சனி, 21 டிசம்பர், 2019

மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்றம் கலைக்கும்?... 347 தொகுதிகளில் EVM மோசடி.. Vote mismatch in 347 LS seats

https://www.telegraphindia.com/india/vote-mismatch-in-347-ls-seats-petition/cid/1720761
petition in the Supreme Court has alleged large-scale discrepancies between the final tally of votes in the Lok Sabha polls declared by the Election Commission and the provisional lists it had announced, with a mismatch in 347 out of 542 constituencies and the difference bigger than the margin of victory in six seats.
முடிவுக்கு வருகிறது  மோடியின் ஃபாசிச_ஆட்சி..???
RSS சர்வாதிகாரம் வருகிறது? 

தேர்தலில் வெற்றி பெறாமலேயே.. குறுக்கு வழியில் அரியணை ஏறியுள்ளது பாஜக அரசு.
குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி இந்தியா எங்கும் மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில்....
ஒரு சில நாட்களுக்கு முன் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.
கடந்த மக்களவை பொதுதேர்தலில்.....
தேர்தல் நடந்த 542 தொகுதியில் 347தொகுதியில் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக NGO அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
சில தினங்கள் முன்பு இதனை சுப்ரீம் கோர்ட்டுக்கும் கொண்டு சென்றுள்ளது அந்த NGO அமைப்பு
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்கவே வழியில்லாமல்... தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடுமுழுதும் குடியுரிமையை பற்றி கொந்தளிக்கும் போது இதனைப்பற்றி பேசவோ எழுதவோ பலருக்கும் நேரமில்லை..!!?
195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது . மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசமுள்ளதாக அந்த ஆய்வுகள் உறுதிபட கூறுகிறது.
இந்த NGOவின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டதால்தான், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் குடியுரிமை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு என... அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
விரைவில்...பாஜக அரசை கலைப்பதாக உச்சநீதிமன்றமே அறிவிக்க வாய்ப்பு உள்ளது.   https://wp.me/parCCK-h7

இதுவரை குறைந்தது 20 பேராவது சுட்டு கொலை! அவர்களின் பெயர் விபரங்கள்

நாடெங்கும் இதுவரை  குறைந்தது 20 பேராவது சுட்டு கொலை
செய்ப்பட்டிருப்பதாக தெரிகிறது .. பெரும்பாலும் பலரும் குறி வைத்து கொலை செய்யப்பட்டது போல் தெரிகிறது .. ( தூத்துக்குடி பாணியில்) உயிரழந்த அப்பாவிகளின் பெயர் விபரங்கள் தெரியந்துள்ளது 
தினத்தந்தி :சண்டிகாரில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சண்டிகார், அரியானா மாநிலத்தை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 2 பேர் இரவு சண்டிகாரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் திடீரென மாணவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவரும் உயிரிழந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா உதவியோடு மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

'Holy Land' சாவர்க்கர் ... பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

விகடன்.: கட்டுரையாளர் : சக்திவேல்.
'Holy Land' சாவர்க்கர்
சாவர்க்கர் யார்?
வன்கொடுமை தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பி.ஜே.பி-யினர் கொந்தளித்தபோது,
`நான் ராகுல், சாவர்க்கர் அல்ல' என்றார். அதைக் கண்டித்த மகாராஷ்ட்ரா பி.ஜே.பி, சட்டமன்றத்துக்கு `நான் சாவர்க்கர்' என்று அச்சிடப்பட்ட தொப்பி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது.
அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!

: 'தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற டி.செல்வராஜ் காலமானார்:

பாண்டியன் சுந்தரம் : 'தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற
டி.செல்வராஜ் காலமானார்: "சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்களுக்கு தமிழக நூலகங்களில் அங்கீகாரம் இல்லை" என்று வருத்தம் தெரிவித்தவர் இவர்!
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (20-12-2019) காலமானார்! கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள பன்றிமலை சுவாமிகள் தெருவில் வசித்து வந்தார்.
“மலரும் சருகும்” நாவல் வழி தமிழ் இலக்கிய உலகிற்குப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டத்தின் தாழையூத்தை அடுத்த தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதனை ஒட்டியுள்ள மாவடி கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14-1-1938 அன்று மகனாகப் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணிகளாக இருந்தனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார்.

மலேசியா பிரதமர் : குடியுரிமை சட்டத்தை மலேசியாவில் அமல்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா -

குடியுரிமை சட்டத்தை இங்கு அமல்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா - மலேசியா பிரதமர் கருத்துமாலைமலர் : குடியுரிமை சட்டத்தை மலேசியாவில் அமல்படுத்தினால் என்ன நிகழும் என்று உங்களுக்கே தெரியும் என அந்நாட்டு பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். கோலாலம்பூர்: இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சட்டத்தை குறித்தும், போராட்டங்களை குறித்தும் உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உரிமைக்காக அமைதியாக போராடும் மக்களுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமாக உள்ளது என ஐ.நா சபை கருத்து தெரிவித்ததுஇந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் மகாதீர் பின் முகமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

88,000 சவூதி அரேபியா்களின் பிரசார ‘டுவிட்டா்’ கணக்குகளை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்


தினமலர் : வாஷிங்டன்: சவூதி அரேபியாவைச் சோ்ந்த சுமாா் 88,000 பேரது சுட்டுரை (டுவிட்டா்) கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டுவிட்டா் நிறுவனத்தின் இணைதளப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சவூதி அரேபிய அரசுடன் தொடா்புடைய, அந்த அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுமாா் 88,000 பேரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி வந்தவா்கள், சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு ஆதரவாக பெரும்பாலும் அரபி மொழியில் பதிவுகள் மேற்கொண்டு வந்தனா். மேலும், மேற்கத்திய நாடுகளைச் சோ்ந்தவா்களைக் குறிவைத்து, பலா் ஆங்கிலத்திலும் பதிவுகளை வெளியிட்டு வந்தனா். சவூதி அரேபியாவின் கொள்கைகளை உலகளவில் எடுத்துச் செல்வதற்காக அவா்கள் டுவிட்டா் வலைதளத்தை பல்வேறு வகையிலும் தவறாகப் பயன்படுத்தினா். அதனைத் தடுப்பதற்காகவே, அவா்களது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அரசு சாா்புக் கணக்குகளை அடையாம் காண்பதற்கு வசதியாக, இந்த 88,000 சுட்டுரைக் கணக்குளில் 5,929 கணக்குகளின் விவரங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மராட்டியத்தில் விவசாயிகளின்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி புதிய கூட்டணி அரசு அறிவிப்பு

தினகரன் : மும்பை: விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொகை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதன்பின்னர் மகாராஷ்டிராவின் 29வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார்

புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம்-மத்திய உள்துறை உத்தரவு

 மாலைமலர் : புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக இனி வங்கி கணக்கில்தான் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி: புதுவையில் ரே‌ஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடப்பதாகவும், தரமான அரிசி வழங்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விஜிலென்ஸ் விசாரணையும் நடந்து வருகிறது.
இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இலவச அரிசியாக வழங்குவது எனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் மாற்று கருத்து நிலவியதால் இலவச அரிசி விவகாரத்தை மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பி வைத்தார்.

உத்தர பிரதேசத்தில் பலர் உயிரிழப்பு , .. குடியுரிமை சட்டத் திருத்தம்:

BBC :வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்தது. இந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 9 பேர் பலியாகி உள்ளதாக உத்தர பிரதேச டி.ஜி.பி ஓபி சிங் தெரிவித்துள்ளார். ராம்பூர் நகரில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் கண்ணீர் புகைக்க குண்டுகளை பயன்படுத்தியதாக காவல் துறை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images அவர், "லக்னோவில் 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றன. அனைத்து கோணங்களிலும் இது குறித்து விசாரித்து வருகிறோம்," என்றார்.
அதே சமயம் ஏ.என்.ஐ செய்து முகமை உத்தர பிரதேசத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி குடியுரிமை திருத்தச் சட்டம் தொடாபான போராட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள அக்கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று மாலை கூடும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி..

வெப்துனியா : தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 2,31,000 பேருக்கும் அதிகமானோர் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுள்ளது.>தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த 27 மாவட்டங்களில் 91,975 பதவியிடங்களுக்கு 3,02,994பேர் மனு தாக்கல் செய்தனர்.
பின்பு அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 48,891 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

திமுக குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் ஆதி தமிழர் பேரவை கலந்து கொள்கிறது

Thangaraj Gandhi : திமுக தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற
உள்ள குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் ஆதித்தமிழர் பேரவை கலந்து கொள்ளும்./>
மக்களை பாகுபடுத்தி - பிளவுபட வைக்கும் பாசிச சட்டங்களான தேசியப் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி - இஸ்லாமியருக்கும் ஈழத்தமிழருக்கும் துரோகமிழைக்கின்ற பாசிச பார்ப்பனிய பாஜக - அதிமுக அரசுகளுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும் />
குடியுரிமை சட்ட திருத்தமானது இது அடிப்படையிலேயே நமது அரசியல் சாசனம் தந்த அத்தனை வாக்குறுதிகளுக்கும் எதிரானது. மதச் சார்பின்மைக்கு எதிராக யார் கைவைத்தாலும் இந்தியாவின் அடித்தளமே சிதைந்துவிடும் என கருதி இந்திய ஒன்றியத்தில் சமத்துவத்தை தலைநிமிரச் செய்த புரட்சியாளர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களாலும் 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் ஏற்க்கப்பட்டது.

மங்களூரு மருத்துவ மனைக்குள் கண்ணீர் குண்டு வீசிய போலீஸ் வீடியோ .. சி சி டி வி


tamil.oneindia.com/authors/arivalagan. மங்களூரு: போராட்டக்காரர்களை விரட்டி வந்த போலீஸார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணீர்ப் புகைக் குண்டை வீசிய சம்பவம் மங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் மங்களூரே ஸ்தம்பித்துதப் போனது. தடியடி, துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு என அல்லோகலப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர வைத்துள்ளது. அதில் ஒரு மருத்துவமனையில் போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசும் காட்சி உள்ளது. மங்களூரில் உள்ள ஹைலேன்ட் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. பந்தர் என்ற பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அதில் அப்துல் ஜலீல், நெளஷின் ஆகியோர் வழியிலேயே புல்லட் காயத்தால் மரணமடைந்தனர்.

முரசொலியின் 83 ஆண்டுகளுக்கான மூலப்பத்திரம்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திமுக!

ஆணவத்தை பார்க்காமல் டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்டல் வழக்கை கைவிட சம்மதம்!
மின்னமபலம் : முரசொலி மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்ட, அதற்கு திமுக பட்டாவுடன் பதிலளித்திருந்தது. இதனை முன்வைத்து இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்த நிலையில், முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதற்கான விசாரணை நவம்பர் 19ஆம் தேதி நடந்திருந்தது.

கள்ளக்குறிச்சியில் இரு பேருந்துகள் மோதல்; 30 பேர் காயம்

தினத்தந்தி : :கள்ளக்குறிச்சியில் இரு தனியார் பேருந்துகள் மோதி கொண்டதில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை பகுதியில் சுங்க சாவடி அருகே இரு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. பேருந்துகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க எம்பி பிரமிளா ஜெயபாலை சந்திக்க அமைச்சர் ஜெயசங்கர் தயங்கி பின்வாங்கியது ஏன்?

Pramila Jayapal Rep Washington
Indian officials informed the committee that Jaishankar would not meet with the lawmakers if the group included Jayapal, who is sponsoring a resolution urging India to lift communications restrictions, restore the Internet and preserve religious freedom. Engel refused, and the Indians pulled out, Jayapal told The Washington Post.
Jayapal told The Washington Post. “This only furthers the idea that the Indian government isn’t willing to listen to any dissent at all,” she said. “The seriousness of this moment should’ve been a reason for a conversation, not dictating who’s in the meeting, which seems very petty.”
காஷ்மீர் பிரச்சனை மற்றும் புதிய இந்திய குடியுரிமை சட்டம் பற்றி எல்லாம் அமெரிக்காவுக்கு வகுப்பெடுக்க சென்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து காஷ்மீர் மற்றும் இன்றய குடியுரிமை சட்டமும் அதனால் உருவான குழப்பங்கள் பற்றி எல்லாம் விளக்க சென்றார்.
ஆனால் ஜெய்சங்கருக்கு  விளக்கம் கொடுக்க கூடிய அளவு தெளிவோடு அவர்கள் உள்ளார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியோடு திரும்பி விட்டார். அமெரிக்க பிரதிநிதி பிரமிளா ஜெயபால் அவர்கள் காஷ்மீர் விவகாரம் கவலை அளிப்பதாக கருத்து கூறியுள்ளார் .
 ( பிரமிளா அவரகள் சென்னையில் பிறந்தவர் வளர்ந்தவர் பார்ப்பனர் அல்லாதவர் ...ஒரு பச்சை திராவிடர்)  

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்பவர் அதனாலேயே பெரிதும் கருப்பு இனக்களின் வாக்குகளால் தெரிவானவர
ஜெய்சங்கர் சந்திக்க இருக்கும் அமெரிக்கக் பிரதிநிதிகள் குழுவில் பிரமிளாவும் இதர வேறு சில உறுப்பினர்களும் கலந்து கொள்ள கூடாது என்று முன் நிபந்தனை விதித்தார் . பிரமிளா ஜெயபாலை பார்த்து அவ்வளவு பயம்?
பிரமிளா ஏற்கனவே காஷ்மீருக்காக ஓங்கி குரல் கொடுத்துள்ளார்.
அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றுள்ளார்.
பாஜக / ஆர் எஸ் எஸ்  வித்தை ஒன்றும் அவரிடம் பலிக்காது என்று தெரிந்து கொண்டேதான் சந்திப்பதை திடீர் என்று கைவிட்டு இந்தியா திரும்பி உள்ளார்..
முடிவு தெரிந்து விட்டது இனி பிரமிளாவை வேறு சந்தித்து அர்ச்சனை வேறு பெற்று கொள்ள வேண்டுமா என்ன?
பிரமிளாவின் தாய் மாயா ஜெயபால் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் .

ஜெய்சங்கர் அமெரிக்க எம்பிக்கள் சந்திப்பு நடக்காது ... India FM cancels US meeting over Kashmir criticism: Report


Jaishankar's trip to Washington came as protests spread across India over the Citizenship Amendment Act [Joshua Roberts/Reuters] U.S .Rep. Pramila Jayapal : The cancellation of this meeting was deeply disturbing. It only furthers the idea that the Indian government isn’t willing to listen to any dissent at all
தினமலர் : வாஷிங்டன் : காஷ்மீர் விவகாரம் பற்றி விமர்சித்ததை அடுத்து, அமெரிக்க எம்.பி.,க்களுடனான சந்திப்பை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  ரத்து செய்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாக உடைய பிரமீளா ஜெயபால் ( தந்தை பாலலகிருஷ்ண மேனன் தாய் மாயா ), 54, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக உள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை, இவர் விமர்சித்திருந்தார்.
மேலும், 'ஜம்மு - காஷ்மீரில், தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தையும், அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டு எம்.பி.,க்கள் குழுவை சந்தித்து பேச, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவில், பிரமீளா ஜெயபாலும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, எம்.பி.,க்கள் குழுவுடனான சந்திப்பை ரத்து செய்வதாக ஜெய்சங்கர்  அறிவித்தார்.
இது குறித்து, ஜெய்சங்கர் கூறியதாவது:

குழந்தையை வாஷிங் மெஷினுக்குள் கொலை செய்த பெண் - பஞ்சாப் – காதலனை பழிவாங்கவாம்


sathiyam.tv : காதலன் திருமணத்தை நிறுத்த அவரது சகோதரியின்குழந்தையை வாஷிங் மெஷினி போட்டு இளம்பெண் கொலை செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர் மற்றும் அசோக் என்ற இளைஞரும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர்.
இந்நிலையில், அசோக்குக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால், அவர் காதலியை விட்டு விலகினார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த மன்பிரீத் திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிடமிருந்தார்.
இந்நிலையில், அசோக்கின் திருமணத்துக்காக அவருடைய அக்கா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். திடீரென சிறுவன் ஆதிராஜை காணவில்லை என குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ஜாமியா போலீஸ் தாக்கி கண் பார்வை இழந்த மாணவர் .... வீடியோ


sathiyam.tv : “மனிதனாய் இருப்பதுதான் அவர் செய்த குற்றம்” – போலீஸ் தாக்கி கண்
பார்வை இழந்த மாணவரின் வீடியோவை பகிர்ந்த ஹெர்பஜன்..! குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்திவருகின்றனர்.
போராட்டத்தில், சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர், தன் இடது கண் பார்வையை இழந்தார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மினாஜுதின் பேசிய வீடியோவைப் பகிர்ந்து, பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

இந்தியா கேட் பகுதியில் இரவிலும் தொடரும் போராட்டம் - பிரியங்கா காந்தி பங்கேற்பு


போராட்டக்களத்தில் பிரியங்கா காந்திமாலைமலர்; : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் இரவிலும் தொடரும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். புதுடெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை வீடியோ வடிவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த பதிவில் அவர் கூறியதாவது:- குடியுரிமை சட்டம் பாரபட்சமானது, நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரசின் இதுபோன்ற தவறான முடிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும் குரலை உயர்த்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காத பாஜக அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு காட்டுமிராண்டித்தனமான பலப்பிரயோகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஆர் எஸ் எஸ் கோல்வால்கரின் நூலில் உள்ளதை அப்படியே நிறைவேற்றிய பாஜக அரசு!

Dhinakaran Chelliah : 2017 ஏப்ரல் மாதத்தில் எழுதிய முகநூல்
பதிவு இது. மிக்க துயரத்துடனும், மன வலியுடனும் மீள் பதிவு செய்கிறேன்.கோல்வால்கரின் நூலில் உள்ளதை அப்படியே குடியேற்ற சட்ட திருத்தமாக இப்போதைய ஆளுங்கட்சி பாரளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள் உண்மையில் மனிதர்களா?எனும் ஐயம் சாதாரண மக்களுக்கும் எழத் தொடங்கியுள்ளது.எது நடக்கக் கூடாது என எண்ணியிருந்தோமோ அது இப்போது கண் முன்னே நடக்கிறது! இனி இதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமா என்பது கேள்விக்குறியே?!
புலன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, குடியேற்ற சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் மக்களே உங்களைக் கை கூப்பி வேண்டுகிறேன், ஒரு நிமிடம் நீங்கள் நடக்கும் அநீதிகளை உணரமாட்டீர்களா?! உங்கள் மனம் ஏன் இப்படி கல்லாகிப் போனது?! ஒரு நிமிடம் யோசியுங்கள்!
இனி பதிவு:

ஏன்தான் இப்பிடிப்பட்ட நூல்கள் கண்ணுக்கு புலப்படுகிறதோ தெரியவில்லை, வாசித்தால் இருப்பு கொள்ளவும் முடியவில்லை.
பழைய பதிவுகளில் சொன்னபடி கண்கள் காண்பதற்கே, சிந்தனை அவரவர் சிறப்பதற்கே!
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார்.
தனது (We or Our Nationhood Defined); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

உங்களுக்காக ரத்தம் சிந்தும் சாத்தான்கள்

Shalin Maria Lawrence : இதை இப்பொழுது எழுதியே ஆகவேண்டும்.
Like every average Indian male some muslim men too have strong opinions about women .The way they dress up unconventionally or their Western style of life is under constant scrutiny or critic even if the women don't belong to their own religion.
According to them a physically or mentally modernized women is a bad thing.A shaithan.
Those who cover up are good.Those who don't are not.
But fortunately these 'modern women' do not judge any muslim man based on his clothes.For her he is just a fellow human and his rights and freedom are to be protected at any cost.
They don't name or brand them.
Now amidst all the protests opposing CAA and the forefront are these so called "bad women" who are fighting for the rights of the minorities.
These are the women who are taking the brutality on your behalf.
These are the women who fought with their parents and came to struggle for the oppressed man/women.
These women Do NOT Judge.
Now it's my turn to ask the men. DO NOT JUDGE.
I'm saying it again.
A dress does not define a woman's character.Rather it's her ideals and her passion towards justice which determine that.
I think we can also apply the same for the LGBT community . They fight for you even if you are homophobic.You discriminate them,judge them, persecute them .They smile back at you. They take slaps for you ,they are jailed for you.
Do not judge ANYBODY.
நீங்கள் யாரையெல்லாம் தீர்ப்பிலிட்டீர்களோ,யாரை எல்லாம் அவர்களின் உடைக்களுக்காகவும் வாழும் முறைக்காகவும் மனதில் சைத்தான்கள் என்று பழித்தீர்களோ அவர்களே உங்களுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.
Here is my poem from the book "Vadachennnaikari"
"சாத்தான் "
என்னை தீர்ப்பிலிட ஏதுவாய் நீ உன் புனித நூலை குடைந்து கொண்டிருந்தபோது மதத்தின் பெயரால் உன் மேல் எறியப்படவுள்ள அடுத்த கல்லை தடுக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன் .
ஆடையின் நிமித்தம் நீ என்னை வேசி என்றழைத்தபொழுது
நான் உன் வீட்டு பெண்களின் பாதுகாப்புக்காக விதிகளில் போராடிக்கொண்டிருந்தேன் .

சோனியா காந்தி : மக்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் ...வீடியோ


nakkheeran.in - பா. சந்தோஷ் : நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.;
குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று (20.12.2019) ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலம் மங்களூரு மாநகரில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.  இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

எம் சான்ட் 1000 கோடி வரை ஊழல் ..திமுக வைத்த அதிரடி குற்றச்சாட்டு... அதிர்ந்து போன அமைச்சர் வேலுமணி

dmkநக்கீரன் : சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்.சாண்ட்டைப் பயன்படுத்திய வகையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு, தற்போது அதிமுக  அமைச்சர் தரப்பை நடுங்க வைத்திருப்பதாக கூறுகின்றனர்.  இந்த முறைகேடுகள் தொடர்பான அத்தனை ஆவணத்தையும் தி.மு.க. சேகரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தரப்பு, இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிர டிஸ்கஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் தரப்பு, சென்னையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை கைகாட்டி விட்டு நழுவலாம் என்ற டாக் அடிபட்டு வருகிறது.
அதேபோல் அறப்போர் இயக்கம் சென்னை உள்ளாட்சித் துறை முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் ரிப்போர்ட்டை நீதிமன்றம் கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு ஆவணங்களை வழிமொழிவது போலவே அறிக்கையைத் தயார் செய்துவிட்டார் என்கின்றனர்.

உனாவ் பாலியல் வன்முறை கொலை UP பாஜக எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை!


மின்னம்பலம் : உன்னாவ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, குல்தீப் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வழக்கு உபி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் குல்தீப் செங்காரை குற்றவாளி என கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்தது டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம். தண்டனை விவரங்கள் டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

ஜார்க்கண்ட்:- எக்சிட் போல் : காங்.-ஜேஎம்எம்- ஆர்ஜேடி ஆட்சியை பிடிக்கிறது? -- 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும்-


Jharkhand Assembly Election 2019 Live Updates: Exit Polls Give Edge To Congress-JMM Alliance
tamil.oneindia.com - mathivanan-maran : டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜே.எம்.எம்.- ஆர்.ஜே.டி. கூட்டணி 38 முதல் 50 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான முடிவுகள், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன.
ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்: காங்கிரஸ் ஜே.எம்.எம். மற்றும் ஆர்ஜேடி இணைந்த கூட்டணி கட்சிகளுக்கு 38 முதல் 50 இடங்கள் கிடைக்கும். இந்த கூட்டணி மொத்தம் 37% வாக்குகளைப் பெறும்.

விஜயகுமார் ( கல்கி சாமியார்) வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்


பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்மாலைமலர்: பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை கல்கி விஜயகுமார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
விஜயகுமார் தன்னை ‘விஷ்ணுவின் அவதாரம்’ என்று கூறி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடி ஏராளமானோர் வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இதில் அவருக்கு பணம் அதிக அளவில் கிடைத்ததாகவும், அதை வைத்து தான் சித்தூரில் கல்கி ஆசிரமத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்கி ஆசிரமம் பெயரில் பல சொத்துகள் வாங்கி இருப்பதாகவும், கட்டுமான துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கல்கி ஆசிரமம் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியதில், ரூ.800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டக்களமான மாநிலங்கள்!..Voice of America

;
மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டக்களமான மாநிலங்கள்! குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. நேற்று நடைபெற்ற போராட்டங்களில் பெங்களூரு, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன. மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
மங்களூருவில் துப்பாக்கிச் சூடு
கர்நாடகாவில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்ட போதிலும், தடையையும் மீறி மங்களூரு, பெங்களூரு, டவுன் ஹால் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டார். மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது போலீசார் தடியடி நடத்தியது மட்டுமின்றி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகளும், பொது மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர் வீரமணி : அண்ணா பல்கலைக்கழகத்தை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி.. சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில்


veeramani-about-anna-university

.hindutamil.in : திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஜடி) உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களை 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' என்ற பெயரில் மத்திய அரசுக்கு தந்துவிட்டு, புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு மத்தியஅரசு கூறியுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய5 அமைச்சர்கள் கொண்ட குழுவைதமிழக அரசு அமைத்துள்ளது

அமெரிக்கா : இந்தியாவில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.. நாடெங்கும் கலவரம் . வீடியோ


tamil.oneindia.com - VelmuruganP. : வாஷிங்டன்: இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டங்களை உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் வெளிப்படையாகவே நடந்துவரும் அரசியல் விவாதங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம், சிறுபான்மை உரிமைகள், மத சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை ஜனநாயக நாட்டின் முக்கியமான தூண்கள் என்ற உண்மையைப் பற்றியும் இந்தியாவுடன் பேச வேண்டும் என்றார்.

முஷாரப் சடலம் 3 நாள் தூக்கில் தொங்க வேண்டும்: தீர்ப்புரையில் தகவல்


தினமலர் : இஸ்லாமாபாத்: தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு, தேச துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து, பாக்., சிறப்பு நீதிமன்றம் டிச.17-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாக்கர் அகமது சேத், நீதிபதிகள் நாசர் அக்பர், ஷாகித் கரீம் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் வழங்கியுள்ள 167 பக்க தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் சட்டத்தை முடக்கி வைத்து, நெருக்கடி நிலையை அமல்படுத்தியதாக, முஷாரபுக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குஷ்பு,: நான் சொன்னது சரி என்று நிரூபித்துவிட்டீர்கள் . நடிகை கஸ்துரிக்கு சாட்டை டுவீட்டர்

khushboo-and-kasuri-war-at-twitter



.hindutamil.in :குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் குஷ்பு மற்றும் கஸ்தூரி இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மசோதா தொடர்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகப் புகைப்படங்கள், வீடியோக்கள் ட்விட்டர் தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தால் மீண்டும் ட்விட்டர் தளத்துக்குத் திரும்பியுள்ளார் குஷ்பு. மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவற்றை கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் அல்ல என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித் ஷா? நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளைத் தர நீங்கள் யார்? அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள்தான் உங்களை ஆட்சியில் அமரவைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல" என்று தெரிவித்தார்.

2019 போர்ப்ஸ் தென்னிந்திய பணக்கார பிரபலங்கள்; ரஜினிகாந்த் 100 கோடி... பட்டியல்

zeenews.india.com : 2019 போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய பிரபலங்கள்; ரஜினிகாந்த் 100 கோடி
போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பிரபலங்கள்:
ரஜினிகாந்த் - 13வது இடம் (100 கோடி)
ஏ.ஆர்.ரகுமான் - 16வது இடம் (94.8 கோடி)
சங்கர் மகாதேவன் - 24வது இடம் (76.48 கோடி)
மோகன்லால் - 27 வது இடம் (64.5 கோடி)
பிரபாஸ் - 44வது இடம் (35 கோடி)
விஜய் - 47 வது இடம்(30 கோடி)
அஜித் - 52வது இடம் (40.5 கோடி)
மகேஷ் பாபு - 54 வது இடம்(35 கோடி)
டைரக்டர் ஷங்கர் - 55 வது இடம்(31.5 கோடி)
கமல்ஹாசன் - 56வது இடம் (34 கோடி)
மம்முட்டி - 62 வது இடம்(33.5 கோடி)
தனுஷ் - 64 வது இடம்(31.75 கோடி)
சிறுத்தை சிவா - 80வது இடம் (12.17 கோடி)
டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் - 84வது இடம் (13.5 கோடி)
2019 ம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 புது டெல்லி: 2019 ம் ஆண்டில் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

BBC : சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது எப்படி?


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு முடிவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் போராட்டம் செய்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்திவந்தனர்.
புதன்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், புதிதாக மாணவர்கள் அந்தப் போராட்டத்தில் இணைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில் புதன்கிழமையன்று இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் எஞ்சியிருந்த 17 மாணவர்களைக் கைதுசெய்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் வீடு திரும்பினர். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதோடு, விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

வியாழன், 19 டிசம்பர், 2019

பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மகளை சுமந்து சென்ற தந்தை.. உத்தர பிரதேசம் .. வீடியோ



 தினமலர் : லக்னோ: உ.பி.,யில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமியை சிகிச்சைக்கு அழைத்து வந்த தந்தை, மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் முதுகில் சுமந்து சென்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 15 வயது சிறுமி ஒருவரை, வீட்டின் அருகே வசிக்கும் 19 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது, சிறுமியின் கால் முறிந்தது. இதனையறிந்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். இளைஞரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
கால் முறிந்த சிறுமியை பெண் போலீஸ் உதவியுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, ஸ்ட்ரெச்சர், வீல் சேர் எதுவும் இல்லாததால் தந்தையே தன் மகளை முதுகில் சுமந்து சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அம்மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அஜய் அகர்வால் கூறுகையில், மாவட்ட அதிகாரிகளிடம் இந்த வசதிகளை ஏற்படுத்த கடிதம் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை...முதல்வர் பேட்டி

தினகரன் :  டெல்லி: உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் என்று டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது. மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்

திருப்பதியில் அவலம்! மயங்கி விழுந்த இளம்பெண்ணை 4 கி.மீ. தூரம் சுமந்து சென்ற போலீஸ்காரர்

திருப்பதி கோவில்திருப்பதியில் மயங்கி விழுந்த இளம்பெண்ணை 4 கி.மீ. தூரம் சுமந்து சென்ற போலீஸ்காரர்மாலைமலர் : திருப்பதி கோவிலுக்கு நடந்து சென்றபோது மயங்கி விழுந்த இளம்பெண்ணை 4 கி.மீ. தூரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி-திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பதி அலிபிரி பகுதியில் இருந்து நடந்து சென்று மலை ஏறி சாமி தரிசனம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
நேற்று ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அமர்நாத் ரெட்டி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பதி கோவிலுக்கு நடந்து வந்தனர். அவர்கள் அலிபிரியில் இருந்து மலையேற தொடங்கினார்கள்அப்போது வனப்பகுதியில் புஜ்ஜி என்ற இளம்பெண் திடீரென மயங்கி விழுந்தார். நீண்ட தூரம் நடந்து வந்த காரணத்தால் களைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி இருந்தார். அந்த பகுதியில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் எதுவும் இல்லை.

கேரளா 6 மணிநேர டார்ச்சர்; பிரம்படி; முகம் சிதைப்பு'- அட்டப்பாடி மதுவுக்கு நேர்ந்தை விட கொடுமை ஏழை அஜீஸுக்கு!

அஜீஸை தாக்கும் காட்சிகள்
கொல்லப்பட்ட அஜீஸ்.vikatan.com - மலையரசு : மனநலம் பாதிக்கப்பட்டதுபோல நடந்துகொண்ட அவர் உடல் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு காதில் காதணிகளை அணிந்துகொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்தார். இதனால் அவரின் தாயும், தங்கையும் அங்கிருந்து வேறுஇடத்துக்குச் சென்றுவிட்டனர். கடையில் உணவு திருடியதாக வயநாட்டைச் சேர்ந்த மது என்ற பழங்குடின இளைஞரை சிலர் கட்டிவைத்து அடித்துக்கொன்ற சம்பவம் கடந்த வருடம் அட்டப்பாடியில் நடந்தது. இதேபோன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சஜிமோன் என்பவர் கடந்த 11-ம் தேதி தம்பானூர் பஸ் ஸ்டாண்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். தூக்கம் கலைந்து எழுந்தபோது அவர் கைப்பையில் இருந்த இரண்டு செல்போன்களும், 40,000 பணமும் திருடுபோனது தெரியவந்துள்ளது.

உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை.. தடையை மீறி போராட்டம்!

மின்னம்பலம் : தடையை மீறி போராட்டம்: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக இயற்றப்பட்ட நாள் முதலே நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாநில தலைநகர், முக்கிய நகரங்கள், மாவட்டங்கள் எனப் பல இடங்களில் போராட்டம் தீயாய் பரவியுள்ளது. மாணவர்கள், அரசியல் கட்சியினர், இடதுசாரி அமைப்பினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதும், வாகனங்களுக்கு தீ வைப்பதும் எனக் கலவரமாக மாறி நாட்டில் அமைதியின்மை நிலவி வருகிறது.
வள்ளுவர் கோட்டம்-சென்னை
‘குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கங்கள்’ என்ற பேரில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது இந்திய அரசியலமைப்பைக் கேள்விக் குறியாக்கும் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தார்த், “குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஆவணம் இல்லை என்றாலும் இந்தியராக்குவோம் என்று சொல்கிறார்கள் அப்படியெனில் இஸ்லாமியர்கள் இந்தியன் ஆகக் கூடாது என்று இவர்கள் நினைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். ”குடியுரிமைக்கு எதிராகப் போராடுவதற்கு மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. நாம் அமைதியாகப் போராட வேண்டும். உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும். எனவே கவனமாகக் குரல் கொடுக்க வேண்டும். போராடுவதை நிறுத்தக்கூடாது” என்றும் தெரிவித்தார்.

வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கைது .. திமுக உட்பட கட்சிகள் கடும் கண்டனம்

news 18.com : மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம்
நடைபெற்றுவருகிறது. கர்நாடாக மாநிலம் பெங்களூரு மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் காலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெறவுள்ளதை அறிந்த காவல்துறையினர் நேற்றே இந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில், இன்று காலையில் நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டா
அவரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்.. இரவோடு இரவாக கைது செய்த போலீஸ்..


போலீஸ் சென்றது
இரண்டு நாள் போராட்டம் இங்கு எப்படி tamil.oneindia.com - shyamsundar : சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
ஏன் இப்படி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று பெரிய கலவரமாக மாறியது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு மொத்தமும் போர்க்களமாக மாறியுள்ளது. முக்கியமாக டெல்லியில் இரண்டு நாட்களாக மாபெரும் கலவரமும் போராட்டமும் நடந்து வருகிறது.
சென்னையிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐஐடி, லயோலா பல்கலைக்கழகம், நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

66 வயதில் காதல் திருமணம்… முதியோர் இல்லத்தில் கைகோக்கும் ஜோடி!

லட்சுமி அம்மாள், கோச்சானியன்vikatan.com - arundhathi : வரும் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் திருமணமானது முதல் முறையாக ஓர் அரசாங்க முதியோர் இல்லத்தால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. லட்சுமி அம்மாள், கோச்சானியன்.. b>“மாய நதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே…”
 இந்த அழகான பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டு போல கடவுளின் தேசமான கேரளாவில் மலர்ந்துள்ளது இந்தக் காதல்!
காதலுக்கு மொழி, சாதி, மதம் என்று எதுவும் கிடையாது. காதலில் வயதுகூட வெறும் எண்தான் என்பதை நிரூபித்துள்ளது 66 வயதான கோச்சானியன் மற்றும் 65 வயதான லட்சுமி அம்மாளின் இருபது வருடக் காதல் கதை. மேலும், தற்போது நடைபெற உள்ள திருமணம் மூலம் காதலர்களாக இருந்த இவர்கள் தம்பதிகளாக மாறப்போகிறார்கள்.

ஸ்ரீ ரெட்டி : உன்மூஞ்சில.. என்னை ஏமாத்திட்டு 5வது பொண்டாட்டிக்கிட்ட போறீயே.. பிரபல நடிகரை வம்பிழுத்த நடிகை

 Bahanya  - /tamil.filmibeat.com : சென்னை: நடிகை
ஸ்ரீரெட்டி பிரபல நடிகர் குறித்து பதிவிட்டுள்ள சர்ச்சை போஸ்ட் மற்றும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது.
அந்தளவுக்கு சர்ச்சைக்கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி, இனி தமிழகத்தில்தான் இருக்கப்போவதாக தெரிவித்தார், அரசியலிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மையில் பிரபல தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவியை வம்பிழுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இன்றைய போட்டோ இன்றைய போட்டோ அவர்களுக்கு தன்னுடைய உள்ளாடையை பரிசாக தரவிரும்புவதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் இன்று ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். அரைநிர்வாணப் போராட்டம்
 அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. காரணம் அந்த போட்டோ ஸ்ரீரெட்டி மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது எடுத்தது.

கிரண்பேடி மீது காவல்நிலையத்தில் முறையீடு .. பாபர் மசூதி இடிப்பை மீண்டும் நிகழ்த்திய நிகழ்வு


imgtheekkathir.i : புதுச்சேரி,டிச.18- சர்ச்சைக்குரிய விழாவில் பங்கேற்றதற்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை ஆளுநர் கிரண்பேடி சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ்.  நடத்தி வரும் ஸ்ரீராம் வித்யா கேந்திரா  பள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக  பங்கேற்றார். பள்ளி விழாவில் மாணவர்க ளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாபர் மசூதி யின் மாதிரி உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த விழாவில் பங்கேற்ற ஆளு நர் கிரண்பேடிக்கு அரசியல் கட்சிகள் கண்ட னம் தெரிவித்துள்ளன. பிரிவினையை தூண்டும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தாலும் ஆளுநர் கிரண்பேடி கண்டித்து இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக பிரிவினையை ஊக்குவிக்கக் கூடாது.
பள்ளி விழாவில் பங்கேற்றதற்கு ஆளு நர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்  என புதுவை மாநில மக்கள் நீதி மய்யம்  கட்சித் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிர மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மலையக எம்பி மயில்வாகனம் திலகராஜ் (மல்லியப்பூசந்தி திலகர்) : நாடே இல்லாத 30 ஆயிரம் தமிழர்கள் ..குடியுரிமை சிக்கல்....



அமெரிக்க அதிபர் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது Trump impeached by U.S. House on two charges


tamil.oneindia.com - shyamsundar.: நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான புகார்கள் மீது செனட் சபையில் விசாரிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.
அமெரிக்காவில் பொதுவாக பதவி நீக்க தீர்மானம் இரண்டு அவையிலும் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த புகார்கள் மீது இனி செனட் சபையில் விசாரிக்கப்படும். செனட் சபைதான் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து விலக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்யும். அதாவது மொத்தமாக அவரை பதவி நீக்கம் செய்யும்.

பேராசிரியர் அன்பழகன் அகவை 98 ... நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தினகரன் : சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியரின் 98வது
பிறந்தநாளை ( December 19, 1922 )  முன்னிட்டு ேநரில் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் , உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வு பெற்று வருவதையொட்டியும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டும், அவரது 98வது பிறந்தநாளினை யொட்டி திமுகவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதை, முழுமையாகத் தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Muralidharan Pb : கலைஞரின் உற்ற தோழர் பேராசிரியர் என்றால் மிகையல்ல.
அவர்களது நட்பிற்கு எடுத்துக்காட்டு ஒரு நிகழ்வு.
1960களில் சென்னை புரசைவாக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கலந்து கொள்ள கலைஞரும், பேராசிரியரும் சென்றார்கள். ஒரு பெண், தனது குழந்தைக்கு பெயரிட பேராசிரியரிடம் கொடுக்கிறார். உடனடியாக பேராசிரியர், அக்குழந்தைக்கு 'கருணாநிதி' என்று பெயரிட, அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அது பெண் குழந்தை. நிலைமையை புரிந்துக் கொண்ட பேராசிரியர், கருணாநிதி என்பது ஆண்களுக்கும் பெயரிடலாம், பெண்களுக்கும் பெயரிடலாம் என்று குறிப்பிட்டார்.
திராவிட இயக்கத்தலைவர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் புகழ்மிக்கவர். அவரது மனைவியின் பெயர் கருணாநிதி என்று கூறுகிறார். அதேபோல், கருணை நிதி என்ற பெயர், அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் பெயர், அருட் கருவூலம், அருட்ச்செல்வம். என்று சில விவரங்களை தருகிறார்.

சோ.தர்மன் எழுதிய 'சூல்' தமிழ் நாவலுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

பாண்டியன் சுந்தரம் : எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய 'சூல்' தமிழ் நாவலுக்கு
2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் (2019ஆம் ஆண்டுக்கு ) அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த விருதுக்கான 2019 ஆம் ஆண்டு விருதாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
நேபாள மொழி தவிர்த்த மற்ற மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுப்பட்டியல் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. நேபாள மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். அந்தவகையில், தமிழில் இந்த ஆண்டு எழுத்தாளர் சோ.தர்மன் தனது சூல் நாவலுக்காக இந்த விருதைப்பெறுகிறார்.
இந்த ஆண்டு இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகளில், நான்கு மொழிகளில் மட்டுமே நாவலுக்கு விருது வழங்கப்படுகிறது. அதாவது, அஸ்ஸாமீஸ், மணிப்புரி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட உள்ளது. இதில் சோ.தர்மன் எழுதிய சூல் நாவல் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
1980-களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி. எழுத்தாளர் பூமணியின் மருமகன் இவர்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்திருக்கிறார்.
1992-இல் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. பிறகு `தூர்வை' , `சோகவனம்' , `வனக்குமாரன்' , `வில்லிசைவேந்தர்' பிச்சைக்குட்டி பிள்ளை, `சோ.தர்மன் சிறுகதைகள் முழுத் தொகுதி', `கூகை' என்று தொடர்ந்து எழுதி வருபவர்.

எட்டு வயதில் அகதியாக இலங்கையில் இருந்து .. ஜெர்மனில் புகழ் பெற்ற இருதய மாற்று வைத்திய....

ஜெர்மன் அதிபர் -உமா மகேஸ்வரன் - ஜெர்மன் அமைச்சர்
பாண்டியன் சுந்தரம் : இலங்கை உள்நாட்டுப் போரில் அகதியாக
ஜெர்மனிக்குச் சென்று இன்று டாக்டராகி சாதனை படைத்த உமேஸ்வரன்: 'நான் பார்ப்பதற்குத்தான் வேறொரு நாட்டைச் சேர்ந்தனாகத் தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே ஜெர்மானியன்!'
ஓரடி ஏறினால் இரண்டடி கீழே சறுக்கி விடும் வாழ்க்கைப் பயணத்தில் மனம் சோராமல் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றோர் மிகச் சிலரே. அவர்களில்
ஒருவர்தான் இலங்கை நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்குப் புலம்பெயர்ந்து அந்த நாட்டின் தலைசிறந்த இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவராக இன்று புகழ் பெற்று விளங்கும் உமேஸ்வரன் அருணகிரிநாதன்!
உமேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த புத்தூரில் பிறந்தவர்.ஐந்து குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தவர் இவர். தாய், தந்தை, ஒரு அக்கா, இரு தங்கைகள், ஒரு தம்பி என உமேஸ்வரன் வறுமையிலும் மகிழ்ச்சியான குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்தார்.
எட்டு வயதுச் சிறுவனாக உமேஸ்வரன் இருந்தபோது, முதல் முறையாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒருவரைப் பார்க்கக் குடும்பமே சென்றிருந்தது. வீட்டுக்கு அருகே நடந்த தாக்குதல் அது. சிறுவன் உமேஸ்வரன் அதிர்ச்சி அடைவான் என்று அவனது கண்களை அம்மா மூடிக்கொண்டார்.அதையும் மீறி கண்களைக் கொஞ்சமாகத் திறந்து படுகாயங்களுடன் மரணித்திருந்த அந்த மனிதனைப் பார்த்தான் சிறுவன் உமேஸ்வரன்.

உத்தம் தாக்கரே : இளைஞர்களை சீண்டினால் எந்த நாட்டு அரசும் நிலையாக இருக்க முடியாது

  Rebel Ravi : 
இளைஞர்களைத் தொந்தரவு செய்தால் எந்த நாட்டு அரசும்
நிலையாக இருக்க முடியாது: மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு
உத்தவ் தாக்கரே கண்டனம்.
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல், சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை
நினைவுபடுத்தியது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு எதிராகக் கடந்த வாரத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியபோது, போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸார், மாணவர்கள், தீத்தடுப்புப் படையினர் என 60 பேர் காயமடைந்தனர்.

இரா. சம்பந்தர் :விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதுதான்


BBC :இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை.
1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை.
அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது.

எங்கள் உரிமை என்ன?: நீதிபதியிடம் கதறி அழுத நிர்பயாவின் தாய்!

எங்கள் உரிமை என்ன?: நீதிபதியிடம் கதறி அழுத நிர்பயாவின் தாய்!மின்னம்பலம் :  நிர்பயா வழக்கில், தூக்குத் தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 18) தள்ளுபடி செய்தது.
தலைநகர் டெல்லியில் 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த சம்பவம் நிகழ்ந்து கடந்த டிசம்பர் 16ஆம் தேதியுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன.
குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்தன. இவ்வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்ற அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

என்னை கொன்னுடாதேப்பா.." கதறி அலறிய தந்தை.. டிராக்டர் ஏற்றியே கொன்ற மகன்.. மதுராந்தகம்!

ஏழுமலை உயிரிழந்தார் தகராறு tamil.oneindia.com - hemavandhana : செங்கல்பட்டு: "நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே.. செத்து போ" என்று ஆவேசமாக கூறி.. பெற்ற தகப்பனை டிராக்டர் ஏற்றியே கொன்றுள்ளார் மகன்.. எல்லாம் சொத்து பிரச்சனைக்காகத்தான்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. 75 வயதாகிறது.. இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.. ஒரு மகனை தவிர மற்ற அனைவருக்கும் அண்ணாமலை கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அந்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது.. தனக்கு வயதாகி கொண்டே போவதால், இந்த சொத்தை மகள்களுக்கும், மகன்களுக்கும் சரி சமமாக அதாவது தலா 3 ஏக்கர் ஒருவருக்கு என்று பிரித்தார். மேலும் இன்னொரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தன்னுடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்களையும் ஏழுமலைதான் பராமரிக்க வேண்டும் என்று அண்ணாமலை உயிலை எழுதினார்.

புதன், 18 டிசம்பர், 2019

வள்ளியூரில் கொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.


Hemavandhana  -tamil.oneindia.com :    நெல்லை: உறவுக்கு தடையாக இருந்த
மனைவியை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசினார் கணவர்..
இதையடுத்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை கேரள போலீசார் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர். கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தன்னுடன் படித்த பள்ளி தோழி சுனிதாவை சந்தித்தார்.. இருவரும் நெருங்கி பழகினர்.. சுனிதா கணவனை விட்டு பிரிந்தவர்.. அதேபோல, பிரேம்குமாருக்கும் வித்யாவை பிடிக்காது. இதனால் சுனிதாவும் - பிரேம்குமாருக்கும் காதல் பற்றி கொண்டது.. இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ நினைத்தனர். இதற்கு வித்யா தடையாக இருக்கவும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்
வித்யா குண்டாக இருப்பாராம்.. அதனால் உடல் எடை குறைய சிகிச்சை அளிப்பதாக சொல்லி அவரை சென்று திருவனந்தபுரம் அருகே ஒரு பங்களாவில் தங்க வைத்துள்ளனர்..

இம்ரான் கான் -CAA : முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்.. அணுஆயுத போருக்கு இட்டு செல்லும் ஆபத்து உள்ளது ...


CABvikatan.com - மோகன் இ : இந்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார்.
மிகவும் சர்ச்சைக்குள்ளான குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் சர்வதேச அளவிலும் பல இடங்களிலிருந்து எதிர்வினையைச் சந்தித்தது. இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் அடிப்படையிலே பாகுபாடாக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
வங்கதேசமும் இதற்கு மிகவும் கவனமுடனே எதிர்வினையாற்றி வருகிறது. இந்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.