சனி, 15 ஆகஸ்ட், 2026

றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி

 Arun Ambalavanar : றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி
உண்மைகளை சுய தணிக்கை செய்யும் தமிழ் அச்சுப்பத்திரிகைகள்
கடந்த வாரம் சனிக்கிழமை றீச்சா உணவுத்திருவிழாவில் 2500 மக்களுக்குரிய உணவு மட்டுமே  கையிருப்பில் இருந்ததை நன்கு அறிந்த பாஸ்கரன் அதைவிட மூன்றுமடங்கு மக்களுக்கு ரிக்கற் கிழித்து உள்ளே அனுமதித்த அநியாயம் நடந்தது. அதனால்  பாதிக்கப்பட்ட மக்கள் அதனை  உடனேயே சமூக வைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள்.  அந்த நியாயயக் குரல்கள் வைரலாகின. றெண்டிங் ஆகின.  
ஆனால் ஈழத் தமிழ் அச்சுப் பத்திரிகைகள்(பாரம்பரிய ஊடகங்கள் – Traditional Media)  எவையுமே இதனைச் செய்தியாக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவை இன்றுவரையும் சுயதணிக்கை செய்து அழிச்சாட்டியம் பண்ணுகின்றன.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

  hindutamil.in :  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறையில் கேத் லேப் சிகிச்சை மேற்கொண்டோர் எண்ணிக்கை 20 ஆயிரம் பேரைக் கடந்ததையடுத்து மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயவியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 3 கேத்லேப் மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்ட்ரக்சுரல் இன்டடர்வென் சன்ஸ் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது?

 bbc.com - சாரதா வி  : தஞ்சாவூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் பேச்சின் எல்லைகள் குறித்த பழைய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில், தமிழ் மக்கள் அரசியலை வெறுமனே கேட்கவில்லை; இரவு நேரங்களில் அது நிகழ்த்திக் காட்டப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் மக்கள் திரண்டனர்.
தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், யூடியூப் சேனல்கள், ரீல்ஸ் ஆகியவை அரசியலை சில விநாடிகளுக்கு உள்ளாகச் சுருக்குவதற்கு முன், "மேடைப் பேச்சு" என்ற தனிப்பட்ட அரசியல் வடிவம் இருந்தது. ஒரு மைக்கிரோஃபோன், தற்காலிக மேடை, வரிசையாக ஒளிரும் டியூப் லைட்டுகள், கூட்டத்தைத் தாண்டி குரலை எடுத்துச் செல்லும் ஒலிப்பெருக்கிகள், மேலும் மறுநாள் காலை குறித்த கவலை ஏதுமின்றி பல மணிநேரம் பேசும் பேச்சாளர்கள்.

சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக அரசியல் விவாதங்களுக்கு திராவிடர் கழகம் (திக) மேடையைப் பயன்படுத்தியது. அதிலிருந்து உருவான திமுக, அதே மேடையைத் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது.

மாண்டெக் சிங் அலுவாலியா-தமிழகத்துக்கு ஏன் ஆபத்து? மே 17 இயக்கம் எச்சரிக்கை!

 minnambalam.com - Mathi : தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா, எம். சுரேஷ் பாபு ஆகியோர் முதல்வர் விஜய்யை சென்னையில் நேற்று ஆகஸ்ட் 13-ந் தேதி சந்தித்தனர்.
இந்த குழுவின் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியாவால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்கிறது மே 17 இயக்கம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

இலங்கை விமானப்படையின் பெரும் பதவிக்கு தமிழ் பெண் வசந்தி முருகேசு தெரிவு

May be an image of text

 Rks Arulmolithevan ; இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு.
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள வசந்தி முருகேசு, இந்தப் பொறுப்பை வகிக்கும் இலங்கையின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புமிக்கதும், அதிக கவனம் மற்றும் தொழில்முறை திறன் தேவைப்படுவதுமான பணிகளாக கருதப்படுகின்றன.

காயங்களுடன் வீதி​யோரத்தில் விடப்பட்ட சிறுமி மீட்பு - வத்துகாமம்

 ilakkiyainfo.com : வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில், வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் வியாழக்கிழமை (13) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
காலை 6:15 மணியளவில் குறித்த பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியை அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அச்சிறுமியின் அழுகைக் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், உடனடியாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்திய அரசு கேதீஸ் லோகநாதனை புறந்தள்ளி ஒரு இந்தியரான வரதரராஜ பெருமாளை ஏன் முதலமைச்சராக்கியது?


 ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

வைகோ என்றொரு பிணம் தின்னி

May be an image of one or more people and text that says "AMEN AM VAIKO MARI AMENT"

ராதா மனோகர் : வைகோ என்றொரு பிணம் தின்னி!
 வைகோவின் பாராளுமன்ற பேச்சுக்களை ராகுல் காந்தியை கொண்டு வெளியிட்டார் வைகோ என்கின்ற    வையாபுரி கோபாலசாமி நாயக்கர்!
இந்திய அரசியலில் இந்த மனிதனை (வைகோ) போன்ற கேவலமான ஐந்து கிடையவே கிடையாது.
தந்தை ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு அந்த வீர பிரதாபங்களை புத்தகமாக எழுதினார்.
பின்பு  அதையே ராஜீவின்  மகன் ராகுல் காந்தி மூலம்   வெளியிடும் எருமை தோல் வைகோவிற்கு மட்டுமே உண்டு.
ராகுல்காந்திக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது .
அது ஒரு வீண் பிறவி  என்பது இதன் மூலமும் தெரிகிறது.
வைகோ எப்படி ஒரு கோடாரி காம்பாக செயல்பாட்டார் என்பதை சற்று விபரமாக பார்ப்போம். 

May be an image of crowd

1984 இல் இந்திரா காந்தியின் உயிரிழப்புக்கு பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது 
பாஜக வெறும் 2 எம்பிகளை மட்டுமே பெற்றது 
1984 BJP Lok Sabha MembersDr. A. K. Patel – Mehsana constituency, Gujarat
Chandupatla Janga Reddy – Hanamkonda constituency, Andhra Pradesh
ராஜிவ் காந்தி பிரதமரானார் 
போபோர்ஸ் ஊழலில்  ராஜிவ் காந்திக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்பு நீதிமன்ற தீர்ப்பு வந்தது  

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

திமுக பாஜக நெருக்கம்? கனிமொழி சோமு எம்.பி அதிரடி : அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது:

 hindutamil.in :: ​பாஜக​வுடன் திமுக நெருக்​கம் காட்டி வரு​வ​தாக அரசி​யல் வட்​டாரத்​தில் பரவலாக பேசப்​பட்டு வரும் நிலை​யில், ‘‘அரசி​யலில் எதிரி, நண்​பர் என்று யாருமே கிடை​யாது’’ என்று திமுக எம்​.பி. கனி​மொழி சோமு தெரி​வித்​திருப்​பது, கூட்​டணி குறித்த யூகங்​களை அதி​கரித்​துள்​ளது.
தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது.
கூட்​ட​ணி​யில் இருந்து பிர​தான கட்​சிகள் அனைத்​தும் வில​கிய நிலை​யில், பாஜக​வுடன் திமுக திடீர் நெருக்​கம் காட்டி வரு​வ​தாக பேசப்​பட்டு வரு​கிறது.

புலிகள் இயக்க நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை இரண்டாம் பாகம் - காணொளி

ஈழப்போராட்டத்தின் முன்னோடி புலிகள் இயக்கத்தின் நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை முதலாம் பாகம் காணொளி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சமூக ஊடக களப்பணியாளர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத திமுக தலைமை ?

 Vasu Sumathi : இதுவரை கட்சி மூலமாக 5 பைசா கூட கைநீட்டி வாங்காமல், ஆயிரம் முறை 200 ரூபாய் உபி என்று பெயர் வாங்கிய ஒரு - உறுப்பினர் அட்டை கூட இல்லாத - உண்மை திராவிட சிந்தனையாளனின் குரல்..
​கழகத் தலைமை சற்றே நிஜ நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்!
​இன்றைய அரசியல் களம் தெருமுனைக் கூட்டங்களிலோ அல்லது மேடைப் பேச்சுகளிலிருந்து மக்களின் கைபேசிகளுக்குள் நகர்ந்துவிட்டது.
கொள்கையே இல்லாமல், எதிராளிகள் கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் அள்ளி வீசி, சமூக ஊடகப் பிம்பங்களை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அவலத்தை கண்கூடாக பார்க்கிறோம். நாமோ இன்னும் "பழைய பாணி" அரசியலை கொஞ்சம் மாற்றியமைக்க ஏனோ தயங்கி கொண்டிருக்கிறோம்.
இன்று ​இணையத்தில் நமக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் பலர் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே களமாடுகிறார்கள். ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது, கூடாது.
​இது வேண்டுகோள், அறிவுரை அல்ல..