சனி, 1 செப்டம்பர், 2012

காலடியில் தவழும் ஆட்களின் கட்சியில் ஒரு கவரிமான்

அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்டிவீச்சு:

Viru New
அ.தி.மு.க. அமைச்சர்களே ‘மூன்றாம்பிறை’ படத்தின் இறுதிக் காட்சியில் கமல்ஹாசன் தாவிய கோலத்தில் சட்டமன்ற போர்டிகோவில் தன்மான சிங்கங்களாக உலாவரும் காலம் இது. அப்படியான கட்சியில் மான உணர்ச்சி அதிகமான நிலையில், கரை வேட்டியை கழற்றி வீசினார் கவுன்சிலர் ஆவுடையப்பன்!
இவர் காரைக்குடி நகராட்சி கவுன்சிலர். நகராட்சி கூட்டத்தில், பெண் நகராட்சித் தலைவர் முன்னிலையில், “என்னுடைய வார்டில், எந்த பணியும் நடக்கவில்லை” எனக்கூறி, கரை வேட்டியை கழற்றி வீசினார் இவர். (பெண் நகராட்சித் தலைவரும், அ.தி.மு.க.தான்)

பாபிலோனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்?


கண்ணம்மா பட இயக்குனர் எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கத்தில் கருனாஸ், பாபிலோனா, வி.எஸ்.ராகவன்,நாசர் நடிக்கும் படம் ‘பொம்மை நாய்கள்’. பகலில் பொம்மைகளாக இருக்கும் பொம்மை நாய்கள் இரவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி வில்லன்களை பழி  வாங்குகின்றன. 
பொம்மை நாய்களை ஆக்‌ஷன் ஹீரோக்களாக மாறும் சக்தியை உருவாக்கும் விஞ்ஞானியாக வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார். நடிகை பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டி நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் மறைந்த பாடகி சொர்ணலதா இந்த படத்தில் 

முகமூடி - நம்ம ஊரு சூப்பர் ஹீரோ!


இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே,நாசர், செல்வா நடித்து இன்று(31.08.12) வெளிவந்திருக்கும் படம் ’முகமூடி’. தமிழில் வெளியாகும் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமையுடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் இன்று திரையரங்குகளில் முகமூடி அரங்கேறியது.
ஒரு குங்ஃபூ மாணவனான ஜீவா தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ப்ரூஸ் லீ மாதிரி வரவேண்டும் என்ற ஆசையுடன் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எந்த வேலைக்கும் போகாததால் தனது தந்தையிடம் ”ஊதாரித்தனமா ஊர் சுத்துறியே தண்ட சோறு” போன்ற அர்ச்சனைகளுடன் தனது குறிக்கோளில் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் ஜீவா. ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக வரும் செல்வா இலவசமாக குங்ஃபூ சொல்லித் தருவதால் தனது இடத்திற்கு வாடகை கொடுக்கமுடியாமல் கஷ்டப்படும் போது ஜீவா அவருக்கு உதவிகள் செய்து வருகிறார்.தேவதை போன்ற பூஜா ஹெக்டேவை பார்த்ததும் வழக்கம் போல நமது ஹீரோ காதலில் விழுகிறார்.

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

5.9.12 தேதியிட்ட துக்ளக் இதழில் வந்த கேள்வி பதில் இது:
கேள்வி: ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வக்கீல் ஆச்சார்யா அலுத்துப் போய் ராஜினாமா செய்து விட்டது பற்றி?
பதில்: அவர் அலுத்துப் போய் ராஜினாமா செய்தாரா, வெறுத்துப் போய் ராஜினாமா செய்தாரா அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம். பத்திரிகைகளில் அவர் தரும் பேட்டிகளைப் படிக்கும் போது, ‘ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை, தான் நடத்தினால்தான், அதில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வரும்’ என்று பொருள்படும்படியாக, பல விஷயங்களை அவர் கூறி வருகிறார். ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அவர் நடந்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

லண்டன் : 350 இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் மாநகர பல்கலைக்கழகத்தில், இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவை சேர்ந்த 350 மாணவர்கள் உள்பட 2 ஆயிரத்து 600 வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டிய நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
இந்தநிலையில், லண்டன் மாநகர பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிப் பதற்காக இந்தியாவில் டெல்லி மற்றும் சென்னையில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, இந்த அலுவலகங்களில் மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்பட இந்தியாவில் செயல்பட்டு வந்த இரு அலுவலகங்களும் தற்போது மூடப்பட்டு விட்டன.

இந்தியா வல்லரசாகிவிடும் என்பது சாத்தியமில்லை: பாலகுருசாமி பேச்சு

கோவை: ""இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார்.
கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது:
இந்தியா பொருளாதாரத்தில், வளர்ந்து வரும் நாடாக இருக்கலாம். ஆனால், சமூக அடிப்படையில், இன்னும் வளர வில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதாரம் மட்டும் போதாது. சமூக வளர்ச்சியும் முக்கியம்.வரும் 2020ல், இந்தியா வல்லரசாகிவிடும் என்பது அப்துல்கலாமின் நம்பிக்கை. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. பல்கலைக்கழகங்கள் உட்பட அரசின் அனைத்து துறையிலும், லஞ்சம் நிறைந்து இருக்கிறது. இங்கு, படித்தவர்கள் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்.சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையும், வறுமையும் குறைய வில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட உத்திரவாதம் இல்லாத மக்களும், உள்ளனர். இன்றைக்கு, இந்தியாவில் 25 சதவீதம் பேர் குடிசைகளிலும், 15 சதவீதம் பேர் ரோட்டோரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் தீண்டாமை ஒழியவில்லை.

பத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல் குளம் சட்டவிரோதமானது

KK.நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் 16-ந் தேதி ரஞ்சன் என்ற மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனான். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ) பிரிவின் கீழ் (ஜாமீன் பெறக்கூடிய குற்றச்சாட்டு) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பள்ளியின் முக்கிய நிர்வாகி தவிர மற்ற சிலரை போலீசார் அழைத்து விசாரித்துவிட்டு, ஜாமீனில் அவர்களே அனுப்பிவிட்டனர். எனவே, இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடுமையான குற்றப் பிரிவின் கீழ் (இந்திய தண்டனைச் சட்டத்தின் 344 (2) பிரிவு) வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் கார்த்திக்ராஜா, புகழேந்தி ஆகியோரும், அந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வராகி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

போதிதர்மர், இலங்கை, ஜாவா, சுமத்ரா, மலேயா, தாய்லாந்து, கம்போடியா

பட்டுப்பாதை எனப்படும் சில்க் ரோட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பட்டுப்பாதை’ என்பது உலகமே சீனப் பட்டுக்கு ஆசைப்பட்டு அதை வாங்கத் துடித்த காலத்தில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வியாபாரிகள் பட்டு வாங்க சீனத்துக்கு சென்றுவரப் பயன்படுத்திய பாதை. பணம் கொழித்த பாதை.
இதில் இரு வழிகள் தெரியும். ஒன்று தரை மார்க்கமான பாதை மற்றொன்று கடல் மார்க்கமான பாதை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் பாதைகள் இருந்தன. இதை, இன்னொரு கோணத்தில் சொன்னால் வட இந்தியாவுடன் தரைவழித் தொடர்பையும், தமிழகம் போன்ற தென்னிந்தியப் பகுதிகளுடன் கடல்வழித் தொடர்பையும் சீனர்கள் கொண்டிருந்தார்கள் எனக் கொள்ளலாம்.
ஏனென்றால், தரைவழியே தமிழகத்திலிருந்து சீனா சென்றடைய சிக்கல் மிகுந்த பாலைவனங்கள், காடுகள் எனப் பல பகுதிகளையும் இமய மலையையும் கடக்கவேண்டி இருக்கும். தட்பவெப்ப நிலையும் சாதகமானது அல்ல. எனவே தரைவழியைவிட கடல்வழிப் பாதையையே அதிகம் பயன்படுத்தினர்.
போதிதர்மர் வாழ்ந்த காலத்தில் இக்கடல்வழி பட்டுப்பாதை வழியேதான் சீன-தமிழக வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். அது மட்டுமில்லாமல், போதிதர்மர் தங்கள் நிலத்தைக் கடந்தே சீனா சென்றார் என்று சுமத்ரா, கம்போடியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள் தீர்மானமாக அறிவிக்கின்றன. மலேசிய தற்காப்புக் கலையான ‘சிலாத்’ போதிதர்மர் வாயிலாகவே அறிமுகமானதாக மலேசியர்கள் கருதுகிறார்கள்.

வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

PRP கிரானைட் வசந்த மாளிகை

மேலூர்: மதுரை தெற்குதெருவில் உள்ள "பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்' அலுவலகத்தில், மலைக்க வைக்கும், பிரமாண்டமான "கிரானைட் பூங்கா' எனும் "வசந்த மாளிகை' அமைத்துள்ளனர். அங்கு, விலை உயர்ந்த அலங்கார சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. எங்கு திரும்பினாலும், முகம் தெரியும் அளவுக்கு கிரானைட் பூங்கா ஜொலிக்கிறது.

தெற்குதெருவில் 400 ஏக்கரில், பி.ஆர்.பழனிச்சாமியின், "பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்' தலைமை அலுவலகம் மற்றும் பாலிஷ் ஆலைகள் உள்ளன. வெட்டி எடுக்கப்படும் ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள், பாலிஷ் செய்வதற்காக எடுத்து வரப்படுகிறது.
இத்தாலி தொழில்நுட்பம்:
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 12 விதமான ராட்சத பாலிஷ் இயந்திரங்களில் வைத்து, வெட்டி எடுக்கின்றனர்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

TIME அட்டைப் படத்தில் ஆமீர் கான்

Aamir Khan First Bollywood Hero On சத்யமேவ ஜெயதேவுக்காக ஆமீர் கானை பெருமைப்படுத்திய டைம் பத்திரிக்கை

நியூயார்க்: சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் போட்டோ பிரபல பத்திரிக்கையான டைமின் அட்டைப் படத்தில் வந்துள்ளது.
சமூகப் பிரச்சனைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி அமெரி்க்கா வரை பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி பற்றி அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் பாலிவுட் ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆமீர்.
முன்னதாக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோரின் படங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தை அலங்கரித்தன.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு புதிய நீதிபதி

பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்து வந்தார். அவரது நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் மல்லிகார்ஜுனய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த வழக்குக்காக இவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீட்டிக்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூர் சிறப்பு நிதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சோமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கான உத்தரவை கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பெரும் இழுத்தடிப்பு வேலைகளைச் செய்து வருவதாகக் கூறி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஏற்கனவே விலகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Ex VHP தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள், BJP mla மாயாக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை

 Naroda Patiya Case 32 Convicts Including Bjp Maya நரோடா பாட்டியா கொலைகள்-குஜராத் பெண் எம்எல்ஏவுக்கு 28 ஆண்டு சிறை, விஎச்பி தலைவருக்கு ஆயுள்

கோகோ கோலாவும், பெப்சியும் தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள். இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன.

பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லயாமே ?

பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர்.


 தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.
திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.
பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.
1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.

கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம், ஜெயாவின் பெயர் கெட்டுபோன 2வது வழக்கு கலைஞர் மீது

திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம் என்ற தலைப்பில் முரசொலி கேள்வி- பதிலில் கலைஞர் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 4ம் தேதி இந்த செய்தி வெளியாகி இருந்தது.
இந் நிலையில் 'கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம்' என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த செய்தி அமைந்திருந்ததாக, சென்னை நகர அரசு வழக்கறிஞர் ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கலைஞர்
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவதூறானா கருத்து தெரிவித்த  கலைஞர் அதை வெளியிட்ட முரசொலி செல்வத்தையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 ‌‌ கலைஞர் மீதா‌ன வழ‌க்கு ‌விசாரணை‌க்கு தடை!

அருணாசலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமாம்? .. பிறகு ?

 China Calls Arunachal Pradesh Southern Tibet அருணாசலப் பிரதேசம் தனக்கே சொந்தம் என்கிறது சீனா: அது 'தெற்கு திபெத்' என்கிறது!

டெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை 'தெற்கு திபேத்' என்று சீனா சட்ட விரோதமாக பெயர் சூட்டி அழைத்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீ
அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பகுதி தனக்கே சொந்தம் என்றும் சீனா கூறியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்திய-சீன சர்வதேச எல்லையை சீனா ஏற்க மறுத்து வருகிறது. அங்கு அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 90,000 சதுர கி.மீ. பகுதியை தனக்கே சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு 'தெற்கு திபேத்' என்று சட்ட விரோதமாக பெயர் சூட்டியுள்ளது சீனா

Ex MLA காதர் பாட்ஷா படுகொலை! கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமி. கமுதியில் வீட்டில் இருந்த இவர் மர்ம நபர் ஒருவர்ரால் படுகொலை செய்யப்பட்டார். வெள்ளைச்சாமியை கொலை செய்ய முயன்றபோது, தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. வெள்ளைச்சாமியை கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற அந்த மர்ம நபர் பிடிபட்டதாகவும், பிடிபட்ட அந்த மர்ம நபர் அதே இடத்தில் அடித்துகொல்லப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கொலை சம்பவத்தால் கமுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

14 பிள்ளை பெற்ற பெண் ஆடிய 'ஸ்டிரிப்டீஸ்' டான்ஸ்

14 பிள்ளைகளைப் பெற்ற அமெரிக்கப் பெண் ஒருவர் ஸ்டிரிப்டீஸ் என்ற நடனத்தை ஆடியதை ஏகப்பட்ட பேர் பெரும் ஆச்சரியத்துடன் கூடி நின்று கண்டு களித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாடியா சுலேமான். இவருக்கு அமெரிக்காவில் ஆக்டோமாம் என்று செல்லப் பெயர் உண்டு. நாடியாவுக்கு இந்தப் பெயர் வந்ததற்கான காரணம் மிக சுவாரஸ்யமானது. அதை பிறகு பார்ப்போம். முதலில் அவரது டான்ஸைப் பார்ப்போம்..
புளோரிடாவில் உள்ள ஸ்டிரிப் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்த நாடியா அங்கு 5000 டாலருக்கு ஒரு அட்டகாசமான டான்ஸைப் போட்டார். கடந்த வார இறுதியில் இந்த நடனம் அரங்கேறியது. நாடியா, ஸ்டிரிப்டீஸ் டான்ஸில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

தோழியை மணந்த அமெரிக்க நடிகை துரோகம் கூடாது...கண்டிஷன்

நியூயார்க்: அமெரிக்க காமெடி நடிகை ரோசி ஓ டோனல், தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும் பல்வேறு விதமான கண்டிஷன்களைப் போட்டு அதற்கு அவரது தோழி ஒப்புக் கொண்ட பின்னரே அவரை மணந்துள்ளாராம் ரோசி. Rosie O'Donnell is married! The 50-year-old talk show host announced her marriage to fiancee Michelle Rounds Monday. The pair have been dating for about six months and married the head hunter in early June, though they just revealed the good news today.
ரோசி மணந்து கொண்டுள்ள பெண் மி்ச்சல் ரெளன்ட்ஸ் அவரது உறவுப் பெண்தான். ஜூன் மாதம் இந்தத் திருமணம் நடந்ததாம். ரெளன்ட்ஸுக்கு ஒரு ஆபரேஷன் நடப்பதற்கு முன்பு இந்தத் திருமணத்தை முடித்துள்ளார் ரோசி.
50 வயதாகும் ரோசி, தனது பிளாக்கில் தங்களது திருமணத்தை அறிவித்துள்ளார். நியூயார்க்கில் வைத்து இந்தத் திருமணம் ஜூன் 9ம் தேதி நடந்தது. ஜூன் 14ம் தேதி ரெளன்ட்ஸுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. ரோசிக்குமே கூட சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின்னர் தானும், ரெளன்ட்ஸும் நெருக்கமாக இருக்கும் பல்வேறு போட்டோக்களை டிவிட்டரில் போட்டபடி இருக்கிறார் ரோசி.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் நிரபராதி என நிரூபிப்பேன்


நடிகர்களே பயப்படும் மணிரத்தினத்தை நயன்தாரா தூக்கி எறிந்தார்

 திரை உலகின் ஆணாதிக்கத்தை முதல் முதலில் உடைத்தெறிந்த நடிகை என்ற பெருமையை நயன்தாரா பெற்றுவிட்டார்.
நடிகை நயன்தாராவின் சினிமா மறுபிரவேசத்திற்குப் பிறகு அவருக்கு வந்த வாய்ப்புகளும், அதை அவர் தட்டிக்கழித்த விவரமும் அனைவரும் அறிந்தது. வளர்ந்துவரும் இயக்குனர்களும் ஏன் ஓரளவுக்கு பெயர் பெற்றுவிட்ட இயக்குனர்களுமே நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக அவர் வீட்டில் கால் கடுக்க நின்று வெறும் கையோடு தான் திரும்பி வந்தார்கள்.நயன்தாராவின் மார்கெட்டும், பரபரப்பும் உச்சத்தில் இருப்பது தான் இதற்கு காரணம் என்று மற்றவர்களும் சிறு பெருமூச்சோடு விட்டுவிட்டனர். ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ளாமல் போனதும் தான் நயன்தாரா பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் அதிகமானது. அதுவும் பலதடவை கதை கேட்டு பின் யோசித்து கடைசியில் மாட்டேன் என்ற ஒரே ஆள் நம்ம நயன் மட்டும்தான்  ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில்,இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் நடிக்கும் கடல் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடல் படத்தில் நடிகர் அர்ஜூன், அரவிந்த்சாமி ஆகியோரும் முக்கியக்கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினார்களாம். 

ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை ‘புயல்’


புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது
புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை  பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய முடியாது. புயலை திசை திருப்பி விட முடியாது. குறைந்த பட்சம் புயலின் கடுமையை நடுக் கடலிலேயே குறைக்க முடியுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை.  .
http://www.ariviyal.in/
ஆகவே தான் அமெரிக்காவில் புளாரிடா மாகாணத்தில் நிபுணர்கள் ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கையாகப் ‘புயலை’ உண்டாக்கி அதை ஆராயும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான்

பால ராமாயணத்தில் ஆரம்பித்து பாகவதம், கஜேந்திரமோட்சம், குசேல புராணம் என பெரிதும் புராணப் பாடங்களே மிகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, வேத வேதாந்த விசாரங்களின் சாராம்சமானது கதை வடிவில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அங்கு போதிக்கப்பட்டிருக்கின்றன.

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 6
தரம் பால் தொகுத்துத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களில் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள், பள்ளியில் சேர்க்கப்படும் வயது, எத்தனை வருடம் கல்வி கற்றனர், உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை எனப் பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தரம்பால் அந்தத் தகவல்களைச் சேகரித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம்தான் அவற்றைச் சேகரித்திருந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாரசீகம் என அவரவர் தாய்மொழிகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. ஆங்கிலம்கூட சில பள்ளிகளில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. பள்ளியில் சேர்க்கும் வயதானது மாவட்டத்துக்கு மாவட்டம் சிறிய வேறுபாடுகளுடன் இருந்திருக்கிறது. ராஜமுந்திரி பகுதியைப் பொறுத்தவரையில் ஐந்து வயது, ஐந்தாம் மாதம், ஐந்தாம் நாள் என்பது பள்ளியில் சேர்ப்பதற்கு சுப தினமாகக் கருதப்பட்டிருக்கிறது.

மதுரை: கழிவறைக்குள் ஒரு டன் வெடி பொருட்கள் அதிர்ச்சி

மேலூர்: மதுரை, மேலூர் சிந்து கிரானைட் குவாரி அலுவலகத்தில், செடி மறைவில் உள்ள கழிவறையில், ஒரு டன்னுக்கு மேற்பட்ட வெடி பொருட்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அபாய கரமாக வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை, வெடி குண்டு நிபுணர்கள், வேறு ஒரு அறைக்கு மாற்றி, "சீல்' வைத்தனர்.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, மேலூர் தெற்கு தெரு பி.ஆர்.பி., நிறுவன அலுவலக வளாகத்திற்குள், நேற்று காலை 6:30 மணிக்கு சென்று, சில இடங்களை பார்வையிட்டார். பின்னர் கீழையூரில் உள்ள, சிசி கண்மாய், ரெங்கசாமிபுரத்தில் உள்ள ஒலிம்பஸ் குவாரி ஆகியவற்றில் மறு ஆய்வு மேற்கொண்ட அவர், திருவாதவூரில் உள்ள, சிந்து கிரானைட் வளாகத்திற்கு சென்றார். அந்த வளாகத்தின், பின் பகுதியில் உள்ள வேலியை தாண்டி சென்ற அவர், அங்கு வெடி பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஊடகங்களை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது.

ராம்தேவ் குருஜியின் வண்டவாளம் அம்பலமாகிறது

பாபா ப்ளாக் ஷீப்


வீட்டைவிட்டு ஓடிப்போவது என்று ராமகிருஷ்ணன் முடிவெடுத்தபோது அவனுக்கு வயது பதினைந்து. ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் கிராமம். புழுதிபடிந்த பஞ்சபூமி அது. அவனுடைய தந்தைக்கு கைவசம் வேலை மட்டும்தான் இருந்தது.  சம்பளம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைக்கவில்லை. வறுமை. ராமகிருஷ்ணனுக்கோ படிப்பு ஏறவில்லை. வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டான். எங்கே போவது?
ஓடிப்போகும் சிறுவர்கள் எல்லாம் ஒன்று ராணுவத்தில் சேர்வார்கள் அல்லது பிச்சை எடுப்பார்கள். ஆனால் ராமகிருஷ்ணன் தேர்வு செய்தது ஆசிரமத்தை. இலவசமாக சோறுபோடும் அனாதை ஆசிரமத்தை அல்ல; யோகா போன்ற ஆரோக்கியக் கலைகளைக் கற்றுத்தருகின்ற குருகுல ஆசிரமத்தை.
கிராமத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தியது இப்போது வசதியாக இருந்தது. ஆச்சார்ய பிரதம் என்ற யோகா குருவிடம் மெல்ல மெல்ல ஆசனங்களைக் கற்றுக்கொண்டான். அது தொடர்பான புத்தகங்களையும் படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டான்.
யோகக்  கலையைக் கற்றது போக எஞ்சியிருந்த நேரத்தில் சமஸ்கிருத மொழியைக் கற்பதிலும் கவனம் செலுத்தினான். அதற்கு அந்த ஆசிரமத்தில் வாய்ப்பு இருந்தது. பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டான். அடித்தளம் அமைவது முக்கியமில்லை; ஆழமாக இருக்கவேண்டும்; வலுவாக அமைய வேண்டும் என்பதில் அந்தச் சிறுவன் காட்டிய ஆர்வம் ஆசிரம நிர்வாகிகளை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?

சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா 08.09.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கலந்துகொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலிடம் வழக்கறிஞர்கள் 29.08.2012 அன்று மனு ஒன்றை அளித்தனர்.இந்தநிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறியதாவது, தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

சஹானாஸ்:நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்



Ilayarajah:கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது எம்எஸ்வி இசையைத்தான்


Ilayaraaja Remembers His First Shooting Experience : முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது இளமை நாட்களில் பார்த்த முதல் ஷூட்டிங், ஜெயலலிதாவின் வெண்ணிற ஆடை படப்பிடிப்புதான் என்றார்.
விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.
அவர் பேசியது:
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.

கமல்ஹாஸன்:தலைமுறைகளைக் கடந்த இசை எம்எஸ்வியுடையது!

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
ஜெயாடிவி 14-ம் ஆண்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைப் பாராட்டி கமல்ஹாஸன் பேசியது:
"இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி 'இது யாருடைய இசை?' என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

ஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா!

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம் 
 சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்றி அனுஷ்கா விளக்கியபோது ஆர்யாவுக்கும் யோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவ்வப்போது சின்னச்சின்ன யோக கலைகளை அவரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன் பலன் சிறப்பாக இருந்ததை உணர்ந்த ஆர்யா, அதன்பிறகு ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டு, தினமும் அனுஷ்கா பாணியில் யோகாவை செய்யத்தொடங்கி விட்டாராம். சென்னை திரும்பியபிறகு அனுஷ்கா சொல்லித்தரும் யோகா சாதாரணமல்ல, அருமருந்து என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் ஆர்யா

அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை!

2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு.
அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும்.
இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் அமெரிக்காவிடமிருந்து ஆயுத கொள்முதல் செய்திருக்கின்றன? உலகின் பல்வேறு பகுதிகளில் நாடுகளுக்கிடையே விரோதத்தை வளர்த்து பராமரிப்பதன் மூலம் தனது ஆயுத விற்பனையை பெருக்கிக் கொள்வது அமெரிக்கா முதலான நாடுகளின் கொள்கையாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ‘ஆசியர்களும், இந்தியர்களும் வேண்டாம்’ விளம்பரம்!

Viru News
ஆஸ்ரேலியாவின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின், ‘இனப் பாகுபாடு’ காட்டியது என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இவர்களை சிக்கலில் சிக்க வைத்திருப்பது, ஒரு விளம்பரம். சூப்பர் மார்க்கெட்டை கிளீன் செய்யும் வேலையாட்கள் தேவை என இவர்கள் செய்திருந்த ஆன்-லைன் விளம்பரத்தில், “ஆசியர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கோல்ஸ் சூப்பர் மார்க்கெட் (Coles supermarket) இந்த விளம்பரத்தால் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இனப் பாகுபாடு காட்டுவது, ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமானது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியன் மாநிலத்தின் தலைநகர் ஹோபார்ட்டுக்கு அருகேயுள்ளது குறிப்பிட்ட இந்த ஸ்டோர்.
“வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தில் இடம்பெற்ற ‘ஆசியர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்க வேண்டாம்’ என்ற வாக்கியம் தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது” என்று கூறியிருக்கிறது சூப்பர் மார்க்கெட் நிர்வாகம்.
விளம்பரம்

ரஜினி:வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!

சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு. அந்தப் பேச்சு முழுவதுமாக:
"இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் போடும் நண்பர்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இளவரசர் ஹாரியின் நிர்வாண போட்டோக்கள் வெளியானதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ராணுவ நண்பர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது நிர்வாண படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு வருகின்றனர். 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் , மறைந்த டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி (27). விடுமுறையை கழிக்க சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஸ்டார் ஓட்டலில் இளம்பெண்களுடன் ஜாலியாக இருந்தார். ஓட்டல் அறையில் இளம்பெண்ணுடன் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்கள் பத்திரிகைகள், இணைய தளங்களில் வெளியாகின. இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவையற்ற தர்மசங்கடங்களை தவிர்க்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தை ஹாரி மூடினார். இந்நிலையில் ஹாரியின் ரசிகர்கள், நண்பர்கள், ராணுவ நண்பர்கள் உள்ளிட்டோர் இணைந்து பேஸ்புக்கில் ‘சப்போர்ட் பிரின்ஸ் ஹாரி வித் எ நேகட் சல்யூட்’ என்ற பெயரில் ஹாரி ஆதரவு குரூப் ஒன்றை தொடங்கியுள்ளனர். நாமும் நமது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஹாரிக்கு ‘நிர்வாண’ மரியாதை செலுத்துவோம் என்பது இதன் கருத்து.

Jeyalalitha:சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அவர் பேசும்போது, ''எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன்.
 இருப்பினும் மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்றார் எம் எஸ் வி.

இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.
இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால் தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை” “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும்  டி.கே. ராமமூர்த்தி.
இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த  எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். 

சோவின் எங்கே பிராமணன்தான் ரஜினிக்கு பிடித்ததாம்


ஜெயலலிதா முன்பு ரஜினிகாந்த் பேசின பேச்சு :தலையில் அடித்துக்கொண்ட ‘சோ’முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு விருது வழங்கி பாராட்டிய இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஸ்வநாதனை பாராட்டி பேசினார்கள்.நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ’’புரட்சித்தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர்களுக்கு கலையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டார்கள். ஆனால் பணிச்சுமையின் காரணமாக அந்த பாராட்டுவிழாவை தவிர்த்து விட்டார்கள்.
இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜெயா டிவியின் 14-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டத்தையும் நடத்தும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.சரவணன் சார் போல நானும் ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறேன். குறிப்பாக நியூஸ் ஒளிபரப்புவதற்கு முன்பு வரும் வரலாற்று சுவடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சோ அவர்கள் வழங்கிய எங்கே பிராமணன் நாடகத்தையும் நான் விரும்பிப் பார்த்தேன். திடீரென்று அதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அவர்கள் தான் அதை தொடராமல் இருப்பதை அறிந்தேன். நான் உடனே சோவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் என்னிடம், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள்.

Narendra Modi யின் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: மகாராஷ்டிரத்துக்கு மாற்றம்

மோடிக்கு மற்றொரு அடி! குஜராத்தில் நடைபெறும் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: மகாராஷ்டிரத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத்தில் நடைபெற்று வரும் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையை மகாராஷ் டிரத்தில் உள்ள நீதிமன் றத்தில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தர விட்டுள்ளது.  
இந்த வழக் கில் கைது செய்யப்பட் டுள்ள குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பிரச் சாரத்துக்காக அவரது சொந்த ஊர் செல்வதற்கும் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அமித் ஷா தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
அவர் கூறுகையில், குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. எனவே, அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கும்போது, குஜராத்தில் நுழைய அவருக்கு விதிக்கப்பட்ட தடையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். வேண்டுமானால், அவரது நட வடிக்கைகளை சிபிஅய் அதிகாரிகள் கண்காணித் துக் கொள்ளலாம்'' என்றார்.

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது

பீஜிங்:""இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து வருகிறது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர்.அனைத்து விதமான நகைகளில், தங்க நகைக்கே இந்தியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்கள் கறுப்பாக இருப்பதால், தங்க நகைகள் எடுப்பாக தெரிகின்றன. கம்மல், நெக்லெஸ் உள்ளிட்ட நகைகளை அணிந்து செல்லும் பெண்களை அதிகம் காணலாம்.

தமிழர்களை களப்பிரர்கள் என்றனர் பார்ப்பனர்கள்

களப்பிரர்கள் என்ற சொல் திராவிடர்களை கருப்பு வீரர்கள் என்று வர்ணிக்கும் ஒரு நிற வெறி சொல்லாகும். கால பீரா என்பதுபோல் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான சொல்லென்பது திராவிடர்களுக்கே தற்போது தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது. பார்பனியத்தை ஆதரித்த சேர சோழ பாண்டியர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்ட உண்மையான இனமான தமிழர்களே பாபனர்களால் களப்பிரர்கள் என்று கொச்சை படுத்தப்பட்டார்கள் 

தினமணி தன் திருந்தாத தெருவாயை மீண்டும் திறதிருக்கிறது. அதனுடைய ஆசிரியராக இருக்கின்ற பேர்வழி, பச்சை ஜாதி வெறிகொண்ட சனாதனவாதி என்பது உலகறிந்த ரகசியம். எந்த விழாவானாலும் அங்கே போய் திராவிட இயக்க எதிர்ப்பையும், கலைஞர் எதிர்பார்பையும் காட்டி தங்கள் பாரம்பரிய அரிப்பைப் பலரறியச்சொறிந்து கொள்வது பழக்கம். திருமுறை ஆருட்பணிகளைப் பற்றிப்பேச நடந்த விழா ஒன்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சொல்வதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு அதைவிட உண்மையான களப்பிரர் காலம் இருபதாம் நூற்றாண்டுதான் என்று பேசியிருக்கிறார்.
அரசு விழாக்கள், பொது விழாக்கள் எதுவானாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடுவது என்று கலைஞர் ஆட்சிக்காலம் துவக்கி வைத்த ஓர் ஒழுக்க நெறியை, இப்போது சிலர் கடவுள் வாழ்த்துப்பாடி விழா வைத்துவக்குகிறோம் என்ற பெயரால் தமிழ்த்தாய் வாழ்த்தை மெல்ல ஒழிக்கத்து வங்கியிருக் கிறார்கள். மேற்படி விழாவிலும் அது நடந்திருக்கிறது.

புதன், 29 ஆகஸ்ட், 2012

திரையிசைச் சக்கரவர்த்தி MSVக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!



சென்னை: சென்னையில் இன்று மாலை நடந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 
 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் வழங்கப்பட்ட பட்டம் மெல்லிசை மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். இன்றும் கூட இதயங்களில் அவர்களது பாடல்கள் ஒலித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் உள்ளன.

வங்கத்தின் ஜெயலலிதா – மம்தா பானர்ஜி!


ஜெயலலிதா, மம்தா பானர்ஜி – இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வது என்றால் செவப்பா பயங்கரமா இருக்குமாம் மாமி, பயங்கரமா செவப்பா இருக்குமாம் தீதி.









தீதி அக்கா என வங்க மக்களால் அழைக்கப்படும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஓராண்டு ஆட்சியில் தன்னை விமர்சனம் செய்பவர்களை, அல்லது கேள்வி கேட்பவர்களை ஒன்று மாவோயிஸ்டுகள் என்பார். அல்லது மார்க்சிஸ்டுகள் என்பார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மாத்திரம் கைதாகவில்லை. ஒரு ஏழை விவசாயி கூட மாட்டி பதினைந்து நாள் சிறைவாசம் முடித்து கடந்த வாரம்தான் திரும்பியிருக்கிறார்.
தேசிய குற்ற நடவடிக்கை பதிவின்படி பெண்களுக்கெதிரான வன்முறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது வங்காளம். திரிணாமூல் காங்கிரசு கட்சியில் சேர மறுத்த பெண்ணை மானபங்க படுத்திய வழக்கு ஒன்று கடந்த மே மாதம் வெளியானது. அதன்பிறகு பாலியல் வல்லுறவுக்காளாகிய பெண் ஒருவரை அவர் மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர் என்பதால் தனது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு புகார் தந்திருப்பதாக கூறினார் மம்தா. சமீபத்தில் போலீசாரால் தமிழகத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இருளர் சாதிப் பெண்களை காசுக்காக பொய்ப்புகார் சொல்வதாக கூறிய ஜெயலலிதாவைப் போலவே அக்காவும் சிந்திக்கிறார்.

போதை பொருள் கடத்துவதாக தவறான தகவல் : புறப்பட்ட விமானத்தை நிறுத்தி வயதான தம்பதியிடம் சோதனை


மீனம்பாக்கம் :சென்னையில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகருக்கு செல்லும் லுப்தான்சா பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது. 340 பயணிகளுடன் விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலில், ‘பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற புதுச்சேரியை சேர்ந்த ஜோசப் (65), மனைவி மரியசெல்வி (60) ஆகியோர் லுப்தான்சா விமானத்தில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் எடுத்து செல்லும் துணி பொட்டலங்களில் 2 ஸ்பீக்கர் பாக்ஸ்களில் போதை பொருட்கள் உள்ளது‘ என கூறப்பட்டது. உடனே சுங்க அதிகாரிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, ‘லுப்தான்சா விமானம், வானில் பறக்க அனுமதி கொடுக்க வேண்டாம், புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்த சொல்லுங்கள்‘ என கேட்டு கொண்டனர். இதையடுத்து புறப்பட்ட இடத்திலேயே விமானம், திருப்பி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

Chennai போலி நகை அடைவு 3 ஈழத்தமிழர்கள் கைது


ஸ்ரீபெரும்புதூர் :போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மூன்று  ஈழத்தமிழர்களை  போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இஞ்சினியர் ஆவார் 
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர், 5 தங்க வளையல்களை அடகு வைக்க எடுத்து வந்தார். அவசரமாக பணம் தேவை ரூ. 1 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். கம்பெனி ஊழியர்கள் அந்த நபரிடம் வளையல்களை வாங்கி சோதித்து பார்த்தனர். அப்போது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. அடகு வைக்க வந்தவரிடம் கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இது குறித்து நிறுவன ஊழியர் வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள கேமராவில் அந்த மோசடி நபரின் உருவம் பதிவாகியிருந்தது.

ஐரோப்பிய விமானம், சற்று முன் ஹைஜாக்? ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் நிற்கிறது!

   latest news:We first realized something was wrong when we started circling above Rotterdam over and over, and the captain told us there was some problem in Schiphol. We spent about four hours on the ground after arriving," said Erna, a passenger, who asked that her surname not be used.
A spokeswoman for the airline, Vueling, said: "There was never any danger. There was a lack of communication between the pilot and the tower and the airport has activated the security protocol."
 Viru News
மலாகாவில் (ஸ்பெயின்) இருந்து அம்ஸ்ட்டர்டாம் (நெர்லாந்து) நோக்கி வந்த விமானம் ஒன்று கடத்தல்காரர்களால் ஹைஜாக் செய்யப்பட்டது என்ற செய்தி, ஐரோப்பிய மீடியாக்களில் இந்த நிமிடத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
சற்று நேரத்துக்கு முன் இந்த விமானம், இரு போர் விமானங்களால் எஸ்கார்ட் பண்ணப்பட்ட நிலையில், ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய விமானத்தை, விமான நிலைய மெயின் டர்மினலுக்கு அருகே கொண்டு வராமல், 2 கி.மீ. தொலைவில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் நிறுத்தியுள்ளனர். விமானம் நிறுத்தப்பட்ட இடத்தை பாதுகாப்பு படை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், மற்றும் முதலுதவி வாகனங்கள் சூழ்ந்துள்ளன.
வூலிங் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இது என்று தெரியவருகிறது.
நெதர்லாந்து விமானப் படையின் இரு F16 விமானங்கள் இந்த விமானத்தின் இரு பக்கத்திலும் எஸ்கார்ட் பண்ணி வந்து, தரையிறங்க விட்டபின் பறந்து சென்றன. விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பான தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ளனர்.
தற்போது, ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்ட இந்த விமானத்தை லைவ்வாக நெதர்லாந்து டி.வி. சேனல்கள் டெலிகாஸ்ட் செய்த வண்ணம் உள்ளன. விமானத்தில் இருந்து இதுவரை யாரும் இறங்கவில்லை.

முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா விழா

Rajini Kamal Attend At Cm Function (ரஜனி அம்மாவை ஐஸ் மழையில் நனையவைக்க குட்டிகதை தேடுகிறார் இதர சினிமாக்காரர்களும் ஐஸ் தயாரிப்பில் உள்ளார்கள்)
சென்னை: இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கிங்’ பி.ஆர்.பி. கொலை மிரட்டல்: இதில் எங்கோ ‘புகை’ வருகிறதே

Viru News
“ஆயிரம் கோடிகளில் முறையீடு செய்தார்” என்ற குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி மீது, “ஆறரை ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பிடுங்கினார்” என்று ஒரு கொலை மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக, இதுவரை 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபரான பி.ஆர். பழனிச்சாமி மீது பதிவாகி உள்ளன. அதாவது, இதுவரை பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு இவர் கணக்கில்தான் உள்ளது என்ற நிலையில், கொலை மிரட்டல் வழக்கும் வந்து சேர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில், பி.ஆர்.பி. எங்கெல்லாம் தோண்டினார் என்பதை மட்டும் விசாரிப்பதுடன் நின்றுவிடாமல், பி.ஆர்.பி. வாங்கி குவித்த சொத்துகள் குறித்து தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. மதுரை மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களிலும் அவருக்கு ஏறத்தாழ 2,000 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது வேற கேஸூங்க

கிரானட்டுக்காக ஜெயலலிதாவிடம் தூது போன CPI பாண்டியன்

முதல்வர் ஜெயலலிதாவிடம் ‘கிரானைட் கிங்’ தூதுவராக சென்ற ‘ரெட் கிங்’!

Viru News
ஆயிரக்கணக்கான கோடிகளில் வருமானத்தையும் இழந்து, சிறையிலும் வாட வேண்டிய நிலை ஏற்பட்ட கோடீஸ்வரர், சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள, ‘எல்லா விதமான’ முயற்சிகளிலும் இறங்க மாட்டாரா? நிச்சயம் இறங்குவார். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியும் செய்யாத முயற்சிகள் இல்லை.
அவருடைய தூதர்கள் டில்லியிலும், சென்னையிலுமாக கை நிறைந்த, அல்லது பை நிறைந்த நிலையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதில் பாட்டாளி மக்களின் கரத்தை உயர்த்துவதாக கூறும் தலைவரின் கையும் உள்ளதுதான், தமாஷ்.
ஏற்கனவே, தமிழக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்ட தொடர்புதான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன், கட்சித் தோழர்களை கல்தூண் போல் தாங்கிக் கொள்வார் என்று அவரது கட்சியில் சொல்கிறார்கள். ஒரு விதத்தில் அதுவும் நிஜம்தான். தலைவரோ கிரானைட் கல்லுக்கு அருகில்தான் உள்ளார்.

லாலு:ரெட்டி சகோதரர்களிடமிருந்து சுஷ்மா சுவராஜ் லஞ்சம்