ராதா மனோகர் : கலைஞர் மீது எம்ஜியார் கொடுத்த ஊழல் புகாரை விசாரணை செய்த சர்க்காரியா கமிஷன் வழக்கில் இலங்கையின் புகழ் பெற்ற வழக்கறிஞரும் தனிப்பெரும் தலைவர் என்று தமிழர்களால் போற்றப்பட்ட அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் ஆஜாராகியது எல்லோரும் அறிந்ததே.
திரு திரு ஜி ஜி அவர்கள் தமிழகம் வந்த வரலாறு பற்றி சில சுவாரசியமான செய்திகள் உள்ளன.
 |
திரு சா . கணேசன் |
திரு ஜி ஜி பொன்னம்பலம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த கலைஞர் அவர்கள் முன்னாள் சென்னை மேயர் திரு சா கணேசனை திரு மணவை தம்பி அவர்களிடம் இது பற்றி பேசுமாறு அனுப்பினார்
திரு மணவை தம்பியின் வீட்டிற்கு வந்த சா . கணேசன் இது பற்றி பேசினார்
 |
திரு மணவை தம்பி |
கலைஞரின் இந்த செய்தியை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு பறந்தார் திரு மணவை தம்பி அவர்கள்
அங்கு அவரது நண்பரான திரு ஆனந்த சங்கரியின் எம் பி அவர்களின் துணையோடு திரு ஜி ஜி பொன்னம்பலத்தை அணுகி சர்க்காரியா கமிஷன் வழக்கு பற்றி கூறி அழைப்பு விடுத்தார்
ஏற்கனவே கலைஞர் அவர்கள் இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜராக வேண்டும் என்று விரும்பி ஒரு தமிழரசு கட்சி பிரமுகர் மூலமாக செய்தியை அனுப்பி இருந்தார்
அந்த தமிழரசு கட்சி பிரமுகரோ அந்த செய்தியை ஜி ஜி பொன்னம்பலத்திடம் தெரிவிக்காமல் கமுக்கமாக அமுக்கி விட்டார்
இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜரானால் அவருக்கு புகழ் வந்துவிடுமே என்ற அரசியல் காழ்புணர்ச்சிதான் காரணம்.
மேலும் ஜி ஜி பொன்னம்பலம் தான் ஆஜரான பல பெரிய வழக்குகளை எல்லாம் பொடிபொடியாக்கிய வரலாற்று பெருமை உடையவர் ..