சனி, 23 மார்ச், 2013

உன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI

மனிதகுல வரலாற்றில் குரு பக்தி அல்லது குருவழிபாடு குரு மேன்மை போன்ற சமாச்சாரங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது , அரசன் ஆண்டவன் குரு போன்ற சொற்கள் எல்லாமே அனேகமாக மனிதர்களின் பயத்தை அடிப்படையாக வைத்து அவர்களின் சுய தேடலை சிறுமை படுத்திய ஒரு சமாச்சாரமாகவே காணப்படுகிறது . அறிவை பகிர்வதிலோ அன்பை பகிர்வதிலோ அல்லது மகிழ்ச்சியை பரிமாறுவதிலோ எந்த விதமான தவறும் இல்லை அவை அவசியமானதும் கூட . ஆனால் உனக்கு நான் அறிவு தருகிறேன் பேர்வழி அதற்கு பிரதிகூலமாக நீ உனது உடல் பொருள் ஆவி எல்லாம்   என் முன்னே சமர்பிக்க வேண்டும் எதிர்பார்க்கும்  குரு அல்லது ஆண்டவன் அல்லது அரசன் எல்லாமே எமக்கு உண்மையில் சரியான வழியை காட்டவில்லை .

ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்ப தடை!

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் டிவியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதேபோல் சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொள்ளும் சிலரும் டிவியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு குற்றம் சாட்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால்ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டிவி நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர். <>இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக்கொள்கின்றனர். டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சிகளை டிவியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுகின்றனர்.இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இத்தகைய டிவி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சனைகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றம், தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டதால் இத்தகைய டிவி நிகழ்ச்சிகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண் கிட்டி கூறியுள்ளார்.

தமிழக அரசு அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு ! ஏன் ஏன் ஏன்?

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அழகிரிக்கு மட்டும், தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் போக்கு பிடிக்காமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. ஏன் ஏன் ஏன்
விதிவிலக்காக, அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், “எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி – ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்” என்றார்.
அட, அழகிரிமீது தமிழக அரசுக்கு இவ்வளவு அக்கறை இருப்பதாக யாரும் சொல்லவேயில்லையே!
viruvirupu.com/

Sun Tv செய்தி ஆசிரியர் ராஜா, உதவியாளர் வெற்றிவேந்தனும் கைது!

சன் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சன் செய்தி ஆசிரியர் ராஜாவின் உதவியாளர் வெற்றி வேந்தனும் சுற்றிவ,த்து கைது செய்யப்பட்டார்.ராஜா கைதானதையடுத்து இவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.சன் டிவி செய்திப் பிரிவில் வாசிப்பாளராக சுமார் ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் 28 வயதாகும் அகிலா என்பவர்.அகிலாவுக்கு தொடர்ந்து ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இணங்க வைக்க அவருக்கு நிறைய ஆசை வார்த்தைகளையும் முடியாத பட்சத்தில் மிரட்டலையும் விடுத்துள்ளார் ராஜா என்று புகார் பதிவானது.மேலும் இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ்., போன்கால்கள் என்று பெரும் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராஜாவின் கூட்டாளியான வெற்றிவேந்தன் என்ற மற்றொரு பத்திரிக்கையாளரை வைத்து இந்த செய்திவாசிப்பாளரை அணுகியுள்ளார் ராஜா, அதாவது இணங்கினால் நிறைய சம்பளம் மற்றும் பிற வசதிகள் செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.மேலும் சில பெண் செய்தியாளர்களிடம் வெற்றி வேந்தனும் பாலியல் தொடர்பு வைத்திருந்தது புகைப்படங்களுடன் லீக் ஆனதும் செய்தி ஆசிரியர் ராஜா அவரை வேறு ஊருக்கு பணி இடமாற்றமும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.இந்தப் புகாரை அனுப்பிய அந்தப் பெண் தன் புகார் மனுவுடன் வெற்றிவேந்தனின் குரல் பதிவுகள் மற்றும் அவரது பாலியல் உறவு தொடர்பான புகைப்படங்களையும் கமிஷனரிடம் சமர்ப்பித்ததாக தெரிகிறது.இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜா மற்றும் அவரது உதவியாளர் வெற்றி வேந்தனைக் கைது செய்ய போலீஸ் முடிவெடுத்து ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.ஆனால் இவருக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்து வன்ட்ததோடு இவருமே பல செய்தி வாசிப்பாளருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் புகார் மனுவுடன் சேர்த்து அளிக்கப்பட்டதால் ராஜா இவரை திருச்சிக்கு பணி இட மாற்றம் செய்துள்ளார்.இந்த நிலையில் அவரையும் கைது செய்துள்ளது போலீஸ்.ராஜா போன்றவர்களை பணி நீக்கம் செய்ய சன் நிர்வாகம் முன் வரவேண்டும் போலீசாரும் ராஜா, வெற்றிவேந்தன் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அந்தப் பெண் கூறியுள்ளார். 

  இவன்தான் எடிட்டருக்கு ஆள் புடிச்சு குடுக்கறவன். “
“ஆள் புடிச்சுன்னா…“
“உனக்கு ஒண்ணும் புரியாது… எடிட்டர் எந்தப் பொண்ணு மேல கண்ணு வக்கிறாரோ, அந்தப் பொண்ணை வழிக்கு கொண்டு வந்து எடிட்டர் மடி மேல விழ வக்கிற வரைக்கும் விட மாட்டான்.“
“நம்பவே முடியல.. இப்படில்லாமா பண்ணுவாங்க.. “ விபரமா படிக்கனும்னா சவுக்கு டாட் நெட்டுக்கு விசிட் பண்ணி பாருங்க நம்மளால முடியாதப்பா அவ்வளவு கதை இருக்கப்பா 

இலங்கையில் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை”

சமீப நாட்களாக தமிழகத்தில் இலங்கை தொடர்பான வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் தாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், “இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை” என்று கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள்தான். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை பயனுள்ள வகையிலும், அர்த்தமுள்ள வகையிலும் திறம்பட செயல்படுத்த இரு நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது அதிகரித்து இருப்பதால், சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

Read more:  viruvirupu.com

நயன்தாரா ஆர்யா வீட்டு விருந்து

ஆர்யாவும் நயன்தாராவும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். இப்போது வலை, ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள். பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், இதை ஆர்யா மறுத்துள்ளார்.இது பற்றி அவரிடம் கேட்டபோது, எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர்.

சசிகலா சகோதரர் திவாகரன் கைது செய்யப்பட்டார்.பின்னணி விபரம்!

திவாகரன் மீது கடந்த ஆண்டு ரிஷியூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தமிழார்வன் புகார் கொடுத்தார் என்பதற்காக ஏற்பட்ட முன் விரோதத்தால்,  திவாகரன் துண்டுதலின் பேரில் தமிழார்வனை அதே ரிஷியூரைச்சேர்ந்த ஊராட்சிமன்றத்தலைவர் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோர் அரிவாளால் வெட்ட முயற்சி செய்ததாக நீடாமங்களம் காவல்நிலையத்தில் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் திவாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷியூரில் தமிழார்வனின் டிராக்டர் ஓட்டுநர் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும்க் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, திவாகரன் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி யாரும் ஏழை இல்லை தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.13,862

தமிழக அரசுக்கு தற்போதுள்ள கடனில், ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய்க்கு பொறுப்பாளியாக உள்ளனர். தமிழக அரசின் கடன் தொகை, 2013-14ல், 1.41 லட்சம் கோடியாக உயரும். இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை: இக்கடன் தொகையை, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகைக்கு கணக்கிடும்போது, ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய், 19 காசுகளுக்கு பொறுப்பாளி ஆகிறார். இந்த கணக்கீடு, 2011ல் தமிழகத்தில் உள்ள, 7.21 கோடி மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், மக்கள் தொகை அதிகரித்திருக்கும் பட்சத்தில், இதில், கொஞ்சம் குறையலாம். தமிழகத்தின், 2013-14ம் நிதி ஆண்டின் வருவாய், 1 லட்சத்து 18 ஆயிரத்து 579 கோடி ரூபாய்; வருவாயில் செலவு, 1 லட்சத்து 17 ஆயிரத்து 916 கோடி ரூபாய்; வருவாய் உபரி, 664 கோடி ரூபாய். நடப்பு, 2012-13ம் நிதி ஆண்டில் வருவாய், 1 லட்சத்து ஆயிரத்து 777 கோடி ரூபாயாக இருந்தது. செலவினம், 1 லட்சத்து ஆயிரத்து 325 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டது. இதனால், 451 கோடி ரூபாய் வருவாய் உபரி கிடைத்தது.

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் இருந்து 11 கார்கள் பறிமுதல்


கிரிகெட் வாரிய தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவரும் மேலும் சத்யா சாயி அறக்கட்டளையின் அங்கத்தவருமான N சீனிவாசனின் வீட்டில் இருந்து 11 அதி விலை உயரந்த சொகுசு கார்கள் சிபிஐ யினால் பறிமுதல் செய்யப்பட்டது 
 The CBI has seized 11 cars belonging to BCCI chief N Srinivasan for alleged evasion of duty in Chennai, news channel CNN-IBN reported.
கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, 2011 வரை, வெளிநாடுகளில் இருந்து, பல நிறுவன தயாரிப்புகளான, 33 சொகுசு கார்களை, சிலர் வாங்கியுள்ளனர். இந்த கார்கள் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு, பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியும், அந்த விசாரணை முறையாக நடக்கவில்லை. அதனால், இந்த விசாரணை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த மூன்று மாதங்களாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், நேற்று முன் தினம், 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றதுதான், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளி, 22 மார்ச், 2013

நோக்கியாவின் பலே திருட்டு!

நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
ரோப்பாவிலுள்ள பின்லாந்து நாட்டைச் சேர்ந்த கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா குறித்துப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. தமிழக அரசு, பலத்த போட்டிக்கிடையே, பல சலுகைகளை அளித்து, அந்நிறுவனத்தைத் தமிழகத்திற்கு அழைத்து வந்தது. நோக்கியாவின் வருகை சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவும், தமிழகத்தின் நவீன அடையாளமாகவும் காட்டப்பட்டது. இப்படி ஆளும் கும்பலால் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்ட நோக்கியா, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ள திருட்டுக் கூட்டம் என்ற உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

சஞ்சய் தத்,, மன்னிப்பு வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வரும் நிலையில், மன்னிப்பு கேட்டு சஞ்சய் தத் மகாராஷ்டிரா மாநில கவர்னருக்கு மனு செய்தால், மன்னிப்பு வழங்குவது குறித்து கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவார். மன்னிப்பு வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு. இது பற்றி கருத்து கூற முடியாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.tamil.yahoo.com

வாசன், அழகிரி, நெப்போலியன் ரகசியமாக சந்திப்பு

தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது மு.க.அழகிரி, டில்லியில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்! டில்லி அரசியல் வட்டாரங்களில் அவரை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர் பாட்டுக்கு (எப்போதாவது) அமைச்சுக்கு வருவார், போவார்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் இருந்து விலகியபின், டில்லி அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் நபராகி விட்டார் அழகிரி. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேறியது. சென்னையில் இருந்து வந்த உத்தரவுப்படி, தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை அளித்தனர்.
ஆனால், மு.க.அழகிரி மிஸ்ஸிங்! (கூடவே இலவச இணைப்பாக நெப்போலியன்)
உடனே, டில்லி அரசியல் வட்டாரங்களின் பார்வை அவர் மீது பதிந்தது. “ஆகா.. இவர் வேறு ஒரு ட்ராக்கில் ஓடுகிறாரோ..”
பின்னர், மு.க. அழகிரியும், மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தனர்.
அதன் பின்னரும், டில்லி மீடியா அழகிரி மீது ஒரு கண் வைத்திருந்தது. அவர்களுக்கு தீனி போடுவதுபோல மற்றொரு சம்பவம் நேற்று நடந்தது.
மு.க. அழகிரி, நெப்போலியன் ஆகியோர் நேற்று நண்பகலில் திடீரென மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினர். அழகிரிக்கு ப.சிதம்பரத்துடனும் சுமுக உறவு உண்டு. அவரை விட்டுவிட்டு, வாசனை ஏன் போய் சந்தித்தார்?
டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் இல்லத்துக்கு மு.க. அழகிரியும் நெப்போலியனும் சென்றபோது அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? ஆட்சியில் இருந்து விலகிய நிலையிலும், தி.மு.க. தலைமை, அழகிரி மூலம் புது ரூட் போடப்படுகிறதா? இப்போது டில்லி மீடியாவில் அடிபடும் கேள்விகள் இவைதான்!
viruvirupu.com

தீக்குளிப்பை ஊக்குவிக்கும் தலைவர்களின் சொத்து பறிமுதல்?

தீக்குளிப்புக்களை ஊக்குவிக்கும் கட்சி தலைவர்களை முதலில் காலவரையறை இன்றி காரா கிரகத்தில் போட  வேண்டும். இந்த லிஸ்டில் முதலில் வருகின்றவர் வைகோதான் எங்கே யாராவது தீக்குளித்து விட்டால் அங்கே சென்று தனது ஆசிட் பேச்சுக்களால் அந்த சுத்த பைத்தியகார நிகழ்ச்சிக்கு ஒரு அரசியல் மற்றும் தியாக அந்தஸ்த்து கொடுத்து விடுவார் . மனித குலமே வெட்கி தலை குனிய வேண்டிய கோழை தனமான தற்கொலை சமாசாரத்தை எதோ சரித்திரத்தில் இடம்பெற போகும் உன்னதமான காரியமாக் உருவகித்து நன்றாக கொம்பு சீவி விடுவார் . அவரின் இந்த குலோரிபிகேசன் glorification  மேலும் பலரை இந்த மாதிரி நாமும் தற்கொலை செய்தால் வரலாற்றில் இடம்பெறலாம் என்று என்ன தூண்டி விடுகிறது .
வாழ்விலே நொந்து போனவர்களுக்கு அடையாளம் இழந்து விட்டோமோ என்ற கவலை இருக்கும் இந்த identity crisis  தமிழகத்தில் தாராளமாகவே உண்டு. கேவலம் வைகோவை திமுக விலத்தி விட்டது என்பதற்காகவே பலர் தீக்குளித்து மாண்டனர் . ஆனால் வைகோ சில வருடங்களிலேயே திமுகவுடன் உறவு வைத்து தந்தையை கண்டேன் தாய்வீடு வந்தேன் , தாய்வீட்டை தகர்க்க யாரையும் அனுமதியேன் என்று உறவு கொண்டாடி நான்கு எம்பி பதவிகளை பெற்ற வரலாறுகள் உண்டு.
 தற்போது இந்த தீக்குழிப்பு என்பதை நூற்றுக்கணக்கான சிறு சிறு குழுக்கள் மறைமுகமாக பிரச்சாரம் செய்து ஊக்குவிக்கின்றன அந்த குழுக்களுக்கு வாழ்வில் நொந்து நொருங்கி போன  யாரோ ஒரு பைத்தியகாரியின் கரியாகிப்போன சடலம் பெரிய விளம்பரத்தை கொடுத்து விடுகிறது 
அதிமுகாவின் வரலாற்றில் தீக்குளிப்பு ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது தீக்குளிப்பு மட்டுமல்ல நாக்கு வெட்டுதல் விரல் வெட்டுதல் இன்னும் என்னனவோ சுய அழிப்புக்கள் எல்லாம் உடனேயே ஜெயலலிதாவின் கவனத்தை பெற்று விடும் அது மட்டுமல்ல அவரோடு கூட இருந்து போட்டோ எடுத்து சேவை மனப்பான்மை கொண்ட எந்த தொண்டனுக்கும் கிடைக்காத விளம்பரம் கிடைத்துவிடும் .
தன்னை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழித்து கொண்டவர்களை அருகில் வைத்து பார்த்து ரசித்து புன்னைகைக்கும் காட்சி இருக்கிறதே இடி அமின் கெட்டான் போங்கள்  மனநோயாளர் கூடாரத்தில் இது எல்லாம் சகிச்சுதானே  ஆகணும்.
அவர்களின் தீக்குழிப்பு மேனியா இறுதியில் கும்பகோணம் விவசாய கல்லூரி மாணவிகள் மூன்று பேரை பஸ்சுக்குள் போட்டு உயிரோடு கொழுத்தி அதையும் ஒரு புது போராட்ட வடிவமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது .
தொண்டர்களை தீக்குளிக்க வைக்க எந்த ரேஞ்சுக்கும் போக தயாரான  பாசிஸ்டுகளை தமிழகத்தில் வளரவிடுவது நல்லதல்ல 
இவர்களை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள் தங்கள் தற்காலிக விலைவாசி போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப இந்தவிதமான உணர்ச்சி கோஷங்கள்  பயன் படும் என்று எண்ணுகின்றனர் .
தீக்குளிப்பை ஊக்குவிக்கும் தலைவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தால்தான் இவர்கள் அடங்குவார்கள் 

குஷ்பூ: பாலுறவுக்கான வயதை 16 ஆக குறைப்பதால் கற்பழிப்பு குறையாது

டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்றுகருத்து கூறியிருக்கிறார்.dinamalar.com

ஞானி: பாலாவின் பரதேசி ஒரு சைக்கிக் பர்வர்ட்டட் பார்முலா

 எந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும் முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படம் வெகுஜன பார்வையாளர்கள் முன்பு வைக்கப்படும்போது அவர்கள் அந்தப் படத்தை எப்படி புரிந்துகொள்ளும் வாய்ப்பை அந்தப் படம் தருகிறது என்பதே எனக்குப் பிரதானமானது. வெகுஜனங்களுக்கான படத்தில், சிறப்பான அம்சங்கள் அறிவுஜீவி ஆய்வாளர்களுக்கும் திரைவிமர்சன மேதைகளுக்கும் மட்டுமே புரிகிற மாதிரியும், சாதாரணப் பார்வையாளருக்கு அவை எட்டாத விதத்திலும் இருந்தால் எனக்கு அது உடன்பாடில்லை. ஒரு படத்தின் இறுதியில் ஒற்றை செய்தியாக ஒரு சிறந்த கருத்து சாதாரணப் பார்வையாளர்களுக்குப் போய் சேர்ந்துவிடுகிறது என்பதற்காக அந்தப் படத்தில் மறைக்கப்படும், மழுப்பப்படும் திரிக்கப்படும் திணிக்கப்படும், கருத்துகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது. பார்வையாளர்கள் அந்தக் கருத்துகளையும் படச் செய்தியுடன் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குறைகள் சிறியனவாக உள்ளனவா, அதிகமாக் உள்ளனவா என்பதை கவனித்தே ஆகவேண்டியிருக்கிறது. இதன் காஸ்ட் பெனஃபிட் ரேஷியோ முக்கியமானது.

காஞ்சி சங்கர மட சங்கரராமன் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி படுகொலை


சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், 2004 செப்டம்பர் 3ம் தேதி கோயில் வளாகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் கதிரவன் தலைமையில் சின்னா, அம்பிகாபதி, நண்டு பாஸ்கர், குமார், ஆந்திரா குமார், அணில் குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர், சங்கரராமனை கொலை செய்தது அம்பலமானது. காஞ்சி சங்கர மடத்துக்கு நெருக்கமான அப்பு என்பவர் மூலம் கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சங்கர மடத்தின் கான்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாக கூறப்பட்டது.இதில் கைதான ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். அவர் கொடுத்த வாக்குமூல அடிப்படையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு, கூலிப்படை தலைவன் கதிரவன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்< அவர்கள் ஜாமீனில் வந்தனர். இவ்வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக 1,823 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தவர் கதிரவன் (42). இவரது தந்தை மாணிக்கம், எம்ஜிஆரின் உதவியாளராகவும், கார் டிரைவராகவும் பணியாற்றியவர். திருமணமாகாத கதிரவன், கே.கே.நகர் சத்யா கார்டன் வி.வி கிரி தெருவில் உள்ள அண்ணன் அலங்கார் வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பத்தினருடன் திருப்பதி செல்ல முடிவு செய்து கதிரவன் நேற்று காலை 7.45 மணியளவில் சொந்த காரில் அண்ணன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.  அதே பகுதி காமராஜர் நகர் 3வது தெரு சர்வ சக்தி விநாயகர் கோயில் அருகே வந்தபோது, எதிரே 2 கார்கள் வந்தன. அதில் ஒரு கார், கதிரவன் கார் மீது மோதி யது. இதனால் அவர் காரில் இருந்து இறங்கி ஓடினார்.

உதயநிதியின் ‘சி.பி.ஐ. புகழ்’ HUMMER H3 கார்


நடிகர் சஞ்சய் தத் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்

டெல்லி: 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வியாழன், 21 மார்ச், 2013

சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த டும் டும் பீ பீ' படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

சமந்தா - சித்தார்த் நடித்த 'டும் டும் பீ பீ' படத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ‘ஜாபர்தஸ்த்'. கடந்த மாதம் ஆந்திராவில் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடவிருந்தது. இதற்கிடையில் ‘ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், "பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசை கவிழ்க்க / மூன்றாவது அணி அமைக்க முலாயம்சிங் திட்டம்

A weak central goverment gives rise to specter of Third Front ... say Mulayam may be working for a Third Front, from behind the scenes.
 சரியான நேரத்தில் சரியான பிரச்னைக்காக மத்திய அரசை கவிழ்க்க முலாயம்சிங் திட்டமிட்டிருப்பதாக சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக விலகியதை தொடர்ந்து மத்திய அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. மாயாவதி மற்றும் முலாயம்சிங்கின் ஆதரவு நீடிக்கும் வரை மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதன் காரணமாகத்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என பாஜ தெரிவித்துள்ளது. இதற்கிடையில் முலாயம்சிங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் பேன¤ பிரசாத் வர்மா பேசியிருப்பது காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முலாயம்சிங்கிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ... பயத்தில் முலாயம்சிங் மாயாவதி போன்றோர்

டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தான் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அரசு மிகவும் அப்செட்டாக உள்ளது. சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நேரம் பொருத்தமற்றது, தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது. இதை அரசு செய்யவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.இதேபோல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், சிபிஐ சோதனையை நான் ஆதரிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.
அய்யா மன்மோகன் சிங்கையா சிபிஅய் சோதனை செய்த நேரம் பொருத்தம் அற்றது என்று தாங்கள் எப்படி கூறமுடியும்?
எந்த நேரம் உங்களுக்கும் உங்கள் காங்கிரஸ் மத்திய அரசுக்கும் பொருத்தமானது என்று நீங்கள் கருதும் சுதந்திரம் அதிகாரம் உங்களுக்கு இருப்பதை இப்படி ஒப்புதல் வாக்குமூலமாக இப்போதாவது உளறியதற்கு நன்றி,
ராசாவும் கனிமொழியும் உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் தான் சிறை சென்றார்கள் என்பது இப்போது வெளிச்சமாகி உள்ளது என்று எடுத்து கொள்ளல்லாமா?
முலாயம்சிங் மாயாவதி போன்றோர் உங்களின் பொருத்தமான நேரத்தின் பயத்தில் தான் உங்களுக்கு லோக் சபாவில் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பலரும் பேசுவது கேட்கிறது 

பஞ்ச், துதி பாடல், பில்டப் தலைப்புக்கு டாடா : புது டிரெண்ட் அஜீத்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: தனது படங்களில் ஹீரோயிச பில்டப் காட்சிகளுக்கு திடீரென தடை போட்டிருக்கிறாராம் அஜீத். தமிழ் சினிமா என்றாலே ஹீரோயிசம்தான். இந்த பார்முலாதான் மற்ற தென்னிந்திய மொழி படங்களில் பின்பற்றப்பட்டது. இப்போது பாலிவுட்டும் கூட இந்த மோசமான பார்முலாவுக்கு அடிமையாகிக் கிடக்கிறது. தமிழில் ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் என எல்லோருமே ஹீரோ பில்டப் படங்களில் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்பிலிருந்து, வசனங்கள், பாடல்கள் என எல்லாவற்றிலும் ஹீரோ கேரக்டருக்கான பில்டப்பை புகுத்தவே நடிகர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. ஆனால் திடீரென இந்த

மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபம் அடைவதே குறிகோள்

சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் வந்து தாக்குவதற்கு,  தமிழகம் வரும் புத்த பிட்சுகள் மற்றும் சிங்களர்களை, இங்குள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதன் எதிரொலி தான். இங்குள்ளவர்கள் அரசியல் நடத்துவதற்காக நடத்தும் நாடகத்தில், பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் தான்.இவ்வாறு கடும் வேதனையுடன் மீனவர்கள் கூறினர்

Nava Mayam - Chennai,இந்தியா

அய்யா இங்குள்ள தமிழக அரசியல் வாதிகள் தனி ஈழம் ஒன்றே வழி என்று மறுபடியும் ஒரு ஆயுத போராத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம்தான் எல்லை தாண்டி வருபவன் எல்லாம் தீவிர வாதிகளோ , மீண்டும் புலிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி விடுவார்களோ என்ற அச்சம் தான் இந்திய மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு காரணம் ,,, இதை மறைத்து இன்னும் இன வெறியைத்தூண்டிகொண்டிருந்தல் தமிழ்க மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லை ....
 கொஞ்ச காலம் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தடை செய்ய வேண்டும்...இவர்கள உண்மையிலேயே தமிழக மீனவர்கள் தாக்க படுவதை பற்றி கவலை இல்லை ... அது தொடர்ந்தால் தான் மத்திய அரசு மீது பழி சுமத்தி , தமிழக மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபம் அடைவதே குறிகோளாக உள்ளவர்களை ......இப்போது இந்திய மீனவர்கள் உணர்ந்து , தாங்கள் தாக்க படுவதற்கு தமிழக ஆரசியல் வாதிகளின் செயலே காரணம் என்று பகிரங்கமாக சொல்லிய பிறகாவது , தமிழக அரசியல் வாதிகள் தங்கள் குறுகிய கண்ணோட்ட அரசியலை நிறுத்த வேண்டும்.... 
 தமிழ் நாட்டுக்குள்ளேயே ஒரு மாவட்ட மீனவர்களை இன்னொரு மாவட்ட மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க வந்தால் அவர்களை சிறை பிடிகிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் அடுத்த நாட்டுகாரனிடம் எப்படி ஈர குணத்தை எதிர்பார்க்க முடியும். 
dinamalar.com 

"இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நம்பலாமா? கலைஞர் கருணாநிதிக்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா

 இலங்கைநெட் :கறுப்பு முழு கைச்சட்டை அணிந்திருப்பதிலிருந்து இது சீமானின் எடுபிடிகள்தான் என்று தெளிவாக தெரிகிறது.. இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவும் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்..... ஏனெனில் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கலைஞர் கருணாநிதிக்கு போட்டியாக அவர் களமிறங்கியிருக்கும் காரணத்தால்தான்.. அவருடைய மறைமுக ஆதரவின் துணையுடன் இந்த வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட கொடுமைகளின் உச்ச கட்டத்தை அடைகிறார்கள் என்று கருத முடிகிறது...

இன்று இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறேன் பேர்வளிகளாக.. போராட்ட களத்தில் இறங்கியிருக்கும் தமிழக மாணவர்கள்.. பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒருவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு.. இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போர்க் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும்.. இலங்கை தமிழர்களின் இன அழிப்புக்கு இவர்தான் முக்கிய‌ காரணமானவர் என்று கூறிக் கொண்டு.. அவர் உருவப் பொம்மையை எரிப்பதும்.. உண்ணா விரதம் இருப்பதும்.. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்துவதும்.. இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்குமே தவிர அது எந்த‌ விதத்திலும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு விமோசனத்தையோ அல்லது ஒரு தீர்வையோ கொண்டு வரப்போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்..

தமிழகத்தில் இவர்களுடைய இந்த திடீர் ஆர்ப்பாட்டங்களால் கல்லூரிகள் யாவும் காலவரையறையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளன.. நடைபெற இருந்த‌ வருடாந்த பரீட்சைகளும் பின் போடப்பட்டுள்ளன‌.. கல்லூரி வளாகங்களில் அமைந்திருக்கும் மாணவர் தங்கு விடுதிகளும் திடீரென்று மூடப்பட்டு அங்குள்ள மாணவ மாணவிகள் அனைவரும் உடன் வெளியேற வேண்டும் என்ற அரசாங்க கட்டளையால்.. தூர பிரதேசங்களில் இருந்து அங்கு வந்து தங்கியிருந்த மாணவ மாணவிகள் இந்த திடீர் உத்தரவால் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.. ஒரு நாட்டின் வழர்ச்சியில் பெரும் பங்காற்றும் மாணவர் கல்விக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பது எத்தனை வேதனைக்குறியது என்பதை இதை ஊக்குவிக்கும் சுயந‌லவாத‌ அரசியல் அமைப்புகள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறதா!.. இல்லையே!...

புதன், 20 மார்ச், 2013

காணாமல் போன கமல் ரஜினி ஊர்ல இருக்காரா?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. விஸ்வரூப விவகாரத்தில், தலிபான் உதாரணங்கைள காட்டி, தமிழக இஸ்லாமியர்களுக்கு அறிவுரையும் எதிர்ப்பும்; கமலுக்கு ஆதரவுமாக கருத்து சொன்ன பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருக்கிற எழுத்தாளர்களை, அமெரிக்க சார்ப்பு கொண்ட முதலாளித்துவ நாத்திகர்களை, தனது ரசிகர்களை, முதலாளித்துவ ஜனநாயகம் பேசிய கம்யுனிஸ்டுகளை இப்படி பலரை ஒன்று சேர்த்து தனக்காக போராட வைத்த வைத்த; காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை. இத்தனைக்கும் அவுங்க நாட்டுக்காரங்க (அமெரிக்கா) கொண்டுவர தீர்மானம்தான். ‘அப்போ ரஜினி மட்டும் யோக்கியமா?’ உங்களுக்கு தோணுது இல்ல இப்படி.. ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே ‘தொடர்பு கொள்ளும் நிலை’ யில் இருக்க மாட்டாரு? தப்பா நினைக்காதீங்க.. இமயமலையில் ‘நாட் ரீச்சபுள்’தானே? அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு ‘நாட் ரீச்சபுள்’ ஆயிட்டாரு. புரியலையா?
அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல..
தலைவர் ஊர்ல இருக்காரா? இல்ல.. (இப்ப தலைவர்ன்னு சொன்னது உலக நாயகனை)
‘எனது தமிழகம் மதச் சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன்.’ என்று சொன்னது மாதிரி குஜராத்துல போய் செட்லாயிட்டாரா?
போகும்போது அவரோட தீவிர ரசிகரான நம்ம கருத்து சுதந்திர ஞாநியையும் கூட்டிக்கிட்டு போயிட்டாரோ… ?
மாணவர் போராட்டம் பற்றி அங்கேயும் சத்ததைக் (கருத்து) காணமே…
குறிப்பு:
‘வெளிநாட்டில் இருந்ததால் என்னால் இதில் கலந்து கொள்ளவோ கருத்து சொல்லவோ முடியவில்லை’ என்று உலகநாயகன் கருத்து சொல்லலாம்.
‘வெளிநாட்டில் இருந்தபோது விஸ்வரூப விவகாரத்தில் அடிக்கடி கருத்தை அனுப்பி வைக்க முடிந்தவரால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டதை ஆதரித்து கருத்தை அனுப்பி வைக்க முடியாதா?’ என்று கேட்டால்,
‘இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கருத்து’ என்று கருத்து சுந்திரவாதிகள் நம் கருத்தை சொல்லவிடாமல் எதிர்த்தால்.. அதுக்கு கருத்து சொல்றது கருத்துக்கு கருத்துக்கு கருத்துக்கு கருத்து கருத்தோ கருத்துன்னு… காதடச்சிபோயிடும். mathimaran.wordpress.com/

ஆ.ராசாவையும் திமுகவையும் மட்டும் காவு கொடுத்து விட்டார்கள்.

 “ஆ.ராசாவை ஏன் அழைக்க மறுக்கிறீர்கள்?” என்று புரட்சித்தலைவியோ, சுப்பிரமணியசாமியோ கேட்கவில்லை என்பதுதான் இந்த மர்மக் கதையின் சிறப்பு.
காங்கிரஸ் மத்திய  அரசுக்கு திமுக விலகியதால் உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை ஆனாலும் திமுகவை எப்படியாவது இனிக்க பேசி உள்ளே வைத்திருக்க முயற்சிப்பது தெரிகிறது. அதுவும்  முலாயம், மாயாவதி ஆதரவு தந்துவிட்ட பின்னரும் திமுகவை காங்கிரசு தாஜா செய்ய முயற்சிப்பது ஏன் என்பதுதான் அந்த விசயம். தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராக திரும்பிவிடும் என்ற அஞ்சி காங்கிரசு இதை செய்யவில்லை. கருணாநிதியை கைக்குள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு இருக்கிறது. 
காரணம் 2 ஜி விவகாரம்
மன்மோகன் சிங், சோனியா, ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட  கூட்டுக் களவாணித்தனமே 2 ஜி அலைக்கற்றை கொள்ளை. இந்த விவகாரத்தில் பரம்பரைக் கிரிமினல்களான காங்கிரசுக்காரர்கள், தாங்கள் தப்பித்துக் கொண்டு ஆ.ராசாவையும் திமுகவையும் மட்டும் காவு கொடுத்து விட்டார்கள். இதுநாள் வரை கசியாத இது தொடர்பான உண்மைகள் இப்போது  இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர்.
திராவிட வெறுப்பு, தமிழின வெறுப்பு, தமிழகத்திலிருந்து பார்ப்பன எதிர்ப்பை துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி” ஆகிய “கொள்கைகளில்” உடன்பாடு கொண்ட இவர்கள், சு.சாமியை முன்நிறுத்தி தங்கள் காரியத்தை நடத்தி முடித்து, ஜெயலலிதாவையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விட்டனர்.
அலைக்கற்றை ஊழல் வெளிவந்த காலத்தில், மன்மோகன் சிங் கறை படாத சொக்கத்தங்கம் போலவும், அவர் மீது கடவுள் கூட குற்றம் சாட்ட முடியாது என்பது போலவும், அந்த அப்பிராணி மனிதருக்குத் தெரியாமல் ராசா கொள்ளையடித்து விட்டதைப் போலவும், அனைத்திந்திய ஊடகங்களும், உச்சநீதிமன்றமும் ஒரு பில்டப் கொடுத்து தூக்கி விட்டன. கல்லுளி மங்கன் மன்மோகன்சிங்கும், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு தெரியவே தெரியாது என்று கூசாமல் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்.
“மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் இது நடக்கவில்லை. நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று ஊடகங்கள் சு.சாமியைக் கேட்டபோது, “என்னுடைய இலக்கு திமுக மட்டும்தான்” என்று பச்சையாக பதிலளித்தார் சு.சாமி.
இந்த ஊழலை விசாரிக்க “கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) அமைக்க வேண்டும்” என்று கோரி பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டபோது, யோக்கிய சிகாமணி மன்மோகன், “ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாக அறிக்கை விட்டார். உடனே காங்கிரசு களவாணிகள், “நாட்டாமை நீங்களா.. அந்த நதியே காஞ்சு போனா” என்ற ரேஞ்சுக்கு சீனைப் போட்டு கண்ணீர் வடித்தனர்.
இன்று நடப்பது என்ன?

அதிமுக வில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சேர்ந்தார் ! நாஞ்சில் சம்பத் upset

இது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரக்கூடும்
பிரபல காபரெட் சாமியாரும் பலநாட்டு (multinational) ஆசிரம வியாபாரியுமான  டபுள் ஸ்ரீ DMK  வை காட்டமாக விமர்சித்து உள்ளார் . அதாங்க இலங்கை தமிழர்கள் விடயத்தில் தி மு க சரியாக செயல் படல்லியாம் ? இவர் இப்படி நாஞ்சில் சம்பத்தின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துவிட்டார்  
நஞ்சிலோ பாவம் வைகோவிடம் இருந்து ஒரு மாதிரி தப்பி இப்பத்தான் பெரிய பெரிய சூட்கேசுகளையும் இநோவாவையும் ரசித்து கொண்டிருக்கிறார் 
இது பொறுக்காம பங்குக்கு இப்ப டபுள் ஸ்ரீ வருவது சரியில்ல என்பது நடு நிலையாளர்கள் கருத்தாகும். இது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரக்கூடும் இனி உண்மை செய்தியை வாசிங்கள் :
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக ஆடுவது நாடகம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்,, அடேங்கப்பா போட்டானே ஒரு போடு 
இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கைக்கு டார்ச்சர் : வாலிபர் கழுத்து நெரித்து கொலை ; தற்கொலைக்கு முயன்ற நண்பர் கைது


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஜோலார்பேட்டை-: ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்தவர் சங்கர் (எ) சரவணன் (25), பெங்களூரில் ஒரு தனியார் லாட்ஜ் ஊழியர். அதே லாட்ஜில் பெங்களூரை சேர்ந்த பிரபாகரனும் (22) வேலை பார்த்தார். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். நட்பாக பழகிய இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிரபாகரன், சங்கருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சங்கர், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் வேடியப்பன் கோயில் பகுதியில் உள்ள சித்தி கோவிந்தம்மாள் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். நானும் வருகிறேன் என்று கூறிய பிரபாகரன், கடந்த 11ம் தேதி சங்கருடன் ஜோலார்பேட்டை வந்தார். இந்நிலையில், நேற்று சங்கரின் சித்தப்பா சின்னதுரை, சித்தி கோவிந்தம்மாள் ஆகியோர், நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சங்கரும், பிரபாகரனும் தனியாக இருந்தனர்.

Morarji Desai யின் கொள்கைகளை பின்பற்றும் Rahul Gandhi

எப்போது ராகுல் காந்தி காங்கிரசில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தாரோ அப்போது பிடித்தது பரம்பரை காங்கிரஸ் வியாதி அதாங்க கட்டிபிடிசுகுனே கழுத்தை நெரிக்கிறது
அதென்னவோ திராவிட கொள்கை எதிர்ப்பாளர்கள் எல்லாம் கலைஞரை கவிழ்ப்பதிலேயே குறியா இருக்கிறாங்க .
நேரு காலத்தில் இருந்த நொன்சென்ஸ் வியாதி பூட்டன் காலத்துக்கும் கொஞ்சம் கூட மாறலிங்க .
இவங்க கொள்கையிலே இவங்களை விட தீவிரமா இருந்த மொராஜி தேசாய்க்கு அடுத்த படி வடவர் வியாதி ராகுலிடம் முத்தியே உள்ளது நல்லாவே தெரியறது .
காங்கிரசின் சகல வீழ்ச்சிக்கும் அத்திவாரம் போட்டவங்க இன்னும் ஆக்டிவாகவே இருக்காங்களே என்ற வயிதெரிச்சலில்  தன்  தலைலே தாங்களாவே மண்ணை வாரி போட்டுட்டாங்க .
ராகுல்ஜி மொரார்ஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதாக தெரியிறது .
யூரின் திரபி  ஜூசை பத்தி  சொல்லலைங்க .
ராசாவையும் கனிமொழியையும் வேண்டுமென்று மாட்டி விட்டது மிக மிக அநியாயம் . பாலிவுட் பாணியிலே இட்டுக்கட்டி இதிலே மொரார்ஜி பாணி முரளி மனோகர் ஜோசி நம்ம ஊரு ஜெயாம்மா எல்லாரும் சேர்ந்து  ஆயிரம் ஆண்டு பகையை முடிக்கிறதா நினைச்சு குழவி கூட்டில கையை விட்டு கலைசுபுட்டாங்க . இந்த காயம் ஆறாது அப்பனே . அதான் வேறே வேறே ரூபத்தில் வந்து கிட்டே இருக்கே ? இனியும் வரும் வரும் . நிச்சயம் உங்களுக்கு புரியும்
சோனியாவிடம் இருக்கும் நேர்மை உங்களிடம் இல்லை
அலைவரிசை மோசடி பற்றி எதிர்காலத்தில் உங்கள் மீது பொய் குற்றச்சாட்டு புனைந்த குற்றத்திற்காக வழக்கு பாயும்
அப்போது முழு உலகமும் அறியும் இது நிச்சயமாக திமுகவுக்கு எதிராக பின்னப்பட்ட பார்பன பனியா சதி என்பது .

அழகிரியும் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரைச் சந்திப்பார்கள்

மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதை அடுத்து, மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இந்த நிலையில், திமுக தலைவர் தன்னிடம் இந்த முடிவு குறித்து ஏதும் விவாதிக்க வில்லை என்று மு.க. அழகிரி தனது வருத்தத்தை தெரிவித்தாராம். தன்னிடம் ஆலோசிக்காமல் திமுக தலைவர் எடுத்த இந்த முடிவு காரணமாக அவர் கோபத்தில் இருந்ததாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. திமுகவின் விலகல் முடிவு குறித்து நேற்று, தில்லியில் செய்தியாளர்கள் மு.க. அழகிரியிடம் கேட்டபோது, தலைமையின் முடிவே தன் முடிவு என்று கூறிச் சென்றார். ஆனால், தன்னிடம் இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை என்று அழகிரி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, அழகிரியும் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. இன்று காலை பிரதமரைச் சந்தித்த 3 அமைச்சர்கள் தங்களது ராஜினாமாக் கடிதத்தை அவரிடம் அளித்தனர். அதில் அழகிரியும் நெப்போலியனும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தனக்கு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வர விருப்பமில்லை என அழகிரி கூறியதாக தகவல்கள் வெளியாகின. எனவே அழகிரியும் நெப்போலியனும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது

Family Planing அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடித்து வந்தால்பரிசு!

குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடித்து வருபவர்களுக்கு பல அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது மத்திய பிரதேச மாநில அரசு. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை. இந்த கு.க. அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு 500 ரூபாய் பணம், ஹார்லிக்ஸ் பாட்டில், அரிசியும் ஊக்கத் தொகையாக கொடுக்கின்றனர்.
ஆனால் கு.க. ஆபரேசனுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசுகள் அள்ளிக்கொடுக்கின்றனர். 500 பேரைக் கூட்டிவந்தால் நானோ கார், 50 பேர் அழைத்து வந்தால் ஒரு பிரிட்ஜ், 25 பேர் என்றால் 10கிராம் தங்கக் காசு என்று அரசே பரிசுகளை அறிவித்துள்ளது. இதற்கு ஆசைப்பட்டு மக்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் பிடிக்கும் அவலம் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

Piya Bajpa: கவர்ச்சி காட்டுவது போரடித்துவிட்டது

கவர்ச்சி காட்டி நடிக்கும் ஜாலியான வேடங்கள் போரடித்துவிட்டது என்றார் பியா. ‘கோவா', ‘கோ' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. அவர் கூறியதாவது: இதுவரை ஏற்று நடித்த வேடங்கள் எல்லாமே கவர்ச்சியுடன் கூடிய கமர்ஷியலான கேரக்டர்கள். வந்தோமா ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தோமா, கவர்ச்சி காட்டினோமா என்று வழக்கமான வேலையாக இருந்தது. ‘கோÕ படத்துக்கு பிறகு அதேபோல் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஜாலியான நவநாகரீக பெண்ணாக நடித்து போரடித்துவிட்டது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களுக்காக காத்திருக்கிறேன். தமிழில் ‘கூட்டம்' என்ற படத்தில் பிராமண பெண்ணாக நடிக்கிறேன். முதல்முறையாக படம் முழுவதும் பாரம்பரியமான பாவாடை, தாவணி அணிந்து நடிக்கிறேன். இது வழக்கமான ஜாலி வேடம் கிடையாது. நகைச்சுவையும் இந்த கதாபாத்திரத்தில் இழையோடும். என்னுடைய விருப்பமும் இதுபோன்ற வேடம்தான். வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருந்தேன். அந்த வரிசையில் வந்த படம்தான் கூட்டம். தெலுங்கிலும் ‘தலம்‘ என்ற பெயரில் இப்படம் உருவாகிறது. தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது.  இவ்வாறு பியா கூறினார்.

ஆக்ரா: இங்கிலாந்து பெண் பலாத்காரம் ஓட்டல் மாடியில் இருந்து குதித்தார்

இந்தியாவுக்கு செல்லும் இங்கிலாந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 
ஆக்ராவில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த இங்கிலாந்தை சேர்ந்த பெண் பலாத்கார முயற்சியில் இருந்து தப்ப மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது.டெல்லி அருகே ஆக்ராவில் இட்கா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 3 நாட்களாக இங்கிலாந்தை சேர்ந்த 25வயதான இளம் பெண் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது அறைக்கு மசாஜ் செய்வது போல வந்த நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து வெளியே ஓடி வந்த பெண், மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணை மீட்டு ஆக்ரா மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பெண்ணின் அறைக்கு வந்தவர் ஓட்டல் உரிமையாளர் சச்சின் சவுகான் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இங்கிலாந்து பெண் ணுக்கு தூதரகம் மூலம் உதவிகள் அளிக்கப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லண்டனில் கூறினார்.இந்தியாவுக்கு செல்லும் இங்கிலாந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ம.பி.யில் கடந்த வாரம் இங்கிலாந்து பெண் ஒருவரை 8 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது. பலாத்காரம் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து காயம் dinakaran.com

பாலியல் குற்ற தடுப்பு மசோதா நிறைவேறியது: 40 சதவீத எம்.பி.,க்களே பங்கேற்பு

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான, பாலியல்குற்றங்களை தடுக்கும் புதிய சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. முக்கியமான இந்த மசோதா ஓட்டெடுப்பின் போது, வெறும் 40 சதவீத எம்.பி.,க்களே கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அவையில் இல்லை. டில்லி, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, "பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, அவசர சட்டம், கடந்த மாதம் அமல்படுத்தப் பட்டது. இந்த அவசர சட்டத்தை, அடுத்த மாதம், 4ம் தேதிக்குள், சட்டமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளதை அடுத்து, அதற்கான புதிய மசோதாவை, மத்திய அரசு தயாரித்தது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான, வயது வரம்பை, 16 ஆக குறைக்க, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்தன. இதையடுத்து, திருத்தப்பட்ட மசோதாவில், இதற்கான வயது வரம்பு, மீண்டும், 18 ஆக தொடர, சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, இந்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

இலங்கையர்கள் தமிழகத்திற்கு செல்லத்தடை உடனடி அமுல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தமிழகத்திற்கு செல்வதற்கு, இலங்கையர்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில், இலங்கை தேரர்கள், தமிழகத்தில் எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகளால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை, இலங்கையர்களுக்கு தமிழகத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசேடமாக தமிழகமூடாக, யாத்திரை மேற்கொள்வதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரிகர்களை அழைத்துச்செல்லும்போது, தமிழகத்தினூடாக செல்வதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களுடாக செல்லுமாறும், வேண்டப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை மீறி, யாத்திரிகர்களை அழைத்துசெல்லும் பட்சத்தில், இலங்கையர்களின் பாதுகாப்பு கருதி, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளார்:  By இலங்கைநெற்

செல்வராகவனின் இரணடா‌ம் உலகம் படம் எப்போது வெளிவரும்?

நடிகர்களை அடித்து உதைத்து செதுக்கும் ஆனானப்பட்ட பாலாவே தொண்ணூறு நாட்களில் பரதேசியை முடித்து திரைக்கு கொண்டு வந்துவிட்டார். செல்வராகவன் என்ன செய்கிறார்? இன்டஸ்ட்‌ரியில் இயல்பாக எழுந்துள்ள கேள்வி இது. அனுஷ்கா, ஆர்யா நடித்திருக்கும் இரண்டாம் உலகம் வழக்கமான கதை அல்ல. பழங்குடியினரைப் பற்றி படத்தில் வருகிறதாம். ஆர்யாவும், அனுஷ்காவும் ஆதிபழங்குடிகளாக நடித்துள்ளதாகவும், அந்தக் காட்சிகளைதான் ஜா‌ர்‌ஜியாவில் எடுத்தனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. என்றாலும் ஹா‌ரிஸ்தான் லேட்டாம்.இந்த தாமதம் காரணமாக ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில்தான் கடைசிப் பாடலை தனுஷை பாட வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.டாக்கிப் போர்ஷன் எனப்படும் வசனக் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. சி‌ஜி வேலைகள் அதிகளவில் உள்ளதாகவும் தகவல்.கூட்டிக்கழித்தால் கோடையில் படம் வெளியாக அரை சதவீத வாய்ப்பும் இல்லை. ஆகஸ்டில் ஒருவேளை வெளியாகலாம் என்பதே படயூனிட்டின் கருத்தாக உள்ளது.tamil.webdunia.com

Red Teaயின் மறைக்கப்பட்ட குழந்தை பாலாவின் பரதேசி ஆக

எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் நாவலிலிருந்து மொத்தக் கதையை உருவியிருந்தாலும் அந்த நாவலுக்கான கிரெடிட் படத்தில் கொடுக்கப்படவில்லை. எழுத்தும் இயக்கமும் பாலா என்று டைட்டில் போடுகிறார்கள். கேரக்டர்களின் பெயரை மாற்றிவிட்டால் கதை அவருடையதாகிவிடும் போலிருக்கிறது என்று நம்பித்தான் படம் பார்க்க வேண்டும். Red Tea நாவல் 1969 லேயே ஆங்கிலத்தில் வந்துவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டு இரா.முருகவேள் மொழிபெயர்த்து தமிழில் வெளியிடும் வரை அந்த நாவல் தமிழகத்தில் எந்தக் கவனமும் பெற்றிருக்கவில்லை. முருகவேளின் மொழிபெயர்ப்பு இல்லாமலிருந்தால் பாலாவுக்கும் இந்த ஸ்டோரி லைன் கிடைத்திருக்க முடியாது. அதற்காக, முருகவேளுக்காவது ஒரு நன்றி போட்டிருக்கலாம். ம்ஹூம். படம் பார்க்க வருபவர்களுக்கு துன்பத்தின் பக்கங்களை எப்படியெல்லாம் காட்ட முடியும் என்று பாலாவுக்கு தெரிந்திருக்கிறது. சாகடித்துவிடுகிறார். அலுவலகத்தில் நசுக்கிறார்கள். வெளியுலகம் வதைக்கிறது. வீட்டில் அதைவிட பிரச்சினைகள் என ஒருவன் Relaxationக்காக தியேட்டருக்குச் சென்றால் “நீ தூக்கில் தொங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை” என்று சொல்கிறார்கள்.
இந்த மாதிரி படங்களை கலைக்கண்களோடு பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லிவிடக் கூடும் என்று பயமாக இருக்கிறது.

டேராடூனில் 5 கணவர்களோடு நிம்மதியாக குடும்பம் நடத்தும் பெண்


 Uttrakhand, India: Five brothers (L-R) Sant Ram Verma, 28, Bajju Verma, 32, Gopal Verma, 26, Guddu Verma, 21, and Dinesh Verma, 19, with their shared wife Rajo Verma, 20, and their son Jay Verma, 1.5, together pose for a photograph outside their house in a Village in Uttrakhand, India.
WIFE19N_3_WEBதிரௌபதி பஞ்ச பாண்டவர்களை மணந்து வாழ்ந்த புராணக்கதை நமக்கு மிகவும் பரிச்சயமானதுதான்.ஆனால் இதுவும் இந்தியாவில்தான் நடந்துள்ளது. டேராடூனில் ஒரு பெண் ஐந்து கணவர்களுட ஒரே வீட்டில் வசித்து வருகிறாள்.ரஜோவர்மா என்ற இந்த நவீன திரௌபதிக்கு வயது 21. இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்று தெரியாது. 5 பேரும் தந்தைகள் தான்.முதலில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது பிறகு பழகிவிட்டது என்கிறாள் இந்த பெண்.ஒரு கணவனுடன் வாழும்போதே பெண்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் காலத்தில் 5 கணவன்மார்களுடம் நிம்மதியாக குடும்பம் நடத்துகிறேன் என்று கூறும் இந்தப் பெண் உண்மையில் அசாத்திய தைரியசாலிதான்!  ம்ம் பெண் சிசுகொலை கடைசியில் எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது பாருங்கள் 

Shariq Allaqaband

Brothers Sant Ram Verma, Bajju Verma, Gopal Verma, Guddu Verma and Dinesh Verma with their wife Rajo Verma and her 18-month-old son. She is unsure which brother is the father.

எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடிய மன்மோகன்சிங் அரசு

தி.மு.க. வெளியேறியதைத் தொடர்ந்து மத்திய அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதான சற்று நேரத்துக்கு முன், தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். தி.மு.க. தலைவரின் அறிவிப்பை அடுத்து, உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது டில்லி.
லோக்சபாவில் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 540. அரசு நீடிப்பதற்கு 270 எம்.பிக்களின் ஆதரவு தேவை. தி.மு.க.வின் ஆதரவுடன் மொத்தம் 295 எம்.பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்தது. தற்போது திமுகவின் 18 எம்.பிக்கள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கான ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 277ஆகக் குறைந்துள்ளது. அப்படிப் பார்த்தால், தி.மு.க. விலகியதால், ஆட்சி கவிழாது என்பது போல தோன்றலாம். ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட 277 எம்.பி.க்களில், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி (22 ) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (21) எம்.பிக்களின் எண்ணிக்கையும் அடக்கம். அவர்கள் ஆட்சியில் பங்குபெறவில்லை. அமைச்சர்களாகவும் இல்லை. தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமோ, கமிட்மென்ட்டோ இல்லை. இதனால் டெக்னிகலாக சமாஜ்வாடி கட்சி, அல்லது பகுஜன் சமாஜ் கட்சி நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ‘கவிழ்க்கப்பட’ கூடிய அரசாக மன்மோகன்சிங் அரசு மாறியிருக்கிறது. அவர்களை தூண்டிவிடவும் ஆள் இருக்கிறது என்பதே, மத்திய அரசுக்குள்ள உடனடி சவால்! ஏனென்றால், தி.மு.க. ஆதரவு இருந்தால், இவர்கள் இருவரையும் வெளியேற வைக்க வேண்டும்.கொஞ்சம்  ‘அப்படியிப்படியான’ ரிலேஷன்ஷிப்பில் உள்ள இவர்களை ஒன்றாக வெளியேற்ற முடியாது. ஆனால் இப்போது, இந்த இரு தரப்பில் ஒரு தரப்பை இழுத்தால், சிங் அரசு கவிழும் என்பதால், அதற்கான முயற்சிகள் நடக்கும்! viruvirupu.com

தி.மு.க. விலகல்!..Congress மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கிறது

 மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகல்! உணர்ச்சி கொந்தளிப்பில் துள்ளும் தி.மு.க. தொண்டர்கள்!!  தலைமை முடிவே எனது முடிவு : மு.க. அழகிரி
இலங்கை விவகாரம் காரணமாக,  மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார் அவர். ஆதரவு வாபஸ் பெறுவதுடன், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இன்று காலை வெகு சீக்கிரம் அறிவாலயத்துக்கு வந்து விட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, அனைத்து மாவட்ட செயலர்களையும் உடனடியாக அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார். அவர்களில் பலர் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதையடுத்து, அனைத்து உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பி, சென்னையில் உள்ளவர்கள் அறிவாலயத்தில் கூடினர்.
அப்போது செய்யப்பட்ட ஆலோசனையை அடுத்து மத்திய அரசில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்தார் கருணாநிதி.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர், “இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இன்று அல்லது நாளை தி.மு.க. மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர்” என்றார்.
தி.மு.க. தலைவரின் இந்த அறிவிப்பால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ள தி.மு.க. தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், வாழ்த்துக் கோஷம் எழுப்பியும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலத்துக்குப்பின், ‘பழைய’ ஃபோர்மில் தி.மு.க. தொண்டர்களை காணக்கூடியதாக உள்ளது.
viruvirupu.com

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய்

சென்னிமலை : ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (எ) பாஷா. விவசாயி. இவர் வளர்த்து வந்த ஆடு, கடந்த 7 நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளை ஈன்றது. இதே போல் அவரது வளர்ப்பு நாய் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றது. ந்த நாய் குட்டி போடும் முன்னர், துள்ளி குதித்தபடி ஆட்டு குட்டிகள் அருகில் வந்தால் விரட்டியது. ஆனால் நாய் குட்டி போட்ட பிறகு, தனது குட்டிகளுக்கு பாலூட்டி அரவணைத்ததோடு ஆட்டு குட்டிகள் மீதும் தாய்ப்பாசத்தைப் பொழிந்தது. அந்த ஆட்டு குட்டிகளுக்கும் நாய் பால் கொடுக்கிறது. நாயிடம் சென்று ஆட்டு குட்டிகள் அடிக்கடி பால் குடிப்பதை அப்பகுதி மக்கள் வினோதமாக பார்த்துச் செல்கின்றனர். பலரும் இந்த காட்சியை செல்போன் கேமராக்களில் படம் பிடித்துச் செல்கின்றனர்dinakaran.com

Flash Back ஒரு அரசியல் அனாதையின் கதை!

ரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.
வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார்.

லெட்டர் பேடு கட்சிகளால் தமிழகத்துக்கு கரும்புள்ளி

சென்னை: தஞ்சையில் புத்த பிட்சு தாக்கப்பட்ட சம்பவத்தால், பவுத்த மதத்தை கடைபிடிக்கும் நாடுகளில் தொழில் செய்யும் தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கைகளில் இறங்காவிட்டால், சர்வதேச அளவில் தமிழகத்துக்கு கரும்புள்ளி ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகி விடும தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர், திருச்சியை மையமாகக் கொண்டு, தஞ்சை, திருவாரூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பழங்கால கட்டடங்களை ஆர்வமாக சென்று பார்க்கின்றனர். கடந்தாண்டு மட்டும், அனைத்து நாடுகளையும் சேர்ந்த, 76 ஆயிரம் பேர் திருச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இலங்கையிலிருந்து வந்து சென்றுள்ளனர். அவர்கள் மூலம் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில், 20 கோடி ரூபாய், அன்னிய செலாவணி கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னை, "லெட்டர் பேடு' கட்சிகளால் பெரிதாக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர் பிரச்னையை மையமாக வைத்து, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இக்கட்சிகள், இலங்கை நாட்டினர், தமிழகம் வந்தால் தாக்குவது, மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, திடீர் சாலை மறியல், ரயில் மறியல் என, பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை, அனைவரும் அறிவர். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையிலும், மற்ற நாடுகள் மத்தியில், இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும், இவை நிகழ்வதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

அதிகரிக்கும் ஆதிதிராவிட பெண்கள் மீதான வன்கொடுமைகள்

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்ததால், அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிட பெண்கள் என்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், 2009-2012 ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து, மதுரையைச் சேர்ந்த, "சாட்சியம்' என்ற நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தது. அதில், கலப்பு திருமணம் செய்து கொண்டு, கணவரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவரின் குடும்ப உறுப்பினர்களால், சித்திரவதைக்கு உள்ளானோர், திருமணம் செய்து, பின் சேர்ந்து வாழ மறுத்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய, நான்கு வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அவற்றில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே என்பது, ஆய்வில் தெரியவந்தது.
84 கலப்பு திருமணங்கள்: மொத்தம், 17 மாவட்டங்களில், கடந்த நான்கு ஆண்டுகளில், 84 பெண்கள் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். இவர்களில், 67 பேர், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த, 17 பெண்களும், வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாநி : பரதேசி பாலாவுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது

ஞாநி திரைப்பட இயக்குநர் பாலாவுக்கு முதலில் என் நன்றி. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முரட்டுத்தனமாக தான் அடித்துக் காட்டி நடித்துக் காட்டி வேலை வாங்குவதை பகிரங்கமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். தன் புதிய படத்துக்கு கவனம் ஈர்க்கும்  பப்ளிசிட்டிக்காக இந்த வேலையை அவர் செய்திருந்தாலும், இது தமிழ் சினிமா துறையில் காலம் காலமாக இருந்துவரும் சில கேவலங்களைப் பொது விவாதத்துக்குக் கொண்டு வர எனக்கு உதவியிருப்பதற்காக அவருக்கு நன்றி. பாலா நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களை  குச்சியாலும் கையாலும் காலாலும்; அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப் பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தன் மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.மிழ் சினிமாவில்தான் இந்த நடித்துக் காட்டுவது என்ற விசித்திரமான கேவலம் இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய திரைப்பட மேதைகள் யாரும்  தங்கள் நடிகர்களுக்கு நடித்துக் காட்டும் வழக்கம் கிடையாது. சிறந்த நடிகர்கள் யாரும் தமக்கு இயக்குநர் நடித்துக் காட்டுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அதை அவமதிப்பாகவே கருதுவார்கள்.நடிகரிடமிருந்து தனக்கு தேவைப்படுவது என்ன என்பதை ஒரு இயக்குநர் நடிகருக்கு சொல்லிப் புரியவைப்பது மட்டுமே தேவை. இயக்குநர் என்ன விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்ட நடிகர், தான் அந்தப் பாத்திரத்தை எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை இயக்குநருக்கு நடித்துக் காட்டியே உணர்த்த வேண்டும். தன் பாத்திரத்தைப் பற்றி சிந்திக்கவும் சிந்தித்துத் தீர்மானித்ததை தன் உடல் மொழியால் வெளிப்படுத்தவும் தெரிந்தவரே நடிகர். இயக்குநர் நடித்துக் காட்டியதை அப்படியே மிமிக்ரி செய்பவர் சிந்திக்க தெரியாத, இயலாத ஒரு  கருவி மட்டுமே.

திங்கள், 18 மார்ச், 2013

காங்.,க்கு ராசா பதிலடி என்னை நேரில் விசாரிக்க என்ன பயம்?

  ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக் குழுத் (ஜே.பி.சி) தலைவர் பி.சி. சாக்கோ விடுத்த கோரிக்கையை முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா நிராகரித்து விட்டார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. யான பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள் உள்பட 20 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு முன்பு சமீபத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அட்டார்னி ஜெனரல் வாகனாவதி கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான செய்திக்குறிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவால் அது திருத்தப்பட்டதாகவும், சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் யோசனையை அவர் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
வாகானாவதியின் இந்தக் கருத்தை ஆ. ராசா மறுத்தார். நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க விரும்பிய அவர், இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22 ம் தேதி மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதினார். மேலும் தி.மு.க. சார்பிலும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால், ஆ. ராசா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ அனுமதி அளிக்கவில்லை.

திரைப்பட விருதுகள் List பலத்த சர்ச்சையில்

புதுடெல்லி: 2012ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த பிராந்திய மொழி படமாக 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் தட்டிச் சென்றது. சிறந்த நடிகராக இந்தி நடிகர் இர்ஃபான் (பான் சிங் தோமர் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பலத்த சர்ச்சையில் சிக்கி வெளிவந்த கமலின் விஸ்வரூபம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. விஸ்வரூபம் படத்திற்கு சிறந்த கலை மற்றும், நடன அமைப்பு ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.
சங்கர் மகா தேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது. 'கஹானி' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்திற்கு சிறந்த உடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

விருதுகள் விவரம் பின்வருமாறு சிறந்த நடிகை : உஷா ஜாதவ்< தேசிய அளவில் சிறந்த படம் : பான் சிங் தோமர்< சிறந்த பொழுதுபோக்கு படம் : விக்கி டோனர் சிறந்த துணை நடிகை : டாலி அலுவாலியா

Jeyamohan: திரைப்பட விருதுகள் இறுதி மூன்றுக்குள் இருந்ததே ஒரு வெற்றிதான்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாட்களாகவே செய்திச்சானல்களில் இதைப்பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒழிமுறி நான்கு பரிசுகளுக்கான இறுதிச்சுற்றில் இருக்கிறது என்று செய்தி போட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் லாலுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்புப் பாராட்டுக்குறிப்பு மட்டுமே கிடைத்தது.
லாலும் மதுபாலும் சற்று ஏமாற்றம் கொண்டிருப்ப்பதாக தெரிகிறது. ஆனால் நேர்த்தியாக கொடுக்கப்படும் விருதுகள்கூட ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அளிக்கப்படமுடியும். நல்ல படங்களின் ஒரு பட்டியல் உருவாக்கப்படுகிறது. அது குறுக்கப்பட்டு சிறந்த படங்களின் ஒரு சிறிய பட்டியல். அதிலிருந்து மிகச்சிறந்த முதல்படம், மிகசிறந்த இரண்டாவது படம் என்று தேர்வுசெய்யப்படுகிறது
இந்த இறுதிப்பட்டியல் வரை வருவதாக தன் படத்தை எடுப்பதில் மட்டும்தான் இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் பணி உள்ளது. அதுவே பெரிய கௌரவம். விருதுகள் அதற்கும் மேல் பற்பல சின்னச்சின்ன பரிசீலனைகளுக்கும் இடமளிப்பவை.

BJP கூட்டணியில் விரிசல் நிதிஷ்குமார் 3 வது அணி

பாட்னா: காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அதனுடன் சேர்ந்து கவிழ்ந்து போவீர்கள் என பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாஜ தலைவரும் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராகவும், பாஜவை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதல்வராகவும் இருக்கின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜவில் கோஷம் வலுத்து வருகிறது. இதற்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம், ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்ததன் மூலம், பாஜவுக்கு வெறுப்பேற்றியது. நேற்று டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க பாஜவுக்கு அழைப்பு விடப்படவில்லை. தொடர்ந்து பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் ஐக்கிய ஜனதா தளம், வரும் மக்களவை தேர்தலில் பாஜ எதிர்ப்பு கூட்டணியில் அணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி வழக்கில் பரபரப்பு ராஜா முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் ?

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு தொடர்பான முடிவுக்கு ஒப்புதல் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு ராஜா கடிதம் எழுதியதாகவும், இந்த கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற முடிவுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ராஜாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும், தெரியவந்துள்து. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை

தமிழகத்திற்கு யாத்திரை வந்துள்ள புத்த பிக்குகள் மீதும் சிங்கள மக்கள் மீதும் சில தரங்கெட்ட தமிழர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை. இந்த காட்டு மிராண்டி தனமான வன்முறையை மேற்கொள்பவர்கள் எந்த வித தமிழ் உணர்வோ அல்லது மனித நாகரிகமோ இல்லாத ஒரு வெறி  பிடித்த குண்டர்களே ஆகும்
இவர்களது செய்கை தமிழர்கள் பக்கம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தார்மீக பலத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதை உணரக்கூடிய அளவு அறிவு இவர்களுக்கு இல்லைதான் ஆனால் இந்த வன்முறையாளர்களை வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசும் இதர தமிழக கட்சிகளும் இன்னும் இதை வன்மையாக கண்டிக்காமல் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது .
இலங்கையில் பெரும்பான்மையான தமிழர்கள் சிங்கள பிரதேசங்களிலேயே வாழ்கிறார்கள் என்ற பேருண்மை இவர்களுக்கு தெரியாது என்றும் நாம் எண்ணவில்லை.
 மேலும் கடந்த பல வருடங்களாக  இலங்கையில் இனங்களுக்கு இடையே மிகவும் சுமுகமான உறவு நிலவி வருவது புலம்பெயர் வியாபாரிகளுக்கு உவப்பில்லைதான், இவ்வளவு காலமாக கொள்ளை அடித்தது போதாதா?
இந்த  பிச்சைக்கார வியாபாரிகளை திருப்பதி படுத்த தமிழகத்தில் பச்சை பாசிசத்தை தூண்டி விடும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைகாட்சிகளும்,
 விற்பதற்கு வேறு ஒன்றும் இல்லாமையால் இனவெறியை விற்பனை செய்யும்  குண்டர்கள் தங்கள் அரசியல் விபச்சாரத்தை தமிழக அரசியலோடு நிறுத்தி கொள்ளவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிகொள்கிறோம்
இலங்கை தமிழர்களின் வாழ்வோடு விளையாடி சொத்துக்கள் சேர்த்தது போதும். இனியாவது அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்

DMK திட்டங்களை ADMK கிடப்பில் போட்டதால்தான் இந்த மின்வெட்டு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நேற்று இரவு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முத்துசாமி, முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானி ஒன்றிய செயலாளர் நல்லசிவம் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்துக்கு தி.மு.க. தலைமை கழகம் ரூ.2 கோடி தேர்தல் நிதி அறிவித்து உள்ளது. ஆனால் அதைவிட சற்று அதிகமாகவே முதன் தவணையாக கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க. இப்போது ஆட்சியில் இல்லை. இருந்தும் மக்கள் நிதியை அளித்துள்ளார்கள். ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் நம்மை வெற்றி பெறச் செய்யத்தான் இந்த நிதியை அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உலகத் தமிழர்களுக்கு குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர் கருணாநிதிதான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குகெல்லாம் தலைவரும் கருணாநிதி தான். கடந்த அவரது ஆட்சி காலத்தில் எத்தனையோ சாதனைகள்.. அதையெல்லாம் இங்கே பட்டியலிட்டால் நேரம் போதாது. 5-வது முறையாக முதல்வராக இருந்த கருணாநிதி செய்த சாதனையை எவரும் இனி செய்ய முடியாது. ஆனால் இந்த ஆட்சி காலத்தில் இதுவரை 6 முறை அமைச்சர்கள் மாற்றம் 31 முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம், 36 முறை போலீஸ் அதிகாரிகள் மாற்றம். அடுத்த மாற்றம் எப்போது வருமோ.. என நடுக்கத்துடன் இவர்கள் உள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இதை நாங்கள் மறுக்கவில்லை. அறிவிப்புடன் அதை செயல்படுத்தினோம். ஆனால் இப்போது 10 மணி நேரம் 18 மணி நேரம் என மின்வெட்டு நிலவுகிறது. ஆனால் எந்த அறிவிப்பும் கிடையாது. இதுதான் இந்த ஆட்சியின் பெரிய சாதனை. மின்வெட்டை குறைக்க திட்டங்களை செயல்படுத்த தி.மு.க. ஆட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதால்தான் இந்த மின்வெட்டு தொடர்ந்து நீடிக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tamilnadu Fans அதிர்ச்சியில் ! திரிஷாவுக்கு திருமணம்

சினிமாவுக்கு டாட்டா! அதிர்ச்சியில் திரிஷா ரசிகர்கள்தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. திரிஷாவின் வருகைக்குப் பிறகு நயந்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா என ஹீரோயின்கள் வரிசைகட்டி வந்தாலும். தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் இன்னும் தக்கவைத்து வருகிறார்.நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2002-ல் திரிஷா சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். காட்டா மீட்டா என்ற இந்திப் படத்திலும் நடித்தார்.திரிஷா என்றால் அதில் சர்ச்சையும் அடக்கம். சிசுசிசுக்களை அதிகம் சம்பாதித்துக்கொண்டவர் திரிஷா. பார்ட்டி, பேஷன் ஷோ என திரிஷா கலந்துகொள்வதால் இவர் சில முன்னணி ஹீரோக்களை காதலிப்பதாவும் சர்ச்சைகள் கிளம்பின. திரிஷாவுக்கு நாய்கள் மிது அதிக பிரியம் உண்டு.சாமி, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்கள் திரிஷா நடிப்பில் வந்து ஹிட்டாயின. கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்தார். தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்கள் தவிர வேறு புதுப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த வருடத்தோடு இப்படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. எனவே விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் உமா தீவிரமாக உள்ளார். உறவுக்கார இளைஞரை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.