500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி யின் அறிவிப்பை,
உ.பி. அரசியல் வாதிகள் முறியடித்துள்ளனர். இவர்கள் தேர்தலுக்காக வைத் திருந்த கறுப்புப் பணத்தை உடனே தங்கள் தொகுதிகளில் விநியோகித்துள்ளனர்.
உ.பி. அரசியல் வாதிகள் முறியடித்துள்ளனர். இவர்கள் தேர்தலுக்காக வைத் திருந்த கறுப்புப் பணத்தை உடனே தங்கள் தொகுதிகளில் விநியோகித்துள்ளனர்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இத் தேர்தலில் செலவிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும்
கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடியின்
திடீர் அறிவிப்புக்கு மறுநாள் கிழக்கு மற்றும் மேற்கு உ.பி.யில்
அரசியல்வாதிகள் சிலர் தங்கள் தொகுதிவாசிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை விநி யோகித்துள்ளனர். இவற்றை குறி பிட்ட நபரிடம் ரூ.5000 முதல்
15,000 வரை என அளித்துள்ள னர். இவர்கள் தங்கள் பகுதிவாசி களுடன் இப்பணத்தை
பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. அரசியல் வட்டாரம் கூறும் போது, “இந்தப்
பணம் கட்சியின் தேர்தல் செலவுக்காக பல்வேறு தரப்பினரிடம் வசூல் செய்யப்
பட்டதாகும். ஆனால், மக்கள் நலனை விரும்பாத பிரதமர் மோடி, இவற்றை வீணாக்கும்
வகையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை முறியடிக்கும் வகையில்
தேர்தலுக்கு முன்னதாகவே இப் பணத்தை நாங்கள் விநியோகித்து விட்டோம். இந்த
நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளும்படி கூறிவிட்டோம். இதற்கான பலன்
தேர்தலில் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.
வாக்காளர்கள் மட்டுமின்றி, கட்சியின் தேர்தல் பணி யாளர்கள் இடையேயும் பெரு
மளவில் கறுப்புப் பணம் கடந்த இரு நாட்களில் விநியோ கிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை புதிய நோட்டுகளுக்கு மாற்றி செலவிடுவது தொகுதி
பொறுப்பாளர்கள் அல்லது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் பொறுப்பு என கட்சித்
தலைவர்கள் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை உ.பி.யின் பரேலி மாவட்டம், பர்ஸா கேடா
பகுதியில் 500 ரூபாய் நோட்டுகள் சில சாக்கு மூட்டைகளில் தீயிட்டு
கொளுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரம் போடப்பட்டிருந்தன. தகவல் அறிந்த போலீஸார்
அவற்றைக் கைப்பற்றி சோதித்தனர். அதில், பெரும்பாலானவை கிழிந்த அல்லது
சேதமடைந்த நோட்டுகள் எனத் தெரியவந்துள்ளது. இத் தகவலை ரிசர்வ் வங்கிக்குத்
தெரிவித்த பரேலி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். tamilthehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக