![]() |






![]() |
![]() |
விவேக் ஒரு நடிகன் என்று மட்டும் கடந்து போக முடியாத அளவு சமூக பொறுப்புடன் செயல்பட்டவர்!
முத்திரை குத்தப்படாத சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு கலைஞர்!
கட்சிகள் இயக்கங்கள் கோட்பாடுகளை தங்கள் அடையாளங்களாக வரித்து கொண்டவர்களை விட அதிகமாக மக்களிடையே அந்த கருத்துக்களை விதைத்து சென்றவர்.
மென்மையான நகைச்சுவையின் மேல் நின்று காரமான பெரியார் கருத்துக்களை முரசறைந்து முழங்கியவர்.
விவேக்கின் நகைச்சுவை காட்சிகளில் தவிர்க்கவே முடியாதவாறு சிந்தனையை தட்டி எழுப்பும் தீப்பொறிகள் பறக்கும் அது யாரையும் சுட்டுவிடாது
ஆனால் சுட்டி காட்டும்!
ஒரு நடிகனின் ஓவியத்தை வரைபவர்கள் பெரும்பாலும் கலையாத கேசம் அழகான மேக்கப் முகம் என்று வரைபவர்கள்
ஆனால் தோழர் ரவியோ இங்கே ஒரு சமூக போராளியின் தோற்றத்தில் அதுவும் அசப்பில் ஒரு ஜார்ஜ் பெர்னாண்டஸ் போலல்லவா வரைந்திருக்கிறார் தோழர் Ravi Palette
நன்றி
![]() |
ஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்
Vigneshkumar - tamil.oneindia.com : சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஐம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இது ஜனநாயகத்தைத் தூக்கில் தொங்க விடுவதற்குச் சமம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்,
ஸ்டாலின் கடிதம் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6இல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை "சுவிட்ச் ஆஃப்" (பேட்டரிகளை எடுக்காமல்- செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
பாதுகாப்பு அறை அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. 7.4.2021 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள். இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்த பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது
![]() |
minnambalam : விவேக்கின் இதயத்தில் 100% அடைப்பு, முதல் அட்டாக்கிலேயே மரணம் என்று மருத்துவ உலகமே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும்படியான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உலகமே புகழும் நகைச்சுவைக் கலைஞரின் இதயத்தில், வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று பலரது ஆரோக்கியத்தை பராமரித்த விவேக்கின் இதயத்தில் இப்படி ஒரு அடைப்பு எப்படி இத்தனை நாளாய் இருந்தது என்பதுதான் அவரது ரசிகர்களின், நண்பர்களின் ஆதங்கம். விவேக் என்னதான் வெளியே சிரிப்பின் அடையாளமாக திகழ்ந்தாலும் அவருக்குள்ளும் வாழ்க்கை சுமை மிகுந்த சோகங்களைக் கொடுத்திருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல விவேக்கின் குடும்பத்திலும் பிரச்சினைகள்.
![]() |
Kathiravan Mayavan : என் இந்த தொடர் கள்ளமௌனம் ? எங்கே ஜனநாயக சக்திகள்?
சாதிய படுகொலையை கண்டிக்க யாரும் முன்வரவில்லையே என்?
எங்கே சிபிஎம் பாலகிருஷ்ணன் ?
Sukirtha Rani : தோழர், இது மிகக் கொடூரமான செயல்தான்..இதை யாரும் நியாயப்படுத்தப் போவதில்லை.. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் ,கொலைகள் எல்லாம் கண்டிக்கத்தக்கன..
அதில் மாற்றுக் கருத்து இல்லை..இதில் சாதிபார்த்துச் செய்வதில்லை..
ஆனால் இப்படி ஒன்று நிகழ்ந்தவுடன், முற்போக்காளர்களைப் பார்த்து நீங்கள் இதைக் கேட்டீர்களா? இதைச் செய்தீர்களா? எங்குப்போனீர்கள் என்று கேட்பது சரிதானா?
நடிகர் விவேக்கின் உடல் நிலையை எந்த வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் தடுப்பூசி போட்டமையே இறப்புக்கு காரணம் என்று தெரியவருகிறது!
மேலும் தடுப்பூசியை முழு டோஸாக போடாமல் பகுதி பகுதியாக போட்டிருந்தால் கூட இந்த இறப்பு தவிர்த்திருக்க முடியும் என்று உறுதியாக தெரியவருகிறது . மக்களை தடுப்பூசி போடுவதற்கு தூண்டுவதற்காக நடிகர் விவேக்கின் உதவியை நாடிய தமிழக அரசு அவரின் உடல் நிலைபற்றி விசேஷ கவனம் எடுக்கவும் தவறி விட்டது
தடுப்பூசியை பகுதியாக செலுத்தப்படக்கூடிய வாய்ப்பை பற்றியும் ஆராயவில்லை தங்களின் பிரசாரம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இந்த அநியாயத்தை தமிழக அரசு செய்துள்ளது. maalaimalar :சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Jeyalakshmi C - /tamil.oneindia.com : சென்னை: காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்;
அதுமட்டுமின்றி இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் அரணாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாடகக் காதல் கும்பலின் இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அடங்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை;
இவை சமூக அமைதியை குலைக்கக்கூடியவை. உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் தம்மை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
![]() |
Kathir RS : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி உயர்சாதிகள்னு மைன்ட்ல ஒரு எண்ணம் ஒடுதா?
அதுதான் இவர்கள் வெற்றி..மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)
எந்த திமுககாரனும் இந்த பதிவில் குறிப்பிட்டபடி மாரியை திட்டவில்லை.திட்டவும் மாட்டான்.திட்டியிருந்தால்,
அது PCR ஆக்ட் படி தண்டனைக்குரிய குற்றம்.
அதை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடலாம்.
இவர்கள் யார் அப்படி பதிவிட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் சொன்னாலும் பதிவு அங்கே இருக்காது.
இருந்தாலும் அந்த பதிவை எழுதியவர் அவர்கள் அமர்த்திய ஆளாகத்தான் இருப்பார்.
அந்த ஆளைக்காட்டினால் நாமே சைபர் க்ரைமில் புகார் செய்து உள்ளே தள்ளலாம்.
மாரியின் மீது கோபத்தை காட்டிய திமுகவினரில் தலித்துகளும் இருந்தார்கள் ஓபிசிகளும் இருந்தார்கள் எஃப்சிகளும் இருந்தார்கள்.
காரணம் மாரி செய்தது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இந்த ஐடியே சொல்வது போல மாரி திட்டமிட்டு அரேங்கேற்றிய சதி அது.
மாரிக்கும் அவனை இயக்கும் சங்கிகளுக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு விசயம் இணையத்துல மாரிக்கு வக்காலத்து வாங்கும் பல எலீட்டுகளுக்கு தெரியாது.
அது என்னவென்றால் களத்தில் பெரும்பான்மை தலித் மக்கள் திமுக ஆதரவாளர்கள்.
Devi Somasundaram : விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாசல்ல திரு மன்சூர் அலிகான் சத்தம் போடற வீடியோ ஒன்னு பார்த்தேன்.
விவேக் அவர்களுக்கு கோவிட் வேக்ஸின் போட்டதால தான் விவேக் உடல் நிலை பாதிச்சது, கொரானா டெஸ்ட் எல்லாம் நிறுத்துங்கன்னு பத்திரிக்கையாளர் முன்னாடி சத்தம் போடறார் .
மன்சூல் அலிகான நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.அவருக்கு விவேக் மீது உள்ள பாசத்தில் வர கோபம் இயல்பானது என்று எடுத்துக் கொள்வோம் .
விவேக் ஊசி போட்டதால் தான் பாதிக்கப்பட்டாரா ?. கோவிட் ரெஸ்பிரிரேட்டரி .அதாவது சுவாசப் பாதை தொற்று .அதற்கும் ஹார்ட் அட்டாக்கும் சம்பந்தமில்லை .
ஹார்ட் அட்டாக் வர நம் இதயத்துக்கு ரத்தம் போகும் அல்லது வரும் பாதைகளில் ஏற்படும் அடைப்பு காரணம் .அந்த அடைப்பு ஒரே நாளில் வராது .
கொஞ்ச கொஞ்சமா ஏற்படும் டெபாஸிட்ல நடப்பது....முதல் நாள் ஊசிபோட்ட உடனே அப்படி ஆக 99% வாய்ப்பில்ல..ஆக இது தடுப்பூசியால் நடந்தது இல்லை
சின்ன கலைவாணரே நீங்கள் மக்களை சிரிக்க வைத்தவர் இனியும் உங்கள் படைப்புக்கள் சிரிக்க வைத்து கொண்டே இருக்கும்
வெறும் சிரிப்பு மட்டுமல்ல உங்களின் சிரிப்பிற்குள் சிப்பிக்குள் முத்துக்கள் போல கருத்துக்களும் புதைந்து இருக்கும்.
அதனால்தான் நீங்கள் சின்ன கலைவாணர் என்ற பேறு பெற்றுள்ளீர்கள்
நீங்கள் என்றும் வாழும் சின்னக்கலைஞரே
கலைஞரை உங்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்திருக்கீறீர்கள்!
கலைஞருக்கு மட்டுமல்ல கலைவாணருக்கு மட்டுமல்ல எங்கள் சின்ன கலைவாணருக்கும் என்றும் அழிவில்லை .
என்றும் வாழ்கிறார்கள்
![]() |
Kalaimathi - /tamil.filmibeat.com: சென்னை: நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காலை நடந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விவேக்
தன்னுடைய கருத்து நிறைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார் நடிகர் விவேக். சினிமாவில் சமுதாய அக்கறை சார்ந்த நகைச்சுவை காட்சிகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்
திரைத்துறையில் அவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு, நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. மரம் நடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். 59 வயதான நடிகர் விவேக் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![]() |
![]() |
![]() |
LR Jagadheesan : தமிழ்நாட்டு அரசியலில் புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜகனை தன் ஆதர்ஷமாக கொண்டாடும் பா ரஞ்சித்தும்,
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியனையும்,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமியையும்,
தன் அரசியல் ஆதர்ஷமாக கொண்டாடும் மாரி செல்வராஜும் தான்,
உங்களின் ஆனப்பெரிய தமிழ்நாட்டு திரைத்துறை ஆதர்ஷங்கள் என்று கொண்டாடுவது உங்கள் உரிமை!. அதில் மற்றவர்கள் கேள்வி எழுப்ப ஒன்றும் இல்லை.
ஆனால் அவர்களை ஒருபக்கம் சினிமாவில் கொண்டாடிக்கொண்டே,
தமிழ்நாட்டு அரசியலில் ஜாதி ஒழிப்பு அல்லது ஜாதிகடந்த அரசியல் பற்றியெல்லாம் அடுத்தவர்களுக்கு வகுப்பெடுக்க முற்படாதீர்கள்.
உங்களைவிட அதிமுக கட்சியின் அடிமட்டத்தொண்டன் மேலதிகமாகவும் கூடுதலாகவும் ஜாதிகடந்த அல்லது ஜாதியை கடக்க முயலும் அரசியலுக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பான்.
![]() |
minnambalma : திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று (ஏப்ரல் 14) குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த துரைமுருகனுக்கு அவரது பங்களாவில் திருடர்கள் புகுந்த விஷயம் லேசான அதிர்ச்சியைதான் கொடுத்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் துரைமுருகனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது. அங்கேதான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் துரைமுருகன். சில நாட்களுக்கு முன் அந்த பங்களாவுக்குள் திருடர்கள் நுழைந்தனர். துரைமுருகன் பங்களா என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நுழைந்த அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காததால், கையில் கிடைத்த லிப்ஸ்டிக்கை எடுத்து சுவற்றில், ‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’ என்று துரைமுருகனுக்கே நக்கலாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
![]() |
![]() |
உதயநிதி ஸ்டாலின் |
நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ராஜு சிவசாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
![]() |
![]() |
tamil.oneindia.com :உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர்.
![]() |
Prasanna வெங்கடேஷ் tamil.goodreturns.i : இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் இது கடுமையாகி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை 2020 மார்ச் மாதத்திற்குப் பின்பு மீண்டும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மக்கள் உணவுப் பொருட்களை மிகப்பெரிய அளவில் வாங்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் ஷாப்பிங் மால், மளிகை கடைகள், ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களுக்குத் திடீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
கொரோனா 2வது அலை கொரோனா 2வது அலை கொரோனாவின் 2வது அலையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது.
tamil.oneindia. : சென்னை: தமிழகத்தில் மக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்..
உடனடியாக நடந்து முடிந்த தேர்தலின் பதிவான வாக்குகளை எண்ண சொல்லுகிறார்கள்.
கடந்த 6-,ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது...
அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படி ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தபோதே, பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.. 6ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு ஒரு மாசம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
பலவாறாக ஐயமும், வதந்தியும் பரவி வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, டிவியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரு மாதம் கழித்து தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது, ஒரு மாநில தேர்தல் முடிவு பிறமாநில தேர்தலை பாதிக்காமல் இருக்கவே 5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது" என்றும் விளக்கம் தந்திருந்தார்.
ஆனாலும், ஒரு மாசம் கேப் என்பது மிகப்பெரிய இடைவெளியாகவே கருதப்படுகிறது..
இப்போது வாக்கு பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. சிசிடிவி கேமரா முன்பாக இரவும் பகலும் வேட்பாளர்கள் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர்.
![]() |
![]() |
Swaminathan V வைத்திலிங்கம் : குஜராத் - உண்மை நிலைமையை மூடி மறைத்தாலும், தவறான தரவுகள் தந்து , முதன்மை மாநிலம், முன்னேறிய மாநிலம் என்று மூச்சு முட்ட ஊதிப் பெருக்கி பொய்யுரை பகன்றாலும் என்றாவது ஒருநாள் மாய பிம்பம் உடைந்து, உண்மை நிலவரம் வெட்ட வெளிச்ச மாகிவிடும்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோணா நோயினால் உயிர் நீத்த பிணங்கள் குவிந்து கிடக்கும் மோசமான நிலை.
தான் ஆளும் மாநிலத்தையே சீர்திருத்த முடியாத பாஜக, திறமையுடன் பரிபாலனம் செய்து தமிழ்நாட்டை முன்னேறிய முதன்மை மாநிலமாக கட்டமைத்த கழக ஆட்சிகளை அகற்ற திட்டமிடுவது வெட்கக் கேடான செயல்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் மெத்தப் படித்த துக்ளக் மேதாவிகள் உண்மை நிலவரத்தை உணர்ந்து இனியாவது கழக ஆட்சியில் தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிட்டது என்று ஒப்பாரி வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
![]() |
கவிதா சொர்ணவல்லி : 90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள்,
அங்க பிற சாதி ஆட்களால் பயபடுத்தபட்டுட்டு இருந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க.
போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள்.
ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க.
இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க.
துப்பாக்கிச் சூட்டுல பலியான ஏழுமலைக்கு வெறும் 21 வயது தான். திருமணம் ஆகலை. பலியான இன்னொருத்தர், 25 வயதான ஜான் தாமஸுக்கு திருமணமாகி ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது.
சரி.. இந்தப் படுகொலைகள் எந்த ஆட்சியில நடந்த்துசுன்னு தெளிவா தெரியனுமா ?
1994-வருடம். ஜெயா ஆட்சியில. அதிமுக ஆட்சியில.
இறந்தது பறையர்கள்.
இதப் பத்தி இங்க உள்ளவனுங்க என்னைக்காத்து பேசி பாத்திருக்கீங்களா? பாத்துருக்க மாட்டீங்க ?
![]() |
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 89,937 வாக்கு சாவடிகளுக்கு 1,55,102 இவிஎம் மெசின் வந்ததாக தகவல். பழுதானால் மாற்றி கொள்ள பத்து சதவிகிதம் மெசின்கள் போதுமே இவ்வளவு மெசின்கள் ஏன் வந்தது? சந்தேகம் வராதா
Neela Megam : · 😡சேலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த கண்டெய்னர்கள் சிறை பிடிப்பு.
😡கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கல்லூரி வளாகத்தில் 3 கண்டெய்னர்கள் சிறைபிடிப்பு
😡பண்ருட்டியில் லேப்டாப் உடன் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை அருகே இருந்த மூவரை பிடித்தல்.
😡இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் லேப்டாப் உடன் சிறைபிடிப்பு. 4,5 அணிகள் களத்தில் நின்றிருந்தாலும் இந்த நான்கு சம்பவங்களிலும் திமுகவினராலே எதிரிகளின் நோக்கம் தடுக்கப்பட்டிருக்கின்றது. என்ன நடக்கிறது...? evm fraud
![]() |
Maniam Shanmugam : வன்னி விவசாயிகள் இயக்க வரலாறு – பகுதி – 16 : பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும்போது 9ஆம் மைல் கல்லில் வருவது தருமபுரம் குடியேற்றத் திட்டம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல அன்றைய காலகட்டத்தில் இங்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் கூலி விவசாயிகள். அனுராதபுரம், மதவாச்சி போன்ற இடங்களில் சொந்தக் காணிபூமியுடன் வாழ்ந்த இவர்கள் 1958 இனவன்செயலில் பாதிக்கப்பட்டதால் அகதிகளாகி இங்கு கொண்டுவரப்பட்டு, தலா அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு இருத்தப்பட்டவர்கள். இவர்களுக்கு மற்றைய குடியேற்றத்திட்டங்களில் வழங்கப்பட்டது போல எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்தத் தருமபுரத்தின் கிழக்கு எல்லையில் நெத்தலியாறு என்ற பெயரில் ஒரு சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீரைத்தான் தருமபுரம் மக்கள் தமது அனைத்துவிதமான அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தினர். அந்த ஆற்றில் ஓடும் நீர் தருமபுரத்துக்கு தென்மேற்காக உள்ள கல்மடுக்குளத்திலிருந்து வரும் உபரி நீர் என அறிந்தேன்.
![]() |
John Justus வைரச் சுரங்கத் திருட்டு..! கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைரச் சுரங்கம் உள்ளது. கோவையில் உள்ள ஈஷா அருகில் உள்ள பூமியை வாங்க அதன் 100 வருட பழமையான கையெழுத்து ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல் இது.! ஈஷா மற்றும் அதன் உள்ளே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைரச் சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன இந்த ஈஷா நடுவில் உள்ள இந்த இயற்கையான மிகப் பழமையான வைர சுரங்கம் 2000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும்பொறை மாக்கோதை" காலத்திலிருந்து செயல் பட்டுள்ளது. இந்த இயற்கை வைரச் சுரங்கம் மற்ற வைரச் சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி பூமியை பிளந்து கிடைக்கும் சுரங்கம் இல்லை. இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு வைரக் கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.
Kathir RS : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி
![]() |
Bahanya tamil.filmibeat.com :சென்னை: கர்ணன் படம் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்டியுள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர்ணன். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இசை, பாடல்கள், கதாபாத்திரங்களின் நடிப்பு என அனைத்தும் பாராட்டை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசிலும் கர்ணன் திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது
தொடரும் சர்ச்சை அதேநேரத்தில் படம் குறித்த சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சை எழுந்து வருகிறது.
![]() |
![]() |
Shahjahan R : பம்பாய் சட்டமன்றத்தில் 4-8-1923 அன்று எஸ்.கே. போலே ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி ஆறு, குளம், கிணறு நீர்த்தேக்கம் முதலிய தண்ணீர் கிடைக்கக்கூடிய பொது இடங்களிலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பொது இடங்களிலும் தீண்டப்படாதோர் நுழை தடையும் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. எல்லாத் துறைகளும் இந்தத் தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பம்பாய் அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், உண்மையில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொது இடத்துத் தண்ணீர் குடிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்பதையும், அதற்குப் பின்பலமாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்பதையும் நிரூபிக்க அம்பேத்கர், மஹாட் என்ற ஊரில் செளதார் என்ற பொதுக்குளத்தின் நீரைப் பருகித் தனது மனித உரிமையை நிலைநாட்டிக் கொள்ள நிச்சயித்தார். அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த உரிமை சரியாகப் புரியவரும் என்று அவர் கருதினார்.
Vallaththarasu Ramasamy: : கர்ணன் (2021) வன்முறைப் படம் இல்லை என்கிறார்கள். எனில் அதில் காட்டப்படும் கொலை மற்றும் அடிதடி யாருக்கான செய்தி?
1) தலித்களுக்கா? 2) ஆதிக்க சாதியினருக்கா? 3) காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரத்துக்கா? இதில் யாருக்கானது என்றாலும் அது ஓர் அர்த்தமற்ற, உணர்ச்சிவசப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வகையில் ஆபத்தான செய்தியும் கூட.
நிஜத்தில் ஒரு காவல்துறை உயரதிகாரியை (ஆதிக்க சாதிக்காரன்) கர்ணன் மாதிரி ஒரு தலித் இந்தப் படத்தில் காட்டியது போல் கழுத்தறுத்துக் கொன்றிருந்தால் அந்த மொத்த கிராமத்தையும் அழித்திருப்பார்கள். கர்ணனையும் கொன்றிருப்பார்கள். அதுதான் இந்தக் கேடுகெட்ட சாதி வெறி சமூகத்தின் நிதர்சனம். அதிகாரம், பணம், ஆள் பலம் இந்த மூன்றுமே ஆதிக்க சாதிகளின் கையில் குவிந்து கிடக்கும் போது வேறென்ன நடக்கும்?
ஆனால் படத்தில் பத்தாண்டுகள் கழித்து நாயகன் விடுதலையாகி வருகிறாராம், அங்கே ஊரில் பேருந்து ஓடுகிறதாம். ஆக, கத்தி எடுத்தால்தான் வேலை நடக்கும் என தலித் இளைஞர்களைக் கொம்பு சீவி விடும் செய்திதானே இதில் விடுக்கப்படுகிறது?
அம்பேத்கர் ஏன் ஆயுதம் ஏந்தவில்லை? அவருக்கு இல்லாத மஹர் செல்வாக்கா? இத்தனைக்கும் ராணுவத்தில் பணிபுரிந்த பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள்.
![]() |
நக்கீரன் :பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளைப் புதைப்பதால் மறைத்துவிட முடியாது என்பதை உறுதிசெய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையேதான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.
![]() |