வெள்ளி, 3 மார்ச், 2017

நீதிமன்றம்... நிறுத்தத் தவறினால், நீதிமன்றமும், ஈஷாவுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

1-20170225_JMT_0590-eவில்லா கட்டும் வில்லன். by Savukku · March 1, 2017
ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 122 அடி உயர சிவன் சிலையை நிறுவி அதை திறப்பதற்கு பிரதமர் மோடியை வரவழைத்ததும், எதிர்ப்புகளை மீறி அதில் பிரதமர் கலந்து கொண்டதும் பல்வேறு மட்டங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷா மையம் குறித்தோ, ஜக்கி வாசுதேவ் குறித்தோ எவ்விதமான விமர்சனங்களையும் எழுப்ப முடியாது.   அந்த அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரவலாக பெருகி இருந்தனர்.   ஆனால், இன்று ஈஷா மையத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.     ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம்.

அதிமுக எம்பிகளில் மூன்று அணி தம்பிதுரையின் பதவி காலி?

பிரதமர் மோடியுடனான பத்து நிமிட சந்திப்புக்கு இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.இந்த பயணத்தில் அவர் சாதித்தது என்ன என விசாரித்தால் உதட்டைப் பிதுக்குகின்றனர்,உயர் அதிகாரிகள்.
மாநில முதலமைச்சர்கள் பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்லும்போது,பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே பிரதமரைச் சந்திக்கும் நாளுக்கு முன்னதாகவே டெல்லிக்குப் பயணமாவார்கள்.
இல்லையெனில் சந்திப்பு நடக்கும் நேரத்திற்கு 4 மணிநேரம் முன்பாக டெல்லிக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால் எந்த நிகழ்ச்சியும் இல்லாதநிலையில், 27மாலை சந்திப்புக்கு 26-ம் தேதி இரவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்றுவிட்டார்.

121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4கிலோ தங்கம்!

பழனியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,"மூன்று கிலோ தங்கத்திற்கும் மூன்று கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் இழந்து விட்டார்கள்.இனி அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது” என்று கூறியது, சாதாரணமானது அல்ல. இதன் பின்னணியை விசாரித்தோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறை தேடுதல்வேட்டை நடத்தியபோது, அவர்களுக்கு நெருக்கமான ஒரு நகைக்கடையிலும் சோதனை நடத்தியது. அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரின் லஞ்சப்பணம் வைரங்களாக அந்த நகைக் கடையில் மாற்றப்படுகிறது என சர்ச்சைக்குள்ளான நகைக்கடை,வைர வியாபாரத்துக்குப் பேர்போன கீர்த்திலால் ஜுவல்லரி.அந்த நகைக் கடையிலிருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமானவரித் துறை கண்டுபிடித்தது.

வியாழன், 2 மார்ச், 2017

எலிசபெத் மகாராணியோடு மோடி பாகுபலி 2 பார்க்கப்போகிறார் .. இங்கிலாந்து ராணியை விட இவர் ஆடை ரிச் ஆக இருக்கணுமே? rss கவலை? ....


ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்தியா முழுக்க பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. அனுஷ்கா–பிரபாஸ் நடித்த இந்தப் படம் இதுவரை ரூ.600 கோடி வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. இதில் ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்தது. இதனால் இதன் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு முதல் பாகம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னரே ஏப்ரல் 24ம் தேதி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடுயூட்டில் இந்தியாவின் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்புக் காட்சியாக இந்தப் படம் திரையிட உள்ளது. பாகுபலி 2 படத்துடன் மற்ற சில படங்களும் இந்த நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ராணி இரண்டாம் எலிசபெத்தும், பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு முன்னால் இரு நாட்டு தலைவர்களும் பாகுபலி 2 படத்தை பார்க்க உள்ளனர்.  மின்னம்பலம்

என் தேசம் என் உரிமை கட்சி தனித்துப் போட்டி! திராவிட மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாதாம்!


வரவிற்கும் உள்ளாட்சி தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று என் தேசம் என் உரிமை கட்சி அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 'லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் புதிதாக என் தேசம் என் உரிமை என்ற கட்சியை துவங்கினர். இந்த கட்சியை துவங்கிய சில நாட்களில் ஆன்லைன் மூலம் 6 லட்சம் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைந்துள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இக்கட்சியின் ஒருங்கிணைபாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,

தாமிர பரணி உபரி நீரை கோக் பெப்சி கம்பனிகள் பயன்படுத்த (அ) நீதிமன்றம் அனுமதி!

Sundarrajan.Mullai? தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் “நீராதார துறை ” (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஒரு உண்மையென்னவெனில் தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (water guage) கிடையாது, அதனால் எந்த இடத்தில் ஓடும் நீரை வைத்து நீதிமன்றம் உபரி நீர் என்று சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே உபரி என்று ஒன்று இருந்தால் கூட (ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்ளுவோம்) அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?

ஆர்எஸ்எஸ் தலைவர் : கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்தால் 1 கோடி பரிசு !

pinarayi-vijayanகேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்பவர்களுக்கு  1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கும், தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதற்கும் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பினராயி விஜயனே காரணம் என்றும் சந்திரவாத் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் பினராயி விஜயனின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு தனது சொத்துக்களை விற்றாவது 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.thetimestamil.com

சசிகலா புஸ்பா மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற சகோதரிகளில் பானுமதியைக் காணவில்லை!

கடந்த 08.08.2016 அன்று நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் பானுமதியும் அவரது அக்காவுமான ஜான்சிராணியும், தாங்கள் எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த போது அவர் உட்பட கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதிப் ராஜா ஆகியோர் தங்களுக்குப் பாலியல் தொல்லை தந்தனர் என்றும் அதற்கு சசிகலா புஸ்பாவின் தாய் கௌரி உடந்தை என்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின்கோட்னீசிடம் புகார் கொடுத்தவர்கள் நடடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.>அவர்களது புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சசிகலா புஸ்பா மற்றும் தாய் கணவர், மகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தனக்கெதிரான எப்.ஐ.ஆர்களுக்கு முன் ஜாமீன் பெற்ற சசிகலா புஸ்பா, வழக்கின் விசாரணையின் பொருட்டு புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

ஜெ.மரணத்தில் மர்மம், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்' பி.ஹெச். பாண்டியன் !

vikatan :
பி ஹெச் பாண்டியன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் புதைந்துள்ளன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார்கள் ஓ.பி.எஸ். அணியினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது அ.தி.மு.க.வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பி.ஹெச்.பாண்டியன்.அப்போது அவர் கூறுகையில்,"ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக அதிமுக எம்பிக்கள் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துஉள்ளோம்.

சசிகலா கலண்டர் .. அதிமுக தொண்டர்கள் குண்டர்கள் அதிர்ச்சி!

கோவை:சசிகலா படம் போட்ட காலண்டரை, அ.தி.மு.க.,வினர் பலர் திருப்பி கொடுத்ததால், சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வின் தற்காலிக பொது செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்ட பின், கோவையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர், ஜெ., மற்றும் சசிகலா படங்களுடன், தினசரி காலண்டரை ஆயிரக்கணக்கில் அச்சிட்டனர். இவற்றை, பகுதி, ஒன்றிய செயலர்கள் மூலம் பேரூராட்சி,ஊராட்சி, நகர, கிளை நிர்வாகிகளுக்கு வழங்க முடிவானது. ஆனால், சசிகலா படம் போட்ட காலண்டரை பெற்று கொள்ளவும், அதை வீட்டில் மாட்டி வைக்கவும், அ.தி.மு.க.,வினர் பலர் விரும்பவில்லை. இதனால், நுாற்றுக்கணக்கான காலண்டர்கள், அந்தந்த பகுதி செயலர்களின் வீடுகளில், குவிந்து கிடக்கின்றன.

தனுஷின் பூர்வீகம் அறிய டி என் ஏ பரிசோதனை!


தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கொண்டாடிவரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின் வழக்கு விசாரணை கடந்த செவ்வாய் கிழமை மதுரை மேலூரிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது.
கதிரேசன் தம்பதியினர் சமர்ப்பித்த பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷிடம் இல்லை. தனுஷ் சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழில், எந்த அடையாளங்களும் குறிப்பிடப்படாதது, அதில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆகிய ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதை தனுஷின் குளறுபடி ஆதாரங்கள்: நாளை தீர்ப்பு என்னாகும்? என்ற தலைப்பில் நமது மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்திய வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக இனி சீனா செல்வார்கள் ?

இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கணிதம் பயின்றவர்களுக்கு, அமெரிக்கா செல்வது வாடிக்கையாகி வெகு காலமாகிறது. உயர்கல்விக்காக செல்லும் அவர்கள் பின்னர் அங்கேயே பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க குடிமகனாக ஆவது ஒரு தொடர்கதை. இப்படி போவது அவர்களது கனவு என்பது ஒருபுறம். கிடைக்கும் கல்வியின் தரம் மறுபுறம். இதனால் தான் அமெரிக்க பலகலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் வருடாவருடம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம்! .... சமுகநீதிக்கு அநீதி !


கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சில ' முன்னுரிமைகள் மாறாமலே இருப்பது' வருத்தமளிக்கிறது என்றும் தேசிய நலன் கருதி உயர் கல்வி நிலையங்களில் உள்ள எல்லாவிதமான இட ஒதுக்கீடுகளும் நீக்கப்படத் தேவையான வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாயன்று வலியுறுத்தியுள்ளது.
உயர் சிறப்பு கல்விப்புலங்களுக்கு இடஒதுக்கீட்டு முறை அல்லாமல் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் தகுதி அடிப்படையை மீறி இடஒதுக்கீடு முறை இன்னமும் பின்பற்றப்பட்டு வருவதாக நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் P.C.பந்த் தெரிவித்தனர்.

ராமதாஸ் :சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து வந்துள்ளனர். தண்டிக்கப்பட்ட குற்றவாளியை சிறையில் போய் பார்ப்பது எல்லா வகையிலும் தவறு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், கட்சியில் பதவி வகிக்கக் கூடாது. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். நக்கீரன்

புதன், 1 மார்ச், 2017

கலைஞர் நலமாக உள்ளார் .. ஆதாரமாக போட்டோ வெளியானது!

DMK chief Karunanidhi is recovering: Photo released
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு ஆதாரமாக, கட்சி செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய படம், கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதலே ஒவ்வாமை, சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் கருணாநிதி. : 65வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் இதையடுத்து கோபாலபுரம் வீட்டிலேயே கருணாநிதி தீவிர ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு பேச்சு தெரபி உள்ளிட்ட பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல் : எச்.ராஜா

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சில பிரிவினைவாத நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா மற்றும் மத்திய பாரதிய ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியா முக்கிய கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அம்சமும் நமக்கும் கிடைக்க வேண்டுமென்று உலக நாடுகள் எண்ணுகின்றன. இதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைதான். அனைத்து துறைகளிலும் நாட்டை சமமாக முன்னேற்ற வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அதற்கான திட்டங்களை வகுத்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக-விற்கு மாற்றாக பாரதிய ஜனதா ஆட்சி வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு பங்களா .. 1 கோடி ரூபாய்! தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு பணம் தியாகம்?


ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதிகளில் சொகுசு பங்களா கட்டிக்கொள்ள தெலுங்கானா அரசு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பல நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் மக்கள் வரிப்பணத்தில் கோயில்களுக்கு வேண்டுதலை நிறைவேற்ற தங்கம் மற்றும் வைர நகைகளை காணிக்கையாக செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தினார். இதன்பின்னர் அவர் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில், இன்று ஐதராபாத் நகரில், ரூ.100 கோடி செலவில் எம்.எல்.ஏ., குடியிருப்புக்களை கட்ட பணம் ஒதுக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதியில் அலுவலகத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்ட தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மின்னம்பலம்

உதயகுமார் மோடி அரசு வெளி நாட்டினருக்கு கைக்கூலியாக செயல்படுகிறது! நெடுவாசல்...


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை இந்த போராட்டம் ஓயாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இன்று 14-வது நாளாக பொது மக்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Save Sakthi.. நடிகை வரலக்ஷ்மி பெண் உரிமை அமைப்பு தொடங்கி உள்ளார்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் சமீப காலங்களில் அதிக அளவில் சிறுமிகளும் பாதிக்கப்படுகின்றனர். நடிகை பாவனாவுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவம் திரைத்துறையச் சார்ந்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின் நடிகை சந்தியா, வரலட்சுமி ஆகியோர் தங்களுக்கும் இது போன்ற கொடுமைகள் நடந்துள்ளது என்று பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி ‘SAVE SAKTHI' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து மனுக்களை வாங்கி அதற்குரிய அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசல் போராட்டம் நிறுத்தப்படுமா? போராட்டகுழு முதல்வர் சந்திப்பு!



ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுவாசலில் இன்று 14 வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், இளைஞர்களும் நெடுவாசலுக்கு வருகை புரிகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்ட எழிச்சியில் உதித்த "என் தேசம் என் உரிமை கட்சி" ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவு ஒரு குழுவாகப் புறப்பட்டு நெடுவாசல் வந்தடைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நுழைவுப் பகுதியிலே போலீஸார் முகாமிட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் வரும் அத்தனை வாகனங்களையும் ஆய்வு செய்து, அங்கே வருகை தருவோரின் நோக்கம், வாகனத்தின் எண், வருவோரின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்கிறார்கள்.

கோபிநாத்: எந்த கொம்பனையும் தொடவிடமாட்டேன்..! நெடுவாசல் என் சொந்த மண்..!


தங்களுடைய அதீத ஒற்றுமையின் மூலம் வாடிவாசலைத் திறந்து, ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டிய இளைஞர்கள்,
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நெடுவாசலுக்கே சென்று போராட்டத்துக்கு ஆதரவளித்துத் திரும்பியுள்ள ‘நீயா நானா‘ கோபிநாத் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நெடுவாசலில் இருந்து வெறும் நான்கு கி.மீ தூரத்தில் இருக்கும் சித்துக்காடுதான் என்னுடைய பூர்வீகம்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் நெடுவாசலில் இருந்து 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அறந்தாங்கி. ஒரு பிரபலம் என்பதை எல்லாம் கடந்து, இது என் ஊரின், என் மண்ணின் பிரச்னை. அதனாலே அங்கு சென்று போராட்டக்குழுவினருக்கு ஆதரவளித்துப் பேசிவிட்டு வந்தேன்.
ஆரம்பத்தில் இங்கு இடம் எடுத்தபோது மண்ணெண்ணெய் எடுக்க என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அன்று இதுகுறித்து பெரிய விழிப்பு உணர்வு இல்லை, மண்ணெண்ணெய்தானே என அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர்.

நெடுவாசல் .. முட்டாள் / மோசடி அரசுகளை நம்பி நிலத்தை எப்படி கொடுக்கமுடியும்?

நெடுவாசல்போபால் விஷ வாயு விபத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் எல்லாம் ஒரு நொடி நின்று ஈரத் துணி கொண்டு முகத்தை மூடியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவைக் கூட மக்களுக்குப் புகட்டாத இந்த அரசை நம்பி எப்படி எங்கள் விவசாய நிலங்களைக் கொடுக்க முடியும்?/ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த ஓ.என்.ஜி.சி குழாய்...நெடுவாசல் நிஜங்கள்..! #SpotVisit மாலை நேரம். நெடுவாசல் கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு கிராமத்தில் தன் வயலில் குடும்பத்தோடு கடலைப் பறித்துக் கொண்டிருந்தார் விஜயா அக்கா... இங்கன என்ன பிரச்சினை இருக்குன்னு சரியாவே வெளங்கல தம்பி. இந்தப் பக்கத்துல ஏற்கனவே பெட்ரோல் எடுக்குறம்ணு சொல்லி ரொம்ப வருஷத்துக்கு முந்தியே பைப்பெல்லாம் போட்டாய்ங்க. இப்போ திடீர்னு ஏதோ புதுசா ஹைட்ரோ கார்பன் வருதுங்குறாய்ங்க. அது வந்தா தண்ணியில்லாம போயிடுமாமில்ல???. அத விடக் கூடாது தம்பி.  நிலத்தடி நீர நம்பித்தா இங்க எல்லாமே இருக்கு. இதோ எம் பொண்ணு கம்ப்யூட்டர் படிச்சுட்டு எங்கூட கொல்லையில தான் வேலை செய்யுது. எங்களுக்கு விவசாயந்தான்... அத மீறி வாழ்க்கை இல்ல. இந்த மத்திய அரசாங்கம் அதப் புரிஞ்சுக்கிட்டு இடத்த காலிபண்ணிடனும்..." என்று உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.

சசிகலா புஷ்பா மீது குற்றம் சுமத்திய பணிப்பெண்கள் புகார் வாபஸ்.. தூண்டுதலால் பொய் புகார்...


சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த சகோதரிகள் அந்தர் பல்டி அடித்து தாங்கள் அரசியல் காரணங்களுக்காக போலி புகார் அளித்தாக போலீசில் மனு அளித்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர்.
சசிகலா மீது எம்.பி. சசிகலா புஷ்பா மீதும் அவரின் கணவர்,மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியில் இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் எம்.பி. சசிகலாபுஷ்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் ‘எங்களை பாலியல் தொந்தரவு செய்தார்கள்’ என்றும் ‘எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்திருந்தனர்.
அவர்கள் புகாரில் திசையன்விளை ஆணைகுடி ஊரைச் சேர்ந்த நானும் எனது அக்காள் ஜான்சிராணியும் கடந்த 2011-ம் வருஷம் சென்னையில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டு வேலைக்குப் போனோம்.

குடி கூத்து கும்மாளம் ... ரஜினியின் வாரிசு?

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நேற்று அதிகாலை தனது காரை, ஆட்டோ ஒன்றின் மீது மோதி டிரைவருக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டார். என்ன நடந்தது என்று சில சமூகவலைத் தளங்கள் கூறுவதைப் படியுங்கள் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கணவன் மனைவி பிரச்சனை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார். குவிந்து கிடக்கும் பணம், தட்டிக் கேட்க யாரும் இல்லை. ரஜினி பேச்சுக்கும் பெரிய மரியாதை இல்லை. மருமகன் தனுஷின் அதீத தலையீடு வாரத்தில் மூன்று நாட்கள் பார்ட்டி, பப், குடி ஆட்டம் பாட்டம், என ஜாலியை மட்டுமே அனுபவிக்கும் அவல நிலையில் ரஜினி மகள்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தனது வீட்டை விட்டு கிளம்பிய சௌந்தர்யா, ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள உயர்தர ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக ‘அவருடன்’ தான் தங்கியுள்ளார் குடி கூத்து என அமர்க்களமாக இருந்தவர் செவ்வாய்க்கிழமை காலையில் போதை மாறாத நிலையில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலர்களே காங்கிரசுக்கு இடங்களை தேர்வு ...

'உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கான இடங்களை, மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளுங்கள்' என, தி.மு.க., மாவட்ட செயல ருக்கு, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டி உள்ளார். தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், அக்கட்சி யின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதில், அவர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல், தடை ஏற்படுத்து வதற்கு, ஆளுங் கட்சி தரப்பில், பல்வேறு வியூகங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. அவற்றை, நீதிமன்றம் வாயிலாக நாம் முறியடிப்போம். உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட அளவில், காங்கிரசுக்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த கட்சிக்கு, எங்கெங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அங்கு மட்டும் இடம் ஒதுக்குங்கள். இத்தனை சதவீதம் என்ற கணக்கு எல்லாம், பார்க்க வேண்டாம். திருநாவுக்கரசரின்  அதிமுக பாசத்தால் வந்த வினை? 

மோடியின் குஜராத்தி ஊழல் பெருச்சாளி புதிய தமிழக ஆளுநர்?... ஆனந்தி பென் பட்டேல்


மோடியின் கூஜாவை தமிழ்நாட்டிற்கு கவர்னர் ஆக்கியிருக்கின்றனர். இன்னொரு கூஜா நமது மாண்புமிகு முதல்வர். ஜனநாயகம் எத்தகைய ஆபத்தான விளையாட்டு என்பது புரிகிறது. மனிதர்கள் எத்தகைய கொடூர மனம், செயல் கொண்டவர்கள் என்பது ஆணித்தரமாகப் புரிகிறது. நாம் கடும் ஆபத்துகளை எதிர்நோக்கியிருக்கிறோம் என்பதும் புரிகிறது. தமிழக கவர்னர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு என தனி கவர்னர் தேவை என ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிய தமிழக கவர்னர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் வெற்றி: பின்னணியில் இந்திய ஹைடெக் நிபுணர்களின் கடும் உழைப்பு!


ஆஸ்கர் விருது விழாவில் விஷுவல் எஃபெக்டுக்கான சிறந்த திரைப்பட விருதை The Jungle Book திரைப்படம் வென்றிருக்கிறது. எத்தனையோ விதமான Jungle Book திரைப்படங்களை ஹாலிவுட்டும், இந்தியாவும் கண்டிருக்கிறது. ஹாலிவுட் - இந்தியா என்று குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் ருத்யார்டு கிப்ளிங் எழுதிய The Jungle Book புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதைப்படி இந்திய வனாந்திரத்தில் விலங்குகளுடன் வசிக்கும் ஒரு சிறுவன் ஷேர் கான் என்கிற புலிக்கு பயந்து அமெரிக்க நகரத்துக்கு செல்வது தான் உண்மை நிகழ்வு.
இந்தக் கதையில் எத்தனையோ வெர்ஷன்கள் வெளிவந்தாலும் இந்தியக் காடுகளிலிருந்து குறிப்புகள் எடுக்காமல் எந்தத் திரைப்படமும் உருவாகியதில்லை.

தனுஷ் ,,, பெற்றோர் யார் என்ற வழக்கு விசாரணை !


தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கொண்டாடிவரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின் வழக்குப்படி நேற்று மதுரை மேலூரிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை தொடங்கியது. கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் தங்களது மகனின் அடையாளமாக பின்கழுத்துப்பகுதியில் ஒரு மச்சமும், முழங்கையில் தழும்பும் இருக்குமென்று நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். தன் உடலில் அதுபோன்ற அடையாளங்கள் ஏதுமில்லை என்று தனுஷ் முன்வைத்த வாதத்தைத் தொடர்ந்து மதுரை கோர்ட்டுக்கு நேரடியாக வந்து நிரூபிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை மேலூர் கிளையில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் ஆஜராகியிருந்த தனுஷிடம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு நீதிமன்ற ரிஜிஸ்டரர் இளங்கோவன் முன்னிலையில் கதிரேசன் - மீனாட்சி தரப்பினர் குறிப்பிட்டிருந்த அடையாளங்களை பரிசோதித்தனர்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?


நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.
தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நெடுவாசல் – நீதிமன்றத்துக்குப் போகாதே ! எச்சரிக்கை !

கூடங்குளம் நமக்கு ஒரு பாடம். அணு உலை நிறுவுவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. கெயில் வழக்கில் நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்துக்கு சென்ற விவசாயிகளுக்கும் இதே கதி தான் நேர்ந்தது.
எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.  வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

ஜெயாவின் சிகிச்சை விபரங்களை தீபாவும் தீபக்கும் சட்டப்படி கேட்கலாம்! கேட்டார்களா? இல்லையே! ஏன்? பணம்... பதவி... புகழ்...

ஜெ., மரண மர்மத்தை மறைப்பது அப்பல்லோ-தமிழக அரசு மட்டுமல்ல…உயிலுக்கு உரிமை கோரும் தீபாவும் தீபக்கும்தான். யார் யாரோ பொதுநல வழக்கு போட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரத்த சொந்தமான தீபாவும் தீபக்கும் சிகிச்சை விவரங்களை கேட்டால் அப்பல்லோ கொடுத்துதான் ஆகவேண்டும்.< நீதிமன்றமே சொல்லியும்கூட அமைதி காக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா பெயரில் பேரவை தொடங்கி கல்லாக்கட்டுவதோடு அதிமுகவை கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் தீபா. கடன் வாங்கியாவது 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டு பல்லாயிரம் கோடிரூபாய் சொத்துக்களை மீட்கப்பார்க்கிறார் தீபக். ஆக மொத்தம், இவர்களுக்கு ஜெயலலிதாவின் ‘உயிர்’ மீது அக்கறயில்லை… ‘உயில்’ மீதுதான் என்பதை புரிந்துகொள்ளவில்லை அதிமுக தொண்டர்கள். அந்தளவுக்கெல்லாம் விவரம் இருந்தா தினமும் தீபா வீட்டு முன் குவிந்து தரிசனம் செய்துகொண்டிருக்கமாட்டார்களே!!!! வேபுலகம்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தீபா பன்னீர்செல்வத்திடம் நிபந்தனை : முதல்வர் பதவியும் பொதுசெயலாளர் பதவியும் எனக்கே .... ஆடிப்போன பன்னீர்!

ஆட்சியா, இயக்கமா எது நடத்துவது, எப்படி நடத்துவது என தெரியாமல் அரசியல் களத்தில் கால்பதித்த தீபா கேட்ட இரண்டு பொறுப்புகள்தான் ஓபிஎஸ் அணியை இன்னமும் அதிர்ச்சியிலேயே உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒற்றை காரணத்துக்காக தலைவரை தேடும் அதிமுக தொண்டர்களில் ஒருபகுதியினர் தீபாவை ஆதரிக்கின்றனர். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணி விஸ்வரூபமெடுத்ததால் பெரும்பகுதி தொண்டர்கள் 'அங்கிட்டு' சாய்ந்துவிட்டனர். இதனிடையே திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்- தீபா சந்திப்பு நடைபெற்றது. தீபாவை வீட்டுக்கு அழைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றார் ஓபிஎஸ். திடீரென இயக்கம் அப்போது தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தீபா கூறியிருந்தார். ஆனால் திடீரென தனி வாத்தியம் வாசிக்கத் தொடங்கிவிட்டார் தீபா. இருந்தபோதும் ஓபிஎஸ் அணி, தீபா வருவார் என இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறது.
இதனிடையே தீபா முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் குறித்துதான் ஓபிஎஸ் அணி இன்னமும் அதிர்ச்சியுடன் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அணியில் தாம் இணைய வேண்டுமானால் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும்; அதேபோல் அதிமுக பொதுச்செயலர் பதவியும் தமக்கு தரப்பட வேண்டும் என்று ஒரே போடாக போட்டாராம் தீபா.

அரசியலில் 'அ'வை எழுத தொடங்கியிருக்கும் தீபாவுக்கு சசிகலாவைவிட பேராசை அதிகமாக இருக்கிறதே என அதிர்ந்து போனதாம் ஓபிஎஸ் அணி. இந்த நிபந்தனைகளை நாசூக்காக நிராகரித்துவிட்டது ஓபிஎஸ் அணி. இதனால்தான் தனியாக பேரவையை தொடங்கி பஞ்சாயத்துகளை எதிர்கொண்டு வருகிறாராம் தீபா tamiloneindia

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா சிறுபான்மையினர்கள் ? என்ன செய்ய வேண்டும் பெரும்பான்மை இனம்…

k
கார்ல் மாக்ஸ் கணபதி
Karl Max Ganapathy  :நண்பர்களுடனான நேற்றைய உரையாடல் பிரம்மாண்ட ‘ஆதியோகி’ சிலையில் தொடங்கி, மோடி, எடப்பாடி பழனிசாமி வழியாகப் பயணித்து ‘வந்தேறி மாட்டின்’ முகநூல் பக்கத்தில் புர்காவைக் கிண்டலடித்து அவர்கள் போட்ட மீம்ஸின் கமெண்ட்டில் போய்க் கொந்தளிக்கும் இஸ்லாமிய நண்பர்களின் செயலில் வந்து முடிந்தது. என்னுடன் உரையாடுகிற, ஹிந்துத்துவதை உயர்த்திப் பிடிக்காத ஹிந்து நண்பர்கள் என்னிடம் பலமுறை இதைக் கேட்டிருக்கிறார்கள். ‘வந்தேறி மாடு’ பற்றிய விவகாரத்திலும் இந்த விஷயம் உரையாடலுக்குள் நுழைந்தது. அதாவது, மாற்று மதத்தைக் கிண்டலடிக்கிறபோது அதனுடன் இணைந்துகொள்கிற இஸ்லாமியர்கள், அவர்களிடம் உள்ள பெண்ணடிமைத்தனம் குறித்தோ, உடைக்கட்டுப்பாடு குறித்தோ விமர்சனம் செய்கிறபோது இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறார்களே ஏன்…? எதற்காக அவர்கள் இவ்வளவு பதட்டமடைகிறார்கள்…? என்பது ஒரு நண்பரின் கேள்வி. அவர் ஒன்றும் இந்து மத வெறியர் அல்ல. சமூக ஊடகங்களில் புழங்கும் எல்லாருக்கும் அவர் சொல்ல வருவது என்ன என்பது தெளிவாகப் புரியும். எங்களுக்குள் நடந்த அந்த உரையாடலின் ஒரு பகுதியைத் தொகுத்து இங்கு வைக்கிறேன்.

ஜெர்மனியில் அகதிகள் தங்கியுள்ள 988 வீடுகளின் மீது தாக்குதல்கள்!


ஜெர்மனியில் தினமும் சராசரியாக 10 அகதிகள் தாக்கப்படுகிறார்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி அமைச்சரவை விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், கடந்த ஆண்டு 2016இல் மட்டும் வேறு நாட்டிலிருந்து ஜெர்மனி வந்து வாழும் 3500 அகதிகள் வன்முறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். தினமும் சராசரியாக 10பேர் மீது வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. இந்தச் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி அரசு, நம் நாட்டைத் தேடி வருகிறவர்கள் பாதுகாப்பு உறுதியை நிச்சயம் எதிர்ப்பார்ப்பார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று கூறியுள்ளார்கள்.

பெரிய வீட்டு பிள்ளைகளின் கோடி ரூபாய் பந்தயக் கார்கள் ... ஊத்தி மூடப்படும் குற்றங்கள்?

கிழக்கு கடற்கரைச் சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்ற 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் தனிப்படை உருவாக்கியுள்ளனர்.
இருப்பினும் செல்வாக்குமிக்கவர்களின் வாரிசுகள் தொடர்ந்து கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிறு அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளன.

மத்திய பிரேதேச ஏடிஎம் இல் சீரியல் இலக்கம் இல்லாத நோட்டு .. நோட்டையே ஒழுங்கா அச்சடிக்க ...

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏடிஎம்-களில் சீரியல் நம்பர் இல்லாத ரூ.5௦௦ நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. எழுத்துகள், பாதுகாப்பு அம்ச கோடுகள் ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறு மாதிரியாக காணப்படுகிறது. இதனால், தங்கள் கையில் இருப்பது உண்மையான நோட்டா அல்லது கள்ளப்பணமா என மக்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி அவசரம் அவசரமாக அச்சடித்ததில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாகக் கூறியது. இதையடுத்து, மக்கள் புதிய ரூ. 5௦௦ நோட்டுகளைப் பயன்படுத்தி வந்தனர்.

ராதாரவி : இப்போதுதான் அதிமுகவே கிடையாதே ... நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார்!

நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார்: அண்ணா அறிவாலயம் முன்பு ராதாரவி பேட்டி திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான நடிகர் ராதாரவி திமுகவில் இன்று காலை இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் சகோதரர் தளபதி ஸ்டாலினை விட்டால் ஆள் கிடையாது. நான் ஏற்கனவே திமுகவில் இணைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டுதான் இருந்தேன். இது சேகர்பாபு, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு தெரியும். நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி நான் பிறகு பேசுகிறேன். நாளைக்கு தங்க சாலையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறேன். அங்கு எனது கருத்துக்களை சொல்ல இருக்கிறேன்.

திமுக மீது ஏன் சேறு வாரி வீசுகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பண்பாட்டின் எழுச்சிக்கும் காரணமான ஒரு இயக்கம்

அழகப்பண்ணே, சமூக இணைய தளங்களில் தேர்தல் காலத்தில் எல்லாம் பார்ப்பனீய லாபியால் தவறாமல் உலவ விடப்படும் தலைவர் கலைஞரின் சொத்து மதிப்புப் பட்டியலைக் காட்டியபடி வந்து பக்கத்தில் அமர்ந்தார்.
பாருங்க கருணாநிதி எவ்வளவு ஆயிரம் கோடி சொத்து சேத்திருக்கார்!!!
நானும் வாங்கிப் பார்த்தேன், ஐ.டி ல இருக்குற நம்ம பார்ப்பனத் தம்பிகளும், பெரிசுகளும் இன்னமும் கலைஞர் மேல் எவ்வளவு கான்டாக இருக்கிறார்கள் என்று அதைப் பார்த்ததும் புரிந்தது, இந்த ஆள ஒழிச்சாத்தான் தமிழ்நாட்டுல நம்ம இழந்த பெருமையா மீட்க முடியும், மறுபடியும் சாமி சாமின்னு நம்ம காலைக் கழுவி தீத்தம்னு இந்த சூத்திரப் பயலுகளா குடிக்க வைக்க முடியும்னு நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கானுங்க.
கொஞ்சம் தீவிரமா நடுப்பகுதிக் கணக்குகளைப் படித்துப் பார்த்தேன்,
கலைஞரின் அக்கா மகனின் பேரனின் காதலியின் தாய் மாமாவுக்கு திருநெல்வேலிக்கு அருகே புத்தளம் கடற்கரைத் தோட்டம் - மதிப்பு - 10 லட்சம்
கலைஞரின் ஒன்று விட்ட சித்தப்பாவின் தம்பி மகனுக்கு காது குத்திய செலவு - மதிப்பு - 2 லட்சம்
கலைஞரின் திருவாரூர் வீட்டின் பரண் மீது தூசி படிந்து கிடக்கும் விறகு மற்றும் அதை வெட்ட ஆன செலவு - மதிப்பு - 1.5 கோடி
கலைஞர் 1924 இல் இருந்து இன்று வரை முடிவெட்டிக் கொள்ள ஆகிய செலவு - 5 லட்சம்

இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு


அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல்
முல்லையில் தண்ணீர் கேட்டால்.
கேராளக்காரன் அடிக்கிறான்
காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்
செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்
தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்
தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்…..!!!!
முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை
காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை
காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை

நயன்தாரா .. கதாநாயகிக்கு முக்கியத்துவம் ... டோரா படத்துக்கு பெரும் வரவேற்பு

நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமதாமி இயக்கியுள்ள 'டோரா' திரைப்படத்தின் டீசர் கடந்த 17ஆம் தேதி வெளியான நிலையில் பத்தே நாட்களில் இந்த டீசர் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த டீசருக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு இவ்வளவு வரவேற்பா என கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் 'ரா ரா ரா' என்ற பாடலை பாடியுள்ளார். மின்னம்பலம்

ஜல்லிகட்டு போராட்ட குழுவுக்கும் புதிய அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை !


'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவால், பெரிய அளவிலான போராட்டமாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதிக்காமல், அமைதி வழியில் போராட்டம் நடந்ததால், பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அமெரிக்க இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கிய ஆலோசனைகள்

 கன்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ஒலாதே பகுதியில் இந்திய என்ஜினியர் சீனிவாச குச்சிபோதலா சுட்டுக் கொல்லப்பட்டார். இனவாத பிரச்சனையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது ஆகியவை குறித்து சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூடாது என்பது. தெலுங்கானா அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் பொதுச் செயலாளர் விக்ரம் ஜங்கம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாவது,
1.பொது இடங்களில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
 யாராவது உங்களை வம்புக்கு இழுத்தால் சண்டை போடாமல் அங்கிருந்து சென்றுவிடவும்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பம்.

1) பதவி ஏற்ற பிறகு சசிகலாவை எடப்பாடி சந்திக்கவில்லை.
2) தினகரன் மூலம் சசிகலா ஒப்புதல் அளித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிட மாற்றல் பட்டியலை நிராகரித்தார் எடப்பாடி.
3) தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை மாற்றிவிட்டு, நடராஜன் ஆதரவாளர் சண்முகத்தை நியமிக்குமாறு மாஃபியா கும்பல் கூறியதை எடப்பாடி ஏற்க மறுத்துவிட்டார்.
4) மாஃபியா கும்பலை கட்சியில இருந்து ஒட்டுமொத்தமாக விலக்கி வைக்க எடப்பாடி திட்டம். பன்னீரை சேர்த்துக்கொள்ளவும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது ,
5) உள்ளாட்சித் தேர்தலில் சிறிதளவாவது வெற்றியை பெற மாஃபியா குடும்பத்தை வெளியேற்றுவது அவசியம் என எடப்பாடி கருதுவதாக தகவல்.
6) சசிகலா பினாமி ஆட்சி என கூறுவதை அறவே வெறுக்கிறார் எடப்பாடி.
7) இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையன், ஜெயகுமார், தம்பிதுரை தனி குழுவாக செயல்படுவது சசிகலாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
8. சசிகலா ஆதரவு MLAக்கள் தங்கள் தொகுதிக்குள் நுழையமுடியாத சூழ்நிலையில் அவர்களும் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருபுறம் மாஃபியா கும்பலை வெளியேற்ற எல்லா வேலைகளும் கணஜோராக நடைபெற்று கொண்டுள்ளது. இன்னொருபுறம், தொண்டர்கள் நிலமைதான் திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போன குழந்தை நிலமையில் உள்ளது.  முகநூல் பதிவு.. தினகரன் அரசு

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதி...

நெல் ஜெயராமன் hinduநெல் ஜெயராமன் நெல் ஜெயராமன் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.

சுப.வீரபாண்டியன்: மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நெடுவாசல் ....

அரசோ, அதிகாரமோ யாராயிருந்தாலும் இனி எதனையும் உடனே முடிவெடுத்து விட முடியாது என்கின்ற அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு நெடுவாசல் இன்னொரு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கின்றது. மக்கள் திரண்டு போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் அங்கு கூடுகின்றனர். இரண்டு மூன்று நாள்களாய் எல்லாச் சாலைகளும் நெடுவாசல் நோக்கியே நீள்கின்றன. எனினும் உணர்ச்சி வயப்பட்டு உடனே அந்த இடத்தில் போய் நின்றுவிடுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. இப்போதெல்லாம் எங்கு மக்கள் திரண்டாலும் உடன் அந்தப் போராட்டத்தை ஆதரித்து விட வேண்டும், அந்த ஜோதியில் நாமும் கலந்து விட வேண்டும் என்ற ஒரு போக்கு எழுந்துள்ளது. இதுவும் நல்லதில்லை. மாற்றுக் குரல்களைச் செவி மடுப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இந்தச் சிக்கல் என்பது முதன்மையாக மக்கள் நலன், சுற்றுச் சூழல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிய மூன்று தளங்களில் நிலை கொண்டுள்ளது.

டெல்லி கல்லூரி மாணவிக்கு ரேப் மிரட்டல்! பாஜகவின் (ABVP) அகில பாரத் வித்யா பரீக்ஷத்தின் பாலியல் பயங்கரவாதம்?


அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்  எனும் மாணவர் அமைப்பு பாஜகவுடன் தொடர்பு உடையதாகும். டெல்லியைச் சேர்ந்த மாணவியான குர்மீஹர் கவுர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேச்சு சுதந்திரத்தைக் குலைப்பதாகவும், இவர்களுக்கு எதிரான கருத்தை யார் முன் வைத்தாலும் தேசத் துரோகிகள் என அவர்களை  ஏ.பி.வி.பி அமைப்பு அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு அந்த அமைப்பினர் தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கின்றனர். மேலும் சிலர், 'அவரை கற்பழித்தது விடுவோம்' என்றும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வக்கிர உணர்வோடு ஆபாச மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.& குர்மீஹர் கவுர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் மகளாவார். இவரது தந்தை ராணுவ பணியில் இருந்த போது நாட்டுக்காக உயிர்நீத்தவர். "எனது தந்தை கார்கில் போரில் கொல்லப்பட்டபோது  எனக்கு வயது வெறும் இரண்டு தான். ஆரம்பத்தில்  நான் பாகிஸ்தான் மீதும், முஸ்லீம்கள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன். ஆனால் ஆண்டுகள் உருண்டோட, என் தந்தைக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பகையும் இல்லை என்பதையும், போர் என்பது என் தந்தையின் உயிரைப் பறித்ததையும் உணர்ந்தேன்.

Hydrocarbon project.. Sientists + oil companies wont speak about the disadvantages .. just money minded.


Markandey Katju :
An email I received. The sender has asked me not to mention certain details :
Dear Sir,
I am Nishithan doing Masters in the Department of Chemical Engineering, IIT Madras. I saw your post on facebook asking for the opinion of a scientist whose specialty is on hydrocarbon project. I am no scientist but I have read in detail about this technology and I have given a technical presentation in IIT Madras before 4 years when I was an Undergrad, so I know about this project in detail and I like to explain to you about this project in brief.
The original name is Shale gas Technology. Here it was first introduced as methane extraction and now changed to hydrocarbon extraction. Shale gas/Natural gas/Methane/Hydrocarbon are all the same.It got the name Shale gas as it is a gas trapped in the shale regions(sedimentary rocks) below the earth.It is nothing but the natural gas whose major component is methane.Hydrocarbon is the general name for any compound containing carbon and hydrogen (methane, ethane, propane..etc). Petrol, Diesel, Kerosene, LPG and other crude oil derivatives are all hydrocarbons.

மீதேன் திட்டத்தை எதிர்த்த புதுகோட்டை எம் எல் ஏ எஸ் .பி.முத்துகுமரன் கொலை செய்ப்பட்டாரா?

கடந்த 2012ம் ஆண்டு புதுக்கோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன், நெடுவாசல் மண்ணின் மைந்தனாக உருவெடுத்தவர். கார் விபத்தில் பலியானார்.
இவர் சட்டசபையில் தனது தொகுதி சார்பாக அதிக கேள்விகளை எழுப்பிய சிறந்த எம்எல்ஏ என சபாநாயகரால் பாராட்டுகளை குவித்தவர். மிகவும் நேர்மையான மனிதராகவும் இருந்த அவர், மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மிக பலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த போராட்டத்தை தடுக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் பலியானாரா? அல்லது மீத்தேன் திட்டத்தை எதிர்த்ததற்காக விபத்து ஏற்படுத்தி கொல்லப்பட்டாரா என பல சந்தேகங்களை எழுப்பியது. இந்த விபத்து தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் 279, 337 மற்றும் 304ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகலா சிறை வசதிக்கு காவிரி உரிமை பேரம் பேசப்பட்டது???

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை என தீர்ப்பு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு கர்நாடக அரசு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், சசிகலாவின் அக்கா மகன் தினகரன், சிறையில் சசிகலாவிற்கு பல்வேறு வசதிகள் செய்துதர முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் கிடையாது என்று சொன்ன கர்நாடகா அரசு, தற்போது சசிகலாவிடம் பேரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், சிறையில் சசிகலாவுக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். ஆனால் காவேரி ஆற்றின் குறுக்கே நாங்கள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கர்நாடக அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மெரீனாவில்.. எதிர்ப்போம் எதிர்ப்போம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்’ ‘அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே


புதுக்கோட்டையில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 5000 அடி ஆழத்திற்கு துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 11 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராடும் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று கூடியது போல மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கூடினர். அந்த இடத்திலேயே போராட்டத்தை தொடங்கவும் முயற்சி செய்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மாணவர்கள் கடற்கரையில் ஒன்று கூடியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய மந்திரி தர்மேந்த்ரா : மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்!

மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புதுடெல்லி: தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அப்போது, நெடுவாசல் திட்டம் மற்றும் அதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். < இவ்வாறு அவர் கூறினார்.மாலைமலர்