சனி, 7 நவம்பர், 2015

கேரள உள்ளாட்சி தேர்தல்களில் 6 இடங்களில் அதிமுக வெற்றி!

கேரள உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, இனி பெறப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் என தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அந்தமானில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்தொடர்ச்சியாக கேரள மாநிலத்தில் கடந்த 2, 5 தேதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டில் எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டில் ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டில் எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டில் பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 1-வது வார்டில் எல்.பாலகிருஷ்ணன், பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டில் எஸ்.பிரவீணா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள் என்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது.

கமலஹாசன்:நான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்...ஆரோக்கியம் கருதியே....

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது : கமல் ஆவேசம் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசினார்.’உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்காதுன்னா சாப்பிடாதீங்க. அதை ஏன் சாப்பிடக்கூடாது என்று மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் வேண்டுமானால் சாப்பிடாமல் இருங்க. நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் சாப்பிடுவதில்லை. என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவது இல்லை என்று முடிவெடுத்து விட்டேன். முடிந்தால் சின்ன மிருகங்களை சாப்பிடு. அதுவும் கிடைக்கலேன்னா என்ன கிடைக்குதோ அதை சாப்பிடு. அது கூட இல்லாமல எத்தனையோ பேரு இருக்குறான் இந்தியாவுல... அத கவனி. என்ன சாப்பிடலாமுன்னு மெனு போட்டுக்கொடுக்காத. சாப்பாடு போடு’’என்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், ‘’மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆரோக்கியம் கருதியே நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் பூச்சிகள் உணவு மிகப்பெரிய வியாபாரமாகவும் ஆகலாம். சாப்பிட உணவே இல்லாமல் இங்கு பலர் இருக்கிறார்கள். யாருக்கும் மெனு கார்டு கொடுக்க வேண்டாம்’’ஆவேசமாக பேசினார் nakkheeran,in

கோவனின் போலீஸ் காவல் விசாரணை ரத்து..

தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி, பாடல் பாடிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இடதுசாரி பாடகரான கோவன் என்கிற சிவதாஸிற்கு வழங்கப்பட்ட போலீஸ் காவலை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தியும், மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் தான் சார்ந்திருந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மூலமாக பாடல்களை அவர் பாடிவந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி உறையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் நிதி உதவி..முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ...

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரிக்கு உதவும் விதமாக அவருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் என்ற ஏழைப் பெண், சவுதி அரேபியாவில் வீட்டு வேலைப் பணியில் இருந்த போது அந்த வீட்டின் உரிமையாளர், கஸ்தூரி முனிரத்தினத்தை கொடூரமாக தாக்கியதால் அவரது கை துண்டிக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்ததும், எனது உத்தரவின் பேரில் தமிழக அரசு இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு கஸ்தூரி முனிரத்தினத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும், அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளரிடமிருந்து இழப்பீடு பெற்று தரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

கிரின்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை தமிழக அரசு ரத்து

சுற்றுச்சூழல் விவகாரங்களில் கவனம் செலுத்தும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டுநிறுவனமான கிரீன் பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை, தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக க்ரீன் பீஸ் தெரிவித்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான கிரீன் பீஸ் இந்தியா தமிழ்நாட்டில் சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்ட ஒரு சொசைட்டியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த அமைப்பு பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது.
அந்த நோட்டீஸில், நெதர்லாந்தில் உள்ள கிரீன்பீஸ் கவுன்சிலின் ஆணைப்படியே இங்கிருக்கும் அமைப்பு செயல்படுவதாகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

Over Land பெங்களூரில் இருந்து பாரிசுக்கு காரிலேயே சென்ற இந்திய குடும்பம்.

நெடுந்தூர பயணங்களின் அருமை தெரியாத முதல் தலைமுறை நாம் தான். காதில் செவிட்டு மெஷின்  (ஹெட் போன்ஸ்) மாட்டி வெளியுலக சத்தங்களுக்கெல்லாம் ம்யூட் போட்டு விட்டு, சகிக்க முடியாத ஒரு பாடலை  ஃபுல் வால்யூமில் கேட்டு  நொடிக்கு நொடி காதில் ஒரு சின்ன பூகம்பமே உருவாகும் அளவிற்கு பயணிக்கிறோம். இங்கிருந்து ஆபீஸ் சென்று வருவதற்குள்ளேயே  டயர்ட் ஆகிடுது. பேசாமல் காரை விட்டு இறங்கி நடந்தே போயிடலாம் என தோன்றும் அளவுக்கு  டிராபிக் பாடாய் படுத்துது என்று நினைப்பவரா நீங்கள்? ஒரு குடும்பம்  பெங்களூருவிலிருந்து பாரீஸ் வரை 11 நாடுகளை கடந்து, 50 க்கும் மேற்பட்ட நகரங்களை தாண்டி , 111 நாட்களாக பயணித்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் ப்ளைட்டில் பறக்கவில்லை, 22, 780 கி.மீ. காரிலேயே பயணித்து இருக்கின்றனர்.

ஆணுறைக்கு தட்டுப்பாடு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை...எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் !

டெல்லி: நாடு முழுவதும், பாதுகாப்பான உடலுறவுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆணுறைக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொள்ளும், பெண் செக்ஸ் தொழிலாளர்களாலும், அவர்களால் பல ஆண்களுக்கும் எச்.ஐ.வி., நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆட்கொண்டுள்ள கொடிய உயிர்க்கொல்லி நோயான எய்ட்சுக்கு லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கடந்த 2013ல் மட்டும், உலகம் முழுவதும் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1.3 லட்சம் பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர் என்று உலக சுகதார நிறுவனம் தெரிவித்துள்ளது அடப்பாவிங்களா இப்படி பண்றீங்களே....

ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டம்..கல்லெறிந்து காதலர்களை கொன்றதற்கு எதிராக.....


திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக கூறி, ஆப்கானில் ஒரு இளம் பெண் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டித்து காபூலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது அதில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஏற்பாடு செய்த தலிபான்களையும், அரசாங்கத்தையும் கண்டித்து அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் போலி இரத்தம் தோய்ந்த உடையை அணிந்திருந்தனர். ஒரு வயோதிப நபருக்கு கட்டாய திருமணம் செய்துகொடுக்கப்படவிருந்த நிலையில், தனக்கு பிடித்த ஒரு இளைஞனுடன் தப்பி ஓடிய ரொக்ஷானா என்னும் பெண் கல்லெறிந்து கொல்லப்படும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது. இந்தச் சம்பவம் இஸ்லாத்துக்கு முரணானது என்றும் குற்றச் செயல் என்றும் அதிபர் அஷ்ரஃப் கானி கண்டித்திருந்தார்.bbc.tamil.com

டைட்டானிக் , பஹுபாலி, எந்திரன் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட "மூடு டாஸ்மாக்கை மூடு" "ஊத்திகொடுத்த உத்தமி" ..

;

வெள்ளி, 6 நவம்பர், 2015

குஷ்பு ஆவேசம் என்னை சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்! தங்கபாலு மாட்டிக்கிட்டார்...

பேட்டி கொடுத்து என்னை தேவையில்லாமல் சீண்டினால் புலியாக மாறிவிடுவேன் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வலுத்துவருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவர்களது ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநாடு திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, ’’நான் அமைதியாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னை சீண்டினால் புலியாக மாறி விடுவேன். காங்கிரஸை நம்பி நான் உள்ளேன். தொண்டர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் பலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஈரோட்டின் மருமகள் நான். தைரியமான தலைவர் இருப்பதால் நானும் தைரியமாக உள்ளேன். திமுகவில் இருந்து வெளியேறியது ஏன்? என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். நான் எதற்காக வெளியேறினேன் என்பதை திமுக தலைவர் கலைஞர் அறிவார். அவர் மீது நான் தனிப்பட்ட மபியாதை வைத்துள்ளேன். அதைப்பற்றி நான் வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை. பேட்டி கொடுத்து என்னை சீண்டுபவர்கள் தைரியம் இருந்தால் நேரடியாக பேச வேண்டும்’’ என்று ஆவேசமாக சீறினார்  நரசிம்மராவ் காலத்தில் இருந்து  தங்கபாலு அமைச்சராக கஸ்ட்டப்பட்டு சம்பாதித்தது போதாதா?  இளங்கோவனின் ஒழுக்கம் பற்றி இவர் வகுப்பெடுத்தது   மறைமுகமாக குஷ்புவை குறிவைத்துதான் என்பது நன்னா வெளங்குது உங்க கிரகம் இப்போ  சரியில்லையே... nakkheeran.com

1939...Gone with the wind நீ என்னைவிட ஏன் உன்னையும் விட அதிகமாக நேசித்தது இந்த மண்ணைத்தான்...உலகின் அதிக வசூல் படம் ....


Gone With The Wind  கோன் வித் த வின்ட் ...இது  1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது   $3,440,000,000  டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும்,  இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில்  டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். சுமார் இரண்டுவருடங்கள்  பலவித இன்னல்களையும் சோதனைகளையும் தாண்டவேண்டி இருந்தது.
படப்பிடிப்ப்பு நடந்த சில காலத்திலேயே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில்  வேற்றுமை அதிகமாகி இயக்குனர் சென்றுவிட்டார்.பின்பு  விக்டர் பிளெமிங் என்ற ஒரு இயக்குனரை கொண்டு பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .

நீதிபதி சிவப்பா மீது கொடூர தாக்குதல் ...ஜெயலலிதாவின் 7 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து ஜெயா சிறை செல்ல......

மைசூர்: ஜெயலலிதா மீதான கலர் டி.வி. ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மைசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா. 1991ல் பெங்களூர் உயர் நீதிமன்றத்திலும், 1994ல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவராகும். சிவப்பா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது 1996ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு எதிரான கலர் டி.வி. ஊழல் வழக்கில், அவரது 7 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் ஜெயலலிதா சிறை செல்ல வேண்டியதாயிற்று.

ஆளுநர் வாழ்க்கையின் ராஜபோகம்.நாட்டுக்கு ஆளுநர் தேவைதானா?’ - பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி...

அசர வைக்கும் ஆளுநர் மாளிகை செலவுகள்!பராமரிப்பு 1.27 கோடி... புதிய வாகனம் 1 கோடி... பயணச் செலவு 1.22 கோடிRTI அலசல்‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவைதானா?’ - பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்விக்கு இன்று வரையில் பதில் இல்லை. மக்களின் வரிப் பணத்தில் ஆளுநர்கள், ஆடம்பர வாழ்க்கையை ராஜபோகமாய் வாழ்கிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட காலமாக உண்டு. மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக, ஏஜென்டாக செயல்படும் கவர்னர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படிச் செய்யப்படும் செலவுகள் கோடிகளைத் தாண்டுகின்றன.
 2011 ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றுகொண்ட ரோசய்யா, இந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருக்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். செலவுக் கணக்குகள் தலைசுற்ற வைக்கிறது. அதன் விவரம் இங்கே...

லாலு பிரசாத் : 190 இடங்களில் வெற்றி பெறுவோம்..அமித் ஷா வேற மாதிரில்ல.....


பிகார் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தாலும், பாரதப் பிரதமரே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டிருந்ததாலும், பரபரப்பில் ஆழ்ந்தது. இந்நிலையில்
பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லாலு பிரசாத் யாதவ் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நகரங்களில் அறைக்குள் அமர்ந்து கொண்டும் தயார் செய்யப்பட்டவை. தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் மனநிலையை கணித்ததின் அடிப்படையில் 190 இடங்களில் வெற்றி பெறுவோம் என நான் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் dinamani.com

கனடாவில் 4 இந்தியர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்,

While 42-year-old Indian Canadian Harjit Sajjan was appointed defence minister, 38-year-old Navdeep Bains got the portfolio of innovation,
science and economic development.
Another Sikh, Amarjeet Sohi, who is not turbaned, has been sworn in as minister for infrastructure. A former bus driver, Sohi was jailed in India for two years in the 1980s. Fourth indian origin minister is Ms. Bardish Chagger Minister for small business.
கனடாவில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமராக ஜஸ்டின் டுரிடியோ மீண்டும் வெற்றி பெற்றார். கனடாவில் இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் ஏராளமானோர் குடியிருக்கின்றனர். அவர்கள் கனடா குடியுரிமை பெற்று அரசியல் மற்றும் அதிகாரங்களிலும் பங்கெடுத்து வருகிறார்கள்.
இந்த தேர்தலில் அவர்கள் பெரும்பாலானோர் போட்டியிட்டனர். அதில் 19 இந்தியர்களும் ஒரு இலங்கை தமிழரும் வெற்றி பெற்றனர்.நேற்று மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்தது. அதில் 4  இந்தியர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
 ஹர்ஜித்சார்ஜன், நவதீப் பெயின்ஸ், அமர்ஜித்ஜோகி ஆகியோரோடு பர்தீஷ் சாகர் என்ற பெண்அமைச்சரும் ஆவார்கள் 
அமர்ஜித்ஜோகிக்கு சீக்கிய தீவிரவாதிகளிடம் தொடர்பு இருப்பதாக கூறி 1988–ம் ஆண்டு இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்த வழக்கில் விடுதலையானார். அதைத்தொடர்ந்து கனடாவுக்கு சென்ற அவர் தற்போது மந்திரியாகி இருக்கிறார்

காவல் உதவி ஆய்வாளராக தமிழக திருநங்கை...இந்தியாவிலேயே முதல்தடவையாக..

காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், பெண்மை மாற்றத்தைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் தனது பெயரை "ப்ரித்திகா யாஷினி என்று மாற்றிக் கொண்டார்.
 இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது.
 இதையடுத்து, மே 23-இல் நடைபெறும் எழுத்துத் தேர்வில் தன்னை அனுமதிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், எழுத்துத் தேர்வில் அவர் பங்கேற்று, தேர்ச்சி பெற்றார்.

வியாழன், 5 நவம்பர், 2015

நித்தியானந்தா தஞ்சாவூர் பால்சாமி மடத்தை ஆக்கிரமிக்க முயற்சி....சாமி கோஷ்டிகளுக்குள் தள்ளுமுள்ளு.....

தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்தினுள் நுழைந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸார் ஓட ஓட அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்போது, நித்யானந்தா சீடர்களை குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி அனுப்பி வைத்த பின்னரும் சிறிது தூரம் சென்ற காரிலிருந்து 2 பெண்கள் உள்பட 4 சீடர்கள் இறங்கி மடத்தின் சுவரில் ஏறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அவர்களை கைது செய்து தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள பால்சாமி மடத்திற்கு சொந்தமான வயல்வெளிகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மடம், ராமகிருஷ்ண மடத்தின் கிளையாக உள்ளது. இந்த சாமியார் கும்பல் அரசியல்...கள்ளகடத்தல் மாபியாக்களை விட படுமோசம் ...சொத்துக்களை ஆக்கிரமிக்கிறார்கள்

கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

jaya police 700 pixகோவனை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும்.
தமிழக பாடகர் கோவனை ஜெயலலிதா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். அவருக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை (தேசத் துரோகம் முதலானவை) திரும்பப் பெற வேண்டும். ஆனால், அவர் தான் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட, குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் வழங்கும் அரசியல் சட்டத்தின்படி நடக்க தயாராக இல்லை என்று தெரிகிறது.

காதலிக்க மறுத்தால் மாணவியின் கைகளை வெல்டிங்மிஷனை கொண்டு துண்டித்த வாலிபர்

பெங்களூரில் காதலிக்க மறுத்ததால் மாணவியின் கைகளை வெல்டிங்மிஷனை கொண்டு துண்டித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் அருகே உள்ள மாண்டியாவில் வசித்து வருபவர் பிருந்தா (வயது 16) இவரை ரவிக்குமார் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.தனது காதலை பல முறை கூறியும் பிருந்தா ரவிக்குமாரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் காதலியை பழிவாங்க நினைத்தார் ரவிக்குமார். சம்பவத்தன்று மாணவி பிருந்தா, கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியாக தனது நண்பர்களுடன் வந்த ரவிக்குமார் பிருந்தாவை வழி மறித்தார். தான் வைத்து இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசி  வெல்டிங் மிஷினை கொண்டு பிருந்தாவின் கைகளை துண்டித்தார். பின்னர் நண்பர்களுடன் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

கெஜ்ரிவால் :பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
இது தொடர்பாக டுவிட்டரில் கூறியதாவது: ;பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான், மத உணர்வுகளை தூண்டும் விதமாக இனி பிரசாரம் செய்ய கூடாதென, பா.ஜ., தலைவர்களுக்கு புரியும் என கூறியுள்ளார்.விளம்பரத்தால் சர்ச்சை: >பீஹாரில் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில், பா.ஜ., சார்பில் நேற்று பத்திரிகைளில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கூறியது தொடர்பான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 'முதல்வர் நிதிஷ் குமார், இதற்கு பதில் கூறாமல் மவுனம் காப்பது ஏன்' என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் நேரத்தில் மத உணர்வுகளை துாண்டும் வகையில் பா.ஜ.,வினர் விளம்பரம் கொடுத்துள்ளதாக, தேர்தல் கமிஷனிடம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

Bihar Exit Polls JD(U) 132 NDA 111...பீகார் எக்சிட்: நிதீஷ் லாலு தலைமையில் ஐக்கிய ஜனதா கூட்டணி முன்னணியில்

பீகார் தேர்தல்
அறிவிக்கப்பட்டபோது பாஜக கூட்டணி மிகப்பெரும் வெற்றியை நோக்கி செல்வதாக  கூறப்பட்டது  தற்போது அந்த அலை காணாமல் போய்விட்டது . மிக நெருக்கமான போட்டி காணப்படுகிறது,  இரு அணிகளிலும் இல்லாத எம்பீக்கள் அல்லது கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்க கூடியவர்களாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை . மோடியின் அலை என்பதாக ஒன்றும் அங்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது.  இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு தேசிய அளவிலான திருப்பம் தற்போது உருவாகுகிறது.
இந்த வெற்றியின் மூலம் நிதீஷ்குமார் மதசார்பற்ற கட்சிகளின் கூட்டு தலைவர் ஆகிறார், அனேகமாக இந்தியாவின் அடுத்த பிரதமர் நிதீஷ்குமார் தான். ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அற்ற திறமைசாலி மதச்சார்பற்றவர் பல தட்டு மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் , மோடிக்கும் பாஜகாவுக்கும் இனிதான் இருக்கிறது பெரும் கஷ்டம்

எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் 25 சினிமா கலைஞர் கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவு.


பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கடந்த ஆகஸ்டு மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். மேலும் கடும் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்துள்ளார்.

கமிசன் வாங்கி கொடுக்கவா நாம் இருக்கிறோம்? அதிகாரிகள் வெறுப்பு....விஷ்ணுப்பிரியா...சகாயம்...மகேஸ்வரி...கோவன் ...அம்மாவும் ஆஸ்தியும்.....கொள்ளை அடித்த காசை வீசி வாக்குகளை அள்ள முடியுமா?


கொஞ்சம் ரிலாக்ஸ்டா அரசுப் பணிகளை கவனிக்கலாம்னு மலையேறி கொடநாடு போன இடத்திலும் ஜெ.வுக்கு டென்ஷன். காரணம், சசிகலா-இளவரசி தரப்பு வாங்கியிருக்கும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான தியேட்டர் விவகாரம் ஆதாரத்துடன் அம்பலமானதுதான்.''""இந்த சொத்து பற்றித்தான் நம்ம நக்கீரன் போன ஜூன் 27-ந் தேதியே ‘தியேட்டர் காம்பளக்ஸை விலைக்கு வாங்கிய கார்டன்'ங்கிற தலைப்பில் அம்பலப்படுத்தியிருந்ததே..'' ""சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால். அதில் சத்யம் நிறுவனத்தின் எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு சொந்தமான லக்ஸ் தியேட்டருக்கு போலீஸ் தரப்பிலும், கார்ப்பரேஷன் தரப்பிலும் அனுமதி கொடுக்காம இழுத்தடிச்சாங்க. கார்டன் தரப்பில் முதலில் அந்த தியேட்டரை லீசுக்கு கேட்டதோடு, அப்புறமா சொந்தமாக்கும் வேலை களும் நடந்தன. இதைத்தான் நம்ம நக்கீரன் அப்பவே வெளி யிட்டிருந்தது. லக்ஸ் தியேட்டரை ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருக்குது. இந்த ஜாஸ் சினிமாஸோட பழைய பேரு ஹாட் வீல்ஸ். அதன் போர்டு மீட்டிங்கில் சசிகலாவும் இளவரசியும் கலந்துக்கிட்டதையும், இளவரசியை சேர்மனா தேர்ந்தெடுத்ததையும் குறிப்பிடும் மினிட்ஸ் நோட் இப்ப வெளியானது தான் கொடநாட்டில் ஜெ.வை செம டென்ஷனாக்கியிருக்குது.''

எம்.கே. நாராயணனை அடித்தவர் பின்னணியில் யார்?

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார்.சென்னையிலிருந்து வெளியாகும் "த ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.  தேர்தல்கள் நடைபெறும் போதெல்லாம் ஈழப்பிரச்சனையை ஏதாவது ஒரு ரூபத்தில் கிளப்பி அதில் குளிர் காய்ந்து வெற்றி பெற்ற வரலாறு யாருக்கு என்பதை கொஞ்சம் கிளறி பார்க்க வேண்டும் 

புதன், 4 நவம்பர், 2015

நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது ....பிரதமர் கே.பி.சர்மா எச்சரிக்கை...

நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.உலகின் ஒரே இந்து நாடு என்று கூறப்பட்டு வந்த நேபாளம், புதிய அரசியல் சாசனத்தின் படி அண்மையில் மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த அரசியல் சாசனத்தில் சிலதிருத்தங்களை செய்ய வேண்டும் என்று நேபாளத்திற்கு இந்தியா நிர்ப்பந்தம் கொடுத்தது.
மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேஸிகள் நடத்தும் வன்முறைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததுடன், இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் தடையை ஏற்படுத்தியது.  உலகத்தில் இந்து நாடு என்று இருந்த நேபாளின் உறவை சீர்குலைத்தது   இந்துத்வா மோடியின் ராஜதந்திரம்தான்

சவுதி அரேபியா Ex மன்னரின் ரகசிய மனைவிக்கு 23 மில்லியன் டாலர் இழப்பீடு..


சவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் பாஹ்த்  இவரது ரகசிய மனைவி என கூறப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பிறந்த ஜனான் ஹார்ப் என்பவர் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செயத வழக்கில் சவுதி அரேபியாவின் இளவரசரும் உள்துறை அமைச்சருமாக இருந்து பின்னர் மன்னரான பாஹ்தை கடந்த 1968ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும் மன்னரது மகன் இளவரசர் அப்த்-அல்-அஜீஸ்-பின்-ஃபாஹ்த் தன்னை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதாக உறுதியளித்திருந்தார் தான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், மன்னரின் குடும்பத்தினர் தமது உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்றாலும், வெளியில் தெரியாமல் மன்னருடனான திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாவும் ஹார்ப் நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இந்தியாவில் தனது இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்


பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் இசைக் கலைஞர் குலாம் அலி. கடந்த மாதம் மும்பையில் நடைபெறவிருந்த இவரது இசை நிகழ்ச்சி சிவசேனாவினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இது அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்தது. இதையடுத்து, வேறு மாநிலங்களில் அவருக்கு இசை நிகழ்ச்சி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், குலாம் அலி இன்று அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டேன். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் என்னை காயப்படுத்தியுள்ளது. எனவே இப்போதைக்கு நான் இந்தியாவிற்கு வருவதாக இல்லை.

கோவன் கைதை கண்டித்து THE HINDU தலையங்கம்

கார்ட்டூன் : நன்றி அசீம் திரிவேதி
தேசத் துரோக வழக்குறுபடியும் ஒருமுறை தேசதுரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை அது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. தேசதுரோகம் மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகிய குற்றங்களை சுமத்தி ஒரு தீவிர இடதுசாரி குழுவை சேர்ந்த நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றம்: முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் மது விற்பனைக் கொள்கையை இரு பாடல்களில் பழித்து பரப்பியது. அந்த பாடல் வரிகளின் மிக தூரமான பொருளில் கூட அரசு மற்றும் அரசு நிறுவனத்துக்கு எதிராக என்று எதுவுமில்லை. அரசின் கொள்கைக்கெதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதற்கு அப்பால், வன்முறையை தூண்டும்படி ஏதுமில்லை. சமூக வலைத்தளங்களில் அது மிகவும் பரவி அதன் கருப்பொருள் நிறைய பேரின் மனதோடு உறவு கொண்டிருக்கிறது. மது விற்பது என்ற அரசின் கருத்தையும் அதே நேரத்தில் இலவசங்கள் மூலம் மக்களை குளிப்பாட்டுவதையும் தேர்ந்த நகைமுரணுடனும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுரத்துடனும் பாடல் விரித்துரைக்கிறது. மக்களின் அறியாமையில் நம்பிக்கை வைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அசைக்கமுடியாத மெஜாரிட்டி இருந்தும்  ஒரு பாடலுக்கு இவ்வளவு பயம் கொண்டுள்ளது  ஏன்?

கலைஞர் : ஸ்டாலின்தான் திமுகவின் அடுத்த தலைவர்...

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நடத்தி வருகிறார். அந்த பயணத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொது மக்களின் துயரங்களையும், கோரிக்கைகளையும் ஸ்டாலின் என்னிடம் தொடர்பு கொண்டு தினமும் தெரிவிப்பார். தமிழக மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளதையும், ஒரு மாற்றம் அடைந்துள்ளதையும் விவரித்தார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரவித்தார். திமுகவில் எனக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என ஒரு விவாதம் நடைபெறுவது உண்டு. ஆனால், திமுக ஒரு ஜனநாயக இயக்கமாகும். இங்கு பெரும்பாலானவர்களின் கருத்து முடிவே இறுதியானது.     இதை சொன்னதால் தானே  குஷ்புவுக்கு உங்க மகளிர் அணி செருப்புக்களை..கற்களை  வீசியது  ஆபாசமாக விமர்சித்தது  ஆட்டமோ ஆட்டம் என்று ஆட்டம் காட்டியது ? அவரும் ஆளை விட்டா சாமி போதும்னு ஓடிட்டார் ...இப்ப வேற பொதுக்குழு ஜனநாயகம்னு.....

இளங்கோவன் ஒழுக்கம் குறித்து தங்கபாலு வயித்தெரிச்சல்...

சென்னை: ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பதவி என்பது ஒன்றும் நிரந்தரமானதல்ல. கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன். நேர்மை மற்றும் ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை, என்னை நேர்மையற்றவர் என்று கூறும் தங்கபாலு, என்னுடன் இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா எனக் கூறவேண்டும். u என்னைப் பொருத்தவரை நான் கட்சி தொண்டர்களையும் மூத்த தலைவர்களையும் அரவனைத்து செல்கிறேன். திமுக தற்போது ஆட்சியில் இல்லை என்பதால் அதைப் பற்றி நான் எந்த விமர்சனமும் கூறவில்லை அவ்வளவுதான். அதிமுக ஆட்சியிலிருப்பதால் அதை விமர்சிக்கிறேன். அவர்கள் புகார்கள் சொன்னார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது.

2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்..டெலிகாம் Cartel ஆரிய வடவர் பார்பனர் கூட்டு சதி...


போயசு தோட்டத்தில் நடந்த ஜெயா-மோடி சந்திப்புதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிமைப்படுத்தித் தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் ஜெயாவிற்கு இணையாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி, தற்பொழுது பா.ஜ.க.வில் ஒட்டிக் கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தீயாய் வேலை செய்து வருகிறது.
நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தமிழ்நாட்டைக் குடிநாடாக ஆக்கியதுதான் அம்மாவின் ஒரே சாதனையாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள கட்சி சாராத ‘நடுநிலை’ வாக்காளர்கள் அனைவரையும் ஒரு ரேட்டு போட்டு வாங்கிவிட அம்மாவால் முடியுமென்றாலும், கொஞ்சத்துக்கு கொஞ்சம் பேரிடமாவது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் அறவுணர்ச்சியும் சுயமரியாதை உணர்வும் அதற்குத் தடையாக இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சிகள் தி.மு.க.வோடு கூட்டணி சேர்வதைத் தடுக்கும் பார்ப்பனக் கும்பலின் நோக்கம் நிறைவேறினாலும், அ.தி.மு.க. ஆட்சி மீது உள்ள அதிருப்தி தி.மு.க.விற்கு வாக்குகளாக மாறுவதைத் தடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இப்படியான நிலையில் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்ற பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தமிழகத்து வாக்காளர்களின் முன் பரிமாறுவதற்குப் பல்வேறு சதித்தனங்களில் இறங்கியிருக்கிறது.

அதிமுக மாஜி அமைச்சர் வெங்கடாசலம் கொலை..தேடப்பட்டவர் கைது..

அதிமுக முன்னாள் அமைச்சரின் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள வடகாட்டைச் சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். அதிமுக முன்னாள் அமைச்சரான இவர், 2010-ம் ஆண்டு அக்.7ம் தேதி இரவு வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த கணேசன்(38), வீரகுடி முத்துக்குமார்(36),தேவகோட்டையைச் சேர்ந்த திலகேஷ்வரன் (26), முத்துகிருஷ்ணன்(29), திருவாடனை மணிகண்டன் (24)ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

புத்தம் புதுவேகத்தில்....அதிமுக குடும்பத்தின் சொத்துக் குவியல்..குமாரசாமியும் தத்துவும் இருக்கையில்.....

கணக்கில்லா கம்பெனிகள்... குவியும் சொத்துக்கள்!புதிய இளவரசர்கள்!பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா?
போகாது என்பதற்கு உதாரணம் இவை.
வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது 1997-ம் ஆண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடந்து... நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று.. அதன்பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனாலும் விவகாரம் முற்றுப் பெற்றுவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக இதன் மேல்முறையீடு மனு விசாரணை நடக்க இருக்கும் நிலையில்... இப்போது வெளியில் கசிந்திருக்கும் ஆவணங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.

செவ்வாய், 3 நவம்பர், 2015

ஆர்ப்பாட்டம் மீது போலீஸ் கொடூர தாக்குதல்..கோபன் கைதை கண்டித்து மக்கள்.......


மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலை மக்கள் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் மூலம் மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொடைக்கானலில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள பழங்குடியினரை இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவன் பாடிய பாடல்கள் மக்களை போராடுவதற்க்கு தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது நேற்று இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் இந்த போலீஸ்கு மக்களை அடிக்கும் அதிகாரம் யார் குடுத்தது.குடிக்கு ஆதரவாக அரசும்,போலீஸ் இருப்பது பெரிய அவமானம்..

அம்மா பிரசாரத்தை தூள் தூளாக்கிவிட்ட கோபன் பாட்டு....யானையின் தும்பிக்கையில் நுழைந்த எறும்பு?

மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த கோவனின் பாடல்களை இப்பொழுது தமிழகத்தில் முக்கால்வாசிப் பேராவது கேட்டிருப்பார்கள். பெங்களூரில் இருக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பாடலைக் கேட்டிருக்கும் வாய்ப்பே இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் கேட்டிருக்கிறார்கள். எப்படி என்று கேட்டால் எதிர்வீட்டு முதியவருக்கு வாட்ஸப்பில் வந்திருக்கிறது. அரட்டையின் போது ஒலிக்கவிட்டிருக்கிறார். ‘அது யாரு கோவன்?’ என்கிறார்கள். டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் எந்த விஷயத்தையும் பரவலாக்காமல் விட வேண்டுமானால் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘அய்யோ இவன் என்னை விமர்சிக்கிறான்’ என்று புலம்பினால் நான்கு பேருக்கு நாமாகவே அடையாளம் காட்டிவிட்ட மாதிரி ஆகிவிடும். இது ஜெயலலிதா மோடிக்கு மட்டுமில்லை- நமக்கும்தான் பொருந்தும்.

2G வழக்கில் கனிமொழியை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ...தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து....

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமான பணம் பரிமாற்றப்பட்டதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளும் அடங்கும். இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் மீது குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தத்துவை ஞாபகம் இருக்குங்களா ?அதாய்ங்க  நம்ம  ஜெயா சசி சுதாகரன் இளவரசிக்கு எல்லாம் சுட சுட ஜாமீன் கொடுத்தாரே ...அவரேதாய்ன்...இதுதாண்டா இப்போது நீதி...  

பிரிட்டனுக்கு வரும் மோடிக்கு மிகப்பெரும் எதிர்ப்பு காத்திருக்கிறது..உலக பெண் உரிமையாளர்கள் போர்க்கொடி...

 பிரதமர் மோடி, அடுத்த வாரம் பிரிட்டன் செல்லும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின்,
ஆட்களை திரட்டும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர்,லெஸ்லி உட்வின், 58. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.  எல்லா சர்வாதிகாரிகளும் யூஸ் பண்ணி தோத்து போன  ஹிட்லரின்   Goebbels  டெக்னிக்கை  மோடி மஸ்தானும் ... 

EVKS இளங்கோவன் : கவிஞர் தங்கபாலுவின் இன்றைய சொத்துக்கள் எப்படி வந்தது? கணக்கு வெளியிட...

கடந்த சனிக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தலைமையில் கே.வி.தங்கபாலு, வந்தவாசி கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், வசந்தகுமார், கோபிநாத், வள்ளல் பெருமான், முருகானந்தன், கோபி, ஐ.என்.டி.யு.சி. தலைவர் காளன், ஆர்.தாமோதரன் ஆகியோர் திங்கள்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு குறித்து தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தற்போது உகந்த சூழல் இல்லை. தகுந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு ஒரு மாற்றம் வேண்டும். அதற்கு ஒரு தகுதியான, ஒழுக்கமான, நம்பிக்கையான, காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசம் கொண்ட, காங்கிரஸ் தொண்டர்களை அரவணைக்கிற ஒருவர் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

ஒரு ரூபாய் கேட்ட சிறுவனை காலால் உதித்த பாஜக அமைச்சர் விடியோ...மத்தியப்பிரதேசத்தில் ....


மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை பெண் அமைச்சர் ஒருவர் காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பன்னா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் தொடர்பான விழா ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய பிரதேச மாநில மூத்த பெண் அமைச்சர் குசும் மெதிலேவின் காலைத் தொட்டு அந்த சிறுவன் பிச்சை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவனை காலால் எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார்.
இந்த காணொளி நேற்று இணையங்களில் தீயா பரவத்தொடங்கியது. மேலும் அவருக்கு கடும் கண்டன ங்கள் எழத் தொடங்கியுள்ளன

மதுவிலக்கு போராட்டம் ஒவ்வொரு தடவையும் ஏன் தோற்கிறது? லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள்- கட்சிகள்- சமயவாதிகள்.....காசு பணம் துட்டு ...

"ஒவ்வொரு முறையும் மதுவிலக்குப் போராட்டம் நீர்த்துப்போகக் காரணமாக இருப்பது, அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தின் மீது போதிய அளவிலான தீவிரம் காட்டாததே.
" மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கைதும், தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளதும் தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்கான போராட்டத்தின் மீது மீண்டும் அரசியல் வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
கோவன் கைது செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சிகள் வரிசையாக தனது கண்டனக் குரலை பதிவு செய்யத் தொடங்கின. இருப்பினும், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரளவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையிலும்கூட கட்சிகள் மதுவிலக்கு போராட்டத்துக்காக ஓரணியில் திரள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

திங்கள், 2 நவம்பர், 2015

மக்கள் நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு

மக்கள் நலக் கூட்டணியை அறிவித்த இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ மற்றும் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணியை அறிவித்த இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ மற்றும் திருமாவளவன். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கம், தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக செயல்படும் என்று வைகோ அறிவித்தார்.
மேலும், தங்களுடன் தேமுதிகவும் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு மக்கள் நலக் கூட்டணி அழைப்பு விடுத்தது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அஜீத்தின் வேதாளம் சசிகலா குடும்பத்தின் ஜாஸ் சினிமா வசம்!. Jazz Cinema aquires Vedalam

அஜீத் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் வேதாளம் படத்தின் மொத்த உரிமையையும் சர்ச்சைக்குரிய ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎம் ரத்னம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வேதாளம் படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கிறது. நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது இந்தப் படம். வேதாளத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக முதலில் கூறினர்.  செங்கல்பட்டு விநியோகஉரிமையை ரெட் கார்ப்பெட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோவை உரிமையை சர்வம் சினிமாஸ், வட, தென்ஆற்காடு பகுதிகளில் பாண்டி சுரேஷ், திருச்சி தஞ்சை பகுதிக்கு எஸ்.பி.சுப்பையா, சேலத்துக்கு 7ஜிபிலிம்ஸ் சிவா, நெல்லை கன்னியாகுமரி பகுதிக்கு சேகர் என்றும் செய்திகள் வந்தன. தொடக்கத்தில் சென்னை வெளியீட்டு உரிமையை மட்டும் வைத்திருந்த ஜாஸ் சினிமாஸ் இப்போது ஒட்டு மொத்த தமிழக உரிமையையும் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம்; சிங்கபூருக்கு முதல் இடம்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா 103வது இடத்தை பிடித்துள்ளது. பிறப்பு, இறப்பு விகிதம், இறப்புக்கான காரணம், புகைப்பவர்களின் எண்ணிக்கை, கொழுப்பு பாதிப்பு மற்றும் சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் 89.45% புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இத்தாலி 89.07% புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஆஸ்திரேலியா 88.33% புள்ளிகளுடன் 3வது இடத்தையும் dailythanthi.com

தி நகரில் டாஸ்மாக் போராட்டம்...ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்.


மக்கள் அதிகாரம் - தி.நகர் ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரம் - தி.நகர் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11.30 மணிக்கு, புரட்சிகர பாடகர், மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலை குழு தோழர் கோவன் கைதை கண்டித்து பரபரப்பான தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே “மூடு டாஸ்மாக்கை” என்ற பாடலும், “ஊத்திக்கொடுத்த உத்தமி…” பாடலும் மக்களிடையே வேகமாக பரவி, கோவனை விடுதலை செய்ய கண்டன குரல்கள் எழுந்து வரும் சூழலில் இப்போராட்டம் வீரியமாக நடைபெற்றால் மேலும் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றெண்ணிய ஜெயா அரசு வழக்கம் போல தனது ஏவலாளி போலீசு படையை குவித்து வைத்திருந்தது. பத்தடிக்கு ஒரு போலிசு, மொத்தமாக தி.நகர் பெரியார் சிலை அருகில் 100 போலிசு, அதுமட்டுமன்றி ரங்கனாதன் தெருவின் சந்து பொந்துகளிலெல்லாம் உளவுப்போலிசு என காக்கி மயமாயிருந்தது தி.நகர்.
அதுமட்டுமன்றி முன்னேற்பாடாக இரண்டு அரசுப் பேருந்துகளை கொன்டு வந்து நிறுத்தியிருந்தது, போராட்டக்காரர்களை அள்ளிப்போட்டு செல்ல. சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களிடையேயும், வாகன ஓட்டிகளிடையேயும் பீதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
காக்கி மயமாயிருந்தது தி.நகர்

சாதி சாதி ..நாயர்- ரெட்டி- கவுடா -பட்டீல்- முதலியார்- கவுண்டர் -செட்டியார் -நாயக்கர்.........ரிவேஸ் கியரில் நாடு?

nisaptham.com : எங்கே பார்த்தாலும் சாதிதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் சாதிய வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீர்ர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒரு சாதி முத்திரையைக் குத்தியாகிவிட்டது. ஒருவரைத் தப்பிக்கவிடுவதில்லை. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் தங்களின் சாதியைப்  பெயருடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நாயர்களும் ரெட்டிகளும் கோஷ்களும் கெளடாக்களும் பட்டீல்களும் இன்னபிற சாதியினரும் பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்ளாத ஒரு பக்குவம் இருந்தது. அறுபதுகளுக்குப் பிறகு முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர் என்கிற விகுதிகள் பெயர்களிலிருந்து உதிர்ந்து போயின. அதைப் பக்குவம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளுக்குள் சாதிப்பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிற தயக்கம் உருவாகியிருந்தது. ஆனால் அதை வெகு வேகமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

தனித்து வெற்றி பெற்ற சிவசேனா..கல்யாண்– டோம்பிவிலி நகராட்சியை கைப்பற்றியது

கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாரதீய ஜனதாவும் தனித்து நின்று போட்டியிடுவதால் மிக முக்கியமானதாக கருதப்பட்ட கல்யாண் – டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. 122 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் நேற்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்தனர். நேற்று மாலை நிலவரப்படி 47 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சற்று முன் இந்த தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சிவசேனா 52 இடங்களையும், பா.ஜ.க 41 இடங்களையும் காங்கிரஸ் மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா ஒற்றை இலக்கம் கொண்ட இடங்களையும் கைப்பற்றியது. மத்தியில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்து வரும் சிவசேனாவின் இந்த வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது maalaimurasu.com

மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவிற்கு இடமில்லை என்ற அறிவிப்புக்கு: ராமதாஸ் நன்றி

மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவிற்கு இடமில்லை என அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட பாமகவின் செயற்குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ராமதாஸ் வரும் சட்டமன்ற தேர்தலில் செயல்படுத்தவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சென்னைக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமக, பாஜக கட்சிகளுக்கு இடமில்லை என திருமாவளவன் பேசியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தை முன்னேற்ற கூடிய செயல்திட்டம் அன்புமணி கையில் இருப்பதாக ராமதாஸ் கூறினார். மேலும் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார் nakkheeran.com

ஞாயிறு, 1 நவம்பர், 2015

டெல்லி நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி December 15 இல் விடுதலையாகிறான்..Nirbhaya's parents question govt.'s concern for women

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் மைனர் குற்றவாளி அடுத்த மாதம் விடுதலை ஆகிறார்  டில்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இரவு நண்பர் ஒருவருடன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது பேருந்தில் இருந்த 6
இளைஞர்கள் நிர்பயாவுடன்  வந்த ஆண் நண்பரை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு, மாணவி நிர்பயாவை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். படுகாயமடைந்த நிர்பயாவுக்கு  டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயி்ரிழந்தார்.

BBC: மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் ஏழாம் பகுதி

பாரம்பரிய இசைக் கருவிகளான நாதஸ்வரமும்  தவிலும் இணைபிரியாதவை. ஆலய விழாக்கள், இசை நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அது மேளக் கச்சேரி அல்லது நாகஸ்வரக் கச்சேரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அந்த நிகழ்வுகளில் முதலாவதாக ஒலிப்பது தவில்தான். தவிலுக்கு வேறு பல பெயர்களும் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்று கூறுகிறார் இசை ஆர்வலரும் தமிழிசை ஆய்வாளருமான நா மம்மது.  அறுபது ஆண்டுகளாகத் தவில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சாமிநாத ஆசாரி நாகஸ்வரத்துக்கு மட்டுமே துணை வாத்தியமாக இசைக்கப்பட்ட தவிலை, சில கலைஞர்கள் வேறு பல வாத்தியங்களுடன் இசைக்கும் முயற்சியை முன்னெடுத்தனர். ஆனால் அவை பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. நாகஸ்வரம் மற்றும் தவில் இசை இன்றளவும், பெரும்பாலும் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தே உள்ளது. அதுவே மங்கல இசையின் பலமாகவும், பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் :கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு கொடநாடு ஒரு கேடா?

திருவாரூர்: கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு கொடநாடு ஒரு கேடா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் தேமுதிக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். Vijayakanth slams Jayalalithaa விழாவில் அவர் பேசுகையில், கும்பி எரியுது, குடல் கருகுது, கொடநாடு ஒரு கேடா. குளுகுளு கொடநாட ஒரு கேடா என கேட்கிறேன் மக்களே. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் அவங்க சோற்றில் கை வைக்க முடியும். பருப்பு வகைகளின் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளது. தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடக்கையில் நான் என் மனைவி, மகன்களோடு வருவேன். நீங்கள் எல்லாம் வருவீர்களா என்று கேட்டுள்ளார். Read more at: tamil.oneindia.com/

சங்கரமடத்தில் அதிகார போட்டி...ஆயிரம் கோடி சொத்துகள்...மாபியா பாணி அதிகார போட்டி ...மும்பை மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் அட்மிட்டாக, டெல்லி பிரதமர் அலுவலகம்வரை பரபரப்பானது. நோ டென்ஷன் எனப் பிரதமர் அலுவலகத்திற்கும்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின ருக்கும் தகவல் சொன்னார் ஜெயேந்திரர். இருந்தாலும், அவர் அட் மிட்டாகியிருந்த ஹிந்துஜா மருத்துவமனை டாக்டர்களிடம் மேலிடம் விசாரித்தபோது, "ஜெயேந்திரருக்கு ஒன்றுமில்லை. எல்லா ஆர்கன்சும் நல்ல நிலையில் இருக்கு. சமீபத்தில் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக் கிறார்னு மட்டும் தெரிகிறது.  மற்றபடி அவர் ஓ.கே.' என்று பதில் வந்துள்ளது. இரண்டு நாள் மருத்துவமனையில் தங்கியிருந்த ஜெயேந்திரர், தனது உடல்நலன் குறித்து அனைத்து மெடிக்கல் ரிப்போர்ட்டுகளையும் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் ஆனார். சென்னையிலேயே வசதிகள் இருக்கும்போது எதற்காக மும்பையில் அட்மிட்டாக வேண்டும் மடத்துக்கு வேண்டியவர்கள் பலரும் குழம்ப, இதே கேள்வியை காஞ்சி சங்கர மடத்தோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும் அரசின் உயரதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டோம். விரிவாகவே பேசினார் அந்த அதிகாரி. ""சங்கரமடம், அதன் நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பரந்து விரிந்து கிடக்கும்  சொத்துக்கள், நிலபுலன்கள் என ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜெயேந்திரர் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது.