சனி, 26 நவம்பர், 2016

கர்நாடகாவில் ஒயின் கண்காட்சி ...150 பிராண்டுகள் ,10 சதவீத சலுகை!


மங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒயின் கலாச்சாரம் மற்றும் ஒயின் குடிப்பதால் ஏற்படும் சுகாதார நலன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மங்களூரில் இன்று ஒயின் திருவிழா தொடங்கியது. கர்நாடக ஒயின் வாரியம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த ஒயின் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 12 ஒயின் ஆலைகளின் 150-க்கும் மேற்பட்ட பிராண்டு ஒயின்கள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒயின் கண்காட்சி-விற்பனை தவிர ஒயினுடன் கூடிய உணவகங்கள், இசைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, ஒயின் தயாரிப்பதற்காக திராட்சை குவியல்களை பார்வையாளர்கள் மிதித்து நசுக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இத்தகவலை ஒயின் வாரிய தலைவர் ரவீந்திர சங்கர மிர்ஜே நிருபர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் ஒயின் உற்பத்தி மற்றும் விற்பனையை பல்வேறு வகைகளில் ஒயின் வாரியம் ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கேரளா :போலீசால் படு கொலை செய்யப்பட்ட தேவராஜன் ,அஜிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் கைது !

கேரள போலீஸால் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இவர்கள் தேவராஜன், அஜிதா என தகவல் வெளியானது. இவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அ. மார்க்ஸின் பதிவு…
“கோழிக்கோடு மருத்துவமனை மார்ச்சுவரியில் போஸ்ட்மார்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தோழர்களின் உடலுக்கு மரியாதை செய்யச் சென்ற 28 பேர்களை கேரள போலீஸ் கைது செய்தது. இப்படியான அச்சுறுத்தல் முதலியவற்றைக் கண்ட தோழர் அஜிதாவின் சிறிய தந்தை உடலை அடையாளம் காட்டாமலேயே செல்ல நேரிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலோர் NCHRO வினர். சுமார் 12 மணி வாக்கில் தோழர் ராமுண்ணி தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரையும் தொடர்ந்த போலீஸ் அத்துமீறல்களையும் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு NCHRO சார்பாக கோழிக்கோட்டில் ப்ரெஸ் மீட் வைத்துள்ளோம்”.  thetimestamil.com

முன்னேற்பாடாக பணத்தை சொத்துக்களாகிய பாஜகவினர்.. . ஐக்கிய ஜனதா தளம் கடும் குற்றச்சாட்டு


மோடியின் நடவடிக்கையை முன்பே தெரிந்துகொண்டு, வீடுகள் மற்றும் மனைகளை வங்கிக் குவித்து, தங்கள் வசமிருந்த கருப்புப் பணத்தை பதுக்கிவிட்டனர் பாஜக-வினர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர்கள் சஞ்சய் சிங், நீரஜ்குமார் ஆகியோர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பீகாரில் பாஜக-வினர் நிலங்கள், வீடுகள், மனைகளை வாங்கி முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திலீப்குமார், ஜெய்ஸ்வால், சஞ்சீவ், சவுரசியா, லால்பாபு பிரசாத் ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களில் பிளாட்டுகள் வாங்கியிருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடத் தலைவர்களின் உத்தரவின்பேரிலேயே தாங்கள் இந்த பிளாட்டுகளை வாங்குவதாக கட்டுமான நிறுவனங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

மோடிக்கு புகழாரம் சூட்டும் கோபாலசாமி ... மோடியை பிடித்த வைகோ!

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’நாடெங்கும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் நடக்கின்றன. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுகிறது. மக்கள்கியூவில் நிற்கிறார்கள் என்றெல்லாம் பெரும் பரபரப்பை கிளப்புகிறார்கள். ஆனால் ம.தி.மு.க., சரியானது என வரவேற்கிறோம். அழுத்தமாக ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி பதவி ஏற்கும் போது நாங்கள் கூட்டணியில் இருந்தோம். அவர் ராஜபக்சேவை பதவி ஏற்புக்கு அழைத்த போது எந்த ஒரு தலைவரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத் பவனுக்கு சென்று போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.

பிடல் காஸ்ட்ரோ : வரலாறு என்னை விடுதலை செய்யும்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார். 

ரிலையன்சுக்கு 1767 கோடி மொய் எழுதிய மோடி அரசு ..வரி சலுகை ..

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.5245 கோடி செலவில் கட்டிய துறைமுக போக்குவரத்து முனையத்திற்கு வருமான வரித்துறை ரூ.1767 கோடி வரி விலக்கு அளித்துள்ளது ஏன் என்று மத்திய தணிக்கை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தின் சிக்கா பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் துறைமுகம் மற்றும் போக்குவரத்து முனையத்தை அமைத்தது. இதனைத் தொடர்ந்து 4 துணை துறைமுகங்கள் ரூ. 5,245.38 கோடி செலவில் அமைக்கப்பட்டன. இந்த துணை துறைமுகங்களை வருமான வரித்துறை முறையாக ஆய்விற்கு உட்படுத்தாமல் முழுமையாக வரி விலக்கு அளித்திருக்கிறது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ.1,766.74 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-2013 மற்றும் 2014-2015ம் ஆண்டு கணக்கு தணிக்கையிலிருந்து இந்த முறைகேடு தெரியவந்துள்ளது.

ரூபாய் நோட்டு மாற்றத்தை நிதிஷ்குமார் ஆதரிக்கிறார்! "அரசியல்"

பாட்னா : பழைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது துணிச்சலான நடவடிக்கை என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். துணிச்சலான முடிவு : பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்ததாவது: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கை. இருப்பினும் அதனை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளவு உண்டாகாது : பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கருப்புப் பண ஒழிப்பு தொடர்பாக சிறந்த தீர்வை எட்ட முடியும். மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதால், பிகாரில் உள்ள மகா கூட்டணியில் பிளவு ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.தினமலர்,காம்

மே.வங்கத்தில் பாஜகவினர் மீது மக்கள் தாக்குதல் .. முன்கூட்டியே இரகசியம் தெரிந்து ரூபாய் மாற்றம் செய்தனர்?


ரகசியம் காக்கப்பட வேண்டிய இந்த அறிவிப்பு எப்படி பிஜேபியின் முக்கியஸ்தர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் முன்கூட்டித் தெரிவிக்கப்பட்டது, அவர்களின் கறுப்புப்பணத்தை மீட்பதற்கும் அவகாசம் எப்படி அளிக்கப்பட்டது” என்றுதான் முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கோபம் கொள்கின்றன. அதுகுறித்து ஆராய Joint Parliamentary Committee அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கின்றன.
இதை அப்படியே உல்டாவாக மாற்றி, “ரகசியம் காத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதும், தங்கள் ஆட்களின் வசம் இருக்கும் கறுப்புப்பணத்தை மாற்றுவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை என்பதுமே எதிர்க்கட்சிகளின் கோபமாக இருக்கிறது” என மோடி புரட்டிப் பேசுகிறார்.
வெட்கங்கட்ட ஊடகங்கள் ‘பிரதமர் எதிர்க்கட்சிகளை திருப்பி அடிக்கிறார்’ என்றும் ‘எதிர்க்கட்சிகளை பிரதமர் தோலுரிக்கிறார்” என்றும் சிலாகிக்கின்றன.
படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான் ஐயோ என்று போவான்! முகநூல் பதிவு . முத்துகிருஷ்ணன்

நெல்லை விவசாயி தற்கொலை.. சீட்டு பணத்தை வங்கியில் ஏற்க மறுப்பு ? அதை குறி வைத்த போலீஸ் ...?

நெல்லை பேட்டை அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரிக்கும் விதமாக கம்மாளன்குளத்தை சேர்ந்த விவசாயிகளை காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர் அதில் ரமேஷ் (வயது 36) என்பவரும் ஒருவர்.
இந்நிலையில் சீட்டு கட்டியதில் இந்த மாதம் ரமேஷுக்கு சீட்டு கிடைத்துள்ளது. அதன் மூலம் அவர் கையில் கிடைத்த பணம் 1,10,000 ரூபாய். இந்தத் தொகையில் பெரும்பாலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் இருந்தததால், இதனை மாற்றினால்தான் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை கொடுக்க முடியும் என கடந்த சில நாட்களுக்கு முன் ரமேஷ் இந்த பணத்தை அருகே உள்ள ராமையன்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்த சென்றுள்ளார்.
வங்கியில் இந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர் அதற்கான விவரம் சொல்லியுள்ளார். அவர்கள் ஏற்கவில்லை.

கிரிமினல் பாபா ராம்தேவின் ஆஷ்ரமத்தில் யானை பலி! 150 ஏக்கர் யானைகள் வசிக்கும் நிலம் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது


செல்வம், செல்வாக்கு இரண்டும் நிறைந்த யோகா குருவாக இந்தியாவில் திகழ்கிறார் பாபா ராம்தேவ். அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவன தளத்தில் யானை ஒன்று குழியில் மாட்டிக்கொண்டு உயிரிழந்ததால், ராம்தேவின் நிறுவனத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேஸ்பூரின் பாலிபரா பகுதியில் இருக்கும் ஏ.ஐ.டி.சி. காம்ப்ளெக்ஸில் 150 ஏக்கர் நிலத்தை, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஹெர்பல் மற்றும் மெகா ஃபுட் பார்க் நிறுவனத்துக்காக அஸ்ஸாம் அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிறுவனத்தின் புராஜெக்ட் தளம் ஒன்றில் இருந்த குழியில் சிக்கிய பெண் யானை ஒன்று பல மணி நேரங்கள் துடித்து இறந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பிரமிளராணி பிரமா, ராம்தேவின் நிறுவனத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென வனத்துறை அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கிறார்.

பிருந்தா கரத்: மக்களின் சேமிப்பை வங்கிகளுக்கு கொண்டுவந்து பண முதலைகளுக்கு தாரைவார்ப்பதே மோடியின் திட்டம்

மோடி தலைமையிலான மத்திய அரசின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூலித் தொழிலாளர்கள், பாமர மக்கள் உள்பட 86 சதவீத மக்கள் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பண நடவடிக்கை மோடியின் தோல்வியை காட்டுகிறது. இது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. போதிய பணம் கையிருப்பு, திட்டமிடல் இல்லாததால் திடீரென பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி இருக்கிறது.

இசையமைப்பாளர் சந்திரபோசின் மனைவி வீட்டு வேலை செய்கிறார் .


பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களின் மனைவி இன்று சாதாரண வேலைக்காரியாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இசைஞானி இளையராஜா அவர்கள் பிஸியாக இருந்த காலகட்டத்தில், புதுவரவாக சினிமா இசைத் துறைக்குள் நுழைந்தவர் சந்திரபோஸ். எப்படி இளையராஜா அவர்களின் பெயரைத் தாங்கி பதாகைகள் வந்ததுபோல, சந்திரபோஸ் அவர்களின் பெயர் தாங்கியும் பதாகைகள் வெளிவந்தன. குறிப்பாக ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த மிகப்பெரிய திரைப்படங்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்தார். ரஜினிகாந்த் நடித்த மனிதன், ராஜா சின்ன ரோஜா, விஜயகாந்த் நடித்த மாநகர காவல், நல்லவன், சத்தியராஜ் நடித்த விடுதலை, மக்கள் என் பக்கம், அர்ஜுன் நடிப்பில் வெளியான சங்கர் குரு, தாய் மேல் ஆணை உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.

மதன் தரப்பு விடியோ சாட்சியத்தை போலீஸ் அழித்துவிட்டது? யாரையோ கப்பாத்தவாம்?

வேந்தர் மூவிஸ் மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வரும் நேரத்தில் அவருக்கு சாதமாக இருந்த வீடியோ ஆதாரத்தை போலீஸ் துறையில் உள்ள 'கறுப்பு ஆடு' அதை அழித்திருக்கிறார்கள். இந்தச் செயலில் ஈடுபட்ட காக்கியை கண்டறிய ரகசிய விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேந்தர் மூவிஸ் மதன், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாருக்கு முன்பே மதன், மாயமானார். 6 மாதங்களுக்குப் பிறகு மதனை, திருப்பூரில் போலீஸார் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் மதன், பரபரப்பான தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி : திமுக , அதிமுகவை குறை கூறும் தகுதி பாஜகவுக்கு கிடையாது!

 Kanimozhi Accusation on bjp சென்னை: அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு திமுக, அதிமுகவை குறைகூற தகுதியில்லை என மாநிலங்களவை திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவி வருகிறது. இந்த பிரச்சனையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே என தெரிவித்துள்ளார்.

அப்போலோவிற்குள் ரோபோடிக் இயந்திரம்... மருத்துவர்கள் வேலையை இனி இயந்திரம் பார்க்குமோ?

அப்போலோ
“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பிரதாப் ரெட்டி இப்படிக் கூறுவது முதல்முறை அல்ல. “முதல்வர் நலமுடன் உள்ளார், வீடு திரும்புவதைப் பற்றி அவர்தான் முடிவு செய்யவேண்டும்” என்று முதலில் பேசியவர், அடுத்த முறை “முதல்வரின் உடல் உறுப்புகள் சீராவதற்கு ஏழு வாரங்கள் ஆகும்” என்று சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் இன்று “பிசியோதெரபி சிகிச்சை” என்று மீண்டும் பிரதாப் ரெட்டி சொல்லியுள்ளார். முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடும் தகவல், கடந்த மாதமே வெளியானது. குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்த சிகிச்சை அளிக்க இரண்டு பெண் மருத்துவர்கள் அப்போலோவுக்கு வருகை தந்தனர். ஆனால், ஒரு மாதம் கடந்த பிறகும் ஏன் இப்போது பிசியோதெரபி சிகிச்சை பற்றி மீண்டும் பிரதாப் ரெட்டி பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் தனுஷுக்கு நீதிமன்ற ஆணை .. உரிமை கொண்டாடும் தம்பதிகள்: நேரில் ஆஜராக மேலூர் நீதிமன்றம் ...

ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் தனுஷ், ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ்-க்கு உரிமை கொண்டாடும் தம்பதிகள்: நேரில் ஆஜராக மேலூர் நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது அவர் சென்னைக்கு ஓடி விட்டதாக தெரிவித்து இருந்தனர். மேலும் அந்த மனுவில், “பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தோம், ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.

குரங்கை சித்திரவதை செய்து கொன்ற நான்கு மருத்துவ மாணவர்களும் கைது!

வேலுார்: குரங்கை கொடூரமாக கொன்ற, மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது. வேலுார், பாகாயத்தில், சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி உள்ளது. விடுதியில் தங்கி, படித்து வரும் நான்கு மாணவர்கள், 19ம் தேதி, ஒரு பெண் குரங்கை பிடித்து, சித்ரவதை செய்து கொன்று, குழி தோண்டி புதைத்தனர். பிராணிகள் வதை தடுப்பு சங்க தலைவர் சுவான் கிருஷ்ணன் புகாரை அடுத்து, நான்கு மாணவர்கள் மீதும் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவர்களை, கல்லுாரி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.'வன விலங்குகள் பட்டியலில் குரங்கு வருவதால், இந்த வழக்கை, வனத்துறையினர் தான் விசாரிக்க வேண்டும்' என, சமூகநல ஆர்வலர் வரதராஜன், கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, வேலுார் எஸ்.பி., பகலவன் மற்றும் பாகாயம் போலீசாருக்கு, மாவட்ட வனத்துறையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சம்பவம் நடந்துள்ளதால், வனத்துறை தான் நேரடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே, இந்த வழக்கை வனத்துறைக்கு மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளனர்.

9 ஏக்கரில் 50 கோடி செலவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ரா கட்டிய அரண்மனை.. வெளங்கிடும்?

தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ், குண்டு துளைக்காத அறைகளுடன் கூடிய வீட்டிற்கு இன்று காலை குடிபெயர்ந்துள்ளார். ஹைத்ராபாத் நகரில் பேகம்பேட் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். நக்சலைட்டுக்கள் அச்சுறுத்தல் இருப்பதால் குளியறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குண்டு துளைக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி உள்ள இந்த வீட்டில் 250 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் அமர்ந்து கலந்துரையாட பிரம்மாண்ட அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை சந்திரசேகரராவ் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
nakkeeran

வெள்ளி, 25 நவம்பர், 2016

எதிர்க்கட்சிகள் கூட்டம்: அதிமுக - திமுக பங்கேற்பு!


பிரதமர் மோடி, ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக இன்று (25/11/2016) காலை 10 மணிக்கு டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து அதிமுக-வும், திமுக-வும் பங்கேற்றன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை.. மாவோயிஸ்ட் என்கவுண்டராம்?

ajitha கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலாம்பூரில் நடந்த மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் இரு மாவோயிஸ்டுகள் கேரள போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் வழக்கறிஞர் அஜிதா என்கிற காவேரி (வயது 45),  குப்புசாமி என்கிற குப்பு தேவராஜ் (வயது 60) என தமிழக போலீஸ் டெக்கான் கிரானிக்கல் நாளிதழுக்கு அளித்த தகவலில் தெரிவித்திருக்கிறது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அஜிதா,  சென்னை கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் மாவோயிஸ்ட் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டு,  கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்ததாக டிசி ஏடு தெரிவிக்கிறது. அதோடு தமிழக போலீஸில் அவர் மீது எந்தவித குற்றப் புகாரும் இல்லை என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,  தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல கமிட்டியின் மூத்த செயல்பாட்டாளர். 90களில்  நடந்த மதுரை வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் டிசி ஏடு சொல்கிறது. கொள்ளை சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவர், பிறகு தலைமறைவானார் எனவும் செய்தி சொல்கிறது.

ஏன் அப்படி செய்தீர்கள்? எங்க அப்பா மிக மென்மையானவராயிற்றே, நல்லவராயிற்றே, எதுவானாலும் பேசி தீர்த்துக்கொண்டிருக்கலாமே, ஏன் அப்படி செய்தீர்கள்?

அந்த புதிய நபர்...சென்னை; வேலூர் சிறையில் ராஜிவ் காந்தி மகள் பிரியங்கா காந்தி தம்மை கண்ணீரும் கதறலுமாக சந்தித்த பரபரப்பான 85 நிமிடங்களில் நடந்தது என்ன என்பதை பற்றி ஆயுள் தண்டனை கைதி நளினி முருகன் தம்முடைய சுயசரிதை நூலில் விவரித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி சுயசரியதையை வெளியிட்டுள்ளார். ராஜிவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா சந்திப்பும் என்ற தலைப்பிலான இந்த நூலை மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் தொகுத்துள்ளார்.
சென்னையில் நேற்று இந்த நூலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், நளினியின் தாயார் பத்மா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இதில் பிரியங்க காந்தியை சந்தித்த நிமிடங்கள் குறித்து நளினி பதிவு செய்துள்ளதாவது:

BBC:சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா ..பிரதாப் ரெட்டி அறிவிப்பு !

17 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
 சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, "ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்" என்று கூறியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் காரணமாகவும் நீர்ச்சத்து குறைவின் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை முதலில் தெரிவித்தது. அதற்குப் பிறகு அவர் நுரையீரல் பிரச்சனைகளுக்காக சிகிச்சைபெற்றவருவதாகக் கூறப்பட்டது.

பணம் அடிக்க தாள் & மை இல்லையாம்.. இனிமேல ஆர்டர்..இறக்குமதி பண்ணி..வெளங்கிடும்

பிரதமர் மோடியின் எதிர் கால சிந்தனையற்ற செய்யகையால் 67 இந்திய மக்கள் வரிசையில் நின்று மடிந்த நிலையில் ... பல்வேறு இடங்களில் பண சிக்கல் உருவாகி மக்கள் வாடும் வேளையில் ... இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்று பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்த நிலையில் இப்போது தான் பேப்பர் மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் கவலை அளிப்பதாக உள்ளது ..

அழகிரி :தொகுதியையே வித்துட்டாங்க? அப்புறம்? தலைவருக்கிட்டே அப்பவே சொல்லிட்டேன்!

வேட்பாளரை மாத்துங்க. இல்லேன்னா ரொம்ப அசிங்கமா போகும்னு தலைவருக்கு தகவலை அப்பவே சொல்லியனுப்புனேன் ஆனால் தொகுதியை விற்று விட்டனர் என்று ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் அழகிரி.
By: Raj மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலத்த அடி வாங்கியது. திமுக வேட்பாளர் சரவணன் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இடைத்தேர்தல் முடிவுகளை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அழகிரியை சந்தித்தனர். திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி திருப்பரங்குன்றம். இப்படி பறிப்போயிட்டதே அண்ணே. நீங்க இருந்தா விட்டிருப்பீங்களா? தலைவர்ட்ட பேசுங்கண்ணே என்று புலம்பியுள்ளனர். அவர்களை சமாதனப்படுத்திய அழகிரி, வேட்பாளர் தேர்வு சரியில்லே. தொகுதியை விற்றுவிட்டனர் என்று கூறினாராம். வேட்பாளரை மாத்துங்க. இல்லேன்னா ரொம்ப அசிங்கமா போகும்னு தலைவருக்கு தகவலை அப்பவே சொல்லியனுப்புனேன். அவரும் அதை புரிஞ்சிக்கிட்டு சொல்லியிருக்காரு. கேட்க வேண்டியவங்க கேட்டாதானே? தொகுதியை விக்கிறதே அவங்க தானே. அப்புறம் எப்படி கேட்பாங்க என்று ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் பண்ணிப்பேசிய அழகிரி, வெயிட் பண்ணுங்க. ஏற்கனவே தலைவர் நம்பிக்கை கொடுத்த மாதிரி நல்லது நடக்கும் என ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.tamiloneindia.com

ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்?’ – தமிழர் வரலாற்றை திசைதிருப்பும் மர்மம்


பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலான ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை முடங்கிக் கிடப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஆய்வாளர்கள். ‘ பத்து ஆண்டுகளாக ஆய்வு அறிக்கை முடங்கிக் கிடப்பதில் பல மர்மங்கள் உள்ளன. தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது” என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் கண்டறியப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் வெளியானதில், தமிழ் உணர்வாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கீழடி ஆய்வுக்குரிய 2 ஏக்கர் நிலம் ஒதுக்காதது; ஆய்வுக் குழிகளை மூட முற்படுவது எனப் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூபாய் நோட்டு போராட்டம் பற்றி Paytm முதலாளி கருத்து…

1thetimestamil.com :ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் செல்லாதவை என்று ஒரு நாளின் இரவில் வெளியிடப்பட்ட அறிவிப்பால், பெரும்பான்மை இந்தியா தெருவில் நின்று கொண்டிருக்கிறது.
வங்கிகளில் இருப்பில் இருக்கும், தங்களுடைய, முறையான வரி கட்டிய சொந்தப்பணத்தை எடுக்கமுடியாமல், 70-கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பிரதமர், பாராளுமன்றத்திற்கு வராமல் தவிர்க்கிறார். அப்படியே வந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அதற்கு பதிலாக, அவருடைய NMapp-ல் கேள்வி  கேட்டு, ஆண்ட்ராய்ட் வைத்திருக்கும் மக்கள் மட்டுமே வாக்களிக்கும்படியான கருத்துக்கணிப்புகளைநடத்துகிறார்,.

Frontline நேர்காணல் ; திட்டமிடலின் தோல்வி - தாமஸ் பிரான்கோ

நேர்காணல்: வி.ஸ்ரீதர்
நன்றி: frontline
கறுப்புப் பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான மறுநாள் (நவம்பர் 9) இரவு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)வின் ஊழியர்கள் எட்டு பேர் ஒரு விபத்தில் பலியானார்கள். மறுநாள், வங்கிகளில் மக்கள் கூட்டத்தைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்டு, இரவு தாமதமாக கிளம்பிய வங்கியின் கிளை மேலாளர், மூன்று அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இதில் அடக்கம். அதேபோல, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வங்கி ஊழியர்களின் மரணம் தொடர்பாக செய்திகள் வந்தன. இது, இந்திய வங்கித்துறை சந்தித்துவரும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் காட்டுவதாக அமைந்தன. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வங்கி ஊழியர்கள்மீது எந்த மாதிரியான நெருக்கடிகள் சுமத்தப்படுகின்றன? அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிரான்கோ பதிலளித்துள்ளார்.

பாயும் திமுக, பதுங்கும் அதிமுக! ரூபாய் நடவடிக்கை..


தமிழக முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில், மத்திய அரசோடு மோதல் போக்கும் வந்துவிடாமல் அதே நேரம் எதிர்க்கட்சிகளோடும் இணைந்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது அதிமுக. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து அதிமுக எம்.பிக்களிடம் நலம் விசாரித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அதிமுக எம்.பிக்களும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தில் அடக்கியே வாசிக்கிறார்கள். இந்நிலையில் பழைய நிகழ்வுகளை நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பிலிருந்து ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

பாலியல் தொல்லை – பெண் காவலர் தற்கொலை முயற்சி !

உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர், நரியங்காடு குடியிருப்பில் இந்துமதி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாலமுருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்த நிலையில் இந்துமதி தனியாக வசித்து வந்தார். இவர், நேற்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால், மயங்கிய நிலையில் அவருடைய வீட்டில் கிடந்த இந்துமதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு இந்துமதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

500, 1000 நோட்டுகள் ஒழிப்பை ஆதரிப்பதா..? நடிகர் மோகன் லாலுக்கு கடும் எதிர்ப்பு!


Political parties condemned Mohan Lal's pro demonetisationதிருவனந்தபுரம்: 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த நடிகர் மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை மலையாள நடிகர் மோகன்லால் வரவேற்புத் தெரிவித்தார். தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மதுபான கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கியூவில்தானே நிற்கிறார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மோகன்லால் கருத்துக்கு கேரள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான பன்யன் ரவீந்திரன் திருவனந்தபுரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "1000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை மோகன்லால் ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

மதுரை கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் டேராடூன் (கடத்தல் ) கொண்டு செல்லப்படுகிறது


மதுரை: மதுரையை அடுத்த கீழடியில் கிடைந்த தொல்லியல் பொருட்களை, ஆய்வுக்காக உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையிலிருந்து 17 கி.மீ., தூரத்திலுள்ள கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம் 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கீழடியில் 5,300 பழங்கால பொருட்களை தொல்லியல்துறையினர் சேகரித்துள்ளனர். கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை, பெங்களூருவிலுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெங்களூருவிற்கு கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மோடி குறிவைத்தது பதுக்கல்காரர்களை அல்ல!' - மருத்துவர்களின் அதிரடி புள்ளிவிபரம்

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ' கிராமங்களை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, இப்படியொரு செயலில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி' என வீடியோ காட்சி ஒன்றில் புள்ளிவிபரங்களோடு விவரிக்கின்றனர் சூழலியல் அமைப்பின் மருத்துவர்கள்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை போதிய அளவில் வராததால், நாடு முழுவதும் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி அட்டைகளின் மூலமே நடப்பதால், பணப்புழக்கம் இல்லாமல் சிறு வணிகர்கள் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நிலநடுக்கம் 7.0 ரிச்டர் அளவில் .. நிகரகுவா ஹோண்டுராஸ் ,சான் சல்வடோர் நாடுகளில்...

(CNN) A 7.0-magnitude earthquake struck off the coast of Central America on Thursday ...
சான் சல்வேடார்: மத்திய அமெரிக்க நாடுகளான நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சல்வடோர் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க நாடுகளான நிகரகுவா, ஹோண்டுராஸ் எல் சல்வேடார் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகியிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல் சல்வேடாரிலிருந்து 120 கி.மீ., தொலைவில், 33 கி.மீ., ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.tamiloneindia.com

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் ..... ஒரு அபாய எச்சரிக்கை....

Image may contain: 1 personவங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....
நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?
உஷார்...
உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....
அடுத்து....
உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....
எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல
மிகவும் பணிவான குரலில் பேசுவான்....

வியாழன், 24 நவம்பர், 2016

மோடியைப் போன்ற மோசடிப் பேர்வழியை நாடு இதுவரை பார்த்ததில்லை!

பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டால் நெல்சன் மண்டேலா என்றாலும் நம் ஆட்களுக்கு பிடிக்காமல் போய்விடும்.
Recessionஐ திறம்பட சமாளித்தும் கூட அப்படியான சலிப்புதான் மன்மோகன் சிங்கின் மேல் மக்களுக்கு இருந்தது. பற்றாக்குறைக்கு அன்னா ஹஜாரே என்ற சீசனல் ஒலிபெருக்கியும், 2ஜி போன்ற ஊதி பெரிதாக்கப்பட்ட விஷயங்களும் (மோடி ஆட்சியில் நடந்த 4ஜி பிரம்மாண்ட ஏல இழப்பும், ஆதித்யா பிர்லா ஊழலும் ஊடகங்களில் அடக்கி வாசிக்கப்படுவதை கவனிக்க) சேர்ந்து கொண்டு மோடி எனும் வெற்றுப் பையை சரக்குள்ள கனமான பையாக காட்டியது.
கெட்டிக்காரன் புழுகு எட்டுநாள் என்பது போல இன்று மோடி தன் முழு அறிவையும் நம் முன் காட்டி அவமானப்பட்டு நிற்கும் சமயம், நமக்கு மன்மோகனின் அருமை புரிகிறது.  பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பான்

கறுப்புப் பணம் பொருளாதாரத்தை காப்பாற்றியது ?- உலக வங்கி ஆலோசகரின் லாஜிக்!

கறுப்புப் பணம்ழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதும், கூடவே புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட்டதும் என கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டு  ஒரே இரவில்  இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை நரேந்திரமோடி அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் எதுவும் அரசின் தற்போதைய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்திடம் விவாதிக்கப்படாமலே முடிவெடுக்கப்பட்டது இங்கே கவனிக்கவேண்டியது. ஆனால், 2015-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் எடுக்கப்பட்ட கணக்கின் படி பொருளாதாரம் 7.4% அதிகரித்து  ஏறுமுகத்தில்தான் இருந்திருக்கிறது என்கிறார் உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு. இவர், இந்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும் கூட.

காலக்கெடு நீட்டிப்பு.. பழைய ரூபாய் நோட்டு டிசெம்பர் 15 வரை மாற்றமுடியும்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதி வரை அரசு அலுவலகங்கள், பெட்டோல் பங்குகளில் பழைய செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு தேதியை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. குடிநீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாரம் ஒன்றுக்கு 5 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் 3ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 500, 1000 நோட்டுகளை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்.இன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்போலோவில்... என்னதான் நடக்கிறது?


minnambalam.com: அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் டெலிவரி ஆனது. “அப்பல்லோவில் இருக்கிறேன். சில எக்ஸ்குளூசிவ் தகவல்கள் இருக்கின்றன. சற்றுநேரத்தில் வருகிறேன்!” என்பதுதான் அந்த மெசேஜ். காத்திருந்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்து விழுந்தது அந்த மெசேஜ்.
‘‘ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டாலும் இன்னும் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் ஜெயலலிதா உறுதியாக டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் . அப்போது, யாரையும் பார்க்க அனுமதிக்கப் போவதும் இல்லை. இதெல்லாம் இருக்கட்டும்... கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே நேரத்தில் அதிமுக-வினர் கோயில்களில் வழிபாடு நடத்தினார்கள். பால்குடங்கள் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார்கள். எல்லோரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அன்று பால்குடம் எடுக்கவும், விசேஷ பூஜைகள் நடத்தவும் அதிமுக தலைமையில் இருந்து உத்தரவுபோயிருக்கிறது.   இரத்த பந்தம் இருப்பவர்களின் உடல் உறுப்புக்கள் இலகுவாக பொருந்தி விடும் வாய்ப்பு அதிகம் . 

Dr.Manmohan Sing:வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் இடி முழக்கம்


ராஜ்யசபாவில் இன்று செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் நிர்வாக கோளாறுகளை கடுமையாக சாடினார். அவருடைய பேச்சின் தமிழாக்கத்தை கீழே அளித்திருக்கிறோம்.
“ரூபாய்நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அணுகுமுறையை கடுமையாக எதிர்க்கிறோம். இதை நடைமுறைபடுத்துவதில் வரலாறு காணாத  நிர்வாக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாத சூழலில், மக்கள் கடும் அவஸ்தையில் இருப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு 50 நாட்களுக்கு இன்னல் தொடரும் என்று அரசே கூறியுள்ளது.  50 நாள் தடை என்பது ஏழை, பின் தங்கிய மக்களுக்கு மிகப்பெரும் பேரழிவையே ஏற்படுத்தும்.
எந்த நாட்டிலாவது,  50 நாட்களாக பணம் எடுக்க மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

நடிகர் மோகன்லால் 3000 கோடியை துபாயில் பதுக்கி உள்ளார் ? மோடியின் ரூபாய் விவகாரம் முன்பே தெரியும் ?

டிரைவர் Mohanlal is aware of center’s decision before Nov 8 and hence he invested his black-money of 3300 crores in Kuwait-based pertroleum mining business. These reports are doing rounds in social networking sites after a Kuwait-based newspaper reporting the story.
திருவனந்தபுரம்: மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிநாட்டில் ரூ.3 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்ததாக சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு தனது பிளாக்கில்(Blog) ஆதரவு தெரிவித்திருந்தார் மலையாள நடிகர் மோகன்லால்.
மோகன்லாலின் பிளாக்கை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்ததுடன், கிண்டல் செய்யத் துவங்கினர்."உங்களிடம் டிரைவராக இருந்த ஆண்டனி பெரும்பாவூர் ஒருவர் கோடிக் கணக்கில் பணம் போட்டு படம் தயாரிக்கிறார். அப்படி என்றால் உங்கள் ஆட்களிடம் தான்..."

மன்மோகன் சிங் :பண ஒழிப்பில் நடந்த கொள்ளை ! பேரழிவு !


இன்று 6-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் அமளி ஏற்பட்டது.நாடாளுமன்றத்தின் மேல்சபையிலும், ரூபாய் நோட்டு விவகாரம் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நிராகரித்தார். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியால் மேல்சபை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இயக்குனர் சுபாஷ் காலமானார் .. இவர் பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணன் ( பஞ்சு ) மகனாவார்!

SUBASH2 திரைப்பட இயக்குநர் சுபாஷ் (57) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார்.
சிறுநீரக கோளாறு மற்றும் இதயக் கோளாறு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த சுபாஷ் புதன்கிழமை காலை மரணமடைந்தார்.
பராசக்தி, ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இரட்டையரான கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரில் கிருஷ்ணனின் மகன் சுபாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சத்ரியன், பவித்ரா, சுயம்வரம், 123, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 26 படங்களை இயக்கியுள்ளார்.

செல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து இன்று திமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக மனிதச்சங்கிலிசென்னை: பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, ரூபாய் நோட்டு பிரச்னையால் பொதுமக்கள் நாள்தோறும் பலவித துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இன்றுடன் வங்கிகளை பணத்தை மாற்றுவதற்கான காலக்கெடு முடிகிறது. இனி வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு சாரார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக எதிர்கட்சியான திமுக-வும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது."

L&T நிறுவனம் 14,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது...

எல் அண்ட் டி தலைமை நிதி அதிகாரி சங்கர் ராமன் மற்றும் துணைத் தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யன். | படம்: பிடிஐ.எல் அண்ட் டி நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 14,000 ஊழியர்களை தங்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து வேலையிலிருந்து நீக்கியுள்ளது. சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளவும், தளர்ந்து போன தங்களது சில நிறுவனங்களை நிலை நிறுத்தவும் இந்த யுக்திசார் முடிவை எடுத்துள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.சங்கர் ராமன் கூறும்போது, “வர்த்தகம் சரியில்லாத போது அதனை மீண்டும் நிலைநிறுத்த இம்மாதிரியான யுக்திசார் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. வர்த்தகத்தை சந்தைச் சூழலுக்கேற்ப இயல்பு நிலைக்குத் திருப்ப வேண்டியுள்ளது, எனவே சில பணிகளில் கூடுதலாக ஆட்கள் பணியாற்றுவதாக நாங்கள் அறிந்தோம். இதனையடுத்து ஆட்குறைப்பு செய்தோம்.

பச்சமுத்து கூட்டாளி மதன் கதை ! தோழிகள், ஊரெல்லாம் சொத்துக்கள், உல்லாசம் ...

சென்னை: 6 மாத தலைமறைவுக்குப் பின்னர் திருப்பூரில் தோழியின் வீட்டின் படுக்கை அறை பரணில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன், போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அறித்துள்ளார். பணத்தை செலவு செய்தது எப்படி? தலைமறைவு வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது பற்றி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் மூலம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்த மதன் திடீரென மாயமானார். சினிமா உலக வாழ்க்கை, அரசியல் என 44 வயதில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த மதன் திடீரென காசியில் ஜலசமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் 84.24 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தகைய அவதூறு எழுத்துகளுக்கு பின்னணியில் இருக்கும் மனநிலையை விவரித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரை மீது சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே:
எழுத்தாளர், விமர்சகர் ராஜன் குறை கிருஷ்ணன்: 
வெறுப்பிற்கும், கோபத்திற்கும், கண்டனத்திற்கும் வேறுபாடு புரியாமல் யார் யாரை காரணங்களுடன் கண்டித்தாலும் “வெறுக்கிறீர்கள்” என்று கூறுவிடுகிறார்கள். நான் கடவுள் படத்தில் ஜெயமோகன் மிகவும் அழுத்தமாக தனது nazi கருத்தை கூறியுள்ளார் : நான் கொடுக்கும் மரணம் சிலருக்கு தண்டனை சிலருக்கு விடுதலை . நடிகை பூஜாவின் பாத்திரத்தை ஆர்யா கழுத்தில் கடித்து அவளுக்கு கொடுத்த விடுதலைன்னு பறஞ்சவந்தான் இந்த ஜெயமோகன் என்கின்றவன் இவனுக்கு கூட்டாளி மனநோய் பாலா ..

ஐயப்பன் கோயில் இனி ஸ்ரீ அய்யப்ப சுவாமியாம்! சமஸ்கிருத பெயர் மாற்றம்: கேரள அரசு கண்டனம்!

கேரளாவில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் இனி சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் திருவாங்கூர் தேவசம் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
திருவாங்கூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ், பல்வேறு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் மட்டுமே ஐயப்பன் இன்றளவும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அதனால், ‘சபரிமலை தர்ம சாஸ்தா’ என்னும் பெயரை, மாற்றி ‘சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்’ என்று புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோயில் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக பம்பையில் இருந்து சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்ற நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றத்துக்காக கேரள அரசு, தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.