சனி, 17 செப்டம்பர், 2011

Earth கலவரத்திற்கு பயந்து எவ்வாறு பலர் மதம் மாறினார்

எர்த் 1947

கருத்து சுதந்திரம் பத்தி பேசுறப்ப கட்டயாம் ரெண்டு பேரோட பெயர்  அடிபடும் ஒருத்தர் ஓவியர் எம்.எப் ஹுசைன் அவர  நாம நாடு கடத்தி அங்க அவர் இறந்ததுக்கப்புறம் இங்க நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்னொருவர் தீபா மேத்தா.தீபா மேத்தாவ அவரோட fire படத்த ரிலீஸ் பண்றப்ப பிரச்சனை  செஞ்சதோட அதுக்கப்புறம் அவரோட water படத்த  இந்தியால  எடுக்கவும்  அனுமதிக்கல.அந்த படத்த ஸ்ரீலங்கால எடுத்து முடிச்சாங்க பின்னாளில்  அது கனடா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.அவுங்களோட அடுத்த படம் எழுத்தாளர்  சல்மான் ருஷ்டியோட நாவல அடிப்படையா வச்சு எடுக்குறாங்க ஆனா இந்த படத்துக்கும் இங்க பிரச்சனை வரலாம்னு மீண்டும் ஸ்ரீலண்காலையே படப்பிடிப்பு நடத்துறாங்க.

Dr.Shalini பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துக்கொண்டு இனிமையாய் பேசும் தன்மையை

இவன் வேட்டைக்கு உகந்தவனா, இவன் மரபணுக்கள் வேட்டுவ வீரியம் கொண்டவனவா என்று தரம் பிரிந்து பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு வேட்டையின் தங்கள் திறமையை நிரூபவித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.

ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனையே இருந்தது. புலி, சிங்கம், ஓநாய் மாதிரி மனிதன் பரம்பரை வேட்டுவன் அல்லவே. இவன் குரங்கு வம்சாவழியிலிருந்து வந்தவனாயிற்றே. குரங்குகள் பெரிதாய் வேட்டையாடாதே. அப்படியே பார்த்தாலும், இயல்பில் எல்லா ஜீவராசிகளிலுமே ஆணை விட பெண் தானே அதிக திறமையாய் வேட்டையாடும். இவனோ ஆண், ஆனால் வேட்டையில் சிறந்து விளங்கினாலே ஒழிய பெண் இவனோடு கூடமாட்டாள் என்கிற நிலைமை….ஆனால் இவனுடைய மரபணுக்கள் லேசுபட்டவை இல்லையே…..எந்த சூழ்நிலையிலும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து ஜெயித்துக்கொண்டே இருக்க முயல்வது தானே இவற்றின் ஸ்பெஷாலிட்டி……அதனால் மீண்டும் தம்மை புதுபித்துக்கொண்டன ஆணின் மரபணுக்கள். எப்படி என்று தானே கேட்குறீர்கள்:

இயற்கையின் பொது விதி: ஆண் பால் தான் பெண்ணை தேடி கண்டு பிடித்து கூட வேண்டும். அதனால் இயல்பிலேயே ஆண்களுக்கு தொலை தூரம் துணை தேடி போகும் தன்மை உண்டு. இன்றும் கூட இளவட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டாலே, ஏதாவது வண்டி பிடித்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கு போய் அங்கிருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதையே ஒரு ஸ்வாரசியமான பொழுது போக்காய் வைத்திருக்கிறார்களே….அது தான் இயல்பான ஆடவர் குணம்.

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

சென்னை, அரக்கோணம் அருகேயுள்ள சித்தேரியில் 13.09.2011 இரவு நடந்த இரயில் விபத்து குறித்து அறிந்திருப்பீர்கள். அதில் பத்து பேர் உயிரிழக்க, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இயற்கை சீற்றமல்லாது நடக்கும் விபத்துக்கள் இந்தியா போல எங்கும் நடப்பதில்லை. பாசஞ்சர், புறநகர் இரயில்களில் பயணிக்கும் சாதரண மக்கள் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்கு நமது அதிகார வர்க்கம் எப்போதும் கவலைப்படுவதில்லை.
விபத்து குறித்து முறையான விசாரணை நடந்து காரணங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அமைச்சர்களும், அதிகார வர்க்கமும் புறநகர் ரயிலின் ஓட்டுநரின் தவறென்று கை கழுவதில் அவசரம் காட்டுகின்றனர். அவர்தான் தவறு செய்தார் என்பதை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டு அறிவிக்கலாமே? எல்லா விபத்திற்கும் ரயில்வே ஓட்டுநர்கள்தான் காரணமென்றால் அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எந்தப் பொறுப்புமில்லையா?
ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?

2 சூரியனை சுற்றும் கிரகம் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வாஷிங்டன் : நமது சூரியனை விட சிறிய வடிவிலான அதிக வெப்பத்துடன் 2 புதிய சூரியன்களையும் அவற்றை சுற்றி வரும் புதிய கிரகத்தையும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா. அதன் சார்பில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கெப்ளர் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அது எடுத்து அனுப்பிய சமீபத்திய படங்களை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

ஆம். 2 சூரியன்கள், ஒரு புதிய கிரகம் இருப்பது படங்களில் தெரிந்தது. பூமியில் இருந்து 200 ஆண்டு காலத்துக்கு சமமான தூரத்தில் உள்ள அந்த கிரகத்துக்கு கெப்ளர் 16பி என்று பெயரிட்டுள்ளனர்.

Hot news அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை : மதுரை- ஈரோட்டில் போட்டியிட முடிவு

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்கிற முடிவில், மாநகராட்சி மேயர் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.    அதிமுக சார்பில் ஓ.பி.பன்னீசெல்வமும், தேமுதிக சார்பில் பன்ருட்டி ராமச்சந்திரன் பேசிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மதுரை மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு தேமுதிக போட்டியிட விரும்புவதாகவும், ஈரோட்டை தேமுதிகவுக்கு ஒதுக்குவதற்கு அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது என்றும்,

மதுரையை தேமுதிகவுக்கு ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.