ளிவிபரம்.

பா.ம.க.வுக்கு 9 தொகுதிகள் .. பாஜக கூட்டணியில் இணைகிறது

மாலைமலர் : வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் பாமக சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பா.ம.க.வுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரகசிய பேச்சுவார்த்தை- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இணைகிறது சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும் என்று டெல்லி தலைவர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு முகாமிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரையில் தனது முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் கூட்டணி அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. அறிவித்துள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் இருவர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

கொல்கத்தா பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின்.. விடியோ : மோடி மீண்டும் வந்தால் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும்


 "இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்த வீரமிக்க இனங்களில் வங்காளமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போராட்டத்திற்காக வங்கத்துச் சகோதரி மம்தாவின் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன். வங்கத்துப் புலிகளே! இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் மே மாதம் நடக்கவிருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து, மக்களிடம் மோதலை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் நச்சு சக்தியான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து நாட்டை மீட்பதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று நான் சொல்கிறேன்." - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
மின்னம்பலம் : கொல்கத்தா பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பிரதமர் மோடி பயந்து புலம்புகிறார்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் உள்பட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்

தினத்தந்தி : தமிழகத்தைச் சேர்ந்த 2 புதுடெல்லி, சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட்டனர்.
பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா

குருகிராமம் சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பாதினத்தந்தி : கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், குருகிராமத்தில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்பி வரும்படி எடியூரப்பா அழைத்துள்ளார். பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பாஜகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பெங்களூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் பங்கேற்கவில்லை.

மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !

வினவு :ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் எந்தவித முறைகேடும்
நடக்கவில்லை என்கிற பொய்யை மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் சொல்லி வருகிறது மோடி அரசு. 36 ரஃபேல் ரக விமானங்கள் அதிக விலை கொடுத்து ஏன் வாங்கப்பட்டது என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத மோடி அரசு, பாதுகாப்பு காரணங்களால் விலை குறித்து பேச முடியாது என மழுப்பியது. இந்நிலையில், பிரெஞ்சு பத்திரிகை ஒன்று ரஃபேல் விமானங்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பது குறித்த ஆதாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது.
ரஃபேல் விமானங்கள் வாங்க மோடி அரசு ஒப்பந்தம் போட்டிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் குழுமத்தைச் சேர்ந்த ’Le Figaro’ என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பிரெஞ்சு அரசு கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான 28 ரஃபேல் ரக போர் விமானங்களை  டசாஸ்ட் ஏவிவேஷன் நிறுவனத்திடம் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.

பேட்ட ..விசுவாசம்... செருப்பால அடியுங்க ... இட ஒதுக்கீடு .. ரபேல் ... சமுக வலை விவாதங்கள்

குப்பன் சா  : அம்பானியின் அலைவரிசையில் இது இல்லாமலா? '
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே' என்றவர் ரசனி. இதை சொல்லாமல் கடைபிடிப்பவர் மற்றவர். ரசனி என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள் இருள். ரசனி என்பது பெண்ணின் பெயர். உமாகாந்த் என்பதுபோல ரசனிகாந்த். a ராம நாதன் குப்பன் சா இது புதிய தலைமுறை தோழர். நியூஸ் 18 தான் அம்பானியின் அலைவரிசை
குப்பன் சா இவர்கள் பாஜக வுடன் தேர்தல் கூட்டணி வைக்க உள்வவர்கள்.
ராம நாதன் :  நியூஸ் 18 ம் இப்படித்தான் செய்கிறது
Thamizh Inian : உண்மைங்க காலைல இந்த கலெக்ஷன் சூப்பர் ஸ்டார் யார்னு கேட்ட உடனேயே செமகடுப்பு,,,கலெக்ஷன் நண்ணி இவனுங்க கிட்டயா குடுக்கப்போறானுவ,,ஆனா இந்தப்புரோக்ராம் நடத்த காசு வாங்குவானுங்க அதாவது இந்தப்படங்களை லைவ்ல வெச்சு மேலும் பார்க்கத்தூண்டுவது,,, ,இதுதான் இதிலீ உள்ளிருக்கும் தந்திரம்,,
 Gnana Suriyan Munisamy இன்று ஆங்கில இந்து நாளிதழில் என்.ராம் ரஃபேல் விமான பேரம் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது பற்றி ப.சி. என்டிடிவி-யில் பேட்டி அளிக்கிறார். தொடர்ந்து அது குறித்து உரையாடல் ஒளிபரப்பு செய்ய படுகிறது. பி.சி. சர்க்கார் எனும் Magician ஐ விட ஆப்பு கீ பார் மோடி சர்க்கார் பெரிய தந்திரவித்தைக் காரர் என்று தெரிகிறது. ஆனால், டைம்ஸ் நவ், CNN-18, இந்தியா டுடே தொலைக்காட்சி செய்திகள் வேறு வேறு செய்திகள் பற்றி உரையாடல் நடத்தி வருகின்றனர். தமிழில் பேட்ட, தல, என்று உரையாடல் நிகழ்ச்சி! இனிமேல் இந்த தொலைக்காட்சி உரையாடல்கள் இப்படித்தான் இருக்கும். நாம்தான் மாற்று செய்தி தொடர்புகளை கைக்கொள்ள வேண்டும்.

வைகோ :மதுரைக்கு 27-ந்தேதி வருகை தரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்

வெள்ளி, 18 ஜனவரி, 2019

தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?

வினவு :உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது. 
புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். “ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட….” என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை… ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.
முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.
அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சங்கர மடமும் சமத்துவமாம்? . ஜாதி தேசத்தின் ஜாதி வழிபாடு .. உலகம் சிரிக்கிறது!

பொன்.ராதா கீழே . சு சாமி மேலே ஜாதி ஜாதி 
அர்ஜுன் சம்பத்து கீழே .எச்சை ராஜா மேலே .ஜாதி ஜாதி
Devi Somasundaram : பேரு சமத்துவ பொங்கலாம்  இந்தியாவின் உச்ச மதிப்பு
கொண்ட நீதிமன்ற நீதிபதி தரைல உட்கார்ந்து இருப்பதும். கொலைகேஸ்ல மாட்டின குற்றவாளி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பதும் தான் சமத்துவமா .. .சாதியும் மதமும் எத்தனை அநீதி யானதுன்னு புரிஞ்சுக்க முயற்சி செய்லன்னா கிருஷ்ணசாமிகளும் அர்ஜுன் சம்பத்களும் தங்கள் பரம்பரை வாரிசு அடிமைதனத்தோடு வாழ்ந்து சாகவேண்டியது தான்

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு

BBC : பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை
வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்றும் பல ஆண்டு காலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு ஏற்பாடு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ். பாரதி, இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு பொது நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பத்து சதவீத இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படுமென்றும் தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீதம் உள்ள நிலையில் இந்த கூடுதல் பத்து சதவீத இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதமாக அதிகரிக்கும். ஆகவே, மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்; சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டுமென்றும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் துணை தூதர், தூதரக அரசியல் தலைவர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

tamilthehindu: இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசினர்.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் ஜெரிமி பில்மோர்-பெட்போர்டு லண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் பெர்கஸ் அல்ட் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

உணவைப் பார்த்ததும் கூச்சலிட்டு ஓடி வந்தன குரங்குகள்!’ – கண்கலங்கிய இளைஞர்கள்

குரங்குகளுக்கு உணவளிக்கும் இளைஞர்கள்vikatan.com - துரை.வேம்பையன்: 
கரூர் அருகே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் சமைத்து மீதமான உணவுப் பொருள்கள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை குரங்குகளுக்குக் கொடுத்து நெகிழவைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.
உணவு சாப்பிடும் குரங்குகள்
கரூர் மாவட்டத்தின் தென் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று, கடவூர் கிராமம். நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இக்கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கடவூரின் தென்கிழக்குப் பகுதியில் பொன்னணியாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில், ஏராளமான குரங்குகளும் தேவாங்குகளும் வசித்துவருகின்றன. கடவூர் பகுதியே கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் கடும் வறட்சிப் பகுதியாக உள்ளதால், அங்கு வசிக்கும் குரங்குகள், தேவாங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவு கிடைக்காமல் அல்லாடி வந்தன. அந்த அணைக்குப் போவோர் யாராவது பழங்களையோ, தின்பண்டங்களையோ அவைகளுக்கு உணவாகத் தந்தால்தான் உண்டு என்கிற நிலைமை.

எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டு ! முதலில் ஜெயலலிதா அறையை உடைத்தோம்” - கனகராஜ்... 2 மணி நேரம் 20 நிமிடங்கள் பங்களாவுக்குள் இருந்தோம் .. வாக்குமூலம்

டிஜிட்டல் திண்ணை: “முதலில் ஜெயலலிதா அறையை உடைத்தோம்” - கொடநாட்டில் நடந்த விவரம்!
மின்னம்பலம் : கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டுகள் முன்வைத்த சயனும், மனோஜும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நேற்று இரவு வரை அவர்கள் இருவரும் கேரளாவில்தான் இருந்தார்கள். தெகல்கா மேத்யூ வழிகாட்டலில்தான் அவர்கள் இருவரும் இயங்குகிறார்கள்.
இறந்துபோன கனகராஜுக்கு அடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பதை முழுமையாக தெரிந்த ஒரே நபர் சயன் தான். ஜெயலலிதா அறை, சசிகலா அறை என ஒவ்வொன்றுக்கும் கனகராஜுடன் போனது சயன் தான். கனகராஜும், சயனும் முதலில் ஜெயலலிதா அறையைத்தான் உடைத்து உள்ளே போனார்களாம். அங்கேதான் என்ன டாக்குமெண்ட்களை எடுக்க வேண்டும் என்பதை யாருடனோ போனில் பேசியபடியேதான் பைக்குள் எடுத்து வைத்திருக்கிறார் கனகராஜ். அதேபோல கொடநாட்டுக்குள் நுழையும் போதே ஒட்டுமொத்தமாக அந்த பகுதிக்கே மின்சார இணைப்பை துண்டிக்க சொல்லி கனகராஜ் யாருக்கோ உத்தரவிட, சில நிமிடங்களில் பவர் கட் ஆகி இருக்கிறது. கொடநாடு பங்களாவில் முழுக்கவே டார்ச் லைட்டை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் கனகராஜ். அதுவும் லைட் அடித்து ஒவ்வொரு டாக்குமெண்ட்டையும் புரட்டிப் பார்த்துதான் பையில் வைத்திருக்கிறார்.
'நாம எதை எடுக்க வந்தோமோ அதை மட்டும்தான் எடுக்கணும். தேவை இல்லாமல் வேற பொருள் மேல கை வைக்காதீங்க...' என அந்த இருட்டிலும் அட்வைஸ் செய்திருக்கிறார் கனகராஜ்.
சரியாக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் கொடநாடு பங்களாவுக்குள் இருந்திருக்கிறது அந்த டீம். கையோடு கொண்டு போன பைக்குள் டாக்குமெண்ட்களை நிரப்பிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.
ஒரு டீம் கோவைக்கும் இன்னொரு டீம் சேலத்துக்கும் பிரிந்துவிட்டார்கள். சேலம் டீமில்தான் சயனும் கனகராஜும் இருந்திருக்கிறார்கள். சேலத்துக்கு போன டீம் கையில்தான் கொடநாட்டில் எடுத்த டாக்குமெண்ட்கள் எல்லாம் இருந்ததாம்.

HIV affected woman deliver baby, எச்.ஐ.வி எச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது... அடுத்தக்கட்ட பாதுகாப்பில் மருத்துவர்கள் தீவிரம்

tamil.indianexpress.com : விருதுநகரில் இரத்தம் பரிமாற்றத்தால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு அரசு சார்பில் 9 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்ஐவி ரத்தம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண்ணை உயிர்க்கொல்லி நோய் பாதித்தது. இந்தியா முழுவதும் இந்த செய்த பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் இரத்த தான் செய்துள்ளார், ஆனால் தானம் செய்தவருக்கே இந்த பாதிப்பு தெரியாமல் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் விளைவாக, மன உளைச்சலில் அந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த விவகாரத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பெண்ணுக்கு அரசு சார்பில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில், பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்தனர்.

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மாலைமலர் :சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு
வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடெல்லி: சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர்.
பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது.
இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.
சென்னை: சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பல தலைவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.
 காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான். தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி தி.மு.க.வால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது.

சந்திரசேகர ராவின் 3-வது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம்- சந்திரபாபு நாயுடு

சந்திரசேகர ராவின் 3-வது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம்- சந்திரபாபு நாயுடு
வெப்துனியா : சந்திரசேகர ராவின்
மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். அமராவதி: தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி
வருகிறார். அவருக்கு ஆதரவு வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியது கூட்டணி குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளது.
 தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் தொண்டர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியதை விமர்சனம் செய்தார்.

பாஜக 125 ( MP க்களை ) ஐத் தாண்டாது !-மம்தா

மின்னம்பலம் :கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜக 125 ஐத் தாண்டாது !-மம்தாகொல்கத்தாவில் இன்று (ஜனவரி 18) அகில இந்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்கத்தா செல்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் குறித்து திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும், பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ஜனவரி 18 அன்று நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கும் என்று கூறினார். தேர்தலில் பிராந்திய கட்சிகளே வெற்றியைத் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: அமைச்சர்!

100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: அமைச்சர்!மின்னம்பலம் : “என்னுடைய புரிதலின்படி, இதுவரை 100 பெண்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்திருக்கலாம்” என கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 17) கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இதுவரை 100 பெண்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஆனால், தரிசனம் செய்த பெண்களின் வயது மற்றும் இதர விவரங்கள் தேவசம் போர்டு வசமோ, மாநில அரசு வசமோ இல்லை என்று கூறினார்.

கல்யாண் ஜுவலறி கொள்ளையர்கள் பிடிபட்டனர் .. திருப்பதியில் 60 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

THE HINDU TAMIL : கோவையில் கல்யாண் ஜுவல் லரி நிறுவனத்துக்கு சொந்த மான நகைகளை கொள்ளை யடித்தவர்களை திருப்பதியில் போலீஸார் கைதுசெய்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.
கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கேரள மாநிலம் திருச்சூர் கிளையில் இருந்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிளைக்கு கடந்த 7-ம் தேதி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, காக்காசாவடி அருகே 10 பேர் கொண்ட கும்பல் ஊழியர் களைத் தாக்கி கொள்ளை யடித்து சென்றது.

எம்ஜிஆர் பிறந்த தினம்.. போலித்தனங்களுக்கு அப்பால் உள்ளது உள்ளபடி ... Flashback

ஆலஞ்சியார் : எம்ஜிஆர் பிறந்த தினம்.. ஜனவரி17.. நண்பர் கேட்டார் உங்கள்
தலைவரின் நண்பரைப் பற்றி ஏன் எழுதவில்லை ..
எம்ஜிஆரை நல்ல கலைஞனாகவோ அல்லது சிறந்த அரசியல் ஆளுமையாகவோ என்னால் கருத முடியவில்லை சினிமா எனும் நிழற்கூடம் கற்பித்திருந்த மதிமயக்கும் மாயவலை என்போன்ற இளைஞர்களை வெகுவாக வழிகெடுத்ததென்பது உண்மை கவர்ச்சியும் அழகும் நிஜமென்று நம்பியதன் விளைவு அரசியலில் மிக பெரிய கேட்டை தமிழகம் கண்டது அதன் தொடர்ச்சியை இப்போதும் அனுபவிக்கிறோம்,..
.. இன்றைய தினம் அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாது ..மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..
திராவிடர்களை தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. பாசிசத்தின் பரிவும் கனிவும் இவரைப்பற்றிய பிம்பத்தை ஊதிபெரிதாக்கின
திராவிடத்தை வீழ்த்த பயன்படுவாரென்று கணக்கிட்டே இவரை உயர்த்திபிடித்தார்கள்

ஜல்லிக்கட்டு களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. காளையை கண்டு பயத்தில் ...சுவாரசிய ரசிய ஜல்லிக்கட்டு


மாடுதான் அவர்களை பிடித்தது ஓடாதீங்கப்பா tamil.oneindia.com - veerakumaran : மதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி என ஒதுங்கிக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை பார்த்துள்ளீர்களா. இல்லையென்றால் இங்கே பாருங்கள்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் திரளாக பார்வையாளர்களாக பங்கேற்று ரசித்தனர். வீடியோ எடுத்து ஷேர் செய்து மகிழ்ந்தனர்.
சில காளைகள் காளையர்களால் அடக்கப்பட்டால், சில காளைகள் காளையர்களை பந்தாடி ஓடின. இப்படியாக, காளைகளுக்கும், காளையர்களுக்கும் நடுவே காலை முதலே, கடும் போட்டி நிலவியது. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

“நான்தான் வைகோ பேசுகிறேன்” ஒரு அன்பரின் நெகிழவைக்கும் நினைவு

nagoori.wordpress.com : நேற்று முந்தைய தினம் என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.
என் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
கார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும் தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.

வியாழன், 17 ஜனவரி, 2019

கக்கனின் எளிமைக்கு பலியான அப்பாவிகள்... எளிமை நடிப்பால் கக்கன் குடும்பத்துக்கு கிடைத்த லாபம்...

Chozha Rajan : கக்கன் அவர்கள் குடும்பத்தில் ஒருமகன் கூட்டுறவுத்துறை
இணைபதிவாளர்.
இன்னொருவர் காவல்துறையில் ஐபிஎஸ் அலுவலர்.
இரண்டுமகன்களும் மூத்த மருமகளும் மருத்துவர்கள்.
கக்கன் அவர்களை 1978 இறுதியில் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். முதன்மை மருத்துவர் பரிசோதித்து உள்நோயாளியாக சேர்க்கிறார்.
ஆர்.எம்.ஓ விரைந்துவந்தார்.
கக்கனுடன் சேர்ந்து அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்கிறார்.
வருமானத்தை பூர்த்தி செய்யும்போது மாதம் ரூபாய் 350 எனக்குறித்து ‘சி கிளாசில்’ சேர்க்கிறார். ஆனால் கக்கன் ஒத்துக் கொள்ளவில்லை.எனது பென்சன் 280 ரூபாய்தான் அதை மட்டுமே எழுதவேண்டும், என்கிறார்.
பிரச்னை டீனிடம் செல்கிறது. அவரும் வந்து அரசு விதிமுறைகளை விளக்கி, எடுத்துரைக்கிறார். எதுவும் எடுபடவில்லை. இறுதியில் டீனின் ஆலோசனையின்படி பொதுவார்டில் ஒருபகுதியை திரைகளால் மறைத்து அறை உருவாக்கி அவரை வைத்தனர்.
மதுரைக்கு ஒருநிகழ்ச்சிக்காக வந்த முதல்வர் எம்ஜியார், கக்கன் மருத்துவமனையில் இருப்பதை
அறிந்து மருத்துவமனைக்கு வந்தார். கக்கன் பொது வார்டில் இருப்பதை பார்தது கொதித்தார்.

10 வீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் வருந்தும் நிலை ஏற்படும்! ஆசிரியர் வீரமணி அறிக்கை

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த
எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில்
‘‘சமூகநீதி’’, ‘‘பொருளாதார நீதி’’
‘‘அரசியல் நீதி’’ என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன்?

உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தினை அவசர அவசரமாக மத்திய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றியது உள்நோக்கம் கொண்டது. இதனைப் புரிந்துகொள்ளாமல் சில எதிர்க்கட்சிகள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததற்குப் பிற்காலத்தில் அவர்கள் வருந்தவேண்டியிருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சட்ட நுணுக்கமான அறிக்கை வருமாறு:
ஒரு நாள் இரவில் (நவம்பர் 8, 2016) பண மதிப்பிழப்பு (Demonetisation) பிரதமர் மோடி அறிவித்தார்.

மோடியின் ஸ்பெக்ட்ரம் ஊழல்! - காங்கிரஸ் புகார்!

minnambalam :மைக்ரோவேவ்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோடி
அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதாகத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸை ஆட்சியிலிருந்து பாஜக அகற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து வெளியேறி ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறுகிய தொலைவுக்கு மொபைல் சேவைகளை வழங்குவதற்காக அவர்களுக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீட்டால் மத்திய அரசின் கருவூலத்துக்கு ரூ.69,381 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஜாதி! .. தனி ஆளாக தாயை சுமந்தே சென்று அடக்கம் செய்த மகன்! ஓடிஸாவில் தொடரும் ஜாதி வெறி

tamil.indianexpress.com : சாதிக் கொடுமை காரணமாக, இறந்த தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம், ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). கணவர் இறந்த பின் தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற ஜானகி, தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சரோஜ் முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டும், யாரும் முன்வரவில்லை. அவர் தாழ்ந்த சாதி என்பதால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

தம்பித்துரை : பாஜகவை தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்? தேர்தல் கூட்டணி பற்றிய..

THE HINDU TAMIL : அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி என்று குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் பாஜகவை தோலில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம் என, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 2019 பாராளுமன்றத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு கட்சிகளை தேடும் நிலையில் உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என பாஜக தலைவர்கள் எண்ணுகின்றனர்.
இதை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி அவசியம் எனப் பொருள்படும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அது குருமூர்த்தியின் விருப்பம் பாஜகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் விருப்பப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசுமாலைமலர் : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த போட்டியில் 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். #Jallikattu #AlanganallurJallikattu மதுரை:தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன.

சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை .. பத்திரிகையாளர் கொலை வழக்கில்..

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை  மாலைமலர் : பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. GurmeetRamRahim பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை சண்டிகர்: அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார்.
இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.

அமெரிக்காவில் டாக்டர் பத்மஸ்ரீ ராஜேந்தரா போத்ராவுக்கு பிணை .. 464 மில்லியன் டாலர்கள் .. ஊழல் மோசடி ..

tamil.thehindu.com  : 464 மில்லியன் டாலர்கள் பெறுமான அமெரிக்காவை அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ ஊழல் என்று வர்ணிக்கப்படும் 464 மில்லியன் டாலர்கள் ஊழல் சதி வழக்கில் ராஜேந்திர போத்ராவுடன் இன்னும் 5 பேர் குற்றம்சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்து வருகின்றனர்.
சுருக்கமான பின்னணி:
இந்த மோசடியினால்தான் ‘ஓபியாய்ட் எபிடெமிக்’ அங்கு உருவானதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.  ஓபியாய்ட் மருந்துகள் என்பது மிதமான வலுவுடன் கூடிய வலிநிவாரணிகளாகும்.  இது ஆக்ஸிகோடன் என்ற வகையின மருந்தாகும், இது ஆக்ஸிகாண்டின், பெர்கோசெட் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படுகிறது. இது ஓபியம் வகை மருந்து என்பதால் டாக்டர்கள் மருந்துச் சீட்டு இல்லாமலும் பெரிய அளவில் விற்றது, கிட்டத்தட்ட போதை மருந்துதான் இது. இதனால் மருத்துவர்கள் பரிந்துரையைம் தாண்டி மக்கள், குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்கள் இதன் போதைக்காக அடிமையாகி பயன்படுத்தி பழக்கத்துக்கு அடிமையானது கிட்டத்தட்ட 90களில் இருந்து தொடங்கியது.