சனி, 9 மே, 2015

பிர்லாவின் காசுதான் காந்தியின் ஊடக தர்மம் ! தலித்துக்களை பிர்லாவின் பணத்தில் ஏமாற்றிய .....

ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு செல்வோம். அம்பேத்கரின் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முறியடிக்கும் பூனா ஒப்பந்தம் 1932-ல் கையெழுத்தானது. பிறகு காந்தி தலித் மக்களின் அதிருப்தியை, அதை புரிந்து வைத்திருக்கின்ற அம்பேத்கரின் செல்வாக்கைக் குறைக்க ரூம் போட்டு யோசிக்கிறார். இந்த யோசிப்பு ஒரு ஆதிக்க சாதி ஆசார இந்து மனதின் வலிமையிலும், அதை அருளுகின்ற பௌதீக பொருளியல் வர்க்கங்களின் அரவணைப்பிலிருந்தும் உருவாகிறது.
இப்படித்தான் “ஹரிஜன சேவா சங்கமும், ஹரிஜன் பத்திரிகை”யும் உதிக்கின்றன. இங்கே நாம் பார்க்கப் போவது இந்தப் பிரச்சினை குறித்தல்ல. ஊடக அறம் குறித்த காந்தியின் நடைமுறை பரிசோதனை ஒன்றுதான் இங்கு கருப்பொருள்.
ஆங்கிலத்தில் “ஹரிஜன்” பத்திரிகை ஆரம்பிக்க எத்தனை பிரதிகள் அச்சடிப்பது, நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும், ஆசிரியர் குழு வேலைகள் என அனைத்தும் ஒரு பொன்மாலைப் பொழுதில் உற்சாகமாய் யோசிக்கப்பட்டு காந்தியால் வரைவுத் திட்டமாக முன்வைக்கப்படுகிறது.

ஒன்றரை கோடி கொடுத்ததும் வேஷ்டி விளம்பரத்தில் நடிக்க ராஜ்கிரண் மறுத்தது உண்மயா?


விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்? ''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன். 'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''விகடன்.com

சொத்துக்குவிப்பு வழக்கு திங்கள் தீர்ப்பு! பெங்களூருவில் உச்ச கட்ட பாதுகாப்பு!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சல்மான்கான் தண்டனை நிறுத்தி வைப்பு! நீதிமன்றம் சினிமாவின் முன்பு அடிபணிந்தது?

இந்திய சட்டம் ஏழைகளின் எதிரி!  500 ரூபாய் திருடியவன் 2 ஆண்டு ஜெயில்ல இருக்கார். குடித்துவிட்டு காரை ஒட்டி கொலை செய்தவனுக்கு 10 நிமிடத்தில் ஜாமீன்
மும்பை: கார் விபத்து வழக்கில், சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட, ஐந்தாண்டு சிறைத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது; இதையடுத்து, அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது; ஐகோர்ட் உத்தரவால், சல்மான் கானின் ரசிகர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.கடந்த 2002ல், மும்பையில், மது குடித்து கார் ஓட்டிய சல்மான் கான், நடைபாதையில் துாங்கியவர்கள் மீது மோதினார்; இதில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில், சல்மான் கானுக்கு, மும்பை செசன்ஸ் கோர்ட், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, மும்பை ஐகோர்ட்டில், சல்மான் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், அவருக்கு, இரு நாட்களுக்கு மட்டும், இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டது.இந்த இரு நாள் ஜாமின், நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சல்மான் கான் சார்பில், முழுமையான ஜாமின் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதி திப்ஷே முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

வெள்ளி, 8 மே, 2015

ஒபாமா இலங்கை வருகிறார்.அமெரிக்க இலங்கை உறவு மீண்டும் ஏறுமுகம்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முறையில் சர்வதேச உறணாவை பேணிவருகின்றார். இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் வருகை தந்தார்.

பிரிட்டனில் ஆளும் கன்செவேடிவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது!

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இது வரை தெரிந்த சுமார் 540 தொகுதிகளுக்கான முடிவுகளில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 325 இடங்களில் வென்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு இதுவரை 216 இடங்களே கிடைத்துள்ளன. ஸ்காட்லாந்தின் ஆளும் பிராந்தியக் கட்சியான, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அந்த மாகாணத்தின் 59 தொகுதிகளில் 55 இடங்களை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
இதுவரை ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியும், நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது.
பிரதமர் டேவிட் கேமரன் அவரது விட்னி தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார்.  Ranil Jeyavardana என்ற சிங்களவர கொன்செவேர்டிவ் வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். உமா குமரன் என்ற தமிழ் பெண் தோல்வியை தழுவியுள்ளார்.

தஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்கு ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை

Salman-Khan-six-pack-abs-Bodyகான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார்.
தற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் சொல்ல மறுக்கிறார்கள்; இந்து – முஸ்லிம் ஒற்றுமையோடு.
‘காரை நான் தான் ஓட்டினேன்’ என்று சல்மான்கானுக்காகக் கொலைக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொய் சாட்சி சொன்ன அசோக் சிங் ஒரு இந்து. என்னடா உங்க மனிதாபிமானம்?
இது மனிதாபிமானமல்ல? வர்க்க அபிமானம்.

Jeyamohan:ஈழத்தமிழருக்கு இங்கே குடியுரிமை இல்லை! எந்த வாய்ப்பும் இல்லை! பொறியியல் கற்றவர்கள்கூட மீன்கூடை சுமந்து .....

unnamedநண்பர் சந்திரசேகர் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளின் படிப்பிற்காகத் தன் வருமானத்தில் பெருமளவை செலவு செய்து வந்தவர். அவரது அகிலம் டிரஸ்ட் மூலம் 8 அகதி முகாம் பிள்ளைகள் கல்வி பயின்று வந்தனர். அவரது நண்பர் முத்துராமன் இதை ஒருங்கிணைத்துவந்தார். இவரது மரணத்தின் மூலம் அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிக்காலாயாகியுள்ளது. உதவ முடிகிறவர்கள் இதற்காக உழைக்கும் களப்பணியாளர் முத்துராமனை 9629136989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முத்துராமன் அறக்கட்டளை என எதையும் நடத்தவில்லை. அவர் உதவிதேவைப்படுபவர்களின் பட்டியலைத் தயாரித்து முழு விபரங்களுடன் உதவுபவர்களுக்கு அளிப்பார். உதவி செய்பவர்கள் நேரடியாகவே அந்த மாணவர்களுக்கோ அந்தக் கல்விநிறுவனங்களுக்கோ பணம் அனுப்பலாம். நேரடித்தொடர்பிலும் இருக்கலாம்.
இந்த மாணவர்கள் அனைவரும் சராசரிக்கும் மேலான மதிப்பெண்கள் பெற்றவர்கள். உயர்மதிப்பெண்கள் பெற்றவர்களும் சிலர் உள்ளனர். இவர்களின் பெற்றோர் அகதிமுகாம்களில் கூலிவேலை மட்டுமே செய்யக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் இலங்கையில் எத்தனை கல்வி பெற்றிருந்தாலும் அந்தச் சான்றிதழ்கள் இங்கே செல்லுபடியாவதில்லை

NGO க்கள் இல்லாத உலகம் போராட்டக்களமாக இருக்கும்.மனிதர் வாழும் உலகமாக இருக்காது?

செ.கார்கி : NGOs 4009 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கின்றது மத்திய அரசு. நீங்கள் நினைக்கலாம், மோடி மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு நேர் மாறாக உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 20 லட்சம் தொண்டு நிறுவனங்களுக்கு மேல் உள்ளது. இதில் வெறும் 8975 தொண்டு நிறுவனங்களை மட்டும் தடை செய்திருப்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (Foreign contribution regulation act) மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.ஆனால் உண்மை என்னவென்றால் என்.ஜி.ஓக்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இந்திய அரசால் இயங்க முடியாது. நேபாளத்திற்கு நிதி உதவி செய்ய தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கின்றது.

முரட்டு பாசத்தின் முட்டாள் தனத்தை காட்டும் கங்காரு

உயிர், மிருகம், சிந்து சமவெளி என மனசுக்கு சவாலான  படங்களை எடுத்த இயக்குனர் சாமி உருவாக்கியிருக்கும் திரைப்படம் கங்காரு. 'என்னால் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்திலும் படமெடுக்க முடியும்' என நிரூபிக்க சாமி எடுத்த இந்த முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே கூறலாம்.கைக்குழந்தையுடன் எஸ்டேட் வேலை செய்ய மலைக்கிராமத்திற்கு வரும் அர்ஜுனனுக்கு ஆதரவு கொடுத்து வேலையும் கொடுக்கிறார் தம்பி ராமய்யா. தங்கையை சுமந்துகொண்டே எல்லா வேலைகளையும் செய்துவரும் அர்ஜுனனை கங்காரு என அழைக்கிறார்கள். முரட்டு மனிதனாகவே வளரும் முருகேசனுக்கு தன் தங்கை ப்ரியங்கா தான் உலகம்.

18 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்த சொத்துக்கள் வெளிநாட்டில்?

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள்?

சற்று முன்னர் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும் என எக்ஸிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள்படி இறுதி முடிவுகள் வருமானால் தற்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் ஆட்சியமைப்பதற்கு மேலும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.அதாவது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 326 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போதைய கேமரன் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக்கட்சியாக இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உஷார்....ஷாப்பிங் மால்களில் காத்திருக்கும் 'சதுரங்க வேட்டை' மோசடி!


சதுரங்கவேட்டை' என்ற தமிழ்த்  திரைப்படத்தில் கண்ணில் எதிர்ப்படும் அப்பாவி மக்களை, போகிற போக்கில் ஏமாற்றி பணம் கொள்ளையடித்துச் செல்வார் கதை நாயகன்.& ஆனால் இது போன்ற நுட்பமான ஏமாற்று நிகழ்வுகள் நமக்கும் நேர்கிறபோதுதான், இப்போதைய நவீன கொள்ளைக்காரர்கள் குறித்து தெரிய வருகிறது. நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல மாலில் உள்ள பசாரில்  எனது குடும்பத்தினருடன் பொருட்களை  வாங்கிக் கொண்டிருந்தேன். அங்குள்ள ஒருவர் ஏதோ கோடைகால குலுக்கல்  போட்டிக்காக எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறித்துக்  கொண்டார் இந்நிலையில் நேற்று  காலை எனக்கு 044-43069996 என்ற எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிய நபர் தனது பெயர் தேவா என்றும், எனது பெயர் Lucky Draw போட்டியில் தேர்வு செய்யபட்டுள்ளதாகவும் கூறினார். எனக்கு இன்ப அதிர்ச்சி.

வியாழன், 7 மே, 2015

சல்மான்கானுக்கு 1 மணிக்கு சிறை 5 மணிக்கு ஜாமீன் வேகமோ வேகம்

கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சல்மான் கான், மாலையே தனது வீட்டுக்குத் திரும்பினார். கடந்த 2002, செப்டம்பர் 28ம் தேதியன்று அதிகாலையில், சல்மான் கான் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு தனது காரில் பாந்த்ராவில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு வரை நடந்த விருந்தில் கலந்து கொண்ட அவர், மது போதையில் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பாந்த்ரா பாலிஹில் ரோடு பகுதியில் சல்மான் கான் கார் வந்தபோது, சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் பலியானார். காலீம் முகமது, முன்னா மலாய் கான், அப்துல்லா ரவுப் ஷேக், முஸ்லிம் ஷேக் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் கானுக்கு அன்றைய தினமே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Read more //tamil.oneindia.com/

Actor சல்மான் கான் என்றொரு கொடியவனுக்கு இந்த தண்டனை போதாது


கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.
கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.
சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

Kerala 4 தடகள வீராங்கனைகள் தற்கொலை முயற்சி ஒருவர் பலி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த வீராங்கனை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தவிர விஷம் அருந்திய மேலும் 3 வீராங்கனைகள் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நீர் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்த 4 வீராங்கனைகளில் இருவர் தங்கப்பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள். பயிற்சி மையத்தில் மூத்த வீரர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தந்த தொந்தரவே தங்கள் பிள்ளைகள் தற்கொலை முயற்சியில் இறங்க காரணம் என வீராங்கனைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் பற்றி தெரிந்தவுடன் தேசிய விளையாட்டு ஆணைய தலைவரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய விளையாட்டு துறை இணை மந்திரி சர்பானந்தா சோசோவால், இச்சம்பவம் குறித்தும், வீரர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பற்றியும் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானில் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் கொலைகாரர்கள் நால்வருக்கு மரணதண்டனை

ஆப்கானிஸ்தானில் கும்பலால் பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 புனித நூலை எரித்ததாகக் கூறி, ஃபர்குண்டா (27) என்ற பெண்ணை ஒரு கும்பல் கடந்த மார்ச் மாதம் அடித்துக் கொன்று தீயிட்டுக் கொளுத்தியது (படம்).
 தலைநகர் காபூலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக 19 போலீஸார் உள்பட 49 பேர் மீது அந்த நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
 விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு அந்த நீதிமன்றம் புதன்கிழமை மரண தண்டனை விதித்தது. மேலும் 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அந்த நீதிமன்றம், 18 பேர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.
 மற்றவர்களுக்கான தண்டனை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். dinamani.com

ஜெயலலிதா: தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு உயிரை மாய்த்து கொள்ளவேண்டாம்

அ.தி.மு.க. இளைஞர் பாசறை உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிதானம் காக்க வேண்டும் என் மீது பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் தொண்டர்கள், அவ்வப்போது ஒரு சில இடங்களில் எனக்கு பெரிதும் மன வருத்தம் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர். அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 8-வது வார்டை சேர்ந்த இளைஞர் பாசறை உறுப்பினர் ஆர்.கார்த்திக் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரம் அடைந்தேன். என் உயிரினும் மேலான தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

சமசீர்கல்வியை வேண்டா வெறுப்பாக அதிமுக!

சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி, 8,000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில், 4,800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3,500 மெட்ரிக், 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 159 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இதனால், 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் அளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், 'தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு செல்ல, என்.ஓ.சி., என்ற தடையில்லா சான்று தரக்கூடாது' என, பெற்றோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வியாளர்களின் பெரும் போராட்டங்களுக்குப் பின், சமச்சீர்க்கல்வி அமலானது. ஆனால், சமச்சீர்க்கல்விக்கு துவக்கத்திலேயே அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேண்டா வெறுப்பாக இந்தத் திட்டம் பெயரளவில் அமலாகிறதா என்ற சந்தேகம் கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது.   எங்கே நம் அமெரிக்க வேலைக்கு குப்பன் சுப்பன்  போட்டியாக வந்துவிடுவானோ என்ற  ஆரியர்களின் பேராசை! .

பொதுப்பணி துறை அதிகாரிகள் ஒப்பந்தகாரர்கள் போன் உரையாடல் அம்பலம்! கமிசன் பேரம் கொடிகட்டி பறக்கிறது

வாட்ஸ் அப்' மூலம் வெளியாகி, பொதுப் பணித்துறையை நேற்று கலக்கிய, அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் இடையேயான போன் உரையாடல் முழு விவரம்:
அதிகாரி: நேற்று நீங்கள் அழைத்தபோது, நான் மீட்டிங்கில் இருந்தேன். மொபைல் போனை,'சைலன்ட்'டில் வைத்திருந்ததால் எடுக்கவில்லை. நான் அழைத்தபோது நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை.
ஒப்பந்ததாரர்: நான் வண்டியில் போய்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் ஆகிவிட்டதால், நேரிலேயே வந்து சந்திக்க நினைத்திருந்தேன்.


பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரியின் நடவடிக்கையால், அந்த துறையில் கமிஷன் அதிகரிப்பு பிரச்னை அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் சென்னையில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரால், போலீசார் டென்ஷன் அடைந்தனர். பல இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை தேடித் தேடி அகற்றினர்.பொதுப்பணித்துறையில், கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறை என, இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.*நீர்வளத்துறையின், நான்கு மண்டலங்கள் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. *கட்டடங்கள் பிரிவு, மூன்று மண்டல தலைமை பொறியாளர் கீழ், 14 வட்டங்கள், 50 கோட்டங்களை கொண்டு இயங்கி வருகிறது. பொதுப்பணித்துறை தொடர்பான கட்டடங்கள் மட்டுமின்றி பல துறைகளுக்கான கட்டடங்களும், இப்பிரிவு மூலம் கட்டப்படுகின்றன.

சோனியா: தனி நபரின் ஆட்சி அதுவும் ஒரு சிலருக்காக நடக்கிறது!

மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும் மோடி அரசு மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி, "மோடி அரசு சிலருக்காக ஒருவரால் நடத்தப்படுகிறது. ஆட்சியைப் பிடித்து ஓராண்டு ஆகிவிட்டது ஆனால் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆளும் கட்சி, நாடாளுமன்றத்தில் அகந்தையுடன் நடந்து கொள்கிறது.
இந்த ஓராண்டில் அவர்கள் தாங்கள் செய்தததாக சொல்லி மார்தட்டிக் கொள்ளும்? விவசாயிகளுக்கு விரோதமான நில மசோதாவை நிறைவேற்றியதற்காக பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா?

புதன், 6 மே, 2015

மஹிந்தாவும் மைத்திரிபாலாவும் திடீர் சந்திப்பு

மோடியின் துதிபாடிகளால் நாசமாய் போன நேபாள உறவு! எழவு வீட்டில் சீரியல் எடுத்த இந்திய ஊடகங்கள் !

nepal 2ப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின் அடிவாரத்திலுள்ள கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் பகுதியைத் தாக்கிய பூகம்பம் மொத்த நாட்டையும் குலுக்கிப் போட்டது. இதன் அதிர்வுகள் இந்தியத் துணைக் கண்டமெங்கும் எதிரொலித்தது.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக தலையிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றென்பது ஆச்சரியமான விசயமல்ல.

பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய ரபேல் விமானங்களை சு.சுவாமி ஏன் எதிர்க்கிறார்? பங்காளி ? பங்கு? எது பிரச்சனை?

மோடி - பிரான்ஸ் அதிபர்மொரிசியஸ் போயாச்சு, பாரிஸ் போக வேண்டாமா என்று ஐரோப்பாவுக்கு விளம்பரச் சுற்றுலா சென்று வந்த பவர் ஸ்டார் மோடி, பல்லாயிம் கோடி ரூபாய் செலவில் 36 நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் எந்திரங்களை வாங்க முடிவு செய்தார். இதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தோடு கையெழுத்திட்டுள்ளார். தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் தலையில் கட்டவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்கள் தாம் அந்த ‘நவீன’ மூட்டைப் பூச்சி எந்திரங்கள்.
“ரஃபேல் போர் விமானங்களில் மைலேஜ் கம்மி என்பதால் அதை வாங்கக் கூடாது” என இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கொதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இந்தியா தனது இராணுவத்துக்கு தீனி போட பில்லியன் கணக்கான டாலர்களை அழுது வருவதால், அதில் அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமி கொதிப்பது வெறும் பங்காளிச் சண்டைதான்.

வைரமுத்து மீது விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் இன்றைய கவிஞர்களில் அது வைரம்தான் !

நா.முத்துக்குமார், தேசிய விருதை இரண்டாவது முறை வாங்கியிருக்கிறார். அதனால் முத்துவை, வைரமுத்துவோடு ஒப்பிடுகிறார்கள் பலரும். வைரமுத்துவின் மேல் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவருடைய வார்த்தைகள் கண்ணதாசன் வார்த்தைகளை விட ஆளுமை நிறைந்தது.; அதுபோல் பெரியார் ஆதரவை, திராவிட இயக்க ஆதரவு அரசியலை ஒரு போதும் கவிஞர் வைரமுத்து மறைத்ததில்லை. அதைப் பல நேரங்களில் தீவிரமாகப் பேசவும் செய்திருக்கிறார். பாபர் மசூதி இடிப்பதற்கு நெருக்கமான காலங்களில், பார்ப்பனர்கள் நிறைந்த சபையில், “கடவுளுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்குக் கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.” என்று தீர்க்கமாகத் தீர்த்துப் பேசினார். அப்போதும் அவர் புகழின் உச்சியில் இருந்தார்.

நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை !நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக்.....


2002ஆம் ஆண்டில் மும்பையில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.இந்த சம்பவத்தில் ஐந்து பேர் மீது கார் ஏறியது. மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைச் செய்ததாக சல்மான் கான் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இந்த விபத்து நடந்தபோது, தன்னுடைய ஓட்டுனர்தான் காரை ஓட்டிவந்ததாக சல்மான் கான் கூறினார். ஆனால், சல்மான்கான் தான் காரை ஒட்டியதாகவும் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர்


கோவை: தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில மாவோயிஸ்ட் தலைவன் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையில், 5 இடங்களில் தாக்குதல் நடத்தியதும்,  மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும்  தெரியவந்துள்ளது.  பிடிபட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  அவர்கள் சாலையில் வீசி  எறிந்த டைரி, சிம்கார்டு போலீசாரிடம் சிக்கியுள்ளது.  இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவை  அருகேயுள்ள  கருமத்தம்பட்டியில் அன்னூர் ரோட்டில் சதாசிவம் (55) என்பவர் பேக்கரி நடத்தி  வருகிறார். நேற்று மாலை  மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, காரில் வந்த 5  பேர் டீ குடிக்க பேக்கரி முன்பு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அதே  சமயம்  இவர்களை பின் தொடர்ந்து வந்த கோவை கியூ பிரிவு போலீசார் மற்றும் ஆந்திரா  சிஐடி போலீசார் துப்பாக்கி  முனையில் சுற்றி வளைத்தனர்.

சவுதியில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை

ஜெட்டா - சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவரை கொலை செய்த 5 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில் இந்தியர் ஒருவர் நடத்தி வந்த கடைக்குள் கடந்த ஆண்டு 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் நுழைந்த அவர்கள், தடுக்க முயன்ற இந்தியரை வெட்டி கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பினர். அங்கிருந்த வீடியோ காமிராவில் அவர்களின் உருவம் பதிவானது. இதை வைத்து கொள்ளையர்களை சவுதி போலீஸ் எளிதாக கைது செய்தது. இவர்களில் இண்டு பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற 3 பேரில் ஒருவர் சாட் நாட்டையும், ஒருவர் எரித்ரீ நாட்டையும், மற்றொருவர் சூடான் நாட்டையும் சேர்ந்தவர்.

அன்புமணி கடிதத்திற்கு திமுக கிடுக்கி பிடி! வரிக்கு வரி பதிலடி!

தமிழகத்தின் அவலங்களை பட்டியலிட்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பகிரங்க கடிதம் எழுதியிருந்த தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, 'நோய்வாய் பட்டிருக்கும் தமிழகத்தை டாக்டர் என்ற முறையில் நான் குணப்படுத்துவேன்' என, நேற்று முன்தினம் பதிலளித்திருந்தார் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி.அதற்கு தி.மு.க., சார்பில் கட்சியின் முன்னாள் எம்.பி.,யான தாமரைச்செல்வன் பதிலடி கொடுத்திருக்கிறார். அன்புமணியின் விமர்சனத்துக்கு வரிக்கு வரி கேள்வி எழுப்பி தாமரைச்செல்வன் விடுத்திருக்கும் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாமரைச்செல்வன் அறிக்கை: 'என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பதவிக்கு போட்டியிட மாட்டோம்' என்று தானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்.
* இந்துார் மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டில்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றி பேசலாமா?

நிதின் கத்காரி :எனது பங்களாவில் பயிர்களுக்கு சிறுநீர்தான் பாய்ச்சுகிறேன்! முடியல்ல சாமி!

புதுடில்லி: ''சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில், நிதின் கட்காரி பேசியதாவது:
நாட்டில் பல இடங்களில் வறட்சி, தண்ணீர் இல்லை என்கின்றனர்; தண்ணீரின்றி, பயிர்கள் நாசமாகிப் போனதாக பலரும் கூறுகின்றனர். அவர்களுக்கு, நான் ஒரு யோசனை சொல்வேன். தண்ணீர் இல்லை என்றால் என்ன, சிறுநீரை பயன்படுத்திப் பாருங்கள்; நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை; உண்மையிலேயே பரிசோதனை செய்து பார்த்துள்ளேன். டில்லியில், நான் இருக்கும் பங்களா, பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இருக்கிறது. அதில் இருக்கும் தோட்டத்தில், சிறுநீர் சோதனை செய்தேன்; சிறுக, சிறுக சிறுநீரை சேகரித்து வந்தேன்; ஒரு பிளாஸ்டிக் கேனில், 50 லிட்டர் சேர்ந்ததும், தோட்டக்காரனை கூப்பிட்டு, இதை, மரங்களுக்கு பாய்ச்சு என்றேன்.அதன்படி, சிறுநீர் பாய்ச்சப்பட்ட மரங்கள் வேகமாக வளர்ந்தன;  அதுசரி....இவர் ஏன் பிடிச்சு வச்சு ஊத்தணும்......வரப்ப நேரா செடியியிலேயே அடித்துவிட வேண்டியதுதானே.....முன்ன ஒரு  மொரார்ஜி இப்ப இவனுங்க ....கங்கையை வேற சுத்தம் செய்யபோறேன்னு கிளம்பிராய்ங்க ! உலக அரங்கில் ரொம்ப நல்ல பேரு வரும்?

செவ்வாய், 5 மே, 2015

பிரிட்டனில் அதிக பணத்தை சாரிட்டி செய்வதில் 13 இடத்தில ஈழத்தமிழர் !

சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான்.
உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , மோபைல் கம்பெனியை ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக லண்டனில் மோபைல் போன் ஜாம்பவான்களாக இருந்த பல கம்பெனிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். உலக தரவரிசையில் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இவர் இடம்பித்தது மட்டும் அல்ல ,ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

அருந்ததி ராய் :அன்பிற்கு உரிய திருமாவளவன் அவர்களே பாஜகாவினர் வெட்கம் இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று....

அருந்ததி ராய்கடந்த மே 2-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கிய ’அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரையின் தமிழாக்கம். இந்த உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். விழாவில் விநியோகிக்கப்பட்ட இந்த உரையை ஜோஷூவா ஐசக் ஆசாத் பேஸ்புக் பதிவாக வெளியிட்டிருந்தார். அதை இங்கே வெளியிடுகிறோம். அனைவருக்கும் எமது நன்றி. - வினவு
ன்பிற்குரிய திருமாவளவன் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களே!, நண்பர்களே! வணக்கம்! இவ்வாறு என்னை கௌரவப்படுத்தியதற்கு நன்றி. (படம் : நன்றி thehindu.com)
அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கௌரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணிகளைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டுகிறேன்.
வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

நடிகர் சல்மான்கான் HIT and Run வழக்கில் நாளை தீர்ப்பு ! சினிமாக்காரன் போதையில் காரை ஏற்றி கொன்றாலும் சட்டம்...Wait and see?

நடிகர் சல்மான்கான் மீது 2002–ம் ஆண்டு செப்டம்பர் 28–ந் தேதி,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார்.மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக் மற்றும் முஸ்லிம் சேக் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, பின்னர் விசாரணையை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றியது. அதன்படி, செசன்சு கோர்ட்டில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது.12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில், சல்மான்கான் தரப்பு வக்கீல் மற்றும் அரசு தரப்பு வக்கீல் ஆகிய இருவரது வாதமும் கடந்த மாதம் 21–ந் தேதி முடிவுக்கு வந்தது.

கண்ணகியையும் அதிமுக மந்திரிங்க கும்பிடுராங்கோ! எந்த சாமின்னாலும் பரவாயில்லையாம்

அம்மாவின் விடுதலைக்காக கோவில் கோவிலாக அபிஷேக ஆராத்தி செய்யும் அதிமுக கொள்கை சிங்கங்கள் ஒரு சாமியையும் மிஸ் பண்ணிட கூடாதே என்ற கவலையில் தற்போது கண்ணகியையும் வழிபட தொடங்கி உள்ளார்கள் . கண்ணகி சிலை காட்சிக்கு அபசகுனம் என்று டோசர்கள் வைத்து பிடுங்கி அருங்காட்சியகத்தில் தூசி படிய விட்டது ஒரு திமிர் காலம் .இப்போ என்னத்த தின்னா பித்தம் தெளியும்கிற நிலையில் கழக அடிமைகள் கூட்டம் கண்ணகியையும் விட்டு வைக்கவில்லை. வளர்மதி கோகுல இந்திரா சைதை துரைசாமி  போன்றவர்கள் கண்ணகிக்கு பூஜை செய்யும் கண்கொள்ளா காட்சி. ஐயோ அம்மா வெளியே வந்துற கூடாதேன்னு இவிங்க கும்பிடுராயங்கன்னு நான் சொல்லல!

காவியா மாதவன் மீண்டும் திருமணம் செய்ய.....

காசி, என் மன வானில் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கும் இவருக்கும் நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே கணவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். காவ்யாவுக்கும் மலையாள நடிகர் திலீப்புக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது.இந்நிலையில் திலீப்புக்கும் அவரது மனைவி மஞ்சு வாரியருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததுடன் விவாகரத்தும் பெற்றனர். இதற்கு காரணம் காவ்யா மாதவன் என குற்றம் சுமத்தப்பட்டது. அதை ஏற்கனவே காவ்யா மறுத்திருந்தார். தற்போது மீண்டும் அதுகுறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். திலீப், மஞ்சுவாரியர் பிரிவுக்கு எந்த வகையிலும் நான் காரணம் கிடையாது. அப்படி சொல்வது என் மனதில் பெரிய வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரின் உறவைபற்றியோ, அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிடவோ யாருக்குமே உரிமை கிடையாது.

நேபாளத்தில் இந்திய ஊடங்கங்கள் மீது கடும் விமர்சனம்! விளம்பர பிரியர் மோடியின் உபயம்?

இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது. இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது. நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'

தமிழகத்தில் 105 கவுரவ கொலைகள் சென்ற ஆண்டில் மட்டும்! கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 105 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் இயக்கம் மூலம் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் நாளை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளேன். > தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டும்தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. இதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத குடும்ப உறுப்பினர்கள் கூலி ஆட்களை வைத்து கவுரவக் கொலைகளை செய்கின்றனர். கடந்த ஓராண்டில் 150 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.tamil.thehindu.com/

சேவை வரி மசோதா நிறைவேற அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை! பின்வாங்கும் அதிமுக?

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், இன்சூரன்ஸ் மசோதா, நிலக்கரி சுரங்க மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை, பா.ஜ., நிறைவேற்றிகாட்டியது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிவிட்ட போதிலும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில், வரும் 8ம் தேதியுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையவுள்ள நிலையில், கடைசி வாரத்தின் முதல்நாளாக, இன்று பார்லி., கூடுகிறது. டில்லியில், விவசாயி தற்கொலை சம்பவம், காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, நிறைவேற்றுவது கடினமே என்ற நிலைக்கு, பா.ஜ.,வே வந்துவிட்டது. இதனால், இன்னொரு முக்கியமான, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மட்டுமாவது நிறைவேற்றிட, பா.ஜ., தீவிரம் காட்டுகிறது. ஆனால், அது முடியுமா என்பது தெரியவில்லை. அரசியல் சட்டத்திருத்த மசோதா என்பதால், பார்லிமென்ட்டின் மொத்த பலத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. அ.தி.மு.க., உள்ளிட்ட, முக்கிய கட்சிகளின் நிலை, என்னவாக இருக்கும் என்ற பதைபதைப்பில், பா.ஜ., உள்ளது.

திங்கள், 4 மே, 2015

சு.சுவாமி : ஜெயலலிதா தண்டனையில் இருந்து தப்பவே முடியாது! முன்னாள் மதுரை எம்பின் வஞ்சம்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்றும் அவர் இந்த வழக்கில் இருந்து தப்பவே முடியாது என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்ப முடியாது. வழக்கு அந்தளவு வலுவாக உள்ளது. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடியும்?. எனவே இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு நீதிபதியால் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் கருதுகிறேன். மதுரல இரண்டாவது தடவையும் சீட்டு தந்திருந்தா இவாளுக்கு நான் ரோதனை குடுத்திருக்க மாட்டேனே! என்னைய கவனிக்காதவங்களுக்கு இது பாடம் , மோடியும் கொஞ்சம் படிச்சா தேவலை! இன்னும் அவுக என்னை சரியா கண்டுக்கல . நான் அடிச்சா தாங்க மாட்டே .... அட தலையைதாய்ன் சொல்றேன்  

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. எனவே பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் சிதைந்து போன நேபாளத்திற்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அங்கு இந்தியா உட்பட 34 நாடுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

மற்றொரு அதிகாரி தற்கொலை! அதிமுகவினரின் கமிஷன் வேட்டையால் செத்து கொண்டிருக்கும் நிர்வாகம்

திருவாரூர் : நெருக்கடி காரணமாக நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூதாகரமாகி உள்ள நிலையில், சென்னையில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை மேற்பார்வையாளராக இருக்கும் முத்துகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்ற அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார் தினமலர்.com

பஞ்சாப் :கனடாவில் இருந்து தாய் கூலி படையை ஏவி மகளை கொன்ற வழக்கில் தீர்ப்பு

டெல்லி: கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான ஜஸ்விந்தர் கௌர். அவர் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா வந்தபோது சுக்விந்தர் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்தார். பின்னர் அவர் தனது பெற்றோர், தாய் மாமாவின் விருப்பத்திற்கு எதிராக சுக்விந்தரை 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஜஸ்விந்தர் கனடா சென்றார். அவர் கனடாவில் இருந்தபோது அவரது தாய் ஜஸ்விந்தர் போன்று கையெழுத்துபோட்டு சுக்விந்தர் மீது போலி புகார் எழுதி அதை ஃபேக்ஸ் மூலம் பஞ்சாப் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அறிந்த ஜஸ்விந்தர் இந்தியாவுக்கு வந்து போலீசாரை சந்தித்து அது போலி புகார் என தெரிவித்தார்.

பார்வதி : சான்ஸ் கிடைத்தாலும் அவசரப்பட மாட்டேன் !

பூ படத்துக்கு பிறகு சென்னையில் ஓர் நாள், மரியான் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருப்பவர் பார்வதி. உத்தம வில்லன் படத்தில் கமல் மகளாக நடித்திருக்கிறார். அவர் கூறியது:ஆரம்ப கட்டதிலேயே பெரிய படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். இதன் மூலம் எனக்கு நடிக்கத் தெரியும் என்று பலரும் உணர்வார்கள். இந்த வேடத்தை நஸ்ரியாவால் செய்ய முடியுமா என்று இனி யாரும் என்னைபார்த்து சந்தேகப்பட முடியாது. அதற்காக டெஸ்ட் ஷூட்டும் தேவையிருக்காது. தற்போது கன்னடத்தில் வாஸ்கோட காமா, மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மேலும் பட வாய்ப்புகள் தற்போது வந்திருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து மெதுவாகவேத்தான் நடிக்க ஒப்புக்கொள்வேன்.இவ்வாறு  பார்வதி கூறினார் - See more at: /tamilmurasu.org/

300 யாஸீதி மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்


இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள், தாங்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 300 யாஸீதி சிறுபான்மையின மக்களை கொன்றுள்ளதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 300 யாஸீதி மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர் நாட்டின் வடக்குப் பகுதியில் அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மோசூல் நகருக்கு மேற்குப்புறமாக உள்ள பகுதியில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாஸீதி தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு கோடை காலத்தில் வடக்கு இராக் முழுவதும் ஐஎஸ் இயக்கத்தின் பிடியில் வீழ்ந்தபோது, அவர்கள் ஆயிரக்கணக்கான யாஸீதிக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பெருமளவிலானோரை கொலையும் செய்திருந்தனர். பிடித்துவைக்கப்பட்டிருந்த பல பெண்களை அவர்கள் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருந்தனர். யாஸீதி மக்களின் மத நம்பிக்கையை நிந்தனை செய்துள்ள ஐஎஸ் அமைப்பினர், யாஸீதிகளை மதத்துரோகிகள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

கோடுகளால் தமிழர் வாழ்வை கோலமிட்ட ஓவியர் கோபுலு

எப்படி மறைவார் கோபுலு! அவர் காட்சிப்படுத்தியதன் வழியாகத்தானே தமிழகமும் தன்னைப் பார்த்துக்கொண்டது; மற்றவருக்கும் நம்மைக் காட்டியது. கடந்த நூற்றாண்டில் 1940களின் நடுவில் இருந்து இப்போதுவரை பல கூச்சல்களுக்கு நடுவில் அமைதியாகத் தமிழ் மக்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டே நடந்த கோடுகள் அவை. சோர்வே அற்று, உயிர்ப்போடு கடைசிவரை துள்ளித் திரிந்து, காட்சி ரூபமாய் விரிந்து நம் வாழ்வைக் கொண்டாடச் செய்த கோடுகள். ஓவியனின் தீர்க்கத்தைச் சொல்லிக்கொண்டே நடனமாடிய கோடுகள் அவை.
ஒரு பெரும் கூட்டம் கட்டுண்டபடியே அக்கோடுகளின் பின்னால் வாழ்வின் உன்னதத்தைப் பருகிக்கொண்டு மிதந்து திரிந்தது. அந்த வழியிலேயே ஓடி அவரின் நுட்பத்தையும் மாய சக்தியையும் அடைந்து விட வேண்டும் என்ற பெரும் தாகத்துடன் அலைந்த ஆயிரக் கணக்கானவர்களின் கூட்டத்தில் கடைசிச் சிறுவன் நான்.

தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது.ஆவின் பால் கொள்முதல் குறைப்பு பன்னீர் ஆட்சியின் அவலம்!


தமிழகத்தில், தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை குறைத்ததால், பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்துக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். அத்துடன் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகம், உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால், தினசரி, 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது. தமிழகத்தில், வடகிழக்கு மழை பொய்த்து, வறட்சி நிலவியதால், பால் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க, பால் உற்பத்தியில் தீவிரம் காட்டினர். ஆவின் நிர்வாகமும், பால் உற்பத்தியை அதிகரிக்க, அதிகாரிகளை களம் இறக்கி விட்டது. கடும் நஷ்டம்: தமிழகத்தில் தற்போது தினமும், 30.20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட, வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்கிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் பாலின் அளவும் கூடியுள்ளது. இதனால், ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலில், 10 முதல், 18 சதவீதம் வரை குறைப்பு செய்யும் வேலையை துவக்கி உள்ளது.

நீர்விழ்ச்சியில் குதித்து உயிர்விட்ட இலங்கை தமிழ் ஜோடி

பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். பதுளை  கொஸ்லந்தை  தியலும நீர் வீழ்ச்சிக்கருகில் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துகொள்ள தயாராயிருப்பதாக கொஸ்லந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பதில் பொறுப்பதிகாரி நிஹால் சுகததாச பெண் கான்ஸ்டபிளுடன் ஸ்தலத்துக்கு சென்றார். அங்கு பல காதல் ஜோடிகள் இருந்ததால் விசாரணைகளில் சந்தேகம் ஏற்படவில்லை.
அன்று காலை இந்நீர் வீழ்ச்சிக்கு கீழ்ப்பகுதியில் காணப்படும் ஹோட்டலொன்றில் இளம் ஜோடியொன்று உணவுப் பொட்டலமொன்றை வாங்கியதாக தகவல் கிடைத்ததையடுத்து ஹோட்டல் முகாமையாளரை விசாரணை செய்ததில் இளம் ஜோடியின் அங்க அடையாளங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஞாயிறு, 3 மே, 2015

ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜி


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூர், மலையின் மறுபுறத்தில் உள்ள குடிசைகளில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களைக்கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். கெலார் பகுதியை சுற்றியுள்ள சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.

தங்கர் பச்சான் :விவசாயிகள் தற்கொலை தீராத அவமானம்! வல்லரசு கனவு வேண்டாம் கோவணத்தை காப்பாற்றுங்கள்

எழுத்தால் எழுதி இதனைப் புரிய வைத்துவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. யாருக்குப் புரிய வைக்கிறோம், புரிந்து எதுவும் நடக்கப் போவதில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரிகிறது.
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்பதெல்லாம் தெரிந்தும் அவனது பாரம்பரியத் தொழிலைத் தொடரவே நினைக்கிறான். அவனது உழைப்பில் உடல் வளர்த்து, உயிர் வளர்த்துக் கொண்டிருக்கும் மக்களும், அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இயற்கை யும் அவனை கைவிட்டுக் கொண்டிருக் கிறது. அவனும் அவனது குடும்பமும் மற் றவர்களைப் போல் வாழ வேண்டுமென யாருமே நினைப்பதில்லை.
தங்களது ஊதிய உயர்வுக்காகவும் இன்னும் பிற தேவைகளுக்காகவும் இந்த நாட்டில் ஒரு உழவனைத் தவிர, யார் வேண்டுமானாலும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும். காலம் முழுக்க உழைத்து ஏற்கெனவே பட்டினியில் கிடக்கும் அவன், யாரை நம்பிப் போராடுவது?

ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடக்க ஊழல் பெரும் தடை!

லகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு முறை கூட ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது இல்லை. அதற்கான பேச்சுகள் கூட இதுவரை மருந்துக்கு கூட எழுந்தது இல்லை.
வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலும், 2020-ல் ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறப் போகிறது.  இந்நிலையில்தான் 2024-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விரும்புவதாகவும், அகமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக வெளியான தகவல் ஆஹா... மோடி என்று விளையாட்டு பிரியர்களை சொல்ல வைத்தது.

2500 யேஸீதிகளை நேற்றைய முன்தினம் முதல் ‘காணவில்லை’ – இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு.......

இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…
இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட்  கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள்.  இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.
வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும்  கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.
இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்!

நேபாள இடதுசாரிகள் எச்சரிக்கை: இந்தியாவால் நேபாள பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்!

நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர்.
நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷீல் கொய்ராலா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் மோகன் வைத்யா, நேபாள விவசாயக் கட்சித் தலைவர் நாராயண் மான் பிஜுக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புகை கக்கும் வாகனங்கள் பதிவு ரத்து? புதிய சட்டம் வாகன உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதம்?

புதுடில்லி: சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிக புகை கக்கும் கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும், அந்த வாகனங்களை பறிமுதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகர் டில்லியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், காற்றின் தரம் மாசு அடைவதாக புகார் எழுந்துஉள்ளது. இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், டில்லி சாலைகளில் இயங்குவதற்கு தடை விதித்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கேரி மைத்திரி அரசுக்கு புகழாரம்!

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அங்கு இலங்கையின் வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் ஜான்கெர்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமெரிக்க மந்திரி ஜான்கெர்ரி நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் புதிய அரசு தமிழர்களுக்கான ஜனநாயகத்தை ஊக்கப்படுத்தவும், மனித உரிமைகளுக்காகவும், மறுகட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அரசு செயலாற்றுவதற்காக தனது கதவுகளையும், மனதையும் திறந்து வைத்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து மக்களும் வளம்பெறவும் அரசு பாடுபட்டு வருகிறது.