minnambalam.com முதலமைச்சர்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. மறைந்த
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட
சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், பாமக
நிறுவனரான டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ’’வெள்ளை அறிக்கையோ?, கறுப்பு அறிக்கையோ? எதுவும் தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு திரும்பி வரப்போவதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். திருநாவுக்கரசரின் கருத்து, கூட்டணி கட்சியான திமுக தலைவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் கேட்டுள்ளதைப்போல் நானும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன்.