சனி, 21 மார்ச், 2015

என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தனது இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார்.
நாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-ல் நடந்த ஷபாக் போராட்டத்துக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் (42) தனது சொந்த நாட்டில் நடந்த புத்தக கண்காட்சிக்கு பங்கேற்க சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாத்திக கருத்துகளையும் தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வந்தவர். தனது எழுத்துக்களுக்காக பல முறை அச்சுறுத்தல்களை சந்தித்தவரும் ஆவார். வங்கதேசம் இஸ்லாமியச் சமூக்த்தை சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமாவுக்கு மட்டுமல்லாமல், மற்ற மாற்றுச் சிந்தனை எழுத்தாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகவே திகழ்கிறது.

வடிவேலுவின் அடுத்த ஜோடி சதா

ஜெயம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான சதா, இப்படத்திற்குப் பிறகு ‘எதிரி’, ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழிப் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ‘புலி வேசம்’ என்னும் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மத கஜ ராஜா’ படத்தில் குத்தாட்டம் ஆடினார். இந்தப் படம் வெளிவராமல் கிடப்பில் இருக்கிறது. இதையடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் சதா, தற்போது வடிவேலு நடித்து வரும் ‘எலி’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். ‘எலி’ படத்தில் சதா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெனாலி ராமன் படத்தை இயக்கிய யுவராஜே மீண்டும் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை இயக்கி வருகிறார். வித்யாசாகர் இசையமைத்து வரும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சமந்தாவின் over அலப்பறை தாங்க முடியல்லியாம்

சென்னை: சேட்டைக்கார நடிகையா, ஆமாம் சமத்து நடிகை செய்வதை எல்லாம் பார்ப்பவர்கள் அவரை அவ்வாறு தான் கூறுகிறார்கள். சமத்தான நடிகை படுத்தும் பாட்டை நினைத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம். தெலுங்கு திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் சமத்தான நடிகை. தற்போது அவருக்கு தெலுங்கில் மவுசு குறைந்துவிட்டது. இத்தனை நாளாக அவர் கோலிவுட்டில் வெற்றி பெற துடித்துக் கொண்டிருந்தார். அவர் ஆசைப்படி ஒரு படம் வெற்றியும் அடைந்துள்ளது(?). இதையடுத்து தற்போது அவர் கையில் 3 தமிழ் படங்கள் உள்ளன. இந்நிலையில் அம்மணி தேவையில்லாத பல அலப்பரைகளை செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறாராம். படப்பிடிப்புக்கு வருகையில் கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வந்து அவருக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டுகிறாராம்.

பணிந்தார் ரஜினி ! லிங்கா விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி கொடுக்க சம்மதம்!


when Rajinikanth filed a counter affidavit at the Madurai Bench of the Madras High Court claiming the petitioners' allegations false. He said that the case against "Lingaa" tarnished the name, fame and the repute enjoyed by him.சென்னை,மார்ச் 20:  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அப்படத்தினால் எற்பட்ட நஷ்ட்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அவர்களுக்கு தயாரிப்பு தரப்பு குறிப்பிட்ட தொகையை வழங்க முன் வந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து வினியோகஸ்தர்கள், தங்களுக்கு ரூ.30 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் போராட்டம், உண்ணாவிரதம் என்று நடத்தியவர்கள், இறுதியாக ரஜினிகாந்துக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்கள்.இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட நடிகர் ரஜினிகாந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதியாக ரூ.10 கோடி வழங்க சம்மதம் தெரிவித்தார். இதை வினியோகஸ்தர்களும் ஏற்றுக்கொண்டதால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த லிங்கா பட பிரச்சினை முடிவடைந்தது.  tamil.chennaionline.com

12 வயது சிறுவனின் பொய்யால் 39 வருட சிறைத்தண்டனை அனுபவித்த அப்பாவி அமெரிக்கர் விடுதலை


அமெரிக்காவில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த முதல் நபரான ரிக்கி ஜாக்சன் என்ற அப்பாவிக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆ ம் ஆண்டு ஜாக்சன், வைலி பிரிட்ஜ்மேன் மற்றும் அவரது சகோதரர் ரோன்னீ ஆகியோருக்கு 39 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வயதான பள்ளி சிறுவனான எட்டி வெர்னான், மூவரும் கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்ததை தொடர்ந்தே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உலகின் ஜனநாயகம் சுதந்திரம் போன்றவற்றிக்கு வகுப்பு எடுக்கும் அமெரிக்காவில் இது போன்ற அபத்தங்கள் நிறவெறி  சம்பவங்கள்???

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த குறும்படம்!

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் R பிரசாத் இயக்கிய குறும்படத்திற்கு நிர்வாகத் தயாரிப்புப் பணியையும் செய்துள்ளார். ‘ஸ்வேயர் கார்ப்பரேஷன்ஸ்’ (Swayer Corporations) என்ற இந்தக் குறும்படம் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்வேயர் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்

உ பி ரயில் விபத்து 34 பேர் பலி; 150 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில், டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34பேர் பலியாகினர். 150 பேர் படு காயமடைந்தனர். பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதை வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஜய் குத்தியா உறுதி செய்தார். உத்தரப் பிரதேச மாநில ரே பரேலி மாவட்டத்தில் பச்ராவன் கிராமத்துக்கு அருகே இன்று காலை 9.30 மணியளவில் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் இன்ஜின் உட்பட மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 30 பேர் பலியானதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மத்திய அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரம்தான் பயன்படுத்த வேண்டும்: பாஜக அறிவிப்பு

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசின் பெண்கள் மற்றும்  குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவத நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளுக்கு பினாயில் மற்றும் இதர வேதிப்பொருளுக்குப் பதிலாக பசு மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். பசுமாட்டு மூத்திரத்தில் கிருமிநாசினி உள்ளதால் இவற்றை காலங்காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பசுமாட்டு மூத்திரத்தில் உள்ள மருத்துவ குணத்தைக் கருத்தில் கொண்டு பசுக்களை காப்பாற்றும் நோக்கில் மாட்டு மூத்திரத்தை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக பினாயில் மற்றும் திரவ வேதிப் பொருளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது மேலானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அப்படியே  சுவர்களுக்கு  மாட்டு சாணம்தான் பூச வேண்டும் அரசு கோப்புக்களையும் வைக்கோலால் தான் கட்டவேண்டும்..... 

மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு


பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பயணம், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என அது கருத்து தெரிவித்துள்ளது. மோடியின் யாழ்ப்பாணம் பயணம்/> பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 தேதிகளில் நமது அண்டை நாடான இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது 14-ந் தேதி, உள்நாட்டு போரில் பெரிதும் பாதிப்புக்குள்ளானதும், தமிழர்கள் பெருவாரியாக வாழக்கூடியதுமான யாழ்ப்பாணத்துக்கு அவர் சென்றார். அவருடன் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவும் சென்றிருந்தார்.அங்கு உலகப்பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நூலக வளாகத்தில் ரூ.60 கோடியில் கட்டப்படும் கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் மத்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை அவர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். மோடியின் இந்த பயணம் குறித்த செய்திகளை சர்வதேச அளவில் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாளை அனுப்பிய 4 ஆசிரியர்கள் ஒசூரில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சலில் ("வாட்ஸ் அப்') அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத் தேர்வில் முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களுக்குச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் மொத்தம் 323 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதில் ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வு எழுத வரவில்லை.

வெள்ளி, 20 மார்ச், 2015

நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை :

எல்லோருமே எங்களைக் கைவிட்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது. இலங்கைக்குத் திரும்ப நினைப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு வரவும். »“யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது.
“நான் ராமநாதபுரத்தில் படித்தேன்; என்னுடைய நண்பர்கள் அனைவரும் அங்கிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் எனக்கு யாரையும் தெரியாது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் இருந்துவிட்டுத் திரும்பிய நான், தமிழ் பேசுவதை இங்குள்ளவர்கள் கேலி செய்கிறார்கள். தமிழை இவ்வளவு கொச்சையாகப் பேசுகிறாயே என்று கேட்கிறார்கள்” என்றும் அவர் வருத்தப்படுகிறார். பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை. பசையூர் என்ற இடத்தில், மீனவரான தந்தைக்கு அவருடைய தொழிலில் இப்போது உதவி செய்துவருகிறார் ஆல்பிரட்.
ஆல்பிரட்டின் தாய்க்கு, ‘என்றாவது ஒரு நாள் இலங்கைக்குத் திரும்புவோம்’ என்ற கனவு இருந்தது. ஆனால் தற்போது, “இலங்கைக்குத் திரும்பி வருவது என்ற முடிவின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டேன் என்று பிள்ளைகள் என்னைக் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஆல்பிரட்டின் தாய்.

சொல்வதெல்லாம் உண்மை’ இயக்குநர் சரவணன் : மக்களை எளிதில் ஏமாற்ற முடியாத

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ 1000 - வது அத்தியாயத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
‘‘தமிழைப்போல தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி சேனல்களும் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆர்வம் காட்டுகின்றன. உண்மையை சரியான கோணத்தில் ஆராய்ந்து அடையாளப்படுத்துவதில் எங்களுக்கு கிடைத்த தனித்துவம்தான் இதற்கு காரணம்!’’ என்கிறார், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை இயக்கி வரும் சரவணன். அவரிடம் பேசியதிலிருந்து…
சின்னத்திரையில் இதற்கு முன் ஒளிபரப்பான ‘கதையல்ல நிஜம்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகியவை இதே பாணி நிகழ்ச்சிகளாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’நிகழ்ச்சி எதை வித்தியாசமாக எடுத்துச் சொல்கிறது?

மோடி ஆட்சியில் யாருக்கு நல்ல காலம்?

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்று உடுக்கையடித்தார், மோடி. தனது இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு வளர்ச்சி, முன்னேற்றம் பேசினார். நாட்டு மக்களும் அதை நம்பி பெருவாரியாக வாக்களித்து அவரைப் பிரதமர் ஆக்கினார்கள்.
அதன் பிறகு, “நல்ல காலம் பொறந்து விட்டது, நல்ல காலம் பொறந்து விட்டது” என்ற குரல்கள் தொடங்கி, இப்போது அவை ஓங்கி ஒலிக்கின்றன. வாக்களித்த மக்களிடமிருந்து அல்ல. இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து. “இந்தியாவை இந்து நாடாக மாற்றியே தீருவோம்; இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம்; இராமர் கோவில் கட்டுவோம், கோட்சேவுக்குக் கோவில் கட்டுவோம், சிலை வைப்போம்; கிறித்துவர்களையும் இசுலாமியர்களையும் தாய் மதத்துக்குத் திரும்பச் செய்வோம்; அவர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவோம்; அவர்களின் அடையாளங்களை அழிப்போம்; சமஸ்கிருதத்தைத் திணிப்போம்; இந்துப் பெண்கள் 4 குழந்தைகள், இல்லை, இல்லை 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்; காதலர் தினங்களில் கட்டாயத் தாலி கட்டவைப்போம்…” என்று பெருங்கூச்சல்போட்டு, அவர்களுக்கு நல்ல காலம் பொறந்து விட்டதைக் கொண்டாடுகிறார்கள்.

விசாகா சிங்: புது நடிகைன்னா ஓசில நடிக்க வைக்கலாமா?

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்தவர் விசாகா சிங். அவர் கூறியது:தமிழ், தெலுங்கு என இரு மொழியிலுமே நடித்திருக்கிறேன். இப்படங்களுக்கு பிறகு 40 முதல் 50 படங்கள் வரை நடிக்க வாய்ப்பு வந்தது. சில கதைகள் என்னை கவரவில்லை. சில கதைகளில் இயக்குனர்கள் சொன்ன கேரக்டர் எனக்கு பொருத்தமாக இல்லை. வேறு சில கதாபாத்திரங்கள் வழக்கமானதாக இருந்தது. ஒரு நடிகை பெரிய ஸ்டாராக இருக்கிறாரா, இல்லையா என்பதை பார்க்காமல் அவருக்கு குறிப்பிடத்தக்க ஒரு சம்பளம் தரப்பட வேண்டும். புது நடிகை என்றதும் அவரை ஓசியில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணுவது சரியல்ல.பல சமயங்களில் இப்படித்தான் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் புதுமுக நடிகைகளிடம் எதிர்பார்க்கிறார்கள்.

மலேசியாவில் தமிழக கொத்தடிமைகள் ! களி . குடிக்க சாக்கடை நீர்: கதறவைத்த வெளிநாட்டு வேலை!

உன்னை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு தேவை, உனக்கு வேலை கொடுத்திருக்கிற குரூப் இந்த நாட்டில் ரொம்ப மோசமானவங்க, மலேசிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க, சொல்லுற வேலையை செய்யாமல் சம்பளம் வேணும், சாப்பாடு வேணும்னு பிரச்னை பண்றவங்களை யாருக்கும் தெரியாமல் கொன்னு புதைச்சிருவாங்க!' னு மிரட்டுனாரு. இப்படியே போய் கொண்டிருந்தது.
இதோ மலேசியாவுக்கு சென்று, சித்ரவதைபட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கும் சுரேஷ்குமாரின் கதையை கேளுங்கள்.
''மதுரை சிக்கந்தர் சாவடிதான் என்னோட ஊர். ஐ.டி.ஐ. படித்து, செல்போன் கம்பெனி ஒன்றில் டவர் மெக்கானிக் சூபர்வைசராக இருந்தேன். அப்போது எனக்கு திடீர்னு திருமணம் ஆனதால சொந்தக்காரங்களும், நண்பர்களும், 'இந்த வேலையில கிடைக்கிற சம்பளம் குடும்பம் நடத்த போதாது, வெளிநாட்டுக்கு போனா நல்லா சம்பாதிக்கலாம்' னு ஆளாளுக்கு ஆசையை உண்டு பண்ணினாங்க.
எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அண்ணாநகர்ல உள்ள அப்ரா டிராவல்ஸ், மலேசியாவுக்கு ஆள் அனுப்புறாங்க என்கிற தகவல் கிடைச்சது. உடனே அங்கே என்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு போனேன். அந்த டிராவல்ஸ் ஓனர் அப்துல் ஹக்கீம் என்பவர் என்னை செலக்ட் பண்ணி, மலேசியா எக்ஸ்போர்ட் கம்பெனியில பேக்கிங் செக்சன்ல சூபர்வசைர் வேலைன்னும், மாசம் முப்பத்தஞ்சாயிரம் சம்பளம், சாப்பாடு, தங்கறது எல்லாம் கம்பெனியே பார்த்துக்கும்னு சொன்னவர், இதுக்கு விசா எடுக்க இரண்டு லட்சம் தர வேண்டுமென்றும் சொன்னார்.

Jeyamohan! இஸ்லாமியர் ஒருவர் கூட இந்தப்பேரழிவுகளை கண்டிக்கவில்லை ! மத நம்பிக்கை அது’ என்று வாதிடுகிறார்கள்.


அன்புள்ள ஜெ நீங்கள் உங்கள் பயணங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இடித்துக்குவிக்கப்பட்ட மாபெரும் கலைச்செல்வங்களைப்பற்றி எழுதும்போது ஒருவகையில் எனக்கு அவநம்பிக்கையே ஏற்படும். அதெல்லாம் போரில் நிகழ்ந்த அழிவுகளே ஒழிய மதத்தால் உருவாக்கப்படும் அழிவுகள் அல்ல என்று தோன்றும் ஆனால் இந்த கலைச்சின்னங்களின் அழிவைக் காணும்போது மனம் பதைத்தது. நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் கனவுகளை அழித்தவர்களும் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என எண்ணிக்கொண்டேன் http://www.dailymail.co.uk/news/article-2970270/Islamic-State-fighters-destroy-antiquities-Iraq-video.html
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மனம் பதைத்தவன் நான். கடுமையான கண்டனங்களை தெரிவித்தவன். ஆனால் அது ஒரு பழைய வெற்றிச்சின்னம். அதை இத்தனை ஆண்டுகளாக பெரிய வஞ்சமாக மனதில் சுமர்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர் ஒருவர் கூட ஒரு பேச்சுக்குக் கூட இந்தப்பேரழிவுகளை கண்டிக்கவில்லை. என் இஸ்லாமிய நண்பர்கள் ‘மத நம்பிக்கை அது’ என்று வாதிடுகிறார்கள வருத்தமாக இருக்கிறது.
செல்வன் சிவலிங்கம் jeymohan.in

பொதுத்தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவி


பாட்னா: பீகார் மாநிலத்தின், ஹாஜிப்பூர் மற்றும் வைஷாலியில் உள்ள தேர்வு மையங்களில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடைகளை அளித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன், தேர்வு அறைக்கு வந்த அதிகாரிகள், தேர்வில் காப்பி அடிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். தேர்வு நேரத்தில், மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது மொபைல் போன்களை பயன்படுத்தினாலோ, அவர்கள் கைது செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய வளாகம் மற்றும் மைதானத்தில், மாணவர்களை சேர்ந்தவர்கள் யாரும் நிற்கக் கூடாது. தேர்வு மையத்திற்குள், வெளியாட்கள் வராத வகையில் நுழைவாயிலை மூடி வைக்கவேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். ஆனால், தேர்வு துவங்கியவுடன், பல தேர்வு மையங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்கள் பகிரங்கமாக விடைகளை காப்பியடித்தனர். அவர்களுக்கு தேவையான விடைகளை, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், தேர்வு மைய கட்டட ஜன்னல்கள் வழியாக வழங்கினர். இவை அனைத்தையும், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கண்டும், காணாமல் இருந்துள்ளனர்.   நம் பெற்றோர்கள், அரசியல்வாதிகளை விட எப்படி முன்னேற்றமாக இருக்கின்றனர் பாருங்கள். சும்மா இந்தியாவே அதிருதுல்ல.இப்படி, இப்படிதான், தனக்கு முன்னுரிமை வேண்டுமென்பதற்காக லஞ்சம் கொடுத்தார்கள். பிறகு ஜனநாயகத்தை ரெண்டாயிரம் ரூபாய்க்கு விற்றார்கள். இப்போது, குழந்தைகளுக்காக காப்பி அடிக்கிறார்கள். பின்னர், வாத்தியார்களை கத்தியால் மிரட்டி, நிறைய மார்க் வாங்கி கொடுப்பார்கள்.

வியாழன், 19 மார்ச், 2015

பெரியாரை பற்றி தெரியாத பத்ரி சேஷாத்ரி அய்யர் கிழக்கு பதிப்பகம் நடத்துகிறார் !

டைம்ஸ் ஆப் இந்தியா, புதுடில்லி பதிப்பில் (11.3.2015) ஒரு கட்டுரை;அதில் தந்தை பெரி யாரைப் பற்றிய ஒரு கருத்து:
”Periyar never intended to create a casteless society. His primary goal was to pull down the brahminical power structure and impose a non-brahminical, non-dalit, intermediate caste hold on political and administrative power in the state. He succeeded in this”
அதாவது, பெரியார், ஜாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் என ஒரு போதும் நினைக்கவில்லையாம்; அவரது முதன்மையான நோக்கம், பார்ப்பன அதிகார அமைப்பை தகர்த்து, அரசியல், நிர்வாக அதிகாரத்தில், பார்ப்பனரல்லாத, தலித் அல்லாத, இடை நிலை ஜாதியினரின் பிடிப்பை திணிப்பதுதானாம்; அதில் அவர் வெற்றியும் அடைந்தாராம்.
இப்படி ஒரு கருத்தை எழுதி யவர் யாராக இருக்கும்?
அனேகமாக வேற்று கிரகவாசி யாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றும். இல்லாவிட்டால், ஏதோ ஒரு முட்டாள் உளறி இருக்கிறான் எனவும் நினைக்கத் தோன்றும். ஆனால், அப்படி எல்லாம் அப்பாவியாக நினைக் காதீர்கள்.
இப்படி ஒரு கருத்தை எழுதிய அடி முட்டாள் யார் தெரியுமா? நம்மூர் மாமா, பத்ரி சேஷாத் திரிதான்.  ஆமாங்க, இந்த கிழக்குப் பதிப்பகம்னு ஒரு நிறுவனம் நடத்துறார்ல அந்தாளு தான்.

டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர் ! இந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா!- இங்கே யாருக்கும் குறைந்தபட்ச மனசாட்சி கூட கிடையாது.

டிராபிக் ராமசாமி.. சமூக அவலங் களுக்கு எதிராக போராட முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் கதாநாயகன். அரசு மற்றும் தனிநபர் அதிகாரங்களுக்கு எதிராக இவர் நடத்திய போராட் டங்கள் சமூகத்தை உலுக்கியிருக்கின் றன. சென்னையில் ஒழுங்குமுறை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வைத்தது, தறிகெட்டு ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு தடையாணை பெற்றது என இவர் சாதித்தவை ஏராளம். அதற்காக இவர் கொடுத்த விலையும் மிக மிக அதிகம். பலமுறை தாக்குதலுக் குள்ளானார். காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே பிரிந்தார். 40 ஆண்டுகளாக குடும்பத்துக்கும் அவருக்கும் பெரியதாக பிணைப்பு இல்லை. எப்போதாவது வீட்டில் தலைகாட்டினால் உண்டு. ஒரே மகள் விஜயா. திருமணமாகி கணவர், 2 குழந்தைகளுடன் வசிக்கிறார். டிராபிக் ராமசாமியின் மனைவியும் அவர்களுடனே தங்கியுள்ளார்.

விண்டோஸ் 10 அனைவருக்கும் இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு


விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

பாஜகவின் 2ஜி ஸ்பெக்ட்ரம் பதினொன்றரை லட்சம் கோடி ஊழல் / வருமான இழப்பு ! BJP அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எப்போ திகாருக்கு ? எங்கே போய்விட்டார்கள் பிரம்ம ஸ்ரீ கிரிமினல்கள்?

தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.இப்போது பதினொன்றரை லட்சம்  கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.
ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.

ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.
+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.
எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.
ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம் படித்தவர்கள்தான் சி.ஏ.ஜி.யில் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தப்பு போலிருக்கிறது. அங்கேயும் நம்மைபோல ‘கணக்குப் புள்ளைகள்’தான் இருக்கிறார்களோ என்னமோ? ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சி.ஏ.ஜி. ரிப்போர்ட் குறிப்பிட்ட வருமான வரி இழப்பு அரசுக்கு என்ன? முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இராணுவத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் பெறப்பட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

வினோத்ராய் அவர்களது அறிக்கைப்படி…

52.7 MHz அளவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் 12,385 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், வினோத்ராயின் மதிப்பீட்டின் படி ஒரு MHz ஸ்பெக்ட்ரம் 3,350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் வரக்கூடிய தொகைதான் 1.76 லட்சம் கோடி.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாயை இப்படிதான் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போனார் என்று ஊடகங்களும், அடிவருடிகளும் தொடர்பிரச்சாரம் செய்தார்கள்.

நடிகை லாவண்யா : டாக்டராக நடிக்க பளபளக்கும் காஸ்டியூம் தரப்பட்டது.

ஹீரோயின்கள் தங்களது வேடத்துக்கு பொருத்தமில்லாத வகையில் ஆடை, நகைகள் அணிந்து பந்தாவாக தோன்ற ஆசைப்படுகின்றனர். வேறு சில ஹீரோயின்கள் எளிமையான தோற்றத்தை நாடுகின்றனர். சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்‘ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி கூறியது: கதாபாத்திரங்களுக்கு ஏற்பவும், காட்சி நடக்கும் சூழலுக்கு ஏற்பவும் உடை, நகைகளை அணிய வேண்டும் என்பதில் இயக்குனர்கள் எவ்வளவு கவனமுடன் இருப்பார்களோ அந்தளவுக்கு நானும் அதில் கவனம் செலுத்துவேன். நிஜத்திலும் ஆடம்பரமாக உடை அணிந்து வருவதை எப்போதும் நான் விரும்புவதில்லை. குறைந்தளவிலான நகைகள் மட்டுமே அணிவேன். காதில் சிறிய வளையமோ அல்லது கழுத்தில் சிறிய செயினோ மட்டுமே அணிந்துகொள்வேன். பளிச்சென்று தெரியவேண்டும் என்பதற்காக பளபளக்கும் ஆபரணமோ, ஆடையோ அணிவதில்லை. ஒரு படத்தில் டாக்டராக நடித்தேன். எனக்கு பளபளக்கும் காஸ்டியூம் தரப்பட்டது.  அது மருத்துவமனையில் படமாகும் காட்சி என்பதால் நானே காஸ்டியூமரிடம் பளபளக்கும் உடைக்கு பதிலாக சாதாரண உடை தரும்படி கேட்டேன். அதை இயக்குனரும் பாராட்டினார். - See more at: tamilmurasu.org

கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த 9 விவிஐபிகளுக்கு மட்டும் அனுமதி?

மத்தியில் உயர் பதவியில் இருக்கும் 5 விவிஐபிக்கள், மாநிலத்தில் 4 விவிஐபிக்கள் மட்டும் சிவப்பு விளக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மத்தியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும், மாநிலங்களில் கவர்னர், முதல்வர், சட்டசபை சபாநாயகர் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதி
புதுடெல்லி: அரசியல் அமைப்பு சட்ட அங்கீகாரம் பெற்ற உயர் பதவி வகிப்பவர்கள் மட்டுமே கார்களில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதிக்க வேண்டும் என  சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து மத்தியில் உயர்பதவியில் இருக்கும் 5 விவிஐபிக்கள், மாநிலத்தில் 4 விவிஐபிக்கள் என மொத்தம் 9 பேருக்கு மட்டுமே  கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மற்ற  அமைச்சகங்களின் கருத்தை கேட்டுள்ளது.

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை! சேரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மீறி, அந்த படத்தை திரையிட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஜெமினி இன்டஸ்ட்ரிஸ் இமேஜிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.மனோகர் பிரசாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். அதில், டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் பி.சேரன், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 கோடி கடன் பெற்றார்.
கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்து உத்தரவாதம் அளித்தார். ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராமல், படம் வெளியாகும் தேதியை சேரன் அறிவித்தார்.

உடன்குடி மின் திட்டம் ரத்து செய்தது ஏன்? தனியார் மின்சாரம் கமிசனோடு கிடைக்குமே?

சென்னை: 'உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை, ரத்து செய்தது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான, பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.,) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து, 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இந்த திட்டத்தை, முழுவதுமாக, 2012ம் ஆண்டு ரத்து செய்து விட்டு, 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிப்., 24, 2012ல் அறிவித்தார். தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம்?    தி மு க ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டு சாராயம் மட்டும் விற்று மக்களை ஏமாத்தி கொண்டிருக்கிறார்கள், மூன்று வருடங்கள் ஆகியும் புதிதாக ஒரு MV திட்டத்திற்கு கூட வழிவகுக்கவில்லை மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை  கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சீனாவில் முதல் சர்வதேச யோகா தின விழா: இந்தியா பங்கேற்பு


சீனாவில் முதல் சர்வதேச யோகா தின விழா: இந்தியா பங்கேற்பு
பீஜிங்: சீனாவில் வரும் ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையி்ல் யோகா தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்தியா பங்கேற்க உள்ளத கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி ஐநா சபையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் உள்ள யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி அதனை சர்வதேச அளவில் பிரபலப்படு்த்தும் வகையில் சர்வதேச தினமாக அறிவிக்க வலியுறுத்தினார். மோடியின் கருத்துக்கு சீனா உள்ளிட்ட ஐ.நா.,வின் 170 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து ஐ.நா.,சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என டிசம்பர் 2014-ல் முறைப்படி அறிவித்தது.

புதன், 18 மார்ச், 2015

ட்ராபிக் ராமசாமி:அம்மா பேனரில் கைவைப்பியான்னு கேட்டு அடித்தார்கள் ! ஜெயாவுக்கு நாலு ஆண்டுகள் போதாது!

சென்னை: வீட்டை விட்டு வெளியே வர முடியாத குற்றவாளிக்கு எதற்கு பேனர்? என்று டிராஃபிக் ராமசாமி கொதிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த வாரம் டிராஃபிக் ராமசாமி, சாலையில் நின்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, அவ்வழியாக வந்த ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் அதிகாலையிலேயே வீட்டிற்குள் புகுந்து டிராஃபிக் ராமசாமியை கைது செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக டிராஃபிக் ராமசாமி, விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "இந்த கைது நடவடிக்கை என்பது ஆளுங்கட்சியின் சதி என்று தான் நான் கூற முடியும். இது பொய் வழக்கு. காலை 7.45 மணிக்கு எனது அலுவலகத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் போகும்போது தி.மு.க. பேனரை பார்க்கிறேன். உடனடியாக மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் அதுபற்றி புகார் தெரிவிக்கிறேன். இதுமாதிரி, ரோட்டை பிளாக் செய்து 50 முதல் 70 அடி தூரத்திற்கு பேனர் இருக்கிறது, அதை எடுத்துவிடுங்கள். நான் திரும்பி வரும்போது அந்த பேனர் இருந்தால் அதை கிழிப்பேன் என்று கூறினேன்.

Spectrum ஏலம் ரூ 1,02,215 கோடி நுகர்வோர் தலையில் வந்து விழப்போகிறது!

ஸ்பெக்ட்ரம்’ அலைக்கற்றைக்கான பொது ஏலத் தொகை இதுவரை ரூ. 1,02,215 கோடியைத் தாண்டியிருக்கிறது. தொடக்கத்தில் இந்த ஏல இலக்கு ரூ. 82,000 கோடியாக இருந்ததால், இந்த ஏலம் வெற்றி என்பதை மறுக்கவியலாது. எனினும், நுகர்வோரின் நிலையிலிருந்து பார்த்தால், அவர்கள் இந்தச் சேவைகளைப் பெறக் கூடுதல் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அலைக்கற்றைகளைப் பெறுவதற்குத் தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்தால், லாபம் சம்பாதிப்பதற்காக சேவைக் கட்டணத்தை அவை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால், புதிய அடித்தளக் கட்டமைப்பில் செய்யும் முதலீடுகளை அந்த நிறுவனங்கள் தள்ளிவைக்க வேண்டும் அல்லது ஒரேயடியாகக் கைவிட வேண்டும். இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் லட்சியத்துக்கு இது ஏற்புடையதாக இருக்காது.  

நடிகை ரேகா மாநிலங்கள் அவையில் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். நாட்டுக்கு ரொம்ப நல்லது

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக பங்கேற்றார் நடிகையும் எம்.பி.யுமான ரேகா.
நாடாளுமன்றத்துக்கு வருகை தராததால் கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரேகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அவர் மாநிலங்களவைக்கு வந்தார். அவரது இருக்கை எண் 99-ல் அமர்ந்தார். அருகில் இருந்த சமூக ஆர்வலர் அணு ஆகா, என்.கே.கங்குலி ஆகியோரிடம் பேசினார். அவையில் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பின்னர் கிளம்பிச் சென்றார்.
கடந்த 2012- ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வருவதில்லை என கடந்த ஆண்டு சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், கயந்த ஆண்டு இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு வந்த ரேகா. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு பங்கேற்றார்.tamil.thehindu.com

ஊருக்கும் உலகுக்கும் யாருக்கும் வெட்கமில்லை… இதிலே அவளுக்கு வெட்கமென்ன…

ஜெயலலிதாவுக்காக  அலகு குத்துகிறார்கள்.  துலா காவடி  எடுக்கிறார்கள்.  மண்சோறு  சாப்பிடுகிறார்கள்.  அங்க பிரதட்சணம் செய்கிறார்கள். சிலுவையில் தன்னை தானே அறிகிறான் ஒருவன், நெருப்பிலே எரிந்தும் சாகிறார்கள். ஆஹா இதுவல்லவோ  முன்னேற்றம் இதுவல்லவோ உயர்பண்பு. இதுவல்லவோ மனித நாகரீகத்தின்  உச்சம்? தூத் தேறி இவர்களுக்கும் வெட்கம் இல்லை அவளுக்கும் வெட்கம் இல்லை. வினவு.com

சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம் ! பிரம்ம ஸ்ரீ கிரிமினல்களின் கூடாரம்!

"அரசு வக்கீல்" பவானி சிங்.சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயா-சசி கும்பல், தமது சொந்த வழக்குரைஞர்களை நம்புவதைவிட, அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை நம்பித்தான் மேல்முறையீட்டு வழக்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.  கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையில் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு வக்கீல் பவானி சிங் வாயைத் திறக்க மறுப்பதைக் காணும் எவரும் எளிதாக இம்முடிவுக்கு வரமுடியும்.  ஆனாலும், கர்நாடகா உயர்நீதி மன்ற ‘நீதியரசர்களின்’ அறிவுக்கு இந்த எளிய உண்மை புலப்படவில்லை. “ஜெயா, சசி உள்ளிட்ட நால்வரும் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதை ரத்து செய்து, அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள கர்நாடகா உயர்நீதி மன்றம், சட்டத்தின் பொந்துகளுக்குள் புகுந்துகொண்டு பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதற்கு மட்டுமல்ல, எதிரிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் அவரின் கபடத்தனங்களுக்கும் நல்லாசி வழங்கிவிட்டது.

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு?

comedy7வே.மதிமாறன்: பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும்.
நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது?
பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடியபோது தவிலும் நாதஸ்வரமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பார்ப்பனர்கள் பரதநாட்டியத்தைக் கைபற்றிய பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் நாதஸ்வரத்தையும் தவிலையும் அப்புறப்படுத்தியதுதான்.
அதே தாளம், ராகம், அதே ஏழு சுவரங்கள் அப்படியே எல்லாத் தரமும் இருந்தும் ஏன் அப்புறப்படுத்தினார்கள்?
கர்நாடக சங்கீத அம்சங்கள் முழுமையாக நிறைந்த நாதஸ்வரத்தையும் தவிலையும் பார்ப்பனர்கள் தீவிரமாக ரசிப்பார்களே தவிர, ஒரு போதும் அதை வாசிக்க மாட்டார்கள்.

கள்ளப்படம் வில்லியாக நடிக்க முன்வந்த லக்ஷ்மி ப்ரியா

தொழில் நுட்ப கலைஞர்களே நடிகர்களாக நடிக்கும் படம் ‘கள்ளப்படம்' . இதுபற்றி இயக்குனர்-ஹீரோ ஜெ.வடிவேல் கூறியது:உதவி இயக்குனர் ஒவ்வொருவரும் இயக்குனராக ஆகும் முயற்சியில் பல கஷ்டங்களை எதிர்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் ஒரு முடிவுக்கு வருவார்கள். அப்படி முடிவு எடுக்கும் ஒரு உதவி இயக்குனரின் வாழ்க்கை சம்பவம்தான் இக்கதை. தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவனிடம் கதையை கூறினேன். இதில் பணியாற்றும் 4 தொழில்நுட்ப கலைஞர்களுமே அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறோம் என்றேன். வித்தியாசமான ஸ்கிரிப்ட்டாக இருக்கிறது என்று பாராட்டி தயாரிக்க முன்வந்தார். இயக்குனர் பொறுப்பை நான் ஏற்க, ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு, காகின் எடிட்டிங், கே இசை பொறுப்பை ஏற்பதுடன் அந்தந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். தமிழில் இதுவொரு புது முயற்சி. ஹீரோயினாக நடிக்க பலரிடம் கால்ஷீட் கேட்டபோது வில்லித்தனமான கேரக்டர் என்று நடிக்க மறுத்தனர். சுட்ட கதை பட ஹீரோயின் லட்சுமி பிரியா நடிக்க முன்வந்தார்.இவ்வாறு இயக்குனர் வடிவேல் கூறினார். - tamilmurasu.org

EVKS இளங்கோவன்: தி.மு.க.,வுடன் இணைந்து போராடுவோம்

மத்திய, மாநில அரசுகளின், மக்கள் விரோத போக்கை கண்டித்து, எதிர்காலத்தில், தி.மு.க.,வுடன் இணைந்து போராடுவோம்'' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் கூறினார். அவரது பேட்டி:மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும். இந்த சட்டம், தொழில் அதிபர்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கும். எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து, காங்., போராடி வருகிறது. நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை. மாநில அரசு உண்மையை மூடி மறைக்கிறது.இதனால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வரும் 23ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராகுல் இல்லாத நேரத்தில், அவரது வீட்டில் உளவுத் துறையினர் வேவு பார்த்துள்ளனர். இந்த செயல், தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, ஐகோர்ட்டில் ஒரு உத்தரவு பெற்று, விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி வருகிறார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து, துன்புறுத்தியிருப்பதும், தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல் தான்.

ஜேம்ஸ் போன்ட் நடிகையை மாற்றியதால் ரூ.120 கோடி சலுகை

துப்பறியும் கதைகளுடன் வரிசையாக வெளியாகும் ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் 24-வது ஜேம்ஸ்பாண்டு படமாக ‘ஸ்பெக்டர்’ என்ற படம் தயாராகி வருகிறது. ஆஸ்திரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, தங்கள் நாட்டில் எடுக்குமாறு மெக்சிகோ வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.120 கோடி) வரிவிலக்கு அளிக்க முன் வந்துள்ளதுடன், சில நிபந்தனைகளும் விதித்துள்ளது. அதன்படி, படத்தில் எஸ்ட்ரெல்லா என்ற கதாபாத்திரத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஜோடியாக நடிப்பதற்கு மெக்சிகோவை சேர்ந்த நடிகையை தேர்வு செய்ய வேண்டும். படத்தின் வில்லனை மெக்சிகோவை சேர்ந்தவராக சித்தரிக்கக்கூடாது.

பா.ஜ க படுதோல்வியை சந்திக்கும்: மோடியின் தம்பி அதிரடி

புதுடில்லி: ''மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறி விட்டது. இப்படியே இருந்தால், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், டில்லி தேர்தல் போல, படுதோல்வி தான் கிடைக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி, பிரகலாத் மோடி கூறினார்.குஜராத் மாநில நியாய விலைக்கடை சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பிரகலாத் மோடி, டில்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாம் பாடுபட்டோம். ஆட்சிக்கு வந்த பா.ஜ., அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால், ஓட்டளித்த மக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளது.

ட்ராபிக் ராமசாமி : ஜெ.,க்கு ஏழு ஆண்டு தண்டனை கேட்டேன் ! தாக்குதலுக்கு காரணம் அதுதான்

என்னை கைது செய்ததன் பின்னணியில், பலமான சதி இருக்கிறது; என்னை தாக்கியது, அ.தி.மு.க.,வினர் தான்,'' என, 'டிராபிக்' ராமசாமி அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறார். உரிய அனுமதி பெறாமல், தமிழகம் முழுவதும் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, நான் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றமும், பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறது; ஆனாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. நான், அ.தி.மு.க., சார்பில் வைக்கப்படும் பேனர்களை மட்டும் கிழிப்பதாக, அவர்கள் நினைத்து தான், என்னை எதிரியாக பார்க்கின்றனர். பல இடங்களில் பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று, நான் சொன்னதும், தி.மு.க.,வினர் தாங்களாவே முன்வந்து அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியினர் அப்படி செய்வதில்லை; என் மீது வன்முறையை ஏவுகின்றனர். வீரமணி என்னும் கட்டிளம் காளையை பாய்ந்து பாய்ந்து தாக்கிய புஜபல பராக்கிரம பயில்வான் டிராபிக் ராமசாமி போன்ற தீவிரவாதிகளையும், சமூக சேவை செய்யும் விரோதிகளையும் விரைந்து போராடி தேடிப்பிடித்து கைது செய்து தமிழகத்தை அமைதி பூங்காவாக்கி எங்கும் பாலாறும் தேனாறும் ஓடச்செய்த எங்கள் அம்மே....நின் பொற்கால மக்களாட்சி வாழ்க வாழ்கவே...

கனிமொழியை பேசவிடாமல் குரியனிடம் வாங்கி கட்டிய அ.தி.மு.க எம்பிக்கள் .

பெரும்பான்மை உள்ளது என்பதற்காக, மற்றவர்கள் மீது, அதிகாரம் செலுத்தலாம் என, அ.தி.மு.க., நினைத்தால், அது நடக்காது. கனிமொழி, இந்த சபையின் உறுப்பினர் என்பதை, மறந்து விடாதீர்கள்.” என்று, துணைத் தலைவர் குரியன் சத்தம் போட்ட தால், ராஜ்யசபாவில் பரபரப்பு எழுந்தது. ராஜ்யசபாவில் நேற்று, கனிமொழி பேசுகையில், "தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை, செயல்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இத்திட்டத்தால், மண் வளமும், நீர் வளமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலுக்கும், பாதிப்பு ஏற்படும்,” என, பேசிக் கொண்டிருந்தபோதே, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் எழுந்து கூச்சலிட துவங்கினர். கனிமொழியை பேச அனுமதிக்காமல், குறுக்கிட்டு, 'இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியதே, தி.மு.க., ஆட்சியில் தான்' என்று, குரல் கொடுத்தபடி, அமளி யில் ஈடுபட்டனர். அதற்கு கனிமொழி, "மாநில அரசு உட்பட, யாரையும், நான் விமர்சிக்கவில்லை. என் பேச்சில் குறுக்கீடு செய்தால் எப்படி...” என, வாதிட்டார். ஆனாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியை தொடரவே, கோபமடைந்த குரியன், "நிறுத்துங்கள். இது போல, நடந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக, ஏதாவது பேசினால், அதை நானே நீக்குகிறேன்,” என, சத்தம் போட்டார்.

செவ்வாய், 17 மார்ச், 2015

மன வக்கிரத்தின் உச்சம் தொட்ட 'ஐ'

vikram Iசங்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ஐ. தனியார் நிறுவனத்தின் விளம்பர மாடலாக இருக்கும் விக்ரம், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்நிறுவனத்தின் மாடலாக நடிக்க மறுக்கிறார். அதனால் அந்நிறுவனமும், விக்ரமின் சக போட்டியாளர்களும் இணைந்து விக்ரமின் உருவத்தை சிதைப்பதே இத்திரைப்படத்தின் கதை. உருவத்தை சிதைக்கும் மன வக்கிரத்திற்கு எதிராக கருத்து சொல்லியிருக்க வேண்டிய இத்திரைப்படத்தின் காட்சிகளும் , முழுக்க முழுக்க வக்கிரமாகவே அமைந்திருக்கிறது.
எந்த வித சமூக அக்கறையும், கரிச‌னங்களும் இல்லாமல் சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் தன்னுடைய வணிக நலனை அடிப்படையாக கொண்டே சிந்திக்கும் சங்கரின் மற்றொரு படைப்பு இது. 

பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம்! பின்னணியில் மணல் கடத்தல் மாபியா?

பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக, பெங்களூரு காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, கோலார் மாவட்டத்தில் மக்கள் போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு நகரின் கோரமங்கலம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி (35) திங்கள்கிழமை (இரவு) மர்மமான முறையில் தனது வீட்டில் இருந்த ஃபேனில் தொங்கியபடி இறந்து கிடந்தார். வர்த்தக வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த இவர், சமீப காலமாக மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து செய்திகளில் இடம்பெற்றிருந்தார்.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

கொடுமை தடுப்பு சட்டத்தை ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் விதத்தில், சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரதட்சிணை தொடர்பான பொய் புகாரினால் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளன என்றும் எனவே இந்த வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன இந்நிலையில், இந்த சட்டத¢தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் குறித்த வரையறை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது உள்ள சட்டப்படி பொய் புகார் கொடுக்கப்பட்டால், அந்த புகாரை கொடுத்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின்படி அபாரத்தொகையை அதிகரிக்க வகைசெய்யும் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி அதிர்ந்தது! நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆயிரக்கணக்கில் திரண்டு பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்காட்டில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். இதில் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணான்டஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது என்று பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்கர் பெர்ணான்டஸ், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மக்களுக்கு ஆதரவான அம்சங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தினோம்.

கோலி படப்பிடிப்பு மலேசியாவில் !தப்பி தவறியும் ஒரு மலேசியா கலைஞருக்கு வாய்ப்பு கொடுக்கவே மாட்டாய்ங்க

நரேஷ், பிரசாத், தமிழ், சந்தோஷ் குமார், புதுமுகம் தீப்தி ஷெட்டி நடிக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி‘. எழுதி இயக்கி தயாரிக்கிறார் மனோகரன். அவர் கூறியது:தமிழ்நாட்டு தெருக்களில் அந்த காலத்தில் கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தார்கள். நவீன யுகத்தில் அதெல்லாம் மறைந்துவிட்டது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்றவை பிரபலமாகிவிட்டது. ஆனால் பழைய விளையாட்டுக்களில் கைதேர்ந்த 4 பேர் தொழில் நிமித்தமாக மலேசியா செல்கின்றனர்.

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி சுவாமிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திர : அவர்களை மன்னித்துவிடுங்கள் !

என் இதயம் நொறுங்கி விட்டது.. அவர்களை மன்னித்து விடுங்கள். என் கவலை எல்லாம் பள்ளி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துதான். இப்படித்தான் கூறியிருக்கிறார் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாக இருக்கிறார். ஆனால், மிகவும் சோர்வாக இருக்கிறார். என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்தார் கன்னியாஸ்திரி. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருக்கிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆதிந்தரநாத் மோன்டல் கூறுகிறார்.

1 லட்சத்துக்குமேல் தங்கம் உட்பட எதுவாங்கினாலும் பான் அட்டை அவசியம்

ரூ. 1 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்க நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) அவசியமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தங்க நகை வியாபாரிகள் வலியுறுத்தினர். இது குறித்த அனைத்திந்திய நவரத்தினங்கள், தங்க நகை வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் என்.அனந்த பத்மநாபன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ. 1 லட்சத்துக்குமேல் எந்தப் பொருள் வாங்கினாலும் பான் அட்டை அவசியம் என்று தெரிவித்தார். இதனால், தங்கநகை வியாபாரிகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், தங்கநகை விற்பனையில் 50 சதவீதம் வரை பாதிக்கப்படும்.எனவே, ரூ.1 லட்சத்துக்குமேல் பொருள்கள் வாங்குவதற்கு பான் அட்டை அவசியம் என்ற அறிவிப்பில் இருந்து தங்க நகைக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தங்கத்துக்கான சுங்கவரியை 10 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.dinamani.com

நடிகை பூனம் பஜ்வா : தமிழ் சினிமா இன்னும் திருந்த வேண்டும் !

கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்துவந்த பூனம் பஜ்வா நீண்ட நாட்களுக்கு பிறகு ‘ரோமியோ ஜூலியட்'  படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற அவர் கூறியது:தமிழ் படங்களில் நடிப்பதில்லையே என்கிறார்கள். தமிழில் சில சென்டிமென்ட் இருக்கிறது. ஹீரோ ஒருவரின் தங்கையாக நடித்தால் அதன்பிறகு அந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிப்பதை ஏற்க மறுக்கிறார்கள். மலையாளத்தில் அப்படி இல்லை. ஹீரோவுக்கு தங்கையாக நடித்தாலும் பிறகு ஜோடியாக நடிக்கும்போது ஏற்கிறார்கள். அதனால் தமிழ் சினிமா மாற வேண்டும். ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி ஹீரோ. ஹன்சிகா ஹீரோயின். நான் 2வது ஹீரோயினாக நடிக்கிறேன்.

திங்கள், 16 மார்ச், 2015

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் அர்விந்த் கேஜ்ரிவாலின் அடுத்த கட்டமும்?

அரவிந்த் கேஜ்ரிவால்குஜராத்தில் தயாரிக்கப்பட்ட மோடி ஹோலோகிராம் டில்லியில் பொசுக்கென்று மறைந்து விட்டது. தனது சொந்த முகத்தையே முகமூடியாக அணிந்து கொள்ள விரும்பும் சுயமோகியும், உடல் முழுவதும் தனது பெயரையே எழுதி மினுக்கிக் கொண்டிருந்த மனநோயாளியுமான மோடிக்கு, தனது பத்து லட்சம் ரூபாய் கோட்டையும் அதன் மீது நெளிகின்ற ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்ற பெயரையும் சேர்த்து ஏலம் விட்டால்தான், “பெயரை”க் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஆம்-ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்
“எனக்குப் பயந்து ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்று டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் திமிர்ப்பேச்சு பேசிய மோடி, ‘தனக்குப் பயந்து’ தானே ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு மோடியின் சட்டையைக் கழற்றிய ஒரு காரணத்துக்காகவாவது டில்லி மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இயந்திர இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

எந்திரத்தின் மூலம் இயங்கும் அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் இதயத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இதயம் துடிக்காது. ஆனால் ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக எடுத்து செல்லும் சக்தி வாய்ந்தது.
இதை பிரிஸ்பேனை சேர்ந்த என்ஜினீயர் டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த இயத்தை செம்மறி ஆட்டுக்கு பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளார். இத்திட்டத்துக்கான பணியை கடந்த 2001–ம் ஆண்டில் குவின்ஸ்லேண்ட் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தொடங்கினார். இதற்கு ‘பிவாகர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
எந்திர எலெக்ட்ரானிக்ஸ் இதயத்தில் சிறிய பிளேடு டிஸ்க் உள்ளது. இது நிமிடத்துக்கு 2 ஆயிரம் தடவை சுழன்று துடிப்பின்றி உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் திறன் படைத்தது.

பெண் போலீசுடன் சென்னை மாநகர உதவிகமிஷனர் ஆபாசமாக Whatsapp இல் பேசியது அம்பலம்

சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாக பேசி காதல் வலை விரித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செல்போன் வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் ஆடியோவாக பரவி வரும் உதவி கமிஷனரின் ஆபாச உரையாடல்கள் சென்னை முதல் குமரி வரை மட்டுமின்றி வாட்ஸ்–அப் பயன்படுத்தும் அத்தனை பேரின் செல்போன்களுக்கும் கடல் கடந்து சென்று விட்டது.
பெண் போலீசுடன் மிகவும் சூடாக பேசும் கூடுதல் கமிஷனர், 2 குழந்தைகளுக்கு அப்பாவான அவரிடம் நாம் தனியாக வெளியில் செல்லலாம் என்று அழைப்பதுடன், அழகையும் வர்ணிக்கிறார். உரையாடலை முடிக்கும்போது ஒன்னு (முத்தம்) தரட்டுமா? என்றும் கேட்கிறார்.

பாகிஸ்தான்: 15 பேர் பலி! தேவாலயத்தின் மீது கொடூர தாக்குதல் ! இருவர் உயிருடன் எரிப்பு


பாகிஸ்தானில் இரு தேவாலயங்களில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்பாவிகளைக் குறி வைத்து நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன், இரு காவலர்கள் அடங்குவர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூரின் யோஹானாபாத் பகுதியில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கிறைஸ்ட் தேவாலயத்திலும் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கேரள அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை? சதாசிவம் பாஜகாவுக்கு நன்றிகடன்?

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்ட விதம், அரசியலமைப்பு சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் வகையில் இருந்ததாக, மாநில கவர்னர் சதாசிவம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கவர்னரின் இந்த செயல், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில், காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சமீபத்தில் மாநில நிதியமைச்சர் மணி தாக்கல் செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் மணி, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்ததால், எதிர்க்கட்சியினர் சபாநாயகரை தகாத வார்த்தையால் திட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்பதானே பூனைக்குட்டி வெளியே வருது.....என்னடா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்  சதாசிவம்  கவர்னெர் ஆகிவிட்டாரே...கைமாறு எதுவும் திருப்பி செய்யவில்லையே என்று இருந்தேன்.....நிரூபிசுட்டாருயா சம்பந்தம் தனக்கு கவர்னெர் பதவி கிடைத்ததன் காரணத்தை....சுப்ரீம் கோர்ட்இல் எப்படி இவர் செயல்பட்டாரோ தெரியவில்லை....அரசியலை விரைவாக தெரிந்து கொண்டுவிட்டார்....இவருக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்.....அதற்குதான் அடிபோடுகிறார்...

நடிகர் சையத் அலிகானுக்கு வழக்கப்பட்ட பத்மஸ்ரீ பறிக்கப்படுகிறது?

புது டில்லி:பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:"மும்பையில் உள்ள உணவகத்தில், தகராறில் ஈடுபட்டதற்காக சயீத் அலி கான் மீது மும்பை கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவர் மீது மேலும் சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இதைக் கருத்தில் கொள்ளாமல், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.சயீப் போன்ற சர்ச்சைக்குரிய நபர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதைத் திரும்ப பெற வேண்டும் என சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.  இவர் ஷார்மிளா தாகூர் பட்டோடி நவாப்பின் மகனாவார் . இவரது தற்போதைய மனைவி ராஜபூரின் பேத்தியான கரீன் கபூராகும்  !

ஞாயிறு, 15 மார்ச், 2015

இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார், பொன் ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பி உள்ளார். அவரது சுற்றுப்பயணம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
இந்திய பிரதமர் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்றது மட்டுமல்ல தமிழர் பகுதிக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சாதனையையும் மோடி ஏற்படுத்தி உள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் அந்த நாட்டு அதிபர், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். உரிமை என்பது சட்டத்தால் கிடைப்பது. அந்தஸ்து என்பது மனதளவில் கிடைப்பது.

வழக்கை வாபஸ் வாங்கவே முடியாது! - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்

திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன். தியேட்டர்கள் கிடைக்காத சூழலில் தனது பெரும் சர்ச்சைக்குரிய படமான விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் அறிவித்தார். இதனால் கமல் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறி தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மல்லுக்கு நின்றனர்.  இந்த சூழலில் இந்திய போட்டி ஆணையத்தில் இது குறித்து கமல் ஹாஸன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வகையில் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இருந்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் மீது பெரும் அபராதம் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. உத்தம வில்லன் படத்தின் சென்னை உரிமையை வாங்கியுள்ள அபிராமி ராமநாதனும் இதில் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். இந்த நிலையில் கமலை சமீபத்தில் சந்தித்த அபிராமி ராமநாதன், தங்களுக்கு எதிரான வழக்கை காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் கமல். இந்த வழக்கை திரும்பப் பெறுவது முடியாத காரியம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.

//tamil.filmibeat.com/

கேரளா பெண் MLA ஜமீலா ஆண் MLA சிவதாசன் நாயரை கடித்தார்! இடுப்பில் கைவைத்தால் கடித்தாராம்


கேரள சட்டசபையில் நடந்த அமளியின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை எதிர்க் கட்சியான கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஜமிலா பிரகாசம் கடித்து விட்டார். முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பாதுகாப்பதற்காக அவரது அருகே தான் நின்று கொண்டிருந்தபோது, பெண் எம்.எல்.ஏ. தன்னை கடித்ததாக சிவதாசன் நாயர் குற்றம் சாட்டினார். இதுபற்றி ஜமிலா பிரகாசம் எம்.எல்.ஏ. கூறும்போது, சட்டசபையில் அமளி நடந்தபோது பின்னால் இருந்து எனது கையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்கள். எனது இடுப்பிலும் கை வைத்தனர். எனது முதுகிலும் அடி விழுந்தது. நான் திரும்பி பார்த்தபோது, இதற்கு காரணம் சிவதாசன் எம்.எல்.ஏ. என்பதை அறிந்ததால் அவரை நான் கடித்தேன். என்னை காத்து கொள்ள போராடியதற்காக இவ்வாறு நடந்து கொண்டதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.maalaimalar.com

ராகுல் காந்தியின் அங்க அடையாளங்களை விசாரித்த போலீஸ்! அஞ்சாத வாசம் ஏன்?

ராகுல்காந்தியின் அங்க அடையாளங்கள் பற்றி டெல்லி போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை< காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 நாட்களாக எங்கு இருக்கிறார் என்ற தகவல் உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கலாம். விரைவில் அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி போலீசார் ராகுல்காந்தி வசிக்கும் துக்ளக் லேன் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் கட்சி பிரமுகர்களிடம் ராகுல்காந்தி பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு உள்ளனர். ராகுல் காந்தியின் மர்ம பயணம் நிச்சயமாக காங்கிரசுக்கு நல்ல பெயரை தரப்போவதில்லை. பொறுப்பற்ற தன்மையைதான்குறிக்கிறது.

யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி! இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை தமிழர்களுக்கு வழங்கினார்!மேலும் 45 ஆயிரம் வீடுகள்,...



யாழ்ப்பாணம் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.
2–வது நாள் சுற்றுப்பயணம் அன்று கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
2–வது நாளான நேற்று காலை புத்த மத புனித நகரமான அனுராதபுரத்துக்கு சென்றார். அதன் பின்னர் தலைமன்னார் சென்று ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் சென்ற மோடி அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அவருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் சென்றார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிக்கினார்! அடிமைகள் கூடாரத்தில் பதவிகள் விற்பனை அமோகம்

திருநெல்வேலியில் வேளாண்மைத்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மைத்துறை செயற்பொறியாளராக பணியாற்றியவர் முத்துகுமாரசாமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம், அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும்தான் என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். இதன்பின்னர், தமிழக டி.ஜி.பி. உத்தரவின் அடிப்படையில், முத்துகுமாரசாமி தற்கொலை செய்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அன்பு, திருநெல்வேலிக்கு நேரடியாக சென்று தற்கொலை செய்துகொண்ட முத்துகுமாரசாமியிடம் டிரைவராக வேலை செய்தவர் உட்பட வேளாண்மைத்துறை ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தினார்.