Bilal Aliyar :ஈழத்திற்கான அரசியல் சதுரங்கத்தில் முழுவதுமாக வெட்டப்பட்டவன் திமுககாரன் மட்டுமே.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி திமுக அரசை சுப்ரமணியசாமி+வெங்கட்ராமன்+ராஜீங்காந்தி என்ற பார்ப்பனிய கூட்டணி கலைத்தது.
எதற்காக கலைக்கிறது? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று
ஆனால் அடுத்த மாதமே இந்த மண்ணில் ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்
அதற்கான விலையையும் திமுககாரனே கொடுக்கிறான்..
முதலில் ஆட்சியை பறி கொடுத்தவன், ராஜீவின் மரணத்தால் தன் சொத்து, வாழ்வாதாரத்தை இழக்கிறான்..
இதோ வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் கழகத்தை தூக்கி நிறுத்திய மதுராந்தகம் ஆறுமுகம் ராஜீவின் கொலையால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என அவருடைய மகன் எழுதியிருக்கும் வரலாற்று ஆவணம்.
ஆனாலும் ஈழப்போரின் அனைத்து அசிங்கத்தையும் மீண்டும் திமுகவின் மீது எறிந்த பார்ப்பனிய+ஆண்ட சாதி நடராசனுடன் கைகோர்த்த சாதியவாத கூட்டணி பத்தாண்டுகள் தமிழ்நாட்டை மீண்டும் நாசப்படுத்தியது. அதனால் தான் ஈழம் என்று எந்த நாய் வந்து திமுகவை சுரண்டினாலும் யோசிக்காமல் கல்லை விட்டு எறிய வேண்டும் என்கிறோம்.
சனி, 22 மே, 2021
ஈழ அரசியல் சதுரங்கத்தில் முழுவதுமாக வெட்டப்பட்டவன் திமுககாரன் மட்டுமே.
PTR : குஜராத்திற்கு நிறைய கொடுக்கறாங்க.. ஆனால் தமிழகத்திற்கு குறைவுதான்.. தடுப்பூசி குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Vishnupriya R - tamil.oneindia.com : மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை; வந்த பின்னரே பணிகள் துவங்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி, பழம், மளிகை பொருட்கள் விநியோகம் செய்வது குறித்தும், கொரோனா தடுப்பிற்கு மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு பணிக்குழு (Task Force) செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி : மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொடுத்ததை போல விலையில் மாறுபாடு இல்லாமல் கொடுப்பது குறித்து ஆலோசித்து உள்ளோம்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் :சென்னை: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கானது வரும் 24-ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கையை உயர்த்தி Medall மெடல் நிறுவனம் மோசடி
Prakash JP.: தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கையை உயர்த்த காட்டப்பட்டதின் பின்னணியில்,
புதிய அரசுக்கு எந்த வகையிலாவது நெகடிவ் முத்திரை குத்த வேண்டும் - என்ற வகையில், ஏதாவது திட்டமிட்ட சதி இருக்கிறதா?? என்று விசாரணை செய்ய வேண்டும்..
தினசரி கொரோனா எண்ணிக்கையை வெளியிடும் Medall நிறுவனம் மோசடி செய்திருக்கிறது.
அதுவும் எப்படி என்றால் சோதனையில் -Ve வந்தவர்களுக்கு +ve என்றும், குஜராத் மாநிலத்தில் கூடுதலாக வந்த எண்ணிக்கையை கள்ளக்குறிச்சி போன்ற ஊர் பகுதிகளில் கணக்கு காண்பித்து கடந்த 4,5 நாட்களாக கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4000 வரை கூடுதல் எண்ணிக்கையாக ICMR தளத்தில் update செய்திருக்கிறது"
திமுக பதவியேற்ற முதல் நாளில் இருந்து இவர்களின் தொடர் பரப்புரை " கொரோனா எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை" என்பது தான்.
இது பாஜகவின் திட்டமிட்ட செயல் தானே?
ராமஜெயம் கொலையாளிகள் திமுக ஆட்சியில் கைது செய்யப்படுவார்களா ?
நக்கீரன் - இரா. இளையசெல்வன் : தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம், முந்தைய அதிமுக ஆட்சியின்போது கொல்லப்பட்டார்.
அவரது படுகொலை தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நேருவின் வலதுகரமாக இயங்கிவந்த ராமஜெயத்தின் படுகொலை, நேரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. இந்தப் படுகொலையில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டது.
இந்தச் சூழலில், மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது.
படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது
ராமஜெயம் குடும்பம். கே.என். நேரு மீண்டும் அமைச்சராகியிருப்பதால், அவரது சகோதரரின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் என்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நேருவின் ஆதரவாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எம்ஜியார் :எனக்கு சிங்கள ரசிகர்களும் உள்ளார்கள்
MGR greeting Dudley Senanayake Prime minster |
செல்லபுரம் வள்ளியம்மை : :ஈழப்போராட்ட ஆரம்ப காலத்தில் தமிழகத்திலும்
இந்தியாவிலும் அது பற்றிய தகவல்கள் முறையாக தெரிந்திருக்கவில்லை.
மேலும் பலர் அது உள்நாட்டு விவகாரம் அதுபற்றி ஏதாவது பேசவேண்டும் என்றால் அது டெல்லியில் உள்ள மத்திய அரசுதான் பேசவேண்டும் ,
அது முழுக்க முழுக்க இந்திய வெளிநாட்டு அமைச்சு தொடர்புடைய விவகாரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது.
அங்காங்கே சிலர் ஈழத்தமிழர்கள் மீது ஆதரவான கருத்துக்களை மேலேடுத்து சென்றார்கள் .
ஆனால் அவர்களுக்கு போதிய விளம்பரம் அன்று கிடைத்திருக்கவில்லை,
கம்யுனிஸ்ட் கட்சிகள் அது முழுவது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்றும் தாங்கள் தேசிய இனங்களுக்குள் உண்டாகும் பிரச்சனைகள் வர்க்க ரீதியான போராட்டங்களை புறந்தள்ளி விடும் என்ற கோணத்தில் பார்த்தனர்,
அன்று ஆட்சியில் இருந்த எம்ஜியாரோ தனக்கு சிங்கள ரசிகர்களும் உள்ளார்கள் என்று தனது அரசியல் ஆற்றலை வெளிப்படுத்தினார்.
1983 இனக்கலவரம் தோன்றி பிரச்சனை ஒரு பூதாகரமாக மாறிய பொழுது அது பற்றி போதிய அளவு கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய் சேர்தது திமுகதான்.
இந்த வரலாறு உண்மையையே யாராலும் புறந்தள்ளி விட முடியாது.
அப்போது எதிர்கட்சியில் இருந்த திமுகவின் தொடர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு பயத்தை கொடுத்ததோ இல்லையோ நிச்சயமாக எம்ஜியாருக்கு கடும் பயத்தை கொடுத்தது,
அமரர் அமிர்தலிங்கமும் அவர் மனைவியும் கலைஞர் வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்ட பின்பு இரவோடு இரவாக எம்ஜியார் ஆட்களை அனுப்பி அமிர்தலிங்கம் தம்பதிகளை அதே இரவு தனது வீட்டிலும் சாப்பிட வருமாறு வற்புறுத்தி அழைத்தார்,
ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?
ஆ.விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உயர் பொறுப்புகளில் நேர்மையான அதிகாரிகளை நியமித்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது”
என்ன நடக்கிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்? தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் முதல்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 13 வகையான மளிகைப் பொருள்களையும் ரேசன் கடைகள் மூலமாக தமிழக அரசு விநியோகிக்க உள்ளது.
முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்பதற்கு 2 நாள்களுக்கு முன்னர் (மே 5 ஆம் தேதி) 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. flash back
வெள்ளி, 21 மே, 2021
பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: இயல்பு நிலை திரும்புகிறது
மாலைமலர் : பாரீஸ்: பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள், நேற்று முன் தினம் தளர்த்தப்பட்டது.
திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளில் பிரான்ஸ் நாட்டு மக்கள் தான் மிக அதிகமாக உணவு விடுதிகளில், பொது இடங்களில் கூடிக்களிப்பதாக வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.
தெற்கு பிரான்சில் உள்ள, புகழ்பெற்ற ரிவெய்ரா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மிக அழகான நைஸ் நகருக்கு உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நைஸ் நகரின் கடற்கரை விடுதி ஒன்றில் திறந்தவெளி மேசைகளில் அமர்ந்து, பிரெஞ்சு தம்பதிகள், அரிய வகை வைன்களை குடித்து மகிழ்கின்றனர்.
அழகிரியுடன் பேசிய ஸ்டாலின்: அமைச்சர்களை டென்ஷனாக்கிய மதுரை ‘சம்பவம்’!
minnamballam :தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (மே 20) மதுரைக்கு வந்தார். கொரோன தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று சுற்றுப் பயணத்தைத் துவக்கிய முதல்வர் ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவையில் நிகழ்வுகளை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரைக்கு வந்தார்.
மதுரைக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து முதல்வர் காரில் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். நேற்றிரவு அங்கேதான் தங்கினார்.
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் மீளப்பெறப்பட்டது ! 93 போராட்டக்காரர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம்
மாலைமலர் : ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்கள் தங்களுடைய கிராமத்திலேயே போராட்டம் நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு போலீசார் போராட்டத்திற்கு தடைவிதித்து மக்களை கைது செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் செல்லும்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்பின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடர்ந்தனர். 93 பேரை கைது செய்தனர்.
கமலா ஹாரிஸும் இஸ்ரேலும் .. பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் பின்னணியில்...
செல்லபுரம் வள்ளியம்மை : தற்போது பலஸ்தீன் மீது இஸ்ரேல் போடும் குண்டுமழை பற்றி செய்திகள் வந்துகொண்டிருக்கிறது
இந்த சமயத்தில் கமலா ஹாரிசின் இஸ்ரேலுடனான நெருக்கம் பற்றி மீளாய்வு செய்தல் நல்லது
அமெரிக்க குடியரசு தேர்தல் சமயத்தில் இது பற்றி நான் எழுதியிருந்த சிறு குறிப்பு இது:
யூதர்களின் உள்ளம் கவர்ந்த கமலா ஹாரிஸ் .. உண்மையில் இவர் யார்? இவரின் கொள்கை என்ன?
இவர் ஒரு இந்திய தமிழ் பெண்ணாக ஒரு ஜமேக்கா கறுப்பு இன பெண்ணாக ஒரு அமெரிக்க பெண்ணாக எல்லாம் கருதப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் .
கமலாவை பற்றிய பிம்பம் ஊடங்களால் இப்படித்தான் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. ஆனால் கமலாவை பற்றிய உண்மைகள் கொஞ்சம் வித்தியாசமானவையாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு கமலா டக்ளஸ் எக்கோம் என்பவரை (இரண்டாவது கணவர்) வாழ்க்கை துணையாக்கி கொண்டார் . 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று செனட்டர் ஆனார் . இந்த 2020 ஆம் ஆண்டு உதவி குடியரசு தலைவர் ஆகியுள்ளார்.
ராஜீவ் காந்தியின் தீர்க்க தரிசனம் .: வன்முறை கொடுஞ்செயல்கள் மூலம் பயன்பெற கருதுவோர் இந்த ஒப்பந்தம் நிறைவேற விடமாட்டார்கள்
Rubasangary Veerasingam Gnanasangary : ஒரு இளம் பெருந்தலைவரின் உயிரைக் குடித்த இலங்கை - இந்திய ஒப்பந்தம்.
சென்னையில் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஆற்றிய உரை
வணக்கம்! இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்......
ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கை தமிழர்களிடமும் நான் பேசினேன்.
நீதி மற்றும் சமத்தவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன், நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர்..
இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காமல், இலங்கை தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.....
.....இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி தனி மாகாணமாக்கப்பட்டு, தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின் கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு...
மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிடலாம்: மின் வாரியம்
அமெரிக்காவில் திரையரங்குகள் திறப்பு!
minnambalam : இந்தியாவில் கொரோனா தீவிரத்தை உணருவதற்கு முன்பாக அதன் கொடூரத் தாக்குதலை எதிர்கொண்டவர்கள் அமெரிக்கர்கள்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக உலக சினிமாவின் தலைமையகமாக விளங்கும் ஹாலிவுட் சினிமா தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக சர்வதேச சினிமா வியாபாரம் முடங்கியது. கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் 2020இல் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவில் சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பியுள்ளனர்.
உயர்கல்வி பாடநூல்களில் சங்கிகளின் பிரசாரம் அமைச்சர் பொன்முடி விசாரணை
நக்கீரன் :திறந்தநிலை பல்கலைக்கழக எம்.ஏ முதலாம் ஆண்டு பாடத் திட்டத்தில் கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
'' 'மதங்களுக்கு எதிரான திமுக, பொதுவுடமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன.
அவை அவர்களை தேசிய பாதையில் கலந்து விடாமல் தடுக்கின்றன.
அவை கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன.
முகமதியர் கலவரம் உருவாக்கி வன்முறை வெடிக்கும் போது அதை கண்டிக்காமல் இருக்கின்றனர்' இப்படி அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது பொலிட்டிகல் சயின்ஸ் புக்கில் வர வேண்டிய விஷயமா? இது சமீபமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாடத்திட்டங்களை எல்லாம் திருத்தி அமைத்து எழுதுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
"ராஜீவ் காந்தி" - 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
BBC :தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அந்த கடித்தத்தில், பின்வரும் விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார்:
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எஸ். நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க வேண்டுமென நாங்கள் கோரி வருவது உங்களுக்குத் தெரியும்.
போர்க்கொடி தூக்கிய மம்தா பானர்ஜி : மாநில முதல்வர்கள் மோடியின் கைப்பாவைகள் அல்ல!
BBC : இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் அழைப்பு விடுத்த கொரோனா நிலவரம் தொடர்பான மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட செயலை கடுமையாகச் சாடியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
“பிரதமரின் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் பிறகு ஏன் முதல்வர்களை அழைக்க வேண்டும்.
இதை மாநில முதல்வர்கள் எதிர்க்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார் மமதா பானர்ஜி.
முதல்வர்களுடனான பிரதமரின் சமீபத்திய கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் 10 மாநில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மாநில முதல்வராக மமதா பானர்ஜி கலந்து கொண்டதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் அதில் பங்கேற்கவில்லை.
வியாழன், 20 மே, 2021
வீழ்த்தப்பட்டார் சைலஜா! முடிசூடினார் பினராய் விஜயன்!
கேரளா அமைச்சரவை திமுக பாணியில் "மனசாட்சியை முன்னிறுத்தி" பதவி ஏற்பு!
Shyamsundar - tamil.oneindia.com : திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியாது என்பதை உடைத்து, எல்டிஎப் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலைகேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அமைச்சர்கள் அமைச்சர்கள் முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேலம் - ‘நாட்டிலேயே முதன்மையான சிகிச்சை மையம்’: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
இன்று காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து சேலம் கிளம்பிய முதல்வர், சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டரை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து, திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேர அவசர மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பிப்ரவரி 2-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மார்ச் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 18 வயதில் இருந்து 44 வயது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆனால் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
எனவே மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு போட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
அயோத்திதாசர் பெரியாருக்கு நேரெதிர் திசையில் பயணித்தார்? .. பார்ப்பனீயம் பௌத்தம் ......
நிலவினியன் மாணிக்கம் : அயோத்தி தாசர் பெரியாருக்கு முன்னோடியா?
அயோத்திதாசப் பண்டிதரைப் பெரியாருக்கான முன்னோடி என்று மூன்று விஷயங்களில் சொல்கின்றனர்..
ஒன்று, பார்ப்பன எதிர்ப்பை அயோத்திதாசர் முன்வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி.
இன்னொன்று திராவிடம் என்கின்ற அடையாள அரசியலை முன் வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி.
மூன்றாவது பெளத்தத்தை சமத்துவத்திற்கான மதமாக சாதகமாக அணுகுவது என்பதில் பெரியாருக்கு முன்னோடி அப்படின்னு
ஆனால் மூன்றிலும் அயோத்தி தாசர் பெரியாருடன் நூறு சதவீதம் எதிர் திசையில் பயணிக்கிறார் என்பதே உண்மை
அயோத்திதாசப் பண்டிதர் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தால்கூட அதை எந்த அடிப்படையில் முன்வைக்கிறார் என்று சொன்னால், எதார்த்த பிராமணன், வேஷபிராமணன் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார்.
பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் உண்மையான பிராமணர்கள் கிடையாது. நாங்கள் தான் உண்மையான பிராமணர்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார். ஆனால் பெரியாருடைய பார்ப்பன எதிர்ப்பு என்பது முற்றிலும் வேறுபட்டது.
மத்திய பாஜக அரசுக்கு கண்ணிவைக்கும் வேலையை மாநிலங்கள் ஆரம்பித்து விட்டன . தகர்கிறது ஆர் எஸ் எஸ் மாபியா
நிர்வாகரீதியாகவும் பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் வேலையை மாநிலக் கட்சிகள் தொடங்கிவிட்டன.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய அளவில் சத்தமில்லாமல் ஓர் அரசியல் மாற்றம் அரங்கேறிவருகிறது.
மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி, மத்திய பா.ஜ.க அரசின் ஆக்டோபஸ் கரங்கள் துவண்டிருக்கின்றன. அகண்ட பாரதக் கனவுடன் ஜெட் வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்த பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாய்மூடி இருக்கிறார்கள்.
‘மோடி என்கிற பிம்பத்தை வைத்து, ஒவ்வொரு மாநிலத்தையும் பிடித்துவிடலாம்’ என்ற கனவில் இருந்தவர்களுக்கு, இன்று அந்த பிம்பமே பிரச்னையாகியிருக்கிறது!
‘மாநில அரசின் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதற்கான அறிவிப்புகளையும் அதிரடியாக வெளியிட்டுவருகிறது
தமிழகத்தில் பொறுப்பு ஏற்றிருக்கும் தி.மு.க அரசு. இதன் தொடர்ச்சியாக, மே 17-ம் தேதியன்று நடந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் புறக்கணித்தது தமிழக அரசு.
நடிகை ரோகிணி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் . அவரின் நேரடி அனுபவங்கள்
Rohini Molleti : இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை.
27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது.
இருமல், காய்ச்சலுடன் துவங்கியது.
மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் என பார்த்தேன். மருத்துவர் கு. சிவராமன் 1 ஆம் தேதி சி. டி ஸ்கேனும் ரத்த பரிசோதனையும் செய்ய சொன்னார்.
சில அளவுகள் ஏறுமுகமாக இருந்தது தெரியவந்தது. மூன்றாம் தேதி மூச்சு எடுப்பதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
கொரோனா வந்த நேரத்திலிருந்தே இப்படியொரு நிலமை வந்தால் என்ன செய்வது என்று நான் மற்றவர்களின் அனுபவங்கள் கவனித்து மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன்.
ஏனென்றால் எனக்காக முடிவெடுக்கும் என் உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லை.
போன வருடம் பிரளயன் தோழர், கே. பி தோழர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைப்பெற்று குணமடைந்து வந்ததும்,
The Family Man - Season 2 தமிழர்களுக்கு எதிரான வெப் சீரீஸ் தொடரா?
BBC : அமெஸானில் வெளியாகவிருக்கும் தி ஃபேமிலி மேன் - சீஸன் 2ல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறதா ஃபேமிலி மேன் தொடர்?
அமெஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர்.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்தத் தொடர், ஒரு உளவு அதிகாரியின் சாகசங்களைச் சொல்லும் தொடராக வெளியானது.
முதல் சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில்,
இரண்டாவது சீஸன் ஜூன் 4ஆம் தேதி வெளியாகுமென அமெஸான் அறிவித்துள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
அயோத்திதாசர் - திராவிட கருத்தியலின் முன்னோடி பிறந்த நாள் 20 மே 1845
மதுரை மன்னன் : தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப்போராளி,
சமூகசேவகர், தமிழறிஞர், பத்திரிக்கையாளர் மற்றும் சித்தமருத்துவர், பண்டிதர் “அயோத்திதாசர்”
பிறந்த தினம் இன்று. ( 20 மே 1845 )
இவர்களின் குடும்பம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் வசித்தனர், இவரது தந்தையின் பணிமாறுதல் காரணமாக ஊட்டிக்கு இடம்பெயர்ந்தனர்.
1907 ல் "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வார செய்தித்தாள் ஒன்றைத்துவக்கினார், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பைசா என்பதை நீக்கிவிட்டு “தமிழன்” என்ற பெயரில் பத்திரிக்கையை நடத்தினார்.
"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுயிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
விடுதலை போராளி பெண் சக போராளிகளாலேயே கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-
இலங்கைநெற் : தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சுகளாக இருக்கின்ற இக்கொலைகள் தொடர்பில் அ வ்வியக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தங்களது அனுபவங்களை எழுதி வருகின்றனர்.
இந்த மௌன விரத கலைப்பின் வழியே தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும் , உமா மகேஷ்வரனின் விசுவாசியாகவுமிருந்து சங்கிலி எனப்படும் கந்தசாமியின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவருமான அஷோக் தனது அனுபவங்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.
அகிலன் செல்வத்தின் கொலையின் சூத்திரதாரி என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அஷோக்கின் பதிவில் அவ்வியக்கத்தின் பெண்களணியின் முக்கிய உறுப்பினரான ரீட்டா என்பவர் பாண்டி என்பவரால் கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னிக்கப்பட முடிமயாத இக்கொடுஞ்செயல் தொடர்பான தொடர் விவாதத்தின் பொருட்டு அஷோக்கின் பதிவினை இங்கே முழுமையாக பதிவு செய்கின்றோம்.
புதன், 19 மே, 2021
இந்தியாவில் கொரோனாவால் ஏழரை இலட்சம் பேர் இறந்திருக்கின்றனர்.. வாஷிங்டன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திராவிட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் மொழி இந்தோ-ஆரிய
Subashini Thf : நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 4
2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இரண்டு முறை நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் நமக்கு நன்கு பரிச்சயமான விநாயகர், லட்சுமி, சிவன் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் சிங்கள முகத்துடன் சிறிய சிறிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நண்பர்களுடன் பேசி கேட்டு அறிந்து கொண்ட போது பௌத்த ஆலயங்களில் இத்தகைய தமிழர் வழிபாட்டில் இடம்பெறுகின்ற தெய்வ வடிவங்களும் அவற்றுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். சமயம் சார்ந்த ஒற்றுமைகள் என்பது ஒருபுறமிருக்க, மொழியில், பண்பாட்டில் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றியும், முறையான ஆய்வுகள் இலங்கையின் இரண்டு பெரும் இனங்களான சிங்களவர்கள்-தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.
உடனடி நிவாரண பணிகளுக்காகக் குஜராத்திற்கு 1000 கோடி - பிரதமர் உத்தரவு!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 50 பேர் பலி: 33 பேர் பத்திரமாக மீட்பு
daylithanthi : துனிஸ், உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இந்த நிலையில் லிபியாவில் துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து சுமார் 90 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர். இந்தப் படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஸ்பாக்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
புலிகள் கலைஞரை மீறி பாஜகவை நம்பியது ஏன்? போர்நிறுத்ததை ஏன் மீறினார்கள்
தணிகை குமரன் : கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர்அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து இலங்கைஅரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார்.
காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி..?
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்!
கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்..?
கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வருகிறது ! தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிரடி!
Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில்,
கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் ராஜாமணி அப்பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட குமரகுருபரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவி ஏற்ற அன்றே அதிரடியாக செயல்பட தொடங்கி உள்ளது.
செவ்வாய், 18 மே, 2021
திருப்பதி கோயில் ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்..குவியல் குவியலாக நாணயங்கள்
Jeyalakshmi C - tamil.oneindia.com : திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும் 25 கிலோ நாணயங்களும் விஜிலென்ஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் வாகனத்தில் எடுத்துச்சென்று திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் சேர்த்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சீனிவாச்சாரி. கோயில் ஊழியர் என்ற அடிப்படையில் இவர், தங்கிக்கொள்ள திருப்பதி சேஷாசலம் நகரில் தேவஸ்தானம் சார்பில் இவருக்கு வீடு வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டாலும் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.
இலங்கை முன்னாள் எம்பி துரைரட்ணசிங்கம் காலமானார் கிழக்கு மாகாணத்தில் 3000 பேருக்கு தொற்று ..
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் காலமானதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
கொரோனாவின் 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3,000ஐ அண்மித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளதுடன், கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது.
நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி''- அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிவிப்பு!
அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
விட்டு தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,
இரண்டாவது முறையையும் வெளியே சுற்றினால் கரோனா முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளியே சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
minnambalm :கோவையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு, போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மாவட்டங்களுக்குள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் காலை 10 மணிக்கு மேல் காவல் நிலைய எல்லையை தாண்டி செல்லவும் இ-பதிவு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தினசரி பாதிப்பில், சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் உள்ளது. தினசரி பாதிப்பு மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதனால், கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர்,காவல் துறையினர் என அனைவரும் தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
மாலைமலர் :சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கொரோனா மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உருவாக்கலாம்.
* ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக தமிழ்நாட்டில் லேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.
* மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும்.
* உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும்.
* குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும்.
* ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காவல் எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்!
minnambalam :சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேல், காவல் எல்லையைத் தாண்டி வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை தீவிரபடுத்த இன்று முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இன்று(மே 18) முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
புலி இயக்கத்தின் உளவியல் குறைபாடுகளே அவலங்களின் தோற்றுவாய்
இலங்கையில் போர் நடந்து பன்னிரெண்டு ஆண்டுகளாகிவிட்டன.. ஆனாலும் கூட அது பற்றிய ஒரு வரலாறு புரிதல் பொதுப்புத்தியில் இல்லை என்றே கருதவேண்டி உள்ளது
பலரும் பேச மறந்த பக்கங்கள் புலிகளின் வரலாற்றில் இருக்கிறது அவற்றை படிக்காமல் அதை புரிந்து கொள்ளமுடியாது.
புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
புலிகளின் கூட்டு அறிவியில் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது.
சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோ நிலை ஒருபோதும் இருக்கவில்லை.
அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது.
மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்க கூடும் .
அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான சிந்தனை போக்கு புலிகளிடம் மட்டுமே எப்படி உருவானது?
இதை ஆய்வு செய்யப்புகின் தவிர்க்கவே முடியாதவாறு புலிகள் இயக்கம் தோன்றிய நிலப்பிரதேசம் பற்றி செய்திகள் கொஞ்சம் கவனத்திற்கு உரியதாகும்.
கொரோனா பாதித்தவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்!
minnambalam : கொரோனா பாதித்த பெற்றோரின், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதாக, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த மையம் தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கி.ராஜநாராயணன் பேட்டி ...இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருந்தார்?
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் காலமானார். நேற்று மாலை (17. 05. 2021) வயது 99.
Sundar P : · மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நேற்று மாலை (17. 05. 2021) காலமானார். அவருக்கு வயது 99. கி.ரா. என்று அன்புடன் அழைக்கப்பட்ட ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுகிறார்....
dinamalar.com " சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(98) காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த, கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
திங்கள், 17 மே, 2021
சிறுத்தைகளும் வன்னிய இளைஞர்களும் அரங்கேற்றிய நாடகம் .. விழுப்புரத்தில் நடந்தது ஜாதி மோதல் அல்ல!
LR Jagadheesan : இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது.
“வன்னியர் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?
அந்த சமயத்தில் உண்மையிலே என்னதான் நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள வன்னியர் தரப்பில் விசாரித்தோம்.
“இதுவரை எங்கள் ஊரில் சாதி மோதல் நடந்தது இல்லை. இரு தரப்பினரும் மாமா மச்சான், அண்ணன் தம்பிகளாகத்தான் பேசுவோம் பழகியிருக்கிறோம். வெளியூருக்குச் செல்ல அல்லது நகரபகுதிக்கு செல்ல பஸ் ஏறுவதற்கு மனக்குப்பம் நடந்து செல்வோம். அப்போது எங்களைப் பார்த்தால் பைக்கில் ஏற்றிக்கொண்டு போவார்கள். பேருந்து நிறுத்ததிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். டீ வாங்கி கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம்தான் நல்லது கெட்டதுக்குக் கடன் வாங்குவோம். எங்கள் பெண்களோடு சிலர் இங்கே வந்து குடியிருக்கிறார்கள், குடும்பத்தையும் குடும்பத்தையும் நல்லவிதமாக பார்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அமைதியான ஊரை அசிங்கப்படுத்தி சாதி மோதலை உருவாகிவிட்டார்கள் சில விஷமிகள்.
அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!
நாரதா ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில்... அம்மாநில அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுபத்ரா முகர்ஜி ஆகியோரையும் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா வையும் கொல்கத்தாவில் உள்ள அவரவர் வீடுகளுக்கு சென்று கைது செய்தது. மேலும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன்சாட்டர்ஜியும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இவர்களில் சோவன் சாட்டர்ஜி ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். ஆனால் பாஜகவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்! குலக்கல்விக்கு எதிராக போர்க்கொடி!
தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்
திராவிட தொல்குடி மரபின் ஒரு பிரிவே சிங்களவர்கள்! மரபணு ஆய்வுகள்! நூல் திறனாய்வு!
Subashini Thf :நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி முனைவர்.க.சுபாஷிணி. பகுதி 3
மானுடவியல் ஆய்வுகளில் இனங்களின் உறவுமுறை கட்டமைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு கூறு. நூலின் நான்காவது அத்தியாயம் சிங்கள சமூகத்தில் உறவுமுறை பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.
மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ஏனைய பிற புராணக் கதைகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் இலங்கை சிங்களவர்களுக்கு வட இந்திய தொடர்பு இருப்பதை வலியுறுத்துகின்றன.
ஆனால் மரபணு ரீதியான ஆய்வுகளை நோக்கும்போது அவை தென்னிந்திய மக்களுடன், அதிலும் குறிப்பாக திராவிட இன மக்களுடன் மரபணு நெருக்கம் இருப்பதைப் பலப்படுத்துகின்றன.
இவர்கள் இனத்தால் சிங்களவர்; மொழியால் இந்தோ- -ஆரிய மொழி பேசுபவர்கள்; மதத்தால் பவுத்தர்கள்; பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று ஆய்வாளர் Cordrington (1926) கூறுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்கூற்றை உறுதி செய்வதாகவே அமைகிறது சிங்கள இன மக்களிடையே உள்ள உறவுமுறை வழக்கங்கள்.
கல்வி தந்தை’பூண்டி துளசி வாண்டையார் காலமானார்
வயது மூப்பின் காரணமாக தனது 93ஆவது வயதில் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். ஐயா என்று மரியாதையுடன் அழைத்து வந்த பூண்டி பகுதி மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் திருவாரூர், நாகப்பட்டினம் என டெல்டா மாவட்டங்கள் எங்கிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கென தனி செல்வாக்கு இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு
dhinakaran :சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா உயிரிழந்துள்ளர். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நிதீஷ் வீரா நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் இறப்பு செய்தி சில தினங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, ஐயப்பன் கோபி ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார்.
அவரின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
minnambalm :கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கச் சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
1.திமுக – மருத்துவர் நா.எழிலன்
2.அதிமுக – மருத்துவர் சி.விஜயபாஸ்கர்
அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் அசுர சாதனை! பல நாடுகளில் மாரத்தான் புகழ் , விபத்தில் பாதிப்பு சர்க்கரை நோய் . வழக்கறிஞர், அதிரடி அரசியல் ....
Sathik Basha : தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னைவாசிகள் பலருக்கும் பரிட்சயமான நபர் மா.சு. பிறந்தது வாணியம்பாடி பக்கத்துல இருக்குற ஒரு சின்ன கிராமம். ஆனா, சின்ன வயசுலயே சித்தூர் பக்கத்துலயிருக்குற புல்லூர் கிராமத்துல குடியேறிய சூழலில். அங்கேதான் ஆரம்பக்கல்வி படித்தார்.
இதன் பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தனர். மா.சு. அப்பாவுக்கு மீன் பிடிப்பதுதான் தொழில். குடும்பத்துலயே முதல் பட்டதாரி இவர்தான். இவர் குடும்பத்தில் இருந்து தி.மு.க-வின் முதல் உறுப்பினரும் இவர்தான்.
இவர் மனைவி பெயர் காஞ்சனா. ரெண்டு மகன்கள். ஒருத்தர் பேரு இளஞ்செழியன், லண்டன்ல மருத்துவரா இருக்கார்.
மருமகளும் மருத்துவர். ரெண்டு பேரக் குழந்தைங்க, பேரன் பெயர் இன்பன்; பேத்தி மகிழினி. இன்னொரு மகன் அன்பழகன். மாற்று திறனாளியாக இருந்து அண்மையில் காலமாகி விட்டார்.
COVID19 இன் மூன்றாவது அலை * முதல் அலையை விட மிகவும் ஆபத்தானது ! மக்களே கவனம்
Sundar P : *அவசர அறிவிப்பு* ; இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை
நீண்ட பதிவாயினும் தயவுசெய்து ஆபத்துக்களை புரிந்து கொண்டு முழுமையாக படிக்கவும், இது வெளிநாடுவாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை.
1. முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம்.
(கண்டிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் போகவே கூடாது)
2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது இரட்டை முகமூடி மற்றும் எந்த நேரத்திலும் முகமூடியை வெளியே வைத்து கழற்றவோ தாடிக்கு மட்டும் பயன் படுத்தவோ கூடாது..
3. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம்.
4.உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு குறைந்தது இரண்டு அ மூன்று மாதங்களுக்கு செல்லவே வேண்டாம். .
5. மரண வீட்டிற்கு செல்வதும், திருமண வீட்டிற்கு செல்வதும் அறவே தவிர்த்து விடுங்கள் அதன் மூலம் கோவிட் செயினை அறுத்துவிடலாம்.
ஆகவே ஆகவே மீண்டும் சொல்கிறோம் கோவிட் நிபந்தனைகளை உதாசீனப்படுத்தாமல் முறையாக கடைபிடியுங்கள்.
ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளையும் மூன்று நான்கு மாதம் தள்ளிப்போடுங்கள்.
நாம் அனைவரும் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே மூன்று அ நான்கு மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஞாயிறு, 16 மே, 2021
முருங்கையும் காமமும் உண்மை என்ன? பிசின்,முருங்கைக் கீரைக்குதான் விந்து சக்தியும், உயிரணுக்களைக் கூட்டும் சக்தியும் உண்டு! ... முருங்கை காய்?
Umamaheshvaran Panneerselvam : முருங்கை மரத்துக்கு பிரம்ம தண்டி என்று இன்னொரு பெயர் உண்டு.
பிரம்மம் என்றால் படைப்பு. தனது ஒவ்வொரு பாகமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் இருப்பதாலும், விந்து சக்தியை நேரடியாக கூட்டவல்லதாக இருப்பதாலும் அதற்கு அது காரணப் பெயர்.
நிற்க.
முருங்கையில் பல்வேறு நற்குணங்கள் இருக்கிறது. ஆனால் முருங்கை பிசின், முருங்கைக் கீரை இவற்றுக்கு தான் விந்தை கெட்டிப்படுத்தும் சக்தியும்,
உயிரணுக்களைக் கூட்டவல்ல சக்தியும் உளது.
அப்பொழுது சினிமாவில் காட்டுவது போல் முருங்கைக்காயில் இது இல்லையா என்று கேட்கலாம். இல்லை என்பதே உண்மை.
முருங்கைக் காய் விந்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு பொருள்.
விந்து கெட்டிப்படாமல் நீர்த்துப் போவதால் அது மிகும். விந்து மிகுவதால் விந்து நிறைய சுரப்பதுபோல் தோன்றும். ஆனால் அது அடர் விந்தாக இருக்காது. நீர்த்த விந்து. Sperms concentration
அதனால் மாறுபட்டு பெண்ணின் உடம்பில் செல்லும் successful sperm எண்ணிக்கைக் குறையும்.