minnambalam.com :தமிழ்
சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, தமிழ் சினிமாவின் முக்கிய
ஆளுமைகளுடனான விவாதம், பயிற்சி பட்டறை, சுயாதீன திரைப்படங்கள் திரையிடல் என
ஆக்கப்பூர்வமான பல பணிகளை மேற்கொண்டு வருகிறது **தமிழ்ஸ்டுடியோ** என்ற
மாற்று சினிமாவுக்கான இயக்கம். தொடர்ச்சியாகத் தமிழில் வெளிவந்த **100
குறும்படங்களை திரையிடும் நிகழ்வு** வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளில் வடபழனியில் உள்ள **ப்யூர் சினிமா புத்தக்கடையில்**
நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கடந்த மாதம் நடைபெற்றது. அவ்விழாவில்
எடிட்டர் பி.லெனின் இயக்கிய தமிழின் மிக முக்கிய குறும்படமான **நாக்
அவுட்** உள்ளிட்ட நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக
இந்தவார இறுதியில் நடைபெறும் விழாவில் இரண்டு நாட்களில் மட்டும் 40
குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. வாரஇறுதி நாட்களின் மாலை நேரத்தை
குறும்படங்களைப் பார்த்துக் கொண்டாட சினிமாக் காதலர்கள் தயாராகி
வருகின்றனர்.
திரையிடல் நடைபெறும் முகவரி
பியூர் சினிமா புத்தக அங்காடி,
எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு,
வடபழனி, (விக்ரம் ஸ்டுடியோ எதிரில்)
தொடர்புக்கு : 9840698236 (அருண்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக