சனி, 22 நவம்பர், 2014

இசையமைப்பாளர்களில் ஒரு நிறைகுடம் திரை இசை திலகம் கே.வி.மகாதேவன்!

இசைக் கலைஞர்கள் ஓய்வு பெறுவதில்லை.  அவர்களுக்குள் இசையே இல்லாத நிலை தோன்றும் போது அவர்கள் நிறுத்திவிடுகிறார்கள்.  - லூயி ஆர்ம்ஸ்ட்ராங்.
நினைப்பது நடந்துவிட்டால் அது அதிர்ஷ்டம்.
ஆனால் நினைத்ததற்கும் மேலே கிடைத்துவிட்டால்... அதைத்தான் பேரதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களோ?
கே.வி. மகாதேவன் விஷயத்திலும் அதுதான் நடந்தது.
கந்தன் கருணை படப் பாடல்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படும் என்று எதிர்பார்த்தார்.
அது நடக்கவும் செய்தது.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக 1967-ஆம் ஆண்டுக்கான "சிறந்த இசையமைப்பாளருக்கான" தேசிய விருதும் அவருக்கு கந்தன் கருணை படத்துக்கு அமைத்த இசைக்காகக் கிடைத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதுவரை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதுகளில் சிறந்த இசைக்கான விருது வழங்கப்படவே இல்லை. முதல் முதலாக 1967-ஆம் வருடம் தான் இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து முதல்முதலாக சிறந்த இசைக்கான தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் என்ற கௌரவம் கே.வி.மகாதேவனுக்குத்தான் கிடைத்தது.அதுவும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தற்காக. "இது நான் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்" என்று தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார் கே.வி.மகாதேவன்.

பீகார் CM ஜித்தன் ராம் மாஞ்சி : கோவில் பெயரால் சுரண்டல்! கோவில்பூஜைகள் பார்பன ஜாதிக்கு மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்?.

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார்.  பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது,  சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.
ஜாதியின் பெயரால் பிளவு
இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.   உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர்.   கோவில் பெயரால் சுரண்டல்!
ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர்.  கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

கதையல்ல, வாழ்க்கை! சட்டம் வென்றது. கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

பிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா…” அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல். கேட்கும் யாருமே மயங்கிவிடுவார்கள். சுசிலா மட்டும் விதிவிலக்கா என்ன? “வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

CM பன்னீர்செல்வம்: சட்டப்பேரவையை கூட்டச் சொல்ல கருணாநிதிக்கு அருகதையில்லை? சபாஷ் ? நீதான்யா இனி அதிமுக!

சென்னை: சட்டப் பேரவைக்கே வராத கருணாநிதி, சட்டப்பேரவையை கூட்டச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டப்பேரவை பற்றியோ, சட்டப்பேரவைக் கூட்டங்கள் பற்றியோ அல்லது சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசுவதற்கு ஒரு சிறிதளவேனும் அருகதை உள்ளவரே அதைப்பற்றி பேசலாம். சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை கூட்டப்படுவது பற்றி பேசுவது, "அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்" என்னும் சொலவடையைத்தான் நினைவுபடுத்துகிறது. MGR ஆரம்பித்த அதிமுகவின் அடிப்படை கொள்கையே எப்படி  எப்படி எல்லாம் கலைஞரை  தாக்கலாம் அவமான படுத்தலாம் என்றே இருந்து வந்திருக்கிறது. அதிமுக தொண்டனுக்கு அதுதான் ஆக்சிஜன்  அதுதான் கனவு அதுதான் போதை!   பன்னீரு சரியாத்தான் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. கில்லாடி ஜெயாவை மண் கவ்வ வைச்ச உங்க சாயா புத்திக்கு ஒரு சபாஷ் . இப்படியே கலைஞரை சதா திட்டிகிட்டே இருந்தா  நிச்சயமாக  அதிமுக ஒட்டு வங்கியை உங்க பர்சுக்குள் அடைச்சுடுவீங்க .கலைஞரை இப்படி தாறுமாறாக பன்னீரு காய்ச்சியது தனது  முதலவர் நாற்காலியை  நிரந்தரமாக்கும் முயற்சிதான். அதற்கு ஒரே  டெக்னிக் கலைஞர் மீது கல்லு எறிதல்தான் .வேறு எந்த விபரமும் அதிமுக தொண்டர்களுக்கு புரியாது.

தமிழக பாஜகவில் உள்ள அதிமுக உளவாளி யார்? ம்ம் ஒண்ணா ரெண்டா மூணா......

கட்சியில் இருந்தபடி, அ.தி.மு.க.,வுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்த தலைவர்கள் குறித்து கண்டறியப்பட்டு, மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருப்பதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், 'கிலி'யில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 2016ல் ஆட்சி அமைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து, தமிழக பா.ஜ., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'தனித்தே போட்டியிடும் அளவுக்கு, கட்சியை தயார்படுத்துங்கள்' என்றும் சொல்லப்பட்டுஇருக்கிறது. இதை தொடர்ந்து தான், தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் தவறுகளை, தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அடுத்தடுத்த கட்டங்களில், தமிழக அரசுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுஇருக்கின்றனர். இந்நிலையில், இலங்கையில் சிக்கிய, ஐந்து தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதில், மோடியின் முயற்சியை, தமிழக மக்கள் மத்தியில், தீவிரமாக கொண்டு செல்ல முயல்கிறது, தமிழக பா.ஜ.,வேறு என்ன காசு பணம் துட்டு மணிமணி

சாமியார் ராம்பால் ஆஸ்ரமத்தில் கைக்குண்டுகள் துப்பாக்கிகள் அசிட் போத்தல்கள் சொகுசு மெத்தைகள் .....

அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார்.
ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார். இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. 2006–ம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். கைதான சாமியார் ராம்பால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நம்மள போல உள்ள  ஆசாமிகளை இன்னுமா உலகம் நம்புது? என்ன பண்றது இன்னும் நெறைய பேரு நம்புறாய்ங்க 

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ கமலின் நினைவுப் பகிர்வு... "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.  நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது.

மேயர் சைதை துரைசாமி ராஜினாமா? கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை?

 முன்பு மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது சைதை துரைசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர்கள் மீது சைதை துரைசாமி குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மேயர் சைதை துரைசாமி கீழ்ராஜ மங்கலத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு கட்டி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த புகார் எழுந்த சில தினங்களுக்குள் மேயர் சைதை துரைசாமி அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

துடைப்பம் சீன காட்டுற கோஷ்டியில் சமந்தாவும் சேந்துட்டாய்ங்க

துடைப்பத்தை எடுத்து அரைமணிநேரம் தெருவோரத்தை சுத்தம் செய்து, தூய்மை இந்தியா திட்டத்தை நாங்களும் செயல்படுத்திட்டேமில்ல... என்று நடிகர், நடிகைகள் சீன் காட்டி வருகிறார்கள். தமன்னாவைத் தொடர்ந்து சமந்தாவும் இந்த சீனில் அங்கத்தினராகியிருக்கிறார். ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளிக்கருகில் துடைப்பத்துடன் தனது தூய்மைப் பணியை சில மணி நேரம் செய்தவர் அந்த புகழ்பெற்ற டயலாக்கை தானும் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னதாக, இந்த மாதிரி துடைப்பம் ஏந்தி சீன் போட மாட்டேன் என்று ஷாருக்கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி பொறுப்பு சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே. தத்தாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் தத்தாவிடம் மட்டுமே இனி தங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிப்பர். 2ஜி அலைக்கற்றை தொடர்புடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்படி, அந்தப் பொறுப்பில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகினார். இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை விசாரணை நடவடிக்கைகளை அவருக்கு அடுத்த நிலையில் மேற்பார்வையிட்டு வந்த ஆர்.கே. தத்தா, இனி இந்த வழக்கை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.

பிரியங்காவின் கணவர் வதேராவின் சொத்து குவிப்பு மோசடிகள் ஹரியான அரசு கடும் நடவடிக்கை!

வதேராவுக்கு கடும் நெருக்கடி:- இழுத்து மூடிய நிறுவனங்கள், சொத்து விவரத்தை தோண்டுகிறது ஹரியானா அரசு!! 
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் விவரங்களை ஹரியானா அரசு திரட்டி வருகிறது. இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் என்று கூறப்படுகிறது. சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பல மாநிலங்களில் ஏழைகள் மற்றும் அரசு நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கிக் குவித்து 'நிலக் கொள்ளை'யில் ஈடுபட்டார்.எவ்வளவு சீக்கிரம் இந்த ஆளு தண்டிக்கப்படுவாரோ அந்த அளவு பிரியங்காவுக்கு நல்லது ,

பா.ம.க கூட்டணி: 8 கட்சிகளுக்கு அழைப்பு! ரஜினி வாய்ஸ் கொடுக்க கோரிக்கை!!

சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அணியில் இணைய 8 கட்சிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பாமகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமக தலைமையிலான மாற்று அணியின் முழக்கமாக பூரண மதுவிலக்கு இருக்கும். இதையே தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல உள்ளோம். 2016-இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்.

தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்! உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு -


உத்தரபிரதேசத்தின் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான அசம்கான், ‘தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு முஸ்லிம்களின் சமாதி இடம் பெற்றுள்ள தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த விரும்புகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களின் சமாதியும், நினைவிடங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் மத்திய வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மோசமான இடங்களாக இருந்தால் அது வக்பு வாரியத்திடம் இருக்கும். மிகவும் விலை மதிப்பு உடையது எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமாகுமா?தாஜ்மகாலில் இருந்து வரும் வருமானத்தை முஸ்லிம் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு இரண்டு பல்கலை கழகங்களை வக்பு வாரியத்தால் நடத்தி விட முடியும் என்றார்.

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்! மௌனமான ஒரு கண்ணீர் காவியம்.

பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று தெரிய வந்தது. இருவருக்கும் 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார். யசோதாபென், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். 62 வயதான அவர், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இந்த  அம்மையாருக்கு  சார்பாக பேச இந்தியாவில் எவரும் முன்வர மாட்டார்கள் .இவரது கண்ணீரை நான்கு சுவர்களுக்குள் மறைக்க சகல சக்திகளையும் மத்திய அரசு ...

ரஜினி Punch:அரசியலும் சினிமாவும் துட்டு , இது தெரியாத குஞ்சுகளின் வாயில மண்ணு!


வெள்ளி, 21 நவம்பர், 2014

குற்றம் கடிதல் அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மை! இயக்குனர் பிரம்மா!

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’. “கோவா மட்டுமல்ல, இதற்கு முன் மும்பை, ஜிம்பாப்வே திரைப்பட விழாக்களுக்கும் தேர்வாகித் திரையிட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்புற திட்டம் இருக்கு.” என்று சந்தோஷத்துடன் ஆரம்பித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பிரம்மா...
‘குற்றம் கடிதல்’ படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க?
முதல்ல இது செய்தி சொல்ற படம் கிடையாது. ஒரு சம்பவத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட த்ரில்லர் கதை. ஆனால், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் சமூக அடுக்குகளில் மேலும் கீழுமாக வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன மாதிரியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதுதான் படம். நிறைய விஷயங்களைச் சாடியிருக்கிறோம். நிறைய கேள்வி கேட்டிருக்கிறோம். படம்கூட கேள்வியோடுதான் முடியும்.
என்னதான் கதையம்சம் இருந்தாலும், சிறு முதலீட்டுப் படங்கள் மக்களுடைய கவனத்தைப் பெறாமலேயே போய்விடுகின்றனவே?
கவனிக்கப்படுவதற்கும், கவனிக்கப்படாததுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று விளம்பரங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. பெரிய நடிகர்கள் இல்லை என்றால், விளம்பரத்திற்கு மட்டுமே பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. அந்த அளவுக்குப் பண்ணாவிட்டால், மக்களுக்குத் தெரியமலே போய்விடுகிறது.

கேரளாவில் மாந்த்ரீகம் பில்லி, சூனியத்தை தடை செய்ய சட்டம் வருகிறது

திருவனந்தபுரம்: செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றை செய்வதாக கூறும் மந்திரவாதிகளை தடுக்க வழி செய்யும் சட்டத்தை கேரள மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மாந்த்ரீகம் என்றாலே கேரளாதான் என்ற நிலை உள்ளது. மலையாளத்து மந்திரவாதி என்றால் கம்ப்யூட்டர் காலத்திலும் பலருக்கு கால்கள் நடுங்கும். அரசியல் புள்ளிகள் பலருக்கும் ஆஸ்தான மந்திரவாதி, ஜோதிடர் யாராவது மலையாள பூமியில் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட மலையாள மண்ணில் மந்திரவாதிகளுக்கு தடை விதிக்க புறப்பட்டுள்ளது உம்மன் சாண்டி அரசு. முதலில் மது, இப்போ மாந்த்ரீகம்! பில்லி, சூனியத்தை தடை செய்ய சட்டம் கொண்டுவருகிறது கேரளா "மாந்த்ரீகம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக 2 கொலைகள் நடந்துள்ளன. எனவே மாநில உள்துறை அமைச்சகம், மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தை இயற்ற திட்டமிட்டுள்ளது" என்று கேரள உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தாதாக்களின் கொலை முயற்சியில் இருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பினார்

மும்பை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட், கொலை முயற்சியிலிருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பியுள்ளார். கடந்த 15-ந் தேதியன்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு நான்கு மணி நேரம் காவல்துறையினர் தாமதமாக சென்றிருந்தால் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் அவரை துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ததால் அவர்களது முயற்சி தவிடுபொடியானது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று முறை அவர்களின் தாக்குதல் இலக்கிலிருந்து மகேஷ் பட் தப்பிய அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு முறை மகேஷ் பட் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவர் காரில் ஏறி சென்றுள்ளதாக அவர்களின் குழுவில் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு தெரிவித்தான். இதையடுத்து இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் பட்டின் காரை பின்தொடர்ந்தனர். ஆனால் முதலாம் நபர் தெரிவித்தபடி அந்த காரில் பட் இல்லாததால் தாக்குதல் முயற்சியை கைவிட்டனர். அதே போல் அக்டோபர் மாதமும் மீண்டும் பட்டை கொல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த முயற்சியும் தொல்வியில் முடிந்தது.

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை பயங்கர தாக்குதல் MLM தொழிலதிபரை கைது செய்யக்கோரி ஆசிரியர்கள் சாலை மறியல்

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4–வது குறுக்கு தெருவில் லயோலா தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரொனால்டு என்ற மாணவர் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை அருளானந்தம் ‘ரிச் இந்தியா’ என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் மாணவர் ரொனால்டு பள்ளி மைதானத்தில் வைத்து விசில் அடித்தார். உடனே உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மாணவர் ரொனால்டுவை எச்சரித்து அடித்தார்.
இதுபற்றி மாணவர் ரொனால்டு தனது செல்போன் மூலம் தந்தை அருளானந்தத்துக்கு மெசேஜ் அனுப்பினார். உடனே அவர் தனது கம்பெனியில் வேலை செய்யும் 50 பேரை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

ரவி கே சந்திரன் கதை திருட்டில் வசமாக மாட்டிகிட்டார்! Midnight Express ஐ அப்பட்டமாக காப்பி அடித்து இயக்கி, தயாரிப்பாளர் வேதனை.....


ரவி கே சந்திரன் - எல்ரெட் குமார்
ரவி கே சந்திரன் - எல்ரெட் குமார்
ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடித்த 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். எல்ரெட் குமார் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.
மக்களிடம், விமர்சகர்களிடமும் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாக சுமார் ரூ.20 கோடி நஷ்டமடைந்து, தயாரிப்பாளின் கையைச் சுட்டது. சில நாட்களாக, ஹாலிவுட் படமான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'யான்' என்று இணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரவி.கே.சந்திரன் இது குறித்து பதில் கூற மறுக்கிறார் என்றும், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

Mayor சைதை துரைசாமியின் 10 ஏக்கர் பண்ணை பங்களா படங்கள்!

சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் மேயர் துரைசாமி தி.மு.கழக மாநகராட்சி நிர்வாகங்களின் போது நிதி இழப்பு ஏற்பட்டது, நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தணிக்கைத் துறை சொன்னதாக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதையே அவர் சொல்லி வருவதும், உடனடியாக தி.மு.கழக மன்ற உறுப்பினர்களும், நாங்களும் பதில் சொல்லுவதுமாகவே இருந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ முறை மேற்க்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவர்கள் யார்? யார்? என்பதை நேரடியாக விவாதிக்கத் தயாரா எனக் கேட்டிருந்தோம். அதற்கு இதுவரை பதிலளிக்க அல்லது நேரம் ஒதுக்கி விவாதிக்க தயாராக இல்லாத சைதை துரைசாமி மீண்டும் நேற்று (20.11.2014) நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின் அவர்களை வம்புக்கு இழுத்து மன்றக் கூட்டத்தில் விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்! சினிமாகாரர் மறந்து போன சிருஷ்டிகர்த்தாக்கள்.

pandian_cropped_tookuவே.மதிமாறன்
இயக்குநர் ருத்ரையா வை 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நண்பர் தீஸ்மாஸ், (Theesmas Desilva) இயக்குநர் அருண்மொழி,(Arunmozhi Sivaprakasam) நான் மந்தைவெளியில இருந்த அவர் வீட்டில் சந்ததித்தோம். நாங்கள் நடத்திய ‘இசைஞானி இளையராஜா ரசிகன்’ இதழின் சிறப்புப் பேட்டிக்காக.
இளையராஜாவுடனான அவர் அனுபங்களைச் சுவரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதும் அவர் அடுத்தப் படத்திற்கான முயற்சியில் இருந்தார்.
அவருடன் பழகியவர்கள், இப்போது அவரைப் பற்றி நெகிழ்ச்சியாக எழுதுவதைப் படிக்கும்போது மனது கலக்கமுறுகிறது.
இதுபோன்ற எழுத்துக்களை அவர் இருக்கும்போது எழுதியிருந்தால்.. அவர் இறந்திருக்க மாட்டார்.
அவரின் சிறப்புகளை நெருக்கமாகச் சொல்லுகிற இந்த எழுத்துக்கள், தனியாக இருந்த அவருக்குத் துணையாக இருந்திருக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற தோழமையான கட்டுரைகள் மூலம் அவர் கொண்டாடப்பட்டிருந்தால்.. அவர் மிகச் சிறந்த 10 சினிமாக்களைத் தந்திருப்பார்.
எம்.எஸ்.எஸ். பாண்டியன் மரணத்தின்போதும் இப்படித்தான் சிறப்புக் கட்டுரைகள் அவரைக் கொண்டாடின.
திறமைசாலிகளைக் கொண்டாடுவதற்கு அவர்கள், ‘தங்கள் உயிரை விட்டிருக்கவேண்டும்’ என்ற நிபந்தனை நம்மிடம் இருக்கிறது.

காமராஜரையே தெரியாத பெருச்சாளி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் பிரமுகரானது ஒரு ரொம்ப கேவலம்,


சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியபோது, ‘‘காமராஜர் பெயரை சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது. காமராஜரை இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. காமராஜர் ஆட்சி அமைப்போம் எனச்சொல்லி தமிழகத்தில் ஒரு போதும் நம்மால் ஆட்சி அமைக்க முடியாது’’ என்றார். காமராஜர் பற்றி கார்த்தி சிதம்பரம் பேசியதற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:– தமிழகத்தில் காமராஜரை தவிர்த்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தாங்கள் காமராஜர் ஆட்சியை நடத்தி வருவதாக பேசியுள்ளனர். விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் முதல் காங்கிரசில் இருந்து நேற்று பிரிந்தவர்கள் வரை அனைவரும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கின்றனர்.

Obama: அமெரிக்க சட்டதிருத்தம் 4 மில்லியன் அகதிகளுக்கு கிரீன் கார்டு 5 லட்சம் இந்தியர்களும் இதில் அடங்குவர்


வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மெஜாரிட்டி ஆன நிலையில், அதிபர் ஒபாமா அதிரடியாக குடியுரிமைச் சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் சட்டத்தை மீறி எல்லை தாண்டி அமெரிககாவுக்குள் வந்த, சுமார் 4 மில்லியன் அகதிகள் பலனைடைவார்கள் என கூறப்படுறது. இவர்கள் அனைவரும் லத்தீன் இன மக்கள் ஆவார்கள்.  மேலும் இந்தியர்கள் உட்பட சட்ட்பூர்வமாக வேலை நிமித்தம் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கும் சில சலுகைகள் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 5 லட்சம் இந்தியர்களுக்கு, க்ரீன் கார்டுகளுக்கான சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றம் குடியுரிமை சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதால், தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு இந்த ஆணைகளைப் பிறப்பித்தாக தொலைக்காட்சி மூலம் தெரிவித்தார். அதிபர் ஒபாமாவுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என சட்டத்துறை தெரிவித்துள்ளதாக குடியரசுக் கட்சியினர் குரல் எழுப்பியுள்ளனர். ஒபாமாவின் இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தை முடக்க நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஒபாமா எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இடைத்தேர்தல் முடிவுற்று பதினைந்து நாட்களில் மீண்டும் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
tamil.oneindia.com

மோடியின் நண்பர் அதானிக்கு ஸ்டேட் பாங்க் ரூ.6,200 கோடி கடன்!!

Govt.Bank SBI-scrutiny for loan of 6200cr to Adani not yet done Look at Breakfast Table-SBI Chief with MODI+ADANI

ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பிரதமருக்கு அடுத்த இருக்கையில் அதானி அமர்ந்திருந்தார். அவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பாரத ஸ்டேட் வங்கித் தலைவரும் சென்றுள்ளார்.
டெல்லி: ஆஸ்திரேலியாவின் கார்மிகேல் நிலக்கரிச் சுரங்க திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் அதானியின் நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அதேபோல் மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பிரதமருக்கு அடுத்த இருக்கையில் அதானி அமர்ந்திருந்தார்.

முல்லை பெரியாறு: தமிழக, கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு சுமுக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி அழைத்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து அவர் கூறும்போது, "முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது பற்றிய விவகாரத்தை விவாதிக்க, தமிழகம் மற்றும் கேரள பிரதிநிதிகளை வரும் சனிக்கிழமையன்று புது டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். மத்திய நீராதார ஆணையத்தையும் விவாதத்தில் சேர்க்க முடிவெடுத்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையே, கேரள மாநிலத்தின் முதன்மை அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “வைகை அணையில் அதன் கொள்ளளவை ஒப்பிடும் போது 37% நீர்மட்டம்தான் இருக்கிறது. ஆகவே, தற்போது 141.8 அடி நீர்மட்டம் உள்ள முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகைக்கு தண்ணீரை தமிழக அரசு திருப்பிவிட்டால் அது நல்ல முடிவாக இருக்கும்” என்றார்.கூடவே மடியில வைகோவையும் கட்டிகிட்டு போங்க 

இனி இந்தியாவில் சிந்திப்போம் திட்டம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்!

When and how did Smriti Irani acquire this degree? Didn't someone just tell us the HRD Minister had only studied till Class XII? The controversy started when people began doubting her education qualifications and said she would be an incompetent as an HRD Minister. Striking back, Smriti stated that she has a degree from Yale University, not mentioning that it's just a 6-day crash course degree from Yale, that she underwent during the elections in India.
மாணவர்கள் பலனடையும் அளவில் 'இந்தியாவில் சிந்திப்போம்' என்ற திட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
நொய்தாவில் இன்று (வியாழக்கிழமை) இந்திய தொழில் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இது குறித்து கூறுகையில்,
"பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளார். இதனை முன் உதாரணமாக கொண்டு மனிதவள மேம்பாட்டுத்துறையால் 'இந்தியாவில் சிந்திப்போம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவரு இன்னா சொல்றாரு ? இப்பவெல்லாம் நாம செவ்வாய் கிரகத்திலேவா சிந்திக்கிறோம்? உண்மைய சொன்னா நாம் சிந்திக்கிறதே இல்ல .அப்பிடி சிந்திச்சா நீங்க எல்லாம் வகுப்பெடுக்க வந்திருப்பிகலா?  வெறும் கப்சா  வாணம் விட்டே ஆச்சியை புடுசுட்டீங்க வெளையாடுங்க? 

உயர்நீதிமன்றத்தில் சகாயம்:மதுரை மாவட்டம் மட்டுமா..அனைத்து மாவட்டங்களுமா? கனிமவள முறைகேடு .....

கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விசா ரணை நடத்த வேண்டுமா? என்று தெளிவுபடுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாக பல கனிமவள குவாரிகள் செயல் படுகின்றன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிமவள குவாரிகளில் மட்டும் ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் நடப்ப தாகக் கூறப்படும் கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சென்னை:.3,627 கோடியில் மோனோ ரயில்! மத்திய அரசு ஒப்புதல்

சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ரூ.3,627 கோடியில் பூந்தமல்லி கத்திபாரா இடையே, போரூரில் இருந்து வடபழனி வரையிலான இணைப்புடன் மொத்தம் 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் சேவை செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னை மாநகரின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் போக்குவரத்து தேவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

வியாழன், 20 நவம்பர், 2014

ராதாரவி சரத்குமார் மச்சிகளின் நடிகர்சங்க மாபியாவுக்கு விஷால் ஆப்பு வைப்பாரா ?

சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், விஷாலுக்குமான கருத்து மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. நேற்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரத்குமார், நடிகர் சங்கத்துக்கு எதிரான தனது அவதூறு பேச்சை விஷால் தொடர்ந்தால் அவரை சங்கத்தைவிட்டு நீக்க நேரிடும் என்றார். இதற்கு அறிக்கை மூலம் விஷால் பதிலடி கொடுத்துள்ளார். சரத்குமாரின் பேச்சு என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு நடிகராக, நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நான் மதிக்கிறேன். என்னை நீக்குவதாக நடிகர் சங்கம் முடிவெடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நடிகர் சங்க விதி 13-ன் படி நடிகர் சங்க உறுப்பினர் எவராவது, நடிகர் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப்பேசினால் அவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இம்மாதிரி பேசியதற்காக தான் நடிகர் குமரிமுத்து சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே போல் என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் இம்மாதிரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். சில தினங்கள் முன்பு ராதாரவி விஷால், நாசர் உள்ளிட்டவர்களை நாய் என்று பொது இடத்தில் திட்டியிருந்தார். அந்த நாய்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனை நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் சரத்குமாரின் கவனத்துக்கு எடுத்து சென்று, ராதாரவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வைத்தனர். அதுதான் சரத்குமாரை விஷாலுக்கு எதிராக பேச வைத்தது.& தன்னை தரக்குறைவாக பேசிய ராதாரவியை நீக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் விஷால் குறிப்பிட்டுள்ளார். போருக்கான முரசறைந்துவிட்டார்கள். வரும் நாள்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

நீதித்துறையின் Darling ஜெயா ! எக்ஸ்பிரஸ் ஜாமீன் ! பார்பனீயம் + பணம் !

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பெற்ற ஜெயா-சசி கும்பலுக்குக் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் பிணை அளித்திருப்பதைப் போன்ற சித்திரத்தை போன்ற சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்களை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்; மேல்முறையீட்டு வழக்கைத் தாமதம் செயக்கூடாது; நீதிமன்றங்களை விமர்சிக்கக்கூடாது” என உச்சநீதி மன்ற அமர்வு விசாரணையின்போக்கில் குறிப்பிட்டவற்றையெல்லாம் – நீதிமன்றத் தீர்ப்பில் இவை குறித்து ஒருவார்த்தைகூட கிடையாது – கடும் நிபந்தனைகளாகச் சித்தரிப்பதன் வாயிலாக ஊடகங்கள் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு ஒரு ஒளிவட்டம் போடுகின்றன. பார்ப்பன ஜெயாவிற்கு கட்டப் பஞ்சாயத்து முறையில் சிறப்பு சலுகைகளோடு பிணை வழங்கிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.வெளித்தோற்றத்திற்கு நிபந்தனைகளைப் போலத் தெரியும் இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக ஜெயாவிற்கு காட்டப்பட்டுள்ள சலுகைகள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே மிகவும் சலுகை பெற்ற கிரிமினல் குற்றவாளிகள் ஜெயா-சசி கும்பல்தான் என்பதை உச்சநீதி மன்றம் அக்கும்பலுக்கு அளித்திருக்கும் பிணை உத்தரவு மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப் பெற்று, சிறைக்கு அனுப்பப்பட்ட லாலுவிற்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் உச்சநீதி மன்றம் பிணை வழங்கியது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப் பெற்ற சௌதாலாவிற்கும் இரண்டு மாதங்கள் கழித்துதான், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிணை வழங்கியது, டெல்லி உயர்நீதி மன்றம். 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழிக்கும், ஆ.ராசாவிற்கும் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் சிறைக்குச் சென்ற 21 நாட்களிலிலேயே ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையும் வழங்கி தண்டனையையும் நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அசாதாரணமானதுதான்.

2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சிபிஐ இயக்குநர் சின்ஹா நீக்கம்

2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து  சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2ஜி வழக்கு விசாரணையில் அவர் தலையிடக்கூடாது என்றும், சின்ஹா இடத்தில் வேறு ஒரு அதிகாரி இருந்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள நீதிபதிகள், சிபிஐ-யின் நற்பெயர் மற்றும் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கில்  இது தொடர்பாக மேலும் விரிவான உத்தரவுகளை பிறப்றப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் சின்காவுக்கு எதிராக பூஷண் தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
" எங்களை பொறுத்தவரை எல்லாமே சரியாக இல்லை. சிபிஐ இயக்குநர் சின்ஹாவுக்கு எதிராக தொண்டு நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டில் 'சில நம்பகத்தன்மை'  உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்" என நீதிபதிகள் கூறினர்.

பாதிரியார் டேவிட் இன்பராஜூக்கு 10 சிறை! மைனர் பெண்ணை கடத்தினார் .

சென்னை,நவ.20 (டி.என்.எஸ்) மேற்கு தாம்பரம் அலமேலுபுரத்தை சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ் (வயது 35). இவர் அந்த பகுதியில் தேவாலயம் நடத்தி வருகிறார். அந்த தேவாலயத்திற்கு தாம்பரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருடன் ஜெபம் செய்ய செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது அவரது 17 வயது மகளுடன் பாதிரியார் டேவிட் இன்பராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த 16-4-2013 அன்று பாதிரியார் டேவிட் இன்பராஜ் சப்-இன்ஸ்பெக்டர் மகளை நாகலாந்து மற்றும் மேற்கு வங்காளத்திற்கு கடத்தி சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மகளை காணவில்லை என்று சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 17-4-2013 அன்று தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் 2 பேரும் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கடந்த 17-4-2013 அன்று டேவிட் இன்பராஜை கைது செய்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இன்பமா இருக்கிறதுல பாதிரியாரும் சாமியாரும் ஒன்னுதாய்ன்

12 ஏக்கரில் ஆசிரமம் BMW, மெர்சிடிஸ் BENZ கார்களுடன் சாமியார் ராம்பாலின் சொர்க்க ராஜ்ஜியம்,

In 2000, Rampal Dass, a junior engineer in the Haryana irrigation department was sacked. He now heads a dera or cult worth Rs. 100 crores and goes by the name of Sarguru Rampal Ji Maharaj.
The 63-year-old owns a fleet of luxury cars, including BMWs and Mercedes and lives in an ashram in Barwala, Haryana, spread over a sprawling 12 acres. ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பால் 12 ஏக்கர் ஆசிரமத்தில் வசித்து வந்தார். அவரிடம் பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. கடந்த 200ம் ஆண்டு ஹரியானா அரசின் நீர்பாசன துரையில் ஜூனியர் என்ஜினியராக இருந்த ராம்பால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஆன்மீக பாதையில் சென்று சர்குரு ராம்பால் ஜி மகராஜ் ஆனார். அவர் தலைமை வகிக்கும் பிரிவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடி ஆகும்63 வயதாகும் ராம்பலின் ஆசிரம் ஹரியானா மாநிலம் பர்வாலாவில் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. அவருக்கு சொந்தமாக பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் 30 அடி உயரமானது.

Aisha Chaudhary வாழ்கையின் ஓரத்தில் நிற்கும் சிறுமியின் அற்புத கருத்துக்கள் .


வாழ்வின் விளிம்பில் நிற்கும் இந்த சிறுமியின் பேச்சை தயவு செய்து கேளுங்கள் .நிச்சயமாக உங்கள் வாழ்வுக்கு இவரது கருத்துகள் மெருகூட்டும் .எமது வாழ்வின் அழகை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறார் .
www.glomatv.blogspot.com

ஜெயா வழக்கில் ஆச்சாரியா மீது அழுத்தம் கொடுத்த பா.ஜ.,வினர் மீது உளவுத்துறை ரகசிய விசாரணை

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து செயல்பட்ட பி.வி.ஆச்சாரியா, சமீபத்தில் சுயசரிதை எழுதி வெளியிட்டார். அதில், தன்னை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகச் சொல்லி, கர்நாடக பா.ஜ., அரசு அழுத்தம் கொடுத்தது என்றும், ஜெயலலிதா தரப்பில், தன்னை பலமுறை, நேரிலும், போனிலும் அச்சுறுத்தினர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.இந்த விவகாரம், கர்நாடக பா.ஜ.,வில், தற்போது கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா வரையில் கொண்டு செல்லப்பட, இதுகுறித்து, தீவிரமாக விசாரிக்குமாறு, மத்திய உளவுத் துறைக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக ஆச்சாரியா, சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து பணியாற்றிய காலங்களில், அவரை வந்து சந்தித்தவர்கள், அவருக்கு போன் செய்தவர்கள் எண்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதில், கர்நாடக பா.ஜ.,வினர் மட்டுமல்லாமல், தமிழக பா.ஜ.,வினர் சிலருடைய தொலைபேசி எண்களும் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

குஜராத் கலவரங்களுக்கு மோடி பொறுப்பல்ல: நானாவதி கமிஷன்

ஆமதாபாத்: குஜராத் மத கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஜி.டி.நானாவதி அளித்துள்ள அறிக்கையில், 'மத கலவரங்களுக்கும், மோடி அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில், 2002ம் ஆண்டில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல நாட்கள் பயங்கர கலவரம் நடைபெற்றது. அங்குள்ள கோத்ரா ரயில் நிலையத்தில், கரசேவகர்கள் ரயில் பெட்டியில், உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் மூண்டது.அது குறித்து விசாரிக்க, நீதிபதி, ஜி.டி.நானாவதி தலைமையில், இரு நீதிபதிகள் கமிட்டியை மாநில அரசு, 2002ல் அமைத்தது. 12 ஆண்டுகளாக விசாரணை நடத்திய அந்த கமிட்டி, நேற்று முன்தினம் இறுதி அறிக்கையை, முதல்வர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது.ரொம்ப ரொம்ப எதிர்பார்த்ததுதான்! இனி நானாவதி கவர்னர் ஆவாரா அல்லது வேறு எந்த ...

இந்தியாவில் 60 கோடிப் பேர் திறந்தவெளியில் மலம் மலம் கழிக்கிறார்கள் ! சாந்தா ஷீலா நாயர்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது தொடர்பான இந்திய கழிப்பறை மாநாட்டில் பேசுகிறார் மாநில நிதிக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர். உடன், குடிநீர் விநியோகம்- சுகாதாரக் கவுன்சில் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் மிஸ்ரா." சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது தொடர்பான இந்திய கழிப்பறை மாநாட்டில் பேசுகிறார் மாநில நிதிக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர். உடன், குடிநீர் விநியோகம்- சுகாதாரக் கவுன்சில் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் மிஸ்ரா. இந்தியாவில் 60 கோடிப் பேர் இன்னமும் திறந்த வெளியில் மலம் கழிப்பது அவமானகரமானது என்று மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் கூறினார்.

அன்பழகன் : சீரமைப்பு குழு அறிக்கையை நிறைவேற்றினால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்!

சீரமைப்பு குழு கொடுத்த அறிக்கையை, உடனடியாக நிறைவேற்றினால் தான், கட்சியை காப்பாற்ற முடியும்; அதனால், அதை விரைந்து செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் கூறியதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. சீரமைப்பு குழு:லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்ததும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிவதற்காக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, ஆறு பேர் அடங்கிய, சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, அறிக்கை கோரப்பட்டது.அந்தக் குழு, பல்வேறு நிலைகளிலும் கருத்துக்களை திரட்டி, தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தலைமைக்கு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல, கட்சியின் மாவட்ட நிர்வாகங்களை பிரிப்பது என, முடிவெடுக்கப்பட்டது. 35 மாவட்டங்களாக இருந்த, தி.மு.க., அமைப்பு நிர்வாகம், 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதைத் தவிர, பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கட்சி செயல்பாடுகள் மீது, கடும் அதிருப்தி அடைந்திருக்கும் பொதுச் செயலர் அன்பழகன், கருணாநிதியை சந்தித்து தன் குமுறலை வெளிப்படுத்தியிருப்பதாக, தகவல் பரவி, அறிவாலய வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. எந்தவித கொள்கைபிடிப்பும் இல்லாத வெறும் கட்சி மாறிகளும் வியாபாரிகளும்   சுயமரியாதை பகுத்தறிவு என்ற வார்த்தைகளே தெரியாத  பலர் தற்போது குறுநில மன்னர்கள் ஆகிவிட்டனர்.

Haryana சாமியார் ராம்பால் மகராஜ் கைது! போர் களம்போல காட்சி அளிக்கிறது ஆஸ்ரமம்

ஹரியானாவின் பர்வாலாவில்
சாமியார் ராம்பாலை கைது செய்தது காவல்துறை.  ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்றிய பின்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது காவல்துறை.அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).கடந்த 2006-ம் ஆண்டு, ஜூலை 12-ந் தேதி இவரது ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சாமியார் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ரோட்டாக் செசன்சு கோர்ட்டில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

புதன், 19 நவம்பர், 2014

ஒரே ஒரு தமிழ்படத்திற்காக என்றும் பேசப்படும் ஒரே இயக்குனர் ருத்ரையா!

மிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
இப்படியான வினோதங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு படத்துக்காக ஓர் இயக்குனர் காலம் முழுவதும் போற்றப்பட்டார், கொண்டாடப்பட்டார் என்றால், அந்தப் பெருமை ருத்ரய்யாவை மட்டுமே சேரும். அந்தப் பெருமைக்குரிய ருத்ரய்யா நேற்று மறைந்துவிட்டார்.

சுயநலம், பண வெறி, காமவெறி பிடித்த சாமியார்கள்! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டு வருக!


பெங்களூரு நவ.18_ சுயநல வெறி, பண வெறி, காமவெறிகளாலும், மூடத்தனத்தாலும் இந்து மத சாமியார்களே இந்து மதத்திற்குக் கேடு செய்து வருகின்றனர். எனவே விரைவாக மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்து சமய சாமி யார்களே அரசுக்குக் கோரிக்கை வைத்து அதனை வலியுறுத்தி பட்டினிப் போராட்டமும்  இருந்தனர்.
கர்நாடகத்தில் மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி 300-க்கும் மேற் பட்ட இந்து மத சாமி யார்கள் பெங்களூருவில் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருநாடகத்தில் மூடநம் பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த போவதாக அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவை யில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ராம சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கருநாடக அரசு கிடப்பில் போட்டது.

அவர் அப்படித்தான்... ருத்ரய்யாவைப் பற்றி அவரது நண்பர் சுரா!

மறைந்த ருத்ரய்யாவுடன் மிக நெருக்கமாக இருந்த சினிமாக்காரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பத்திரிகைத் தொடர்பாளர் சுரா, ருத்ரய்யா படம் பண்ணாத இந்த 34 ஆண்டுகளில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் ருத்ரய்யா மீண்டும் படம் பண்ண முயற்சித்த போது அதுகுறித்து என்னிடம் சொல்லி சில தயாரிப்பார்களிடம் பேசச் சொன்னார். அப்போது மோசர் பேயரில் இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் விஷயத்தைச் சொல்லிப் பேசச் சொன்னேன். ஆனால் அதன் பிறகு அந்த முயற்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் அப்படித்தான்... ருத்ரய்யாவைப் பற்றி அவரது நண்பர் சுரா! இப்போது ருத்ரய்யா இல்லை. இந்த 34 ஆண்டுகளில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.. ஏன் சினிமாவே எடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கு நண்பர் சுராவின் இந்த கட்டுரை ஓரளவு பதில் தரக்கூடும். சுரா ஒரு பத்திரிகைத் தொடர்பாளர். எழுத்தாளர். நூறுக்கும் அதிகமான கதைகளை மொழிபெயர்த்திருப்பவர். இதோ அவரது கட்டுரை: ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மூவரும் நடித்திருந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விட்டிருந்தது. அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் 'அவள் அப்படித்தான்' படத்தைப் பற்றி பரவலாக சிறப்பாக எழுதியிருந்தார்கள்.

நதி நீர் இணைப்பும்...ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா? ரஜினிக்கு கோவணாண்டி சீறல் கடிதம் !

 2007 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த 'சிவாஜி' படம் வெளியான சூழலில், எழுதப்பட்ட கோவணாண்டி கட்டுரை இங்கே இடம் பிடிக்கிறது..
சிவாஜி'யாக அவதாரமெடுத்திருக்கும் முன்னாள் சிவாஜி ராவ்... இந்நாள் 'ரஜினி அங்கிள்' அவர்களுக்கு கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க.
ஒவ்வொரு படத்துலயும் ஒலிக்கற உங்க கொள்கைப் பாட்டுக்கு முன்னால எவனும் நிக்கமுடியாது. அதுலயும் இந்த 'சிவாஜி' படத்துல ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?'னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ‘அதுக்கே டிக்கெட் காசு 50 ரூபாயும் சரியாப்போச்சுடா'னு நிச்சயமா தமிழ்நாடே பேசும்!
அப்புறம், ‘காவிரி ஆறு'னு நீங்க சொன்னதுமே... அந்த 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி என்னோட நினைப்புக்கு வந்து தேவையில்லாம இம்சை பண்ணுதுங்க. என்னதான் யோசிச்சாலும் அதுமட்டும் மறந்து போகமாட்டேங் குதுங்க. ஆனா, உங்களுக்கு மறந்துபோயிருக்கும்... கொஞ்ச காலத்துக்கு முன்ன 'கங்கையையும் காவிரியையும் இணைக்க முதல் கல்லை நான் தூக்க தயார்'னு சொன்னீங்களே ரஜினி, அதைச் சொல்றேன்.
உங்களை ஒதுக்கின 'உங்க' கூட்டம், 'காவிரியை மீட்காம ஓயமாட்டோம்'னு நெய்வேலியில பக்காவா 'படம்' காட்டினாங்க. பொங்கி எழுந்த நீங்களோ, 'நதிகளை இணைக்காமல் ஓயமாட்டேன்' என்று பதிலுக்கு சென்னையில 'பலம்' காட்டினீங்க. 'நதிகளை இணைக்க என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன்'னு உலகப் பார்வையையெல்லாம் உங்க மேல விழும்படி பரபரப்புக் கிளப்பினீங்க. அதுக்குப் பிறகு, அந்த விஷயத்தை நட்டாத்துல விட்டுட்டு... 'காவிரி மறந்து போகுமா... கருவாடு பறந்து போகுமா'னு குத்தாட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்க.

அமைச்சர்கள் விபரங்களை காரடனுக்கு பாஸ்பண்றாய்ங்க! தடுமாறும் CM ஆபீஸ்!

பெரும்பான்மையான அமைச்சர்கள், தங்களது வெளியூர் நிகழ்ச்சிகள் குறித்து, முதல்வருக்கோ அல்லது முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை என்பதால், அமைச்சர்களின் கோட்டை வருகை பற்றிய குழப்பம், அதிகாரி கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.முதல்வராக ஜெயலலிதா இருந்த வரையில், அமைச்சர்களின் நிகழ்ச்சிகள், பயணங்கள் பற்றிய அனைத்து விவரங்களும், அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடும். அவரது அனுமதிக்கு பிறகே, அமைச்சர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்வதை கூட, வழக்கமாக வைத்திருந்தனர்.கோட்டைக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால், அவர் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே, அமைச்சர்கள் கோட்டையில் ஆஜராகி விடுவர். அவர் வந்ததும், வரவேற்பதில் துவங்கி, அவர் வீட்டுக்கு புறப்பட்டு செல்லும் வரையில், கோட்டையை விட்டு அமைச்சர்கள், நகர மாட்டார்கள்.சில நாட்களில், ஆய்வுக் கூட்டங்கள், அதிகாரிகள் சந்திப்பு என, ஜெயலலிதா பிசியாக இருந்தபோது, மாலை வரையில் அமைச்சர்கள் கோட்டையிலேயே இருந்ததும் உண்டு.  பினாமியை யாரும் மனுஷனா கூட மதிக்கலை போல இருக்கே... அப்புறம் எப்படி நிர்வாகம் நடக்கும்..கமிஷன் கணக்கு புத்தகம் கார்டனில் மம்மி கையில் தான் இருக்கு.... .

அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்; மாவட்ட அமைப்புக்களை மாற்றி அமைத்தார் ஜெயலலிதா

திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட அமைப்புகள் நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்படுகின்றன. இதுவரை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர் கிழக்கு, வேலூர் புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, இனி வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு என்று செயல்படும். வேலூர் கிழக்கு - வேலூர் மேற்கு வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என்.ஜி.பார்த்திபனும், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணியும் செயல்படுவார்கள். வேலூர் கிழக்கு மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், வேலூர் மேற்கு மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் முதல் இபோலா நோயாளி டெல்லியில் - தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை


லைபீரியாவில் டெல்லி வந்த இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரக் கணக்கானோரின் உயிரை எபோலோ வைரஸ் குடித்துள்ளது. இந்நிலையில் லைபீரியா சென்ற 26 வயது இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  பரிசோதனையில் அவரது ரத்தத்தில் எபோலா இல்லாவிட்டாலும் விந்தணுவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

மேகேதாட்டு அணை திட்டத்தை நிறுத்தும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

மேகேதாட்டு அணை திட்டத்தை நிறுத்தும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் இரண்டு நீர்மின் திட்டங்களை நிறைவேற்ற அம்மாநில அரசு முயற்சி எடுத்து வருவது குறித்து செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிட்டது. இத்தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி நீரை நான்கு மாநிலங்களும் பங்கிட்டுக் கொள்வது குறித்த வழிமுறைகள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.

சேலம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி,தருமபுரி 12 குழந்தைகள் இறப்பை தொடர்ந்து....

தர்மபுரி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் 5 நாட்களுக்குள் 12 சிசுக்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஒரு வாரத்தில் 8 குழந்தைகள் இறந்திருப்பது அம்பலமாகியுள்ளது. சுகாதாரத்துறையின் மெத்தன போக்குகளால் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் மீண்டும் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவள் அப்படித்தான் - எதிர்காலம் கண்டெடுக்க வேண்டிய அற்புத வைரம் Rudraiah Chockalingam!

பிராந்திய மொழிப் படங்களில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக என்று வெவ்வேறு தளங்களில் தனது பங்களிப்பை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகர் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் 'ஆனந்து'-வுக்காக என்ற எழுத்துக்களுடன் படம் ஆரம்பிக்கிறது. 'முழு வானில் ஒரு பாதை' - என்று பெண்களின் பிரச்சனைகளை ஆவணப் படம் எடுக்க நினைக்கும் அருண் (கமல்), அவனுக்கு உதவ நினைக்கும் தியாகு (ரஜினி), தியாகுவின் அலுவலக ஊழியர் மஞ்சு (ஸ்ரீபிரியா) ஆகியோரைக் கொண்டு கதை நகர்ந்தாலும், மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடுதான் சினிமாவின் மையக்கரு. (Dating, outing, live-in relationship, Car key change culture எல்லாம் இன்று சாதாரணமாக இருக்கக் கூடிய காலம்.

அவள் அப்படிதான் ! இயக்குனர் ருத்ரையா காலமானார்!

சென்னை; தமிழ் திரைப்பட இயக்குநர் ருத்ரையா உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தவர் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980 ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் ஈர்த்தவர். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் ருத்ரையா. ரஜினிக்கும் கமலுக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் மிக பெரும் அடித்தளத்தை அமைத்து கொடுத்த ருத்ரையாவுக்கு இவர்கள் உரிய மரியாதையை கொடுக்காதது வேதனை.

இளங்கோவன்:சத்துணவு முட்டை பேரத்தில் 3,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது!

சென்னை: ''சத்துணவிற்காக, முட்டையை அதிக விலை கொடுத்து வாங்குவதால், சிலருக்கு கமிஷன் கிடைக்கிறது. இதனால், பல கோடி ரூபாய், அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக அரசு நிர்வாகத்தை, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து உள்ளார், தமிழக காங்., தலைவர் இளங்கோவன்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் நேற்று அளித்த பேட்டி: காவிரியில் கர்நாடக அரசு, அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போரட்டத்திற்கு, தமிழக காங்கிரசும் முழு ஆதரவு அளிக்கிறது. காங்கிரசை விட்டு பிரிந்து சென்றவர்கள், வன்முறைகளில் ஈடுபடுவது சரியல்ல.

செவ்வாய், 18 நவம்பர், 2014

இசட் பிரிவு பாதுகாப்பு ஒரு சாமியாருக்கு ஏன்? ஒரு சமய தீவிர வாதிகளின் ஆட்சி?

சாமியார்களிடம் பணம் அரசியல் செல்வாக்கு  நண்பிகள் என்று ஆத்மீகம் தவிர மற்ற எல்லாம் தாராளம் .எனவே  இந்த  ஆசாமிகளிடையே  நிச்சயமாக மாபியாபாணி சண்டை இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது.இந்த  இசட் பிரிவு பாதுகாப்பு இதைதான் உறுதி படுத்துகிறது. 
டெல்லி: யோகா குரு ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் இணைந்தும் தனியாகவும் பல போராட்டங்களை நடத்தியவர் பாபா ராம்தேவ். பாஜகவுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வந்தார். இந்நிலையில், நேற்று முதல் பாபா ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த பாதுகாப்பின்கீழ், ராம்தேவுக்கு, ஆயுதம் தாங்கிய 22 பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் காவல் இருக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பு வாகனம் ஒன்றும் ராம்தேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்தால் டெல்லி போலீசாரும், வெளியூர்கள் சென்றால் அந்தந்த மாநில போலீசாரும் இந்த பாதுகாப்பு கவசத்தில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். இசெட் பிளஸ் என்பதுதான் உச்சகட்ட பாதுகாப்பு வளையம் கொண்டதாகும். பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோருக்கு இந்த வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா MLA சம்பளம் 95 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்வு ! இதுக்குதானே ஆசைபட்டாய் சந்திரசேகரா?

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடன் தொல்லையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, அம்மாநில எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்த்தப்படுவதுடன், அவர்களுக்கு புதிதாக கார் வாங்கவும் முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதம் தோறும் ரூ.95 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது உயர்ந்து வரும் விலைவாசியால், இந்த சம்பளம் போதாது எனவும், அவர்களின் சம்பளம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. அம்மாநில சட்டசபையில் 119 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 40 எம்.எல்.சி.,க்கள் உள்ளனர். இவர்களில் 36 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுக்கான சம்பளம் வேறு.விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் தெலுங்கானாவுக்கு நிவாரணம் வேண்டும் அது வேண்டும் இதுவேண்டும் என்று பஸ்செல்லாம் கொழுத்தி காட்டு கத்தல் கத்தியது இதுக்குதாய்ன்.

கலைஞர் டிவி அமலாக்க பிரிவு வழக்கை விசாரிக்க தடை கோரிய மனு- உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கை விசாரிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம் இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி கொடுத்தது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்குப் பதிவு செய்த உடனேயே இந்தப் பணத்தை கடனாக பெற்றதாக கூறி உடனே ஸ்வானுக்கு கலைஞர் டிவி திருப்பிக் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்தப் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நிகழ்ந்திருப்பதாகக் கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 10 பேர் மீதும் 9 நிறுவன நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராம்பால் ஆஸ்ரம சண்டை விடியோ ! சாமியாரை கைது செய்யவிடாமல் வன்முறை!


tகொலை வழக்கில் சிக்கிய சாமியாரை கைது செய்யவிடாமல் வன்முறை! போலீசார் மீது துப்பாக்கி சூடு! >அரியானா மாநிலத்தில் சாமியார் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டம் நிலவுகிறது.அரியானாவில் உள்ள கிசார் நகரில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் ராம்பால் மீது கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அவர், உடல்நிலையை காரணம் காட்டி விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம் சாமியாருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை 3வது முறையாக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்ததோடு, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 

Gun fight in Rampal Asram போலீஸ் மீது துப்பாக்கி வெடிகுண்டு தாக்குதல் ! 3 ஆயிரம் பேரை மனித கேடயமாக வைத்திருந்த சாமியார் ராம்பால்


பர்வாலா: ஹரியானாவில் சர்ச்சை சாமியார் ராம்பாலை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்ய அதிரடியாக ஆசிரமத்தின் நுழைவாயிலை தகர்த்து உள்ளே நுழைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது ஹரியானா போலீஸ். ராம்பாலை பிடிக்கும் வரை தேடுதல் நடவடிக்கை தொடரும் என்று அம்மாநில டிஜிபி அறிவித்துள்ளார். சாமியார் ராம்பால் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தத சுமார் 3 ஆயிரம் அப்பாவி பெண்கள், பச்சிளங்குழந்தைகளையும் போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். முன்னதாக போலீசார் மீது ராம்பாலின் சீடர்கள் என்ற போர்வையில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசியதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் மீது 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு முதல் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். தீவிர மதவெறி கொண்டவர்கள் எந்த மதமானாலும் பயங்கர வாதிகள்தான்

அகத்தியனின் மகள் நடித்த வெண்ணிலா வீடு பாரதிராஜாவின் பாராட்டு,

செந்தில்-விஜயலட்சுமி நடிப்பில், வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘வெண்ணிலா வீடு’. நடுத்தர குடும்பத்தை மையமாக வைத்து வெளியான இப்படம், மக்களிடையும், ஊடகங்கள் இடையும் பெரும் பாரட்டைப் பெற்றது.
இதற்கிடையில், இப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெற்றி மகாலிங்கத்தை அழைத்து பாராட்டியதுடன், தனது கைப்பட பாராட்டு கடிதம் ஒன்றையும் எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் பாராதிராஜா கூறியதாவது:
இன்று திரைப்படங்கள் வெட்டு, குத்து, வன்முறை என வேறு ஒரு தளத்துக்கு சென்றுவிட்டது. இது பார்வையாளர்களின் குறைபாடு அல்ல, படைப்பாளிகளின் குறைபாடு. காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது, கதை வறட்சியாக இருப்பதை பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது.
ஆனால், ‘வெண்ணிலா வீடு’ வெள்ளித்திரையில் சொல்ல மறந்த வெண்பனி வீடு.டைரக்டர் அகத்தியனின் மகள்தான் இதில் நடிக்கும் விஜயலட்சுமி,

மோடி அலை என்ற வெங்காயம் !

மகாராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்தவந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியும், அரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்துவந்த காங்கிரசு ஆட்சியும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளதைக் காட்டி மீண்டும் மோடி அலை சுழன்றடிப்பதாகப் பார்ப்பன ஊடகங்கள் குதூகலிக்கின்றன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அதேசமயம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை பா.ஜ.க. அமைத்துள்ளது. இதைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலின் போது வீசிய மோடி அலையானது இப்போது சுனாமியாகச் சுழன்றடித்துள்ளது என்றும், அமித் ஷாவை பா.ஜ.க. தலைவராக்கியதன் மூலம் தான் நினைத்ததை மோடி சாதித்துவருகிறார் என்றும், அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தை இச்சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் துதிபாடுகின்றன.

வித்தியா பாலன் : சமூக வலைதளங்கள் மிக மோசமான வைரஸ்? madam, Dirty பிக்ச்சரை விட இது dirty யா?

சமூக வலைதளங்கள் உலகத்தை கெடுக்கும் மிக மோசமான வைரஸ்’’ என்று அதிரடியாக தாக்குதல் தொடுக்கிறார், பிரபல நடிகை வித்யாபாலன். இப்படி அவர் சூடாக சொல்ல என்ன காரணம்..! அவரிடமே கேட்போம்..!பெண்கள் வாழ்க்கையில் முன்னேற தேவைப்படுவது எது?
பெண்களுக்கு தன்னம்பிக்கைதான் முதல் தேவை. தன் வாழ்க்கை தன் கையில்தான் இருக்கிறது என்பதை பெண்கள் உணரவேண்டும். பிரச்சினைகளை கண்டு மனம் துவண்டு விடாமல், அதிலிருந்து வெளிவரும் வழி முறையை பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை வலிமைப்படுத்தும். சிக்கலில் இருந்து  விடுபடுவதன் மூலம் புதிய அனுபவத்தை பெறுவோம். அந்த அனுபவம்தான் நம்மை வழி நடத்தும். அதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்யும்.
தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறதா?
சமீபகாலமாக பெண்கள் விழிப்புணர்வு பற்றிய செய்திகளே பெருமளவு ஒளிபரப்பாகின்றன. அவை பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானவை.  பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க சட்டத்தையும், காவல் துறையையும் நாட அவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம். அதில் சினிமாக்களின் பங்களிப்பும் உண்டு.

தமிழச்சி தங்கபாண்டியன் பாலாவின் பிசாசுக்கு பாட்டெழுதப்போகிறார் !


பொதுவாக பேய் படங்களில் இருக்கும் சில விஷயங்கள் இதில் இருந்தாலும், இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று தெரிவித்தார் அதன் இயக்குனர் மிஷ்கின். இருட்டுக்கு பேர் போனவராச்சே மிஷ்கின், சொல்லவா வேண்டும் திரைப்படத்தின் முன்னோட்டமே மிரட்டலாக இருக்கிறது. >மேலும் பேசிய மிஷ்கின், நான் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலா என்னை பாராட்டினார். படம் எப்படி போகுதுன்னு கேட்டார். சரியா போகலைன்னு சொன்னேன். வருத்தப்பட்டவர், அடுத்தப் படம் எனக்கு பண்ணித்தா, கதைய ரெடி பண்ணு என்று சொன்னார்.

தருமபுரி மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரழந்ததை அடுத்து ஆய்வு!

தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் குழு பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஆய்வு நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல் நலன், பாதுகாப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் குமுதா தலைமையில் ஒரு குழு மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தலைமையில் மேலும் ஒரு குழு ஆய்வு நடத்தி வருகிறது. தருமபுரி மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தினகரன்.com

சென்னை ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதித்த நேர்மையான அதிகாரி இடமாற்றம் !விஜய் பிங்ளே IAS Transferred Days after fining contractors

Officials said on condition of anonymity that the powerful contractor lobby was responsible for the decision to move Pingale out of the corporation. "The timing of his transfer, only days after he penalised contractors responsible for poorly laid roads, is no coincidence," an official said.
The corporation, under Pingale, had on Wednesday made public the names of nine contractors who it said would have to reimburse the civic body 2 crore for repairs it carried out on stretches laid by them. Pingale had promised to name other contractors for poor work and said the total penalties were likely to rise.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதில் பேட்ச் அப்  வேலைகள் செய்ய தவறிய ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட 3 நாட்களில் மாநகராட்சி உயர்  அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் இணை ஆணையராக  இருந்த டாக்டர் விஜய் பிங்ளே திடீரென கடந்த சனிக்கிழமை தொழில்துறை இணை செயலாளராக இட மாற்றம் செய்யப்பட்டார். விஜய் பிங்ளே ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். கடந்த 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். கடந்த 16 மாதங்களாக மாநகராட்சியில் இவர் பல்வேறு பணிகளையும்  மிகவும் சிரத்தையாக செய்து வந்தார். சாலை பணிகளின் தர நிர்ணய குழுவில் மிக முக்கியமான அதிகாரியான இவர்நேர்மையாகவும், திறமையாகவும்  செயல்படுபவர்.ஊருக்கு ஒரு சகாயமும்  ட்ராபிக் ராமசாமியும் தேவை 

160 சிஷ்யர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கமா ! சாமியார் குர்மீத் ராம்சிங்கின் கடவுள் பாதை?

சண்டிகர்: ஹரியானாவின் சர்ச்சை சாமியார்களுக்கு 'நேரம்' சரியில்லை போல.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ராம்பாலைப் போல 'கட்டாய ஆண்மை நீக்க' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ராம்சிங். குர்மீத்தின் 160க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து பரிசோதிக்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களில் ஒரு பிரிவுதான் தேரா சச்சா சவுதா. சில ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் வியன்னாவில் மற்றொரு சீக்கியர் பிரிவினரால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே இந்தியாவிலும் பெரும் மோதல் வெடிக்க பதற்றம் பற்றி எரிந்தது. அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ் சவுகான் என்ற முன்னாள் சீடர், குர்மீத்தின் ஆசிரமத்தில் சீடர்களுக்கு கட்டாயமாக ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.. ஆண்கள் ஆண்மையை நீக்கிவிட்டால் ஆண்டவனை அடையலாம் என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி இந்த சட்டவிரோத செயலில் குர்மீத் ஈடுபடுகிறார் என்று வழக்கு தொடர்ந்தார்.

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் விசாரணை தொடங்கியது!

தயாளு அம்மாள் - கனிமொழி - சரத்குமார் ரெட்டி2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு, சில தனியார் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக ரூ.200 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த வழக்கின் புகார்தாரரும், மத்திய அமலாக்கத் துறையின் இணை இயக்குநருமான ஹிமான்ஷு குமார் லால், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் புதன்கிழமையும் (நவம்பர் 19) தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

பிகாரில் லாலு கட்சியும் நிதீஷ்குமாரின் கட்சியும் ஒரே கட்சியாகிறது, 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்தனர்

பாட்னா: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, பீகார் மாநில அரசியல்வாதிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது. அதனால், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் விரைவில் இணைய உள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கலைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற பிரமாண்டமான வெற்றி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. அதனால், லோக்சபா தேர்தலுக்கு பின், பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலின் போது, தன் பரம எதிரியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்தார்.

பெரியாறு அணையில் கேரளா MLA பிஜூமோள் அத்துமீறல்: அணை பாதுகாப்பு கேள்விக்குறி?

கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையில் நேற்று பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் தலைமையில் சென்ற கேரள பத்திரிகையாளர்கள், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை கீழே தள்ளிவிட்டு பேபி அணைக்குள் அத்துமீறி நுழைந்து போட்டோ எடுத்தனர். அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார் இதை கண்டுகொள்ளாததால் அணைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்குப்பின் நீர்மட்டம் நேற்று 141 அடியைக் கடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அணையில் தண்ணீர் தேங்க இன்னும் ஒரு அடியே உள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  பிஜுமோள் போன்ற மலையாளிகளை உசுப்பி விட்டது வைகோதான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் மனம் குழம்பி போயிருந்த மலையாளிகளை மேலும் கோபம் அடைய செய்யும் விதமாக வெற்றியை கொண்டாடி டிவிக்களில் பேசினார் .ஏதோ மலையாளிகளை போரில் வென்றது போல சவடால் முழக்கம் இடுவது பட்டாசு கொழுத்துவது மலர் தூவுவது போன்ற முட்டாள்தனமான செய்கைகளை செய்து மலையாளிகளை பகையாளி ஆக்கிவிட்டனர்Hate  அரசியலை நடத்தும் வைக்கோ போன்றவர்களால் தான் பிஜுமோள் போன்ற அரசியல்  வாதிகளுக்கு அவல் கிடைத்துவிட்டது, மீண்டும் பெரியாறுஅணை பிரச்சனை தலை எடுத்தால் வைகோ போன்றவர்களே பொறுப்பு ,

திங்கள், 17 நவம்பர், 2014

நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்கிறார் ! லேட் நியுஸ் இது உண்மையில்லையாம்? கிளாமர் போயிடுமே? பிசிநேசு?


சென்னை,நவ.17 (டி.என்.எஸ்) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார்.தெலுங்கு நடிகருடன் காதல், பிறகு முறிவு, திருமணம் என்று அவ்வபோது திரிஷா குறித்து செய்திகள் வெளியானாலும், இறுதில் அவை வெறும் வதந்திகளாகவே மாறியது.ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல், நம்பகமான தகவல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திரிஷாவுக்கு அவரது தயார் திருமணம் செய்ய முடிவு செய்து, மனமகனை தேடி வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வருண் மணியன், என்பவரை திரிஷாவுக்கு பேசி முடித்துள்ளார்களாம். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக விளங்கும் ரேடியன் சி, நிறுவன உரிமையாளரான வருண் மணியன் ரேடியன் மீடியா என்ற நிறுவனம் சார்பில் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வாயை மூடி பேசவும்' இவர் தயாரித்த படம் தான். விரைவில் வெளியாக உள்ள, 'காவியத்தலைவன்' படத்தியும் வருண் மணியன் தயாரித்து வருகிறார்.

Yoga குரு ராம்தேவுக்கு இசட்பிரிவு பாதுகாப்பு ! 22 காவலர்கள். Yoga guru Ramdev Z category security by 22 armed guards and escort car.

புதுடெல்லி: யோகா குரு பாபா ராம்தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் 22 பேர் மற்றும் பாதுகாப்பான காரும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது பாபா ராம்தேவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஊழல் மற்றும் மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி 2012 ஆகஸ்ட் மாதம் அவர் டெல்லி போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.dinakaran.com இனி வேற வேற சாமியார்களுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு கேப்பாய்ங்க ! ஏன்னா நெறைய சாமியாருங்க பொம்பள சமாசாரம் போன்ற பல தில்லுமுல்லுகள் செஞ்சு சதா பயந்து கிட்டே இருக்காய்ங்க .பாரபட்சம் இல்லாம் எல்லாருக்கும் இசட் பிரிவு கொடுங்க ,