Family members lament after woman was burnt alive by her father. ... her in kerosene and burnt her to death in Uttar Pradesh's Moradabad
மின்னம்பலம் : உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே எரித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஷ்ரஃப் ரஸா கான். இவர் மகள் குல்ஃபஷா பீ (22). குல்ஃபஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜூன்,23) மதியம் 2 மணி அளவில் முஷ்ரஃப் ரஸா கான் தன் மகள் குல்ஃபஷா வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், குல்ஃபஷா அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது குல்ஃபஷாவின் தந்தையும் உறவினர்களும் குழந்தையை அவரிடமிருந்து பிரித்துவிட்டு, அவரைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பின்னர், மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர். வலியால் குல்ஃபஷா அலறி துடித்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குல்ஃபஷா இறந்துள்ளார்.